என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 26 பிப்ரவரி, 2011

இனிய செய்தி - 4

06.03.2011 தேதியிட்டு 
இன்று வெளியான கல்கி வார இதழ் - பக்கம் 81 இல்
”இதுக்கு எழுதவா ஜோக்ஸ்”
 பகுதியில் நான் எழுதிய நகைச்சுவைத் துணுக்கு இடம் பெற்றுள்ளது 
என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


போட்டி அறிவிப்பு செய்யப்பட்ட கல்கி இதழ் பக்கம் 67/ 13.02.2011 போட்டிக்கு வரையப்பட்டிருந்த ஓவியத்தின் படவிளக்கம்:




ஒருவள் காதில் ஸ்பீக்கர் ஆன் செய்த செல் போன்.
யாரோ ஒரு ஆண் மகன் எங்கிருந்தோ அழைத்துப் பேசுகிறார்.  
(அழைப்பவர் அவள் கணவனாகவும் இருக்கலாம்) 
அவள் விழிகளில் மிகவும் வியப்புடன் ஒரு பார்வை; 
அவள் அருகே போனில் வந்துள்ள செய்தியைத் தானும் 
ஆச்சர்யத்துடன் கேட்கும் நாயோ பூனையோ 
போன்ற அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணி ஒன்று.

மேலே கொடுத்துள்ள சூழ்நிலைக்கு நான் எழுதி அனுப்பி
தேர்வாகி பிரசுரிக்கப்பட்டுள்ள ஜோக் இப்போது இங்கே:

“என்னங்க, நான் தாங்க பேசறேன். ஃபோனை 
அந்த நாய்கிட்ட கொடுன்னு சொல்றீங்க!”

“ஸாரி டியர், ஃபோனை எடுத்தது 
நம்ம ஜிம்மியாக்கும்னு நினைச்சேன்.”

26 கருத்துகள்:

  1. நீங்கள் படத்தைவைத்து நகைச்சுவையை படைத்தீர்கள்
    நான் உங்கள் நகைச்சுவை வரிகளைப் படித்து படத்தை
    கற்பனை செய்துபார்த்தேன்.இரண்டும் அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அன்புடன் வருகை தந்து, என்னுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட அன்பு உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ’தொடரும் எலிவேட்டையில்’ நாளை மீண்டும் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  3. raji said...
    //super sir//

    Respectable Mrs. Raji Madam,
    My Sincere, Exclusive and Special Thanks to you for your comments by taking this joke in a very casual & sportive manner. You are really very Great. I very much appreciate your specialty & individuality.

    பதிலளிநீக்கு
  4. உங்களுக்கு ஆனாலும் ரொம்ப லொள்ளு தான்..

    பதிலளிநீக்கு
  5. ரிஷபன் said...
    //உங்களுக்கு ஆனாலும் ரொம்ப லொள்ளு தான்..//

    எழுத்துலக குருநாதர் அவர்களின் அபூர்வ வருகைக்கும் கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    புண்ணிய நதிகளில் குருநாதர் அடிக்கடி ஸ்நானம் செய்வதும், அவர் ஸ்நானம் செய்யும் அதே நீர் நம் மீதும் பட்டால் நமக்கும் மோட்சம் என்று சிஷ்யர்கள், அவருக்குப் பின்னால் சற்று தள்ளி ஓரமாக குளிப்பதும் உலக வழக்கம்.

    அதுபோலவே “கல்கி” என்னும் புனித நீர் பிரவாகத்தில் அடிக்கடி நீங்கள் ஸ்நானம் செய்யும் போதெல்லாம், எனக்கும் உங்கள் பின்னால் சற்று தள்ளி ஒரு ஓரமாகவாவது குளிக்க வேண்டும் என்ற நெடுநாள் ஆசை.

    உங்களைப் போன்ற படைப்பளிகளின் படைப்புகளுக்கு (Quality) புனிதம் என்ற முத்திரை கொடுத்து அடிக்கடி ’கல்கி’ என்ற மஹாந்தியில் ஸ்நானம் செய்ய பூர்ணகும்பத்துடன் வரவேற்கிறார்கள்.

    என் நிலைமை அப்படியா? ஏதோ இந்த ஆளும் விடாமல் ஏதேதோ ‘ரொம்பத்தான் லொள்ளு’ செய்கிறான். போனாப்போகிறது, ஒரு ஓரத்தில் இவனையும் குளிக்க அனுமதிப்போம் என்று நினைத்து, அனுமதித்துள்ளார்கள்.

    எல்லாம் உங்கள் குருகடாக்ஷம் தான் காரணம்.

    வீட்டில் என் மனைவி கூட, இது ஒரு நகைச்சுவை ஜோக் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், இது போல பெண்களை இழிவு படுத்தி எழுதக் கூடாது என்று என் மீது கோபபடுகிறாள்.

    முதன் முதலாக கல்கியில் ஒரு ஜோக் வெளிவந்துள்ளதைக் கூட வீட்டில் பெருமையாக மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்ள முடியாத பரிதாப
    நிலையில் நான், இன்று.

    இந்தக் கருத்தை தான் திரு ரமணி என்பவர் “பிரசவ சங்கல்ப்பம்’ என்ற தலைப்பில் வெகு அழகாக ஒரு கவிதையில் சமீபத்தில் எழுதியுள்ளார். முடிந்தால் தாங்களும் yaathoramani.blogspot.com சென்று படித்து மகிழவும்.

    தங்கள் பிரியமுள்ள vgk

    பதிலளிநீக்கு
  6. சூழ்நிலைக்குத் தக்கவாறு நகைச்சுவை என்பது சுவைதான்..

    வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  7. நிகழ்காலத்தில்... said...
    //சூழ்நிலைக்குத் தக்கவாறு நகைச்சுவை என்பது சுவைதான்..

    வாழ்த்துகள் நண்பரே//

    தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் நகைச்சுவை உணர்வுக்கு என் வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  9. Respectable Mrs. கோவை2தில்லி Madam,
    My Sincere, Exclusive and Special Thanks to you for your comments by taking this joke in a very casual & sportive manner. You are also really very Great. I very much appreciate your specialty & individuality.

    பதிலளிநீக்கு
  10. கல்கியில் ப்ங்கு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. இராஜராஜேஸ்வரி said...
    //கல்கியில் ப்ங்கு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.//

    தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  12. அருமையான நகைச்சுவை. ஆனால் லாஜக் எங்கேயோ இடிக்கிறது மாதிரி எனக்குத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  13. இது போலல்லாம் ஜோக் எழுதினா கல்கி ல மட்டுமா வரும் தமிழ் ல வர எல்லா பத்திரிகைகளிலும் வரும்

    பதிலளிநீக்கு
  14. ஹா ஹா இது போல பொஸ்தவத்துல வந்ததலாம் இங்கியும் போடதுமாகாட்டியும்

    பதிலளிநீக்கு
  15. ஹாஹா நல்லாதான் இருக்கு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. ஹா...ஹா...சரீரீரீ...ஈவினிங் அவரு வீட்டுக்கு போனாரான்னு தெரியலயே...

    பதிலளிநீக்கு
  17. ஸாரி ஸார். இது ரொம்ப சீப் காமெடியா இருக்கு.உங்க கிட்டேந்து இப்படி ஒரு எழுத்து வந்திருக்ககூடாது. உங்க எழுத்துக்களின் பரம விசிறி இப்படி சொல்வதை தப்பாக நினைக்க கூடாது.உங்க திங்கிங்க் தாட்ஸ் எல்லாமே உயர்வான விஷயங்களைக்கொண்டிருக்கும். மத்தவங்க மாதிரி ஆஹா... ஓஹோ ன்னுலாம் சொல்ல முடியல. நான் மனதில் பட்டதை ஓபனாக சொல்லிவிடுவேன். தங்களுக்கு தப்பாக தோணியிருந்தால் ஐயாம் வெரி ஸாரி.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... March 30, 2016 at 6:12 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஸாரி ஸார். இது ரொம்ப சீப் காமெடியா இருக்கு.உங்க கிட்டேந்து இப்படி ஒரு எழுத்து வந்திருக்கக்கூடாது.//

      நான் இதை அப்படியே மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.

      //உங்க எழுத்துக்களின் பரம விசிறி இப்படி சொல்வதை தப்பாக நினைக்க கூடாது.//

      என் எழுத்துக்களின் பரம விசிறியான தங்களின் கருத்துக்களை நான் தப்பாக நினைத்துக்கொள்ளவே மாட்டேன்.

      //உங்க திங்கிங்க் தாட்ஸ் எல்லாமே உயர்வான விஷயங்களைக்கொண்டிருக்கும்.//

      இதனைக்கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      இதனை நான் எப்படி எழுதி அனுப்பினேன் என எனக்கே மிகவும் கில்டியாகத்தான் ஒரு ஃபீலிங் இருந்தது என்பதே உண்மை. இது வெளியிடப்படாவிட்டால், அது பற்றிய பிரச்சனையே எழுந்திருக்காது. அதனால்தான் இதனை ஸ்போர்டிவ் காமெடியாக மட்டுமே எடுத்துக்கொண்டுள்ள சில பெண்மணிகளிடம் நான் என் ஸ்பெஷல் நன்றிகளைக் கூறிக்கொண்டுள்ளேன்.

      //மத்தவங்க மாதிரி ஆஹா... ஓஹோ ன்னுலாம் சொல்ல முடியல. நான் மனதில் பட்டதை ஓபனாக சொல்லிவிடுவேன்.//

      அதுதான் நல்லது. அதுதான் எனக்கும் பிடிக்கும்.

      //தங்களுக்கு தப்பாக தோணியிருந்தால் ஐயாம் வெரி ஸாரி.....//

      நான் தப்பாகவே எடுத்துக்கொள்ளவில்லை. தாங்கள் சொல்லியுள்ளது மட்டுமே சரியாகும். என் மனைவியும் என்னிடம் அதையே தான் அன்று சொன்னார்கள். அதையும் மேலே ஓர் இடத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆணித்தரமான நல்லதொரு விமர்சனக்கருத்துக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

      நீக்கு
  18. பயந்துகிட்டேதான் கமெண்ட் போட்டேன்.. தாங்க் காட்....... நீங்க தப்பா எடுத்துக்கல..... நன்றி ஸார்......

    பதிலளிநீக்கு