”என்ன கணக்கு வாத்யார் அய்யா, செளக்யங்களா” ப்யூன் தமிழ்மணி தலையில் கட்டியிருந்த முண்டாசுத் துணியை இடுப்பில் கட்டியவாறு கணக்கு வாத்யார் வீட்டை நெருங்கினான்.
“வா..ய்..யா .... தமிழ்மணி! அப்படியே திண்ணையிலே உட்காரு; என்ன இவ்வளவு தூரம். உன் பையன் மாசிலாமணிக்கு மெடிகல் சீட்டு கிடைச்சுடுத்தா?”
“அய்யா அதைப்பத்திப் பேசிட்டுப் போகலாம்னு தான் வந்தேனுங்கய்யா. நேரிடையா மெடிகல் சீட் கிடைக்காது போல தெரியுது ஐயா. 'பீ.டி.எஸ்.' ன்னு ஏதோ பல் டாக்டர் படிப்பாமில்லே, அது தான் கிடைக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்கய்யா. என்ன செய்யறதுன்னு புரியாம இருக்குதய்யா”
“பல் டாக்டர் படிப்பும் நல்லது தானே. அது கிடைச்சா அதிலேயே சேர்த்து விட்டுடு தமிழ்மணி; அதுவே கிடைக்காம எவ்வளவு பேருங்க தவிக்கறாங்க தெரியுமா?”
“என்னய்யா நீங்க போயி இது போலச் சொல்றீங்க ; நல்லா படிக்கற பையன், உங்களுக்கே நல்லாத் தெரியும். நிறைய மார்க் வாங்கியிருந்தும் அவன் ஆசைப்படற டாக்டர் படிப்பு படிக்க வைக்கணும்னு நானும் எவ்வளவு கஷ்டப்பட்டு என்னுடைய சேமிப்பு, சொத்து பத்து எல்லாவற்றையும் விற்றும், கடைசியிலே அவனைப் போயும்போயும் இந்தப் பல் டாக்டர் படிப்புக்குத்தான் அனுப்பணும் போலிருக்கே!”
என்னய்யா விஷயம் புரியாம இப்படிப் பேசுறே? சாதாரணத் தலைவலி, வயிற்றுவலின்னு வருகிற நோயாளிகளை விட பல்வலி என்று வரும் நோயாளிகள் 32 மடங்கு அதிகமய்யா. வருமானம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் தொழிலய்யா, இந்தப் பல் டாக்டர் தொழில்.
“கொஞ்சம் விவரமா புரியும்படியாகச் சொல்லுங்கய்யா” வாயைப் பிளந்து 32 பற்களும் தெரியும் படி கணக்கு வாத்யாரை நோக்கினான் தமிழ்மணி.
“நம்ம நாட்டோட மொத்த ஜனத்தொகை எவ்வளவுன்னு உனக்குத் தெரியுமா?” “130 கோடிக்கு மேல் இருக்கும் என்று அன்னைக்கு நம்ம சமூகவியல் வாத்யார் சண்முகம் வகுப்பறையில் பாடம் நடத்திக்கிட்டு இருந்தார், அய்யா”.
“கரெக்ட்டு ..... ஒவ்வொரு மனுஷனுக்கும் மொத்தம் எவ்வளவு பல்லு இருக்குன்னு உனக்குத் தெரியுமா?”
“32 பல்லுங்கன்னு சொல்லுவாங்க அய்யா”
“அப்போ பல்லு முளைக்காத குழந்தைகளும், முழுப்பல்லும் போன கிழடுகளும் என்று ஒரு 30 கோடி பேர்களை நீக்கி விட்டு கணக்குப் பார்த்தால் கூட, ஆளுக்கு 32 பல்லு வீதம் 100 கோடி பேருக்கு, மொத்தமாக ஒரு 3200 கோடி பற்கள் நம் நாட்டில் தேறும் அல்லவா?”
“ஆமாம் அய்யா; இருக்கலாம்; அதற்கென்ன இப்போ?”
“இந்த 3200 கோடி பற்களில், ஆரோக்கியமாகப் பராமரிக்கப்பட்டு தற்சமயம் அவஸ்தை ஏதும் இல்லாத பற்கள் என்று ஒரு 80 சதவீதம் பற்களை விட்டு விட்டால் கூட, மீதி 20 சதவீதம் அதாவது 640 கோடி பற்கள், ஆடும் பற்களும், சிகிச்சை நாடும் பற்களும் தான் என்பதை ஒத்துக் கொள்கிறாயா?”
”நீங்க சொல்வது ஏதோ கொஞ்சமாகப் புரிவது போல இருக்குது அய்யா”
கணக்கு வாத்யார் இதுவரை சொன்ன சமாசாரங்களை ஒரு பேப்பரில் அழகாக முத்து முத்தாக (முத்துப் பற்கள் போல) தமிழ்மணிக்குப் புரிவது போல பட்டியலிட்டார்.
“இந்தப் பாடாவதிப் பற்களான 640 கோடிகளை, ஆண்டு முழுவதும் பரவலாக சிகிச்சை செய்ய வருகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும்,
[ 640,00,00,000 / 365 நாட்கள் = 1,75,34,246 ] தினசரி சராசரியாக ஒரு கோடியே எழுபத்து ஐந்து லட்சத்து முப்பத்து நாலாயிரத்து இரு நூற்று நாற்பத்தாறு பற்களுக்கு அவசர வைத்தியம் பார்க்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. உனக்கு இது வரை நான் போட்ட இந்தக் கணக்கு புரிகிறதா ... இல்லையா?”
”கணக்கு வாத்யாராகிய நீங்க சொன்னீங்கன்னா, அது எனக்குப் புரியுதோ இல்லையோ, அது சரியாத்தான் இருக்கும். மேற்கொண்டு சொல்லுங்க அய்யா”
”நம் நாடு பூராவும் சேர்த்து ஒரு லட்சம் பல் டாக்டர்கள் இருப்பார்கள் என்று ஒரு கணக்குக்கு வைத்துக் கொண்டாலும் (அவ்வளவு பேர்கள் இருப்பது நிச்சயம் சந்தேகமே) , தினமும் ஒவ்வொரு பல் டாக்டரும் [ 1,75,34,246 / 1,00,000 = 175 ] சுமார் 175 பற்களுக்குக் குறையாமல் உடனடி வைத்தியம் செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது.”
“ஒரு பல்லுக்கு ஐம்பது ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், பொழுது விடிந்து பொழுது போனால் தினமும் ஒரு எட்டாயிரம் ரூபாய்க்கு மேல் கல்லா கட்டிவிடலாம் போலத் தெரியுதே, அய்யா” !
”இப்போ தான் நீ கரெக்டா பாய்ண்ட்க்கே வந்திருக்கே! .... ஆனால் அவசரப் படாம நான் சொல்றதை முழுவதுமாகக் கேளு”, தமிழ்மணி.
“சரிங்க அய்யா .... சொல்லுங்க அய்யா.....”
“அது மட்டுமா, தமிழ்மணி; ஏழையோ, பணக்காரனோ, நல்ல பதவியில் இருப்பவனோ, அரசாங்க அதிகாரியோ, அரசியல் வாதியோ எவனாக இருந்தாலும், பல்லைக் காட்டிக்கொண்டு உன் பையனிடம் தானே வந்தாகணும்?”
”நீங்க இப்படிப் பால் கணக்கு போடுவது போல, பல் கணக்கைப் புட்டுப்புட்டு வைப்பதைக் கேட்கும் போது, என் உடம்பெல்லாம் புல்லரிக்குது அய்யா”
இரு இரு அவசரப்படாதே; சொத்தைப்பல், பூச்சிப்பல், பல் கூச்சம், பல் அரணை, பல்லில் ரத்தம் வடிதல், பல்லைச் சுற்றி ஈறு வீக்கம், ஆடும் பற்கள், கறை மற்றும் காரை படிந்த பற்கள், இடைவெளி அடைப்பு செய்ய, பல் சுத்தம் செய்ய, விபத்தில் அரைகுறையாக உடைந்த பற்களை செப்பனிட, பல்லை அழகு படுத்த, விழுந்த பல்லை மட்டும் மீண்டும் கட்டிக்கொள்ள, பல்செட் முழுவதுமாக மாற்ற எனப் பலவித வாடிக்கையாளர்கள் தினமும் உன் மகனைப் புடை சூழ்ந்து நிற்க, மாதந்தோறும் பல லட்சங்களை நீ எண்ணி, பத்திரப் படுத்தவே உனக்கு நேரம் பத்தாது.
“அய்யா, நீங்க சொல்லும் கணக்கைக் கூட்டிக்கழித்துப் பார்த்தால், பல் டாக்டர் படிப்பில் தான் நல்லாச் சில்லறையை பார்க்க முடியும் போலத் தெரிகிறது, அய்யா”.
“சில்லறையா ! தினமும் ஆயிரம் ஆயிரமா, மாதம் முழுவதும் லட்சம் லட்சமா ரூபாய் நோட்டுகள் வந்துக் குவியுமய்யா”
“அய்யா, நீங்க கணக்கு வாத்யார் மட்டுமல்ல; குழப்பமான நேரத்தில் என் கண்களைத் திறந்த தெய்வமய்யா” எனத் தன் அனைத்துப் பற்களும் தெரிய சிரித்த வண்ணம் விடைபெற்றன், தமிழ்மணி.
ஒரு சில வருடங்கள் ஓடி விட்டன. அன்றொரு நாள், பள்ளியில் காலை பிரார்த்தனை முடிந்ததும், பள்ளி மணியை அவசர அவசரமாக அடித்து விட்டு, வருகைப் பதிவேடு, சாக்பீஸ்கள் சகிதம், ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்ற தமிழ்மணி கணக்கு வாத்யாரை மீண்டும் சந்திக்கிறார்.
“அய்யா, இன்னிக்கு சாயங்காலம் உங்களை சந்திச்சு கொஞ்சம் தனியாப் பேசணும்” என்றான் தமிழ்மணி.
“இன்று எனக்குக் கடைசி பீரியடு ரெஸ்ட் தான். மூன்றரை மணிக்கு ரெஸ்ட் ரூமுக்கு வா; நாம் ப்ஃரீயாக பேசலாம்” என்றார் கணக்கு வாத்யார்.
கடைசி பீரியட் ஆரம்ப மணி அடித்து விட்டு ரெஸ்ட் ரூமுக்குச் சென்றான் தமிழ்மணி.
”என்னய்யா தமிழ்மணி, உன் கஷ்டமெல்லாம் விலகி நல்ல காலம் பிறக்கப் போகிறது. உன் பையன் பல் டாக்டர் படிப்பு முடிந்து அடுத்த மாதம் வந்துடுவான் என்று நினைக்கிறேன்” என்றார் சரியாகக் கணக்குப் போட்டுக்கொடுத்த, கணக்கு வாத்யார்.
“வாத்யார் அய்யா .... நாம ஒரு கணக்குப் போட்டா தெய்வம் ஒரு கணக்குப் போடுது. நேத்து என் பையனும், அவனுடன் பல் டாக்டருக்குப் படிக்கும் ஒரு பொண்ணும் வீட்டுக்கு வந்தாங்க. இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க போலிருக்கு” என்றான் தமிழ்மணி.
“ரொம்பவும் நல்ல சமாச்சாரம் தானே; பழம் நழுவிப் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்தது போலல்லவா இருக்கு நீ சொல்லும் இந்த இனியச் செய்தி. மகன், மருமகள் இருவருமே பல் டாக்டர்கள் என்றால் உன் ஸ்டேடஸ் உயர்ந்து போய் விடும். இனி நீ ஸ்கூலிலே மணி அடித்து ப்யூன் வேலையெல்லாம் செய்ய வேண்டியதில்லை” என்றார் கணக்கு வாத்யார்.
“அய்யா, அவசரப்படாம, நான் இப்போ சொல்றதை தயவுசெய்துக் காது கொடுத்துக் கேளுங்க. அவங்க ரெண்டு பேரும், மேல் படிப்புக்காக வெளி நாட்டுக்குப் போகப் போறாங்களாம்.
என் பையனுக்கான பயணச்செலவு, மேற்படிப்புச் செலவு எல்லாமே அந்தப் பொண்ணோட அப்பாவே பார்த்துக் கொள்வாராம்.
மொத்தத்தில் என் பையனும் அவர்கள் விரித்த வலையில் விழுந்து விட்டான் என்று நல்லாவே தெரிகிறது.
அவர்கள் அவனை வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொண்டு ஒரு கொத்தடிமை போல நடத்துவார்கள் என்று நன்றாக என்னால் உணர முடிகிறது.
’எங்கேயோ என் மகன் நன்றாக இருந்தால் சரி’ என்று தான் படிப்பறிவு இல்லாத நான் போக வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன்.
இந்த மேற்படிப்புக்கு வெளிநாடு செல்லும் விஷயத்தை, ஏதோ ஒரு நண்பனுக்குச் சொல்லும் தகவல் போல, மிகச் சாதாரணமாக அவன் என்னிடம் சொல்லி விட்டுப் போனது தான், என் பற்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பிடுங்கி எறிந்தது போல உள்ளது எனக்கு” என்று கண் கலங்கியபடி தமிழ்மணி கூறினான்.
தமிழ்மணியின் இந்தப் புதிய கணக்கிற்கு விடை கூற முடியாமல் கணக்கு வாத்யாரே முழிக்கலானார்.
அதே நேரம் தமிழ்மணியைக் காணாததால், ஸ்கூல் விடும் மணி, வேறு யாராலோ மிக வேகமாக அடிக்கப்பட்டது.

-o-o-o-o-o-o-o-
பல்லுக்கு வழி சொன்ன கணக்கு வாத்தியாரிடம்
பதிலளிநீக்குசொல்லுக்கு வழி தேடவைத்து விட்டான் ஜூனியர் தமிழ்மணி.
உங்களை அடிக்கடி பற்கள் ரொம்பத்தான் தொந்தரவு செய்வதாக பிற உறுப்புகள் பேசிக்கொள்கின்றன.
//என் பற்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பிடுங்கி எறிந்தது போல உள்ளது எனக்கு// சிந்தனை முழுக்க மகனின் படிப்பின் மேல்!
பதிலளிநீக்குதிடீர்னு விஜயகாந்த் - ரமணா மாதிரி ஸ்டாடிஸ்டிக்ஸ் பின்ன ஆரம்பிச்சிட்டீங்க!
இதை படித்த பிறகு எனக்கும் பல் படிக்க ஆசை வருகிறது. ஆனால் வருங்கால உலகம் எனக்காகக்
பதிலளிநீக்குகாத்திருக்கவே என் ஆசையை தூற வீசுகிறென்
கணக்கு வாத்தியார் போட்ட கணக்குக்கு பதில் கணக்கு கடவுள் போட்டு விடையை மாத்திட்டான் போல...!
பதிலளிநீக்குஇந்த பல் கணக்கை படித்ததும் என் பற்கள் டைப் அடிக்கின்றதே!!!!!!!
பதிலளிநீக்குபல்லு போனா சொல்லு போச்சு... பல்லு படிப்பு படிக்கப் போனா சொந்தம் போச்சு போலருக்கு.. அட்டகாசம் சார்!
பதிலளிநீக்குஆஹா, கணக்கு வாத்தியார் லட்சத்திலேயும் கோடியிலும் கணக்குப் பண்ணி புரிய வைத்ததை, இப்படி தப்புக்கணக்கா ஆக்கிட்டானே பல் டாக்டர்!
பதிலளிநீக்குதந்தைக்கு மனக் கணக்கு
பதிலளிநீக்குபிள்ளைக்கு பணக் கணக்கு
தந்தை-அசைகின்ற கீழ் வரிசை பற்கள்
மகன்- அசையா மேல் வரிசைப் பற்கள்
சுந்தர்ஜி said...// உங்களை அடிக்கடி பற்கள் ரொம்பத்தான் தொந்தரவு செய்வதாக பிற உறுப்புகள் பேசிக்கொள்கின்றன.//
பதிலளிநீக்குஅடடா, இந்த ரகசியத்தை உங்கள் காதுபட பேசிக் கொண்டனவா?, பேசிக்கொள்கிறேன் அவைகளை.
middleclassmadhavi said...//திடீர்னு விஜயகாந்த் - ரமணா மாதிரி ஸ்டாடிஸ்டிக்ஸ் பின்ன ஆரம்பிச்சிட்டீங்க!//
தமிழ்மணிக்கு ஆலோசனை கூறும் கதாபாத்திரம் ஒரு கணக்கு வாத்யார் அல்லவா, அதனால் தான்.
ramanaa said...// இதை படித்த பிறகு எனக்கும் பல் படிக்க ஆசை வருகிறது. ஆனால் வருங்கால உலகம் எனக்காகக் காத்திருக்கவே என் ஆசையை தூற வீசுகிறேன்// வருங்கால உலகம் உங்களுக்காகக் காத்திருப்பதாலா, காத்திருக்காது என்பதாலா; எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் தான்.
ஸ்ரீராம் said...// கணக்கு வாத்தியார் போட்ட கணக்குக்கு பதில் கணக்கு கடவுள் போட்டு விடையை மாத்திட்டான் போல...!
ஆம், ”ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்”; அப்படித்தான்.
கோவை2தில்லி said...// இந்த பல் கணக்கை படித்ததும் என் பற்கள் டைப் அடிக்கின்றதே!!!!!!!//
தங்களுடையது ஒரு புது ’டைப்’பான பதிலாக உள்ளது.
RVS said...//பல்லு போனா சொல்லு போச்சு... பல்லு படிப்பு படிக்கப் போனா சொந்தம் போச்சு போலருக்கு.. அட்டகாசம் சார்!//
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சார்.
வெங்கட் நாகராஜ் said...//ஆஹா, கணக்கு வாத்தியார் லட்சத்திலேயும் கோடியிலும் கணக்குப் பண்ணி புரிய வைத்ததை, இப்படி தப்புக்கணக்கா ஆக்கிட்டானே பல் டாக்டர்!// ஆமாம் வெங்கட். அந்தக் கதா பாத்திரத்திற்கு மாசிலாமணிக்கு பதிலாக ராஜா என்று நான் பெயர் வைத்திருக்கலாமோ?
raji said... // தந்தைக்கு மனக் கணக்கு;
பிள்ளைக்கு பணக் கணக்கு
தந்தை-அசைகின்ற கீழ் வரிசை பற்கள்
மகன்- அசையா மேல் வரிசைப் பற்கள் //
பல்லைப் பற்றியே ஒரு பல்லவி பாடி விட்டீர்களே !
திருமதி ராஜி மேடம்னா சும்மாவா ?
உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள். நம் காசி யாத்திரையைத் தொடருவோம் - அலஹாபாத்துக்கு அனைவரும் வாருங்கள் !.
”நீங்க இப்படிப் பால் கணக்கு போடுவது போல, பல் கணக்கைப் புட்டுப்புட்டு வைப்பதைக் கேட்கும் போது, என் உடம்பெல்லாம் புல்லரிக்குது அய்யா”
பதிலளிநீக்குஎல்லோரையும் புல்லரிக்கவல்லவா வத்துவிடீர்கள்.
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்கு//”நீங்க இப்படிப் பால் கணக்கு போடுவது போல, பல் கணக்கைப் புட்டுப்புட்டு வைப்பதைக் கேட்கும் போது, என் உடம்பெல்லாம் புல்லரிக்குது அய்யா”
எல்லோரையும் புல்லரிக்கவல்லவா வைத்துவிட்டீர்கள்.//
உங்கள் பின்னூட்டம் என்னைப் புல்லரிக்க வைத்து விட்டது போங்கள்.....( சீப்பால் சொரிந்து கொண்டே இருக்கிறேன் .... ஹி ஹி ஹி)
அட,கதையில் இப்படியொரு திருப்பம் வரும் என்று தெரியாமல் கணக்கு போட்ட வாத்தியார் வாயடைத்து போய்விட்டாரே!சே,இந்தக் காலத்து பிள்ளைகளை நம்ப முடியாது என்பதை சுட்டிக் காட்டியிருப்பது அருமை.
பதிலளிநீக்குAsiya Omar said...
பதிலளிநீக்குஅட,கதையில் இப்படியொரு திருப்பம் வரும் என்று தெரியாமல் கணக்கு போட்ட வாத்தியார் வாயடைத்து போய்விட்டாரே!சே,இந்தக் காலத்து பிள்ளைகளை நம்ப முடியாது என்பதை சுட்டிக் காட்டியிருப்பது அருமை./
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். vgk
//என்னய்யா விஷயம் புரியாம இப்படிப் பேசுறே? சாதாரணத் தலைவலி, வயிற்றுவலின்னு வருகிற நோயாளிகளை விட பல்வலி என்று வரும் நோயாளிகள் 32 மடங்கு அதிகமய்யா. வருமானம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் தொழிலய்யா, இந்தப் பல் டாக்டர் தொழில்.//இங்கேயும் டிமாட்ன்ட் உள்ள டாக்டர்பணிதான். அத்தோடு சனங்க போவதற்கு பின்நிற்கும் டாக்டர்களும் இவர்கள்தான்.
பதிலளிநீக்கு///இரு இரு அவசரப்படாதே; சொத்தைப்பல், பூச்சிப்பல், பல் கூச்சம், பல் அரணை, பல்லில் ரத்தம் வடிதல், பல்லைச் சுற்றி ஈறு வீக்கம், ஆடும் பற்கள், கறை மற்றும் காரை படிந்த பற்கள், இடைவெளி அடைப்பு செய்ய, பல் சுத்தம் செய்ய, விபத்தில் அரைகுறையாக உடைந்த பற்களை செப்பனிட, பல்லை அழகு படுத்த, விழுந்த பல்லை மட்டும் மீண்டும் கட்டிக்கொள்ள, பல்செட் முழுவதுமாக மாற்ற எனப் பலவித வாடிக்கையாளர்கள் தினமும் உன் மகனைப் புடை சூழ்ந்து நிற்க,///
அம்மாடியோவ் இவ்வளவு பல் வருத்தங்களாஆஆ.
///என் பற்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பிடுங்கி எறிந்தது போல///
எப்படி!! இப்படியாக எழுதுறீங்க அண்ணா.toll (ன்னா ஜேர்மன் மொழியில் great)
அன்பின் அம்முலு,
நீக்குவாங்கோ, வாங்கோ. இங்கேயும் பல்லைக் காட்டிக்கொண்டு வந்துட்டீங்களா? ;) [கோச்சுக்காதீங்க... ப்ளீஸ். சும்மா ஒரு உரிமையுடன் தமாஷுக்காகவே எழுதியுள்ளேன், அம்முலு]
//அம்மாடியோவ் இவ்வளவு பல் வருத்தங்களாஆஆ. //
பின்னே, பல் என்றால் சும்மாவா? புள்ளிவிபரங்களைப் படித்தீர்களோனோ? ;))))))
//எப்படி!! இப்படியாக எழுதுறீங்க அண்ணா.toll (ன்னா ஜேர்மன் மொழியில் great)//
நீங்களும் என்னைப் பொறுத்தவரையில் TOLL தான் [ஜெர்மன் மொழியில்] என் இந்தியத் தமிழ் மொழியில்: ரஸிகை என் பரம ரஸிகை ... One of the Great Fans of my writing.;)
மிக்க நன்றி, அம்முலு.
அன்பின் கோபு அண்ணா
My mail message to some of my friends & relatives on 16.02.2014
பதிலளிநீக்குஅன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம்.
ஓர் மகிழ்ச்சிப்பகிர்வு
”அவன் போட்ட கணக்கு” என்ற தலைப்பில் நான் தமிழில் எழுதிய சிறுகதை
http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_06.html
ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள திருமதி S. பாக்யம் ஷர்மா என்பவரால் ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு,
அங்கிருந்து வெளிவரும் HEALTH - *BODY... MIND ... SOUL* என்ற ஹிந்திப் பத்திரிகையின் பக்கம் எண்: 2 இல் 26.01.2014 ஞாயிறு அன்று வெளியிடப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஏற்கனவே என்னுடைய சில கதைகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு கன்னடப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.
நான் தமிழில் எழுதிய கதையொன்று ஹிந்தியில் வெளியிடப்படுவது, எனக்குத்தெரிந்து, இதுவே முதல் தடவையாகும்.
ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ள அந்தப் பத்திரிகையின் பக்க இணைப்பினையும் இத்துடன் தங்கள் பார்வைக்காக அனுப்பியுள்ளேன்.
மகிழ்ச்சியுடன் VGK
Geetha Sambasivam 13:51 (18 minutes ago) to me
பதிலளிநீக்குவாழ்த்துகள். ஹிந்தி படிக்க வரும் என்பதால் படிக்கிறேன். மேன்மேலும் பற்பல சிறப்புகளைப் பெறவும் வாழ்த்துகள்.
மிக்க நன்றி, மேடம்.
நீக்கு- கோபு
Pattabi Raman 13:58 (12 minutes ago) to me
பதிலளிநீக்குநீங்கள் போடுகின்ற கணக்குகள் சரியாக உள்ளதென்று இந்த சம்பவங்கள் தெளிவாக காட்டுகின்றன
உலக அளவில் வேற்று மொழிகளில் உங்கள் கதைகள் வெளிவரும் காலம் வெகு தூரத்தில் இல்லை
பாராட்டுக்கள்
மிக்க நன்றி, அண்ணா.
நீக்கு- கோபு
Gomathy Arasu 14:02 (9 minutes ago) to me
பதிலளிநீக்குவணக்கம் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் திறமைக்கு கிடைத்த பரிசு.
எல்லா மொழிகளிலும் உங்கள் கதைகள்
மொழி பெயர்க்கப்பட வேண்டும்..
திருமதி. பாக்யம் சர்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.
சாரும் உங்களுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவிக்க சொன்னார்கள்.
அன்புடன்
கோமதி அரசு
மிக்க நன்றி, மேடம்.
நீக்கு- கோபு
Geetha Mathivanan 14:19 (13 minutes ago) to me
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துக்கள் சார். அற்புதமான தங்கள் எழுத்துத் திறமை மொழி தாண்டி விரிவடைவதில் அளவில்லாத மகிழ்ச்சி.
இந்தி வாசகரிடையே தங்கள் எழுத்தைக் கொண்டு சென்ற எழுத்தாளருக்கு நன்றி.
இன்னும் பல சிகரங்களை எட்ட இனிய வாழ்த்துக்கள் சார்.
மிக்க நன்றி, மேடம்.
நீக்கு- கோபு
பதிலளிநீக்குமுதன் முறை நீங்கள் பதிவு செய்த சமயத்தில் இந்தக் கதையை படித்துள்ளேன்.இப்பொழுது மீண்டும் படித்து மகிழ்ந்தேன் . காமெடி,யதார்த்தம்,புள்ளி விபரங்கள், எல்லாம் அடங்கிய சுவாரயமான கதை.தங்கள் புகழ் உலகெங்கும் பரவட்டும். வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி, கணேஷ்.
நீக்கு- அன்புடன் கோபு மாமா
பதிலளிநீக்குமுதன் முறை நீங்கள் பதிவு செய்த சமயத்தில் இந்தக் கதையை படித்துள்ளேன்.இப்பொழுது மீண்டும் படித்து மகிழ்ந்தேன் . காமெடி,யதார்த்தம்,புள்ளி விபரங்கள், எல்லாம் அடங்கிய சுவாரயமான கதை.தங்கள் புகழ் உலகெங்கும் பரவட்டும். வாழ்த்துக்கள் .
Rajeswari Jaghamani 17:11 (25 minutes ago) to me
பதிலளிநீக்குஅவன் போட்ட கணக்காயிற்றே..!
மொழிமாற்றத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள்..! //
ஸ்பெஷல் இரயிலில் ஏறி வந்துள்ள தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, மேடம். - பிரியமுள்ள VGK
Usha Srikumar 17:27 (13 minutes ago) to me
பதிலளிநீக்குMy heartiest congratulations, Sir.
May your writings reach out to many more people through many languages.
Usha
Thanks a Lot Madam.
நீக்கு- GOPU
rajalakshmi paramasivam 18:23 (2 minutes ago) to me
பதிலளிநீக்குகோபு சார்,
வாழ்த்துக்கள் சார். உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன் சார்.
பாராட்டுக்கள்.
RajiSivam
மிக்க நன்றி, மேடம்.
நீக்கு- அன்புடன் கோபு
Dindigul Dhanabalan 18:45 (37 minutes ago) to me
பதிலளிநீக்குமிகவும் மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துக்கள் பல...
மிக்க நன்றி .... திண்டுக்கல் திரு. பொன் தனபாலன் Sir
நீக்குஅன்புடன் VGK
Girija Sundar 20:05 (4 minutes ago) to me
பதிலளிநீக்குWow!! thats great mama!!.. glad news it is.. so proud of ur writing skills..!!
Anbudan
Girijasridhar
Thank you Girija. Thanks a Lot. Please take care of you !
- Anbudan Gopu Mama
Seshadri e.s. 20:40 (14 minutes ago) to me
பதிலளிநீக்குDear Sir,
நமஸ்காரம்!
தங்களின் சிறுகதை ஹிந்தியில் வெளியானதில் மிகவும் மகிழ்வடைகிறேன்! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!
என்றும் அன்புடன்
சேஷாத்ரி
Thank you Mr Seshadri Sir.
- ஆசிகளுடன் VGK
nidur nizam 22:05 (10 minutes ago) to me
பதிலளிநீக்குஐயா... மிக்க மகிழ்ச்சி...
இந்த சிறியவனின் வாழ்த்துக்கள் தங்களுக்கு ஐயா.
மேலும் பல சாதனைகள் தொடர்கின்றது பின்னாட்களில்...
சி. போ. விமர்சனம் விரைவில் அனுப்பி வைக்கிறேன்.
நன்றி.
அன்பன்,
நிஜாம். 16/02/2014//
நன்றி நண்பரே !
தங்களின் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
மிக்க நன்றி !!
அன்புடன் VGK
Nagarajan Narayanan 23:16 (4 minutes ago) to me
பதிலளிநீக்குஅன்புடையீர்,
வணக்கம்.
தங்களது சிறுகதை ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியானதை பார்க்க மிக்க மகழ்ச்சி. தாங்கள் ஒரு சிறந்த கதாசிரியர் என்று தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் புகழ் பெற அதிக நாட்கள் இல்லை.
நன்றி.
பிச்சாண்டார்கோவில் N.நாகராஜன். //
Thank you very much, Sir.
அன்புடன் + ஆசிகளுடன்
கோபு மாமா
பதிவிட்ட உடன் படித்து கருத்து தெரிவித்திருந்தாலும் மீண்டும் இப்போதும் படித்து ரசித்தேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் சார்.. தொடர்ந்து எல்லா மொழிகளிலும் தங்களது கதைகள் வரட்டும்.
ADHI VENKAT February 17, 2014 at 12:39 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//பதிவிட்ட உடன் படித்து கருத்து தெரிவித்திருந்தாலும் மீண்டும் இப்போதும் படித்து ரசித்தேன்.
வாழ்த்துகள் சார்.. தொடர்ந்து எல்லா மொழிகளிலும் தங்களது கதைகள் வரட்டும்.//
மிகவும் சந்தோஷம். அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. - அன்புடன் VGK
Vijayalakshmi Krishnan 12:39 (1 hour ago) to me
பதிலளிநீக்கு//wow its great news. Congratulations. I was out of chenai for the past few days. Returned back safely. Will come to your blog soon.//
WELCOME TO VIJI. ;) THANK YOU VERY MUCH VIJI. PLEASE COME & OFFER YOUR COMMENTS FOR ALL MY RECENT POSTS.
பிரியமுள்ள வீ.......ஜீ..
Usha Anbarasu 15:35 (1 hour ago) to me
பதிலளிநீக்குVERY VERY GOODDDDDDDDDDD! //
தாங்க் யூஊஊஊஊஊஊஊஊஊஊ டீச்சர் !
அன்புடன் கோபு
Manjubashini Sampathkumar 13:04 (3 hours ago) to me
பதிலளிநீக்குஅன்பின் அண்ணா மன்னி,
இருவருக்கும் நமஸ்காரங்கள்.
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது அண்ணா இந்த செய்தி கேட்க.
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.
அன்புத்தங்கை//
வாங்கோ மஞ்சூஊஊஊ, வணக்கம், அன்பான ஆசிகள். தங்களின் வாழ்த்துச்செய்தியும் சந்தோஷம் அளிக்கிறது.
அன்புடன் கோபு அண்ணா + மன்னி
On Sun, 2/16/14, nidur nizam wrote:
பதிலளிநீக்குSubject: Re: அன்புடன் VGK . என் தமிழ் சிறுகதை மொழியாக்கம்
செய்து ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ளது.
To: "Gopalakrishnan Vai."
Date: Sunday, February 16, 2014, 10:05 PM
ஐயா... மிக்க மகிழ்ச்சி...
இந்த சிறியவனின் வாழ்த்துக்கள் தங்களுக்கு ஐயா.
மேலும் பல சாதனைகள் தொடர்கின்றது பின்னாட்களில்...
சி. போ. விமர்சனம் விரைவில் அனுப்பி வைக்கிறேன்.
நன்றி.
அன்பன்,
நிஜாம்.
16/02/2014
http://www.nizampakkam.blogspot.com//
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, நண்பரே. தங்களின் விமர்சனங்கள் தொடர்ச்சியாக எனக்குக் கிடைத்து வருகின்றன. அதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் VGK
Sridar Murthy 20:18 (2 hours ago) to me
பதிலளிநீக்கு//மிக்க மகிழ்ச்சி ஐயா!//
திரு ஆரண்யநிவாஸ் R. இராமமூர்த்தி அவர்களே.
வாருங்கள். மிக்க நன்றி.
Rishaban Srinivasan 19:59 (32 minutes ago) to me
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஸார்.
பார்க்கவே ஆனந்தமாய் இருக்கிறது.
அன்புடன்
ரிஷபன்//
மிக்க நன்றி ஸார். எல்லாமே என் எழுத்துலக மானஸீக குருநாதராகிய தங்களின் க்ருபை மட்டுமே.
எல்லாப்புகழும் தங்களுக்கே.
அவர்கள் [திருமதி பாக்யம் ஷர்மா] யார் என்றே எனக்குத் தெரியாது ஸார்.
சென்னை வந்தபோது ‘தாயுமானவள்’ சிறுகதைத்தொகுப்பு நூலின் மேல் அட்டையைப் பார்த்துவிட்டு [பலூன் வியாபாரி + குழந்தை] குழந்தைகளுக்கான புஸ்தகமாக இருக்குமோ என நினைத்து வாங்கிச்சென்றார்களாம்.
பிறகு ராஜஸ்தானுக்குப் போனபின் கதைகளைப் படித்துவிட்டு, எனக்கு ஃபோன் செய்து பேசி தன்னை எனக்கு அறிமுகம் செய்துகொண்டார்கள்.
இப்போதும் அவ்வப்போது பேசுவார்கள். சமயத்தில் மெயில் கொடுப்பார்கள்.
சன்மானத்தொகையெல்லாம் மிகவும் சொல்பமாகவே கிடைக்கும் என்றார்கள். அதை வாங்கி நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் - எனக்கு வேண்டவே வேண்டாம் - அச்சில் வெளியானதை மட்டும் இதுபோல முடிந்தால் pdf ஆக அனுப்புங்கோ என்று சொல்லி விட்டேன், ஸார்.
No objection Permission Letter Standard ஆக என்னிடம் வாங்கி வைத்துக்கொண்டுள்ளார்கள், ஸார்.
இது Just தங்கள் தகவலுக்காக மட்டுமே, ஸார்.
பிரியமுள்ள வீ.......ஜீ
சிறப்பான சிறுகதை மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகையில் பதிக்கப்பட்டதற்கு இனிய நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி July 18, 2014 at 10:04 AM
பதிலளிநீக்குவாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.
//சிறப்பான சிறுகதை மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகையில் பதிக்கப்பட்டதற்கு இனிய நல்வாழ்த்துகள்..//
ஏற்கனவே ஒரு ஸ்பெஷல் ரயில் நிறைய வாழ்த்துகள் அனுப்பியிருந்தீர்கள். ;))))) மீண்டும் வாழ்த்துகள் ... பத்துமோ பத்தாதோ என்று ...... மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். VGK
//ஒரு கோடியே எழுபத்து ஐந்து லட்சத்து முப்பத்து நாலாயிரத்து இரு நூற்று நாற்பத்தாறு //
பதிலளிநீக்கு1,75,34,246 இதை 50 ஆல் பெருக்கவேண்டும்.
87,67,12,300
இதென்ன 3 ஜி. ஊழல் கணக்கு மாதிரி இருக்குதே?
பல் டாக்டர்கள் எண்ணிக்கை அதிகமாச்சோ இல்லையோ தமிழ்மணிகளின் எண்ணிக்கை அதிகமாயிடுத்து.
பதிலளிநீக்குஆமாம், படிப்பு முடிந்ததும் முக்கா வாசிப் பிள்ளைங்களும் ரெக்கை கட்டிக்கொண்டு வெளி நாட்டுக்குப் பறக்கத் தயாராயிடறாங்களே.
சமீபத்தில் ஒரு திருமணத்தில் என்னுடன் பணி புரிந்த ஒரு பெண்ணைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் அவள் கேட்ட முதல் கேள்வி, “என் பெண் கல்யாணத்து வந்தியே, அவள் இப்ப ஜெர்மனியில் இருக்காள். உன் பெண்ணும் பையனும் எந்த ஊரில் இருக்காங்க”.
நான் சொன்னேன். “இதே ஊர்லதான் இருக்காங்க”ன்னு. நம்ப ஊர்லயே நம்ப பிள்ளைங்க இருக்கறதை கேவலமா நினைக்கிறவங்களும் இருக்காங்க.
உங்க கதை பல பாஷை களில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள் எனக்கும ஹிந்தி தெரியும். படித்து சநுதோஷப்படலாம்.
பதிலளிநீக்குஒரு பல் மருத்துவர் கூட இந்த அளவுக்கு கணக்குப் போட்டு மருத்துவப் படிப்பை எடுத்திருக்கமாட்டார் ... அந்த அளவுக்குக் கணக்குப் போட்டு அசத்துகிறார் கணக்கு வாத்தியார்.
பதிலளிநீக்குயாருக்காகவும் எதற்காகவும் எதுவும் நிற்காது என்ற உண்மையை உணர்த்துவது போல் தமிழ்மணி அடிக்காவிட்டாலும் சரியான நேரத்தில் பள்ளிமணி அடிக்கிறது. நல்லதொரு பாடம்.. நல்லதொரு கதை.
பல்லுக்கு கணக்கு போட்டதெல்லா சரி தா பெரியவரு மகன் வாப்பாவ விட்டு வெளி நாடு போறாதுதான் சரியா படல.
பதிலளிநீக்குடென்டிஸ்டெல்லாருமே நல்லா காசு பாக்கறாங்கதான்..தன் மகன் இன்னொரு வருக்கு வீட்டோடு மாப்பிள்ளையாக போவதை எந்த தகப்பனாலதான் தாங்கிக்க முடியும். எதார்த்தமான கதை.
பதிலளிநீக்குஆண்டவனின் கணக்கு....மேத்தமேட்டிக்ஸ் இங்கே சுத்தமா ஒர்க் அவுட் ஆகாது....//என் பற்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பிடுங்கி எறிந்தது போல உள்ளது எனக்கு” என்று கண் கலங்கியபடி தமிழ்மணி கூறினான்.// எவ்வளவு வலிக்கும்னு சொல்லாம சொல்றது இப்புடித்தானா...
பதிலளிநீக்கு//எங்கேயோ என் மகன் நன்றாக இருந்தால் சரி’ என்று தான் படிப்பறிவு இல்லாத நான் போக வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன்.
பதிலளிநீக்குஇந்த மேற்படிப்புக்கு வெளிநாடு செல்லும் விஷயத்தை, ஏதோ ஒரு நண்பனுக்குச் சொல்லும் தகவல் போல, மிகச் சாதாரணமாக அவன் என்னிடம் சொல்லி விட்டுப் போனது தான், என் பற்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பிடுங்கி எறிந்தது போல உள்ளது எனக்கு” என்று கண் கலங்கியபடி தமிழ்மணி கூறினான்.
தமிழ்மணியின் இந்தப் புதிய கணக்கிற்கு விடை கூற முடியாமல் கணக்கு வாத்யாரே முழிக்கலானார்./ஆண்டவனின் கணக்கிற்குவிடையறிவார் யாரோ?
படிப்பறிவே இல்லாதவரிடம் இவ்வளவு விஸ்தாரமாக புள்ளி விவரம்லாம் சொன்னா எப்படி புரிந்து.கொள்ளமுடியும்.எப்படியோ கணக்கு வாத்தியாரிடம் விவரங்கள் தெரிந்து கொண்டு மகனை பல் டாக்டராக படிக்க வைத்தாரே... மகனுக்காக இவ்வளவு தூரம் யோசித்து கஷ்டப்பட்டு பெரிய படிப்பு படிக்க வைத்த தந்தையின் மனதை ஏன் மகனால புரிந்து கொள்ள முடியலை. தான் தன் சுகம் என்று ஸெல்ஃபிஷா ஆகிட்டானே பல் டாக்டர் படிப்பும் நல்ல படிப்புதான் என்று புரிய வைத்த கதை. நல்லா இருக்கு.
நீக்கு.
ஸ்ரத்தா, ஸபுரி... February 18, 2016 at 6:00 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//படிப்பறிவே இல்லாதவரிடம் இவ்வளவு விஸ்தாரமாக புள்ளி விவரம்லாம் சொன்னா எப்படி புரிந்து கொள்ளமுடியும்? எப்படியோ கணக்கு வாத்தியாரிடம் விவரங்கள் தெரிந்து கொண்டு மகனை பல் டாக்டராக படிக்க வைத்தாரே... மகனுக்காக இவ்வளவு தூரம் யோசித்து கஷ்டப்பட்டு பெரிய படிப்பு படிக்க வைத்த தந்தையின் மனதை ஏன் மகனால புரிந்து கொள்ள முடியலை. தான் தன் சுகம் என்று ஸெல்ஃபிஷா ஆகிட்டானே!//
ஆம். ”பெத்தமனம் பித்து, பிள்ளைமனம் கல்லு”ன்னு ஓர் பழமொழியே சொல்லுவார்களே! அதுபோலத்தான் இதுவும்.
//பல் டாக்டர் படிப்பும் நல்ல படிப்புதான் என்று புரிய வைத்த கதை. நல்லா இருக்கு.//
மிக்க மகிழ்ச்சி.
தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.