செயலற்ற செயலாளராக இருப்பதாகச் சொல்லி, தன் மீது கண்டனத்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய புண்ணியவான்கள் யாரோ, நம்மீது உள்ள கடுப்பில், வேண்டுமென்றே மூன்றாவது மாடியின் கடைசி வீடான நம் வீட்டுப்பக்கம் அந்தச் சனியனை துரத்தி விட்டிருப்பார்களோ! இது அவர்களில் யாரோ ஒருவரின் சதித்திட்டமாகத் தான் இருக்கக்கூடும் என்ற ஒரு சந்தேகம் ராமசுப்புவுக்கு வந்தது.
பஸ் இறங்கி வீடு செல்லும் முன்னே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு துடைப்பம் (தென்னங்கீற்றுக் குச்சிகளை வைத்துக் கட்டிய கட்டை விளக்கமாறு) வாங்கிக்கொண்டு, ஒரு வீராதி வீரனின் போர்வாள் போல அதைக் கையில் பிடித்துக்கொண்டு, தன் வீட்டிற்குள் பயந்து கொண்டே நுழைந்தார்.
வீட்டின் வெளிப்பக்க கிரில்கேட் திறந்தே இருந்தது. பூட்டிய பூட்டு மட்டும் தனியே தொங்கிக் கொண்டிருந்தது. தன்னிடம் இருந்த மாற்றுச் சாவியால் வெளிக்கதவைப் பூட்டி விட்டு உள்ளே போனார். ஹாலில் யாரும் பார்க்காமலேயே, டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. அதை ரிமோட்டால் அணைத்து விட்டு, மெதுவாக பெட்ரூம் கதவைத் திறந்து கொண்டு உடனே மீண்டும் ஞாபகமாக அந்தக் கதவை சாத்திவிட்டு, மனைவி மற்றும் மகனுடன் தானும் கட்டிலில் ஏறிகொண்டார்.
சமையல் அறைப் பக்கம் தான் நேரில் பர்த்து விட்ட அந்த எலியின் நடமாட்டத்தைப் பற்றி, திகிலுடன் அம்புஜம் விவரித்துக் கூறியதை, ஒரு மர்மக் கதை போல அரண்டு மிரண்டபடியே கேட்டுக்கொண்டார், ராமசுப்பு.
பிறகு என்ன செய்வது என்று ஒன்றும் புரியாதவராக, தன்னிடம் ஓரளவு ஒட்டுதலாகப் பழகும் பக்கத்து வீட்டுப் பட்டாபியை செல்போனில் அழைத்தார், ராமசுப்பு.

அது சமயம் தன் குடும்பத்தாருடன் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்குப் பாலாபிஷேகம் செய்யப் போயிருந்தார் பட்டாபி. தனக்கு நேர்ந்துள்ள விபரீதத்தை பட்டாபியிடம் விளக்கிப் பரிகாரம் கேட்கலானார், ராமசுப்பு.
“பூனை ஒன்று வாங்கி வளர்க்கலாம் அல்லது ஏற்கனவே பூனை வளர்ப்பவர்களிடம் வாடகைக்கோ அல்லது ஓஸியிலோ வாங்கி வரலாம். அவ்வாறு செய்தால் பூனை எலியைப் பிடித்துத் தின்று விடும் என்று ஒரு ஆலோசனையும்; எலி பாஷாணம் என்று கடைகளில் விற்கும். அதை வாங்கி சாதத்துடன் மையப்பிசைந்து, ஆங்காங்கே வீடு பூராவும் உருட்டி வைத்து விட்டால், எலி அதை அப்படியே சாப்பிட்டாலும் சாப்பிடலாம்; இறந்து போனாலும் போகலாம்” என்ற மற்றொரு ஆலோசனையும் வழங்கி விட்டு, அபிஷேகம் பார்க்க வேண்டிய அவசர வேலை இருப்பதாகச் சொல்லி, தொடர்பைத் துண்டித்து விட்டார், பட்டாபி.
“சாமியார் பூனை வளர்த்த கதையாகிவிடும். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். குறுக்கேயும் நெடுக்கேயும் ஓடிக்கொண்டே இருக்கும். சகுனத்தடையாகி விடும். அதைக் கைக்குழந்தை போல பராமரிக்கணும். எல்லா இடங்களிலும் மலம் ஜலம் கழித்து அசிங்கம் செய்து விடும். பூனையிலிருந்து ஏதோ ஒரு வித வைரஸ் நோய் பரவுவதாக சமீபத்தில் ஏதோ ஒரு வார இதழில் படித்தேன்” எனச் சொல்லி அந்தப் பூனை வாங்கும் யோசனையை முளையிலேயே கிள்ளி எறிந்தாள் அவரின் மனைவி அம்புஜம். எலி பாஷாணமும் அவளுக்கு சரியாகப் படவில்லை. அதையும் நிராகரித்து விட்டாள்.
“வளவளன்னு நீங்க ரெண்டு பேரும் பேசிண்டே இருக்காமல் சீக்கிரமாக ஏதாவது வழி பண்ணுங்கப்பா .... மத்தியான சாப்பாடே இன்னும் அம்மா தயார் செய்யவில்லை. பசி வயிற்றைக் கிள்ளுது” என்றான் ராஜூ.

தொடரும்
எங்க வீட்டுக்குள்ள ஒரு மூஞ்சூறு அட்டகாசம் பண்ணுது! சீக்கிரம் வழி சொல்லுங்கள்!
பதிலளிநீக்குஅட.... எலியை இவர் பார்த்தாரா இல்லையா, தெரியலையே.... இந்த கதையிலும் ஒரு பட்டாபி! உங்களுக்கு மிகவும் பிடித்த பெயரா?
பதிலளிநீக்குஅப்புறம் சமையல் செய்தாங்களா? இல்லையா? ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குசுவாரஸ்யமாய் நகர்கிறது கதை..
பதிலளிநீக்குஒரு வீராதி வீரனின் போர்வாள் போல அதைக் கையில் பிடித்துக்கொண்டு, தன் வீட்டிற்குள் பயந்து கொண்டே நுழைந்தார். // ???????????????????
பதிலளிநீக்குவீட்டில எலி புகுந்துட்டா
பதிலளிநீக்குமனுஷனுக்கு என்னல்லாம் கஷ்டம் வந்துடறது!!!
middleclassmadhavi said...
பதிலளிநீக்கு//எங்க வீட்டுக்குள்ள ஒரு மூஞ்சூறு அட்டகாசம் பண்ணுது! சீக்கிரம் வழி சொல்லுங்கள்!//
ரொம்பவும் அவசரப்படறேளே; ராமசுப்புவுக்குத் தான் முதல் ப்ரியாரிட்டி. மி.கி.மா க்கு பிறகு தான்.
வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்கு//அட.... எலியை இவர் பார்த்தாரா இல்லையா, தெரியலையே.... இந்த கதையிலும் ஒரு பட்டாபி! உங்களுக்கு மிகவும் பிடித்த பெயரா?//
ஆமாம் வெங்கட், ஓடியதாகச் சொல்லும் அந்த எலியையே இவர் இன்னும் பார்க்காமலேயே 2 பகுதிகள் ஓடிவிட்டது பாருங்கள்.
என் மற்றொரு கதையிலும் பட்டாபியே கதாநாயகனாக வருவார். அந்தக் கதையின் தலைப்பு: கொட்டாவி.
கோவை2தில்லி said...
பதிலளிநீக்கு//அப்புறம் சமையல் செய்தாங்களா? இல்லையா? ஆவலுடன் காத்திருக்கிறேன்.//
சமையல் பற்றி அடுத்த பகுதியின் முதல் பத்தியிலேயே அநேகமாகத் தெரிந்து விடும். நாளை வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்திற்குள் உங்கள் ஆவல் பூர்த்தியாகும்.
மோகன்ஜி said...
பதிலளிநீக்கு//சுவாரஸ்யமாய் நகர்கிறது கதை..//
தங்களின் ”கொண்டே புடுவேன்” ஐ விடவா, இதில் சுவாரஸ்யம்? However Thanks to you.
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்கு//ஒரு வீராதி வீரனின் போர்வாள் போல அதைக் கையில் பிடித்துக்கொண்டு, தன் வீட்டிற்குள் பயந்து கொண்டே நுழைந்தார். // ???????????????????
தங்களின் ரசனை எனக்குப் பிடித்துள்ளது; நன்றி.
raji said...
பதிலளிநீக்கு//வீட்டில எலி புகுந்துட்டா
மனுஷனுக்கு என்னல்லாம் கஷ்டம் வந்துடறது! //
ஆமாம். இன்னும் என்னவெல்லாம் கஷ்டப்படப் போகிறாரோ அந்த மனுஷன் !
அட ...எலி வீட்டில் இவ்வளவு ஆட்டமா போடுது..(இன்றைக்கும் ஹோட்டலில்தான் சாப்பாடா?)
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
வேலன்.
Blogger வேலன். said...
பதிலளிநீக்கு// அட ...எலி வீட்டில் இவ்வளவு ஆட்டமா போடுது..(இன்றைக்கும் ஹோட்டலில்தான் சாப்பாடா?)
வாழ்க வளமுடன்.
வேலன்.//
தங்களின் புதிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. பிரபல ஜோஸ்யராக இருப்பீர்கள் என்று தோன்றுகிறது. அடிக்கடி நேரம் கிடைக்கும் போதெல்லா வாங்க !
என் வீட்ல எலிய அடிக்கணும்னா இந்த வீராங்கனையத்தான் கூப்பிடுவாங்க. ஏன்னா... பூனைன்னா எனக்கு அலர்ஜி. இதுல சொல்லியிருக்கற அதே காரணங்களை நான் வீட்ல சொல்லியிருக்கேன். யதார்த்தமா, அதே சமயம் Hilarious ஆ கதை நகர்றது நல்லாருக்கு Uncle!
பதிலளிநீக்குநிரஞ்சனா April 21, 2012 6:23 PM
நீக்குஎன் வீட்ல எலிய அடிக்கணும்னா இந்த வீராங்கனையத்தான் கூப்பிடுவாங்க. ஏன்னா... பூனைன்னா எனக்கு அலர்ஜி. இதுல சொல்லியிருக்கற அதே காரணங்களை நான் வீட்ல சொல்லியிருக்கேன்.//
வீராங்கனையின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
//யதார்த்தமா, அதே சமயம் Hilarious ஆ கதை நகர்றது நல்லாருக்கு Uncle!//
மிகவும் சந்தோஷம். ;)
“பூனை ஒன்று வாங்கி வளர்க்கலாம்//
பதிலளிநீக்குஇங்கே லண்டன் டவ்னிங் ஸ்ட்ரீட் இல் உள்ள பிரதமர் இல்லத்திலேயே எலி பிரச்சினை இருக்கும்போது ராமசுப்பு எம்மாத்திரம் .
BTW டேவிட் காமருன் கூட ஒரு பூனையை வீட்டுக்கு கொண்டு வந்தாராம் ...:)ஆனா அது எலி பிடிப்பதை தவிர எல்லா வேலையும் செய்தது என்று பேப்பரில் படிச்சேன்
angelin October 3, 2012 2:43 AM
நீக்கு****“பூனை ஒன்று வாங்கி வளர்க்கலாம்”****
//இங்கே லண்டன் டவ்னிங் ஸ்ட்ரீட் இல் உள்ள பிரதமர் இல்லத்திலேயே எலி பிரச்சினை இருக்கும்போது ராமசுப்பு எம்மாத்திரம்.//
அதானே! இவைகளுக்கெல்லாம் பாஸ்போர்ட் விசா வெல்லாம் கிடையாதா நிர்மலா?
நீங்களெல்லாம் இங்கு வந்து போகும் போது லக்கேஜுடன் தொத்திக்கொண்டு வந்தவையாக இருக்குமோ?
அல்லது அங்கேயே பிறந்து வளர்ந்து பிரஜா உரிமை பெற்றதாக இருக்குமோ?
//BTW டேவிட் காமருன் கூட ஒரு பூனையை வீட்டுக்கு கொண்டு வந்தாராம் ...:)ஆனா அது எலி பிடிப்பதை தவிர எல்லா வேலையும் செய்தது என்று பேப்பரில் படிச்சேன்.//
வெளிநாட்டுப் பூனைகளுக்கு எலி பிடிக்கத்தெரியாதோ என்னவோ? மக்குப் பூனைகள். ;)))))
அன்பான வருகைக்கும் நகைச்சுவையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
பிரியமுள்ள
கோபு
வீட்டுக்குள்ளே எலி புகுந்ததை ஐ.நா பிரச்சினையா நினைசிட்டார் ராமசுப்பு..ஹ ஹ ஹா ...இவர் போலவே எங்க தெருவில் ஒருத்தர் இருக்கார்... நாய்க்கு பயப்படுகிறவர்.வளர்ப்பு நாய்,இவர் அதை பார்த்தாலே ஒதுங்கிப்போவார்.அது என்னவோ இவரை பார்த்தால் மட்டும் பாசத்தோடு தாவும்.வேறு எதுவும் செய்யாது.அதனால் வாக்கிங் போகும் பொழுது நாய் கட்டி போட்டுள்ளதா..என்று உறுதி செய்து வாசலை விட்டு இறங்குவார். அப்பறம்..
பதிலளிநீக்குராதா ராணி October 4, 2012 9:13 PM
பதிலளிநீக்கு//வீட்டுக்குள்ளே எலி புகுந்ததை ஐ.நா பிரச்சினையா நினைசிட்டார் ராமசுப்பு..ஹ ஹ ஹா ...//
ஐ.நா. பிரச்சனையாவது பேசித்தீர்க்கலாம். எதிர்க்கலாம். வெளிநடப்பு செய்யலாம். மீட்டிங்கை ஒத்தி வைக்கலாம்.....
வீட்டுக்குள் எலி புகுந்துவிட்டால் போச்சே.
அது பேச்சு வார்த்தைக்கெல்லாம் ஒத்துழைப்பு தராதே.
வெளி ந்டப்பும் செய்யாதே!
எல்லாவற்றையும் குடைந்தெடுத்து விடுமெ.
குட்டி போட்டு குடுத்தனம் நடத்த ஆரம்பித்து விடுமே! ;)))))
//இவர் போலவே எங்க தெருவில் ஒருத்தர் இருக்கார்... நாய்க்கு பயப்படுகிறவர்.வளர்ப்பு நாய்,இவர் அதை பார்த்தாலே ஒதுங்கிப்போவார்.அது என்னவோ இவரை பார்த்தால் மட்டும் பாசத்தோடு தாவும்.வேறு எதுவும் செய்யாது.அதனால் வாக்கிங் போகும் பொழுது நாய் கட்டி போட்டுள்ளதா..என்று உறுதி செய்து வாசலை விட்டு இறங்குவார்.//
நானும் கூட அவரைப்போலவே தான். எந்த ஜந்துக்களையும், வளர்ப்புப் பிராணிகளையும் எனக்குப்பிடிக்காது. சிறுவயதில் ஓர் நாய் துரத்திவந்து நான் கீழே விழுந்து நல்ல ரத்தக்காயம் பட்ட அனுபவமும் உண்டு. அதனால் நானும் நாயைக் கண்டால் சற்றே பயப்படுவேன்.
// அப்பறம்......//
அடுத்த பகுதியில்.
அன்புடன்
VGK
எலிக்குப் பயந்து வீட்டையே கொளுத்தினானாம் ஒருத்தன். அந்த மாதிரி ஏதாவது செய்துடப்போகிறார்?
பதிலளிநீக்குராத்திரி தான் இந்த எலிகளின் அட்டகாசம் துவங்கும். ஆனால் பாவம் ராமசுப்புவின் துரதிர்ஷ்டம் பகலிலேயே வாத்தியாராகாமலேயே அவர்கள் மூவரையும் கட்டில் மேல் ஏற்றி விட்டதே. ‘ம் ஏறு கட்டில் மேல்’ என்று அதட்டாத குறை தானோ?
பதிலளிநீக்குஎன்ன பொல்லாத்தனம் இந்த எலிக்கு. பாவம் அம்புஜம் மாமியை சமைக்க கூட விடலையே. மாமி எலியைத் தாண்டிப் போய் சமைச்சாளா இல்லையா?
ஹா ஹூ எலி பிடிக்க என்னல்லாம ஐடியா கொடுக்குராங்கப்பா. ஒரு வேளை நமக்கும் உபயோகப்படலாம்
பதிலளிநீக்குஹா ஹா எங்கூட்ல கூட எலி தொல்ல தாங்கல எலி அடிக்க இவுகல்ல யாராச்சும் வருவாகளா.
பதிலளிநீக்குஎலி பத்தி எலி அடிக்க பிடிக்கலாம் ஏகப்பட்ட ஆராய்ச்சிலாம் பண்ணிஇருக்கீங்க போல இருக்கே. படிக்கிற எங்களுக்கெல்லாம் ஜாலி.வாய்விட்டு சிரிச்சுண்டே இருக்கலாமில்லயா????
பதிலளிநீக்குசெயலற்ற செயலாளர்...பக்கத்து வீட்டு பட்டாபி...என்ன ஒரு மோனை...? நகைச்சுவை அதிலும் இழையோடுகிறதே...
பதிலளிநீக்குஎன் வீட்டில் இப்போது அனுபவிக்க நேர்ந்தது! இரசித்தேன்!
பதிலளிநீக்குஆபீசிலிருந்து வரும்போதே முன்ஜாக்கிரதையாக விளக்குமாறு வாங்கி வந்தாரே. அந்த பொல்லாத எலி விளக்கு மாத்துக்கெல்லாம் டேக்கா கொடுத்துவிடுமே. நண்பர் பட்டாபி சொன்ன யோசனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். ஆனாலும் பூனை வளர்ப்பதெல்லாம் அடுக்குமாடி குடிநீர் இருப்பில் சாத்தியப்படாதே.இரவு சாப்பாட்டுக்கு என்னபண்ண போறாங்க??? எலி பயத்துல கட்டில் விட்டு கீழயே இறங்காமல் ஹோட்டலில் ஆர்டர் பண்ணி இருப்பாங்களோ.???? படிக்குறவங்களையும் எப்பிடில்லாம் யோசிக்கும் வைக்குறீங்க???
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... March 22, 2016 at 1:42 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஆபீசிலிருந்து வரும்போதே முன்ஜாக்கிரதையாக விளக்குமாறு வாங்கி வந்தாரே. அந்த பொல்லாத எலி விளக்கு மாத்துக்கெல்லாம் டேக்கா கொடுத்துவிடுமே.//
எதற்கும் ஒரு தற்காப்புக்காக (வீராதி வீரன் போல) அத்துடன் வீட்டுக்குள் பயந்துகொண்டே நுழைந்துள்ளார்.
//நண்பர் பட்டாபி சொன்ன யோசனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். ஆனாலும் பூனை வளர்ப்பதெல்லாம் அடுக்குமாடி குடியிருப்பில் சாத்தியப்படாதே.//
ஆமாம். ஒன்றும் சாத்தியப்படாதுதான். மேலும் அவரின் மனைவி பூனை வளர்ப்பினை விரும்பவும் இல்லையே.
//இரவு சாப்பாட்டுக்கு என்னபண்ண போறாங்க??? எலி பயத்துல கட்டில் விட்டு கீழயே இறங்காமல் ஹோட்டலில் ஆர்டர் பண்ணி இருப்பாங்களோ.???? படிக்குறவங்களையும் எப்படியெல்லாம் யோசிக்க வைக்குறீங்க???//
இரவு சாப்பாடு பற்றிய நகைச்சுவைக் காட்சிகள் இந்தக்கதையில் இரவினிலும் தொடரும்.
தங்களின் அன்பு வருகைக்கும், ஒவ்வொன்றையும் ஈடுபாட்டுடன் படித்து, ஆராய்ந்து பார்த்துச் சொல்லும் நகைச்சுவையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.