என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

நன்றே செய் ! அதுவும் இன்றே செய் !!

எண்ணெய் பார்த்துப் பல வருடங்கள் ஆன பரட்டைத்தலை. அதில் ஆங்காங்கே தொங்கும் ஆலம் விழுது போன்ற சடைகள். அழுக்கான ஒரு வேஷ்டி அதனிலும் சல்லடை போன்ற பொத்தல்கள்.

சட்டைப்பை கிழிந்து தொங்கி, பாதி பித்தான்கள் இல்லாத ஒரு பச்சைக்கலர் சட்டை. இடது தோளில் கழுதைக் கலரில் ஒரு ஜோல்னாப் பை. அதில் ஏதேதோ ஒரு சில நெசுங்கிய அலுமினிய தட்டுகள் மற்றும் குப்பைக் காகிதங்கள்.

வலது கையில் நாய்ச் சங்கிலியுடன் கட்டப்பட்ட ஓரிரு இரும்பு வளையங்கள். சிவந்த கண்கள். எச்சில் ஒழுகும் வாய்.

வலது கால் கட்டைவிரல் பகுதியில் அடிபட்டது போல காயத்துடன் சற்றே வெளியில் வரும் ரத்தத் துளிகள். அதைச்சுற்றி ஈக்கள் மொய்த்த வண்ணம் இருந்ததால் காலை அடிக்கடி நீட்டியும் மடக்கியும் அந்த ஈக்களை ஓட்டியபடி, அந்த ஓட்டல் வாசலில் ஒரு தகரக் குவளையுடன், அமர்ந்து கொண்டு, ஓட்டலுக்கு வருவோர் போவோரை கை கூப்பி வணங்கிக் கொண்டிருந்த அவனை, எல்லோருமே ஒரு வித அருவருப்புடன் பார்த்து விட்டுத் தாண்டிச் சென்று கொண்டிருந்தனர்.

யார் பெற்ற பிள்ளையோ பாவம் என்று இரக்கப்பட்டு, ஒரு சிலர் தங்களால் முடிந்த சில்லறை நாணயங்களையும் போட்டுச் சென்றனர்.

போக்குவரத்து நெருக்கடியை உத்தேசித்து, அந்த ஓட்டலுக்கு சற்று தள்ளியிருந்த, ஜன நடமாட்டம் அதிகமில்லாத, சந்து ஒன்றில் தன் காரை நிறுத்திவிட்டு, ஓட்டலில் டிபன் சாப்பிட வந்திருந்த பாபு, அவசர அவசரமாக அந்த ஓட்டலிலிருந்து வெளியேறவும், அந்தப் பரட்டைத்தலையன், மொய்க்கும் ஈக்களைத் துரத்த வேண்டி, தன் காலை நீட்டவும், பாபு அவன் காலில் இடறி நிலை தடுமாறி விழப்போய், கஷ்டப்பட்டு சுதாரித்துக் கொண்டு, ஒருவழியாக சமாளித்து நின்று, அவனைக் கண்டபடி திட்டித் தீர்க்கவும் சரியாய் இருந்தது.

ஏற்கனவே புண்ணான தன் கால் விரலில், பாபு இடறியதால் மேலும் ரணமான அவன் பே...பே...பே...பே.. என்று ஏதோ கத்திக்கொண்டே, கஷ்டப்பட்டு எழுந்து நின்று கொண்டான்.

அவன் செயலால் சற்றே பயந்து போன பாபு, தன் நடையை சற்று வேகமாக்கி, தன் காரை நோக்கி ஓட ஆரம்பிக்க, அவனும் பாபுவைத் துரத்த ஆரம்பித்தான்.

காலை விந்தி விந்தி நடந்த பரட்டைத் தலையன், பாபு காரைக் கிளப்புவதற்கு முன்பு காரின் முன்னே போய் நின்று விட்டான்.

இருபது வயதே ஆன இளைஞன் பாபுவுக்கு, இப்போது பயம் மேலும் அதிகரித்தது. நம்மைத் துரத்தி வந்துள்ள இவன் மேலும் என்ன செய்வானோ? என்று.

ஒரு வேளை மனநிலை சரியில்லாதவனாக இருந்து, அவன் காலில் நாம் இடறிய கடுப்பில், நம்மைத் தாக்குவானோ அல்லது நம் காரைக் கல்லால் அடித்துச் சேதப் படுத்துவானோ எனக் கவலைப் பட ஆரம்பித்தான்.

கார் கண்ணாடிகளை மேலே தூக்கி விட்டு, காரை மெதுவாக ஸ்டார்ட் செய்து, லேசாக அந்தப் பரட்டைத் தலையன் மீது, ஹாரன் அடித்தபடியே மோதித் தள்ளினால், அவன் நகர்ந்து விடுவான் என்று எதிர்பார்த்து செயல்பட ஆரம்பித்தான்.

அதற்கெல்லாம் அந்தப் பரட்டைத் தலையன், சற்றும் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. தன் தோளில் தொங்கிய, கழுதைக் கலர் ஜோல்னாப் பையில் கையை விட்டு துலாவிக்கொண்டிருந்தான்.

பிறகு தைர்யத்தை வரவழைத்துக்கொண்டு, காரிலிருந்து இறங்கி அவசரமாக பின்புற டிக்கியைத் திறந்து, கார் ஜாக்கியுடன் இருந்த இரும்புக் கழியை கையில் தற்காப்பு ஆயுதமாக எடுத்துக்கொண்டு, அவனை நெருங்கினான். பாபு.

காருக்கு முன்னால் இஞ்ஜினை ஒட்டி நின்றிருந்த அந்தப் பரட்டைத் தலையன் இப்போதும், தன் ஜோல்னாப் பைக்குள் கையை விட்டு எதையோ குடைந்து தேடிக்கொண்டிருந்தான்.


இரும்புக் கழியால் அவனை அடிப்பது போல ஓங்கிக்கொண்டு, அவனை கார் பக்கத்திலிருந்து வேறு பக்கம் ஓடிப் போகத் தூண்டினான், பாபு.

இப்போதும் பே...பே...பே...பே ன்னு கத்திய அவன், தன் ஜோல்னாப் பையிலிருந்து புத்தம் புதியதோர் செல்போன் ஒன்றை எடுத்து, கார் இன்ஜின் பேனட் மீது வைத்து விட்டு, காலை விந்தி விந்தி பயந்து கொண்டே மீண்டும், அந்த ஓட்டலை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

அப்போது தான் பாபுவுக்கு தான் சமீபத்தில் ஏராளமான ரூபாய்கள் செலவழித்து வாங்கிய புத்தம் புதிய ஐ-பேட் மொபைல் போன், தன்னிடம் இல்லாதது பற்றிய ஞாபகமே வந்தது.

பரட்டைத் தலையனின் காலில் இடறி தடுமாறி விழ இருந்த பாபுவின் செல்போன் மட்டும், பரட்டைத் தலையனின் ஜோல்னாப் பைக்குள் விழுந்திருக்கக் கூடும் என்பது புரிய வந்தது.

அதைத் தன்னிடம் ஒப்படைக்கத்தான் அவன் தன்னைத் துரத்தி வந்துள்ளான் என்பதையும் பாபு இப்போது தான் உணரத் தொடங்கினான்.

பாவம், அந்த வாய் பேச வராத அப்பாவியான பிச்சைக்காரனைப் போய் நாம் தாக்க நினைத்தோமே என்று தன் அவசர புத்தியை நினைத்து மிகவும் வெட்கப் பட்டான்.

பாபு அவனை மீண்டும் சந்தித்து ஒரு சில உதவிகள் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஆனாலும் அப்போது தன் காரை வீட்டை நோக்கி ஓட்டிச் செல்லும்படியாகி விட்டது. நேராக வீட்டுக்குச் சென்ற பாபு, தன்னுடைய பழைய கைலிகள், பேண்டுகள், சட்டைகள் என சிலவற்றை ஒரு பையில் போட்டுக்கொண்டு, சில்லறைகளாகவும், ரூபாய் நோட்டுக்களாக ஒரு நூறு ரூபாய்க்கு மேல் பணமும் போட்டுக் காரில் அதைத் தனியாக வைத்துக் கொண்டான். அந்தப் பிச்சைக்காரனிடம் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான் பாபுவுக்கு.

தான் அவனுக்கு இந்தச் சின்ன உதவியைச் செய்ய நினைத்ததை நிறைவேற்ற, மறு நாள் காலை, தன் காரில் அதே ஓட்டல் வாசலுக்குச் சென்றான், பாபு. ஆனால் அங்கே அந்த பரட்டைத் தலையனைக் காணவில்லை.

சுற்று வட்டாரத்தில் பல இடங்களிலும், மிகவும் மெதுவாகக் காரை ஓட்டிச் சென்று, ஒரு மணி நேரத்திற்கு மேல் தேடியும், அவனைப் பார்க்க முடியவில்லை.

கடைசியாக காரில் ஏறி வீடு திரும்பும் வழியில் நடு ரோட்டில் ஒரு மிகப் பெரிய கூட்டம். காரை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு, இறங்கி நடந்து வந்து, கூட்டத்தை விலக்கிப் பார்த்த பாபுவுக்கு ஒரே அதிர்ச்சி.

நடு ரோட்டில், நல்ல வெய்யில் வேளையில், பசி மயக்கத்தில் இருந்துள்ள அவனுக்கு, வலிப்பு ஏற்பட்டதாகவும், துடிதுடித்து விழுந்த அவன் உயிர் உடனே பிரிந்து விட்டதாகவும், அங்கு கூடியிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

இறந்து கிடந்த அந்தப் பரட்டைத் தலையன் அருகே, அவனை நல்லடக்கம் செய்ய வேண்டி, ஒரு துணியை விரித்து, யாரோ வசூலுக்கு ஏற்பாடும் செய்திருந்தனர்.

பாபுவின் கண்கள் ஏனோ சில சொட்டுக் கண்ணீர் வடிக்க, அவன் கைகள் இரண்டும், இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை அந்தப் பிணத்துக்கு அருகில், விரித்திருந்த துணியில் போட்டுக் கொண்டிருந்தன.

காரில் ஏறி வீட்டுக்குத் திரும்பி வரும் போது, அந்த அனாதையின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி மனப் பூர்வமாக பாபு பிரார்த்தித்த போது, ”அப்படியே ஆகட்டும்” என்பது போல அவனின் ஐ-பேட் மொபைல் போன் ஒலிக்க ஆரம்பித்தது.

-o-o-o-o-o-o-


38 கருத்துகள்:

  1. நல்ல கருத்துள்ள கதை.

    செய்ய நினைக்கும் நல்ல விஷயங்களை அன்றே அப்போதே
    செய்வதுதான் சரி

    ஆனால் காலம் இப்போது இருக்கும் இருப்பில்
    இரண்டு ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களை அப்படி
    வைத்து விட்டு வந்தால் எதற்காக வைக்கப்பட்டதோ
    அதற்கு எப்படி பயன்படும்?

    பதிலளிநீக்கு
  2. ”நன்றே செய் அதையும் இன்றே செய்” என்ற வாசகம் சொல்வது போல செய்ய நினைக்கும் நல்ல காரியத்தை உடனே செய்ய வேண்டும் என்று இந்த கதை உணர்த்துகிறது.

    பதிலளிநீக்கு
  3. பொருத்தமான தலைப்பு சார்,கதை கண் முன் நிகழ்வது போலவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. கார் கார‌னின் ம‌னநிலையை, எண்ண‌ ஒட்ட‌ங்க‌ளை அழ‌காய் காட்சிப் ப்ச்டுத்தி இருக்கிறீர‌க‌ள்.
    ஒரு ப‌தட்டத்தில், சில த‌வ‌றான செய்கைக‌ள் நட‌ந்து விடும். உட‌னே சில‌ குழுப்ப‌த்தில், அந்த‌ இட‌த்தை விட்டு அக‌ன்ற‌ பின்பு தான், பிர‌தி உப‌கார‌மாய் என்ன செய்வ‌து என்ற எண்ண‌மே தோன்றும். அதற்குள் என்னென்ன‌வோ ந‌ட‌ந்து விடும். பின் அந்த‌ உறுத்த‌ல் மட்டும் அப்ப‌டியே த‌ழும்பாய் த‌ங்கிவிடும்.சூப்ப‌ர் வைகோ சார்.

    பதிலளிநீக்கு
  5. ஒன்று செய் நன்று செய்
    அதுவும் இன்றே செய்
    இக்கணமே செய் என
    நல்லுணர்வுகளைத் தூண்டிச் செல்லும்
    ஒரு நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. உணர்வு பூர்வமான கதை. நல்லது செய்ய யோசிக்கக்கூடாது என்பதை அழகாய்ச் சொல்லி இருக்கீங்க! மேலும் பல நல்ல படைப்புகள் தொடர்ந்து தந்திட வேண்டுதலுடன்.

    பதிலளிநீக்கு
  7. எல் கே said...
    // :( = சோகம் என்ற விளக்கத்திற்கு என் :)

    பதிலளிநீக்கு
  8. raji said...
    //நல்ல கருத்துள்ள கதை. செய்ய நினைக்கும் நல்ல விஷயங்களை அன்றே அப்போதே
    செய்வதுதான் சரி//

    நீங்கள் சொன்னால் அது ‘சரி’ யாகவே இருக்கும்.

    //ஆனால் காலம் இப்போது இருக்கும் இருப்பில்
    இரண்டு ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களை அப்படி
    வைத்து விட்டு வந்தால் எதற்காக வைக்கப்பட்டதோ
    அதற்கு எப்படி பயன்படும்?//

    கதையில் வரும் பாபு ’ஒரு ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி’ டீன் ஏஜ் பாய். பணக்காரன். காரில் அடிக்கடி ஊரைச் சுற்றிவருபவன். ஏமாற்று உலகம் என்ற உணமையான உலக விபரம் இன்னும் தன் அனுபவத்தில் தெரிந்து கொள்ளாதவன் - அந்தப் பிச்சைக்காரனின் திடீர் மரணம் அவனை பாதித்த அதிர்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு Rs. 500 x 2 = 1000 .கொடுத்திருப்பான் என்று வைத்துக் கொள்ள வேண்டியது தான். [கஷ்டப்பட்டு தங்களை சமாளிக்க வேண்டியுள்ளது பாருங்கள் !].

    மறந்துட்டேனே, உங்க்ள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  9. கோவை2தில்லி said...// ”நன்றே செய் அதையும் இன்றே செய்” என்ற வாசகம் சொல்வது போல செய்ய நினைக்கும் நல்ல காரியத்தை உடனே செய்ய வேண்டும் என்று இந்த கதை உணர்த்துகிறது.//

    ஆமாம். சரியாகவே சொன்னீர்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  10. thirumathi bs sridhar said...
    //பொருத்தமான தலைப்பு சார், கதை கண் முன் நிகழ்வது போலவே இருக்கிறது.//

    ஆஹா, அப்படியா சொல்லுகிறீர்கள். மிக்க மகிழ்சி.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  11. vasan said...
    // கார் கார‌னின் ம‌னநிலையை, எண்ண‌ ஒட்ட‌ங்க‌ளை அழ‌காய் காட்சிப் ப்டுத்தி இருக்கிறீர‌க‌ள்.
    ஒரு ப‌தட்டத்தில், சில த‌வ‌றான செய்கைக‌ள் நட‌ந்து விடும். உட‌னே சில‌ குழப்ப‌த்தில், அந்த‌ இட‌த்தை விட்டு அக‌ன்ற‌ பின்பு தான், பிர‌தி உப‌கார‌மாய் என்ன செய்வ‌து என்ற எண்ண‌மே தோன்றும். அதற்குள் என்னென்ன‌வோ ந‌ட‌ந்து விடும். பின் அந்த‌ உறுத்த‌ல் மட்டும் அப்ப‌டியே த‌ழும்பாய் த‌ங்கிவிடும்.சூப்ப‌ர் வைகோ சார்.//

    பொதுவான மனித இயல்புகளைப் புட்டுப்புட்டு வைத்து அருமையானதொரு கருத்துச் சொல்லியிருக்கும் தங்களின் அபூர்வ வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

    பதிலளிநீக்கு
  12. Ramani said...
    // ஒன்று செய் நன்று செய்
    அதுவும் இன்றே செய்
    இக்கணமே செய் என
    நல்லுணர்வுகளைத் தூண்டிச் செல்லும்
    ஒரு நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள் //

    தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

    சந்நதியைத் திறந்ததும், வெளியே எகிறிக் குதித்து உங்களிடம் ஓடி வந்து விடும் தங்கள் நண்பர் பழநிமுருகனின் அருள் என்னை இது போல எழுத வைக்கிறதோ !

    பதிலளிநீக்கு
  13. ஜீவா (Jeeva Venkataraman) said...
    // அப்படியே ஆகட்டும்!!! //

    தங்களின் அன்பான வருகைக்கும், ”ததாஸ்து” சொன்னதற்கும், என் மனமார்ந்த நன்றிகள், சார்.

    பதிலளிநீக்கு
  14. வெங்கட் நாகராஜ் said...
    //உணர்வு பூர்வமான கதை. நல்லது செய்ய யோசிக்கக்கூடாது என்பதை அழகாய்ச் சொல்லி இருக்கீங்க! //

    தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    //மேலும் பல நல்ல படைப்புகள் தொடர்ந்து தந்திட வேண்டுதலுடன்//

    தருவதற்கான சரக்குகள் கைவசம் நிறையவே உண்டு. தீர்ந்தாலும் மிகச் சுலபமாக உற்பத்தி செய்து விடலாம். உடல் நிலை, குடும்பச் சுற்றுச்சூழல், உட்கார்ந்து டைப் செய்ய நேரமினமை, முதலியன கொஞ்சம் இடிக்குது. இருப்பினும் தொடர்ந்து முயற்சிகிறேன். தங்கள் ஆர்வத்துடன் கூடிய வேண்டுதலுக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  15. கே. பி. ஜனா... said...
    //உருக்கமான கதை!//
    தங்களின் இந்த பின்னூட்டமும் எனக்கு உருக்கமாகவும் உற்சாகம் அளிப்பதாகவும் உள்ளது. நன்றி, சார்.

    பதிலளிநீக்கு
  16. நன்றாற்றலுக்கு தாமதம் கூடாது என்பதை உணர்த்தியது. நன்றி.

    பதிலளிநீக்கு
  17. இராஜராஜேஸ்வரி said...
    //நன்றாற்றலுக்கு தாமதம் கூடாது என்பதை உணர்த்தியது. நன்றி.//

    தங்கள் கூற்று மிகச்சரியானதே. ஆனால் நான் இந்தப் பின்னூட்டத்தை இன்று 27.02.2011 அன்று தான் தாமதமாகப் படித்தேன். தாமதம் கூடாது என்பதை நானும் உணர்ந்து விட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  18. உங்களின் இக்கதை நிறைந்த மாறுதலான கருவைக்கொண்ட கதையாக இருக்கிறது.

    முழுவதும் நகைச்சுவையாயும், இடையிடையே நகைச்சுவை கலந்த ஒரு கதம்பமாகவுமே இதுவரை நான் வாசித்தவரை உங்கள் கதைகளில் இருந்தன.

    ஆனால் இக்கதை முழுவதும் நகைச்சுவையே இல்லாமல், முழுவதும் குணசித்திரக் கதையாக இறுதியில் மனதை அழுத்திக் கசக்கிப்பிழிந்த நிகழ்வினை கூறிய கதையாக எழுதியுள்ளீர்கள்.

    மிக மிக சிறப்பாக இருந்தது.
    அதுஅதை அன்றன்றே செய்திடவேண்டும் என்னும் நல்லகருத்தினை பதிவு செய்துள்ளீர்கள்.
    பாராட்டுக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ அன்பின் இளமதி [’யங்க் மூன்’].

      காலை வணக்கங்கள்.

      //உங்களின் இக்கதை நிறைந்த மாறுதலான கருவைக்கொண்ட கதையாக இருக்கிறது.//

      அப்படியா, சந்தோஷம். ;)

      //முழுவதும் நகைச்சுவையாயும், இடையிடையே நகைச்சுவை கலந்த ஒரு கதம்பமாகவுமே இதுவரை நான் வாசித்தவரை உங்கள் கதைகளில் இருந்தன.//

      ஆஹா, ஒவ்வொன்றாக வாசித்துக் கருத்து அளிப்பது கட்டிக் கருப்பாய் இனிக்கிறது.

      //ஆனால் இக்கதை முழுவதும் நகைச்சுவையே இல்லாமல், முழுவதும் குணசித்திரக் கதையாக இறுதியில் மனதை அழுத்திக் கசக்கிப்பிழிந்த நிகழ்வினை கூறிய கதையாக எழுதியுள்ளீர்கள்.//

      இடையிடையே மனதை அழுத்திக் கசக்கிப்பிழிந்த நிகழ்வுகளும் நடைபெற்று முற்றிலும் புதிய அனுபவங்களை நமக்குத் தந்து விடுவதால் ... மட்டுமே ... இதுபோலவும் எழுதத்தோன்றியது.

      //மிக மிக சிறப்பாக இருந்தது.//

      தங்களின் இந்தப் பாராட்டுக்களும் மிக மிகச் சிறப்பாகவே ....

      //அதுஅதை அன்றன்றே செய்திடவேண்டும் என்னும் நல்லகருத்தினை பதிவு செய்துள்ளீர்கள்.//

      அதுஅதை அன்றன்றே செய்திட நடைமுறையில் சாத்தியமில்லாமல் போய் விடுகிறது. எனினும் மனதில் நினைத்து அவ்வாறு செய்ய முயற்சிக்கலாம் தானே!

      //பாராட்டுக்கள் ஐயா!//

      தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் ரொம்ப சந்தோஷமும் நன்றிகளும் ... இளமதி.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  19. //சட்டைப்பை கிழிந்து தொங்கி, பாதி பித்தான்கள் இல்லாத ஒரு பச்சைக்கலர் சட்டை. இடது தோளில் கழுதைக் கலரில் ஒரு ஜோல்னாப் பை. அதில் ஏதேதோ ஒரு சில நெசுங்கிய அலுமினிய தட்டுகள் மற்றும் குப்பைக் காகிதங்கள்.//
    எனக்கு கடந்த வருடம் கோயம்புத்தூரில் ஒரு ஓட்டலில் பார்த்தவரின் ஞாபகம்தான் வந்தது.அவர் பணத்திற்கு பதிலாக சாப்பாடு வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் சில இடங்களில் இவர்களால் பெரும் தொல்லையாகிவிடும். ஆனால் இப்படியானவர்களைப்பார்க்கும்போது மனதின் ஓர் ஓரத்தில் வலிக்கத்தான் செய்கிறது.
    நினைவுக்கு வரும்போது உடன் செய்துடவேணும் என்பதை அம்மாவும்
    (இது என் அம்மா)சொல்வார்கள்.
    நல்ல மாறுபட்ட கதை.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ammulu October 16, 2012 11:02 PM
      ***சட்டைப்பை கிழிந்து தொங்கி, பாதி பித்தான்கள் இல்லாத ஒரு பச்சைக்கலர் சட்டை. இடது தோளில் கழுதைக் கலரில் ஒரு ஜோல்னாப் பை. அதில் ஏதேதோ ஒரு சில நெசுங்கிய அலுமினிய தட்டுகள் மற்றும் குப்பைக் காகிதங்கள்.***

      வாங்க அம்முலு, செளக்யமா இருக்கீங்களா? மேலே நான் எழுதியுள்ளவரிகளைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். சந்தோஷம்,

      //எனக்கு கடந்த வருடம் கோயம்புத்தூரில் ஒரு ஓட்டலில் பார்த்தவரின் ஞாபகம்தான் வந்தது.அவர் பணத்திற்கு பதிலாக சாப்பாடு வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டார். //

      ஆமாம். இவரைப்போன்றவர்களை தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் ஹோட்டல்கள் + கோயில்கள் வாசல்களில் நாம் காணமுடியும்.

      சாப்பாடு டோக்கன் நாம் வாங்கித்தருவோம். ஆனால் இவர்கள் உள்ளே போய் உடனே சாப்பிட மாட்டார்கள்.
      பிறகு பசிக்கும் போது சாப்பிட்டுக்கொள்வதாக ஓர் கூழைக் கும்பிடு போட்டு விட்டு நம்மை அனுப்பவே முயற்சிப்பார்கள்.

      நாம் சென்றபிறகு அதே டோக்கனை ஹோட்டல் முதலாளியிடம் கொடுத்து பணமாக்கிக்கொள்வார்கள்.

      இது ஒரு கெளரவப்பிச்சை. பிச்சை கேட்டால் ஒரு ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மட்டுமே நாம் தருவோம்.

      பசிக்குது சாப்பாடு வேண்டும் என்று கேட்டால், நாமும் இரக்கப்பட்டு, சாப்பாடு டோக்கன் ஒன்று வாங்கித் தருவோம்.

      சாப்பாட்டு டோக்கன் கிடைத்தால் சுளையாக 50 ரூபாய்க்கு மேல் கிடைக்கும் அல்லவா!

      இதுபோல கெளரப்பிச்சைகள் திருச்சியிலும் திருவண்ணாமலையிலும் இன்றும் ஹோட்டல்கள் வாசலில் நடைபெறுகின்றன.

      //ஆனால் சில இடங்களில் இவர்களால் பெரும் தொல்லையாகிவிடும். ஆனால் இப்படியானவர்களைப் பார்க்கும்போது மனதின் ஓர் ஓரத்தில் வலிக்கத்தான் செய்கிறது.//

      ஆமாம் ... எங்குமே இவர்களால் சற்று தொல்லை தான்.

      இவர்களில் சிலரைப்பார்க்கும் போது நமக்கு மனம் வலிக்கத் தான் வலிக்கிறது. அதாவது வயதாகி உடல் வலிமை குன்றி, கண்பார்வையும் குன்றி, தேகத்தில் வலுவின்றி, உண்மையிலேயே பசியால் சிலர் கஷ்டப்படக்கூடும். அவர்களுக்கு நாம் கட்டாயமாக உதவத்தான் வேண்டும்.

      //நினைவுக்கு வரும்போது உடன் செய்துடவேணும் என்பதை அம்மாவும் (இது என் அம்மா)சொல்வார்கள்.//

      தங்கள் அம்மா சொல்வது மிகவும் சரியே. நல்ல செயல்களை, தான தர்மங்களை, நாம் செய்ய நினைத்தவுடன், உடனடியாக செய்து விடவேண்டும். தாமதிக்கக்கூடாது. ஒத்திப்போடவும் கூடாது.

      //நல்ல மாறுபட்ட கதை.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் ...
      அம்முலு

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  20. ஒன்று செய்
    நன்று செய்
    அதுவும் இன்றே செய்

    உண்மைதான். TIME AND TIDE WAIT FOR NONE.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANIFebruary 8, 2013 at 2:33 AM
      ஒன்று செய்
      நன்று செய்
      அதுவும் இன்றே செய்

      உண்மைதான். TIME AND TIDE WAIT FOR NONE.//

      வாங்கோ, வணக்கம். அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  21. நல்லதை நினைத்த மாத்திரத்திலேயே...செய்ய வேண்டும் என்பதை நன்றாக உணர்த்தும் கதை..அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. R.Umayal Gayathri February 4, 2015 at 12:07 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நல்லதை நினைத்த மாத்திரத்திலேயே...செய்ய வேண்டும் என்பதை நன்றாக உணர்த்தும் கதை..அருமை ஐயா.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      அன்புடன் VGK

      நீக்கு
  22. மனித மனத்தின் பல்வேறு முகங்களை கதாசிரியர் அழகாக, நுணுக்கமாக விவரித்துள்ளார். ஆனாலும் காலம் கடந்த கனிவினால் என்ன பயன்?

    பதிலளிநீக்கு
  23. பாபுவின் ஸெல்போனைக் கொடுக்கத்தான் அவன் வருகிரான் என்று புரியாமல் பதட்டப்பட்டது பாபுவின் தவறு. உதவி செய்ய நினைத்து அதை மறு நாளைக்கு ஒத்தி வைத்தது அதைவிட தவறு.

    பதிலளிநீக்கு
  24. எந்த அளவுக்கு சுற்றுப்புறங்களை அவதானித்திருந்தால் உங்களிடமிருந்து இப்படியொரு அற்புதமான கதை வெளிவந்திருக்கும்? வர்ணனைகள் பிரமாதம். காட்சியை நேரிலேயே காண்பது போன்ற உணர்வு.. செய்ய நினைக்கும் எந்த காரியத்தையும் தாமதமின்றி செய்யத்தூண்டும்படியான ஒரு விழிப்பைத் தரும் கதை. மிகவும் அருமை கோபு சார்.

    பதிலளிநீக்கு
  25. ரொம்ப கரீட்டா சொல்லினிங்க நல்ல செய்ய நெனச்சதுமே செய்து போடனும்

    பதிலளிநீக்கு
  26. காலத்தால் செய்த உதவி ஞாலத்திலும் மாளப்பெரிது தான். ஆனா இங்கே காலம் கடந்துவிட்டதே.

    பதிலளிநீக்கு
  27. நெகடிவான தோற்ற அமைப்புடன் சித்தரிக்கும்போதே அவந்தான் ஹீரோவாக இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அவனைப்பொறுத்தவரை விலையைப்பற்றி அறிந்திருக்கவில்லை என்றாலும் பொருளை உரியவரிடம் சேர்க்கும் எண்ணம் மேலோங்கி அதை நிறைவேற்ற முற்படுகையில் ஒட்டுமொத்தமாக விடைபெறும் பாத்திரம்...மனதில் நிற்கிறது...

    பதிலளிநீக்கு
  28. //அந்த அனாதையின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி மனப் பூர்வமாக பாபு பிரார்த்தித்த போது, ”அப்படியே ஆகட்டும்” என்பது போல அவனின் ஐ-பேட் மொபைல் போன் ஒலிக்க ஆரம்பித்தது.//
    கண்கள் பனித்து இதயம் கனத்தது!

    பதிலளிநீக்கு
  29. ஒரு பரிதாபமான பிச்சைக்காரனை கண்முன்னாடி நிறுத்திட்டீங்க. அவனின் நைந்து போன உடைகள் கழுதைக்கலர் ஜோல்னாபை கலைந்த பரட்டைத்தலை போறாததுக்கு காலில் பட்ட காயத்திலிருந்து வடிந்து கொண்டிருக்கும்ரத்தம். வர்ணனை படிக்கும்போதே ஐயோபாவம் என்று நினைக்க தோணுது. பாபுவும் அவனைப்பார்த்து பயந்தது.நம்மைத்தான் துறத்தி தாக்க வருகிறானோ என்று நினைப்பது யதார்த்தம். பாபுவின் ஸெல் ஃபோனை கொடுக்கத்தான் அவன் ஓடி வருகிறான் என்பது புரிந்ததும் அவனுக்கு எந்தவிதத்திலாவது உதவ நினைத்து வீட்டுக்கு வந்ததும் கொஞ்சம் பழய துணிகள் பணம் எடுத்துக்கொண்டு மறுநாள் போகும்போது அவன் இறநுது விட்டிருக்கிறான். உதவி செய்ய நினைத்த போது கையில் எதுவுமில்லாததால வீடு வந்து எல்லாம் கொண்டு போயிருக்கான். ஆனா டூ..... லேட்..... ஆயிடுத்தே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... March 11, 2016 at 11:32 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஒரு பரிதாபமான பிச்சைக்காரனை கண்முன்னாடி நிறுத்திட்டீங்க. அவனின் நைந்து போன உடைகள் கழுதைக்கலர் ஜோல்னாபை கலைந்த பரட்டைத்தலை போறாததுக்கு காலில் பட்ட காயத்திலிருந்து வடிந்து கொண்டிருக்கும்ரத்தம். வர்ணனை படிக்கும்போதே ஐயோபாவம் என்று நினைக்க தோணுது.//

      சூழ்நிலைகளை நன்கு மனதில் வாங்கிக்கொண்டு, ஆழ்ந்த வாசிப்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி

      //பாபுவும் அவனைப்பார்த்து பயந்தது. நம்மைத்தான் துரத்தி தாக்க வருகிறானோ என்று நினைப்பது யதார்த்தம்.//

      அதீதக் கற்பனைகளைவிட, யதார்த்தமான அன்றாட நிகழ்ச்சிகளைக் கதையாக்கிச் சொல்வதே வாசகர்களிடம் நல்ல வரவேற்பினைப் பெறுகிறது என்பது நான் கண்ட அனுபவம். அதையே உங்களிடமிருந்தும் இப்போது கண்டு மகிழ்ந்தேன்.

      //பாபுவின் ஸெல் ஃபோனை கொடுக்கத்தான் அவன் ஓடி வருகிறான் என்பது புரிந்ததும் அவனுக்கு எந்தவிதத்திலாவது உதவ நினைத்து வீட்டுக்கு வந்ததும் கொஞ்சம் பழய துணிகள் பணம் எடுத்துக்கொண்டு மறுநாள் போகும்போது அவன் இறந்து விட்டிருக்கிறான். உதவி செய்ய நினைத்த போது கையில் எதுவுமில்லாததால வீடு வந்து எல்லாம் கொண்டு போயிருக்கான். ஆனா டூ..... லேட்..... ஆயிடுத்தே...//

      விதி செய்த சதி அதுபோல அமைந்து விட்டது.

      தங்களின் தொடர் வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்பு அனுபவத்துடன் கூடிய பின்னூட்டக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      தங்களுக்காக ஓர் கூடுதல் தகவல்:

      வரும் 14.03.2016 முதல் 22.04.2016 வரை ஒருநாள் விட்டு ஒரு நாள் வீதம் மதியம் 3 மணி சுமாருக்கு ஓர் தொடர் என் வலைத்தளத்தில் வெளியிடப்பட உள்ளது.

      மொத்தம் 20 பகுதிகள் கொண்ட ஓர் வித்யாசமான தொடர். முடிந்தால் அந்த 20 பகுதிகளுக்கும் வருகை தாருங்கள், தங்களுக்குத் தோன்றும் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். தங்களின் நெருங்கிய நண்பர்களுக்கும் இதுபற்றி தகவல் சொல்லுங்கள்.

      அநேகமாக இந்த ஒரு தொடரே நான் இந்த 2016ம் ஆண்டு வெளியிடப்போகும் கடைசி பதிவுகளாகவும் இருக்கலாம்.

      அன்புடன் VGK

      நீக்கு