என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

ஆசை


கலாவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவள் தன் மாடி வீட்டு ஜன்னல் பக்கம் நிற்கும் போதெல்லாம், அவனும் எதிர் வீட்டு மாடி ஜன்னலில் வந்து நின்று விடுகிறான். வேறு வேலையே எதுவும் அவனுக்கு கிடையாது போலிருக்கு.

அவன் சற்று கூடுதல் அழகாகவே தோன்றுகிறான். அதற்காக அன்றொரு நாள் இவளைப் பார்த்து பழிப்பது போல முகத்தை வைத்துக் கொண்டதை மட்டும், இவளால், ஜீரணிக்கவே முடியவில்லை.

முன்பெல்லாம் சிலசமயம் இவள், அவனைப் பார்க்கும் போதெல்லாம், அதைத் தவிர்ப்பது போல குனிந்து கொள்வான். அல்லது முகத்தைத் திருப்பிக்கொண்டு, முதுகுப் புறத்தைக் காட்டி நிற்பான். இப்போது நாளுக்கு நாள் அவன் நடந்து கொள்ளும் முறையில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதை, கலாவும் உணராமல் இல்லை.

நேருக்கு நேர் இருவர் கண்களும் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் ஒரு மாதிரி சிரிப்பதும், கையை ஆட்டுவதும், உன்னைக் கொன்று விடுவேன் என்பது போல ஒரு விரலை மட்டும் உயர்த்திக் காட்டுவதும், வேண்டுமென்றே அடிக்கடி தன் மேல் சட்டையை அவிழ்த்துப் போட்டு விட்டு பெரிய பயில்வான் போல, தன் உடலழகின் கவர்ச்சியைக் கூச்சமில்லாமல் காட்டுவதும், சில சமயங்களில் கலாவின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக இருந்து தொல்லை தந்து வந்தன.

ஜன்னல் பக்கம் மீண்டும் மீண்டும் போய் அவன் அங்கு இருக்கிறானா எனப் பார்க்கும் ஆவலையும் ஏற்படுத்தி வந்தது, கலாவுக்கு.

பருவ மங்கையான அவளைச் சொல்லியும் குற்றமில்லை. எல்லாம் வயதுக் கோளாறு படுத்தும் பாடு தான். அவள் வயதுப் பெண்களுக்கெல்லாம் திரும்ணமாகி, கையில் ஒன்றும், வயிற்றில் ஒன்றுமாக குழந்தைகள் இருக்கும் போது, இவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகாததால் ஒரு வித ஏக்கம் வருவதும் இயல்பு தானே.

சென்ற வாரம் அவன் எங்கோ ஊருக்குச் சென்ற போது, அவனைப் பார்க்காத ஏக்கத்தில் இரவெல்லாம் தூக்கமின்றி தவித்தவள் தான், இந்தக் கலா.

ஆனால் சற்று நேரம் முன்பு அவன் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கச் செயல் தான். அவன் அவ்வாறு செய்திருக்கக்கூடாது தான். காதல் கடிதம் எழுதி, ஒரு மாதிரியாக மடித்து, அம்பு போலாக்கி விடுவார்களே, அது போல அவனும் ஏதோ ஒன்றை இவள் மீது படுவது போல வீசி விட்டான். நல்ல வேளையாக அது ஜன்னல் கம்பிகளில் பட்டு, வீட்டுக்கு வெளிப் புறம் கீழே எங்கோ பறந்து விட்டது.

அவன் வீட்டுக்கே நேரில் சென்று, அவனை இன்று உண்டு இல்லை என்று செய்து விட வேண்டும் என்று கோபமாக மாடிப் படிகளில் இறங்கினாள், கலா.

அவன் வீட்டுக் கதவு திறந்தே இருந்தது. தன் வீட்டுக்குள்ளேயே வந்து விட்ட இவளைப் பார்த்ததும் அப்படியே ஓடி வந்து, எதுவும் பேச விடாமல், கட்டிப் பிடித்து விட்டான், அந்த ராஸ்கல்.

சற்றும் எதிர்பாராத, திடீரென்ற அவனின் இந்தச் செயலால், உடலில் ஒரு வித மின்சாரம் பாய்ந்தது போன்ற, இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப் போனாள், கலா.

அவன் பிடியில் கட்டுண்டு மயங்கிய கலாவும், அவன் மீது கோபப்படாமல், அவனை அப்படியே இறுக்கக் கட்டிப் பிடித்து முத்த மழை பொழிய ஆரம்பித்து விட்டாள்.

..............

. ............. ..............

. .............. .............. . ................

. .............. .............. . ................ .................


கொழு கொழு என்று இருக்கும் இரண்டு வயதே ஆன அழகிய குழந்தை என்றால், யாருக்குமே ஒரு ஆசை தானே !


33 கருத்துகள்:

 1. இதுதான் என் டாஷ்போர்டில் இருந்து ஓப்பன் ஆகாத பதிவு.
  அப்பாடி!இன்று படித்து விட்டேன்.
  முடிவை முதலிலேயே ஊகித்து விட்டேன் என்றாலும்
  எழுத்து நடை அருமை.
  உங்களின் தொடர்கதைகள் அடுத்த பகுதி எப்பொழுது என்ற ஆர்வம்
  தூண்டுபவை எனறால்,குட்டி குட்டிக் கதைகள்
  அனைத்துமே சுவாரசியம் நிறைந்தவை அல்லவா?

  பதிலளிநீக்கு
 2. அட!என்னோடது முதல் கமென்ட்!

  பதிலளிநீக்கு
 3. புதூ டெம்ப்ளேட்டு-புதூ தீம்னு கலக்கறீக்க கோபு சார்.

  ஆனாலும் மேல்சட்டை இல்லாமல் பெரிய பயில்வான் மாதிரின்னதும் ராக்கெட் விட்டதும் கதையோட க்ளைமாக்ஸ்ஸுக்காக ரொம்பவே பில்டப் பண்ணிட்ட ஒரு குறை.

  பதிலளிநீக்கு
 4. நல்ல சுவாரசியமாய் இருந்தது சார்.

  பதிலளிநீக்கு
 5. ஹஹாஹ் கடைசியில இபப்டி சொல்லிபுட்டீங்களே

  பதிலளிநீக்கு
 6. திருமதி ராஜி அவர்களுக்கு,

  //அட!என்னோடது முதல் கமென்ட்!//

  முதல் கமெண்ட் மட்டுமல்ல,
  எனக்கு அது முத்தானதும் கூட.

  //எழுத்து நடை அருமை.//

  தாங்கள் சொன்னால் சரி. பாராட்டுக்கு நன்றி.

  //உங்களின் தொடர்கதைகள் அடுத்த பகுதி எப்பொழுது என்ற ஆர்வம் தூண்டுபவை எனறால்,குட்டி குட்டிக் கதைகள் அனைத்துமே சுவாரசியம் நிறைந்தவை அல்லவா?//

  அப்படியா? உண்மையாகவா? என் எழுத்துக்களை மெச்சவும் இந்த உலகில் ஒருவர், ஆஹா...... மனம் ஜில்லிட்டுப் போகிறது.

  நன்றி, நன்றி, நன்றி.

  பதிலளிநீக்கு
 7. சுந்தர்ஜி said...
  //புதூ டெம்ப்ளேட்டு-புதூ தீம்னு கலக்கறீக்க கோபு சார்.//
  புதூ டெம்ப்ளேட்டு வெளியூரிலிருந்து வந்து போன என் மகனின் கைங்கர்யம்.

  இந்தப் ‘புதூ தீம்’ ஏதோ எழுதி விட்டேனே தவிர, கதை ஒரு மாதிரியாகப் போகிறதே; வரவேற்பு எப்படியிருக்குமோ என்று ஒரே கவலை எனக்கு.

  வெளியிட பயந்து கொண்டே, நெடு நாட்களாக, ஊறப் போட்டு விட்டேன். பிறகு ஏதோ வேண்டா வெறுப்பாகத் தான் பதிவு செய்தேன்.

