என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-6

திருமதி. ருக்மணி சேஷசாயி என்றாலே
குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருந்து 
பல்வேறு நீதிக்கதைகளை குழந்தைகளுக்குச் சொல்பவர்
என நம் எல்லோருக்குமே மிக நன்றாகத் தெரியும்

இங்கு பாருங்கோ .... குழந்தை ரோஷ்ணிக்கு 
அதேபோல நேரிலேயே வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்!

{ ”நேராகப் போய் Right இல் திரும்பு .. 
Wash Basin வரும் ” என்று :) }

’எங்கெங்கும் .... எப்போதும் .... என்னோடு’
சிறுகதைத்தொகுப்பு நூல் திருமதி. கீதா சாம்பசிவம்
அவர்களுக்கு நான் அளித்தபோது.

{நின்ற நிலையில் சிரித்தமுகத்துடன் கைதட்டுபவர் நம் ராதாபாலு 
அருகில் அமர்ந்திருப்பவர்: ருக்மணி மாமி}


நம் கீதா மாமியை ஏற்கனவே 06.10.2013 அன்று இரவு  
 10 நிமிடங்கள் மட்டுமே நான் நேரில் சந்தித்திருக்கிறேன்.

அப்போது நவராத்திரி சீஸன் ஆனதால் மாமி 
பட்டுப்புடவையுடனும், நகை நட்டுக்களுடனும்
பலர் வீடுகளுக்கு சுண்டல் கலெக்‌ஷனுக்காகச் சென்றுவந்து 
சுண்டல் சாப்பிட்ட மகிழ்ச்சியில் அமர்ந்திருந்தார்கள். 
ஜகத்ஜோதியாகவும் காட்சியளித்தார்கள்.
அன்று நானே என் கேமராவில் எடுத்த புகைப்படம் இதோ:


 

இப்போது ஆளே அடையாளம் தெரியாமல்
கறுத்துப் போய் மிகவும் இளைத்தும் விட்டார்கள்.

இதனால், இவர்கள் தான் கீதா மாமி என நம் ராதாபாலுவிடம்
அடித்துச் சொல்ல முடியாமல் நான் மிகவும் தடுமாறிப் போனேன்.

”சற்றே கறுத்துப்போய் 
மிகவும் இளைத்துத்தான் போய் விட்டாள்”
என்பதைத் திரு. சாம்பசிவம் மாமா அவர்களும் என்னிடம்
 மிகுந்த வருத்தத்துடன் ஒத்துக்கொண்டார். :)

திரு. சாம்பசிவம் மாமா அவர்கள் ஏனோ 
மேலே நடக்கும் பதிவர் சந்திப்பினில்
கலந்துகொள்ள வராமல் மாமியை மட்டும் வண்டியிலிருந்து
கீழே இறக்கிவிட்டு விட்டு என்னுடன் மட்டும் 
ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு
ஜாலியாக பேரெழுச்சியுடன் கம்பி நீட்டிவிட்டார்.

கோபு + திரு.நாராயணன் + 
ஆரண்யநிவாஸ் + திரு. தமிழ் இளங்கோ

பின்புறம் இடதுபுறமாக நிற்பவர்: 
மணக்கும் மல்லிகைப் 
பூச்சரத்தினை வந்திருக்கும் 
அனைத்துப் பெண்மணிகளுக்கும் 
பிரித்தளிக்க ஆயத்தமாகிவரும் 
திருமதி ஆதிவெங்கட் அவர்கள்.


பெண்கள் அனைவரும் பூச்சூடி மகிழும்போது

நாம் ஆணாகப் பிறந்துவிட்டோமே என 
ஆண்களாகிய நாங்கள் நினைப்பதுண்டு.
ஆனால் அதனை வெளியே சொல்லிக்கொள்வது இல்லை.

சொன்னால் எங்களுக்கெல்லாம்
’காதிலே பூ’ 
வைத்து விடுவார்களே
இந்தத்தாய்க்குலம் ! :)




என் ஒருசில சொந்தக்கருத்துக்கள்:




அன்று நாங்கள் ஏற்கனவே பேசிக்கொண்டபடி அனைத்துப்பதிவர்களும் [100%] சந்தித்துக்கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒருவேளை இதனால் அன்று இரவு மழை கொட்டோகொட்டென கொட்டிவிடுமோ என நான் சற்றே பயந்தேன். இருப்பினும் அன்பென்னும் மழையில் மட்டுமே நாங்கள் அனைவரும் அன்று நனைந்தோம்.

நான் சற்றும் எதிர்பாராத வகையில், பதிவர் செல்வி. மாதங்கி மாலி அவர்கள் சார்பில் அவர்களின் அன்புத்தந்தை திரு. மஹாலிங்கம் [அஷ்டாவதானி] அவர்களும் வருகை தந்திருந்தது எனக்கு மேலும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கும் தகவல் அளித்து வரவழைத்துள்ள நம் அன்புக்குரிய திரு.ரிஷபன் அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

திரு. ரிஷபன் அவர்கள் என்னிடம் சொல்லியிருந்தபடி தன் துணைவியாரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு வருவார் என நான் எதிர்பார்த்தேன். அவர்களை நீண்ட நாட்களுக்குப்பின் தம்பதி ஸமேதராய் பார்த்து மகிழலாம் என்ற ஆவலுடன் வந்திருந்த எனக்கு, சற்றே ஏமாற்றம் ஏற்பட்டது.

இவ்வளவு தூரம் நாம் படித்துப்படித்துச் சொல்லியும், நாம் எல்லோருமே மிகச்சரியாக 4.40க்குள் அங்கு கூடியிருந்தும், ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களும், சந்திப்பின் முக்கிய நாயகர்களான திருமதி. ரஞ்ஜனி தம்பதியினரும் மிகவும் தாமதமாக வருகை தந்தது என்னால் ஏனோ ஜீரணித்துக்கொள்ள இயலவில்லை. அவர்கள் இருவரும் நம்மைப்போலவே மிகச் சரியான நேரத்தில் வருகை தந்திருந்தால், நாம் இந்த இனிய சந்திப்பினை மேலும் இனிமையாகக் கொண்டாடி இருக்கலாம்.

எல்லோரையும் அழகாக ஒன்றுகூட்டி, திரு. ரிஷபன் அவர்களை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக ஆக்கி, அவரைவிட்டே ஓர் அறிமுக உரையாற்றச்சொல்லி, அதன்பிறகு ஒவ்வொரு பதிவரும் அவரவர்களைப் பற்றி ஓர் 5 அல்லது 10 நிமிடங்களாவது பேசச்சொல்லி, அனைவரும் அனைவரின் பேச்சினையும், குரலையும், தனித்திறமைகளையும், விருப்பு வெறுப்புக்களையும் கேட்டு மகிழ்ந்திருக்கலாம். இவர்கள் இருவரின் மிகத்தாமதமான வருகையால் அதுபோலெல்லாம் செய்ய இயலாமல் மிகவும் நேர நெருக்கடியாகிவிட்டது.

அதுபோல தனக்கு ஏதோ தலைபோகிற அவசர வேலைகள் இருப்பதாகச் சொல்லி ஸ்ரீரங்கத்திலேயே குடியிருக்கும் கீதா மாமி முதல்பந்தியில், அதுவும் தனிப்பந்தியாக, சுடச்சுட அவசர அவசரமாக எதையோ சாப்பிட்டுவிட்டு சென்றது ஏன் என்பது பிறகுதான் நம் அனைவருக்குமே புரியவந்தது. இந்த சந்திப்பு நிகழ்ச்சி முற்றிலும் முடிந்த அன்று இரவு 7.30க்குள், இந்த நம் சந்திப்பு பற்றி ஓர் பதிவே எழுதி வெளியிட்டு அசத்திவிட்டார்கள். அதுதான் அவர்கள் சொல்லிச்சென்ற அந்த தலைபோகிற அவசர வேலையாக இருக்கக்கூடும் என்பது என் எண்ணம். 

எனினும் அங்கிருந்த சோஃபா செட்டை சற்றே முன்னால் இழுத்துப்போட்டு, உட்கார்ந்த நிலையில் சிலரும், பின்புறம் நின்ற நிலையில் சிலருமாக க்ரூப் போட்டோவாவது எடுத்துக்கொள்ள நமக்குத் தோன்றியதே .... அதில் எனக்குச் சற்றே மகிழ்ச்சி. IN FACT அதில் மட்டும் தான் நாம் அனைவரும் கூட்டமாகக் கூடி மகிழ்ந்துள்ளோம். அது என்றும் நம் பசுமையான நினைவுகளில் நிற்கக்கூடும்.

திருமதி. ரஞ்ஜனி அவர்கள் வந்ததும், ஓர் சின்ன வரவேற்பு, ஸ்வீட் விநியோகம்,  சின்னச்சின்ன அவசர அறிமுகங்கள், அதன்பின் அவர்களின் புத்தக விநியோகம் ... அதன்பின் நம் பிரதான எதிர்பார்ப்பான சாப்பாடுக்கடை ... என ஒருவித அவசரத்தில் எல்லாமே கிடுகிடுவென முடிந்துவிட்டது போன்றதோர் FEELING / ஆதங்கம் எனக்கு. 


அனைவரையும் தன் வீட்டுக்கு வரவழைத்து, விருந்தளித்து, அமர்க்களமாக எல்லாம் நடைபெற்றதில், ருக்மணி மாமி முகத்தில் ஓர் தனி சந்தோஷத்தினை என்னால் காணமுடிந்தது.

மேலும் ஒருசில படங்களுடன், இதன் அடுத்தபகுதி, இந்த பதிவர் சந்திப்புத்தொடரின் நிறைவுப்பகுதியாக இருக்கும்.

தொடரும் 

என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]



36 கருத்துகள்:

  1. சந்திப்பு விவரங்களை ரசனையாகச் சொல்லி, கடைசியில் குறைகளையும் வெளிப்படையாகச் சொல்லியிருப்பது நன்று.

    பதிலளிநீக்கு
  2. கீதா மாமி சற்றே கறுத்து மிகவும் இளைத்துப் போய் விட்டார் என்பதில் உள்குத்தம் ஏதும் இல்லையே?
    எதிலுமே கிண்டலும் கேலியும் இருப்பதால், ‘உண்மை எது? பொய் எதுன்னு ஒன்னும் புரியலே!
    வேர்ட் பிரஸ்ஸை வழுவட்டை என்றது மிகச் சரி. பக்கம் பக்கமாக பின்னூட்டம் எழுதி அது காணாமல் போனால் மிகவும் கடுப்பாகத் தான் இருக்கும்.
    அன்பின் மழையில் நனைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. ஏகப்பட்டப் புகைப்படங்கள் இந்தத் தொடரில். படங்களில் நீங்களும் இருப்பதால் , உங்கள் நண்பர் எடுத்து உதவியிருக்கிறார் என்றுப் புரிகிறது.. எங்களுக்கும் படத்துடன் கூடிய சுவையானப் பதிவுகள் கிடைத்தன. நன்றி இருவருக்கும்..

    பதிலளிநீக்கு
  4. பகிர்வுக்கு நன்றி! தங்களின் ஆதங்கம் நியாயமானதே! ஆனாலும் முகூர்த்த நாள் அன்று சந்திப்பு அமைந்தமையால் நிறைய பேருக்கு வேலை இருந்திருக்கலாம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. "ஆபீஸ் வரா மாதிரி வந்துடுங்கோ"ன்னு சொல்லிட்டு, லேட்டா வரான்னு வருத்தப்பட்டால் எப்படி சார்!

    பதிலளிநீக்கு
  6. அருமையானதொரு சந்திப்பு குறித்து பகிர்ந்திருக்கிறீர்கள்...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. சுவாரஸ்யமாக எழுதி உள்ளீர்கள் சந்திப்பை! நல்ல புகைப்படங்கள். பலரையும் புகைப்படத்தில் காண முடிகின்றது. பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையாக குறை, நிறைகளையும் சேர்த்து பகிர்ந்து கொண்டீர்கள்.

    படங்கள் எல்லாம் அருமை. வெளியூரிலிருந்து வருபவர்கள் பல சந்திப்புகளை (உறவினர்) வைத்துக் கொண்டு வந்து இருப்பார்கள். அதனால் காலதாமதமாகி இருக்கலாம். கீதா உறவினர் வருகையால் சீக்கிரம் கிளம்பி விட்டார்கள். கிடைத்த நேரத்தை அழகாய் எல்லோரும் சிறப்பித்து விட்டீர்கள்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அடுத்த சந்திப்பில் ஆதங்கங்கள் எல்லாம் தீர்ந்து விடும் ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. படங்களும்,அவற்றிற்கேற்ற ரசனையான உங்களது விவரங்களும் அமைந்த, விறுவிறுப்பான சுவாரஸ்யமான தொடர், சீக்கிரம் முடியப் போகிறது என்பது கவலையாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. இத்தனைப் பேரை மிக அழகாக சந்திக்கவைத்து சிறப்பித்திருப்பதே ஒரு பெரிய விஷயம். குறை நிறைகள் எல்லாவற்றிலும் இருக்கத்தானே செய்கிறது. அதே சமயம் நிறைய நிறைகளையே காணமுடிகிறது உங்கள் எழுத்திலும் கூட. மனம் நிறைந்த வாழ்த்துகள் அனைவருக்கும். படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  12. நாத்தனார் வருகையால் நான் சீக்கிரம் கிளம்பினேன். முந்தாநாள் தான் அவர் ஶ்ரீரங்கத்திலேயே இருக்கும் தன் மகள் வீட்டுக்குச் சென்றார். :))))) சாப்பாடு ஒண்ணும் செய்து கொடுக்கலை என்றாலும், (பூணூல் வீட்டில் சாப்பிட்டு விட்டார்கள்; நாங்கள் மறுநாள் பூணூலில் கலந்து கொண்டோம்;) அவர் வரும்போது வீட்டில் இருக்கணுமே! :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam February 28, 2015 at 1:30 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நாத்தனார் வருகையால் நான் சீக்கிரம் கிளம்பினேன். முந்தாநாள் தான் அவர் ஶ்ரீரங்கத்திலேயே இருக்கும் தன் மகள் வீட்டுக்குச் சென்றார். :))))) சாப்பாடு ஒண்ணும் செய்து கொடுக்கலை என்றாலும், (பூணூல் வீட்டில் சாப்பிட்டு விட்டார்கள்; நாங்கள் மறுநாள் பூணூலில் கலந்து கொண்டோம்;) அவர் வரும்போது வீட்டில் இருக்கணுமே! :)))//

      கரெக்ட். நமக்கு எவ்வளவு வயதானாலும் நாத்தனார் .... அதுவும் சொல்லிவிட்டு, வருகை தருகிறார் என்றால், நிச்சயமாக வீட்டில் இருக்கத்தான் வேண்டும் என்பதில் எனக்கும் எந்த மாற்றுக்கருத்துக்களும் இல்லை. மகிழ்ச்சியே !

      என் ஆத்துக்காரியும் அதே டைப் தான். அதுவும் அவள் நாத்தனார்கள் இருவரில் ஒருவர் இங்கு எங்க ஆத்துக்குப் பக்கத்திலேயே, ஒரே தெருவில் [வடக்கு ஆண்டார் தெரு] இருக்கிறார்கள். ஃபோன் வந்தாலே போதும். ஒருவித மரியாதையுடன் ஆனால் மணிக்கணக்காக இருவரும் ஊர்க்கதையெல்லாம் விடிய விடிய பேசிக்கொண்டே இருப்பார்கள்.

      எங்களுக்கெல்லாம் 6.45 மணிக்குப்பிறகே சிற்றுண்டிகள் வழங்க ஆரம்பித்தார்கள். அன்றைய சந்திப்பு நிகழ்ச்சி முடிந்து நாங்கள் எல்லோரும் அங்கிருந்து புறப்படும் போது மணி இரவு 7.30 இருக்கும்.

      தங்களின் http://sivamgss.blogspot.in/2015/02/blog-post_22.html இந்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ள நேரம் இரவு 7.21

      Posted by Geetha Sambasivam at 2/22/2015 07:21:00 PM அதனால் நானும் அவ்வாறு நகைச்சுவையுடன் எழுதியுள்ளேன்.

      தங்கள் நாத்தனார் ஒருவேளை அதன்பிறகு தாமதமாகக் கூட தங்கள் இல்லத்திற்கு வந்திருக்கலாம். நானும் ஒத்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  13. //சற்றே கறுத்துப்போய்
    மிகவும் இளைத்துத்தான் போய் விட்டாள்”
    என்பதைத் திரு. சாம்பசிவம் மாமா அவர்களும் என்னிடம்
    மிகுந்த வருத்தத்துடன் ஒத்துக்கொண்டார். :)//

    ஹிஹிஹிஹி, நல்ல ஜோக் தான்! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam February 28, 2015 at 1:31 PM

      **சற்றே கறுத்துப்போய் மிகவும் இளைத்துத்தான் போய் விட்டாள்** என்பதைத் திரு. சாம்பசிவம் மாமா அவர்களும் என்னிடம் மிகுந்த வருத்தத்துடன் ஒத்துக்கொண்டார். :)
      --- vgk

      //ஹிஹிஹிஹி, நல்ல ஜோக் தான்! :)))))//

      இது ஜோக் அல்ல. தங்கள் ஆத்துக்காரர் என்னிடம் சொன்னது மட்டுமே; ஒரு சமயம் அவர் ஏதாவது என்னிடம் ஜோக் அடித்தாரோ .... என்னவோ :))))

      அவர் இதை என்னிடம் சொல்லும்போது நீங்களும் அங்கேதான் இருந்தீர்கள். தாங்கள் அதை சரியாகக் காதில் வாங்கிக்கொள்ளவில்லையோ என்னவோ !

      நீக்கு
  14. //அப்போது நவராத்திரி சீஸன் ஆனதால் மாமி
    பட்டுப்புடவையுடனும், நகை நட்டுக்களுடனும்//

    அது பட்டுப்புடைவையே இல்லை. வாழைநாரிலே செய்த புடைவை. நெசவாளருக்கு அதன் மூலம் கிடைக்கும் லாபம், மகிழ்ச்சி இரண்டுக்காகவும் வாங்கியது. அதிகம் விலையும் இல்லை; 650 ரூபாய் தான்; இங்கே எங்கள் குடியிருப்பு வளாகத்திலேயே கண்காட்சி நடத்துவார்கள். அதிலே வாங்கினது.

    அப்புறம் நகை, நட்டோ போட்டுக்கும் வழக்கம் ஏனோ என்னிடம் இல்லை. :))) போட்டுக் கொண்டால் சங்கடமாக உணர்வேன். :))))ஆகவே நகை, நட்டு எதுவும் போட்டுக்கலை. வழக்கமான கண்ணாடி வளையலும் ஒரே ஒரு வளையலும் தான்! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam February 28, 2015 at 1:36 PM

      **அப்போது நவராத்திரி சீஸன் ஆனதால் மாமி
      பட்டுப்புடவையுடனும், நகை நட்டுக்களுடனும்** -VGK

      //அது பட்டுப்புடைவையே இல்லை.//

      ஆனால் அது பட்டுப்புடவை போலவே பளபளப்பாக நல்ல
      ஜரிகை பார்டருடன் இருக்குது பாருங்கோ. என் கண்களுக்கு எனக்கு அது பட்டுப் புடவை போலவே தோன்றியது. ஆனால் நான் அப்போது கண் ஆபரேஷன் செய்துகொள்ளவில்லை. :))))

      2014 ஜனவரியிலும் + 2015 ஜனவரியிலும்தான் கண் ஆபரேஷன்கள் செய்து கொண்டேன்.

      // வாழைநாரிலே செய்த புடைவை. நெசவாளருக்கு அதன் மூலம் கிடைக்கும் லாபம், மகிழ்ச்சி இரண்டுக்காகவும் வாங்கியது. அதிகம் விலையும் இல்லை; 650 ரூபாய் தான்; இங்கே எங்கள் குடியிருப்பு வளாகத்திலேயே கண்காட்சி நடத்துவார்கள். அதிலே வாங்கினது. //

      சந்தோஷம். நன்னாவும் உள்ளது. மலிவாகவும் உள்ளது. தாங்கள் சொல்வதுபோல நெசவாளர்களுக்கு ஓர் ஆதரவு + லாபம் + மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சியே.

      வாழைநாரில் புடவை என்பதை இப்போதுதான் நான் முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன்.

      //அப்புறம் நகை, நட்டோ போட்டுக்கும் வழக்கம் ஏனோ என்னிடம் இல்லை. :))) போட்டுக் கொண்டால் சங்கடமாக உணர்வேன். :)))) ஆகவே நகை, நட்டு எதுவும் போட்டுக்கலை. வழக்கமான கண்ணாடி வளையலும் ஒரே ஒரு வளையலும் தான்! :)))))//

      அதையும் நான் இந்தப்படத்தில் கவனித்தேன். அதிகமாக நகைகள் போட்டுக்கொள்ளவில்லை. வெளியில் செல்ல வேண்டி பாதுகாப்பு கருதி, தவிர்த்திருப்பீர்களோ என நினைத்துக்கொண்டேன். சும்மாத்தான் நகைநட்டுக்களுடன் என ஓர் அடுக்குமொழிக்காக எழுதியிருந்தேன்.

      ஆனால் நீங்களே சொல்லுங்கோ. 18 மாதங்களில் அந்த மேலே காட்டியுள்ள இரண்டு படங்களுக்கும் எவ்ளோ வித்யாசம் உள்ளன. நீங்க கறுத்து இளைச்சுத்தான் போயிட்டேள் ! உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கோ !!

      அன்புடன் கோபு

      நீக்கு
  15. ஒவ்வொரு பதிவையும் ரசித்துப் படித்து முடித்தேன்.

    தமிழ் இளங்கோ சார் சொன்னபடி இந்த சந்திப்புகள் எல்லாம் முடியப் போகுதோ என்று கவலையா இருக்கு.

    குற்றம் குறைகளையும் வெளிப்படையா சொன்னதுக்கு பாராட்டுகள். நான் அதுல வழுவட்டை. :) மனசுல வச்சிட்டு சங்கடப் படுவேன்.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருந்திருக்கும். ஆனால் நீங்க சொன்னபடி நாங்களும் ஃபேஸ்புக் மீட் பண்ணும்போது ஏதாவது விட்டுப் போனாப்புலயே இருக்கும் கடைசி வரை.

    சிலப்போ அந்த ஹோட்டல்காரனே மதியம் 12 லேருந்து 4 மணி வரை பார்த்துட்டு ( பஃபே ) முதலில் மியூசிக் கட் பண்ணுவாங்க அப்புறம் ஏசி. சில சமயம் ஹால் இருண்டா மாதிரி ஆயிடும்.. சோ மனசில்லாம ஒவ்வொரு இடமா வந்து ரிஸப்ஷன் வந்து அப்புறம் லாபி, லான் எல்லாம் வந்து எண்ட்ரண்ஸ் வந்து பிரியா விடை பெறுவோம். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan February 28, 2015 at 2:34 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஒவ்வொரு பதிவையும் ரசித்துப் படித்து முடித்தேன்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //தமிழ் இளங்கோ சார் சொன்னபடி இந்த சந்திப்புகள் எல்லாம் முடியப் போகுதோ என்று கவலையா இருக்கு.//

      எனக்கு எப்படா இந்தத் தொடர் முடியப்போகுது .... நாம் சற்றே நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம் என்று உள்ளது.

      சொல்ல வேண்டிய விஷயங்களோ ஏராளம். தாமதித்தால் ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்ற கதையாகி விடும். அதனால் 22.02.2015 சந்திப்பு நிகழ்ந்த அன்று நள்ளிரவில் ஆரம்பித்து 28.02.2015 முடிய மிகச்சுருக்கமாக ஏழே எழு பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டு முடித்து விட்டேன்.

      ’அந்த ஏழு நாட்கள்’ இரவுகளில் நான் தூங்கவே இல்லை.

      //குற்றம் குறைகளையும் வெளிப்படையா சொன்னதுக்கு பாராட்டுகள். நான் அதுல வழுவட்டை. :) மனசுல வச்சிட்டு சங்கடப் படுவேன்.//

      நானும் முன்பெல்லாம் மனதில் மட்டும் சங்கடப்பட்டுக்கொண்டு தாங்கள் சொல்வது போல வழுவட்டையாகத்தான் இருந்து வந்தேன்.

      இப்போதும் அப்படித்தான் இருந்திருப்பேன். ஆனால் இப்போது இந்த இனிய சந்திப்பின் முழுப்பொறுப்பாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் நானே இருக்க நேர்ந்து விட்டதால் எனக்கு இதில் புதிதாக பல அனுபவங்கள் கிடைக்கப்பெற்றேன். அதனால் இதில் நிகழ்ந்த குறை நிறைகளை என்னால் மனம் விட்டுச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதை என் கடமையாகவே நினைத்தேன். யார் மனமும் சங்கடப்படாமல் மிகவும் பக்குவமாகவே அதனை எடுத்துரைத்தும் உள்ளேன்.

      என்னிடம் இந்தப்பொறுப்பினை அளிக்கமால் இருந்திருந்தால், நானும் பிறரைப்போலவே ஏனோ தானோ என வழுவட்டையாக, பத்தோடு பதினொன்றாக, கம்முன்னு வாயையே திறக்காமல்தான் இருந்திருப்பேன்.

      ./ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருந்திருக்கும். //

      இதில் கலந்துகொண்ட நம் ராதாபாலு அவர்களுக்கு அன்று இருந்த நெருக்கடி மிகவும் அதிகம். அவர் அன்றிருந்த நிலைமையில் நானோ, வேறு யாராகவே இருந்தாலும், சந்திப்பில் கலந்துகொண்டிருக்க முடியவே முடியாது. அவர்களும் அன்று சீக்கரமாகவே வீட்டுக்க்குத் திரும்ப வேண்டியதோர் மாபெரும் நெருக்கடி. இருப்பினும் மிகவும் அமைதி காத்தார். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. இவையெல்லாவற்றையும் முற்றிலுமாக தெரிந்திருந்த + அழைப்பு விடுத்திருந்த எனக்கும் அதில் பலவித தர்மசங்கடமாகத்தான் இருந்தது.

      இதையெல்லாம் எப்படி எல்லோருக்கும் வெளிப்படையாக நான் புரிய வைக்க முடியும்?

      //ஆனால் நீங்க சொன்னபடி நாங்களும் ஃபேஸ்புக் மீட் பண்ணும்போது ஏதாவது விட்டுப் போனாப்புலயே இருக்கும் கடைசி வரை.

      சிலப்பேர் அந்த ஹோட்டல்காரனே மதியம் 12 லேருந்து 4 மணி வரை பார்த்துட்டு ( பஃபே ) முதலில் மியூசிக் கட் பண்ணுவாங்க அப்புறம் ஏசி. சில சமயம் ஹால் இருண்டா மாதிரி ஆயிடும்.. சோ மனசில்லாம ஒவ்வொரு இடமா வந்து ரிஸப்ஷன் வந்து அப்புறம் லாபி, லான் எல்லாம் வந்து எண்ட்ரண்ஸ் வந்து பிரியா விடை பெறுவோம். :)//

      தங்களின் அனுபவங்களைச் சொல்லி பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி.

      எல்லோரையும் ஓர் இடத்தில், ஓர் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டி ஒரு மிகச்சிறிய சந்திப்பு நிகழ்த்துவது என்பது எவ்வளவு சிரமம் என்பதை நானும் முதன் முதலாக இப்போது தான் நன்கு உணர்ந்துகொண்டேன்.

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், தேன் போன்ற இனிமையான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  16. நாங்கள் தாமதமாக வந்தது தவறுதான். அதற்கு எல்லோரிடமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்ளுகிறேன்.
    நாங்களும் நாலரை மணிக்குக் கிளம்பி மாமி வீட்டிற்கு வந்துவிட்டோம். வந்து இறங்கியதும்தான் ஒன்றுமே வாங்கிக் கொண்டுவரவில்லையே என்பது உரைத்தது. நாங்கள் வந்த ஆட்டோவையே நிறுத்தி திரும்பவும் தெற்கு வாசல் சென்று பழம், பூ வாங்கி வந்தோம். நாங்களும் திரு ராமமூர்த்தியும் ஒன்றாகத் தான் வந்தோம். மாமியின் அபார்ட்மெண்ட் வாசலில் சந்தித்தோம். ஒன்றாகவே லிப்டில் வந்தோம். கடைசியாக ஊருக்குக் கிளம்பும்போது நானே உங்களுக்கு போன் செய்தேன். ஃபோனிலும் நாங்களும் திரு ராமமூர்த்தியும் ஒன்றாகத்தான் வந்தோம் என்று சொன்னேன். ஆனால் நீங்கள் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.
    டெலிபோனிலும் நான் எதோ செய்யக்கூடாத தவறு செய்துவிட்டாற் போலவும், நீங்கள் ஏதேதோ திட்டம் போட்டு வைத்திருந்தது போலவும் நான் தாமதமாக வந்ததால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றும் சரமாரியாக என்மேல் குற்றம் சாட்டினீர்கள். இந்த சந்திப்பை நான் ஒரு informal சந்திப்பாகத்தான் நினைத்து வந்தேன். நீங்கள் மனதில் என்ன நினைத்துக்கொண்டு வந்தீர்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்? முதலிலேயே சொல்லியிருக்கலாமே.
    உண்மையில் ஸ்ரீரங்கம் சந்திப்பை மறக்கமுடியாமல் செய்துவிட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan February 28, 2015 at 5:21 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நாங்கள் தாமதமாக வந்தது தவறுதான். அதற்கு எல்லோரிடமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்ளுகிறேன்.//

      மன்னிப்பு என்கிற பெரிய வார்த்தைகளெல்லாம் எதற்கு?ப்ளீஸ் வேண்டாமே !

      //நாங்களும் நாலரை மணிக்குக் கிளம்பி மாமி வீட்டிற்கு வந்துவிட்டோம். வந்து இறங்கியதும்தான் ஒன்றுமே வாங்கிக் கொண்டுவரவில்லையே என்பது உரைத்தது. நாங்கள் வந்த ஆட்டோவையே நிறுத்தி திரும்பவும் தெற்கு வாசல் சென்று பழம், பூ வாங்கி வந்தோம். நாங்களும் திரு ராமமூர்த்தியும் ஒன்றாகத் தான் வந்தோம். மாமியின் அபார்ட்மெண்ட் வாசலில் சந்தித்தோம். ஒன்றாகவே லிப்டில் வந்தோம். கடைசியாக ஊருக்குக் கிளம்பும்போது நானே உங்களுக்கு போன் செய்தேன். ஃபோனிலும் நாங்களும் திரு ராமமூர்த்தியும் ஒன்றாகத்தான் வந்தோம் என்று சொன்னேன். ஆனால் நீங்கள் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.//

      தாங்கள் ஊருக்குப்போய் வருவதாக எனக்கு போன் செய்தபோதும், ஃபோனில் தங்களிடம் நான் பேசும்போதும், இந்தப்பதிவினில் எழுதும்போதும், நான் ஏதும் தங்களை குற்றம் சொல்வதாக தயவுசெய்து நினைக்க வேண்டாம்.

      என்னுடைய உணர்வுகளை தங்களுடன் ஜஸ்டு மனம் விட்டு வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான். இதே உணர்வுகளில் இருந்த மற்றவர்கள் வெளியே அதனை ஏதோ ஒரு தயக்கத்தில் சொல்லாமல் இருந்திருக்கலாம்.

      //டெலிபோனிலும் நான் எதோ செய்யக்கூடாத தவறு செய்துவிட்டாற் போலவும், நீங்கள் ஏதேதோ திட்டம் போட்டு வைத்திருந்தது போலவும் நான் தாமதமாக வந்ததால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றும் சரமாரியாக என்மேல் குற்றம் சாட்டினீர்கள்.//

      இல்லை. இல்லை. இல்லவே இல்லை. வெளிப்படையாக நான் உங்களிடம் சற்றே மனம் விட்டு, உரிமையுடன் பேசியதை, இப்படித்தவறாக குற்றம் சாட்டியதாக எடுத்துக்கொள்வீர்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவே இல்லை.

      // இந்த சந்திப்பை நான் ஒரு informal சந்திப்பாகத்தான் நினைத்து வந்தேன்.//

      நானும் நிச்சயமாக அதேபோலத்தான் நினைத்து வந்தேன்.

      இருப்பினும் பலரும், அதுவும் என் மூலம், ஓரிடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்களுக்காகவே சந்தித்துக்கூடும் விதமாக என்னாலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், இந்த ஒரு சின்ன விஷயத்தை தங்களிடம், அதுவும் ஒரு உரிமை எடுத்துக்கொண்டு பகிர்ந்து கொள்ளும்படியாக எனக்கு ஆனது.

      //நீங்கள் மனதில் என்ன நினைத்துக்கொண்டு வந்தீர்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்?//

      நீங்கள் திருச்சிக்கு வரும் விஷயம், நீங்கள் சொல்லாமல் எனக்கு எப்படித்தெரியும்? சற்றே நிதானமாக யோசித்துப்பாருங்கோ.

      //முதலிலேயே சொல்லியிருக்கலாமே. //

      பலமுறை ஃபோனிலும், மெயிலிலும் தாங்கள் உள்பட அனைவருடனும் நான் சந்திக்கும் இடம், சந்திக்கும் நேரம் முதலியன பற்றி பேசித்தானே நாம் இறுதி முடிவு செய்தோம். இதைவிட என்ன முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும்? எனக்குப் புரியவில்லை.

      4 மணி முதல் 7 மணி வரை என்று தாங்கள் முதலில் குறிப்பிட்டிருந்ததைக்கூட, நான் தானே, சந்திக்கும் நேரங்களில் அதுபோல வழவழாக் கொழகொழாவே இருக்கக்கூடாது. மிகச்சரியாக 4.45 முதல் 4.59 க்குள் அனைவரும் கூட வேண்டும் என்றுதானே ஆலோசனையும் சொல்லி அனைவருக்கும் தெரிவித்திருந்தேன் !

      //உண்மையில் ஸ்ரீரங்கம் சந்திப்பை மறக்கமுடியாமல் செய்துவிட்டீர்கள். நன்றி. //

      மறக்க முடியாத இனிமையான சந்திப்புதான் என்பதை தயவுசெய்து என்றும் மறக்காதீர்கள். ஏற்கனவே இரண்டு பிரபலங்கள் திருச்சிக்கு வருகை தந்த போது, இந்த அளவுக்கு என்னால் கூட்டத்தைக் கூட்டவே முடியவில்லை. இது இங்குள்ள பலருக்கும் மிக நன்றாகவே தெரிந்த விஷயம் ஆகும்.

      தாங்கள் இங்கு கொப்பளித்துள்ள சற்றே கோபமான வார்த்தைகள் எனக்கு ஓர் புத்திக்கொள்முதல் என நான் எடுத்துக்கொள்கிறேன். அதனால் தான் இந்தத்தங்களின் பின்னூட்டத்தையும் நான் துணிந்து பப்ளிஷ் கொடுத்து, பதிலும் கொடுத்துள்ளேன். என் மீது எந்தத்துளி தவறும் இருப்பதாக இன்னும் நான் நினைக்கவே இல்லை.

      தங்கள் வருகை + எங்களுடனான இனிய சந்திப்பு போன்ற எல்லாவற்றிற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      இப்போதும் உரிமையுடனும் அன்புடனும் VGK

      நீக்கு
  17. படங்களும், சந்திப்பு பற்றிய விவரங்களும் அருமை. தொடர்கிறேன்.

    தாங்கள் அனுப்பி வைத்த படங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. //{ ”நேராகப் போய் Right இல் திரும்பு ..
    Wash Basin வரும் ” என்று :) }// ஹா.. ஹா.. வழிகாட்டி? பேச்சுக்கு நடுவில் இதையும் கவனித்து போட்டோ எடுத்து அதற்கு சிரிக்க சிரிக்க கமெண்ட் .. அருமை போங்கோ!!
    அற்புதமான சந்திப்பு.

    பதிலளிநீக்கு
  19. நம் சந்திப்பை பற்றிய பதிவு அருமை. அழகான புகைப் படங்கள் மேலும் சுவை கூட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
  20. உங்கள் ஸந்திப்புகளைப்பற்றி அநேகமாக எல்லோருடைய பதிவுகளையும் படித்து விட்டேன்.சிலஸமயம் ஞாபகம் மறந்து விடுகிறது. அழகான படத்துடன் பதிவுகள் அருமை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  21. உங்கள் யாவரின் ஸந்திப்புகள் அழகாகத் தொடுத்துள்ளீர்கள். படங்களும் ஓஹோ என்று இருக்கிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  22. விரிவான விளக்கத்துடன் சந்திப்பின் புகைப்படங்கள்..அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  23. அருமையான சந்திப்பும் அதைவிட அருமையான போட்டோக்களும்.

    பதிலளிநீக்கு
  24. போட்டோக்கள் எல்லாமே நல்லா இருக்கு. சந்திப்பு பற்றிய விவரங்களும் சுவாரசியமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  25. அனைவரையும் தன் வீட்டுக்கு வரவழைத்து, விருந்தளித்து, அமர்க்களமாக எல்லாம் நடைபெற்றதில், ருக்மணி மாமி முகத்தில் ஓர் தனி சந்தோஷத்தினை என்னால் காணமுடிந்தது.//

    சந்தோஷ சந்திப்பு மனம் நிறைத்தது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 19, 2015 at 3:49 PM

      வாங்கோ, வணக்கம்.

      **அனைவரையும் தன் வீட்டுக்கு வரவழைத்து, விருந்தளித்து, அமர்க்களமாக எல்லாம் நடைபெற்றதில், ருக்மணி மாமி முகத்தில் ஓர் தனி சந்தோஷத்தினை என்னால் காணமுடிந்தது.**

      //சந்தோஷ சந்திப்பு மனம் நிறைத்தது...!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  26. படங்களும், பதிவுகளும் கனஜோர்.

    //**அனைவரையும் தன் வீட்டுக்கு வரவழைத்து, விருந்தளித்து, அமர்க்களமாக எல்லாம் நடைபெற்றதில், ருக்மணி மாமி முகத்தில் ஓர் தனி சந்தோஷத்தினை என்னால் காணமுடிந்தது.**//

    இருக்காதா பின்னே. இதைவிட மகிழ்ச்சியைத் தருவது எது?

    பதிலளிநீக்கு
  27. படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்குது. இதுக்கும் மேல இன்னா சொல்லுதுன்னு வெளங்கல. அல்லாரும் கூட இதேதா சொல்லினாக.

    பதிலளிநீக்கு
  28. படங்கள் பகிர்வு சுவாரசியமாக இருக்கு. பதிவை விட பின்னூட்டங்கள் படிக்கத்தான் டைம் நிறைய தேவைப்படுது.

    பதிலளிநீக்கு
  29. வெரைட்டி வெரைட்டியா படங்கள்...கலர்ஃபுல்..

    பதிலளிநீக்கு
  30. பின்னூட்டங்கள் இரசிக்கும்படி அமைந்துள்ளன! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு