கதையின் தலைப்பு
VGK 24 -
’ தாயுமானவள் ‘
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
அவர்கள் அனைவருக்கும் என்
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
அனைவருக்கும்
ஓர் மகிழ்ச்சியான செய்தி
ஏற்கனவே VGK-03, VGK-10, VGK-13 ஆகிய கதைகளின்
விமர்சனங்களுக்கு அளிக்கப்பட்டது போலவே
இந்தக் கதை VGK-24க்கும் விமர்சனம் எழுதியனுப்பி
போட்டியில் கலந்துகொண்டுள்ள
அனைவருக்குமே
அனைவருக்குமே
என்னால் போனஸ் பரிசு அளிக்கப்பட உள்ளது என்பதை
பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
போனஸ் பரிசு பற்றிய மேலும் விபரங்களுக்கு
நடுவர் அவர்களால் பரிசுக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
விமர்சனங்கள் மொத்தம்:
நடுவர் அவர்களின் குறிப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட விமர்சனங்களில் ஓர் ஒற்றுமை இழையோடுவதை வாசகர்கள் உணரலாம்.
கதாசிரியரின் கதை வரிகளை கூடியவரை வரிக்கு வரி வலிந்து பாராட்டாமல்---
கதாசிரியரின் கதையையே மறுபடியும் எடுத்துச் சொல்லி ஆங்காங்கே ஓரிரு வரிகளை விமரிசனமாய் நுழைக்காமல் ---
எழுத்தாக்கங்களில் சில தவறுகள் இருந்தாலும் மொத்த கதையையும் உள்வாங்கிக் கொண்டு தங்கள் மனப்பிரதிபலிப்பினை விமரிசனம் ஆக்கியவர்கள் இவர்கள்.
படித்துப் பாருங்கள்.
- நடுவர்
மற்றவர்களுக்கு:
இனிப்பான இரண்டாம் பரிசினை
வென்றுள்ளவர்கள் இருவர்.
அதில் ஒருவர்
Mr. G. RAMAPRASAD
From U. A. E.,
இவருக்கு தனியே வலைத்தளம் ஏதும் இல்லை.
மின்னஞ்சல் மூலம் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
-oOo-
இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள
Mr. G. RAMAPRASAD
அவர்களின் விமர்சனம் இதோ:
அந்த ஸ்வாமியின் பெயர் 'தாயுமானவர்' ஆயிற்றே! இவர் கதையின் தலைப்பை 'தாயுமானவள்' என பெண்பாலாக ஆக்கியுள்ளாரே!! தாயுமானவராக தன் மனைவியை இழந்த ஓர் ஆண் இருக்கலாம்; தந்தையுமானவளாக கணவரை இழந்த ஒரு பெண்ணும் இருக்கலாம்; ஆனால் தாய் ஆகக்கூடிய தகுதி வாய்ந்தவள் பெண் மட்டும் தானே !!! அப்படியிருக்கும் போது இது என்ன ‘தாயுமானவள்’ என்றதோர் விசித்திரத் தலைப்பு? என பல்வேறு யோசனைகளுடன் நான் இந்தக்கதையைப் படிக்க ஆரம்பித்தேன்.
முதலில் ஒரு ஜன நெருக்கடியான தெரு முனைக்கு மாரியம்மன் தேர் வந்து நிற்கிறது. தேர் மட்டுமா நின்றது ..... என்னையும் அந்த முண்டியடிக்கும் மக்கள் வெள்ளத்தினுள் முனியாண்டியின் அருகே கொண்டுபோய் நிறுத்தி விடுகிறார் கதாசிரியர்.
தெருவுக்குத் தண்ணீர் தெளித்து, அழகழகான கோலமிட்டு, மாவிலைத் தோரணங்கள் தொங்கவிட்டு, எனக்கும் பன்னீர் தெளித்து வரவேற்றதோடு இல்லாமல், சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம், உப்பும் பருப்பும் கலந்த வெள்ளரிப்பிஞ்சுக்கலவை என ஏதேதோ சாப்பிடவும் வைத்து, நிறைந்த என் வயிற்றுக்கு நீர் மோர் பானகமும் அளிக்கும் விதமாக கதாசிரியர் காட்டியுள்ள கண்கவரும் படங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
மஞ்சள் ஆடை அணிந்த மகளிர் அணி, வேப்பிலையுடன் தீச்சட்டி சுமப்போர், கரகாட்டம், காவடியாட்டம், வாண வேடிக்கைகளுடன் அதிர் வேட்டுக்கள், பலூன் வியாபாரி, போலீஸ் கெடுபடிகள், அர்ச்சனைக்கு வரும் தேங்காய்களை அவ்வப்போது உடைத்துத்தர கையில் அரிவாளுடன் தேரினில் தொங்கும் ஆசாமிகள் என ஒவ்வொரு வர்ணனைகளும் தேர்த்திருவிழாவினை களை கட்ட வைக்கின்றன. இவ்வாறு எழுதியுள்ள வர்ணனைகளில், இதைப்படிக்கும் நாம் ஒவ்வொருவருமே, தேர்வடத்தினைத் தொட்டுவிட முண்டியடித்து நிற்பது போன்ற ஒருவித பிரமையை ஏற்படுத்தி விடுகிறது.
கற்பனை எண்ணங்களையும் நேரடி நிகழ்வுகளையும், எழுத்தில் செதுக்கிக்கொண்டுவந்து தருவது என்பது எல்லோராலும் முடியக்கூடிய காரியம் அல்ல. கற்பனையா அல்லது உண்மை நிகழ்வா என நம்மை ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கிறது. அது எப்படியிருந்தாலும் சரி; கதாசிரியரின் இவ்வாறான அழகிய தத்ரூப வர்ணனைகளுக்காகவே ஒரு மிகப்பெரிய ‘சபாஷ்’ இங்கு நாம் கூறித்தான் ஆகவேண்டும்!
பாட்டாளி மக்களின் உள்மனதிலுள்ள சூடு எப்போ எப்படித் தணியும் என்று ஆதங்கப்படும் இடத்தில் ஆசிரியரின் சமூக சிந்தனையை நாமும் உணரமுடிகிறது. வெறும் கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்துமே மூலதனம் .... என்கிற நிதர்சன உண்மைகளை // முனியாண்டியின் பத்து விரல்களும் பத்துவிதமான பணிகளைச் செய்து வந்தன // என்பதன் மூலம் கதாசிரியர் சொல்லியிருப்பது மிகச்சிறப்பாக உள்ளது.
நாகப்பட்டிணத்தில் சுனாமியில் தன் பெற்றோரை இழந்த குழந்தை, எவனோ ஒருவனால் ஏமாற்றி கடத்தி வரப்பட்டு, திருச்சி வரை அழைத்து வரப்பட்டு, குழந்தை பாக்யம் கிட்டாத பலூன் வியாபாரியான முனியாண்டியிடம் ஒப்படைக்கப்படுகிறது, ஏதோ தெய்வ சங்கல்பம் போல.......
அந்தக் கைலிக்காரன் எதற்காக நாகப்பட்டிணத்திலிருந்து திருச்சி வரை குழந்தையைக் கடத்திக் கூட்டிவந்து இங்கு கொண்டுவந்து முனியாண்டியிடம் சேர்க்க வேண்டும் என்பது பற்றிய முழுவிபரங்கள் ஏதும் கதையினில் சொல்லப்படாமல், அவரவர் போக்கிலே புரிந்து கொள்ளட்டும் என விடப்பட்டுள்ளதும் சிறப்பாகவே உள்ளது.
நல்லவேளையாக அவன் அந்தக்குழந்தையை உடல் ஊனமாக்கி பிச்சை எடுக்க அனுப்பாமலும் அல்லது வேறு ஏதாவது தகாத வழிகளில் ஈடுபடுத்த யாரிடமாவது நல்லவிலைக்கு விற்றுவிடாமலும், ஏதோ அந்தக்குழந்தை அணிந்திருந்த ஒருசில நகைகளை மட்டும் கழட்டி எடுத்துச்சென்றிருப்பானோ என்றே நமக்கு எண்ணத் தோன்றுகிறது. அதுவரை நமக்கும் மனதுக்கு சற்றே நிம்மதியாகவும் உள்ளது.
அந்தச்சின்னஞ்சிறு மழலைக்குழந்தைக்கும், பலூன் வியாபாரிக்கும் நடக்கும் ஆரம்பகட்டப் பேச்சுக்களில் நம்மையும் கண் கலங்க வைக்கிறார் கதாசிரியர்.
ஒரு கதையை தன் கற்பனையில் ஒரு படைப்பாளி எப்படி வேண்டுமானாலும் தாறுமாறுமாக இழுத்துச்சென்று முடிக்க முடியும். ஆனால் தேரோட்டம் போன்று அமைதியாக, அழகாக, ஸ்டெடியாக, அடுத்தது என்ன.... அடுத்தது என்ன..... என ஆவலைத்தூண்டிடும் விதமாக, வாசிக்கும் நம்மை ஆச்சர்யப்படுத்தும் விதமாக எழுதியுள்ளதில் தான் இந்தக் கதாசிரியரின் வெற்றியே அமைந்துள்ளது.
இது இவர் எழுதிய முதல் கதை எனக்கூறியுள்ளார். அதுவே இவருக்கு மேலும் மேலும் எழுத அஸ்திவாரமாக அமைந்தது எனவும் கூறியுள்ளார். இந்தக்கதையை இவர் முன்பே வெளியிட்டுள்ளபோது ஓரிடத்தில் சொல்கிறார்:
”முதல் சந்திப்பு, முதல் பார்வை, முதல் நட்பு, முதல் உரையாடல், முதல் பரிசு, முதல் காதல், முதல் முத்தம், முதல் இரவு, முதல் உறவு, முதல் குழந்தை போன்றவற்றில் தானே ஒரு THRILLING ஆன அனுபவமும், சுகமும், பேரானந்தமும் இருக்க முடியும்” என்று. வாஸ்தவம் தான். அந்த க்ஷணம் மிகவும் இனிமையானதே, மறக்க முடியாததே.
அந்தத் திரில்லிங் இவருக்கு மட்டுமா? வாசிக்கும் நமக்கும் அல்லவா தொற்றிக்கொள்கிறது ! கதாசிரியர் அவர்களுக்கு இதற்காகவே இங்கே மேலும் ஒரு ’ஷொட்டு’க் கொடுக்கலாம்.
திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சந்நதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள அந்த ஜிலுஜிலு மண்டபத்தினுள் நானும் இப்போது கதைக்குள் நுழைகிறேன்.
அதில் கதாசிரியர் குறிப்பிட்டுள்ள ஒருசில சம்பவங்கள் என்னை மிகவும் கவர்வதாக உள்ளன.
[1] தூங்கும் குழந்தை முனியாண்டியின் சட்டையைத் தன் பிஞ்சு விரல்களால் பிடித்துக்கொண்டதாம். தனக்குப் பிடித்தமான பலூன் அங்கிளின் தொடர் ஆதரவை நாடும் அந்தக்குழந்தையின் நிலைமையில் ... என்னவொரு தத்ரூபமான வாத்ஸல்யமான உயிரூட்டமுள்ள எழுத்துக்கள் இவை !
[2] தூங்கிடும் அந்தக்குழந்தை தன் கையினில் பிடித்திருந்த பலூன் நழுவி காற்றில் பறந்தபடி அந்த மிகப்பெரிய மண்டபத்தினில் இங்குமங்கும் தனக்குத்தானே விளையாடியதாம் EXCELLENT WRITING!!கை நழுவிய பலூன் இங்குமங்கும் காற்றில் பறப்பது என்பது மிகவும் இயற்கைதான் என்றாலும், அது குழந்தையின் பிடிக்குள் இப்போது இல்லாததால் 'தனக்குத்தானே விளையாடியது’ என்று குறிப்பிட்டு எழுதியுள்ளதை வெகுவாக ரஸித்து, குறிப்பிட்டுப்பாராட்ட வேண்டுமெனத் தோன்றியது.
[1] தூங்கும் குழந்தை முனியாண்டியின் சட்டையைத் தன் பிஞ்சு விரல்களால் பிடித்துக்கொண்டதாம். தனக்குப் பிடித்தமான பலூன் அங்கிளின் தொடர் ஆதரவை நாடும் அந்தக்குழந்தையின் நிலைமையில் ... என்னவொரு தத்ரூபமான வாத்ஸல்யமான உயிரூட்டமுள்ள எழுத்துக்கள் இவை !
[2] தூங்கிடும் அந்தக்குழந்தை தன் கையினில் பிடித்திருந்த பலூன் நழுவி காற்றில் பறந்தபடி அந்த மிகப்பெரிய மண்டபத்தினில் இங்குமங்கும் தனக்குத்தானே விளையாடியதாம் EXCELLENT WRITING!!கை நழுவிய பலூன் இங்குமங்கும் காற்றில் பறப்பது என்பது மிகவும் இயற்கைதான் என்றாலும், அது குழந்தையின் பிடிக்குள் இப்போது இல்லாததால் 'தனக்குத்தானே விளையாடியது’ என்று குறிப்பிட்டு எழுதியுள்ளதை வெகுவாக ரஸித்து, குறிப்பிட்டுப்பாராட்ட வேண்டுமெனத் தோன்றியது.
[3] யாரோ ஒரு பக்தர் அங்கு உடைத்த சதிர்த்தேங்காயின் ஒரு சில்லு முனியாண்டியின் மேல் பட்டு தூங்கிக்கொண்டிருந்த அவனைத் தட்டி எழுப்பியதாம். மேற்கொண்டு கதையைக்கேட்க நம்மையும் அல்லவா தட்டி எழுப்பியுள்ளது !!! ஆங்காங்கே உள்ள சூழ்நிலைக்குத் தகுந்தவாறு கதையைத் தெளிந்த நீரோட்டமாக நகர்த்துவதில் கதாசிரியரின் சாமர்த்தியம் மிகவும் வியக்க வைக்கின்றது.
முனியாண்டி குழந்தையின் பசிக்கு காலையில் இரண்டு இட்லிகள் வாங்கிக்கொடுத்ததும், மாலையில் குழந்தைக்கு மாற்று உடை ஒன்று வாங்கிச்செல்வதும் சிந்திக்க வைக்கிறது. ஏழைத்தொழிலாளியான அவன் பேரம் பேசி ரோட்டுக்கடையில் வாங்கிச்செல்வதாகச் சொல்லியுள்ளது மிகவும் யதார்த்தமாகவே உள்ளது.
வருமான அடிப்படையில் மிகவும் ஏழையானாலும், நல்ல இரக்க மனம் + ஈர மனம் படைத்துள்ள அவன் மனதளவில் மிகப்பெரிய செல்வந்தன் தான் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் கதாசிரியர். பெரும்பாலும் பணபலம் இல்லாத ஏழை மக்களிடமே, இந்த ஈவு, இரக்கம் எல்லாம் இன்னும் உள்ளது என்பதை நாமும் மறுப்பதற்கு இல்லை.
சிறுகதையின் தலைப்புக்குக் காரணமாய் அமைந்துள்ள ’தாயுமானவள்’ மரகதம் நமக்கு அடையாளம் காட்டப்படுவது கதையின் இறுதியில் மட்டுமே என்றாலும் இறுதிவரை அவள் நம் நெஞ்சைவிட்டு நீங்காமல் இடம் பெற்றுவிடுவது, கதாசிரியரின் வெற்றிக்குக் காரணமாக அமைந்து விட்டது.
பாசத்திற்கு ஏங்கி அழும் அந்தக் குருத்தின் மேல் இரக்கம் கொண்டு, ’பெற்றால் தான் பிள்ளையா’ என நினைத்து, கொடி போல அதனை தன் மீது படரவிட்டு, அதற்குத் தானே தாயாகி விடுவதென, நொடிப்பொழுதில் முடிவெடுத்து விடுகிறாள். மரகதம், தன் பெயருக்கு ஏற்றபடியே மிக உயர்ந்த விலை மதிப்புள்ள மரகதக்கல் போன்ற கதாப்பாத்திரமாகி நம்மை வியக்க வைக்கிறாள்.
முனியாண்டி மரகதம் போன்ற ஏழைத்தம்பதியினருக்கு, பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ரூபாய் மூவாயிரம் என்பது எவ்வளவு ஒரு பெரிய தொகையாக இருந்திருக்கும் ! வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி, குருவி சேர்ப்பதுபோல கடந்த மூன்றாண்டுகளாகச் சேர்த்து வைத்துள்ள அவர்களின் மொத்த சேமிப்புத் தொகை அல்லவா !! அவர்கள் அன்று பணம் சேர்க்க ஆரம்பித்ததற்கான நோக்கத்தைவிட, இப்போது அந்தப்பணத்தை செலவிட நினைக்கும் நோக்கம் மிக மிக உயர்ந்ததும் பாராட்டத்தக்கதும் அல்லவா !!!
இதுவரை குழந்தை பாக்யம் ஏற்படாத அந்த தம்பதிக்கு ஓர் குழந்தை கிடைத்து, பெற்றோரின் ஆதரவையும் அரவணைப்பையும் இழந்த அந்தக் குழந்தைக்கு நல்ல பெற்றோர் கிடைத்து, அதற்கும் மேலாக கல்வியும் கிடைக்கப்போகிறதே... படிக்கும் அனைவருமே ஏற்றுக்கொள்ளும் படியான மிகச்சிறப்பான முடிவினை இந்தக்கதைக்குக் கொடுத்துள்ள கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சுனாமியில் இதுபோலத் தங்கள் பெற்றோர்களை இழந்துள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பிரதிநிதியாக குழந்தை விஜியைப் படைத்து, ஈவு இரக்கத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் தொண்டுள்ளம் படைத்தவர்களின் பிரதிநிதிகளாக முனியாண்டி மற்றும் மரகதத்தைப்படைத்து, படிக்கும் நம் அனைவர் நெஞ்சிலும் சுனாமிப் பேரலைகளாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார், கதாசிரியர்.
முன்னேறிய வெளிநாடுகளின் வழிக்கிச்செல்லு ம் சாலைகளில் சொகுசுக்காரில் பயணம் செய்தது போன்ற உணர்வு, இந்தக்கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை என்னால் உணரப்பட்டது.
விமர்சனம் என்றால் நிறை + குறை இரண்டையுமே எழுத வேண்டும். இந்தக்கதையில் குறை என்று நானும் தேடித்தேடிப்பார்த்தேன். ’குறை ஒன்றும் இல்லை’ என்பதை மட்டுமே ஒரு குறையாக உணர்ந்தேன்.
குறையொன்றுமில்லை .... மறைமூர்த்தி கண்ணா !
குறையொன்றுமில்லை .... கண்ணா !
குறையொன்றுமில்லை .... கோவிந்தா !
குறையொன்றுமில்லை ....
கோபாலகிருஷ்ணா !
எனப்பாடலாம் போலத்தோன்றுகிறது.
மன மகிழ்ச்சி ஏற்படுத்திய, மனிதாபிமானம் மிக்க, ஓர் சிறுகதையை எளிமையாகவும், அற்புதமாகவும், ஆக்க பூர்வமாகவும் படைத்துள்ள கதாசிரியர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை என் மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டு, என் இந்த விமர்சனத்தை நிறைவு செய்கிறேன். வணக்கம். நன்றி.
விமர்சனத்தைத் தமிழில் தட்டச்சு செய்ய உதவியவர்
Thank you very much
My Dear Ramaprasad and Kavitha
- vgk
My Dear Ramaprasad and Kavitha
- vgk
இருவருக்கும்
நம் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
நம் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
இனிப்பான இரண்டாம் பரிசினை
வென்றுள்ள மற்றொருவர்:
திருமதி.
கீதா மதிவாணன்
அவர்கள்
இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள
திருமதி.
கீதா மதிவாணன்
அவர்களின் விமர்சனம் இதோ:
எதிர்பாராத மனிதர்களிடத்தில் எதிர்பாராத கோ ணத்தில் வெளிப்படும் தாய்மையின் இயல்புகளை அழகாகக் காட்டிய மனங்கவர்ந்த கதைக்கருவுக்காக கதாசிரியருக்கு முதல் பாராட்டு. குறுந்தொடர் கதையைத் தொய்வின்றி ஒரே மூச்சில் வாசிக்கத் தூண்டும் சுவையான எழுத்தோட்டத்துக்கு இரண்டாவது பாராட்டு. முதன் முதலாக அவர் எழுதிய இக்கதை பிரபல பத்திரிகையால் பரிசுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கப் பட்டமைக்கு மூன்றாவது பாராட்டு. அந்தக் கதையை இங்கு p resent பண்ணிய விதத்துக்கு மற்றொரு பாராட்டு. திருவிழா தொடர்பான காட்சிகளை powerpoint presentation போல் visual ஆக காட்டி, வாசகர்களாகிய நாமும் தேரோட்டத்தில் கலந்துகொண்ட உணர்வை ஏற்படுத்துகிறது கதாசிரியரின் கைவண்ணம்.
இந்தக் கதையை ஊன்றி வாசிப்பதன் மூலம், திருச்சியைப் பற்றி அறியாதவர்களும் திருச்சியின் மையத்தில் குடிகொண்டிருக்கும் உச்சிப்பிள்ளையார் கோவிலையும் சுற்றியுள்ள தெருக்களையும் மிக அநாயாசமாக அறிந்துகொள்வார்கள். கூடவே எவரையும் விசாரிக்காமல் நேரே ராமாஸ் கஃபே சென்று டிபன் முடித்து, சாரதாஸில் துணிமணிகள் எடுத்து, மங்கள் அண்ட் மங்களில் நகைகள் வாங்கி ஊருக்குப் பஸ் ஏறிவிடலாம். அவ்வளவு துல்லியமான விவரிப்புகள். ஒரு திருவிழாவின் போது என்னென்ன நிகழ்வுகள் உண்டோ அத்தனையும் கண்முன் காட்சிப்படுத்திப் போகும் வர்ணனைகள் அருமை.
தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தைகளை திருவிழாவில் தொலைத்த கதைகளை அறிவோம். ஆனால் ஒரு குழந்தைக்காக தவமாய் தவமிருக்கும் முனியாண்டி தம்பதிக்கு தொலைந்து போன ஒரு குழந்தை கிடைத்தது புதிய கதை. கொண்டு வந்து சேர்த்தது சுனாமி அலை.
சுனாமியால் உயிரிழந்த எத்தனையோ குடும்பங்கள் நம் நினைவுக்கு வந்து கண்களைக் குளமாக்குகின்றன. எத்தனைப் பெற்றோர் குழந்தைகளை இழந்தனர்! எத்தனைக் குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்! சொல்லாமல் கொள்ளாமல் வந்து அத்தனை உயிர்களைப் பலிவாங்கிய அந்த அசுர அலையால் அலைக்கழிக்கப்பட்ட ஆயிரமாயிரம் பேர்களில் ஒருத்தியாய் மூன்று வயதுக் குழந்தை விஜி. நேற்றுவரை அற்புதமான வாழ்க்கை வாழ்ந்த குழந்தை இன்று அற்ப மனிதன் ஒருவன் கையில் அகப்பட்டு சீரழியப் பார்த்ததே…
தாய் தந்தையை இழந்து தவிக்கும் குழந்தை என்று அறிந்தும் சிறிதும் இரக்கமில்லாமல் அதைக் கடத்திக்கொண்டு வந்து காது நகைகளைப் பறித்துவிட்டு வேற்றூரில் விட்டுச் செல்லும் கல்மனம் படைத்த மனிதர்கள் இருக்கும் நாட்டில்தான் முனியாண்டி போன்ற இரக்க உள்ளம் படைத்த நல்ல மனிதர்களும் வாழ்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லிப் போகிறது கதை.
பலூன்காரனான முனியாண்டிக்கு மூச்சுக் காற்றே மூலதனம். அவனிடம்தான் எத்தனை வகையான பலூன்கள். பலூன்காரர் என்றதுமே அவர்கள் கையில் வைத்திருக்கும் ஒரு சிறிய பலூனால் எழுப்பும் க்ரீச் க்ரீச் சத்தம் வாசிக்கும்போதே நம் காதுகளை வந்தடைகின்றது. காலையிலிருந்து உண்ணாமல் கொள்ளாமல் வியாபாரத்திலேயே கருத்தாய் முந்நூறு ரூபாய் சேர்ப்பதிலேயே குறியாய் இருப்பதைப் பார்க்கும்போது நமக்கு மிகவும் பரிதாபமாக உள்ளது. மூன்று வருடங்களாக அவனுக்கும் அவன் மனைவிக்கும் இருந்த ஏக்கம் இன்றுதான் நிறைவேறப்போகிறது என்னும்போது நமக்குள்ளும் மகிழ்ச்சி. ஆனால் அதற்குத் தேவையே இல்லாமல் மூன்று வயதுக் குழந்தையாய் விஜி அவனுடைய வாழ்க்கையில் வந்துசேரும்போது களிப்பும் கலக்கமுமாக ஒரு உணர்வு.
தேடிவந்த செல்வம் மீண்டும் பறிபோய்விடுமோ என்றொரு பதற்றம். ஆனால் குழந்தை விஜி என்னமாய்ப் பற்றிக்கொண்டுவிட்டாள் அந்தப் பாசக்கொடியை. இதை ஒரே ஒரு காட்சியின் மூலம் அழகுறக் காட்டிவிட்டார் கதாசிரியர். மூன்று மணிவாக்கில் மாணிக்க விநாயகர் சந்நதிக்கு எதிர்ப்புறம் உள்ள மண்டபத்தில் தூங்க வைக்கப்படும் குழந்தையின் கைகள், அது ஆசை ஆசையாய் வைத்திருந்த பலூனைத் தவறவிட்டாலும், முனியாண்டியின் சட்டையைப் பிடித்திருக்கும் பிடிப்பைத் தளரவிடவில்லை.
கைலிக்காரன் பாதகனாய் இருந்தாலும் ஒரு விஷயத்தில் அவனுக்கு நன்றி சொல்லவேண்டும். குழந்தையை நகைக்காக கடத்தி வந்தவன், நகையை எடுத்துக் கொண்டு குழந்தையை உயிரோடு விட்டுவைத்தானே! போகிற போக்கில் அதன் பிஞ்சுக் கழுத்தை நெறித்துக் கொன்றாலும் போச்சு, அல்லது ஏதாவது வடமாநிலத்துக்கு ரயிலில் ஏற்றிக் கொண்டுசென்று பாலியல் தொழிலாளியாய் மாற்றிவிட்டாலும் போச்சு. அக்குழந்தையின் வாழ்க்கையே நாசமாய்ப் போயிருக்குமே. அந்த மட்டில் அறிந்தோ அறியாமலோ முனியாண்டியின் கைகளில் அந்தக் குழந்தையை ஒப்படைத்தானே… அதற்காகவே அந்தப் பாவிக்கு நன்றி சொல்லவேண்டும்.
ஏழ்மை நிலையிலும் உழைப்பாளியாய், நேர்மையாளனாய், இ ரக்க சுபாவமுள்ளவனாய், மனைவியை நேசிப்பவனாய்… எத்தனை அற்புதமான மனிதன் முனியாண்டி. முனியாண்டியின் பாத்திரப் படைப்பை விஞ்சும் அவன் மனைவியின் பாத்திரப் படைப்பு பிரமாதம். எந்தக் குழந்தையையும் தன் சொந்தக் குழந்தை போல் பாவிப்பது தாயானவளின் இயல்பு. ஆனால் ஏதோ ஒரு குழந்தைக்காக, தன் சொந்தக் குழந்தைக்கான வாய்ப்பையும் தட்டிவிடுகிறாளே, இவளல்லவோ தாயுமானவள்! நாளை இந்தக் குழந்தையின் உறவினர்கள் எவராவது வந்து கேட்டால் என்ன செய்வது? என்ற எந்த யோசனையுமின்றி இன்றைய பொழுதைப் பற்றி மட்டுமே சிந்தித்து அந்தக் குழந்தைக்கொரு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தர முயலும் மரகதத்தின் பண்பு தாய்மையின் உச்சம். கஷ்டப்படும் நிலையிலும் கல்விக்கு அவள் தரும் முக்கியத்துவம் பாத்திரப்படைப்பின் பிரதானம்.
அந்த ஆழிப்பேரலையிலிருந்து தப்பிய அறியாக் குழந்தை விஜி, இனி இந்த அன்புக்கடலில் அகப்பட்டுக்கொண்டு வாழ்க்கை முழுவதும் பாச அலையில் நனைந்து மகிழ்வாள் என்பது திண்ணம்.
Thanks a Lot, Madam.
- vgk
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி
இரண்டாம் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்
சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர
இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
இணைப்பு:
கதையின் தலைப்பு:
VGK-26
பல்லெல்லாம்
பஞ்சாமியின் பல்லாகுமா !
பஞ்சாமியின் பல்லாகுமா !
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
Behind every successful man there is a woman . your better half has proved it. congrats for the new beginning Mr. G. RAMAPRASAD..வாங்க. களத்தில இறங்கி முதல் பவுண்டரி அடிச்சாச்சு! மேலும் மட்டையை சுழற்றி அடி பின்ன வாழ்த்துகள்! சகோதரி கீதா! விமர்சனம் - உன்னதம்! தொடர்பரிசுகளுக்கு தாங்கள் நிச்சயம் தகுதியானவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்! பாராட்டுகள்! அன்புடன் MGR
பதிலளிநீக்குஇனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள Mr. G. RAMAPRASAD அவர்களின் அருமையான முதல் விமர்சனம் ..!
பதிலளிநீக்குஆசிரியரின் முதல் கதைக்கு முதல் விமர்சனம் மூலம்
விமர்சன உலகில் அடி எடுத்துவைத்து பரிசும் வென்றதற்கு இனிய வாழ்த்துகள்.. பாராட்டுக்கள். ..
தொடரட்டும் விமர்சன வெற்றிகள்..!
இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள
பதிலளிநீக்குதிருமதி.கீதா மதிவாணன் அவர்களின் விமர்சனம் அருமை..
பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
இரண்டாம் பரிசை வென்றுள்ள இராம் பிரசாத் மற்றும் கீதா மதிவாணன் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசிறந்த விமர்சனம் எழுதி பரிசு பெற்ற
திரு. G . Ramaprasad அவர்களுக்கும் .
திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும்
பாராட்டுக்கள் !
புதியவர் திரு. Mr. G. RAMAPRASAD அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமிகச் சிறப்பான விமரிசனங்கள் இரண்டும்!
பதிலளிநீக்குஇரண்டாம் பரிசு பெற்ற திரு. இராமப்ரசாத் அவர்களுக்கும்
திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும்
நல்வாழ்த்துக்கள்!
அழகானதொரு விமர்சனத்துடன் களமிறங்கி பரிசு பெற்றுள்ள திரு. ராம்பிரசாத் அவர்களுக்கும் அவரது எண்ணங்களை எழுத்தாக்க உதவிய திருமதி கவிதா அவர்களுக்கும் இனிய பாராட்டுகள். தொடர்ந்து பரிசுகளை அள்ள மனமுவந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநடுவர் அவர்களது குறிப்பு மிகவும் உற்சாகமூட்டுவதாக உள்ளது. எனக்கும் பரிசு கிடைத்திருப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி. வாய்ப்பினை வழங்கியமைக்கு மிக்க நன்றி கோபு சார். பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றி.
திரு .ராம்பிரசாத் அவர்களின் விமர்சனமும், திருமதி. கீதாமதிவாணன் அவர்களின் விமர்சனமும் அருமையாக இருக்கிறது .
பதிலளிநீக்குதிரு.ராம்பிரசாத அவர்களுக்கு தட்டச்சு செய்து உதவிய திருமதி. கவிதா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இரண்டாம் பரிசை வென்றுள்ள இராம் பிரசாத் மற்றும் கீதா மதிவாணன் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
பதிலளிநீக்குஇரண்டாம் பரிசைப் பெற்ற ராம்பிரசாதுக்கும், இம்முறை இரண்டாம் இடத்துக்குப் போனாலும் விடாமல் பரிசைப் பெற்று வரும் கீத மஞ்சரிக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇரண்டாம் பரிசினை வென்றவர்களில் ஒருவரான திரு G. ராம்பிரசாத் ( From U. A. E.) வலைத்தளம் என்று தனக்கு ஏதும் இல்லாத நிலையிலும் மின்னஞ்சல் மூலமாக போட்டியில் கலந்து கொண்டது என்பது அவரது ஆர்வத்தினைக் காட்டுகிறது. அவரது எண்ண ஓட்டங்களை தமிழில் டைப் செய்து தந்த அவரது மனைவி திருமதி. கவிதா இராம்பிரஸாத் அவர்களை என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை. மனமொத்த தம்பதியருக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅடுத்து, இரண்டாம் பரிசினை வென்றவர்களில் மற்றொருவரான கீதா மதிவாணன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
அன்பின் வை.கோ - பரிசுகள் பெற்ற திரு இராம் பிரசாத் - திருமதி கீதா மதிவானன் மற்றும் திரு இராம் பிரசாத்திற்கு தட்டச்சு செய்வதில் உதவிய அவரது மனைவி திருமதி கவிதா ஆகியோர் அனைவருக்கும் பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - பரிசுகள் பெற்ற திரு இராம் பிரசாத் - திருமதி கீதா மதிவானன் மற்றும் திரு இராம் பிரசாத்திற்கு தட்டச்சு செய்வதில் உதவிய அவரது மனைவி திருமதி கவிதா ஆகியோர் அனைவருக்கும் பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - பரிசுகள் பெற்ற திரு இராம் பிரசாத் - திருமதி கீதா மதிவானன் மற்றும் திரு இராம் பிரசாத்திற்கு தட்டச்சு செய்வதில் உதவிய அவரது மனைவி திருமதி கவிதா ஆகியோர் அனைவருக்கும் பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஇனிப்பான இரண்டாம் பரிசினை வென்ற திரு இராம்பிரசாத் அவர்களுக்கும், கீத மஞ்சரி அவர்களுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்..
பதிலளிநீக்குதமிழில் தட்டச்சு செய்ய உதவிய கவிதா அவர்களுக்கும் வாழ்த்துகள்.
இரண்டாம் பரிசினை வென்ற திரு இராம்பிரசாத் அவர்களுக்கும், திருமதி கீத மஞ்சரி அவர்களுக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குபரிசு வென்ற திருமதி கீதமஞ்சரி திரு ராம்பிரசாத் அவர்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஇரண்டாம் பரிசை வென்றுள்ள திரு ராம் பிரசாத் மற்றும் கீதா மதிவாணன் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதிருமதி கீதா மதிவாணன் திரு ராமபிரசாத் அவங்களுக்கு வாழ்த்துகள்.
நீக்குதிருமதி கீதாமதிவாணன் திரு ராம் பிரசாத் அவர்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்கு;-)))
பதிலளிநீக்குதாயுமானவராக தன் மனைவியை இழந்த ஓர் ஆண் இருக்கலாம்; தந்தையுமானவளாக கணவரை இழந்த ஒரு பெண்ணும் இருக்கலாம்; ஆனால் தாய் ஆகக்கூடிய தகுதி வாய்ந்தவள் பெண் மட்டும் தானே !!! அப்படியிருக்கும் போது இது என்ன ‘தாயுமானவள்’ என்றதோர் விசித்திரத் தலைப்பு?//அருமையான விமர்சனங்கள் எழுதி பரிசுபெறும் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
பதிலளிநீக்குSeshadri e.s. December 20, 2015 at 9:22 AM
நீக்கு//தாயுமானவராக தன் மனைவியை இழந்த ஓர் ஆண் இருக்கலாம்; தந்தையுமானவளாக கணவரை இழந்த ஒரு பெண்ணும் இருக்கலாம்; ஆனால் தாய் ஆகக்கூடிய தகுதி வாய்ந்தவள் பெண் மட்டும் தானே !!! அப்படியிருக்கும் போது இது என்ன ‘தாயுமானவள்’ என்றதோர் விசித்திரத் தலைப்பு?//அருமையான விமர்சனங்கள் எழுதி பரிசுபெறும் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்//
ஸ்பெஷல் நன்றிகள். :)
பத்திரிகையில் அச்சிடப்பட்டு பிரசுரமான என் கதைகளில் ஒன்றான இதனை (தாயுமானவள்) என்னிடம் கேட்டு வாங்கி, எங்கள் BLOG என்ற வலைத்தளத்தில், 02.02.2016 அன்று படங்களுடன் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
பதிலளிநீக்குஅதற்கான இணைப்பு:
http://engalblog.blogspot.com/2016/02/blog-post.html
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் VGK