இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை
விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய
கடைசி நாள்: 24.07.2014
வியாழக்கிழமை
இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.
வியாழக்கிழமை
இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.
விமர்சனம் அனுப்ப வேண்டிய
மின்னஞ்சல் முகவரி:
மின்னஞ்சல் முகவரி:
valambal@gmail.com
REFERENCE NUMBER: VGK 27
போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:
-oOo-
”என்ன ... கணக்கு வாத்யார் ஐயா, செளக்யங்களா” ப்யூன் தமிழ்மணி தலையில் கட்டியிருந்த முண்டாசுத் துணியை இடுப்பில் கட்டியவாறு கணக்கு வாத்யார் வீட்டை நெருங்கினான்.
“வா..ய்..யா .... தமிழ்மணி! அப்படியே திண்ணையிலே உட்காரு; என்ன இவ்வளவு தூரம். உன் பையன் மாசிலாமணிக்கு மெடிகல் சீட்டு கிடைச்சுடுத்தா?”
“ஐயா.. அதைப்பத்திப் பேசிட்டுப் போகலாம்னு தான் வந்தேனுங்கய்யா. நேரிடையா மெடிகல் சீட் கிடைக்காது போல தெரியுது ஐயா. 'பீ.டி.எஸ்.' [BDS] ன்னு ஏதோ பல் டாக்டர் படிப்பாமில்லே, அது தான் கிடைக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்கய்யா. என்ன செய்யறதுன்னு புரியாம இருக்குதய்யா”
“பல் டாக்டர் படிப்பும் நல்லது தானே. அது கிடைச்சா அதிலேயே சேர்த்து விட்டுடு தமிழ்மணி; அதுவே கிடைக்காம எவ்வளவு பேருங்க தவிக்கறாங்க தெரியுமா?”
“என்னய்யா நீங்க போயி இது போலச் சொல்றீங்க; நல்லா படிக்கற பையன், உங்களுக்கே நல்லாத் தெரியும். நிறைய மார்க் வாங்கியிருக்கிறான். அவன் ஆசைப்படற டாக்டர் படிப்பு படிக்க வைக்கணும்னு நானும் எவ்வளவு கஷ்டப்பட்டு என்னுடைய சேமிப்பு, சொத்துபத்து எல்லாவற்றையும் விற்றும், கடைசியிலே அவனைப் போயும்போயும் இந்தப் பல் டாக்டர் படிப்புக்குத்தான் அனுப்பணும் போலிருக்கே!”
என்னய்யா விஷயம் புரியாம இப்படிப் பேசுறே? சாதாரணத் தலைவலி, வயிற்றுவலின்னு வருகிற நோயாளிகளை விட பல்வலி என்று வரும் நோயாளிகள் 32 மடங்கு அதிகமய்யா. வருமானம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் தொழிலய்யா, இந்தப் பல் டாக்டர் தொழில்.
“கொஞ்சம் விவரமா புரியும்படியாகச் சொல்லுங்கய்யா” வாயைப் பிளந்து 32 பற்களும் தெரியும் படி கணக்கு வாத்யாரை நோக்கினான் தமிழ்மணி.
“நம்ம நாட்டோட மொத்த ஜனத்தொகை எவ்வளவுன்னு உனக்குத் தெரியுமா?”
“130 கோடிக்கு மேல் இருக்கும் என்று அன்னைக்கு நம்ம சமூகவியல் வாத்யார் சண்முகம் வகுப்பறையில் பாடம் நடத்திக்கிட்டு இருந்தார், ஐயா”.
“கரெக்ட்டு ..... ஒவ்வொரு மனுஷனுக்கும் மொத்தம் எவ்வளவு பல்லு இருக்குன்னு உனக்குத் தெரியுமா?”
“32 பல்லுங்கன்னு சொல்லுவாங்க ஐயா”
“அப்போ பல்லு முளைக்காத குழந்தைகளும், முழுப்பல்லும் போன கிழடுகளும் என்று ஒரு 30 கோடி பேர்களை நீக்கி விட்டு கணக்குப் பார்த்தால் கூட, ஆளுக்கு 32 பல்லு வீதம் 100 கோடி பேருக்கு, மொத்தமாக ஒரு 3200 கோடி பற்கள் நம் நாட்டில் தேறும் அல்லவா?”
“ஆமாம் ஐயா; இருக்கலாம்; அதற்கென்ன இப்போ?”
“இந்த 3200 கோடி பற்களில், ஆரோக்கியமாகப் பராமரிக்கப்பட்டு தற்சமயம் அவஸ்தை ஏதும் இல்லாத பற்கள் என்று ஒரு 80 சதவீதம் பற்களை விட்டு விட்டால் கூட, மீதி 20 சதவீதம் அதாவது 640 கோடி பற்கள், ஆடும் பற்களும், சிகிச்சை நாடும் பற்களும் தான் என்பதை ஒத்துக் கொள்கிறாயா?”
”இப்போத்தான் நீங்க சொல்வது எனக்கு ஏதோ கொஞ்சமாகப் புரிவது போல இருக்குது ஐயா”
கணக்கு வாத்யார் இதுவரை சொன்ன சமாசாரங்களை ஒரு பேப்பரில் அழகாக முத்து முத்தாக (முத்துப் பற்கள் போல) தமிழ்மணிக்குப் புரிவது போல பட்டியலிட்டார்.
நாட்டின் மொத்த ஜனத்தொகை 130,00,00,000
பல் முளைக்காத குழந்தைகள் +
சுத்தமாகப் பற்கள் போன கிழடுகள் [ - ] 30,00,00,000
பற்கள் உள்ள மீதி பேர்கள் 100,00,00,000
80% பிரச்சனை இல்லாதவர்கள் [ - ] 80,00,00,000
20% பல் பிரச்சனையுள்ள மீதி பேர்கள் 20,00,00,000
ஒருவருக்கு 32 பற்கள் வீதம்
[ 20 கோடி x 32 = 640 கோடி]
[ 20 கோடி x 32 = 640 கோடி]
நாட்டில் பிரச்சனையுள்ள பற்கள் 640,00,00,000
“இந்தப் பாடாவதிப் பற்களான 640 கோடிகளை, ஆண்டு முழுவதும் பரவலாக சிகிச்சை செய்ய வருகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் ...... [ 640,00,00,000 / 365 நாட்கள் = 1,75,34,246 ] தினசரி சராசரியாக ஒரு கோடியே எழுபத்து ஐந்து லட்சத்து முப்பத்து நாலாயிரத்து இரு நூற்று நாற்பத்தாறு பற்களுக்கு அவசர வைத்தியம் பார்க்க வேண்டிய நிர்பந்தம், நம் நாட்டில் உள்ளது.
உனக்கு இது வரை நான் போட்ட இந்தக் கணக்கு புரிகிறதா ... இல்லையா?”
“இந்தப் பாடாவதிப் பற்களான 640 கோடிகளை, ஆண்டு முழுவதும் பரவலாக சிகிச்சை செய்ய வருகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் ...... [ 640,00,00,000 / 365 நாட்கள் = 1,75,34,246 ] தினசரி சராசரியாக ஒரு கோடியே எழுபத்து ஐந்து லட்சத்து முப்பத்து நாலாயிரத்து இரு நூற்று நாற்பத்தாறு பற்களுக்கு அவசர வைத்தியம் பார்க்க வேண்டிய நிர்பந்தம், நம் நாட்டில் உள்ளது.
உனக்கு இது வரை நான் போட்ட இந்தக் கணக்கு புரிகிறதா ... இல்லையா?”
”கணக்கு வாத்யாராகிய நீங்க சொன்னீங்கன்னா, அது எனக்குப் புரியுதோ இல்லையோ, அது சரியாத்தான் இருக்கும். மேற்கொண்டு சொல்லுங்க ஐயா”
”நம் நாடு பூராவும் சேர்த்து ஒரு லட்சம் பல் டாக்டர்கள் இருப்பார்கள் என்று ஒரு கணக்குக்கு வைத்துக் கொண்டாலும் (அவ்வளவு பேர்கள் இருப்பது நிச்சயம் சந்தேகமே), தினமும் ஒவ்வொரு பல் டாக்டரும் [1,75,34,246 / 1,00,000 = 175 ] சுமார் 175 பற்களுக்குக் குறையாமல் உடனடியாக அவசர வைத்தியம் செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை இன்று உள்ளது.”
“ஒரு பல்லுக்கு ஐம்பது ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், பொழுது விடிந்து பொழுது போனால் தினமும் ஒரு எட்டாயிரம் ரூபாய்க்கு மேல் கல்லா கட்டிவிடலாம் போலத் தெரியுதே, ஐயா” !
”இப்போ தான் நீ கரெக்டா பாய்ண்ட்க்கே வந்திருக்கே! .... ஆனால் அவசரப் படாம நான் சொல்றதை முழுவதுமாகக் கேளு”, தமிழ்மணி.
“சரிங்க ஐயா .... சொல்லுங்க ஐயா..... அப்படியே அந்தப்பேப்பர்லே எல்லாவற்றையும் தெளிவா எழுதங்க ஐயா”
“அது மட்டுமா, தமிழ்மணி; ஏழையோ, பணக்காரனோ, நல்ல பதவியில் இருப்பவனோ, அரசாங்க அதிகாரியோ, அரசியல் வாதியோ எவனாக இருந்தாலும், பல்லைக் காட்டிக்கொண்டு உன் பையனிடம் தானே வந்தாகணும்?”
”நீங்க இப்படிப் பால் கணக்கு போடுவது போல, பல் கணக்கைப் புட்டுப்புட்டு வைப்பதைக் கேட்கும் போது, என் உடம்பெல்லாம் புல்லரிக்குது ஐயா”
இரு இரு அவசரப்படாதே; சொத்தைப்பல், பூச்சிப்பல், பல் கூச்சம், பல் அரணை, பல்லில் ரத்தம் வடிதல், பல்லைச் சுற்றி ஈறு வீக்கம், ஆடும் பற்கள், கறை மற்றும் காரை படிந்த பற்கள், இடைவெளி அடைப்பு செய்ய, பல் சுத்தம் செய்ய, விபத்தில் அரைகுறையாக உடைந்த பற்களை செப்பனிட, பல்லை அழகு படுத்த, விழுந்த பல்லை மட்டும் மீண்டும் கட்டிக்கொள்ள, பல்செட் முழுவதுமாக மாற்ற எனப் பலவித வாடிக்கையாளர்கள் தினமும் உன் மகனைப் புடை சூழ்ந்து நிற்க, மாதந்தோறும் பல லட்சங்களை நீ எண்ணி, பத்திரப் படுத்தவே உனக்கு நேரம் பத்தாது.
“ஐயா, நீங்க சொல்லும் கணக்கைக் கூட்டிக்கழித்துப் பார்த்தால், பல் டாக்டர் படிப்பில் தான் நல்லாச் சில்லறையை பார்க்க முடியும் போலத் தெரிகிறது, ஐயா”.
“சில்லறையா ! தினமும் ’பல்’லாயிரம் ’பல்’லாயிரமா, மாதம் முழுவதும் லட்சம் லட்சமா ரூபாய் நோட்டுகள் வந்துக் குவியுமய்யா” அவற்றை எண்ணி ஒழுங்குபடுத்தி அடுக்கிவைத்து கணக்குப்போடவே தனியாக சில ஆட்களைப் போட வேண்டியிருக்கும்.
“ஐயா, நீங்க கணக்கு வாத்யார் மட்டுமல்ல; குழப்பமான நேரத்தில் என் கண்களைத் திறந்த தெய்வமய்யா” எனத் தன் அனைத்துப் பற்களும் தெரிய சிரித்த வண்ணம், கணக்கு வாத்யாரிடமிருந்து அந்தக் கணக்குப்போட்ட பேப்பரையும் வாங்கிக்கொண்டு, அவரைக் கும்பிட்டவாறே விடைபெற்று, தன் வீட்டுக்கு விரைந்தார், தமிழ்மணி.
தன் மகனை பல் டாக்டருக்கே படிக்க வைத்தார், தமிழ்மணி.
வருடங்களும் வேகமாக ஓடிவிட்டன. தமிழ்மணியின் மகன் மாசிலாமணியின் பல் டாக்டருக்கான படிப்பும் முடியும் தருவாய்க்கு வந்து விட்டது.
வருடங்களும் வேகமாக ஓடிவிட்டன. தமிழ்மணியின் மகன் மாசிலாமணியின் பல் டாக்டருக்கான படிப்பும் முடியும் தருவாய்க்கு வந்து விட்டது.
அன்றொரு நாள், பள்ளியில் காலை பிரார்த்தனை முடிந்ததும், பள்ளி மணியை அவசர அவசரமாக அடித்து விட்டு, வருகைப் பதிவேடு, சாக்பீஸ்கள் சகிதம், ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்ற தமிழ்மணி கணக்கு வாத்யாரை மீண்டும் சந்திக்கிறார்.
“ஐயா, இன்னிக்கு சாயங்காலம் உங்களை சந்திச்சு கொஞ்சம் தனியாப் பேசணும்” என்றார் தமிழ்மணி.
“இன்று எனக்குக் கடைசி பீரியடு ரெஸ்ட் தான். மூன்றரை மணிக்கு ரெஸ்ட் ரூமுக்கு வா; நாம் ப்ஃரீயாக பேசலாம்” என்றார் கணக்கு வாத்யார்.
கடைசி பீரியட் ஆரம்ப மணி அடித்து விட்டு ரெஸ்ட் ரூமுக்குச் சென்றார் தமிழ்மணி.
”என்னய்யா தமிழ்மணி, உன் கஷ்டமெல்லாம் விலகி நல்ல காலம் பிறக்கப் போகிறது. உன் பையன் பல் டாக்டர் படிப்பு முடிந்து அடுத்த மாதம் வந்துடுவான் என்று நினைக்கிறேன்” என்றார் சரியாகக் கணக்குப் போட்டுக்கொடுத்த, கணக்கு வாத்யார்.
“வாத்யார் ஐயா .... நாம ஒரு கணக்குப் போட்டா தெய்வம் வேறொரு கணக்குப் போடுது. நேத்து என் பையனும், அவனுடன் பல் டாக்டருக்குப் படிக்கும் ஒரு பொண்ணும் வீட்டுக்கு வந்தாங்க. இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க போலத்தெரியுது” என்றார் தமிழ்மணி.
“ரொம்பவும் நல்ல சமாச்சாரம் தானே; பழம் நழுவிப் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்தது போலல்லவா இருக்கு நீ சொல்லும் இந்த இனியச் செய்தி. மகன், மருமகள் இருவருமே பல் டாக்டர்கள் என்றால் உன் ஸ்டேடஸ் உயர்ந்து போய் விடுமய்யா. இனி நீ ஸ்கூலிலே மணி அடித்து ப்யூன் வேலையெல்லாம் செய்ய வேண்டியதில்லை” என்றார் கணக்கு வாத்யார்.
“ஐயா, அவசரப்படாம, நான் இப்போ சொல்றதை தயவுசெய்துக் காது கொடுத்துக் கேளுங்க. அவங்க ரெண்டு பேரும், மேல் படிப்புக்காக வெளி நாட்டுக்குப் போகப் போறாங்களாம்.
என் பையனுக்கான பயணச்செலவு, மேற்படிப்புச் செலவு எல்லாமே அந்தப் பெண்ணோட அப்பாவே பார்த்துக் கொள்வாராம்.
மொத்தத்தில் என் பையனும் அவர்கள் விரித்த வலையில் விழுந்து விட்டான் என்று நல்லாவே தெரிகிறது.
அவர்கள் அவனை வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொண்டு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாக்கி, ஒரு கொத்தடிமை போல நடத்துவார்கள் என்று என்னால் நன்றாக உணர முடிகிறது.
’எங்கேயோ என் மகன் நன்றாக இருந்தால் சரி’ என்று தான் படிப்பறிவு இல்லாத நான் போக வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன். இந்த மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் விஷயத்தை, ஏதோ ஒரு நண்பனுக்குச் சொல்லும் தகவல் போல, மிகச் சாதாரணமாக அவன் என்னிடம் சொல்லி விட்டுப் போனது தான், என் பற்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பிடுங்கி எறிந்தது போல உள்ளது எனக்கு” என்று கண் கலங்கியபடி தமிழ்மணி கூறினார்.
தமிழ்மணியின் இந்தப் புதிய கணக்கிற்கு விடை கூற முடியாமல் கணக்கு வாத்யாரே முழிக்கலானார்.
அதே நேரம் தமிழ்மணியைக் காணாததால், ஸ்கூல் விடும் மணி, வேறு யாராலோ மிக வேகமாக அடிக்கப்பட்டது.
oooooOooooo
’அவன் போட்ட கணக்கு’ என்ற இந்த என் சிறுகதை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள திருமதி S. பாக்யம் ஷர்மா என்பவரால் ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு, அங்கிருந்து வெளிவரும் HEALTH - *BODY... MIND ... SOUL* என்ற ஹிந்திப் பத்திரிகையின் பக்கம் எண்: 2 இல் 26.01.2014 ஞாயிறு அன்று என் பெயருடன் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஏற்கனவே என்னுடைய சில கதைகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு கன்னடப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.
நான் தமிழில் எழுதிய கதையொன்று ஹிந்தியில் வெளியிடப்படுவது, எனக்குத்தெரிந்து, இதுவே முதல் தடவையாகும்.
- அன்புடன் கோபு [VGK]
oooooOooooo
VGK-25 'தேடி வந்த தேவதை'
VGK-25 - ’ தேடி வந்த தேவதை ’
சிறுகதை விமர்சனங்களுக்காக
பரிசுபெற்றவர்கள் பற்றிய அறிவிப்பு
நாளை சனி / ஞாயிறு
வெளியிடப்படும்.
காணத்தவறாதீர்கள்.
ஒவ்வொருவாரப் போட்டிகளிலும்
கலந்துகொள்ள மறவாதீர்கள்.
TIPs & SUGGESTIONs FOR WINNING !
[சிறுகதை விமர்சனப்போட்டிகளில்
வெற்றி பெற சில ஆலோசனைகள்]
என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்
பால் கணக்கு போடுவது போல, பல் கணக்கைப் புட்டுப்புட்டு வைத்து புல்லரிக்க வைத்த அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குமனிதன் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைத்ததே..!
இராஜராஜேஸ்வரி July 18, 2014 at 12:20 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//பால் கணக்கு போடுவது போல, பல் கணக்கைப் புட்டுப்புட்டு வைத்து புல்லரிக்க வைத்த அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..
மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைத்ததே..!//
நினைத்தேன் வந்தாய் ......... நூறு ........ வயது ....... போல
தங்களின் உடனடி வருகை மிகவும் மகிழ்வளித்தது. ;)
ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு, HEALTH - *BODY... MIND ... SOUL* என்ற ஹிந்திப் பத்திரிகையின் 26.01.2014 ஞாயிறு அன்று தங்கள் பெயருடன் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச்செய்திகளை -மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதற்குப் பாராட்டுக்கள்.. நன்றிகள்...வாழ்த்துகள்..!
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி July 18, 2014 at 12:23 AM
நீக்குவாங்கோ ..... மீண்டும் வருகை ..... எதிர்பாராத மகிழ்ச்சி ;)
//ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு, HEALTH - *BODY... MIND ... SOUL* என்ற ஹிந்திப் பத்திரிகையின் 26.01.2014 ஞாயிறு அன்று தங்கள் பெயருடன் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச்செய்திகளை -மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதற்குப் பாராட்டுக்கள்.. நன்றிகள்...வாழ்த்துகள்..!//
ஏற்கனவே அந்த ஹிந்தி வெளியீட்டை PDF ஆக தங்களுக்கு 16.02.2014 அன்று மெயிலில் அனுப்பியிருந்தேன். நினைவு இருக்கும் என நினைக்கிறேன்.
அதற்கு பதிலாக ஒரு இரயில் அனிமேஷன் படத்துடன் கீழ்க்கண்ட பதிலும் எனக்குக் கொடுத்திருந்தீர்கள்:
-=-=-=-
**அவன் போட்ட கணக்காயிற்றே..! மொழிமாற்றத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள்..! - 16.02.2014**
-=-=-=-
சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. vgk
வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குகரந்தை ஜெயக்குமார் July 18, 2014 at 5:51 AM
நீக்குவாழ்த்துக்கள் ஐயா//
மிக்க நன்றி, ஐயா.
வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது...
பதிலளிநீக்கு//http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html//
நல்வாழ்த்துகள்..
இராஜராஜேஸ்வரி July 18, 2014 at 8:11 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது...
//http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html//
நல்வாழ்த்துகள்..//
இந்த இனிப்பான தகவலுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். இத்துடன் வலைச்சரத்தில் [எனக்குத் தெரிந்தவரை] இது 90வது அறிமுகமாக என்னால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 100க்கு 10 பாக்கியுள்ளது.
இன்று தங்களுடன் அடியேனும் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.
தங்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
அவன் போட்ட கணக்கை வெல்ல யாரால் முடியும்...?!
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் July 18, 2014 at 8:32 AM
நீக்குவாங்கோ Mr. DD Sir, வணக்கம்.
//அவன் போட்ட கணக்கை வெல்ல யாரால் முடியும்...?!//
சரியாகச்சொன்னீர்கள். யாராலும் வெல்ல முடியாது தான். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
இதை தான் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைப்பது என்று சொல்வார்கள் பெரியவர்கள்.
பதிலளிநீக்குதலைப்பு மிக அருமை.
அவன் போட்ட கணக்கு’ என்ற இந்த என் சிறுகதை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள திருமதி S. பாக்யம் ஷர்மா என்பவரால் ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு, அங்கிருந்து வெளிவரும் HEALTH - *BODX... MIND ... SOUL* என்ற ஹிந்திப் பத்திரிகையின் பக்கம் எண்: 2 இல் 26.01.2014 ஞாயிறு அன்று என் பெயருடன் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
//அவன் போட்ட கணக்கு’ என்ற இந்த என் சிறுகதை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள திருமதி S. பாக்யம் ஷர்மா என்பவரால் ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு, அங்கிருந்து வெளிவரும் HEALTH - *BODX... MIND ... SOUL* என்ற ஹிந்திப் பத்திரிகையின் பக்கம் எண்: 2 இல் 26.01.2014 ஞாயிறு அன்று என் பெயருடன் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.//
வாழ்த்துக்கள் சார்.
வலைச்சரத்தில் இடம்பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்.
படங்கள் எல்லாம் அருமையான தேர்வு.
கோமதி அரசு July 18, 2014 at 12:06 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். vgk
கருமையான கதை! ஹிந்தியில் வெளியானது மிக மகிழ்வளிக்கிறது. நன்றி ஐயா! தொடரட்டும் உங்கள் வலையுலகப் பணி எங்களுக்கு விருந்தாக!
பதிலளிநீக்குSeshadri e.s.July 18, 2014 at 1:21 PM
பதிலளிநீக்குகருமையான கதை!
கண்ணன் பெயர் கொண்ட கோபாலகிருஷ்ணன் எழுதிய கதையாதலால் ‘கருமையான கதை’ ஆகிவிட்டதோ ! ;)
பல்கணக்கு போட்ட விதம் அருமை! அவன் போட்ட கணக்கு புரட்டி போட்டது உண்மை! சிறப்பான கதை! இந்தி மொழியில் வெளியானமைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
பதிலளிநீக்குதும்ப சன்னாகித்தே ! பஹூத் அச்சா! மிகவும் அருமை! superb! இனி அடுத்து எந்த மொழியில் சொல்வது? தென்னிந்தியாவில் இரண்டு மொழிகள்... வட இந்தியாவிற்கு பொதுவான ஹிந்தி! இனி வெளிநாடுதான்! பின்றீஙளே! வாத்யார்னா வாத்யார்தான்! மனமார்ந்த வாழ்த்துகள்! அன்புடன் MGR
பதிலளிநீக்கு”அவன் போடும் கணக்கு” யாரும் அறியாததே.... பாராட்டுகள் சார். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஉண்மை தான்! மேலே இருப்பவனின் கணக்கை நம்மால் எப்படி அறிய முடியும் ? இந்தக் கதை ஹிந்தியில் வந்திருக்கிறது என்று சொல்லி எனக்கும் அனுப்பி இருந்தீங்க. படிச்சேன். ஆனால் பதில் தான் கொடுக்கலை. :(
பதிலளிநீக்குநாமொன்று நினைக்க கடவுள் ஒன்றை நிறைவேற்றுகிறார்.
பதிலளிநீக்குநாமொன்று நினைக்க கடவுள் ஒன்றை நினைக்கிறார்.
