என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 19 ஜூலை, 2014

VGK 25 / 02 / 03 - SECOND PRIZE WINNERS ..... 'தேடி வந்த தேவதை’




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 25 - ’ தேடி வந்த தேவதை 



இணைப்பு:







   




 


 

    

 

 
  






மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 



நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  





ஐந்து




  











இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  
நல்வாழ்த்துகள். 





  


மற்றவர்களுக்கு: 







    



இனிப்பான இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர் 


அதில் ஒருவர்




 திரு. ரவிஜி 



மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.

அவர்கள்

mayavarathanmgr.blogspot.com




 



இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள



 திரு. ரவிஜி 



மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.


அவர்களின் விமர்சனம் இதோ:





தேடிவந்த தேவதை! 
தேவதைகளைத்தேடி எல்லோரும் செல்லும் நிலையிருக்க கதையின் தலைப்போ “தேடி வந்த தேவதை”!   தேவதை என்றாலே எல்லோருடைய மனதிலும் அடையாளப்படுத்துவது வெள்ளை உடைதான்!  ஆனால் இங்கேயோ  வெள்ளைச் சீருடை அணிந்தவளே அந்த தேவதை! கனப்பொருத்தமான பாத்திரம்தான்! அவள் யாரைத்தேடி வந்தாள்? எதற்காக? ஒரு ஆர்வத்தை தலைப்பின் மூலமே தூண்டி கதைக்குள் அழைத்துச் செல்வதில் நமது வை.கோ. அவர்கள் வெகு சமர்த்து!  வாருங்கள் போவோம்!
      

ஆரம்பமே தேவதை படிக்கும் “மணமகள் தேவை”பத்திரிக்கை விளம்பரம்!  அந்த விளம்பரதாரருக்கு தன்னை ஏன் அர்ப்பணிக்கக் கூடாது என்ற எண்ணம் சுமதிக்கு ஏற்படுகிறது!  அது என்ன செய்தி எதனால் அர்ப்பணம் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்?
      

விளம்பரம் இதுதான்! //“எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள, படித்த, அன்பான, அழகான, வசதியுள்ள 27 வயது சாஃப்டுவேர் இஞ்சினியருக்குப் பொருத்தமான பெண் துணை தேவை. எம்மதமும் சம்மதம். மற்ற விபரங்கள் நேரில்.”//
      

நான்கு வயதுக்கு வந்த தங்கைகள், சொற்பமான ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி காலத்தைத்தள்ளும் (அஞ்சு பெண்ண பெத்தா அரசனும் ஆண்டி?!) தந்தை, நோயின் பிடியில் தாய்.  இத்தகைய சூழ்நிலையில்தான் 24 வயது அழகிய நர்ஸான சுமதி, குடும்பத்தைக்கரை சேர்க்க மெழுகுவர்த்தியாக மாற முடிவு செய்கிறாள்! உடனே போனும் செய்கிறாள்! விளம்பரம் கொடுத்தவரின் அம்மாவிற்கு உள்ளுக்குள் ஆத்திரமாக இருந்தாலும், சுமதியின் கனிவான இனிய குரல் பிடித்துப்போகிறது! கூடவே சுந்தர் என்ற தனது மகனது பெயருக்கு பொருத்தமான அவளது பெயரும்! மாலை மணி 5.15 க்கு சுந்தரின் வீட்டிற்கே நேரில் செல்கிறாள். அவனை சுமதியின் இயற்கையான அழகும் தேன் போன்ற இனியகுரலும் முதலிலேயே கவர்ந்துவிடுகின்றன. கண்ணியமாக வணக்கம் சொல்லி வரவேற்கிறான்.  மரகதத்தைப்பார்த்ததும் எழுந்து வணக்கம் சொல்லும் சுமதியின் பண்பு அவளுக்குப் பிடித்துவிடுகிறது. பூர்வீகம் திருச்சி பக்கம் என்றதும் இன்னும் சற்று நெருக்கமாக உணர்கிறாள் மரகதம்.


//“என் மகன், எனக்கே தெரியாமல், இப்படி ஒரு கேவலமான விளம்பரம் கொடுத்திருந்தும், ஒரு பெரிய குடும்பத்தில் மூத்த பெண்ணாக பிறந்துள்ள நீ, எந்த தைர்யத்தில் இங்கே புறப்பட்டு வந்தாய்?”//  என்ற மரகதத்தின் கேள்விக்கும் அவற்றைத்தொடர்ந்து அவள் கேட்கும் கேள்விகளுக்கும் சுந்தரின் உண்மை தனக்குப் பிடித்திருப்பதாகக் கூறுவதும், மேலும் ஒரு நர்ஸாக அவளுக்கு விஞ்ஞான மருத்துவத்தின்மேல் இருக்கும் நம்பிக்கை, தவறு செய்தவர்கள் திருந்திவாழும் அதிகபட்ச வாய்ப்பு, நோய் தனக்கோ பிறக்கப்போகும் குழந்தைக்கோ பரவாமல் இருக்கும் சாத்தியக்கூறு, எல்லாவற்றுக்கும் மேலாக பிறப்பு இறப்பு இரண்டுமே ஆண்டவனின் கையிலேயே இருக்கிறது என்ற உண்மை இவைபற்றி எல்லாம் மென்மையாகவும், பக்குவமாகவும், தெளிவாகவும் சுமதி பதில் சொன்னதில், மரகதம் ஓரளவிற்கு திருப்தியடைந்துவிடுகிறாள்! இருவரையும் தனிமையில் பேசிக்கொள்ளச் சொல்லிவிட்டு சிற்றுண்டியை எடுத்துவந்து கட்டாயப்படுத்தி உண்ணச்சொல்லும் அளவிற்கு நெருங்குகிறாள். சுமதி சிற்றுண்டி அருந்தும் அழகு, காபியை ரசித்துக்குடிக்கும் நளினம் என்று சுமதியின் மீதான விருப்பம் மரகதத்திற்கும் சுந்தருக்கும் படிப்படியாக அதிகரிப்பதை கதாசிரியர் உன்னதமாக சுட்டிக்காட்டியுள்ளார்.  சுந்தர் தனது அம்மாவிடம் நேரடியாகவே விருப்பத்தை தெரிவிக்கிறான். இருந்தபோதும் மரகததிற்கு அந்தஸ்து ஒரு குறையாகவே இன்னும் இருக்கிறது.  மேலும் வீட்டுவிலாசம் முத்துமுத்தாக எழுதிக்கொடுப்பது, வீட்டிற்கு வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக போன் செய்யக் கேட்டுக்கொள்வது,   காபி டிபன் சாப்பிட்ட பாத்திரங்களை சுத்தமாகக் கழுவி கவிழ்த்து வைப்பது என்று கொஞ்சம் கொஞ்சமாக சுமதியின் சாம்ராஜ்ஜியம் விஸ்தீரணமடைவது அழகாகச்சொல்லப் பட்டிருக்கிறது.  திருமணத்திற்கு முஸ்தீபாகவே மரகதம் பூஜை ரூமுக்குள் சுமதியை கூட்டிப்போய், ஸ்வாமி விளக்கை ஏற்றி. வெற்றிலை-பாக்கு, தேங்காய், ஆப்பிள்பழம், ஜாதிப்பூச்சரம், பட்டுரோஜா, மஞ்சள் கிழங்குகள், ஒஸ்தியான ரவிக்கைத்துணி ஆகியவற்றுடன் ஒரு நூறு ரூபாய் சலவைத்தாளையும் அதில் மடித்து, ட்ரேய் ஒன்றில் வைத்து குங்குமச்சிமிழுடன், மரகதம் சுமதியிடம் கொடுக்கிறாள்.
    

மரகத்தின் காலில் விழுந்து கும்பிட்டு விட்டு, அவற்றை கையில் வாங்கிக் கண்களில் ஒத்திக்கொண்ட, சுமதி.  ரெடியாக சுந்தர் ஒரு அழகிய காலியான கைப்பையை எடுத்து, சுமதியிடம் நீட்ட, ”ரொம்ப தாங்க்ஸ், டைம்லி ஹெல்ப்” என்று சொல்லி அதைத் தன் கையில் வாங்கி, மரகதம் கொடுத்த பொருட்களை அதில் போட்டுக்கொண்டு.  ஜாதிப்பூச்சரத்தைத் தன் தலையில் சூடிக்கொண்டு, பட்டுரோஜாவையும் அதன் நடுவில் பதித்துக்கொள்கிறாள். ஏறக்குறைய திருமணம் நிச்சயம் செய்த மாதிரியல்லவா இருக்கிறது!? அது சரி கதை  இன்னும் சூடுபிடிக்கவே இல்லையே என்கிறீர்களா….!? சற்றுப்பொறுங்கள்.  சுமதியை வழியனுப்ப சுந்தர் வெளியே செல்லும் பொழுது எதிரே அவனது குடும்ப டாக்டர் வருகிறார்! (இந்த இடத்தில் இவரது என்ட்ரி எதற்கு?)

நடந்ததை எல்லாம் சுந்தர் சொல்லக் கேட்ட டாக்டர், “சுமதியூ ஆர் ரியலி ...  வெரி வெரி ... லக்கிகேர்ள்  எனக் கூறிச்செல்கிறார்.


எய்ட்ஸ் பாதித்த ஒருவனை மணந்துகொள்ள சம்மதிப்பவள் வெரிவெரி லக்கி கேர்ளா? அதுவும் குடும்ப டாக்டர் இதனை சொல்வதென்றால் …. …. …. இதில் ஏதோ விஷயம் இருப்பதுபோல் தோன்றுகிறதே?! வசமா மாட்னீங்களா? ஆர்வத்தைத்தூண்டி உங்களை அடுத்தது என்ன என்று கேள்வி எழுப்ப வைத்துவிட்டாரே வைகோ அவர்கள். சரி வாருங்கள் மேலே செல்லலாம்! 


      குழம்பிய சுமதியிடம் டாக்டர் ஒரு தமாஷ் பேர்வழி என்று சொல்லி தயவுசெய்து தனிமையில்பிரித்துப்படிக்கவும்” என்று எழுதிய கவர் 
ஒன்றை சுமதிகையில் கொடுத்து ஆட்டோ ஏற்றி அனுப்பி வைக்கிறான் சுந்தர். 

அடுத்தகாட்சியிலேயே விறுவிறுப்பு கூட்டும் விதமாக சுந்தருக்கு எய்ட்ஸ் எதுவுமில்லை என்பதும், குடும்ப டாக்டர் உதவியுடன் தனக்கு எய்ட்ஸ் என்று சொல்லி வரதட்சணை எதுவுமே வாங்காமல் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற தனது விருப்பத்தை - கொள்கையை நிறைவேற்றவே அவ்வாறு பெற்ற தாயிடமே நாடகமாடியுள்ளான் என்று கடிதத்தின் மூலம் தெரிந்ததும் பெருமகிழ்ச்சி  ஏற்பட்டாலும், பெற்றதாயிடமே உண்மையை மறைப்பதா என்று மிகவும் வருத்தம் கொள்கிறாள் பொய் சொல்வதை சற்றும் விரும்பாத சுமதி?! சுந்தரிடம் அவனது தாயாரிடம் உண்மையை சொல்லிவிடுமாறும் அதன்பிறகும் தன்னை மருமகளாக ஏற்றுக்கொள்ள விரும்பினால் மட்டுமே திருமணம் நடக்குமென்று திட்டவட்டமாக கூறிவிடுகிறாள். நல்ல வேலையிலுள்ள வரதட்சணை விரும்பாத, அழகான தோற்றம் கொண்ட வசதியான மாப்பிள்ளை என்று இத்தனை இருந்தபோதும், ஒரு பொய் காரணமாக இத்தனை நல்ல விஷயங்களை நிராகரிக்கத்துணியும் சுமதியின் பாத்திரம் அதி உன்னதம்! HATS OFF! 

வரதட்சணை வாங்கக்கூடாதென்பதற்காக தன்னையே நோயாளியென்று கூறி பின்னர் உண்மையை சொல்லி, இப்படி சுமதியிடம் மணமுடிக்க விருப்பம் தெரிவித்து கை ஏந்தி நிற்கும் சுந்தரின் பாத்திரப்படைப்பும் அருமைஇருவருமே ஒருவருக்கொருவர் சரி ஜோடி என்று நமக்கே தோன்றிவிடுகிறது! ஆனாலும் நாம் என்ன செய்வது? கதாசிரியரின் பின்னாலேயே நாமும் போகலாம்! 

சுந்தர் தனது விருப்பத்தை தெரிவித்தபோதும், அவனது அம்மாவின் விருப்பம் என்ன என்பதே இப்பொழுது கேள்விக்குறியாக உள்ளது. அவர்களது விருப்பம் பணக்கார மருமகளாக இருக்கலாமல்லவா அதுவும் மகனுக்கு எய்ட்ஸ் இல்லை என்பது தெரிந்த பின்னர் எதிர்பார்ப்பு அதிகரிக்கக்கூடுமே. எனவேதான் அவனது அம்மாவிடம் உண்மையைசொல்லி அதன்பிறகும் விருப்பமிருந்தால் மட்டுமே திருமணம் என்ற கண்டிஷன் “ALL THE BEST GOOD BYE” வேறு. அடப்பாவமே! இது போன்ற விஷயங்களை போனிலேயே பேசிகொள்வதாக காட்சி அமைத்து தர்மசங்கடங்களை தவிர்த்திருப்பது அருமையான உத்தி. சுமதியின் முடிவு – தெளிவு! சுந்தர் என்னதான் செய்வது? காதல் மொட்டிலேயே கருகிவிட விட்டுவிடமுடியுமா? காதலின் மறுபெயரே தவிப்புதானே? வரும் நாட்களில் சுந்தரின் பித்துப்பிடித்வனைப்போன்ற தோற்றம் கண்டு தாய் ஒரு முடிவுக்கு வருகிறாள்.


சுமதியை சந்திக்க நேரிலேயே செல்கிறாள் அதுவும் கோயிலுக்குச் செல்வதாக சொல்லிவிட்டு! (அது சரி ஆட்டோவில்தான் செல்லவேண்டுமா? ஒரு ஏசி கால் டாக்ஸி வைத்துக்கொள்ளக்கூடாதா? 
வேண்டுமென்றே அந்த பாத்திரத்துக்கு ஒரு சிறிய பனிஷ்மென்ட்டா? நடத்துங்க).  சுமதிவரும் வரையிலான காட்சிகள் ஒரு கார்ப்பரேட் ஹாஸ்பிடலுக்கான டிப்பிக்கல் காட்சிகள். ஒரு நல்ல FILLER தான்!  சுமதியை அவர்கள் வீட்டில் என்ன சொன்னார்கள் என்று கேட்டதும்

என்னை மன்னித்து விடுங்கள் அம்மாநான் எடுக்கும்எந்த முடிவுக்கும் என் 
வீட்டில் யாரும் எப்போதும் மறுபேச்சோமறுப்போ ஏதும் சொல்ல  மாட்டார்கள்;நன்கு யோசித்துப் பார்த்ததில்எனக்குத்தான் இப்போது இந்த விஷயத்தில் 
சுத்தமாக விருப்பம் இல்லைஎன்கிறாள் சுமதி(அப்பொழுதும்கூட சுந்தரை காட்டிக்கொடுக்கவில்லை!) வீட்டுக்குப்போன மரகதம் தன் மகனிடமே 

நமக்கு அதிர்ஷ்டம் இல்லேடாசுந்தர்சுமதிக்கு இந்தக் 
கல்யாணத்தில் சுத்தமாக விருப்பம் இல்லையாம்என்னிடமே இதை அவள் 
நேரில் சொல்லிவிட்டாளேநான் என்ன செய்வது?; எவ்வளவு தான் பணம் காசுசொத்து சுகம் நம்மிடம் கொட்டி இருந்தாலும்
சுமதியைப்போல ஒரு அழகானஅமைதியானஅடக்கமானநாகரீகமான
படித்த,பண்புள்ளபுத்திசாலியான பெண் எனக்கு மருமகளாக அடையக் 
கொடுத்து வைக்க வில்லையே .....” எனக்கூறி கண்ணீர் விட்டுப் புலம்பினாள்
மரகதம்.


பிறகென்ன சுந்தர் உண்மையை தனது தாயிடம் சொல்லிவிட்டு சுமதியே தன் மனைவியாகவேண்டுமென்று கெஞ்ச, மகனுக்கு வியாதியில்லை என்ற உண்மை வயிற்றில் பால் வார்க்க, சுந்தரைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு சுமதி ஏன் மறுப்பு தெரிவித்தாள் 
என்பதன் உண்மைக்காரணம்  புரிய வந்ததும்  சுமதி மீது மரகதத்தின் 
மதிப்பு பலமடங்கு உயர்கிறது

தனக்கு ஆதாயம் இருப்பினும்தன் மகன் தன்னிடமே பொய் சொன்னதைப் 
பொறுத்துக் கொள்ள மனமின்றிகொஞ்சமும் சுயநலமில்லாமல்
துணிச்சலுடன் நடந்துகொண்ட சுமதியேதனக்கு ஏற்ற மிகச்சிறந்ததொரு
மருமகளாக இருக்க முடியும் என்று முடிவு செய்கிறாள் மரகதம்பிறகென்ன எம்.ஜி.ஆர். பட கடைசிக் காட்சி மாதிரி, கல்யாணம், ஓபன் காரிலே டூயட்தான்! சுபம்!


      ஒரு கதைக்குள் எத்தனை செய்திகள்?! வரதட்சணை வாங்கவேண்டாமென்று இளைஞர்களுக்கு ஒரு அட்வைஸ் (மறைமுகமாகத்தான்); எய்ட்ஸ் நோயாளிகளை மனிதர்களாக நடத்தவேண்டுமென்ற அட்வைஸ்; நர்ஸ்களின் சேவை எத்தகையது உன்னதமான சேவை, அவர்களின் மனிதாபிமானம் எப்படி என்ற செய்திகள், பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டுமென்று பெற்றோர்க்கு உதாரணம்; எத்தனை எத்தனை?

      சுமதியின் பாத்திரப்படைப்பு அதி உன்னதம்! துணிச்சலாக விளம்பரத்தைப்பார்த்து நேரில் செல்வது, மரியாதையுடன் நடந்துகொள்வது, தயக்கமின்மை, இயல்பாக நடந்துகொள்வது, ரசனை உள்ளது, உண்மைக்குப் புறம்பானவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது, குடும்பத்திற்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்ய முன்வருவது, ஒரு பேனா முதற்கொண்டு எல்லாம் தயாராக தானே வைத்திருப்பது, மூன்றாம் மனிதர்கள் வீடென்றாலும் காபி டிபன் பாத்திரங்களை தானே சுத்தம் செய்து வைப்பது, சுந்தரைக் காட்டிக்கொடுக்காதது… என்ன ஒரு PRACTICAL ஆன CHARACTER? அப்பப்பா பின்னிட்டீங்க வாத்யாரே! FLORENCE NIGHTINGALE, சிறுவயது அன்னை தெரசா இவர்களை ஒரு ஓரத்தில் ஞாபகப்படுத்தும் கதாபாத்திரம்! சுந்தர், மரகதம் கூடவே சற்று நேரமே வந்தாலும் மனதில் நிற்கும் டாக்டரின் பாத்திரம் எல்லாமே கதைக்கு மெருகேற்றுகின்றன!

      அதிர்ஷ்ட தேவதை கதவைத்தட்டுவது மிக மெதுவாகத்தான் கேட்குமென்பார்கள்! “வரம் கொடுக்கும் தேவதைகள் வந்தபோது தூங்கினேன்! வந்தபோது தூங்கிவிட்டு வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்” என்று கவிஞர் மு.மேத்தா எழுதியிருப்பார். நல்லவேளை சுந்தரும் அவனது அம்மாவையும் கதாசிரியர் அவ்வாறு தூங்காமல் அ(ணை)ழைத்துக்கொள்ளச் செய்தது நம்மை மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. சுமதியை போலொரு தேவதை மகளாகவோ அல்லது மருமகளாகவோ நமது வீட்டிற்கும் தேடி வரமாட்டாளா என்ற ஏக்கம் நமக்கும் ஏற்படுத்திவிட்டது… வைகோ அவர்களின் மற்றும் ஒரு வெற்றி! ஒரு பாஸிடிவான உன்னதக்கதைக்கு மீண்டும் ஒரு நன்றி!

அன்புடன்
ரவிஜி @ மாயவரத்தான் MGR



  






மனம் நிறைந்த பாராட்டுக்கள்


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



    



இனிப்பான இரண்டாம் பரிசினை 


வென்றுள்ள மற்றொருவர்

திரு.



   E.S. சேஷாத்ரி  


அவர்கள்


esseshadri.blogspot.in






 

இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள


திரு. E.S. சேஷாத்ரி - காரஞ்சன் [சேஷ்]

அவர்களின் விமர்சனம் இதோ:





“தேடி வந்த தேவதை” எனும் இச்சிறுகதையில் பாத்திரப்படைப்பிலேயே பணக்காரக் குடும்பத்துப் பையன், நடுத்தர வர்க்கத்து பெண், பையனுடைய அம்மா, குடும்ப டாக்டர் என்ற நால்வரைச்சுற்றியே வித்யாசமான முறையில் கதையைப் படைத்து வெற்றி கண்டுவிடுகிறார்.

இக்கதையில் இன்றைய தலைமுறைக்கும், முந்தைய தலைமுறைக்கும் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இக்கால இளைஞர்களின் தடுமாற்றங்கள், அதனால் அவர்களைத் தாக்கும் நோய்கள், எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு, தற்காலத்தில் விளம்பரத்தின் ஊடுருவல், பணமிருக்கும் இடத்தில் நற்குணமுள்ள நடுத்தர வர்க்கத்துப் பெண்ணை  மணமுடிக்க மனத்தயக்கம், மனமாற்றம் ஏற்படும் சுழ்நிலையில் எதார்த்தத்தை உணர்ந்து ஏற்றல் ஆகிய இத்தனை விஷயங்களையும் கதையில் பக்குவமாகக் கையாண்டு, கோர்வையாகவும் நகைச்சுவையாகவும் கதையை நகர்த்தி நம் மனதில் இடம்பிடிக்கச் செய்கிறார்.

சுமதி கதையின் நாயகி. நடுத்தரவர்க்கதுப் பெண். தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணிபுரிபவள். அவளை அறிமுகம் செய்யும்போது, வர்ணனை வாயிலாக நம் கண்முன் நிறுத்திவிடுகிறார். வித்யாசமான விளம்பரம் ஒன்றைக் கண்டு, அந்த நபரைத் தொடர்பு கொள்ள முனைகையில் அறிமுகப் படுத்தப்படுபவர் அந்த பையனுடைய அம்மா மரகதம். அந்த விளம்பரம் நமக்குள்ளும் ஒரு எதிர்பார்ப்பைத் தூண்ட, சம்பந்தப்பட்ட முகவரியைத் தேடிச் செல்லும் தேவதையாகிறாள் நம் கதையின் நாயகி.

ஆயிரம் பொய்சொல்லி, இருப்பதை மறைத்து மணமுடிக்க முயலும் இந்நாளில், இல்லாத ஒரு வியாதியை இருப்பதாகக் கூறி, விளம்பரம் மூலம், தனக்கேற்ற பெண் தேடும், புரட்சிகரமான எண்ணம் கொண்ட 27 வயதான சாப்ட்வேர் எஞ்ஜினியர் சுந்தரை அவனது இல்லத்தில் சந்திக்கும் போது அவளுக்கும், சுந்தரின் அம்மாவுக்கும் நிகழும் உரையாடல்கள் எதார்த்தமாகவும், இக்கால இளைஞர்களின் நிலையை பிரதிபலிப்பதாகவும், அவளது அறிவுக்கூர்மையை வெளிப்படுத்துவதாகவும் அமைத்தது பாராட்டத் தக்கது. இருவருடைய பூர்விகமும் அருகருகே அமைந்த ஊர்களாக இருந்தது மரகதத்திற்கு மன மகிழ்வை ஏற்படுத்தியதாக அமைத்தது அருமை. பொதுவாகவே தன் ஊர்க்காரர்கலைக் காண நேரும்போதோ அல்லது அருகில் அமைந்த ஊர்க்காரர்களின் அறிமுகம் கிடைக்க நேரும்போது ஒரு மகிழ்வு ஏற்படுவது இயற்கைதான்.

அவர்களுடைய உரையாடல் வாயிலாக எயிட்ஸ் என்பது ஒரு ஆட்கொல்லிநோய். இப்போது வளர்ந்து வரும் மருத்துவத் துறையில் அதைக் குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிப்பது சாத்தியமாகலாம். பாதுகாப்பாக இருந்தால் அடுத்த தலைமுறைக்கு இது பரவாமல் தடுக்கலாம் என்பது போன்ற விஷயங்கள் மருத்துவமனையில் பணியாற்றிய சுமதி அறிந்து வைத்திருந்து, அவற்றை அடுத்தவர் உணரும் வகையில் உரைப்பதாக அமைத்தது அருமை.

எந்தவொரு மருத்துவப் பரிசோதனைகளோ, மருத்துவச் சான்றிதழ்களோ வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லாமலேயே, நம் நாட்டில் ஜாதகப் பொருத்தத்தையும், ஜோஸ்யர்கள் சொல்லும் பலன்களையும், கல்யாணத் தரகர்களின் வாய்ச்சவடால்களையும் மட்டுமே நம்பி, நிறைய திருமணங்கள் மிகச்சுலபமாக நடந்து முடிந்து விடுகின்றன;   இன்றைய தலைமுறையில, ஏமாற்றும் உலகில், அனைவரும்  யோசிக்க வேண்டிய வரிகள்.

தன் மகனுக்கு ஒழுக்கம் கெட்ட நடத்தையால் இந்நோய் வந்திருக்கலாம் எனத் தெரிந்தும் எப்படி மணக்க முன்வந்தாய் எனும் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, வயசுக்கோளாறு, ஆர்வக்கோளாறு, தவறான சகவாசம், தவறான வழிகாட்டல் இவற்றால் வாழ்க்கையில் தடுமாறுபவர்கள் அதிகம். அதை ஒரு கெட்ட கனவாக நினைத்து மற்ந்து நாம் மீண்டு வர வேண்டும் என உரைப்பது அருமை.

தெரிந்தோ தெரியாமலோ நம் கை அல்லது கால் விரல்களால் அசிங்கத்தைத் தொட்டு விடுவதில்லையா? அது போலத்தான் இதுவும்; 



அதற்காக அந்த அசிங்கத்தின் மேல் பட்ட நம் விரல்களை உடனே நாம் வெட்டி எறிந்து விடுகிறோமா!  ........   இல்லையே;

அதுபோலவே, இவர்களை நாம் ‘ஒழுக்கம் கெட்டவர்கள்’ என ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாது. எதிர்பாராமல் நம்மை மீறி, நடந்து முடிந்து விட்ட இதை, ஒரு சிறிய விபத்து என்று தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்; 

இது போன்ற விபத்துக்கள் ஆண்களுக்கு மட்டுமல்ல, ஒரு சில அப்பாவிப் பெண்களுக்கும் கூட திருமணத்திற்கு முன்பே துரதிஷ்டவசமாக ஏற்பட்டு விடுவதுண்டு, அதை நாம் ஒரு கெட்ட கனவு போல மறந்து விடுவதே நல்லது”


மழைக்காலத்தில் நாம் வெளியில் செல்லும்போது வழுக்கியோ, தடுக்கியோ சாக்கடை நீரில் விழ நேர்வதுபோல்தான் இந்நிகழ்வுகள் எனும் கதாசிரியரின் கருத்து ஏற்புடையதாகத்தான் உள்ளது.

பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. இடைப்பட்ட நாட்கள் இருப்பது நம் கையில்.  
இந்தமிகக்குறுகிய காலத்தில்நாம் நம்மால் பிறருக்கு என்னஉதவிகள் செய்திட முடியும் என்பதையே எப்போதும்சிந்திப்பவள் நான்இந்த யதார்த்தத்திலேயே தினமும்எங்கள் மருத்துவ மனைக்கு வரும் பல நோயாளிகளுக்குஎன்னால் முடிந்த மருத்துவ சேவைகள் செய்துவருகிறேன்” 
என  சுமதி உரைப்பதாக அமைத்த இடத்தில் வாழ்வியல் தத்துவத்தை எளிமையாக உணர்த்திவிட்ட கதாசிரியர் பாராட்டுக்குரியவர்.
இந்த இடைவெளியில் சிற்றுண்டி தயாரிக்கச் சென்ற மரகதத்தின் மனப் போராட்டத்தின் வாயிலாக. தன் மகனின் விளம்பரத்தால் தன் கற்பனைகள் தவிடுபொடியானதில் வருத்தம். நல்ல பணக்கார சம்பந்தம் அமையாமற் போனதில் எரிச்சல் எல்லாம் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.
அந்த நகையணிந்த கழுத்துபோல ஒரு தோசையின் படத்தை எங்கிருந்து பிடித்தாரோ நம் கதாசிரியர். கதையைப் படிப்பவர்க்கும் பசியைத்தூண்டி விட்டு விடுகிறார்.
சுமதியும் சுந்தரும் தனிமையில் ஒரு சில நிமிடங்கள் பேசிய உடனே, சுந்தரின் மனதில் சுமதி இடம்பிடித்து விடுவதை உணர்த்தும் விதமாக, சுமதி எதிரிலேயே சுந்தர் தன் அம்மாவிடம், எரிச்சலடைந்து எதிர்கேள்வி கேட்பதாக அமைத்த இடம் அருமை!
காதல் உன்பால் இல்லை என்றால், கன்னி உள்ளம் கருகி விடும் - தேதி வைத்துச் சேதி சொன்னால் தாய் முகமும் மறந்து விடும்”  என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

அழகு தேவதை தன் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் எழுதிக் கொடுக்க, அவள் கையெழுத்தின் அழகாலும், அடுத்தடுத்த காரியங்களில் கனமுடன் சுறுசுறுப்பாய் பணியாற்றும் விதத்தாலும், பொறுப்பான குடும்பப் பெண்ணாய் விளங்குவதாலும் இருவர் மனதிலும் இடம் பிடித்துவிடுகிறாள்.

சுமதி புறப்படத் தயாராகும்போது, பூஜை அறைக்கு அழைத்துச் சென்று, விளக்கேற்றி,
 வெற்றிலை-பாக்கு,தேங்காய்ஆப்பிள்பழம்மல்லிகைப்பூச்சரம்பட்டுரோஜா,மஞ்சள் கிழங்குகள்ஒஸ்தியான ரவிக்கைத்துணிஆகியவற்றுடன் ஒரு நூறு ரூபாய் சலவைத்தாளையும்அதில் மடித்துட்ரேய் ஒன்றில் வைத்து குங்குமச்சிமிழுடன்,மரகதம் சுமதியிடம் நீட்டுவது .     
ஒரு symbolic shot எனலாம். விளக்கேற்றத் தகுதியான மருமகள் என மனதில் ஒரு எண்ணம் ஏற்படுத்திய விளைவாக இருக்கலாம்.

பூச்சூடிய சுமதியை வர்ணிக்கும் கதாசிரியருக்குள் ஒரு கவியுணர்வு இருப்பதை அறியமுடிகிரது. கதையின் பின்பகுதியில் வரும் சில இடங்கள் அதை நன்றாகவே வெளிப்படுத்தி விடுகின்றன.

தேவை அறிந்து சேவை செய்வதாக சுமதியிடம் பையை நீட்டிய சுந்தர், அவளை வழியனுப்ப வரும்போது, அவனின் குடும்ப டாக்டரை சந்திக்க நேர்வதும், அவர்வேறு தன் பங்கிற்கு அவளிடம் “நீ ஒரு அதிர்ஷ்டசாலிப் பெண்” எனக் கூறிச் செல்வதும் நமக்கு எதிர்பார்ப்பைத் தூண்டிவிடுகிறது.

 ”தயவு செய்து தனிமையில் பிரித்துப் படிக்கவும்” என சுமதியிடம் சுந்தர் கொடுக்கும் கடிதம் கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

கடிதத்தை படிக்கும் சுமதிக்கு குழந்தை கையில் அழகான பலூன் கிடைத்தது போன்ற சந்தோஷமும், அதே நேரத்தில் அது வெடித்தது போன்ற வருத்தமும் ஏற்பட்டதாகக் குறிப்பிடும் விதம் அருமை.

தான் மணந்து கொள்ளத் துணிந்த சுந்தருக்கு ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் இல்லை என அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்வும், பணத்தைப் பிரதானமாக எண்ணி வரன் தேட முற்பட்ட அம்மாவிடம், தன் குடும்ப டாக்டரின் ஒத்துழைப்போடு தன்க்கு வியாதி என பொய் சொன்னதில் வருத்தமும் அடைகிறாள்.

அதன்பின் நடக்கும் தொலைபேசி உரையாடலில், தலைமுறை மாற்றத்தில் ஏற்பட்டு வரும் சிந்தனை மாற்றங்களை பிரதிபலிக்கச் செய்து விடுகிறார். முந்தைய தலைமுறையைச் சார்ந்த அவன் அம்மாவின் எதிர்பார்ப்பில் தவறில்லை என்றுரைத்து, இன்றைய சூழலிலும் வரதட்சிணை பெறுவது ஏதோ ஒரு வகையில் தொடர்கதையாகி வருவதை உரைத்து, வரதட்சிணை வாங்காமல் இருக்க உறுதிபூண்ட அவனைப் பாராட்டி அதே நேரத்தில் அதைக் கையாள அவன் தேர்ந்தெடுத்த வழிமுறையை இடித்துரைத்து, அவன் அம்மாவிடம் உண்மையைச் சொல்ல வற்புறுத்தும் இடத்தில் சுமதியின் பாத்திரத்தை மேலும் மெருகூட்டி விடுகிறார் கதாசிரியர்.


இருதலைக் கொள்ளி எறும்பாகிறான் கதாநாயகன்.  தாயாரிடம் உண்மையைச் சொன்னால் இந்தத் திருமணம் தடைபட்டுவிடுமோ என்ற பயம், சொல்லவில்லை என்றால் சுமதி தன்னை ஏற்க மறுத்துவிடும் நிலையால் மனவருத்தம். நான்கு நாட்களில் பித்துப்பிடித்தவன் போலாகிவிடுவதாகக் காண்பித்த கதாசிரியர் அந்தக் காட்சியை நம் கண்முன் நிறுத்திவிடுகிறார். பெளர்ணமி நிலவின் வருகையால் இந்த மாற்றமோ?

கனமான இருக்கையில் கும்மென்று அமரும் செல்வச் சீமாட்டி, குளுகுளு காரில், சீருடை அணிந்த டிரைவருடன் வலம்வரும் செல்வச்சீமாட்டி தன் மகனின் நிலைகண்டு ஆட்டோவில் அவன் அறியாமல் பயணிக்க எத்தனித்தது மற்றுமொரு symbolic shot. அது எப்படி சார் உங்களால் மட்டும் அப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது. சந்திப்புக்கு முன் போரடிக்காமல் இருக்க comedy shot ஆக மருத்துவமனைக்கு வரும் அயல்நாட்டுப் பெண்களை வர்ணிக்கும் இடங்கள். ரவிக்கை – கை = ரவிக் என்ற புது சன்பாடு. வானிலை அறிக்கையை, வெயிலின் தாக்கத்தை உடையால் உணர்த்திய விதம், இனி  பச்சை வேர்க்கடலையை உரித்து ரோஸ் கலரில் பருப்பைப் பார்க்கும் போதெல்லாம் உங்கள் கதை வர்ணணைதான் நினைவுக்கு வரும். தங்களுக்குள் நகைச்சுவையுடன் கூடிய ஒரு கவியுணர்வு உள்ளது என்பதை இக்காட்சிகள் தோலுரித்துக் காட்டுகின்றன.

மருத்துவமனையிலேயே மருமகளாய் வரவிழைபவளைச் சந்திக்க வந்து அவள் மறுப்புச் சொன்ன விதத்தில் கோபம் கொப்பளிக்க எழுந்து செல்வதை வெளிப்படுத்தும் இடத்தில் அந்த நாற்காலியின் ஆட்டத்தால் அதை உணர்த்தியது கதாசிரியருக்கே கைவந்த கலை.

ஒருவழியாய், மகன் மூலம் உண்மையை அறிந்து, நோய் இல்லையென்வுடன் அகமகிழ்ந்து, மனதிற்குள் மகனையும், குடும்ப டாக்டரையும் முடியுமட்டும் திட்டித் தீர்த்து, மருமகளாய் வரப்போகின்றவளின் கோபத்தில் இருந்த நியாயத்தை உணர்ந்து இணைந்த மனங்களை இணைத்து வைக்க ஒப்புக்கொண்ட மனம் திருந்திய தாயாய் மரகதத்தை மாற்றிவிடுகிறார் கதாசிரியர்.

அருமையான முடிவு நம்மை மகிழ்விக்கிறது.

மண வாழ்க்கை அமைவதற்கோ மனைவி வாய்க்க வேண்டும் குலமகளாய்க் கிடைப்பதற்கோ கொடுத்து வைக்க வேண்டும்அருமைகளும் பெருமைகளும் நிறைவதுதான் இன்பம் நீ அத்தனையும் பெற்று விட்டாய் ஆனந்தமாய் வாழ்க!
என்று சுந்தருக்கு வாழ்த்துரைக்கத் தூண்டுகிது.

                                                       வரதட்சிணை வாங்கக் கூடாது. நல்ல மனமுள்ள பெண்ணை மணமுடிக்கப் பணம் தடையாக இருக்கக் கூடாது என்ற புரட்சிகரமான சிந்தனை வரவேற்கத் தக்கதுதான். அதற்காக இப்படி ஒரு வழியைத் தேர்ந்தெடுப்பதில் பல சிக்கல்கள் வரவும் வாய்ப்பிருக்கிறது. நல்ல கருத்துகளை வலியுறுத்தி, இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டி, பெரியவர்களை இக்காலத்தின் எதார்த்த நிலையை ஏற்றுக்கொள்ளத் தூண்டும் வண்ணம் இக்கதையைப் படைத்த கதாசிரியர் நம் அனைவரின் பாராட்டுக் குரியவராகிறார். அவருக்கு என் நன்றி!


-காரஞ்சன்(சேஷ்)
esseshadri.blogspot.in
 



மனம் நிறைந்த பாராட்டுக்கள்


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.




    



 
   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.





நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது.





இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.



காணத்தவறாதீர்கள் !





oooooOooooo



அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



 VGK-27 




 ’ அவன் போட்ட கணக்கு ‘ 




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 



24 . 07. 2014



இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.













என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

19 கருத்துகள்:

  1. இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள
    திரு. ரவிஜி மாயவரத்தான் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும்,
    - திரு.காரஞ்சன்(சேஷ்) அவர்களுக்கும்
    இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  2. இரண்டாம் பரிசு பெற்றுள்ள திரு.ரவிஜி அவர்களுக்கும் திரு.சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து பல பரிசுகள் பெறவும் இனிதே வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. எனக்கு இந்த அரிய வாய்ப்பினை நல்கிய வாத்தியார் - வைகோ அவர்களுக்கும் பரிசுக்குத்தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! பரிசினைப் பகிர்ந்துகொண்டுள்ள திரு. சேஷாத்ரி அவர்களுக்கு எனது இனிய வாழ்த்துகள்! வாழ்த்திய வாழ்த்தவிருக்கும் அன்புநெஞ்சங்களுக்கு எனது நன்றிகள்! அது சரி அப்படின்னா முதல் பரிசு வாழ்த்தியுள்ள நீங்கள் ரெண்டு பேரும்தானா? அதற்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்! என்னோட புது பரோட்டாக் கணக்குல ஒண்ணே ஒண்ணு சேர்ந்திருக்கு! பாக்கலாம்! அன்புடன் MGRற்

    பதிலளிநீக்கு
  4. விமர்சனங்கள் அருமை... திரு. ரவிஜி அவர்களுக்கும், திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. தங்களது சிறுகதை விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசினை வென்ற மாயவரத்தான் என்ப்படும் ரவிஜி அவர்களுக்கும் மற்றும் திரு ஈ.எஸ்.சேஷாத்ரி அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  6. இரண்டாம் பரிசு பெற்ற திரு ரவிஜி , மற்றும் திரு சேஷாத்திரி அவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு
  7. http://mayavarathanmgr.blogspot.in/2014/07/vgk_19.html
    திரு. ரவிஜி மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள்.

    இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  8. ரவிஜி, சேஷாத்ரி இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. இரண்டாம் பரிசு கிடைத்தது மகிழ்வளிக்கிறது. வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், மதிப்பிற்குரிய நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!. தொடர்ந்து பாராட்டி, வாழ்த்தி, ஊக்கமளித்து வருகின்ற நல்லிதயங்கள் அனைவருக்கும் என் நன்றி!

    பதிலளிநீக்கு
  10. இரண்டாம் பரிசை வென்ற ரவிஜி அவர்களுக்கும், சேஷாத்ரி அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. http://esseshadri.blogspot.com/2014/08/blog-post.html
    காரஞ்சன் [சேஷ்] திரு. E.S. சேஷாத்ரி அவர்கள்

    இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  12. ’சேஷ் விருது’ க்கான முதலிடமும் மற்றும் ’கீதா விருது’ க்கான மூன்றாமிடமும் பெற்றுள்ள சாதனையாளர் திரு. E S சேஷாத்ரி அவர்கள், தான் இதுவரை பெற்ற தொடர் வெற்றிகளான VGK-25 TO VGK-40 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சிறப்பித்து தன் வலைத்தளத்தினில் இன்று தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.

    அதற்கான இணைப்பு:

    http://esseshadri.blogspot.com/2014/11/blog-post.html

    அவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  13. இரண்டாம் பரிசை வென்ற திரு ரவிஜி அவர்களுக்கும், திரு சேஷாத்ரி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. பரிசு வென்ற திரு ரவிஜி, திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. இரண்டாம் பரிசை வென்ற திரு ரவிஜி அவர்களுக்கும், திரு சேஷாத்ரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. பரிசு வென்ற திரு ரவிஜி திரு சேஷாத்திரி அவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. திரு ரவிஜி திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள் இருவரின் விமரிசனமும் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  18. இரண்டாம் பரிசு கிடைத்தது மகிழ்வளிக்கிறது. வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், மதிப்பிற்குரிய நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!. தொடர்ந்து பாராட்டி, வாழ்த்தி, ஊக்கமளித்து வருகின்ற நல்லிதயங்கள் அனைவருக்கும் என் நன்றி!

    பதிலளிநீக்கு