  //ஆனாலும் மேல்சட்டை இல்லாமல் பெரிய பயில்வான் மாதிரின்னதும் ராக்கெட் விட்டதும் கதையோட க்ளைமாக்ஸ்ஸுக்காக ரொம்பவே பில்டப் பண்ணிட்ட ஒரு குறை.//

  குறையைச் சுட்டிக் காட்டியதற்கு மிகவும் நன்றி.

  பில்டப் செய்தது ரொம்பவும் ஓவர் என்று நானே நினைத்தது தான்.

  இனி இதுபோல இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன்.

  இத்தகைய குறைகளை அவ்வப்போது தாங்கள் சுட்டிக் காட்டினால் தான், நான் என்னை மேலும் சிறப்பாக செதுக்கிக் கொள்ள ஏதுவாகும்.

  எனவே, தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 8. கோவை2தில்லி said...
  //நல்ல சுவாரசியமாய் இருந்தது சார்.//

  படிக்கும் தங்களுக்கு சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பது தான் என் குறிக்கோளும். தங்கள் வருகை + பாராட்டுக்கு மிகவும் சந்தோஷம். நன்றி.

  பதிலளிநீக்கு
 9. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  //அட..என்ன இப்படி ஏமாத்திட்டீங்க?//

  எல் கே said...
  //ஹஹாஹ் கடைசியில இபப்டி சொல்லிபுட்டீங்களே//

  நண்பர்களே! தங்கள் இருவரின் வருகைக்கும் ந்ன்றி

  ஏதோ இந்தக் குட்டிக்கதையில் ஒரு கிக் இருக்கட்டுமே என்று ஒரு சின்னச் சின்ன, ஆசை. அம்புட்டுதான்.

  பதிலளிநீக்கு
 10. "வாய் விட்டுச் சிரித்தால்" டாஷ் போர்டில் டிஸ்ப்ளே ஆறது
  ஆனா ஓப்பன் ஆக மாட்டேங்குதே சார்.
  என்ன பிரச்சனைனு புரியலையே

  பதிலளிநீக்கு
 11. ம்….. குழந்தைகள் மேல் எப்போதுமே மோகம் அதிகம்தான் நமக்கு. நல்ல கதை.

  பதிலளிநீக்கு
 12. raji said...//"வாய் விட்டுச் சிரித்தால்" டாஷ் போர்டில் டிஸ்ப்ளே ஆறது. ஆனா ஓப்பன் ஆக மாட்டேங்குதே சார். என்ன பிரச்சனைனு புரியலையே//

  4.2.2011 அன்று இரவு முழுவதும் சுத்தமாக எனக்கென்னவோ தூக்கமே வரவில்லை. வாய் விட்டு சிரித்தால் .... கதையை எழுதி மாத்தி மாத்தி திருத்திக் (edit) கொண்டிருந்தேன். இதற்கிடையில் நீங்களும் என்னைப் போலவே தூங்காமல் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் உங்களுக்கு அது சற்று நேரம் ஓபன் ஆகாமல் இருந்திருக்கும். நள்ளிரவு சுமார் இரண்டரை மணிக்கு அதை நான் வெளியிட்ட அடுத்த 5 நிமிஷங்களில் உங்களின் கமெண்ட்ஸ் கிடைக்கப்பெற்று ஆச்சர்யம் அடைந்தேன். நீங்கள் படித்து கமெண்ட்ஸ் எழுதிய பிறகும் கூட மீண்டும் எடிட் செய்து அந்தக் கதையில் ஒரு பாரா சேர்த்துள்ளேன். பெரும்பாலும் நள்ளிரவு வெகு நேரம் தூக்கம் வராமல் விழித்திருந்து, பிறகு ஒரு வழியாகத் தூங்கி, விழிக்கும்போது அதிகாலை 10 அல்லது 11 மணி ஆகிவிடுகிறது.

  பதிலளிநீக்கு
 13. வெங்கட் நாகராஜ் said...//ம்….. குழந்தைகள் மேல் எப்போதுமே மோகம் அதிகம்தான் நமக்கு. நல்ல கதை.//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள், திரு. வெங்கட்.

  பதிலளிநீக்கு
 14. வைகோ சார், க‌தை கொஞ்ச‌ம் கடிதான், செய‌ற்கையாய், உங்க‌ள் ஸ்டைலில் இல்லைதான்.
  நெருங்கிவிட்டால், குறைக‌ள் ம‌ட்டும் தான் தெரியுமோ? நோ ஹார்ட் பீலிங்க்ஸ், பிளீஸ்.

  பதிலளிநீக்கு
 15. vasan said...
  //வைகோ சார், க‌தை கொஞ்ச‌ம் கடிதான், செய‌ற்கையாய், உங்க‌ள் ஸ்டைலில் இல்லைதான்.
  நெருங்கிவிட்டால், குறைக‌ள் ம‌ட்டும் தான் தெரியுமோ? நோ ஹார்ட் பீலிங்க்ஸ், பிளீஸ்.//

  தங்கள் வருகைக்கும், மேலான கருத்துக்களுக்கும், விமரிசனத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  நிறையை மட்டும் கூறுபவர்கள் நண்பர்கள், நிறை குறை இரண்டையும் சுட்டிக்காட்டுபவர்கள் தான் நல்ல வழிகாட்டிகள் - தாங்கள் சொல்லியபடி அவர்களே ஏற்கனவே நெருங்கிய அல்லது நெருங்கி வரும் நண்பர்களும் / நலம் விரும்பிகளும் கூட.

  நான் ஏற்கனவே திரு. சுந்தர்ஜி க்கு சொல்லியுள்ளது போல, இது அவ்வளவாகத் தரமானதாக இருப்பதாக எனக்கும் தோன்றாததால், வெளியிடவே மிகவும் தயங்கினேன்.

  நோ ஹார்ட் ஃபீலிங்ஸ் அட் ஆல். தங்கள் கருத்து என் எழுத்துக்களை மேலும் செம்மைப் படுத்தவே உதவும். தங்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 16. எல்லாம் வயதுக் கோளாறு படுத்தும் பாடு தான்.

  பதிலளிநீக்கு
 17. கொழு கொழு என்று இருக்கும் இரண்டு வயதே ஆன அழகிய குழந்தை என்றால், யாருக்குமே ஒரு ஆசை தானே !


  குழந்தைத்தனமாய் ரசிக்கவைத்தது !

  பதிலளிநீக்கு
 18. இராஜராஜேஸ்வரி said...
  எல்லாம் வயதுக் கோளாறு படுத்தும் பாடு தான்./

  ஆமாம் ஆமாம். சரியான இடத்தைச் சுட்டிக்காட்டி விட்டீர்கள்.

  மகிழ்ச்சி. நன்றி.

  பதிலளிநீக்கு
 19. இராஜராஜேஸ்வரி said...
  கொழு கொழு என்று இருக்கும் இரண்டு வயதே ஆன அழகிய குழந்தை என்றால், யாருக்குமே ஒரு ஆசை தானே !


  //குழந்தைத்தனமாய்
  ரசிக்கவைத்தது !//

  குழந்தைக்கும் சந்தோஷமே!

  நன்றி.

  பதிலளிநீக்கு
 20. கொழு கொழு என்று இருக்கும் இரண்டு வயதே ஆன அழகிய குழந்தை என்றால், யாருக்குமே ஒரு ஆசை தானே //

  ஆஹா! என்ன மாதிரி திருப்பம்.
  நல்ல நகைச்சுவை கதை.

  அந்த குமரிக்கு இப்போது திருமணம் ஆகி கொழு கொழு குழந்தை பிறந்து இருக்கும் இல்லையா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு February 5, 2013 at 5:18 PM

   வாங்கோ மேடம், வருகைக்கு நன்றி.

   *****கொழு கொழு என்று இருக்கும் இரண்டு வயதே ஆன அழகிய குழந்தை என்றால், யாருக்குமே ஒரு ஆசை தானே*****

   //ஆஹா! என்ன மாதிரி திருப்பம். நல்ல நகைச்சுவை கதை.//

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   //அந்த குமரிக்கு இப்போது திருமணம் ஆகி கொழு கொழு குழந்தை பிறந்து இருக்கும் இல்லையா!//

   நிச்சயமாக! கதையில் வரும் கற்பனைக் கதாபாத்திரமே ஆகினும் அவளுக்கும் ஓர் கல்யாணம் ஆகி குழந்தையும் பிறக்க வேண்டும் என்று நினைத்த தங்களின் தங்கமான மனஸுக்கு என் நன்றியோ நன்றிகள்.

   நீக்கு
 21. படு திகிலான சஸ்பென்ஸுக்கு பெரிய பீடிகைதான். இருந்தாலும் ஒரு கன்னிப்பெண்ணின் மனப் போராட்டங்களை ஆழமாக வெளிக் கொணர்ந்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 22. பெரிய சஸ்பென்ஸ் மன்னரு.

  ஆனா சத்தியமா முடிவை ஊகிக்க முடியவே இல்லை.

  அதுதானே உங்கள் வெற்றி.

  வாழ்த்துக்கள் கோபு அண்ணா

  பதிலளிநீக்கு
 23. ஆரம்பத்துல நான்கூட வேர மாதிரி நினைச்சுட்டேன். கடைசி பகுதி சிரிக்க வச்சுடுத்து

  பதிலளிநீக்கு
 24. இது போன்ற கதைகள் முன்பெல்லாம் தினமலர்- கதைமலரில் எதிர்பாராமுடிவு கதைகள் என்று வெளியாகும். அசத்தலாக எழுதி உள்ளீர்கள். இதே மாதிரி நானும் சில பதிவுகள் எழுதி உள்ளேன்!

  பதிலளிநீக்கு
 25. குட்டிக்கண்ணனின் லீலைகளில் இதுவும் ஒன்றோ? பருவ வயதுப்பெண்... ஆணழகன் போல் அவன்.. என்றெல்லாம் எழுத்தில் ரசத்தைக் கூட்டி என்னென்னவோ எண்ணச் செய்துவிட்டு இறுதியில் திருப்பம் வைத்திருப்பது நல்ல சிறுகதை உத்தி. பாராட்டுகள் கோபு சார்.

  பதிலளிநீக்கு
 26. ஓ ஓ படிச்சுபோட்டே போகைல வேற மாதிரி நெனப்பு வந்திச்சு. கடசில படிச்சி சிரிப்பாணி பொத்துகிச்சி.

  பதிலளிநீக்கு
 27. ஆரம்ப எழுத்துகள் கதயை வேரமாதிரி நினைக்க வைத்தது. கடைசியில் கொழு கொழு குட்டி பாப்பா வந்து சிரிக்க வைத்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 28. ஆஹா...ஆஹா...வாத்யாரே மாத்தி யோசிப்பாங்க...ஆனா இப்புடி மாத்தி மாத்தி யோசிக்க உங்களாலதான் முடியும்...அருமை...

  பதிலளிநீக்கு
 29. இந்த கதைக்கு எப்படி பின்னூட்டம் போட்டால் சரியா இருக்கும்??????? முதலில் கலா என்னும் இளவயதுப் பெண்ணைப்பற்றி சொல்லிவிட்டு உடனே எதிர் வீட்டு பையனைப்பற்றி பூடகமாக சொல்லிச்சென்ற விதம் சற்று உறுத்தல்தான். ஆனாலும் கடைசி வரை கோர்வையாக கதைய சொல்லிச்சென்றது நன்றாகத்தான் இருந்தது. இருவரும் கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்து கொள்ளும்போதே இரண்டு வயது கொழு கொழு குழந்தையை யூகம் செய்ய முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ’ஆசை’பட்டு இவ்விடம் வந்துள்ள தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், யூகம் செய்து பின்னூட்டமிட்டு மகிழ்வித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு