என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 3 / 8 ]

ராமசுப்பு, அம்புஜம், ராஜூ மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்த வண்ணம் தாண்டிக் குதித்து, பெட் ரூமை விட்டு மெதுவாக வெளியே வந்து, எட்டி நின்றவாறு மிகவும் உஷாராக சமையல் அறையை ஒரு திகிலுடன் பார்த்து விட்டு, பூட்டிய வீட்டைத் திறந்து வெளியே போய், மீண்டும் வீட்டையும் பூட்டிவிட்டு, ஹோட்டல் ஒன்றுக்குச் சாப்பிடச் சென்றனர்.

திருப்தியாகச் சாப்பிட்டுத் திரும்பும் வழியில் சந்தித்த தன் பால்ய நண்பர் பரந்தாமனிடம், இந்தப் பிரச்சனையைப் பற்றி விவாதித்ததில் நல்ல ஒரு தீர்வு கிடைத்தது, நம் ராமசுப்புவுக்கு.

பரந்தாமன் வீடும் பக்கத்திலேயே இருந்ததால், அங்கு போய் அவர் வீட்டுப் பரணையில் (லாஃப்ட்டில்), வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் தூங்கிக் கொண்டிருந்த எலிக்கூடு ஒன்றை வாங்கிக் கொண்டபின், சூடான சுவையான ரோட்டுக்கடை ... மசால் வடை ஒன்றும் வாங்கி, அவரை விட்டே, கைராசி என்ற பெயரில் அதில் பொருத்தித் தரச்சொல்லி வாங்கிக்கொண்டார், ராமசுப்பு.

“ஆள் நடமாட்டம் இருந்தால் அந்தப் பக்கம் எலி வரவே வராது, சார். அப்படியே வந்தாலும் நம்மை ஒன்றும் கடித்துக் குதறாது சார். நாம் பயப்படுவது போலவே அதுவும் நம்மைப் பார்த்து பயந்து எங்கேயாவது ஓடி ஒளிந்து விடும்” என்று நம்பிக்கை அளித்து, அந்த எலிக்கூடையும் ஒப்படைத்து “ஆல் தி பெஸ்ட்” சொல்லி அனுப்பி வைத்தார், பரந்தாமன்.

தேர்தல் வாக்குறுதியை நம்பி நாம் ஓட்டளிக்கச் செல்வது போல, பரந்தாமன் கொடுத்த நம்பிக்கையில் எலிக்கூட்டுடன் அடுக்கு மாடி வீட்டுக்கு விரைவாகச் செல்ல ஆரம்பித்தனர்.

மூன்றாவது மாடிக்குச் செல்ல லிஃப்ட் ஏறியபோது, கூடவே ஒட்டிக்கொண்ட பால்காரர் ஒருவர், “என்ன ஸார் எலிக்கூடு இது? இவ்வளவு அழுக்காக ஒட்டடையுடன் ஒரு வித நாற்றம் அடிப்பதாக உள்ளது. இது போல சுகாதாரமில்லாத எலிக்கூட்டைக் கொண்டுபோய் வைத்தீர்களானால், எலி அந்தப் பக்கமே வராது ஸார். சுத்தமாக சோப்புப் போட்டுக்கழுவி, ஏற்கனவே எலி விழுந்த வாடை எதுவும் இல்லாமல் வைத்தால் தான், டக்குனு வந்து எலி மாட்டிக்கும்” என்று தான் பல நாள் முயன்று, பல நூற்றுக்கணக்கான எலிகள் பிடித்த அனுபவத்தை எடுத்துரைத்தார்.

சரியான நேரத்தில், இந்த ஒரு பக்குவத்தை எடுத்துக்கூறிய அந்தப் பால்காரரை நன்றியுடன் நோக்கிய ராமசுப்பு, அந்தப் பால்காரரை விட்டே எலிக்கூட்டிலிருந்து மசால் வடையை மெதுவாக வெளியே எடுத்துக் கொடுத்து உதவுமாறு வேண்டினார், பிறகு அதே மசால் வடை தேவைப்படலாம் என்ற தொலை நோக்குத் திட்டத்தில்.

பால்காரர் எலிக்கூட்டின் உள்ளே தன் முரட்டுக் கையைவிட்டு வடையைப் பிடித்து வேகமாக இழுத்ததில், மிகவும் மிருதுவான அந்த மசால் வடை, தூள் தூளாகி லிஃப்டினுள்ளேயே சிந்திச் சிதறியது.

“எலிக் கூட்டை சுத்தமாக சோப்புப் போட்டுக் கழுவி விட்டு, வேறு ஒரு புதிய மசால் வடை வாங்கி வைங்க ஸார்” என்றார் மிகவும் அஸால்ட்டாக அந்தப் பால்காரர்.

’ரெண்டு ரூபாய் போட்டு வாங்கிய பெரிய சைஸ் மசால்வடை இப்போது தண்டமாகி விட்டது. அதை வாங்கிய உடன் சூடாக நாமாவது புட்டு வாயில் போட்டிருக்கலாம்’ என நினைத்துக் கொண்டாள் அவரின் தர்மபத்தினி அம்புஜம்.

லிஃப்டினுள் சிந்திச் சிதறிய வடைத்தூள்களை செயலாளரின் மனைவி என்ற முறையில் அவளே சுத்தம் செய்ய வேண்டியதாகி விட்டது, அவளுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது.


தொடரும்


35 கருத்துகள்:

  1. 'எலி' ஸ ப த் டவர்ஸ் கதை
    எட்டாவது பகுதியை தொடும்போது
    எலி பெருக்கம் அதிகமாகி 'எலி' பர்த் டவர்ஸா
    ஆயிட்டா என்ன செய்யறதுனு எனக்கு கவலையாருக்கு'
    எனக்கே இவ்வளவு கவலை இருந்தா பாவம் நம்ம ராமசுப்பு
    என்னதான் செய்யப் போறாரோ? பாக்கலாம்

    பதிலளிநீக்கு
  2. வடை போச்சே!! அவரவர் கவலை அவரவர்களுக்கு!!!

    பதிலளிநீக்கு
  3. அடடா...வடைபோச்சே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    பதிலளிநீக்கு
  4. சூப்பர் வடை போச்சே கதை... ஹி,ஹி,ஹி,ஹி...

    பதிலளிநீக்கு
  5. எலிக்கூடுக்கு வேலைவாய்ப்பு!! :))
    எலி மாட்டிக் கொள்ள சுகாதாரமான கூண்டு!! :))

    இன்னும் சிரிச்சுட்டிருக்கேன்!

    பதிலளிநீக்கு
  6. raji said...
    // 'எலி' ஸ ப த் டவர்ஸ் கதை
    எட்டாவது பகுதியை தொடும்போது
    எலி பெருக்கம் அதிகமாகி 'எலி' பர்த் டவர்ஸா
    ஆயிட்டா என்ன செய்யறதுனு எனக்கு
    கவலையாருக்கு'
    எனக்கே இவ்வளவு கவலை இருந்தா பாவம்
    நம்ம ராமசுப்பு
    என்னதான் செய்யப் போறாரோ? பாக்கலாம்//

    உங்கள் கவலை நியாயமானதே. எட்டாவது பகுதியை எட்டிப் பிடித்து யூகிக்கும் உங்கள் ஜோக்கை (எலி பர்த் டவர்ஸ்) நான் மிகவும் ரஸித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. இராஜராஜேஸ்வரி said...
    //வடை போச்சே!! அவரவர் கவலை அவரவர்களுக்கு!!!//

    மிகச்சரியாகச் சொன்னீர்கள்;
    அதானே, அவா அவா கவலை அவா அவாளுக்கு !

    பதிலளிநீக்கு
  8. வேலன். said...
    // அடடா...வடைபோச்சே...
    வாழ்க வளமுடன்.
    வேலன். //

    ஆமாம் சார், அநியாயமாய் இப்படி வடை போச்சுதேன்னு தான் இருக்கு.

    வடையே போன பின் ’வாழ்க வளமுடன்’ என்றால் எப்படி?.

    அந்த வடி’வேலன்’ துணையிருந்து வளமுடன் வாழ வைத்தால் சரிதான்.

    பதிலளிநீக்கு
  9. Chitra said...
    //சூப்பர் வடை போச்சே கதை... ஹி,ஹி,ஹி,ஹி...//

    வடை போனால் போகட்டும், உங்கள் பின்னூட்டம் அந்த வடையை விட சூப்பர் ஆகவே உள்ளது.
    ஹி,ஹி,ஹி,ஹி...

    பதிலளிநீக்கு
  10. middleclassmadhavi said...
    // எலிக்கூடுக்கு வேலைவாய்ப்பு!! :))
    எலி மாட்டிக் கொள்ள சுகாதாரமான கூண்டு!! :)) //

    நல்லதொரு ரசனை உங்களுக்கு, அது எனக்குப் பிடிச்சிருக்கு.

    // இன்னும் சிரிச்சுட்டிருக்கேன்! //

    உங்கள் சிரிப்பொலியை கற்பனையில் நானும் கண்டு ரசிக்கின்றேன்.

    இன்னும் அடுத்தடுத்த பகுதிகளுக்கு
    சிரிப்பை கொஞ்சம் ஸ்டாக்கில் வைத்துக் கொள்ளுங்கள்.

    நிச்சயம் அது தேவைப்படலாம்.

    நீங்கள் எப்போதும் “சிரித்து வாழ வேண்டும்” அதுவே என் இந்தக் கதையின் நோக்கமும் கூட.

    பதிலளிநீக்கு
  11. தாமதமாய்த் தான் வந்தேன். ஆனாலும் மொத்த எலியையும் பிடிச்சிட்டேன். சே... மொத்த கதையையும் படிச்சிட்டேன்.

    பதிலளிநீக்கு
  12. சிவகுமாரன் said...
    //தாமதமாய்த் தான் வந்தேன். ஆனாலும் மொத்த எலியையும் பிடிச்சிட்டேன். சே... மொத்த கதையையும் படிச்சிட்டேன்.//

    வாங்க கவிஞர் ஐயா....வாங்க வாங்க !

    அத்திப்பூத்தாற்போல வருகை தந்தாலும்
    அசத்தலாகப் பின்னூட்டம் தருகிறீர்கள் !!

    காசி யாத்திரையை தாங்கள் வந்திருந்து முடித்துக்கொடுத்து, ராமேஸ்வரத்திற்கு
    அனுப்பி வைப்பீர்கள் என்று எதிர் பார்த்தேன் !!!

    நடுவில் இந்த எலித் தொல்லை வேறு.

    வருகைக்கும் நகைச்சுவையான பின்னூட்டத்திற்கும் நன்றி.

    கவிஞரை எப்போதும் வரவேற்று விருந்தளிக்க கண்ணுறக்கமின்றி இங்கு இந்த வலைப்பூவில் ஒரு சாமானியன் காத்திருக்கிறேன் என்பதை கவிஞர் கருத்தில் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. எலி கூட்டில் மசால் வடையை பொருத்த ஒரு ஆள் அதை எடுக்க இன்னொரு ஆள்..

    காலி எலிக்கூட்டில் கையை விடக்கூட பயம் :) :)

    பதிலளிநீக்கு
  14. Ganesh said...
    //எலி கூட்டில் மசால் வடையை பொருத்த ஒரு ஆள் அதை எடுக்க இன்னொரு ஆள்..
    காலி எலிக்கூட்டில் கையை விடக்கூட பயம் :) :) //

    My Dear Ganesh,

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
    மிகவும் ரஸித்து ஊன்றிப் படிக்கிறாய் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது.
    மிக்க மகிழ்ச்சி.

    அவ்வப்போது இது போல கருத்துக்களை அள்ளித் தெளித்து விட்டுப் போகவும்.

    vgk

    பதிலளிநீக்கு
  15. அச்சச்சோ!! வடை போச்சே!! :) மசால் வடையை மட்டும் தனியா, அழகா அடிபட்டுக்காம அபேஸ் பண்ண இப்ப இருக்கிற எலிகள் கத்துண்டுடுத்து!

    பதிலளிநீக்கு
  16. வெங்கட் நாகராஜ் said...
    //அச்சச்சோ!! வடை போச்சே!! :) மசால் வடையை மட்டும் தனியா, அழகா அடிபட்டுக்காம அபேஸ் பண்ண இப்ப இருக்கிற எலிகள் கத்துண்டுடுத்து!//

    ஆமாம் வெங்கட். [”அச்சச்சோ” என்று சொல்லி துபாயிலுள்ள என் பேத்தி பவித்ராவை ஞாபகப் படுத்தி விட்டீர்கள்] எலிகள் இந்த டெக்னிக்கை எந்தப் பல்கலைக்கழகத்தில் போய் கற்றுக்கொள்கின்றனவோ ! வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. பழைய மாடல் எலிக் கூண்டுக்குள் வடை வைப்பதே ஒரு கலை. அது சரியா செய்யாட்டி கைல கீறல் விழும்

    பதிலளிநீக்கு
  18. அலுவலகத்தில் எலிப்பொறியில் வைத்த காண்டீன் வடையை பார்த்த அதிர்ச்சியிலேயே உயிரை விட்டு விட்டது அந்த எலி. வடை மட்டும் அப்படியே முழுசாய்.. தொடப்படாமல். புக் செக்‌ஷன் போனதும் நடந்த சம்பவம்.

    பதிலளிநீக்கு
  19. எல் கே said...
    //பழைய மாடல் எலிக் கூண்டுக்குள் வடை வைப்பதே ஒரு கலை. அது சரியா செய்யாட்டி கைல கீறல் விழும்//

    இந்தக் கலையைப் பற்றிய ஞானமில்லாத்தாலோ, கையில் கீறல் விழும் என்ற பயத்தினாலோ, இந்த நாற்றமடிக்கும் மர்மகோவாவுக்குள் கையை வேறு
    விடணுமா என்ற அருவருப்பினாலோ தான் ராமசுப்பு, எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருக்கிறாரோ!

    பதிலளிநீக்கு
  20. ரிஷபன் said...
    //அலுவலகத்தில் எலிப்பொறியில் வைத்த காண்டீன் வடையை பார்த்த அதிர்ச்சியிலேயே உயிரை விட்டு விட்டது அந்த எலி. வடை மட்டும் அப்படியே முழுசாய்.. தொடப்படாமல். புக் செக்‌ஷன் போனதும் நடந்த சம்பவம்.//

    நல்ல நகைச்சுவை தான். மிகவும் ரஸித்தேன்.

    ஆனால் ஒன்று ஸார், நம் காண்டீன் வடையை நான் சாப்பிட்டு இன்றுடன் சரியாக 2 வருடங்கள் முடிந்து விட்டது. [Retired on 24.02.2009].

    வியாழக்கிழமை தோறும் மிகச்சரியாக 11.50 க்கு சுடச்சுட மொறுமொறு வென்று, வெங்காயம் போட்ட மெதுவடை தருவார்கள் பாருங்கள், அடடா அதன் சுவையே தனி தான் சார்.

    அதுபோல எவ்வளவோ வியாழக்கிழமைகளில் அரை டஜன் வடைகளையும், தயிர் சாதமும் மட்டும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு, வேறு எதுவுமே வாங்கிச் சாப்பிடாமல் நான் சென்றதுண்டு.

    ”அந்த .. நாள் .. ஞாபகம் .. நெஞ்சிலே .. வந்ததே .. நண்பனே நண்பனே; இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே” உயர்ந்த மனிதன் என்ற சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மேஜர் சுந்தரராஜனுடன் சேர்ந்து பாடுவதாக வரும்
    அந்தக் காட்சி தான் எனக்கு இன்று என் நினைவுகளில்.

    பல நாட்கள், தாய் போல என் பசியாற்றிய, நம் BHEL Canteen னுக்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.

    பதிலளிநீக்கு
  21. எலிக்கூண்டில் வடை வைப்பதற்கு கூட கைராசியா!
    நம்மூர் எலிகள் மசால் வடை சாப்பிடும் வட இந்திய எலிகள் பிரெட் பக்கோடாவும், கச்சோரியும், சமோசாவும் சாப்பிடுமோ!
    (காய்கறி சந்தையில் எலிப்பொறி வாங்கிக் கொண்டிருந்த தமிழ்க் காரர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தது.)

    பதிலளிநீக்கு
  22. கோவை2தில்லி said...
    //எலிக்கூண்டில் வடை வைப்பதற்கு கூட கைராசியா!
    நம்மூர் எலிகள் மசால் வடை சாப்பிடும் வட இந்திய எலிகள் பிரெட் பக்கோடாவும், கச்சோரியும், சமோசாவும் சாப்பிடுமோ!
    (காய்கறி சந்தையில் எலிப்பொறி வாங்கிக் கொண்டிருந்த தமிழ்க் காரர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தது.)//

    ராமசுப்பு தன் கையால் வைக்க பயந்து கொண்டு, “கைராசி” என்று சொல்லி சமாளிக்கிறார்.

    இந்த எலிப் பிரச்சனை அகில இந்திய, ஏன் அகில உலகப் ப்ரச்சனையாக கூட இருக்குமோ? நீங்கள் சொல்லுவதும் நல்ல தமாஷாகத் தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
  23. தேர்தல் வாக்குறுதியை நம்பி நாம் ஓட்டளிக்கச் செல்வது போல,

    தான் பல நாள் முயன்று, பல நூற்றுக்கணக்கான எலிகள் பிடித்த அனுபவத்தை எடுத்துரைத்தார்.

    ’ரெண்டு ரூபாய் போட்டு வாங்கிய பெரிய சைஸ் மசால்வடை இப்போது தண்டமாகி விட்டது. அதை வாங்கிய உடன் சூடாக நாமாவது புட்டு வாயில் போட்டிருக்கலாம்’ என நினைத்துக் கொண்டாள் அவரின் தர்மபத்தினி அம்புஜம்.

    -இந்த வரிகள்லயெல்லாம் படிக்கறப்பவே வாய்விட்டுச் சிரிச்சுட்டேன். நல்ல Humour!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிரஞ்சனா April 21, 2012 6:28 PM
      தேர்தல் வாக்குறுதியை நம்பி நாம் ஓட்டளிக்கச் செல்வது போல,

      தான் பல நாள் முயன்று, பல நூற்றுக்கணக்கான எலிகள் பிடித்த அனுபவத்தை எடுத்துரைத்தார்.

      ’ரெண்டு ரூபாய் போட்டு வாங்கிய பெரிய சைஸ் மசால்வடை இப்போது தண்டமாகி விட்டது. அதை வாங்கிய உடன் சூடாக நாமாவது புட்டு வாயில் போட்டிருக்கலாம்’ என நினைத்துக் கொண்டாள் அவரின் தர்மபத்தினி அம்புஜம்.

      //இந்த வரிகள்லயெல்லாம் படிக்கறப்பவே வாய்விட்டுச் சிரிச்சுட்டேன். நல்ல Humour!//

      தங்களின் அன்பான வருகைக்கும், வாய்விட்டுச் சிரித்ததற்கும், நல்ல Humour! என ரசித்துச் சொன்னதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  24. எலித் தொல்லையை ஒழிக்க ராமசுப்பு எலிப்பொறி வாங்குறது சரி. பாவம் மனுஷன் ஹோட்டலுக்கு போய் மதிய சாப்பாட்டிற்கும் செலவு செய்வாரா..செத்த கூலி கால் பணம் செம கூலி முக்கால் பணம் .ஆக மொத்த வடை போச்சு.

    பதிலளிநீக்கு
  25. ராதா ராணி October 4, 2012 9:34 PM
    //எலித் தொல்லையை ஒழிக்க ராமசுப்பு எலிப்பொறி வாங்குறது சரி. பாவம் மனுஷன் ஹோட்டலுக்கு போய் மதிய சாப்பாட்டிற்கும் செலவு செய்வாரா..செத்த கூலி கால் பணம் செம கூலி முக்கால் பணம். ஆக மொத்த வடை போச்சு.//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நகைச்சுவையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

    //ஆக மொத்தம் வடை போச்சே//

    ஆம் போயே போச்சு ! ; )))))

    பதிலளிநீக்கு
  26. அபார்ட்மென்டில் செயலாளராக இருப்பதில் என்னென்ன சங்கடங்கள் வருகின்றன பார்த்தீர்களா?

    பதிலளிநீக்கு
  27. அடடா! வடை போச்சே. எலிக்கும் இல்லாம, மாமிக்கும் இல்லாம இப்படி அநியாயமா லிப்டில் சிதறி குப்பைத் தொட்டிக்கு போச்சே. நல்ல வேளை நைசா லிப்டை திறந்தே வெச்சு, ராத்திரி எலி அதுக்குள்ளா போனதும் அத பிடிக்கலாம்ன்னு, கொக்கு தலையில வெண்ணையை வெச்சு பிடிக்கலாம்ன்னு ஐடியா எல்லாம் பண்ணாம இருந்தாரே அந்த ராமசுப்பு.

    பதிலளிநீக்கு
  28. சுத்தமான எலிக்கூண்டா????ஒரு மசால வடை வேர நஷ்டமாச்சே. சரி எப்படித்தான் பிடிக்கராங்கன்னு பொறுத்திருந்து பாக்கத்தானே போரோம்

    பதிலளிநீக்கு
  29. எலித் தொல்லனு ஓட்டலுல சாப்பாடா எலிக்கூண்டு வாங்க நல்லா டிப்ஸ் சொல்லினிங்க

    பதிலளிநீக்கு
  30. எலிக்கூடு வாங்க கூட இத்தனை விஷயம் யோசிக்கணுமா. எல்லா எலிகளும் ரொம்ப ஸ்மார்ட் ஆயிடுத்துபோல இருக்கு மசால் வடை வாசனை வந்தாலே நம்மள பிடிக்கதான் ஏதோ சூது நடக்குதுனு உஷார் ஆயிடறது.

    பதிலளிநீக்கு
  31. //’ரெண்டு ரூபாய் போட்டு வாங்கிய பெரிய சைஸ் மசால்வடை இப்போது தண்டமாகி விட்டது. அதை வாங்கிய உடன் சூடாக நாமாவது புட்டு வாயில் போட்டிருக்கலாம்’ என நினைத்துக் கொண்டாள் அவரின் தர்மபத்தினி அம்புஜம்.//...சரிதான்..ஒரு வடையாச்சும் சாப்பிட்ட சுவாரசியம் இருந்திருக்கும்...வாட் நெல்ஸ்ட்...?

    பதிலளிநீக்கு
  32. //’ரெண்டு ரூபாய் போட்டு வாங்கிய பெரிய சைஸ் மசால்வடை இப்போது தண்டமாகி விட்டது. அதை வாங்கிய உடன் சூடாக நாமாவது புட்டு வாயில் போட்டிருக்கலாம்’ என நினைத்துக் கொண்டாள் அவரின் தர்மபத்தினி அம்புஜம்.

    லிஃப்டினுள் சிந்திச் சிதறிய வடைத்தூள்களை செயலாளரின் மனைவி என்ற முறையில் அவளே சுத்தம் செய்ய வேண்டியதாகி விட்டது, அவளுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது.
    //
    வடை போச்சோ?

    பதிலளிநீக்கு
  33. ஹோட்டலில் போய் சாப்பிட எவ்வளவு செலவாகி இருக்கும். அதெல்லாம் செலவா தெரியல. மசால் வடைக்கு ரெண்டு ரூவா கொடுத்தது வேஸ்டா போச்சேனு புலம்புறாங்களே. பரந்தாமன் ராசியான எலிக்கூடு கொடுத்தும் கூட பால்காரர் அந்த கூண்டை உபயோகப்படுத்த வேண்டாம்னு காரணங்களை அடுக்கறாரே. புதுக்ககூண்டுவாங்கி அதுவாவது ராசியா இருந்து அந்த பொல்லாத எலி அதுல மாட்டணுமே. ராமசுப்பு ஃபேமிலில எல்லாரும் ரொம்ப டென்ஷன்ல இருக்கா.நம்ம வீட்ல எலி புகுந்து அட்டகாசம் பண்ணினா அப்ப தெரியும் அந்த அவஸ்தை.பாக்கலாம். எலி மாட்டுதா இல்லியான்னு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... March 24, 2016 at 6:16 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஹோட்டலில் போய் சாப்பிட எவ்வளவு செலவாகி இருக்கும். அதெல்லாம் செலவா தெரியல. மசால் வடைக்கு ரெண்டு ரூவா கொடுத்தது வேஸ்டா போச்சேனு புலம்புறாங்களே.//

      அதானே ! [வடை தூள்தூளாகச் சிதறியதால் அவள் வாயிலிருந்து சிதறி விழுந்த வார்த்தைகள் இவை.]

      //பரந்தாமன் ராசியான எலிக்கூடு கொடுத்தும் கூட பால்காரர் அந்த கூண்டை உபயோகப்படுத்த வேண்டாம்னு காரணங்களை அடுக்கறாரே.//

      ஏதோ அவரால் ஆன கைங்கர்யம் ... ஏற்கனவே குழம்பிப்போய் உள்ள ராமசுப்பு தம்பதியை மேலும் குழப்பி விடுகிறார்.

      //புதுக்ககூண்டுவாங்கி அதுவாவது ராசியா இருந்து அந்த பொல்லாத எலி அதுல மாட்டணுமே. ராமசுப்பு ஃபேமிலில எல்லாரும் ரொம்ப டென்ஷன்ல இருக்கா.//

      ஆமாம்.... பாவம் அவர்கள் எல்லோரும்.

      //நம்ம வீட்ல எலி புகுந்து அட்டகாசம் பண்ணினா அப்ப தெரியும் அந்த அவஸ்தை.//

      கரெக்ட்டூஊஊஊ.

      //பாக்கலாம். எலி மாட்டுதா இல்லியான்னு.//

      எலி மாட்டினால் அப்புறம் என் கதையின் சுவாரஸ்யமே போய்விடுமே. அதை அவ்வளவு சீக்கரம் மாட்டவிட்டால் அப்புறம் என் இந்தத்தொடர் என்ன ஆவது?

      இந்தத்தொடரின் இறுதிப் பகுதிவரையாவது அதை நான் ஓடவிட்டு, இவர்களிடமிருந்து தப்பிக்க விடவேண்டும் அல்லவா ! :)

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. - VGK

      நீக்கு