பதிலளிநீக்குமின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-
அவன் போட்ட கணக்கு:
அம்மாடியோ..... கணக்கு வாத்தியார் போட்ட கணக்கு.... மணல்கயிறு விசு அவர்களையும், நம்ம விஜயகாந்த் அவர்களையும் கூட ஒரேயடியாத் தள்ளிப் போட்டுவிட்டது. அப்படி ஒரு துல்லியம்.
எங்கிருந்து கண்டுபிடிச்சீங்க இப்படி ஒரு தனித்துவம் வாய்ந்த ஒரு கணக்குப் புலியை. நம்ப அரசியலுக்கும் இவர் தான் இப்போ அவசரத்தேவை.
தமிழ்மணி, அவரது நம்பிக்கையின் பல்லை அவர் மகனே முதலில் பிடுங்கிய போது 'கணக்குத் தவறிப் போனதற்கு'.... ஆஹா..... கதையின் முடிவு நச்ச்ச்.....ன்னு கணக்கு வாத்தியார் தலையில் ஒன்று வைத்தது போல இருந்தது...!
-=-=-=-=-=-=-
இப்படிக்கு,
தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.
]]எங்கேயோ என் மகன் நன்றாக இருந்தால் சரி’ என்று தான் படிப்பறிவு இல்லாத நான் போக வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன். இந்த மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் விஷயத்தை, ஏதோ ஒரு நண்பனுக்குச் சொல்லும் தகவல் போல, மிகச் சாதாரணமாக அவன் என்னிடம் சொல்லி விட்டுப் போனது தான், என் பற்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பிடுங்கி எறிந்தது போல உள்ளது எனக்கு” என்று கண் கலங்கியபடி தமிழ்மணி கூறினார். //
பதிலளிநீக்குபெற்ற மனது வெறு எப்படி நினைக்கும்?
ஹிந்தி மொழி பெயர்ப்பு படிக்க முடியல.
பூந்தளிர் August 29, 2015 at 5:54 PM
நீக்கு//ஹிந்தி மொழி பெயர்ப்பு படிக்க முடியல.//
இதுவரை என் மூன்று சிறுகதைகள் ஹிந்தியில் மொழியாக்காம் செய்யப்பட்டு வெவ்வேறு ஹிந்தி இதழ்களில் வெளியாகியுள்ளன. அவற்றைத் தனித்தனியாக மெயிலில் அனுப்பி வைக்க முயற்சிக்கிறேன்.
தங்களின் ஆர்வத்திற்கு மிக்க நன்றி.
பல்லை புடுங்கின கதைக்கு அப்புறம் பல் டாக்டர் கதை.
பதிலளிநீக்கு//இந்த மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் விஷயத்தை, ஏதோ ஒரு நண்பனுக்குச் சொல்லும் தகவல் போல, மிகச் சாதாரணமாக அவன் என்னிடம் சொல்லி விட்டுப் போனது தான், என் பற்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பிடுங்கி எறிந்தது போல உள்ளது எனக்கு” என்று கண் கலங்கியபடி தமிழ்மணி கூறினார். //
பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுன்னு நிரூபிச்சுட்டு போயிட்டான் அவர் பையன்.
இப்படி அருமையா கதை எழுதினா ஹிந்தியில மட்டும் இல்ல எல்லா மொழியிலயும் மொழி பெயர்த்து வெளியிடுவாங்க.
32--பல்லுக்கும் தனி தனியா பீசு வாங்கிகிடலாம்ல. ஆனாகூடி கடசி வரை வாப்பாகூடதா இருந்துகிடணும்.
பதிலளிநீக்குஉண்மதான் பல் டாக்டரகள் நன்றாகவே சம்பாதிக்கலாம்தான் அதை அவருக்கு புரியும் விதத்தில் எடுத்து சொல்வது நல்லா இருக்கு.
பதிலளிநீக்கு;-))))
பதிலளிநீக்குவலையில் சிக்கிய பறவை, கடவுள் போட்ட கணக்கைப் புரிந்து கொள்ள முடியாமல் தலையைப் பிய்த்துக் கொள்ளும் கணக்காசிரியர், ஆடிப்போன உள்ளத்துடன் இருக்கும் ப்யூனை சிம்பாலிக்காக மணியுடன் ஆடும் பள்ளிக்கூடம் என சூழ்நிலைகளை விளக்கிட நேர்த்தியான படத்தேர்வுகள். ஒரு படம் ஓராயிரம் வார்த்தைகளை உணரவைத்து விடுகிறது.
பதிலளிநீக்குஎளிமையான பாத்திரங்கள் மூலம், கோர்வையாகக் கதையை நகர்த்தி, “அவன் போட்ட கணக்கை அவனியில் யாரறிவார்?”, “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!” எனும் தத்துவத்தை நம் மனதில் பதிய வைத்து விடுகிறார். நமக்கும் இதற்குப் பின்னாலும் ஏதோ ஒரு கணக்கை இறைவன் வைத்திருப்பான் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதற்கேற்றார்போல் காற்றில் மிதந்து, “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை! நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதியில்லை” எனும் காலத்தால் அழியாத கவியரசரின் பாடல் வரிகள் நம் காதுகளில் ஒலிக்கிறது.
நல்லதொரு படைப்பைத்தந்த கதாசிரியருக்கு என் பாராடுகளுடன் நன்றி கலந்த வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன்.
My Dear Mr. Seshadri Sir,
நீக்குவாங்கோ, வணக்கம்.
கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.
//வலையில் சிக்கிய பறவை, கடவுள் போட்ட கணக்கைப் புரிந்து கொள்ள முடியாமல் தலையைப் பிய்த்துக் கொள்ளும் கணக்காசிரியர், ஆடிப்போன உள்ளத்துடன் இருக்கும் ப்யூனை சிம்பாலிக்காக மணியுடன் ஆடும் பள்ளிக்கூடம் என சூழ்நிலைகளை விளக்கிட நேர்த்தியான படத்தேர்வுகள். ஒரு படம் ஓராயிரம் வார்த்தைகளை உணரவைத்து விடுகிறது.//
தேர்வு செய்து நான் வெளியிட்டுள்ள படங்களை மிகவும் ரஸித்து சிலாகித்துச் சொல்லியுள்ளது மேலும் அழகோ அழகாக உள்ளது. ஸ்பெஷல் நன்றிகள். :)
தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் VGK
இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 60
பதிலளிநீக்குஅதற்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_06.html
மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:
பதிலளிநீக்குமுதல் பரிசுக்குத் தேர்வானவை:
http://gopu1949.blogspot.in/2014/08/vgk-27-01-03-first-prize-winners.html
இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
http://gopu1949.blogspot.in/2014/08/vgk-27-02-03-second-prize-winners.html
மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
http://gopu1949.blogspot.in/2014/08/vgk-27-03-03-third-prize-winner.html
சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:
http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html
http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html
http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html
http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html
ஆம். இந்த விவரம் உண்மைதான் என்பதை நானும் உணர்ந்தேன். என் பல் அனுபவத்தில் எழுதவும் உத்தேசித்துள்ளேன். ஹிந்தியிலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுவது எவ்வளவு பெருமை? கிரேட்.
பதிலளிநீக்குஸ்ரீராம். December 24, 2016 at 9:18 AM
நீக்குவாங்கோ ... ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.
//ஆம். இந்த விவரம் உண்மைதான் என்பதை நானும் உணர்ந்தேன். என் பல் அனுபவத்தில் எழுதவும் உத்தேசித்துள்ளேன்.//
வெரி குட். எழுதுங்கோ. படிக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம்.
//ஹிந்தியிலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுவது எவ்வளவு பெருமை? கிரேட்.//
தங்களின் அன்பான வருகைக்கும் பெருமை தரும் கிரேட்டான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
மேலும் என்னுடைய சில கதைகள் ஹிந்தியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன.
1) இனி துயரம் இல்லை
http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_15.html
ஹிந்தியில்: ’அப் நஹி துக் ஹை’
ஹம் லோக் இதழ் 10.08.2014
2] அவன் போட்ட கணக்கு
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-27.html
ஹிந்தியில்: ’உஸ்கா கிதாப்’
Health - body.mind.soul இதழ் 28.01.2014
3] கொட்டாவி
http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_634.html
ஹிந்தியில்: ‘படே லேகக்’
டைனிக் பாஸ்கர் இதழ் 20.07.2014
இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.