கதையின் தலைப்பு :
VGK-26
பல்லெல்லாம்
பஞ்சாமியின்
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
அவர்கள் அனைவருக்கும் என்
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
மற்றவர்களுக்கு:
முதல் பரிசினை முத்தாக
வென்றுள்ளவர்கள் இருவர்.
அதில் ஒருவர்
ரவிஜி
மாயவரத்தான் MGR அவர்கள்
mayavarathanmgr.blogspot.com
முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள
திரு.
ரவிஜி
மாயவரத்தான் MGR
திரு.
ரவிஜி
மாயவரத்தான் MGR
அவர்களின் விமர்சனம் இதோ:
பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?
கதையின் தலைப்பே இது ஒரு நகைச்சுவை இழையோடும் யதார்த்தக் கதை என்பதை பறைசாற்றுகிறது! பஞ்சாமி என்ற கதாநாயகரின் பெயரும் அவரது தோற்றம் குறித்த கதாசிரியரின் வர்ணனையும் இது ஒரு வெள்ளந்தி மனிதரின் உருவத்தை கண்முன்னே நிறுத்துவதாக இருக்கிறது! முத்துப்பற்களாக இல்லாவிட்டாலும் மற்றபடி ‘எடுப்பாக’ இருந்தாலும் நல்ல உறுதியான பற்களை இயற்கையாகவே பெற்றிருந்த பஞ்சாமி, வெற்றிலை, பாக்கு, புகையிலை போடும் ஆசாமியானதாலும், பராமரிப்பு குறைவின் காரணமாகவும் துர்நாற்றம் கிளம்பிவிட அதை மற்றவர்கள் சொன்னபோதெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை! அதைப்போக்கவும், முத்துப்போன்ற பற்களை பெறவும் பஞ்சாமி செய்யும் முயற்சிகள் ஒரு நகைச்சுவை கலந்த நடையில் சொல்லியிருப்பது சிறப்பு! ஒருநாள் மனைவியே துர்நாற்றம் தாங்காது மயக்கம்போட்டு விழுந்து, தெளிந்தவுடன் இனி பல்லிருக்கும்வரை பக்கத்திலே வராதீர் என்று சொல்லிவிட -துவங்குகிறது கதை!
நண்பர் சொல்லியபடி ஒரு பல் டாக்டரைத்தேடி செல்கிறார் பஞ்சாமி! (சொந்த செலவிலேயே சூனியம் வைத்துக்கொள்ளவா?!)
பல் டாக்டர் கிளினிக்கின் காட்சியமைப்பு யதார்த்தம்.! டாக்டர் பல்லை சுத்தம் செய்வதை கிராபிக்ஸ் எபக்டுடன் படம் போட்டுக்காட்டியது அற்புதம். சுத்தம் செய்யும்பொழுதே, டாக்டர் செய்யும் வேலைகள் அவர்மீது லேசான ஒரு சந்தேகம் எழுமாறு அமைத்துள்ளது, நல்ல கதையோட்டம். பற்கள் அப்பொழுதே ஆட்டம் காணத்துவங்கிவிட்டதாக ஒரு ‘பிட்’போட்டுவைக்கிறார் கதாசிரியர். கதையை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்த?!
டாக்டர் தனது அடுத்த ஆலோசனையை வழங்குகிறார்! அதாவது எடுப்பான (ஆரோக்கியமான) பற்களை நீக்கி ‘முத்து’ப்பற்களை பொறுத்துவதாம்! கிளிப் போடும் ஆலோசனையை அவர் ஏன் வழங்கவில்லை? எப்படியாவது காசு வாங்கியாகவேண்டுமே!
முன் ஆறு பற்களைப்பிடுங்கிக்கொண்டு புதுப்பற்களை பொருத்தியதும்தானே தெரிகிறது ஒரிஜினலின் மகிமை! முன்வரிசைப்பற்கள் பொருத்தியதும் உள்ள உறுத்தல், அவஸ்தை நாமே உணர்வதைப்போல சொல்லப்பட்டுள்ளது அருமை!
ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட வேண்டாமா? வினை வந்தது கம்ப்ளீட் பல் செட் கட்டிய மாமனாரின் ரூபத்தில்! உடல் விஷயத்தில் ஒருத்தருக்கு ஒத்துவருவது மற்றவருக்கு ஒத்துவராது! இதனை புரிந்துகொள்ளாது மாமனாரின் சொல்லைக்கேட்டு - நொறுவலாகத் தின்ன ஆசைப்பட்டு கிளைமாக்ஸ் நோக்கி நகருகிறது பஞ்சாமியின் பல் கதை!
எல்லாப்பற்களையும் வலிய பிடுங்கிக்கொண்டு பஞ்சாமிபடும் அவஸ்தை தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது! எதையும் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல்! மறுமுறை பார்க்கும் டாக்டர் ஈறுகளை சமன் செய்வதாக சொல்லி ராவுவதில் நமக்கு மீண்டும் ஒரு சந்தேகம் முளைவிடுகிறது! பல் செட் செய்ய மோல்ட் செய்யும்போது பஞ்சாமி படும் அவஸ்தையும் நகைச்சுவையுடன் ரசிக்கும்படியாக சொல்லப்பட்டுள்ளது! அதுவும் பல் செட்டோடு பஞ்சாமி பாடும் டூயட்!!! ரொம்பவே குசும்பு கதாசிரியருக்கு!
பல் செட்டைபோட்டால் தோற்றப்பொலிவு வந்துவிடும் என்று எண்ணமிட்டு புதிய பல் செட்டைப்போட்டால்… அதை சரியாக செட் செய்வதற்குள் இம்சையோ இம்சை! ஏதோ வாசகனே இந்த அவஸ்தைகளையெல்லாம் படுவதுபோன்ற உணர்வை ஏற்படுத்திவிடுவது கதாசிரியரின் மாபெரும் வெற்றி என்றே சொல்லலாம்! கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவிற்கு அவரது பெரிய சற்றே எடுப்பான பற்களே ஒருவித அழகைக்கொடுக்கும்! அதுபோல இருந்த பஞ்சாமிக்கு கடைசியில் எல்லாம் போச்சு! கடைசியில் பஞ்சரான சைக்கிள் டியூப் போல வாய் ஆனதுதான் மிச்சம்! பிளாஸ்டிக் சர்ஜரியே செய்ததுபோல முகமே அல்லவா மாறிவிட்டது! NO LOOKING BACK என்றான நிலையில் அதோடு வாழப்பழகிக்கொள்ள முயற்சி செய்யும் பஞ்சாமியின் முயற்சி! கதைநெடுகிலும் ஆசிரியர் நமக்கு கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டே இருக்கிறார்!
கடைசியாக பாத்ரூமில் செட்டே ஆகாத ‘பல்’ செட்டை துலக்கப்போக ஒன்று டமால் மற்றது சாக்கடைக்குள் அம்பேல்!
டாக்டரைப் போய்பார்த்தால் PERMANENT FIXTURE செய்கிறேன் பேர்வழியென வெறும் முக்கால் லட்சம் மட்டும் கேட்க நம்பாள் மயக்கமே போட்டுவிழ – திரை! அவனொரு போலிப்’பல்’ டாக்டர்!!???
துர்நாற்றத்தோடு கூடிய பல்கறையில் துவங்கி கடைசியில் ‘திரை’யில் கொண்டுவந்து முடித்துவிட்டாரே!
உடல்தோற்றம் இறைவன் கொடுப்பது; பெற்றோர் கொடுப்பது; மனமும் குணமுமே உண்மையில் அழகு; மற்றவைகள் செய்துகொள்ளும் சிகிச்சைகள் நமக்குப்பொருந்தாமல் சிக்கலில் முடியலாம். பற்களைப்பராமரிப்பது மிக மிக அவசியமே, ஆனால் போலிப் ‘பல்’லவராயன்களைக்கண்டு ஏமாறவேண்டாம், ஒரிஜினல் ஒரிஜினல்தான் டூப்ளிகேட் டூப்ளிகேட்தான் என்று ஏகப்பட்ட செய்திகளை ஏதோ சிரிக்கச் செய்து நம்மை ‘பல்’லைக்காட்ட வைப்பதுபோல நகைச்சுவையுடன் செய்திகளையும் கோர்த்து ‘பல்’சுவைகதையை அளித்த வைகோ அவர்கள் ‘பல்’லாண்டு நலமே வாழ பல்லாண்டு பாடி சிரித்து சிரித்து சுளுக்கிய பல்லுடன் விடைபெறுவோம்.
நன்றி!
என்றும் அன்புடன் MGR
முதல் பரிசினை முத்தாக
வென்றுள்ள மற்றொருவர்
திருமதி
இராஜராஜேஸ்வரி
அவர்கள்
முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள
திருமதி
இராஜராஜேஸ்வரி
அவர்களின் விமர்சனம் இதோ:
கதையின் மிகப்பொருத்தமான தலைப்பே மாணிக்கக் கல்லாக ஜொலித்து பஞ்சாமியின் பற்களே கதையின் கதாநாயகன் என்று முரசறைகிறது ..
ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு அதிலே தேன்மாரி பெய்தாற்போல் நகைச்சுவைப் பந்தலில் கதைமழை, படங்களுடன் பொழிந்து ஆனந்தப்படுத்துகிறது..
பல்போனால்- இந்தப்பல்போனால் ...பின்னாலே பணம் போகும் , சொல்லும் போகும், தேடிக்கொண்டு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், சந்தோஷமும் பின்னாலேயே போய்விடும்.. வாழ்வின் அச்சாணிக்கு உத்தரவாதமில்லை என்பதை பளிச் என உணர்த்துகிறது கதை..!
ஆடம்பரக் கப்பல் அரண்மனையாக கடலில் மிதக்கும் போது அதன் சொகுசு கண்டு பிரம்மிக்கும் போதே அதன் அஸ்திவாரமாக, கடலில் மூழ்கி பார்வைக்குப் புலப்படாத கப்பலின் அடித்தளம் பிரம்மாண்டமான நுணுக்கமும் ஆழ்ந்து யோசிக்கும்போது உணர்ந்து வியப்போம்..
இந்தக் கதையிலும் அலங்காரமான வர்ணனைகளில் திளைத்து சிரித்து ரசிக்கும்போதே, அதன் உள்ளுறை கனமான நீதி நம்மை அறியாமலே மனதில் பதிவது கதாசிரியரின் திறமைமையைப் பறைசாற்றுகிறது..
பல் ஜொலிக்கிறது.. அழுகிறது.. டூயட் பாடுகிறது.. பல்செட் சிரிக்கிறது.. சிரிக்கவைத்து சிந்திக்கவும் வைக்கிறது நேர்த்தியாக..
அந்த பல்டாக்டரின் அதிரும் உபகரணமாகட்டும், உலக சாம்பியனின் குத்துச்சண்டை அசையும் படமாகட்டும் பயமுறுத்தி பற்களின் பாதுகாப்பை அலட்சியம் செய்யக்கூடாது என்று உணர வைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன..
கண்ணீர்விட்டு அழும் பல்லின் படமும், டூயட் பாடி ஆடும் பற்களின் படமும், சிரிக்கும் பல்செட்டும் நிச்சயம் பல் பாதுகாப்பையும் விழிப்புணர்வையும் உறுதிசெய்யப் போதுமானவையே.!
எத்தனையோ பெரும்பணம் செலவழித்து எடுக்கப்படும் பற்பசை , டூத்பிரஷ் விளம்பரங்களும் தின, வார, மாத பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியில் நொடிக்கொரு முறை ஆக்ரமித்தும், சினிமா தியேட்டர்களிலும் கவனத்தைக் கவரும் வியாபார முயற்சிகளில், பல் பாதுகாப்பை சுலபமாக சாய்சில் விட்டுவிட்டு, அந்த நட்சத்திரங்களை ரசிப்பதையே அதிகம் கண்டுணரமுடியும்..
இந்தக் கதையிலோ எந்த விளம்பர முயற்சியும் இல்லாமலே கதை ஆசிரியர் நயந்தும், பயந்தும், நகைச்சுவையிலும், படத்துடனும் வர்ணணைகளிலும் பஞ்சாமியின் அவஸ்தைகளை பட்டியலிட்டுக் காட்சிப்படுத்தும் போது நிச்சயம் பற்களின் மீது கவனம் செலுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க ஆரம்பிப்போம்..
அத்தனை நேர்த்தியாக, வாழைப்பழத்ததில் ஊசி ஏற்றுவதுபோல், கைதேர்ந்த மனோ தத்துவ நிபுணர் சிரிக்கச் சிரிக்கப் பேசியே உள்ளத்தில் ஆழ்ந்திருக்கும் அறியாமை இருளை நீக்குவது போன்ற அரிய பணியை செய்கிறார் ஆசிரியர்..
பஞ்சாமியின் பற்களில் படிந்த காறைகளை பாறைகளைப் போல் டாக்டர் பெயர்த்து எடுக்கும் காட்சியில் நாம் மூக்கின் மீது விரலை வைக்கிறோம்..
தேங்காய் துருவி, துவைக்கும் கல், ஈஸ்ட்மென்கலர் பல், இணைபிரியாத பற்கள், உதட்டுக்குள் அடங்காமல் எப்போதும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பற்கள், அவர் வாய் வீச்சம், மனைவியின் புறக்கணிப்பு எல்லாம் வாய்விட்டு சிரிக்கவைக்கும் வர்ணணைகளில் ஆசிரியர் சிரிப்புக் கச்சேரியே நடத்திவிடுகிறார்..
நோகாமல் நொங்கு கிடைத்தாற் போல், தேனில் ஊறிய சுவையான பலாப்பழத்தை தித்திக்கத் தித்திக்கத் திகட்டாமல் ரசித்து உண்டாற் போல் கதையின் சுவையில்- சிரிப்பில் கிறங்க வைக்கிறார் கதை ஆசிரியர்..
ஹவாய் செருப்பு போட்டு ஹாய்யாக நடப்பவனை இழுத்து நிற்கவைத்து ஹாங்காங் ஷூ போட்டு இறுக்க கட்டினாற் போல் பல் செட் கட்டிய பஞ்சாமியை வைத்தே பஞ்ச் வைத்து ரணகளத்திலும் கிளுகிளுக்கவைக்கிறார் ஆசிரியர்..…
புதிதாய் எண்ட்ரி ஆன பல்செட் தன் கூர் பல்லால் ரம்பத்தால் பதம் பார்த்தது போல் அதன் சீட்டையே அசைத்து பார்த்து படுத்துகிறது..… நாக்கும் பாவம்.. நாக்கோட ஓனர் பஞ்சாமியும் ரொம்ப ரொம்ப பாவம்.
பல் செட்டாகாத போது கத்தி சாணைப்பிடிப்பது போல சாணைக்கல்லால் பஞ்சாமியின் பல்லை பதம் பார்க்க பாவம் பஞ்சாமி உடல் முழுக்க டிஸ்கோ டான்ஸ் ஆடின தேள்கடி டான்ஸ் போல உதறி போடுவதே… ரொம்ப ரகளை..!
பல்சிகிச்சையின்போது நடக்கும் அத்தனை விஷயங்களையும் அப்படியே சுவைபட சினிமா போல படம் பிடித்துக் காட்டுகிறார்..
எவ்வளவோ செலவழித்து வாங்கிய பல்செட்டை அது கஷ்டமா இருக்குன்னு கழட்டி வைத்துவிட்டு பொக்கை வாயோட காலி மணிபர்ஸ் போல், பொத்தை ஆரஞ்சுப் பழத்தோல் போல் தொளதொள வாயில் நாக்கைத் துழாவிக்கொண்டு பொக்கை வாயோடு தன் மாமனார் பல் செட் பார்ட்டியானாலும் அதோடு அன்னியோன்னியமாக சுகமாக கடித்துச்சாப்பிட்டு ரசிக்க- பஞ்சாமி மட்டும் பல்செட்டோடோடு ஒத்துப்போகமுடியாமல் டைவர்ஸ் பண்ணி -அதகளம்தான் கதை..!
மிட்டாய்க்கு ஏங்கும் குழந்தையாக சாப்பிடுபவர்கள் வாயைப் பார்த்து ஏங்கி பத்தியமாக மிக்ஸியில் பொடித்து சாப்பிட்டு வாய்ப் புண்ணோடு அல்லாடி கடித்து சாப்பிடுவதை கடித்து மென்று சாப்பிடும் அனுபவத்துக்கு ஏங்கி படிப்பவர்களை உஷார் படுத்துகிறார்..
கதை போல இல்லாமல் நேரடி ஒளிபரப்புபோல்
அத்தனை சுவரஸ்யமாக விளக்கி இருந்தது அருமை
டெயில் பீஸ் மிக மிக அருமை
கதை படித்துக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே மறந்துபோய் பஞ்சாமியின் வலியிலும் உணர்வுச் சுழல்களிலும் நேரடியாகப் பங்கெடுத்துக் கொண்டாற் போல் திறமையான வர்ணனைகளில் நகைச்சுவை விரவியிருக்கும் கதாசிரியரின் திறமை ஜொலிக்கிறது..
ரசிக்கத் தக்க பதிவாகவும் கொஞ்சம் விஷயங்களை
நாசூக்காக புரிந்துகொள்ளும்படியாகவும் கதை..
போலி மருத்துவரிடம் சென்றதால் பஞ்சாமியின் பற்களைப் பிடுங்கி பல்லாங்குழி ஆடி பணத்தையும் இழந்து வலியுடன் நேரத்தையும் இழந்து ஈடு செய்யமுடியாத இழப்புக்கு ஆளானவர் படிப்பவர்க்கு பாடமாக அமைகிறார்..
செயற்கையாய் பொருத்திக்கொள்வதை விட சும்மா இருந்துவிடலாம்.... ஒருபோதும் இயற்கைக்கு மாற்றான செயற்கை உறுப்புகள் சிலருக்கு உபயோகத்துக்கு ஒத்துவராது என்று உணர வைக்கிறது கதை..
கதை விவரித்த நிறைய விஷயங்கள் பொதுவாகவே பல் சிகிச்சையில் நடைபெறுவதுதான்.
படிக்கும்போதே சிறப்பான வர்ணனையால் பல் கூசி பற்கள் தந்தியடிக்கின்றன..
தான் செல்லும் இடங்களிலெல்லாம் வெளிச்சத்தை விதைத்துச்செல்லும் சூரியன்போல் முதல் வரியிலிருந்து ஆரம்பித்து கதை நெடுக சிரிப்பு விதைகளை தூவிச்செல்கிறார் திறமை மிக்க கதாசிரியர்..
அவை ஆங்காங்கே வெடிச்சிரிப்பை விளைவிக்கின்றன..
"பல்" லவ சாம்ராஜ்ஜியத்தை பத்திரமாக பார்த்து பாதுகாத்து - படை எடுத்து வரும் நோய்களை வரும்முன் காத்துக்கொள்வதோடு, வந்தபின்பும் சரியான மருத்துவரிடம் செல்லவேண்டும் என்று பாடம் படிக்கிறோம் ..
"பல்"பல்லாய் கீறிப்போட்ட தேங்காய் ருசிக்கும் பாயசத்தை ஆயாசம் தீர ருசிக்கும் போது முந்திரிப் பருப்பைக்கூட தூ ..தூ என்று வெளியே துப்பி கடித்துசாப்பிடமுடியாத பஞ்சாமி பரிதாபத்தை வாவழைக்கிறார்..
இந்த கதி யாருக்கும் வரவேண்டாம் .. ருசித்துச்சாப்பிடக்கிடைத்த இந்த அருமையான பிறவியை தவறான முடிவெடுத்து போலிகளிடம் சிக்கிச் சீரழிந்து சின்னாபின்னமாக்க வேண்டாமே !
வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோ என்று அத்தனை பற்களையும் பறிகொடுத்து, பல் செட்டும் செட்டாகாமல், பஞ்சாமி தறிபடுமோ தாளம் படுமோ என்கிற உச்சபட்ச அவஸ்தையில் படும் சிரமங்களைப்படம் பிடித்துக் காட்டுவது படிக்கும் அனைவருக்கும் பாடமாக அமைகிறது..
பல்லைப் பத்திரமாக பாத்துக்கோங்க ...
பல் போன பதிவைப் படித்து சிரித்து படிப்பவர் பற்களும் சுளுக்கிக்கொண்டு விட்ட உணர்வைத் தோற்றுவிக்கிறார் கதை ஆசிரியர்....
வெற்றி முரசின் முழக்கத்தோடு கதையைப் படித்து சிரிக்கும் சிரிப்பொலியும் சேர்ந்து மின்னலோடு மின்னி முழங்கி கதையின் வெற்றியைப் பறைசாற்றுகின்றன..!
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி
முதல் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்
சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர
இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
இணைப்புகள் இதோ:
அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும்
போட்டிக்குள் போட்டியில்
பரிசினை வென்றவர் யார் ?
அதுபற்றிய அலசல் நாளையும் நாளை மறுநாளும்
இரு பகுதிகளாக வெளியிடப்பட உள்ளன.
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
VGK-28
வாய் விட்டுச் சிரித்தால் ....
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
என்னை மிகவும் ஊக்குவித்து , வாய்ப்பளித்த அன்பு வாத்தியார் வைகோ அவர்களுக்கும் முதல் பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும், எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! முத்தான முதல் பரிசினை பகிர்ந்துகொண்டுள்ள அன்பு சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! இது எத்தனையாவது பரிசு? ஞாபகம் இருக்கா? தொடர்ந்து வெல்லுங்க! பரிசுகளை ஹாட்ரிக்காஅள்ளுங்க! "சரி சரி நீங்க தள்ளுங்க"ன்னு மத்தவங்க சொல்றதுக்கு முன்னால மீண்டும் வாழ்த்துக்களச் சொல்லி வாழ்த்தப்போறவங்களுக்கும் நன்றி சொல்லி எஸ்ஸ்ஸ்ஸ்கேப்! அன்புடன் MGR
பதிலளிநீக்குமுதல் பரிசினை முத்தாக வென்றுள்ள
பதிலளிநீக்குதிரு.ரவிஜி மாயவரத்தான் MGR அவர்களுக்கு
இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.!
பரிசுக்குரியதாக எமது விமர்சனத்தை தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் சிரத்தையாக போட்டியை நடத்தும் ஆசிரியர் அவர்களுக்கும் மனநிறைவான நன்றிகள்..
பதிலளிநீக்கு//கிளிப் போடும் ஆலோசனையை அவர் ஏன் வழங்கவில்லை? எப்படியாவது காசு வாங்கியாகவேண்டுமே!//
பதிலளிநீக்குகிளிப் போடுவதெல்லாம் சிறுவயதில், வளரும் வயதில் தான் சாத்தியம் - பலனும் அளிக்கும்.. முழுவளர்ச்சி எட்டியவருக்கு உபயோகப்படாது ..
எதற்கும் நல்ல ஒரிஜினல் பல்டாக்டரை கன்சல்ட் செய்து தகவல் தாருங்கள் சகோதரரே..!
பல் மருத்துவர்கள் என்றில்லை! பொதுவாகவே மருந்துகள் எழுதுவதிலாகட்டும் சிகிச்சை முறைகளிலாகட்டும் ஒருத்தரைபோல ஒருத்தருடைய சிகிச்சை இருப்பதில்லை! நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஒருத்தருக்கு இது போன்ற சிகிச்சைக்காக அழைத்துச்சென்றபொழுது (ஒன்றுக்கு மூன்று டாக்டர்களிடம்) கேட்டபொழுது கிடைத்த பதில் சிறு வயது அளவிற்கு இல்லாவிட்டாலும் பர்மனென்ட் பிக்ஸர் ஓரளவிற்காவது பலனளிக்கும் என்பதுதான்! ஆனால் patients வந்தாலே patience இல்லாமல்
நீக்குப(பி)ல்லைப் பிடுங்க முயற்சிப்பவர்கள் அதிகம்தான்! முத்துப்பல்லெல்லாம் இயற்கையிலேயே அமைந்தால் பரமாரிக்கலாம்! இல்லையென்றால் பஞ்சாமி கதைதான்!
தவறென்றால் கூறுங்கள்! எங்களது பல் டாக்டரை போலிப் 'பல்'லவராயனாகக்கருதி ஓரங்கட்டிவிடுகிறேன்! நன்றி சகோதரி! அன்புடன் MGR
பல் மருத்துவர்கள் என்றில்லை! பொதுவாகவே மருந்துகள் எழுதுவதிலாகட்டும் சிகிச்சை முறைகளிலாகட்டும் ஒரு மருத்துவரைப்போல மற்றவருடைய சிகிச்சை இருப்பதில்லை! நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஒருத்தருக்கு இது போன்ற சிகிச்சைக்காக அழைத்துச்சென்றபொழுது (ஒன்றுக்கு மூன்று டாக்டர்களிடம்) கேட்டபொழுது கிடைத்த பதில் சிறு வயது அளவிற்கு இல்லாவிட்டாலும் பர்மனென்ட் பிக்ஸர் ஓரளவிற்காவது பலனளிக்கும் என்பதுதான்! ஆனால் patients வந்தாலே patience இல்லாமல் ப(பி)ல்லைப் பிடுங்க முயற்சிப்பவர்கள் அதிகம்தான்! முத்துப்பல்லெல்லாம் இயற்கையிலேயே அமைந்தால் பராமரிக்கலாம்! இல்லையென்றால் பஞ்சாமி கதைதான்! தவறென்றால் கூறுங்கள்! எங்களது பல் டாக்டரை போலி'பல்'லவராயனாகக்கருதி ஓரங்கட்டிவிடுகிறேன்! நன்றி சகோதரி! அன்புடன் MGR
நீக்குநாற்பது வயதுக்கு மேற்பட்டவருக்கும் பர்மனென்ட் பிக்ஸர் ஓரளவிற்காவது பலனளிக்கும் என்கிற வியத்தகு தகவல் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி..
நீக்குபொதுவாக ஆஸ்திரேலியாவில் பல் சிகிச்சை காஸ்மெட்டிக் சிகிச்சைக்கு கீழ் வருவதால் அதற்கு இன்ஸ்சூரன்ஸ் கிடைக்காதாம் ..
எனவே அங்கே படிக்கச்செல்லும் மாணவர்கள் பொன்றவ்ர்கள் விமானம் பிடித்து இந்தியா வந்து பல்சிகிச்சை பெற்று திரும்புவதாக அறிந்தேன் ..
மெடிக்கல்டூரிஸம் இந்தியாவில் வளர்ந்ததற்கும் நட்சத்திர ஹோட்டல்கள் தரத்தில் மருத்துவமனைகள் பெருகியதற்கும் இந்தியக் கட்டணத்தை அந்தஅந்த நாட்டு டாலர்களில் கணக்கிட்டு பார்ப்பதுமே காரணம் என்று பலநாட்டு மாணவ்ர்களும் என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள்..!
குறும்புடன் ரசித்த திரு. ரவிஜி அவர்களுக்கும், திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஆடம்பரக் கப்பல் அரண்மனையாக கடலில் மிதக்கும் போது அதன் சொகுசு கண்டு பிரம்மிக்கும் போதே அதன் அஸ்திவாரமாக, கடலில் மூழ்கி பார்வைக்குப் புலப்படாத கப்பலின் அடித்தளம் பிரம்மாண்டமான நுணுக்கமும் ஆழ்ந்து யோசிக்கும்போது உணர்ந்து வியப்போம்..
பதிலளிநீக்குஇந்தக் கதையிலும் அலங்காரமான வர்ணனைகளில் திளைத்து சிரித்து ரசிக்கும்போதே, அதன் உள்ளுறை கனமான நீதி நம்மை அறியாமலே மனதில் பதிவது கதாசிரியரின் திறமைமையைப் பறைசாற்றுகிறது..
//அருமையாக விமர்சனம் எழுதி முதல் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திரு. மாயவரத்தான் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்!
http://blogintamil.blogspot.in/2014/07/blog-post_27.html?
பதிலளிநீக்குஇன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் குறிப்பிட்ப்பட்டுள்ளது..
வாழ்த்துகள்.பாராட்டுக்கள்..!
இராஜராஜேஸ்வரி July 27, 2014 at 2:29 PM
நீக்குhttp://blogintamil.blogspot.in/2014/07/blog-post_27.html?
வாங்கோ, வணக்கம்.
//இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் குறிப்பிட்ப்பட்டுள்ளது..வாழ்த்துகள்.பாராட்டுக்கள்..!//
எனக்குள்ள நேர நெருக்கடிகளுக்கிடையேயும் ஆங்காங்கே நாட்டில் நடைபெற்றுவரும் எல்லாத் தெருக் கூத்துக்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
எனினும் தங்கள் மூலம் வந்துள்ள இந்தத் தகவலுக்கு நன்றி. இதை எண்ணிக்கைக்கு வேண்டுமானால் 92 என நாம் எடுத்துக்கொள்ளலாம்.
அடுத்து வரப்போகும் நான்கு வார வலைச்சர ஆசிரியர்கள் எல்லோருமே நமக்கு மிகவும் வேண்டியப்பட்டவர்களே.
சீக்கரமாக 100ஐ எட்டி விடலாம்.
எதற்கும் இந்த இனிய தகவல்கள் தங்கள் மூலமே எனக்குக் கிடைக்க வேண்டுமாக்கும் .... சொல்லிட்டேன். ;)))))
மிகுந்த அன்புடன் VGK
முதல் பரிசை வென்ற இருவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுதற்பரிசினை வென்றுள்ள சகோதரி இராஜராஜஸ்வரி அவர்களுக்கும் ரவிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குhttp://mayavarathanmgr.blogspot.in/2014/07/vgk_41.html
பதிலளிநீக்குதிரு. ரவிஜி என்கிற மாயவரத்தான் MGR அவர்கள்
இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் மீண்டும் முதல் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
மிகவும் நகைச்சுவையாகவும் அதே சமயம் சொல்லவேண்டியவற்றை மிகத் தெளிவாகவும் விமர்சித்து முதல் பரிசைப் பெற்றிருக்கும் திரு. ரவிஜி அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - விரைவினில் 92 - 100 ஆக நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் இரவிஜி மற்றும் இராஜ இராஜேஸ்வரி - முதல் பரிசு - அருமையான விமர்சனத்தினை எழுதி வெற்றி பெற்ற இருவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குமுதல் பரிசை வென்றுள்ள திரு. ரவிஜி அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.
பதிலளிநீக்குமுதற்பரிசினை வென்றுள்ள திருமதி இராஜராஜஸ்வரி அவர்களுக்கும் திரு ரவிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமுதற்பரிசினை வென்றுள்ள திருமதி இராஜராஜஸ்வரி அவர்களுக்கும் திரு ரவிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா திரு ரவிஜி அவங்களுக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிருமதி இராஜராஜேஸ்வரிமேடம் திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள். இருவரின் விமரிசனமும் நல்லா இருக்கு. ரவிஜி அவர்கள் நகைச்சுவையை சுவையாக கலந்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்கு;-)))))
பதிலளிநீக்கு