கதையின் தலைப்பு :
VGK-26
பல்லெல்லாம்
பஞ்சாமியின்
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
அவர்கள் அனைவருக்கும் என்
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
மற்றவர்களுக்கு:
முத்தான மூன்றாம் பரிசினை
வென்றுள்ளவர்
உஷா ஸ்ரீகுமார்
அவர்கள்
usha-srikumar.blogspot.in
'உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்’
முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள
திருமதி
உஷா ஸ்ரீகுமார்
திருமதி
உஷா ஸ்ரீகுமார்
நகைச்சுவை எழுத்து என்பது மிகவும் கனமான ஒரு விஷயம்...அதை எழுதுபவருக்கு!!!
அதனால் தான் , "Humor is serious business!" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்...
நான் கொடுக்கப்போவது ஒரு முழு நீள நகைச்சுவை விருந்து...
நீங்கள் சிரித்து, சிரித்து உங்கள் பல் சுளுக்கிக்கொண்டால் நான் பொறுப்பல்ல என்று வார்னிங் கொடுக்காத குறையாக கதைத்தலைப்பிலிருந்தே நம்மை மூச்சுக்கு மூன்று முதல் முந்நூறு தடவை சிரிக்க வைப்பதையே இலட்சியமாகக் கொண்டு இந்த முழு நீள நகைச்சுவைக் கதையை எழுதிய ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்...
"கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆகுமா..." என்ற பாடலைத் தழுவி ஆசிரியர் திரு.வை.கோ. அவர்கள் சிரிப்புத் தேன் தடவிய "பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா..." என்ற தலைப்புடன் ஆரம்பிக்கிறார், இந்தசிறப்பான சிரிப்பு விருந்தை!
இந்த விருந்தில் சுவையை அதிகரிக்க அவர் பயன் படுத்தும் யுக்திகள்....
#சிரிப்பை வரவழைக்கும் உபமான உபமேயங்களின் தாராள உபயோகங்கள்...
#கடுகு போன்ற விஷயத்தை இமாலயப்பிரச்சனையாக விஸ்வரூபமெடுக்க வைத்து உற்சாகப்பட்டாசு கொளுத்திப்போடுதல் !
#நுணுக்கமான குபீர் சிரிப்பு உத்தரவாதம் தரும் வர்ணனைகள்...
#அட்டகாசமான ஆண்டி கிளைமாக்ஸ் ....
ஆதிகாலத்திலிருந்து இன்று வரை மனிதன் புரிந்து கொள்ளாத ஒரு விஷயம்...
"அத்தனை சாமுத்ரிகா லட்சணங்களும் ஒரு சேரப் பொருந்திய ஒரு ஆணோ பெண்ணோ இன்னும் பிறக்கவில்லை!" என்பதே...
ஒருவர் பார்க்க ராஜா மாதிரி இருந்தால் அவர் குட்டை!
ஒருத்தி நல்ல நிறம் என்றால் அவள் கூந்தல் எலிவால்!
ஒருவன் ஆறடி என்றால் அவன் குரல் "கீச்..கீச் .." என்று இருக்கும்!
ஒருவன் முகத்தில் அவ்வளவு தேஜஸ்... கண்களை நன்றாகப் பார்த்தால் ஒன்று கிழக்கே பார்த்தால் ஒன்று மேற்குப்பக்கம் பார்க்கும் !
என்ன செய்வது !
பிரம்மன் கார்ட்டூன் வரையும் மூடில் இருக்கும் போது நம்மில் சிலரைப் படைத்துவிடுகிறான்!
அதிலும் இந்தப் பற்கள் விஷயத்தில் பிரம்மன் அவ்வப்போது ரொம்பவுமே விளையாடிவிடுவான்....
ஒருவேளை பல் மருத்துவர்கள் ஒரு குழுவாக பிரம்மனை சந்தித்து தனியே சம்திங் கொடுத்து கவனித்துக்கொண்டார்களோ? அதனால் தான் அவன் இந்தப் பல்லு மேட்டரில் மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியாகவே கார்ட்டூன் போட்டு விடுகிறாரோ?
நம் ஹீரோ பஞ்சாமி கேஸ்ஸில் நடந்த மாதிரி?
சிலருக்கு தெத்துப்பல்லு... சிலருக்கு துருவிப்பல்லு... சிலருக்குக் காவிப்பல்லு சிலருக்குக்கோணல் பல்லு.... சிலருக்கு சொத்தைப்பல்லு... சிலருக்கு சிங்கப்பல்லு... ஆகக்கூடி கே .ஆர் .விஜயா போல முத்துப்பல் அழகு மிக சிலருக்குதான் வாய்க்கிறது!
நம்ம ஹீரோ சாருக்கு இதெல்லாம் விட ஒரு படி மேல்! துருவி + காரை + வாய் நாற்றம்!
நம்ம ஊருப் பெண்ணானதால் அவள் பஞ்சாமியின் வாய் நாற்றத்தை காரணம் காட்டி விவாகரத்துக் கேட்கவில்லை!
இத்தனை பிரச்சனைகளையும் வாய்க்குள் வைத்த நம் ஹீரோ போவது ஒரு பல் வைத்தியரிடம்!
சாதாரணமாகவே பலருக்கும் பல் வைத்தியரின் கிளினிக்குக்கு போவது என்றால் ஈரல் கொலை நடுங்கும்!
(எனக்கு அது யமலோகத்து சித்திரவதைக்கூடத்தை நினைவு படுத்தும்...)
அதுவும் அவர் நாற்காலிகள், கிரைண்டர் சத்தம், கொறடு, ஊசி, சுத்தியல், சுரண்டும் கருவிகள்... எல்லாமே அச்சத்தை உண்டாக்கும்!
பல் டாக்டரிடம் ஒரே ஒரு நாளில் வைத்தியம் முடிந்ததாக சரித்திரமே இல்லை!
நம்ம ஹீரோவும் காறை எடுக்கப் போய் மொத்தப் பற்களையும் சாப்ஜாடாகத்தட்டி எடுத்து முடித்து மங்களம் பாடி முடித்து புது பல்செட் வைத்துக்கொண்டு திரும்பும் நிலையில் பரிதாபமாக நிற்க நமக்கு பரிதாபமும், சிரிப்பும் மாறி மாறி வருகிறது!
பொய்ப் பல் வைத்துக்கொண்டவர்கள் பலர் படும் அவஸ்தைகளையும், உணர்வுகளும் அழகாக வர்ணிக்கும் ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்!
கடைசியில் வந்த ஆண்டி கிளைமாக்ஸ் அருமை....
அப்படியே ..
போலி டாக்டர்களை அடையாளம் காண்பது எப்படி என்று ஆசிரியர் சிரிக்க, சிரிக்க சொல்லிக்கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்!
எப்படியோ.... புதுப்பல் வைத்துக் கொண்ட பஞ்சாமியின் வாழ்வில் வசந்தம் மலர்ந்தால் சரி...
Regards,
Usha
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர
இடைவெளிகளில் வெளியிடப்பட உள்ளன.
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
VGK-28
வாய் விட்டுச் சிரித்தால் ....
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குரசிக்க வைக்கும் விமர்சனம் தந்த திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅருமையாக விமர்சனம்! பரிசு பெற்ற திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபரிசு வென்ற திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.!
மூன்றாம் பரிசினை வென்ற சகோதரி உஷா ஸ்ரீகுமார்
பதிலளிநீக்குஅவர்களுக்கு வாழ்த்துக்கள்!
வாய்ப்பளித்த கதாசிரியருக்கும்,பரிசுக்குத்தேர்வு செய்த நடுவருக்கும் ,வாழ்த்திய நட்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
பதிலளிநீக்குமூன்றாம் பரிசினை வென்ற சகோதரி உஷா ஸ்ரீகுமார்
பதிலளிநீக்குஅவர்களுக்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்.! MGR
http://usha-srikumar.blogspot.in/2014/07/blog-post_26.html
பதிலளிநீக்குதிருமதி. உஷா ஸ்ரீகுமார் அவர்கள்.
இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
மூன்றாம் பரிசு வென்றுள்ள உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு இனிய பாராட்டுகள். இத்தனை விமர்சனங்களில் சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து முறைப்படுத்தி வழங்குவது என்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை வாசகர்களும் அறியச்செய்துவிட்டீர்கள் கோபு சார். பார்க்கும் விமர்சனங்கள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் சிறப்பாக இருந்தன. அவற்றிலிருந்து பரிசுக்குரியவற்றைத் தேர்ந்தெடுப்பது என்பது சவாலான விஷயம். அதை அனுபவபூர்வமாகவே உணரவைத்துவிட்டீர்கள். நன்றி கோபுசார். நடுவர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டும்.
பதிலளிநீக்குதிருமதி. உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்! #3ஆவது பரிசு!
பதிலளிநீக்குஉஷாஶ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிருமதி. உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதிருமதி. உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமூன்றாம் பரிசினை வென்றுள்ள திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபரிசு வென்ற திருமதி உஷாஸ்ரீகுமாரவங்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிருமதி உஷாஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள். விமரிசனம் நல்லா இருக்கு.
பதிலளிநீக்கு;-))))
பதிலளிநீக்குஅருமையாக விமர்சனம்! பரிசு பெற்ற திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு