என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 5 பிப்ரவரி, 2011

வாய் விட்டுச் சிரித்தால் ... ... ... ...

கோபி இயல்பாகவே ஒரு முன்கோபி. சாதாரணமாகவே அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். எதிலேயுமே ஒரு சலிப்பு. முகச்சவரம் செய்யும் போது வெட்டுப்பட்டது போல ஒரு எரிச்சல், சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் அனாவஸ்யமாக ஒரு கோபம்,கொதிப்பு,கடுப்பு முதலியன பிறவியிலேயே இலவச இணைப்புகளாகப் பெற்றவனோ என்று பிறருக்குத் தோன்றுமாறு அவ்வப்போது நடந்து கொள்பவன். அவன் சிரித்து இதுவரை யாருமே பார்த்தது கிடையாது.


கோபியின் போதாத காலமோ என்னவோ, அன்று அவன் அவசரமாக தெருவில் நடந்து போகும் போது, ஒரு கூர்மையான கல் ஒன்றில் கால் இடறி, வலது காலின் கட்டை விரல் நகத்தையே பெயர்த்துக்கொண்டான்.ஒரே ரத்தமாகக் கொட்ட ஆரம்பித்து விட்டது.



அருகிலேயே ஒரு தனியார் மருத்துவ மனை இருந்தது அவன் கண்ணில் பட்டது. உடனே உள்ளே நுழைந்து விட்டான். டாக்டரைப் பார்க்க வேண்டி சுமார் இருபது நபர்களுக்கும் மேல், டோக்கன் பெற்று, வரிசையில் காத்திருந்தனர்.



வெள்ளைப்புறா போன்ற நர்ஸ் ஒருவள், நம் கோபியை நெருங்கினாள்.



கோபி அவளிடம் தன் கால் நகத்தைக் காட்டி, ”அவசரமாக டாக்டரைப் பார்க்க வேண்டும்” என்றான்.



அவள் அவனை அமைதியாக ஐந்து நிமிடங்கள் உட்காரச் சொல்லி, சட்டையையும் பனியனையும் அவிழ்க்கச் சொல்லி விட்டு இங்குமங்கும் ஒரே பிஸியாக ஓடலானாள்.



கோபிக்கு அந்த வெள்ளைப்புறா சொல்லிப்போனது ஒன்றும் விளங்கவில்லை. வரிசையில் அமர்ந்திருந்த நோயாளிகளில், இருபதாவதாக அவன் அருகில் அமர்ந்திருந்த நபர், அந்த நர்ஸ் சொன்னது இவன் காதில் விழவில்லையோ என்ற நல்ல எண்ணத்தில், ”தம்பீ .............. சீக்கரமாக, சட்டையையும், பனியனையும் அவிழ்த்து இங்குள்ள ஹாங்கரில் மாட்டி விட்டு அமைதியாக உட்காருங்க, இல்லாவிட்டால் அந்த நர்ஸ் அம்மா வந்து சத்தம் போடும்” என்றார்.



இதைக்கேட்ட கோபிக்கு கோபம் வந்து விட்டது. “யோவ், என் கால் கட்டை விரலில் அடிபட்டு நகம் பெயர்ந்துள்ளது; அதற்கான சிகிச்சை பெற வந்துள்ளேன்; நான் எதற்கு சட்டையையும், பனியனையும் அவிழ்க்கணும்” என்றான்.



அவனை விசித்திரமாக ஒரு முறை பார்த்த அந்த இருபதாவது ஆசாமி, தனக்குள் சிரித்துக்கொண்டே, “தம்பி நீ இந்த மருத்துவ மனைக்கு புதிதாக இன்று தான் வந்திருக்கிறீங்கன்னு நினைக்கிறேன்; நான் சொல்வது சரி தானே” என்று கேட்டார்.



“ஆமாம்ய்யா .... அதற்கென்ன இப்போ, தினமுமா நகத்தை பெயர்த்துண்டு இங்கு வர முடியும்?” எரிச்சலுடன் கேட்டான், கோபி.



“தம்பி ..... நீங்க சிறுவயசுப் பைய்யன். வேகப்படக் கூடாது. விவேகமாக இருக்கணும். வாழ்க்கையிலே ரொம்ப பொறுமை வேண்டும். அவசரமோ ஆத்திரமோ படுவதால் எதுவும், நாம் நினைப்பது போல உடனடியாக நடந்து விடாது, என் அனுபவத்தில் சொல்கிறேன்” என்று உபதேசிக்க ஆரம்பித்தார்.



கோபி தன் கைக்குட்டையை அங்கிருந்த குழாய்த் தண்ணீரில் நனைத்து, வலியைப் பொறுத்துக் கொண்டு, தன் வலது கால் கட்டைவிரலைச் சுற்றி இறுக்க கட்டுப் போட்டபடி, அருகில் இருந்த நபரை ஒரு முறைமுறைத்துப் பார்ப்பதற்குள், இரண்டு மூன்று வெண் புறாக்கள் கோபியை நெருங்கி இருந்தன.



“சார், சட்டையையும், பனியனையும் அவிழ்த்து மாட்டச் சொல்லி விட்டுப் போனேன் அல்லவா! என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க இவ்வளவு நேரமும்?” என்று சொல்லியபடி ஒருவள், கோபியின் சட்டைப் பொத்தான்களை அவிழ்த்து சட்டையை உருவிப் போட்டாள். மற்றவள் ”பனியனையும் சீக்கரம் கழட்டுங்க சார்” என்று சொல்லி அதை கழட்டி எறிய உதவியும் புரிய ஆரம்பித்தாள்.



பக்கத்து இருபதாம் நம்பர்காரர் கோபியைப் பார்த்து, இப்போது ஒரு விஷமப் புன்னகை பூத்தார். கோபி வாயைத் திறந்து ஏதோ சொல்வதற்குள், ஒருத்தி ஜுரமானியை, கோபியின் வாயில் திணித்து, ”வாயை இறுக்கி மூடுங்க சார்” என்று உத்தரவு போட்டு விட்டாள். ஒருத்தி ஸ்டெதஸ்கோப்பை வைத்து ஹார்ட் பீட் எப்படியுள்ளது என்று கவனிக்க ஆரம்பித்தாள். அதற்குள் மற்றொருவள், கோபியை கையை நீட்டச் சொல்லி ரத்தக் கொதிப்பு உள்ளதா என்று பம்ப் அடித்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தாள்.



ஒரு வெள்ளைத்தாளில் மூவரும் ஏதேதோ குறிக்க ஆரம்பித்தனர். டோக்கன் நம்பர் 21 என்று எழுதிய அட்டை கோபியிடம் கொடுக்கப்பட்டது.



”என் கால் கட்டை விரலில் நகம் பெயர்ந்து ரத்தம் கொட்டுகிறது. நான் உடனடியாக டாக்டரைப் பார்க்கணும்” என்று ஏதேதோ கோபி புலம்பியும், எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், ”அமைதியாக வரிசையில் அமர்ந்து நாங்கள் கூப்பிடும் போது தான் வரணும்” என்று சொல்லி விட்டு, அடுத்தடுத்து வரும் நோயாளிகளின் சட்டை பனியனை அவிழ்க்கும் வேலையை கவனிக்கச் சென்று கொண்டிருந்தனர், அந்த வெண் புறாக்கள் மூவரும்.



கோபியின் கோபம் கட்டுக் கடங்காமல் போய் விட்டது. தன்னைப் பார்த்து சற்று முன் விஷமப் புன்னகை புரிந்த நபரைப் பார்த்து “என்னய்யா, ஆஸ்பத்தரி இது ... கால் நகம் பெயர்ந்து வந்தவனுக்கு, ஏதேதோ தேவையில்லாத டெஸ்டுகளெல்லாம் செய்து, தொல்லைப் படுத்துகிறார்கள்” என்று எரிந்து விழுந்தான்.



“தம்பி ..... இப்போதும் சொல்கிறேன். நீங்க சிறு வயசுப் பைய்யன். கோபப் படக்கூடாது. வந்த பொது இடத்திலேயாவது பொறுமையாக இருக்கப் பழகிக்கணும். ஆஸ்பத்தரி என்றால் ஒரு சில சட்டதிட்டங்கள், வழி முறைகள் அவர்கள் வகுத்து வைத்திருப்பார்கள். அதற்கு நாம் கட்டுப்பட்டு, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தரணும். பொது அமைதிக்கு நம்மால் பங்கம் ஏற்படக்கூடாது” என்று ஏதேதோ அறிவுரைகள் கூற ஆரம்பித்ததும், கோபிக்கு தன் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் போய்விட்டது.



க‌ஷ்டப்பட்டு எழுந்து கொண்டு, தன் பனியன் சட்டையை உடுத்திக்கொண்ட பிறகு, இருபதாம் நம்பரில் தன் அருகே அமர்ந்திருந்த அந்த நபரின் சட்டையைக் கோத்து, வெளியே இழுத்துப்போய் நாலு சாத்து சாத்தலாமா என்றும் தோன்றியது, கோபிக்கு.



அல்சேஷன் நாய் போல, பற்களைக் காட்டி அவரைக் கடித்து விடுவது போல முகத்தை மாற்றிக்கொண்டிருந்தான், கோபி.



“தம்பி ..... அமைதி, அமைதி ..... எதற்கும் டென்ஷனே ஆகாதீங்க .... பொறுமையாய் இருங்க ...... அது தான் நம் உடம்புக்கு நல்லது” என்றார் அந்த 20 ஆம் நம்பர்.



“யோவ் ...... நீர் இனிமேல் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசினாலும், நான் மனுஷனாக இருக்க மாட்டேன். எனக்கு வரும் ஆத்திரத்தில் உம்மைக் கடித்துத் துப்பி விடுவேன்” என்று பெரியதாகக் கத்தினான், நம் கோபி.



அதற்கும் ஒரு புன்னகையை உதிர்த்த அந்த இருபதாம் நம்பர் சொன்னார் : “தம்பி ..... இன்று முதன் முதலாக இந்த ஆஸ்பத்தரிக்கு வந்து ஒரு பத்து நிமிஷம் ஆவதற்குள், உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதே; நான் இங்கு எதற்கு வந்திருக்கிறேன் என்று நீங்க கேட்டுத் தெரிந்து கொண்டீர்கள் என்றால் தான், என் நிலமையும் உங்களுக்குப் புரிபடும்; இந்த ஆஸ்பத்திரியின் சட்ட திட்டங்களும் உங்களுக்கு ஓரளவு தெரிந்து விடும், பிறகு என் மீது நீங்க கோபப்பட்டதும் தவறு தான் என்று ஒருவேளை நீங்களே கூட உணர்ந்தாலும் உணர்வீர்கள்” என்று மிகவும் பொறுமையாகச் சொன்னார்.



“நீங்க எதுக்கு இங்கே உட்கார்ந்து கொண்டு, என் உயிரை வாங்குகிறீர்ன்னு, சீக்கரமாகச் சொல்லித் தொலையுமய்யா” என்றான் கோபி, தன் ஆத்திரத்தின் உச்சக் கட்டமாக.



“தம்பி ...... நான் இந்தத் தெருவுக்கே கொரியர் தபால்களை பட்டுவாடா செய்யும் ஆளு. தினமும் இந்த டாக்டருக்கு ஒரு நாலு கொரியர் தபாலாவது வந்துண்டே இருக்கும். தினமும் இங்கு தபால் கொண்டு வந்து தருவதும் நான் தான். என்னை இங்குள்ள நர்ஸ்ஸம்மாக்கள் எல்லோருக்குமே நன்றாகவே தெரியும்; இன்று கூட இந்த டாக்டரைப் பார்த்து, தபாலைக் கொடுத்து விட்டு, அவரிடம் கையெழுத்து வாங்கிக்கிட்டுப் போகத்தான் உட்கார்ந்திருக்கிறேன்.



இங்கு வரும் என்னையும் தினமும் சட்டையையும், பனியனையும் அவிழ்க்கச் சொல்லி விடுகிறார்கள், எல்லாவிதமான டெஸ்டுகளும் செய்து பேப்பரில் குறித்து விடுகிறார்கள், பிறகு வரிசை எண் உள்ள டோக்கனைக் கையில் கொடுத்து விடுகிறார்கள். நல்ல வேளையாக இன்று எனக்கு 20 ஆம் நம்பர் டோக்கன் கிடைத்துள்ளது. நேற்றைக்கு எனக்கு கிடைத்த நம்பர் 108.

நானும் இது பற்றி இந்த நர்ஸம்மாக்களிடம் பலமுறைகளும், ஏன் ஒரு நாள் அந்த டாக்டரிடமும் கூட புகார் செய்து பார்த்து விட்டேன். ஒன்னும் பிரயோசனம் இல்லை. டாக்டரை யார், எது சம்பந்தமாகப் பார்க்க வேண்டும் என்றாலும், இங்குள்ள சட்டதிட்டங்கள் அது போலவாம். யாருக்கும் எந்தவிதமான விதிவிலக்கும் கிடையாதாம்.

சரியென்று நானும் பிறகு, தினமும் கொரியர் தபால்களுடன் உள்ளே வரும்போதே என் சட்டை பனியன்களைக் கழட்டியவாறே காத்தாட வந்து அமர்ந்து விட, பழகிக் கொண்டு விட்டேன்.

தினமும் கொரியர் தபால் கொடுக்க வரும் நானே, இவ்வளவு பொறுமையாக இங்கு உட்கார்ந்திருக்கும் போது, கால் விரலில் அடிப்பட்டு, கட்டை விரல் நகமே பெயர்ந்து, ரத்தம் சொட்டச்சொட்ட உடல் உபாதையுள்ள நீ, இப்படி அவசரமும், ஆத்திரமும் படலாமா தம்பி?” என்றார், மிகவும் நிதானமாக.



இதைக் கேட்ட முன்கோபியான நம் கோபி, தன் கால் கட்டை விரல் நகம் பெயர்ந்த வலியையும் சற்று மறந்து, வாழ்க்கையில் முதன் முதலாக வாய் விட்டுச் சிரித்தான்.

‘வாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பார்களே, அது இது தானோ !





52 கருத்துகள்:

  1. அட!வித்தியாசமான கதைதான்
    இப்பொழுதெல்லாம் ஆஸ்பித்திரியில்
    இந்த லட்சணங்கள் நடக்கத்தான் செய்கின்றன.
    எதற்கு என்பதே இல்லாமல் எல்லா டெஸ்ட்களும் எடுக்க சொல்லி விடுகிறார்கள்.
    கதை முதலில் ஓப்பன் ஆகவில்லை.இப்பொழுது படித்தாகி விட்டது

    பதிலளிநீக்கு
  2. நல்ல கதை நல்ல பதிவு.
    சகித்துக்தொலைக்க வேண்டியவைகளைப்
    பார்த்து எரிச்சல் கொள்ளாமல்
    இதுபோல் சிரிக்கப் பழகிக் கொண்டாலே
    பல நோவுகள் சரியாகிப் போகுமோ !
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  3. நானும் வாய் விட்டுச் சிரித்தேன்! நன்றி. கொரியர்காரருக்கு டாக்டர்/டெஸ்ட் ஃபீஸ் கிடையாதா?!!

    பதிலளிநீக்கு
  4. ஹா...ஹா..ஹா...

    நல்ல கிண்டல். ஒரு சின்ன ஜோக்கை விரித்து சிறு - கதையாக்கி விட்டீர்களே...

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமாக இருந்தது.
    ”கொரியர்காரருக்கும் டெஸ்டா” அது என்ன ஆஸ்பத்திரி.
    வாய் விட்டு சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. சில மருத்துவமனையில் நடக்கும் வையிற்றேரிச்சலை இப்படி நகைச்சுவையாக தெரிவித்தமைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  7. அற்புதம் கோபு சார். நான் இன்னும் வாய் வீட்டுச் சிரித்துக்கொண்டிருக்கிறேன். இதோ என் பனியன் சட்டையையும் கழற்றி 455ம் டோக்கன் கொடுத்து எல்லா டெஸ்ட்டும் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் அந்த வெண்புறாக்கள்.

    நிறைய இப்படி எழுதுங்கள்.சபாஷ்.சபாஷ்.

    பதிலளிநீக்கு
  8. வெண் புறாக்கள், இன்றைய மருத்துவமனைகள் தரும் தொல்லை பற்றி நகைச்சுவையாக சொன்னதற்கு வாழ்த்துகள். நல்ல கதை பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பார்த்து, படித்து, ரஸித்து, சிரித்து மகிழ்ந்து, வருகை தந்து, வாழ்த்திய அனைத்து உடன் பிறப்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஏதோ ஒரு ஒன்பது பேரையாவது ஒரு ஒன்பது நொடிப் பொழுதாவது சிரித்து மகிழ வைத்தோம் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே ! அன்புடன் நானும் சிரித்தபடி..........

    பதிலளிநீக்கு
  10. /முகச்சவரம் செய்யும் போது வெட்டுப்பட்டது போல ஒரு எரிச்சல்/
    Your clean shaven face comes to my mind screen.
    Excellent comparison.

    பதிலளிநீக்கு
  11. vasan said...
    /முகச்சவரம் செய்யும் போது வெட்டுப்பட்டது போல ஒரு எரிச்சல்/
    Your clean shaved face comes to my mind screen.
    Excellent comparison.

    Welcome Mr. Vasan for your very rare entry to my blog. My Heartiest thanks for your valuable comments, that too for a specific line of my story.

    பதிலளிநீக்கு
  12. tday i have learnt one word in tamil ,ஜுரமானி thermometer.interesting as well as different story.

    பதிலளிநீக்கு
  13. Thank you, Girija. This is a new story not covered in any one of the 3 books so far released by us.

    பதிலளிநீக்கு
  14. நேற்றே படித்திருந்தால் இன்னும் நிறைய சிரித்திருக்கலாமே.பாதி படிக்கும் போதே சிரிக்கத் தொடங்கி விட்டேன். இன்னும் நிறுத்தவில்லை

    பதிலளிநீக்கு
  15. இதே போல எனக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. கால் விரலில் ஒரு
    சிறிய காயம் பட்டுவிட்டது. அதற்கு ஒரு ஏடிஎஸ் போடுங்கள் என்று சொன்னேன்.
    டாக்டர் கன்சல்டேஷன் செய்தபிறகு தான்
    போடமுடியுமென்று சொல்லி அவர் எனது ப்ள்ட் ப்ளஷர்,எல்லாம் பார்த்தபின்
    ஒரு ரூபா 200 வாங்கிக்கொண்டு தான் போட்டார்.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  16. சிவகுமாரன் said..//நேற்றே படித்திருந்தால் இன்னும் நிறைய சிரித்திருக்கலாமே.பாதி படிக்கும் போதே சிரிக்கத் தொடங்கி விட்டேன்.இன்னும் நிறுத்தவில்லை//

    நல்ல சீரியஸ்ஸாக சிந்தனை செய்து, பிறரையும் சிந்திக்க வைக்கும் அருமையான கவிதைகளை அள்ளித் தருகிற தங்கள் பொன்னான நேரத்தைக் கொஞ்சம் என் வலைப்பக்கமும் திருப்பி, படித்து, படிக்கும் போதே சிரிக்கத் தொடங்கி, இன்னும் சிரிப்பை நிறுத்தவில்லை என்று சொல்லி எனக்கு உற்சாகம் கொடுத்ததற்கு, என் ’இச்’ ஸாரி எச்சலாகி விடும். வழக்கமான நன்றிகள் !

    பதிலளிநீக்கு
  17. sury said...// இதே போல எனக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. கால் விரலில் ஒரு சிறிய காயம் பட்டுவிட்டது. அதற்கு ஒரு ஏடிஎஸ் போடுங்கள் என்று சொன்னேன். டாக்டர் கன்சல்டேஷன் செய்தபிறகு தான் போடமுடியுமென்று சொல்லி அவர் எனது ப்ள்ட் ப்ளஷர்,எல்லாம் பார்த்தபின்
    ஒரு ரூபா 200 வாங்கிக்கொண்டு தான் போட்டார்.சுப்புரத்தினம்.http://vazhvuneri.blogspot.com //

    தங்களின் புதிய வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், சார். சும்மா ஒரு நகைச் சுவைக்காகத் தான் இந்தக்கதை எழுதினேன். அடிக்கடி நேரம் கிடைக்கும் போது வாங்க! அன்புடன்....

    பதிலளிநீக்கு
  18. ஆஹா!!.. செம நகைச்சுவை. இதேமாதிரியான ஒரு அனுபவம் எனக்கும் ஏற்பட்டுச்சு. காய்கறி நறுக்கச்சே லேசா விரல் நகத்துல கொஞ்சம் ஆழமா கத்தி பதிஞ்சு, ரத்தம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு.

    ஐஸ்கட்டிகளை வெச்சு அதைக்குறைச்சுட்டு ஆஸ்பத்திரிக்கு போனா, எலும்புக்கு ஏதாவது சேதாரம் இருக்கான்னு பார்க்கணும்ன்னு தேவையில்லாம வலுக்கட்டாயமா ஒரு எக்ஸ்ரே எடுத்துட்டுதான் விட்டாங்க. இவ்வளவுக்கும் விரல் நுனிப்பகுதியில்தான் காயம் பட்டிருந்தது.எலும்பு பாதிக்க சான்சே இல்லைன்னு சொல்றேன் ஒருத்தரும் கேக்கறாப்ல இல்லை. மெஷின் வாங்குன காசை இப்படி வசூல் பண்றாங்க. என்னத்தைன்னு சொல்றது :-))))

    பதிலளிநீக்கு
  19. அமைதிச்சாரல் said...
    //ஆஹா!!.. செம நகைச்சுவை. இதேமாதிரியான ஒரு அனுபவம் எனக்கும் ஏற்பட்டுச்சு. காய்கறி நறுக்கச்சே லேசா விரல் நகத்துல கொஞ்சம் ஆழமா கத்தி பதிஞ்சு, ரத்தம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு.

    ஐஸ்கட்டிகளை வெச்சு அதைக்குறைச்சுட்டு ஆஸ்பத்திரிக்கு போனா, எலும்புக்கு ஏதாவது சேதாரம் இருக்கான்னு பார்க்கணும்ன்னு தேவையில்லாம வலுக்கட்டாயமா ஒரு எக்ஸ்ரே எடுத்துட்டுதான் விட்டாங்க. இவ்வளவுக்கும் விரல் நுனிப்பகுதியில்தான் காயம் பட்டிருந்தது.எலும்பு பாதிக்க சான்சே இல்லைன்னு சொல்றேன் ஒருத்தரும் கேக்கறாப்ல இல்லை. மெஷின் வாங்குன காசை இப்படி வசூல் பண்றாங்க. என்னத்தைன்னு சொல்றது :-))))//

    தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  20. கோபியின் போதாத காலமோ என்னவோ, அன்று அவன் அவசரமாக தெருவில் நடந்து போகும் போது, ஒரு கூர்மையான கல் ஒன்றில் கால் இடறி, அஞ்சுவந்தாலும் அவசரம் ஆகாது !
    பத்து வந்தாலும் பதட்டம் ஆகாது !
    வாழ்க்கைத்ததுவத்தை உணர்ந்து கொள்வானா கோபி !

    பதிலளிநீக்கு
  21. வாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பார்களே, அது இது தானோ !

    பதிவல்ல இது !
    பாடம் !
    வாழ்க்கைப் பாடம் !!!!!

    பதிலளிநீக்கு
  22. இராஜராஜேஸ்வரி said...
    கோபியின் போதாத காலமோ என்னவோ, அன்று அவன் அவசரமாக தெருவில் நடந்து போகும் போது, ஒரு கூர்மையான கல் ஒன்றில் கால் இடறி,

    //அஞ்சுவந்தாலும் அவசரம் ஆகாது !
    பத்து வந்தாலும் பதட்டம் ஆகாது !
    வாழ்க்கைத்ததுவத்தை உணர்ந்து கொள்வானா கோபி !//

    கோபி உணர்ந்து கொள்வானோ இல்லையோ, நன்றாகவே உணர்ந்து கொண்டுவிட்டான் இந்த உங்களின் கோபு. ;)))))

    பதிலளிநீக்கு
  23. இராஜராஜேஸ்வரி said...
    வாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பார்களே, அது இது தானோ !

    //பதிவல்ல இது !
    பாடம் !
    வாழ்க்கைப் பாடம் !!!!!//

    வாக்தேவியான என் அம்பாளின் இந்தச்சொல் அக்ஷரலட்சம் பெறும்.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  24. நானும் வாய் விட்டுச் சிரித்தேன்.அருமைஒயான நகைச்சுவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி, ஐயா. தங்கள் வருகையும், கருத்துக்களும் இன்று கிடைக்கப்பெற்றதில் நானும் வாய் விட்டுச் சிரித்து மகிழ்ந்தேன், ஐயா. அன்புடன் vgk

      நீக்கு
  25. “தம்பி ...... நான் இந்தத் தெருவுக்கே கொரியர் தபால்களை பட்டுவாடா செய்யும் ஆளு. தினமும் இந்த டாக்டருக்கு ஒரு நாலு கொரியர் தபாலாவது வந்துண்டே இருக்கும். தினமும் இங்கு தபால் கொண்டு வந்து தருவதும் நான் தான். என்னை இங்குள்ள நர்ஸ்ஸம்மாக்கள் எல்லோருக்குமே நன்றாகவே தெரியும்; இன்று கூட இந்த டாக்டரைப் பார்த்து, தபாலைக் கொடுத்து விட்டு, அவரிடம் கையெழுத்து வாங்கிக்கிட்டுப் போகத்தான் உட்கார்ந்திருக்கிறேன்.

    இங்கு வரும் என்னையும் தினமும் சட்டையையும், பனியனையும் அவிழ்க்கச் சொல்லி விடுகிறார்கள், எல்லாவிதமான டெஸ்டுகளும் செய்து பேப்பரில் குறித்து விடுகிறார்கள், பிறகு வரிசை எண் உள்ள டோக்கனைக் கையில் கொடுத்து விடுகிறார்கள். நல்ல வேளையாக இன்று எனக்கு 20 ஆம் நம்பர் டோக்கன் கிடைத்துள்ளது. நேற்றைக்கு எனக்கு கிடைத்த நம்பர் 108.//திரும்ப திரும்ப வாசித்து சிரித்த இடம்.

    சூப்ப்ப்ப்பர் நகைச்சுவைக்கதை அண்ணா.தலைப்புக்கு பொருத்தமா எனக்கிருந்த (இன்று காலை வந்த)தலைவலி நீங்க நம்பித்தான் ஆகனும் போயே போய்விட்டது.இட்ஸ்கான்.
    இப்ப வந்திருக்கும் பயம் என்னவென்றால் "எப்படி நான் மிகுதியா இருக்கு நகைச்சுவை பதிவுகளை படிக்கப்போகிறேனோ... அந்த கோ...பாலாகிருஷ்ணனு...க்கே வெளிச்சம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அம்முலு,

      வாங்கோ, வாங்கோ, வணக்கம் பல. எப்படி இருக்கீங்க?
      நலம் தானே?

      அம்முலு ... நீங்க ரொம்பவும் சிரித்தால் உங்கள் வயிற்றை வலிக்கும் .. பார்த்துக்கோங்க ... ஏனென்றால் என் மற்ற கதைகளையும் நீங்க படிக்கணுமே!

      அது தான் என் கவலை .... ;))))))

      தொடரும்.....

      நீக்கு
    2. VGK to அன்பின் அம்முலு ...

      //சூப்ப்ப்ப்பர் நகைச்சுவைக்கதை அண்ணா.தலைப்புக்கு பொருத்தமா//

      அப்படியா! மிகவும் சந்தோஷமம்மா .... ;)

      //எனக்கிருந்த (இன்று காலை வந்த)தலைவலி நீங்க நம்பித்தான் ஆகனும் போயே போய்விட்டது.இட்ஸ்கான்.//

      நம்புகிறேன் அம்முலு. அம்முலுவை போய் நம்பாமல் நான் எப்படி இருப்பேன்? தலைவலி போச்சா .. வெரி குட். கேட்கவே மிகவும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது. ;)

      //இப்ப வந்திருக்கும் பயம் என்னவென்றால் "எப்படி நான் மிகுதியா இருக்கு நகைச்சுவை பதிவுகளை படிக்கப் போகிறேனோ... அந்த கோ...பாலாகிருஷ்ணனு...க்கே வெளிச்சம்.//

      அடடா, நீங்களும் மிகவும் நகைச்சுவையாகவே எழுத ஆரம்பிச்சுட்டீங்க. எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது. எப்போதும் சந்தோஷமாக செளக்யமாக இருக்கக் கடவது.

      பிரியமுள்ள
      கோபு

      நீக்கு
  26. கோபியையே !!! அதாவது எதற்கெடுத்தாலும் கோபப்படும் முன் கோபியையே
    சிரிக்கவைத்து விட்டார்களே வெண் புறாக்கள் :))
    நானும் பணம் கறக்கும் ஹாஸ்பிட்டல் என்று நினைத்தேன் ...
    தபால் கொண்டு வருபவருக்கும் நோயாளிகளுக்கும் சம ட்ரீட்மென்ட் :))

    பதிலளிநீக்கு
  27. வாங்கோ நிர்மலா! செளக்யமா?

    உங்களைப் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது போல ஒரு ஃபீலிங் ஏற்படுகிறது, எனக்கு. அடிக்கடி வாங்கோ ப்ளீஸ்.

    அதுபோல உங்களின் லேட்டஸ்டு பதிவுக்கும் எனக்கு மெயில்/லிங்க் மூலம் நீங்க அழைப்பிதழ் தரவே இல்லை. மிகவும் தாமதமாகவே நானாகவே வந்தேன். அதற்குள் அங்கே சுமார் 40 கமெண்டுகள் இருந்தன.

    நிர்மலா ஏன் இப்படி நம்மை [கோபு அண்ணாவை] மறந்து போனாங்க என நினைத்துக்கொண்டேன்.

    ஆனால் இந்தக்கதையில் வரும் கோபி [முன்கோபி] போல நான் உங்களிடம் கோபம் கொள்ளவில்லை.

    சிரித்தேன் ... ஏனென்றால் நீங்களும் அந்த வெண்புறாக்களில் ஒன்றாகவே இங்கு பறந்து வந்து பின்னூட்டம் இட்டதால் ;)))))

    ரொம்பவும் சந்தோஷம் நிர்மலா.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    பதிலளிநீக்கு
  28. விடுபட்ட கதைகளை வாசித்து கொண்டிருந்தேன் இன்று நேரம் கிடைத்தது ..
    இன்னும் கொட்டாவியில் கால் வைக்கவில்லை :)))

    பதிலளிநீக்கு
  29. angelin October 24, 2012 9:17 AM
    //விடுபட்ட கதைகளை வாசித்து கொண்டிருந்தேன் இன்று நேரம் கிடைத்தது ..//

    ரொம்ப சந்தோஷம், நிர்மலா. மெதுவாக நேரம் கிடைக்கும் போது மறக்காமல் படியுங்கோ, போதும். அவசரமில்லை.

    //இன்னும் கொட்டாவியில் கால் வைக்கவில்லை :)))//

    ”கொட்டாவி”யில் யாருமே கால் வைக்க மாட்டார்கள், நிர்மலா ;)))))

    தங்கள் கைவிரல்களை கொட்டாவி விடும் தங்கள் வாய் அருகே கொண்டுபோய் சொடக்கு போட்டுக்கொள்வார்கள் ஒருசிலர்.

    அது ஏன் என்று நானும் ஆராய்ச்சி செய்து பார்த்தேன்.

    அதாவது நாம் பொதுவாகக் கொட்டாவி விடும்போது நம் வாய் பிளக்கும்.

    அப்போது கொசுக்கள் வாய்க்குள் நுழைந்துவிடும் ஆபத்தான வாய்ப்புகள் உண்டு.

    கொட்டாவி விடும் போது கைவிரல்களால் பிளந்த வாய் அருகே சொடக்குப்போட்டுக்கொண்டால் அவை [கொசுக்கள்] பயந்துபோய் விலகிச்சென்று விடும்.

    எப்படி என் ஆராய்ச்சி முடிவு? ;))))))

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    பதிலளிநீக்கு
  30. முன்கோபியான கோபிக்கு சிரிக்கவே தெரியாத சிடுமூஞ்சி கோபிக்கு, எப்போதும் எரிச்சலும் வெறுப்புமாக திரிந்துக்கொண்டிருந்த கோபிக்கு.... இப்படி ஹாஸ்பிட்டல்ல நர்ஸ் ரூபத்தில் வந்து ஞானத்தை புகட்டி இருந்திருப்பாங்களோ?

    சி.எம்.கோபி அதான் சிடுமூஞ்சி கோபியை சிரிக்கவைக்கும் யுக்தியில் 20 ஆம் நம்பர் டோக்கன் கொரியர்வாலா பாவம் வந்து உட்கார்ந்து வரிசையில் காத்திருந்தாலும் ஃப்ரீ அட்வைஸ் நம் சி எம் கோபிக்கு....

    அது ஏன் அத்தனை டெஸ்டும் பண்ணிட்டு அப்புறம் டாக்டரை பார்க்க வைக்கிறாங்க? அது டாக்டருக்கும் எளிதாகும் இல்லையா? டயக்னைஸ் பண்ண?

    ஆனால் காத்திருப்பு எமர்ஜென்சி எனும்போது கொஞ்சம் துரிதப்படுத்தி இருந்திருக்கலாம்...

    ஆகமொத்தம் சி.எம் கோபியை ஜி.எம் ஆக சிரிக்கவெச்சாச்சே...

    அண்ணாவுக்கு நகைச்சுவை ரசனை அதிகம்... அதனால் தான் ஒரு நிகழ்வை பார்த்துவிட்டு இத்தனை ரசனையாக நகைச்சுவையாக பகிர்ந்திருக்கிறார்...

    அருமையா சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வுக்கு அன்புநன்றிகள் அண்ணா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அண்ணாவுக்கு நகைச்சுவை ரசனை அதிகம்... அதனால் தான் ஒரு நிகழ்வை பார்த்துவிட்டு இத்தனை ரசனையாக நகைச்சுவையாக பகிர்ந்திருக்கிறார்...

      அருமையா சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வுக்கு அன்புநன்றிகள் அண்ணா..//

      அன்புள்ள மஞ்சூஊஊஊ, வாங்கோ வாங்கோ வாங்கோ.

      சிரித்தீர்களா மஞ்சு ;)))))

      ரொம்பவும் சந்தோஷம்ம்மா....

      அன்புடன்
      கோபு அண்ணா

      நீக்கு
  31. உஷா அன்பரசு November 22, 2012 9:36 AM
    //நல்ல நகைச்சுவை பதிவு!//

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, மேடம். vgk

    பதிலளிநீக்கு
  32. பாவம் கூரியர் ஆள்!
    படித்துக் கொண்டே வந்தவள் கூரியர் ஆள் சொன்னதைக்கேட்டு வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். தொலைக்காட்சியில் சுவாரஸ்யமாக சாம்பியன் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த கணவர் திரும்பிப் பார்க்க அவரிடமும் உங்கள் கதையைப் படித்துக் காட்டி இப்போது இருவருமாக சிரித்துக் கொண்டிருக்கிறோம்.

    அருமையான நகைச்சுவை கதை! பலவிடங்களில் இப்படி நடக்கின்றன அதனால் இதைக் கதை என்று சொல்ல முடியாது!

    பாராட்டுக்கள் கோபு ஸார் எங்களையும் வாய்விட்டு சிரிக்க வைத்ததற்கு! உம்மணாமூஞ்சி கோபியே சிரித்த பின் நாங்கள் சிரிக்காமல் இருப்போமா!

    பதிலளிநீக்கு
  33. Ranjani Narayanan June 19, 2013 at 6:38 AM

    வாங்கோ, வணக்கம்.

    உங்க ஆத்துக்காரருக்கும் என் நமஸ்காரங்கள் / வணக்கங்கள்.

    //பாவம் கூரியர் ஆள்!
    படித்துக் கொண்டே வந்தவள் கூரியர் ஆள் சொன்னதைக்கேட்டு வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். தொலைக்காட்சியில் சுவாரஸ்யமாக சாம்பியன் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த கணவர் திரும்பிப் பார்க்க அவரிடமும் உங்கள் கதையைப் படித்துக் காட்டி இப்போது இருவருமாக சிரித்துக் கொண்டிருக்கிறோம்.//

    ஆஹா, இதைக்கேட்கவே ஆனந்தமாக உள்ளது. உங்கள் இருவரின் சிரிப்பொலியும் இங்கு திருச்சி மலைக்கோட்டையில் மோதி எதிரொலித்து என் காதுகளிலும் விழுவதாக கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தேன். ;)

    //அருமையான நகைச்சுவை கதை! பலவிடங்களில் இப்படி நடக்கின்றன அதனால் இதைக் கதை என்று சொல்ல முடியாது!//

    2011 நான் வெளியிட்டுள்ள பல கதைகளில் நகைச்சுவை மிக அதிகமாகவே இருக்கும். ஒருசில குட்டிக்கதைகளின் இணைப்பு தனியே கீழே கொடுத்துள்ளேன். மாமாவுடன் சேர்ந்து படித்து விட்டுச் சிரித்து விட்டு கருத்து எழுதுங்கோ, ப்ளீஸ்.

    //பாராட்டுக்கள் கோபு ஸார் எங்களையும் வாய்விட்டு சிரிக்க வைத்ததற்கு! //

    மிக்க நன்றி, மேடம். மிக்க மகிழ்ச்சி.

    //உம்மணாமூஞ்சி கோபியே சிரித்த பின் நாங்கள் சிரிக்காமல் இருப்போமா! //

    கோபியைத்தானே சொல்றீங்கோ. நான் கோபுவையோ என பயந்தே பூட்டேன். ;)

    நன்றி !

    பதிலளிநீக்கு
  34. To
    Mrs. RANANI NARAYANAN MADAM,

    2 முதல் 5 நிமிடங்களுக்குள், படித்து முடித்து, குபீரென்று சிரிக்கக்கூடிய மிகச்சிறிய நகைச்சுவைக்கதைகள். தயவு செய்து மாமாவுடன் சேர்ந்தே படிக்கவும். மறக்காமல் கருத்துக்கூறவும்/.

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_8942.html
    பிரமோஷன்

    http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html
    சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]

    http://gopu1949.blogspot.in/2011/10/blog-post.html
    பெயர் சூட்டல்

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_1783.html
    வரம்

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_5143.html
    யார் முட்டாள்?

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_10.html
    அமுதைப்பொழியும் நிலவே !

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4523.html
    திருமண மலைகளும் மாலைகளும்

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_07.html
    எட்டாக்க[ன்]னிகள்

    http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_26.html
    முன்னெச்சரிக்கை முகுந்தன்

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_691.html
    தங்கமே தங்கம்

    http://gopu1949.blogspot.in/2012/02/i-q-tablets.html
    ஐக்யூ டாப்லெட்ஸ் [I Q TABLETS]

    http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_16.html
    விருது மழையில் தூறியதோர் குட்டிக்கதை.
    [ புத்திசாலி மனைவியைப் பற்றிய நகைச்சுவைக்கதை ]

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4903.html
    ”தாலி”

    http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_04.html
    ”ஆசை”

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_634.html
    கொட்டாவி

    பதிலளிநீக்கு
  35. நல்ல நகைச்சுவையான கதை. ரசித்தேன் சிரித்தேன்.

    தங்களின் நகைச்சுவையான கற்பனைகளுக்கும் எழுத்துகளுக்கும் ஒரு அளவும் இல்லை ஒரு எல்லையும் இல்லை. தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் தங்கள் நகைச்சுவை பயணம்.

    வாழ்த்துகள். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேல் September 27, 2013 at 12:11 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நல்ல நகைச்சுவையான கதை. ரசித்தேன் சிரித்தேன்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //தங்களின் நகைச்சுவையான கற்பனைகளுக்கும் எழுத்துகளுக்கும் ஒரு அளவும் இல்லை ஒரு எல்லையும் இல்லை. தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் தங்கள் நகைச்சுவை பயணம். வாழ்த்துகள். நன்றி ஐயா.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ரஸிப்புடன் கூடிய கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  36. இப்படியும் ஒரு ஆஸ்பத்திரி இருக்குமா? ஒரு சமயம் அது பைத்தியக்கார ஆஸ்பத்திரியாக இருக்குமோ?

    பதிலளிநீக்கு
  37. பெட்டிச் செய்தியையும் அழகான சிறுகதையாக உருமாற்றம் செய்யும் வித்தை உங்களுக்குக் கை வந்த கலை.

    எப்படி இருந்தால் என்ன வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும். நாங்களும் உங்க கதையைப் படித்து, சிரித்து ஆரோக்கியமாக இருக்கோம்.

    பதிலளிநீக்கு
  38. ஹா ஹா இன்றய ஆல்பத்திரிகள் இது போலத்தான தேவையில்லாத நடைமுறைகளை பின் பற்றுகிரார்கள். கூரியர் காரளையே இந்த பாடு படுத்தினை சாதாரண னுக்கு எப்படி இருக்கும்

    பதிலளிநீக்கு
  39. முன்கோபியையும் சிரிக்கவைக்கும் கதை. .. மிகை என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் உண்மையில் இன்று பல மருத்துவமனைகளில் இப்படிதான் நடக்கிறது. இருபதாம் நம்பர் ஆசாமியின் பொறுமையை என்னவென்று சொல்வது? அம்மாடியோ...

    பதிலளிநீக்கு
  40. ஐய்யய்ய இதென்ன கோராம. காசு புடுங்க இப்புடில்லாம் பண்ணுராகளோ?.

    பதிலளிநீக்கு
  41. நல்ல நகைச்சுவைதான் கூரியர் காரனையே தினசரி இந்த பாடு படுத்தினா சாதாரண பேஷண்டுகள் நிலமை அம்போ தான்.

    பதிலளிநீக்கு
  42. கார்ப்பரேட் ஹாஸ்பிடல்னாலே பலது ரமணா படத்துல வர்ற மாதிரிதான்...இருக்கும்போல...நல்ல வேள சட்டய கழட்டுனதோட விட்டானே...கைல ஒரு ஐவி-ய குத்திவிடாம...சரிரிரிரிரி...வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்...இவிங்களுக்கு எப்படி பிஸினஸ் ஆகும்???

    பதிலளிநீக்கு
  43. //அவனை விசித்திரமாக ஒரு முறை பார்த்த அந்த இருபதாவது ஆசாமி, தனக்குள் சிரித்துக்கொண்டே, “தம்பி நீ இந்த மருத்துவ மனைக்கு புதிதாக இன்று தான் வந்திருக்கிறீங்கன்னு நினைக்கிறேன்; நான் சொல்வது சரி தானே” என்று கேட்டார்.



    “ஆமாம்ய்யா .... அதற்கென்ன இப்போ, தினமுமா நகத்தை பெயர்த்துண்டு இங்கு வர முடியும்?” எரிச்சலுடன் கேட்டான், கோபி.
    // இரசித்தேன்!//

    பதிலளிநீக்கு
  44. இனிமேல கால் நகம் பேத்துகிட்டதுக்கெல்லாம் எந்த ஆஸ்பிடலுக்கும் போகவே மாட்டான் கோபி. வீட்டில் போயி ஏதானும் ஆயின்மெண்ட தடவி ஈரத்துணியால கட்டு அவனே போட்டுகிடுவான். பின்ன இந்த ஆஸ்பத்திரிக்கு போனதால தான இவ்வளவு " சுவையான" அநுபவங்கள் கிடைத்தது. ஆஸ்பத்திரி தேவையில்லாத நடைமுறைகளை நகைச்சுவையுடன் சொல்லி சிரிக்க வச்சீங்க.கூரியர் காரர் நிலமைதான் ஐயோ பாவமா இருக்கு
    தினம் தினம் இந்த கொடுமையை சகிச்சுக்கறாரே. பின்னூட்டத்திலும் அனைவருமே நகைச்சுவையுடன் எழுதி இருக்காங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... February 15, 2016 at 10:33 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இனிமேல கால் நகம் பேத்துகிட்டதுக்கெல்லாம் எந்த ஆஸ்பிடலுக்கும் போகவே மாட்டான் கோபி. வீட்டில் போயி ஏதானும் ஆயின்மெண்ட தடவி ஈரத்துணியால கட்டு அவனே போட்டுகிடுவான். பின்ன இந்த ஆஸ்பத்திரிக்கு போனதால தான இவ்வளவு " சுவையான" அநுபவங்கள் கிடைத்தது. ஆஸ்பத்திரி தேவையில்லாத நடைமுறைகளை நகைச்சுவையுடன் சொல்லி சிரிக்க வச்சீங்க. கூரியர் காரர் நிலமைதான் ஐயோ பாவமா இருக்கு. தினம் தினம் இந்த கொடுமையை சகிச்சுக்கறாரே. பின்னூட்டத்திலும் அனைவருமே நகைச்சுவையுடன் எழுதி இருக்காங்க.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் தொடர் வருகைக்கும், நகைச்சுவையை ரசித்து விரிவாக சிலாகித்துச் சொல்லியுள்ள கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு