என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 13 ஜூன், 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள்


2

ஸ்ரீராமஜயம்

வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்.

வலைச்சரத்தில் என் முதல் திருநாள்

01.06.2015

 
^திருச்சி காவிரிப்பாலம் இன்று^
^திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் இன்று^  
^திருச்சி காவிரியில் முழு அளவு நீர் ஓடும்போது^
^திருச்சியில் எங்கள் வீட்டு வாசல்^ 
{ ஓர் 50 ஆண்டுகளுக்கு முன்பு - 1965}


^அதே இடம் இன்று 2015^
{ மாட்டு வண்டிகள் காணாமல்போய்
பல மாடிக்கட்டடங்கள் எழும்பியுள்ளன }



அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.

 






  • ”ஏப்ரில் மேயிலே .... பசுமையே இல்லே .... காய்ஞ்சு போச்சுடா .... !

  • இசைஞானி இளையராஜா அவர்கள் இசை அமைத்த, மிகவும் அர்த்தம் பொதிந்த மேற்படி பாடலை தங்களில் பலரும் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள். இதுவரை கேட்காதவர்கள் உடனடியாகக் கேட்டு மகிழவும். இதோ இணைப்பு: www.youtube.com/watch?v=rfFLEYxRA1Y 
  • அதேபோல கடந்த 23.03.2015 க்குப்பிறகு, ஏப்ரில், மே யிலே வலைச்சர ஆசிரியர் யாருமே நியமிக்கப்படாமலும், பதிவர்களில் யாரும் தானே முன்வந்து வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொள்ளாமலும், நம் நந்தவனமாகத் திகழ்ந்துவந்த வலைச்சரமும் கடந்த 10 வாரங்களாகக் காய்ஞ்சு போச்சு என்று சொன்னால், அது மிகையாகாது.
  • என்னை இன்று 01.06.2015 முதல் வலைச்சர ஆசிரியராக நியமித்துள்ள அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சர நிர்வாகக் குழுவினர்களுக்கும் முதற்கண் என் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். 

  • இதற்கு ஓர் தூண்டுதலாக அமைந்தது என் அன்புக்குரிய இனிய நண்பர் திருச்சி, திருமழபாடி, தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் ஆதங்கப்பதிவு. தலைப்பு: ’வலைச்சரம் - ஒரு வேண்டுகோள்’ இணைப்பு: http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_97.html 

    அவரின் இந்தப்பதிவுக்கும், அதில் எனக்கோர் அன்பான வேண்டுகோள் வைத்துப் பின்னூட்டம் அளித்திருந்த திருமதி. ஆதி வெங்கட் [கோவை2தில்லி] அவர்களுக்கும், திருமதி. ஆதி வெங்கட் முன்மொழிந்ததை வழிமொழிந்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கும் திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைக் கூறிக்கொண்டு, என் வலைச்சர ஆசிரியர் பணியினை ஆரம்பிக்கிறேன். 


     எனக்கு வலைச்சர ஆசிரியர் பணியில் இன்று ’முதல்நாள்’. 
    அதனால் எனக்குள் என் மனதினில் 
    ஓர் இனம்புரியாத ஆவலுடன் கூடிய திக்..திக் ! :)

    முதல்நாள் பயந்துகொண்டே பள்ளிக்குச்செல்லும் சிறுவனாய்
    ’வலைச்சர ஆசிரியர்’ என்ற பெயரில் 
    உங்கள் முன் இன்று நான் ’ஓர் பொடியனாய்’ நிற்கின்றேன்.


     


    இன்று நான் என்னைப்பற்றி முதலில் சுய அறிமுகம் செய்துகொள்ள வேண்டும் என்பது ஓர் சம்பிரதாயம் ... அதாவது வழக்கம். 


    என்னைப்பற்றி பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஏதும் இல்லை. நான் மிகச் ’சாதாரணமானவன்தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று எப்போதும் மனதில் நினைப்பவன்.’  


    2005 முதல் 2010 வரை, தமிழ்நாட்டின் பிரபல வார / மாத பத்திரிகை இதழ்களில் பெரும்பாலும் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தவன், நான். 


    என் எழுத்துலக மானசீக குருநாதர்:- 

    என்னுடன் ஒரே அலுவலகத்தில், ஒரே துறையினில் பணியாற்றிய, பதிவர் ரிஷபன் திரு. R. ஸ்ரீநிவாஸன் அவர்கள்தான் என் எழுத்துலக மானசீக குருநாதர்  என்று கூறிக்கொள்வதில் பெருமிதமாக உணர்கிறேன். அன்றுமுதல் என்னை மேலும் மேலும் எழுத வைக்க மிகவும் தூண்டுகோலாக இருந்து செயல்பட்டவர், இவரே

     

    2009ம் ஆண்டு என் பணி ஓய்வுக்குப்பின், நம் ரிஷபன் அவர்கள் எனக்கு ஓர் புதிய வலைத்தளம் துவக்கிக்கொடுத்தார். ஆனால் நான் அதில் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் ஒரேயொரு சோதனைப்பதிவு தவிர, வேறு ஏதும் எழுதவே இல்லை.  ஏனெனில் எனக்கு அப்போதெல்லாம், கணினியில் தமிழில் டைப் அடிப்பதே தடவலாக இருந்து வந்தது. எப்படி டைப் அடிப்பது அதை எப்படிப் பதிவாக வெளியிடுவது என்பதெல்லாம் ஒன்றுமே எனக்குப் புரியாமல் இருந்துவந்தது. 

    இந்த என் கஷ்டமான ஆரம்பகால அனுபவங்களைப்பற்றியே என் ஐம்பதாவது பதிவினில் நகைச்சுவையுடன் கூறியுள்ளேன். அதற்கான தலைப்பு: ‘ஐம்பதாவது பிரஸவம்’ - உப தலைப்புகள் [1] ‘மை டியர் ப்ளாக்கி’ [2] குட்டிக்குழந்தை ‘தாலி’ இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html


    கணினியில் தமிழில் நேரிடையாக டைப் அடிக்க நன்கு பழகியபிறகு 02.01.2011 முதல் சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக என் வலைத்தளத்தினில் பதிவுகள் கொடுத்துள்ளேன். சமீபத்தில் 31.03.2015 அன்று வெற்றிகரமான என் 750வது பதிவு வெளியிடப்பட்டுள்ளது. 

    51 மாதங்களுக்குள் 750 பதிவுகள் கொடுத்துள்ளதை ஏதோ என்னால் முடிந்ததோர் மிகப்பெரிய சாதனையாகவே நான் நினைத்து மகிழ்கிறேன். சராசரியாக ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம், நான் இதுவரை பதிவுகள் வெளியிட்டு வந்துள்ளேன் என்பதை நினைக்க எனக்கே மிகவும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

     

    நான் தொடர்ச்சியாக இதுபோல பதிவுகள் கொடுக்க, மிகவும் தூண்டுகோலாக அமைந்தது, வாசகர்களாகிய தங்களில் பலரும் அவ்வப்போது கொடுத்து வந்த மிகத்தரமான, ஏராளமான, தாராளமான பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம் மட்டுமே. 

    இவ்வாறு தரமான பின்னூட்டங்கள் கொடுத்தவர்களை சிறப்பித்து நன்றி கூறும் வகையில் ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள்’ என்ற தலைப்பினில் நான் இந்த 2015 மார்ச் மாதத்தில் மட்டும் 15 பதிவுகள் கொடுத்துள்ளேன். அதன் முதல் பகுதிக்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/03/1.html

     

    வலைச்சர ஆசிரியர்களாக இருந்துள்ள பலர் கடந்த நான்கு ஆண்டுகளில் என்னையும் என் வலைப்பதிவுகளையும் சுமார் 115 தடவைக்குமேல் பாராட்டி, புகழ்ந்து எழுதியுள்ளார்கள் என்பதை நான் என் அடுத்த சாதனையாக நினைத்து மகிழ்கிறேன். 

    அதைப்பற்றியும்கூட, அந்த ஒவ்வொரு வலைச்சர ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, ‘என் வீட்டுத்தோட்டத்தில்....’ என்ற தலைப்பினில் 2015 ஜனவரி மாதம் 16 பதிவுகள் கொடுத்துள்ளேன். அதன் முதல் பகுதிக்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/01/1-of-16-1.html

     

    இதுவரை நம் அன்புக்குரிய பதிவர்களில் சிலரை [இதுவரை மொத்தம் 39 நபர்கள்] நான் நேரில் சந்தித்துள்ளேன். அதைப்பற்றியும்கூட ‘சந்தித்த வேளையில்’ என்ற தலைப்பிலும் ’சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்’ என்ற தலைப்பிலும் 6+7=13 பதிவுகள் 2015 பிப்ரவரி மாதம், நிறைய படங்களுடன் வெளியிட்டுள்ளேன். அதன் முதல் பகுதிக்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html



    நான் பதிவிடத்துவங்கிய முதல் ஆண்டான 2011ம் ஆண்டிலேயே 07.11.2011 முதல் 13.11.2011 வரை ஒரு வாரம் என்னை தமிழ்மணத்தின் நட்சத்திரப்பதிவராக ஆக்கி கெளரவித்திருந்தார்கள். 

    அந்த ஒரே வாரத்தில் தினமும் 4 பதிவுகள் வீதம், மொத்தம் 28 பதிவுகள் கொடுத்து அந்த வார TOP 20 LIST இல் தமிழ்மணத்தில் ’முதலிடம்’  வகித்திருந்தேன்.

    இதுவரை பொறுப்பேற்றுக்கொண்ட தமிழ்மண நட்சத்திரப் பதிவர்களிலேயே, ஒரே வாரத்தில் இவ்வளவு அதிக பதிவுகள் நான் மட்டுமே கொடுத்துள்ளது, ஒரு மிகப்பெரிய சரித்திர சாதனையே என்று பலரும் சொல்லிப்பாராட்டியிருந்தார்கள். 

    இதைப்பற்றிய மேலும் விபரங்களுக்கு ’HAPPY இன்றுமுதல் HAPPY' என்ற என் பதிவினைப் பாருங்கள். இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html


    வல்லமை, மூன்றாம் கோணம், நிலாச்சாரல் 

    போன்ற மின் இதழ்களில் என் படைப்புகள் 

    இதுவரை ஏராளமாக வெளிவந்துள்ளன.


     

    'நிலாச்சாரல்' மின் இதழில் நான் ‘பவழம்’ 

    என்ற தலைப்பினில் எழுதிய சிறுகதை 

    அந்த மாத [MARCH 2007] வெளியீடுகள் அனைத்திலும் 

    மிகச்சிறந்த படைப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

    பரிசும் அளிக்கப்பட்டது.


    என் மேற்படி சிறுகதைக்கான இணைப்பு: ப வ ழ ம் 



     

    ’வல்லமை’ மின் இதழில் 06.01.2014 அன்று என்னை 

    அந்த வாரத்தின் 

    வல்லமையாளராக அறிவித்திருந்தார்கள்.





     

    ’வல்லமை’ தீபாவளிச் சிறப்பிதழ் 2011 இல்

    ‘மனசுக்குள் மத்தாப்பூ’ என்ற என் குறுநாவல் 

    வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டிருந்தது.



    2014ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் அதே 2014ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரை, தொடர்ச்சியாக தொய்வேதும் இல்லாமல் 40 வாரங்களுக்கு, என் வலைத்தளத்தினில் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’கள் மிகப்புதுமையான முறையில் வெற்றிகரமாக நடைபெற்றன. இதில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிய நபர்களான 255 பேர்களுக்கும் மேலான பலருக்கும் உடனுக்குடன் ரொக்கப்பரிசுகள் அளிக்கப்பட்டன. 

    இதுவும் ஓர் சரித்திர சாதனை என்றும், இதுபோல ஓர் மெகாப் போட்டியை வெற்றிகரமாக (போட்டிக்கான தேதிகளை எக்காரணங்களுக்காகவும் அவ்வப்போது ஒத்திப்போடாமல், ஒருமுறையேனும் வாய்தா ஏதும் வாங்காமல்) சொன்ன தேதிகளில் சொன்னபடி இதுவரை யாரும் நடத்தியது இல்லை எனவும், இனி இதுபோல யாரும் நடத்தப்போவதும் இல்லை எனவும், பலரும் பாராட்டியிருந்தனர். 

    இந்தப்போட்டிகளில் பரிசினைப்பெற்ற பதிவர்களை அவர்களின் புகைப்படத்துடன் காண இதோ இந்த இரண்டு இணைப்புகளைப் போய் பாருங்கள்.



     

    இப்போதும்கூட என் வலைத்தளத்தினில் மிகச்சுலபமான போட்டியொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்துகொள்ள இறுதி நாள்: 31.12.2015 ..... அதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். பரிசினை அள்ளலாம். போட்டிபற்றிய மற்ற விபரங்களுக்கு இதோ இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html

     


    இதுவரை நான் மூன்று சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளியிட்டுள்ளேன். இதுவரை எழுத்துலகில் நான் பல பரிசுகளும், விருதுகளும், பாராட்டுப் பத்திரங்களும் பெற்றுள்ளேன். அவற்றில் சிலவற்றை என் சில பதிவுகளில் அவ்வப்போது படங்களாகக் காட்டியுள்ளேன். உதாரணமாக இதோ ஓருசில இணைப்புகள்:




    நான் தமிழில் எழுதிய பல சிறுகதைகள் கன்னடத்திலும்,  ஹிந்தியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு, அங்கிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.

     

    நான் என் வலைத்தளத்தினில் எழுதி வெளியிட்டுள்ள சிறுகதைகளும், இதர ஆக்கங்களும் வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவைகளாகும். அவற்றில் சிலவற்றை மட்டும் இந்த வலைச்சரத்தில் தினமும் அவ்வப்போது கொஞ்சமாக குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.  


    பதிவின் நீளம் கருதி என் சுயபுராணங்களை இத்துடன் நிறுத்திக்கொண்டு விடைபெறுகிறேன். நாளை முதல் தினமும் மற்ற பிரபல பதிவர்களில் சிலரை  மட்டும் அடையாளம் காட்டிட விரும்புகிறேன். 

     


    ‘வலைச்சர ஆசிரியர்’ என்ற என் பதவிக்காலம் தொடர்ச்சியாக அடுத்த 35 நாட்களுக்கு (தொடர்ச்சியாக அடுத்த ஐந்து வாரங்களுக்கு) நீடிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

    தொடர்ந்து அனைத்துப் பதிவர்களும் வலைச்சரப்பக்கம் தினமும் வருகை தந்து, தங்களின் மேலான கருத்துக்களைப் பின்னூட்டங்களாக பதிவுசெய்து, ஊக்கமும், உற்சாகம் அளிக்க வேண்டுமாய் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


     





    டும் டும் .... டும் டும் .... 


    டும் டும் .... டும் டும் .....





    இந்தப்பதிவினில் ஓர் மிகச்சுலபான புதிய போட்டிக்கான 


    அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


    போட்டிக்கான இறுதி நாள்: 31.12.2015


    இப்போதே ஆர்வத்துடன் கலந்துகொண்டு முயற்சித்தால்

    வெற்றிபெறுவது மிகவும் எளிதாகும். 

    துள்ளி வாருங்கள் 
    புள்ளி மான்களாக ! 




     




    அள்ளிச்செல்லுங்கள் 
    பரிசுத் தொகையினை!!





    மீண்டும் நாளை சந்திப்போம் !



    என்றும் அன்புடன் தங்கள்
     
    [வை. கோபாலகிருஷ்ணன்]

     

    வலைச்சர வெளியீடு:


    வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள்

    Secured Tamilmanam Votes: 17

    Total No. of Comments :145 +

    7 கருத்துகள்:

    1. மயக்கும் அழகிய கைவண்ணம் கண்டேன் -இவை
      மனத்தில் உறையும் பொன் வண்ணம் என்பேன் !
      இனிக்கும் உன்றன் ஆக்கங்கள் தேனே !
      இதை எடுத்துச் சுவைப்பேன் என்றென்றும் நானே !
      மங்கோ ஜூஸ் பிளீஸ்.. தாங்கோ ஐயா ?..தாங்கோ ?..:)

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. அம்பாளடியாள் June 16, 2015 at 6:07 PM

        வாங்கோ, வணக்கம்.

        //மயக்கும் அழகிய கைவண்ணம் கண்டேன் -இவை
        மனத்தில் உறையும் பொன் வண்ணம் என்பேன் !
        இனிக்கும் உன்றன் ஆக்கங்கள் தேனே !
        இதை எடுத்துச் சுவைப்பேன் என்றென்றும் நானே ! //

        ஆஹா, கவிதை நடையில் அம்பாளின் அருட் பிரஸாதமான தேனினும் இனிய பாராட்டினைக் கண்டு வியந்து மனம் மகிழ்ந்து போனேன். :)))))

        //மேங்கோ ஜூஸ் பிளீஸ்.. தாங்கோ ஐயா ?..தாங்கோ ?..:) //

        தந்தேன். தந்தேன். மானசீகமாக ஓர் அண்டா நிறையத் தந்தேன் என் அன்புக்குரிய அம்பாளுக்கு அபிஷேகமாக ! :)

        இதையெல்லாம் உத்தேசித்து நான் மேலே Total No. of Comments :145 + எனப்போட்டுள்ளது நன்மையாகப் போய் விட்டதில் எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

        மிக்க நன்றீங்க !

        அன்புடன் கோபு

        நீக்கு
    2. தங்களின் சாதனைகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை ஐயா !கடுமையான உழைப்பும் ஊக்கமும் திடமான சிந்தனையும் கொண்ட மகத்தான மனிதர் தங்களை இவ்வுலமே வியந்து பாராட்டும் காலம் விரைவில் கிட்டும் வாழ்த்துக்கள்! .கொடுக்கப்பட்ட இணைப்புகளிற்குச் சென்றுவிட்டு மீண்டும் வருவேன் விரைவில் .நன்றி !

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. அம்பாளடியாள் June 16, 2015 at 6:32 PM

        வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

        //தங்களின் சாதனைகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை ஐயா ! கடுமையான உழைப்பும் ஊக்கமும் திடமான சிந்தனையும் கொண்ட மகத்தான மனிதர். தங்களை இவ்வுலமே வியந்து பாராட்டும் காலம் விரைவில் கிட்டும் வாழ்த்துக்கள்!.//

        நான் என்றும் மிக மிகச் சாதாரணமானவன் மட்டுமே. இருப்பினும் தங்களின் பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளம்மா.

        //கொடுக்கப்பட்ட இணைப்புகளிற்குச் சென்றுவிட்டு மீண்டும் வருவேன் விரைவில். நன்றி !//

        மிகவும் சந்தோஷம். தங்களின் உடல்நிலையை தயவுசெய்து நன்கு கவனித்துக்கொண்டு, தங்கள் விருப்பப்படி செய்யவும்.

        அன்புடன் கோபு

        நீக்கு
    3. முதல் திருநாளில் முத்தென ஒளிரும் தங்கள் சாதனைகளின் அணிவகுப்புகள் சிறப்பாகத்தொகுக்கப்பட்டுள்ளன.. வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. இராஜராஜேஸ்வரி October 22, 2015 at 10:27 AM

        வாங்கோ, வணக்கம்.

        //முதல் திருநாளில் முத்தென ஒளிரும் தங்கள் சாதனைகளின் அணிவகுப்புகள் சிறப்பாகத்தொகுக்கப்பட்டுள்ளன.. வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..//

        தங்களின் அன்பான வருகைக்கும், என் சாதனை அணிவகுப்புகள் முத்தென ஒளிர்வதாகவும் எடுத்துக்கூறி, பாராட்டி வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

        நீண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அன்புடனான, அன்றாட தொடர் வருகையே, மனதளவில் துவண்டு போயுள்ள எனக்கு, தனியானதோர் புது உற்சாகம் அளித்து, என் உடம்பில் புது ரத்தம் பாய்ந்துள்ளது போன்ற உணர்வினை ஏற்படுத்தி, என்னை மிகவும் மகிழ்விப்பதாக உள்ளது.

        மிக்க மகிழ்ச்சி, மேடம். :)

        நீக்கு
    4. எப்படி இருந்த நால் இப்படி ஆகிட்டேன்னு மனிதனைப் போல் திருச்சி நகரமும் சொல்லுமோ.

      // முதல்நாள் பயந்துகொண்டே பள்ளிக்குச்செல்லும் சிறுவனாய்
      ’வலைச்சர ஆசிரியர்’ என்ற பெயரில்
      உங்கள் முன் இன்று நான் ’ஓர் பொடியனாய்’ நிற்கின்றேன்.//

      இத நாங்க ஒத்துக்கணும்?

      அதெல்லாம் முடியாது.

      பழுத்த அனுபவசாலியே இப்படி சொன்னா எங்கள மாதிரி கத்துக் குட்டி எல்லாம் என்ன சொல்லறது?

      பதிலளிநீக்கு