என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 13 ஜூலை, 2014

VGK 24 / 01 / 03 ------ FIRST PRIZE WINNERS .......... ' தாயுமானவள் ‘




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 24 - 

’ தாயுமானவள் ‘


 

 

          

 

 


மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







அனைவருக்கும் 

ஓர் மகிழ்ச்சியான செய்தி




  



ஏற்கனவே  VGK-03, VGK-10, VGK-13 ஆகிய கதைகளின்

விமர்சனங்களுக்கு அளிக்கப்பட்டது போலவே

இந்தக் கதை VGK-24க்கும் விமர்சனம் எழுதியனுப்பி


போட்டியில் கலந்துகொண்டுள்ள


 அனைவருக்குமே


என்னால் போனஸ் பரிசு அளிக்கப்பட உள்ளது என்பதை

பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 


போனஸ் பரிசு பற்றிய மேலும் விபரங்களுக்கு




 




நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து











நடுவர் அவர்களின் குறிப்பு


தேர்ந்தெடுக்கப்பட்ட விமர்சனங்களில் ஓர் ஒற்றுமை இழையோடுவதை வாசகர்கள் உணரலாம்.

கதாசிரியரின் கதை வரிகளை கூடியவரை வரிக்கு வரி வலிந்து பாராட்டாமல்---

கதாசிரியரின் கதையையே மறுபடியும் எடுத்துச் சொல்லி ஆங்காங்கே ஓரிரு வரிகளை விமரிசனமாய் நுழைக்காமல் ---

எழுத்தாக்கங்களில் சில தவறுகள் இருந்தாலும் மொத்த  கதையையும் உள்வாங்கிக் கொண்டு தங்கள் மனப்பிரதிபலிப்பினை விமரிசனம் ஆக்கியவர்கள் இவர்கள்.

படித்துப் பாருங்கள்.

  

                                                                     - நடுவர்                                                                          











இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 







  


மற்றவர்களுக்கு: 







    



முதல் பரிசினை  முத்தாக


வென்றுள்ளவர்கள் இருவர்.


அதில் ஒருவர்




திருமதி



 இராஜராஜேஸ்வரி  



அவர்கள்






http://jaghamani.blogspot.com/

வலைத்தளம் : “மணிராஜ்”

http://rjaghamani.blogspot.in/

"krishna"




 






 






முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள 


திருமதி



 இராஜராஜேஸ்வரி  






அவர்களின் விமர்சனம் இதோ:









தலைப்பும் கதையும் பூவும் மணமும் போல  ஒன்றிப் போகிறது!


தொடர்ந்து பத்திரிகை உலகில்  முதன்முதல் 


காலடி பதித்த தருணம்
எல்லாம் தெய்வ சங்கல்பமாய் அமைந்து மனம் 
நிறைகிறது..





திருச்சி மலைக்கோட்டைத் ”தாயுமானவர்” அருளால், ஒரே நாளில் 

“தாயுமானவள்” (தாயும்+ஆனவள்) ஆன தன் மனைவி  மரகதத்தை 

ஆசையுடன் அள்ளி அணைக்கச்  சென்ற முனியாண்டியைப் போல 

திருச்சி மலைக்கோட்டையை  தினமும் தரிசிக்கும் பேறு பெற்ற கதை 

ஆசிரியர் எழுதிய முதல்  கதையை (ஸ்)வாசித்த வாசகர்கள் தங்கள் 

மனக்கோட்டையில் ஏற்றிவைத்துக் கொண்டாடியதும்,  வார இதழ் 

புத்தகங்கள் வெளியிட்டு பரிசு கொடுத்ததும், சிறுகதைத்தொகுப்புக்கு 

தாயுமானவள் என்ற தலைப்பையே தெரிவு செய்ததும் 

தெளிவாக்குகின்றன..



படிப்பு ருசி மிகுந்த சிறுகதை அனைவரின் இதயத்தையும் 

கொள்ளைகொள்கிறது..




கதை சொல்லும் திறன், நகைச்சுவை மிளிரக் கதை நகர்த்திச் செல்லும்

தனித்துவம், சம்பவங்களில் வாசகர்கள் தன்னையே பொருத்திப் 

பார்க்கத் தூண்டும் அளவு யதார்த்தம், உரையாடல்களில்

காணப்படும் நேர்த்தி ....  





என எல்லாமே அழகாகக் கதை சொல்கிறது ... 
அழ வைக்கிறது ... சிரிக்க வைக்கிறது ...  

மொத்தத்தில் எல்லாமே உணர்ச்சிப் பிரவாகம்.  கதையும்

அழுத்தம்  ஆழம் என்று கனமாய் மனதில் இறங்கிவிடுகிறது.




தவழும் குழந்தையின் முதல் அடி எடுத்துவைக்கப்பட்டு அந்த நடையே வெற்றிகரமான ராஜ நடையாக... கதையாசிரியரின் சிறப்பான  முதன் முதலில் எழுதிய கதை தினமலரிலும் வாரமலரிலும் வெளியிட்டு  கம்பீரமாக கவருகிறது..



வர்ணனைகளாலேயே கதைத் தேரை நகர்த்தி அழகாக நிலையில் 

சேர்க்கும் அழகான திறமையான நுணுக்கமான திறமை

மனம் கவர்கிறது..




கதையின் ஆரம்பமே மிக அட்டகாசமாக மாரியம்மன் 

தேர்த்திருவிழாவுக்கு  
கூட்டிச்சென்று கூட்டத்தின் நடுவே விட்டது  
போன்றதோர் பிரமை.... அத்தனை தத்ரூபமான  வர்ணனைகள்...





முதலில் தேர்ப்படமும், அழகான வர்ணங்கள் நிரம்பிய கோலங்கள்

பானகம், இனிய சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம், பலூன்களும் 

விளையாட்டுப் பொம்மைகளும் நிரம்பிய மயில் தோகைகளாய் மனம் 

கவரும்  முனியாண்டியின் மூங்கில் குச்சி, திருவிழாவின் கரகாட்டம் 

போன்ற கொண்டாட்டங்களின் படங்கள், அக்னிச்சட்டி ஊர்வலம், 

தீர்த்தக்குடங்கள், அதன்மேல் மகுடமாக 

வேப்பிலைக்கொத்துகள் அசைந்து ஒளிரும் பலூன்கள், வெடித்துசிதறும் 

வான வேடிக்கைப்படங்கள் - எல்லாம் மலைக்கோட்டையை சுற்றி வந்து 

சித்திரைத்திருவிழாவில் கலந்துகொண்டு தேர் இழுக்கும் 

சங்கிலியை பற்றி தேர் இழுத்த நிறைவைத் தருகின்றன..



தேர் இழுக்கும் உழைப்பாளிகள் ஆங்காங்கு நீரால் உடலை னைத்து 

வெளிச்சூட்டை தணித்துக்கொள்ளும் நிகழ்வையும் காட்சியாக்கி 

அவர்களின் உள்ளச்சூட்டையும் தணிக்கும் காலம் என்று வரும் என்று 

ஏங்குவதையும் படம்பிடித்துக்காட்டுகிறார்..



எப்படியோ தேரை இழுத்து நடுத்தெருவில் நிறுத்திய கதையாக 

இல்லாமல் ஊர் கூடித் தேரிழுத்து நிலைக்குக் கொண்டு வந்து சேர்த்து 

ஆசுவாசமடையச்செய்வதில் வெற்றி காண்கிறார் கதை ஆசிரியர்..!

கருவறைத் தெய்வம் தேரேறி தெரு வரை வந்து தன் பக்தர்களின் 

மனக்குறையை தீர்த்துவைத்தாற் போல மகப்பேறுக்கு ஏங்கும் 

பலூன்காரரின் முன் வந்தோ என்னவோ என மலைக்கவைக்கும் 

கதை..! 



தேரிலிருந்து அந்த வாணப்பட்டரை மகமாயியே இறங்கிவந்து தன் 

பெயர் விஜி என்றும், பெற்றோர் பெயர், அவர்கள் ... தான்  பள்ளி சென்று 

ஆட்டோவில் திரும்பு முன்னே சுனாமியில் அடித்துச் 

சென்றதையும், பஸ்ஸில் அழைத்து வந்த நபர், தான் பசி என்று 

சொல்லியும், ஒன்றும் வாங்கித் தராததையும்,  மழலையில் விவரிக்கும் 

போது மனம் சுனாமி சுழன்றடித்தாற்போல் கலங்கிப் போகிறது.. 

என்பதில் ஆசிரியரின் நுணுக்கமான திறமை அலைமோதுகிறது 

வலிமையாய்..




ஸ்வீட் அங்கிள் என்று பலூன்காரரை அழைக்கும் போதும், மம்மி 

மம்மி என்று முதலில் அழைத்து பின் தன்னைத்திருத்திக்கொள்ளும் 

போதும் குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பது போல 

தனக்கான  உறவை வரித்துக்கொள்ளும் கட்டம் நெகிழவைக்கிறது..



குழந்தை கண் அசந்து தூங்கத்தொடங்கியது. ஆனால்  அதன் பிஞ்சு 

விரல்கள் மட்டுமா  முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் 

பற்றியிருந்தது..!?? 



பிஞ்சுவின் பிடி மட்டுமல்ல ஆசிரியரின் பதிவும் அனைவரையும்  அன்புப் 

பிடியில் பற்றிப் பிடித்து கொண்டதில் ஆச்சரியமென்ன ..!







தன்னைச்சுற்றி குழந்தைகளாக இருக்கும் தொழில் புரியும் முனியாண்டி

குழந்தை வேண்டுமென்று ஏழாண்டுகளாகக் காத்திருப்பவர்.. 

விசித்திரம் தான் ..!



பசித்த குழந்தைக்கு ஆகாரம் வாங்கி கொடுத்த முனியாண்டி தன் பசிக்கு 

நீர் மோரையும் கஞ்சியையும், குடி நீரையுமே குடித்த செயலில் அவனது 

உயர்ந்த குணத்தை நேர்த்தியுடன் படம் பிடித்துக்காட்டுகிறார் கதை 

ஆசிரியர்..!



பத்து விரல்களும் பத்துவிதமான பணிகள் செய்து வந்த உழைக்கும் 

கரங்கள் அவனுடையவை.. வெறும் கை என்பது 

மூடத்தனமல்லவா? விரல்கள் பத்தும் மூலதனம் என்று நிதர்சன வரிகள்!! 



பிரார்த்திக்கும் உதடுகளை விட உழைக்கும் கரங்கள் இறைவனுக்கு 

மிகவும் விருப்பமானவை ஆயிற்றே..!


செயற்கைக்கருத்தரிப்பிற்கு மூவாயிரம் ரூபாய் சேர்த்த 

மரகதம், கருணையினால் விஜிக்கு தாயுமான பொறுப்பை 

ஏற்றுக்கொண்டு, அடுத்த நாளே பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்து

பெற்றால்தான் பிள்ளையா? என உணர்த்துகிறாள்..



குழந்தையை வளர்க்கவேண்டும் என்ற எண்ணத்தை விட

  அதை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம்  மரகதத்திற்கு 

வந்ததே இந்தக்கதையின்  தனிச் சிறப்பு.




இந்த பொறுப்புணர்ச்சி மட்டும் மதுக்கடைகளை அரசு ஏற்று 

நடத்திக்கொண்டு கல்விக்கூடங்களை தனியார் கைகளில்  விட்டு விட்ட 

அரசுக்கு இருந்திருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என எண்ணி 

வெதும்பாமல் இருக்கமுடியவில்லையே நம்மால்..! 



மாணிக்கவிநாயகர் கோவில் முன்பகுதியில் இருக்கும் சந்தோஷிமாதா 

சந்நிதியின் குளுமையான  சந்தோஷக் காற்றை இனிமையாக 

அனுபவித்ததைப்போல கதையின் முடிவு வசீகரிக்கிறது..




அருமையான முடிவு.    முடிவல்ல துவக்கம்.....
  



யதார்த்தமான  


வார்த்தைகளில் ஆழ்ந்தோடிய சிந்தனைகள். 

சுபமாகவே முடிவதில் மகிழ்ச்சி. 




தான் பெற்றக் குழந்தையே பெண்ணாயிருக்கும் பட்சத்தில்  அதன் 

உயிரையும் பறிக்கத்தயங்காத   கல்மனம் படைத்த 

மக்களிடையே அன்பாய் வளர்க்கத் தலைப்படும் அருமையான 

மனிதர்களைக்   காட்டியது ஒரு சிறப்பு என்றால் தாய்க்குத் தாயாய் 

கவனிக்கும்   மரகதத்தையும், முனியாண்டியையும் விட்டு 

போகமாட்டேன்  என்று குழந்தை அழுவதும், பயத்தில் காய்ச்சல் வந்து 

தன்  நிலையை உறுதிப்படுத்துவதும் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது..




இயற்கைச்சீற்றத்தின் மூலம் உறவுகளை இழந்தவர்களுக்கும் ஆதரவும் 

கருணையும் மீண்டும் எவ்வகையிலாவது கிடைத்திருக்கவும், 

இனியொரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கவும் மலைக்கோட்டை

தாயுமானவரையும் உச்சிப்பிள்ளையாரையும் பிரார்த்திப்போம் ..!  




கருணையினால் தாய்மையுற்ற மரகதம் இயற்கையாகவே 

குழந்தை விஜியின் பூந்தளிர் ஸ்பரிசத்தினாலும் மழலையினாலும்

மலர்ச்சியுற்று கருவுற்றுத் தாய்மைப்பேறு அடையும் 

வாய்ப்பு கிட்டலாம் .... வறுமையும் மெல்ல மெல்ல  விலகி அன்பு 

அரசாளும் அந்தக் குடிசை மாளிகையாகலாம்..



ஏழைகளின் சிரிப்பில்  இறைவனைக் கண்டும், ஏற்பட்ட பலவித 



அனுபவங்களையும்,  ஒருசில சமூக அவலங்களையும்,  சந்தித்து 



உறவாடி,  உரையாடி பழக நேர்ந்த ஒருசில வேடிக்கை மனிதர்களையும், 



தன்  கதைகளில் ஆங்காங்கே இட்டுச்செல்வதால்,  அவை உள்ளார்ந்த 



உயிரோட்டமுள்ளதாக அமைந்து வெற்றி பெறும் வாய்ப்பைப் பெறும் 



கதை..




சிறு கதை மூலம் பெறப்படும் படிப்பினை, மிகக் குறைவான 



கதாபாத்திரங்களில் ரசமான சம்பாஷணைகள், சம்பவங்கள், இப்படி 



சிறுகதைகளின் பெருமையினை அடுக்கிக்கொண்டே போகலாம்.









 “படைப்பிலக்கியங்களில் நான் சிறுகதையாய் இருக்கிறேன்” 


என்று கீதையில் கிருஷ்ணன் சொல்லியிருப்பார், அர்ஜுனன் 

கேட்டிருந்தால்!  என்ற முன்னுரை ஆசிரியரின் மணிமகுடத்தில் 

பதித்த வைரக்கல்லாய் ஒளிர்கிறது..!


-oOo-

Thanks a Lot, Madam.
- vgk  



 













மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



    








 



 
VGK-20 To VGK-24

திருமதி



 இராஜராஜேஸ்வரி  



அவர்கள்



    
 

  

  

   
தனது நாலாவது ஹாட்-ட்ரிக் பரிசினை 


ஐந்தாம் சுற்றிலும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்கள்.



மனம் நிறைந்த பாராட்டுக்கள் 





அன்பான இனிய நல்வாழ்த்துகள்



 Hat-Trick Prize Amount will be fixed later 


according to Her Continuous Further Success in VGK-25 


 






    



முதல் பரிசினை  முத்தாக


வென்றுள்ள மற்றொருவர்







 திரு. J. அரவிந்த் குமார்  


அவர்கள்


வலைத்தள முகவரி


 





முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள

திருநிறைச்செல்வன்

அரும்பு மீசை + குறும்புப்பார்வை  


 J. அரவிந்த் குமார்  

  
அவர்களின் விமர்சனம் இதோ


திருச்சி லைக்கோட்டை தாயுமானவர் அருளால் "தாயுமானவள்" கதை-! ஆசிரியருக்கு கட்டியம் கூறி வரவேற்பளித்து மகுடம் சூட்டுவதாக அமைந்திருக்கிறது..

கதையின் தலைப்பே ஜாடிக்கு மூடி சரிநிகர் ஜோடியாக கச்சிதமாகத்தான் பொருந்துகிறது..

முதல் கதையையே அழகாக, அனுபவித்து எழுதியிருக்கும் நேர்த்தி வியக்கவைக்கிறது..

படங்கள் அனைத்தும் படிப்படியாக கதையைக்கூறி கருத்தையும் கண்களையும் கவருகின்றன..! 

யதார்த்தமான நடை, கதைக் கரு முதலியவை முதல் கதையிலேயே மிக இயல்பாக  அமைந்தது ஆச்சரியமூட்டுவதாகவே உள்ளது

உணர்ச்சிப் பிரவாகத்தால்  கதையும் அழுத்தம்  ஆழம் என்று கனமாய் மனதில் இறங்கிவிடுவதோடு, வாசிப்பு அனுபவம் வேண்டும் வாசகர்களுக்கு நல்விருந்தாய்  அமைந்திருக்கிறது 

இந்தச் சிறுகதை சுனாமி என்ற இயற்கைப் பேரிடர் தமிழகத்துக்கு வந்து மனித சமுதாயத்தையே  உலுக்கிவிட்டுச் சென்ற பின்பு  ஆசிரியரால் எழுதப்பட்டது ... சுனாமியின் தாக்கம் ஆசிரியரின்  உருவாக்கம்.. கரணம் தப்பினாலும் டாக்குமெண்டரி ஆகிவிடக்கூடிய கதையை சுவாரஸ்யமான நடையில் சிறப்பான சிறுகதையாக்கி மகுடம் சூட்டப்படுகிறார்  கதை ஆசிரியர்..
  
சுனாமியின் தாக்கம் சித்திரம் வாசிக்கும் எவரையும் தூக்கம் தொலைக்க வைக்கும்.

தேரோட்டம் கூடிய கதையோட்டம் மிகப்பொருத்தம் .

ஒவ்வொரு வார்த்தையிலும் ரசனையும்  அனுபவமும் மின்னுகின்றன .

கதையின் சிறப்பே, கதாபாத்திரங்களையும்  சூழலையும் வர்ணிக்கும் விதத்தில் கண் முன்னே காட்டும்  எழுத்து  நடை,  வாசகர்களை வசீகரிக்கும் ஆற்றல் மிக்கவை..


அம்பாளின் தேர் நகர ஆரம்பித்ததும்  வாணவேடிக்கை வேட்டு எல்லாம் அதிர தேர் நகர்கிறது .. ஆசிரியரின் கைதேர்ந்த  அகான கதை நகர்த்தும் பாணியில் கவரப்பட்டு.. கதையுடன் வாசகர்களும் கதைத்தேரின் பின்னே ஆவலுடன் நகர்கிறார்கள் ...

தேர்வடம் எப்படியாவது தொட்டு கும்பிட்டுவிடவேண்டும் என்று எல்லோரும் முண்டியடித்து முன்னேறுவதுடன் கதையும் முன்னேறி ஆசிரியரையும் சிறுகதை உலகின் சிகரத்தில் ஏற்றிவிடுகிறது..!....

"வறுமைப்பிடியிலுள்ள கடும் உழைப்பாளிகளான தேர் இழுப்பவர்களின் மனதில் உள்ள உள்சூடு எப்போது தான் தணியுமோ? அது அந்த அம்மனுக்கே வெளிச்சம்". என யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் வரிகள்! ஒரு சின்ன விஷயத்தைக்கூட விட்டுவிடாமல் நுணுக்கமாக விவரிக்கும் பாங்கு  ஆசிரியரின் நுட்பமான திறனுக்குச்சான்று பகர்கிறது..! 

அந்த தேரோட்டத் திருவிழா நடுவில் படிப்பவர்களை  கொண்டு  வந்து நிறுத்தும் உணர்வைத்தரும்  வர்ணனைகள். மூலம் இப்படை தோற்கின் எப்படி வெல்லும் என்பதுபோல  சிறுகதைப் போட்டியில் வென்று தான் கலைமகளின் கருணாகடாக்ஷம் பெற்றர் என்பதை நிரூபிக்கிறார் கதை ஆசிரியர்

நெரிசலான தெருவில் நடக்கும் திருச்சி வாணப்பட்டரை  மாரியம்மன் தேரை தேரோட்டத்தின்போது கட்டைகளைப் போட்டு கொஞ்ச நேரம் தேரை நிறுத்தி வைப்பது போலவே  கதையென்னும் தேர் முனியாண்டியிடம் நிற்கிறது.

முனியாண்டியின்  பலூன் விற்கும் உத்யோகம், அவரின் பணத்தேவை பற்றிய விவரிப்பு, முனியாண்டி, மரகதத்தின் அன்னியோன்னிய  குடும்ப வாழ்வு, தேர் இழுப்பவர்களின் வியர்வை பொங்கும்  முகங்கள், தீபாராதனைக்கு முண்டி அடிக்கும் பக்தர்களின் அவசரம், தேரிலிருந்து அம்மனே இறங்கி வந்தது போல அந்தக் குழந்தையின் முகம் முனியாண்டிக்கு மட்டுமில்லை வாசகர்கள் கண்களுக்கு முன்னும் கொண்டுவந்து வந்து நிறுத்தும் நுணுக்கமான விவரிப்பு ஆசிரியரின் தனித்திறமை..!. 

குழந்தையின் பின்புலம்  சஸ்பென்ஸ்  ஆக மனதைத் துடிக்கவைக்கிறது..!

முன்பு ஒரு நாள்  வசதியாய் வாழ்ந்த குழந்தையையும் அம்பாளை சேவிக்க அழைத்துச்செல்லாமல்  யாரோ முகம் தெரியாத ஒரு முனியாண்டியிடம் குழந்தையை  விட்டுச்செல்வதும், பஸ்ஸில் பசிக்கிறதாய் சொல்லும் குழந்தைக்கு ஒன்றும்  சாப்பிடத்தராமல் இருப்பதும், கருணையை மனதில் குழிதோண்டிப் புதைப்போரும் உண்டு  என்று மிக அருமையாக  வரிகளில் உணர்த்தியது சிறப்பு .....

அங்கிள் பசிக்குதுன்னு  அந்தக்குழந்தை சொல்லும் போது உடனே ஏதாவது  சாப்பிடக் கொடுக்க, படிப்பவர்கள் முன்வரும் அளவுக்கும் , கதையுடன் ஒன்றிவிடும் அளவுக்கும்,  இயல்பான நடை கதைக்குச் சிறப்பு சேர்க்கிறது.. 

எழுத்து அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். 

கருணை துளியும் இல்லாத மனம் கொண்ட கைலிக்காரர்  குழந்தையை கொண்டு வந்து நல்லவேளை கருணை மனமுள்ள முனியாண்டியிடம் சேர்த்தது நல்லதாயிற்று....  அம்பாளுக்கு தெரியும்.. தெய்வத்திற்கு தெரியும்..  இருப்பதை எடுத்து இல்லாதவருக்கு பகிர.... அன்பில் திளைக்கும் பொழுது படிப்பவர் உள்ளம் தித்திக்கிறது. வர்ணனைகளின் நடுவே அவரவரைப் படம் பிடித்துக் காட்டி விடுவதும்  தனியான சிறப்பு தான். 

நல்லவரிடமே குழந்தை சேர்ந்திருக்கிறது. குழந்தையின் வயிற்றுப்பசி யைக்கூட தீர்க்க மனமில்லாது போன  கைலிக்காரருக்கு,  மனிதம் மரித்ததோ என்று எண்ணும்போது, முனியாண்டி தினப்படி  கிடைக்கும் காசில் வாழ்க்கையை தள்ளுபவன் .. அவன் மனம்  நிறைய மனிதம் இருப்பதால் தான் மழை கூட பெய்கிறது போல என்று நம் மனம் நிறைகிறது,..

குழந்தையின் வயிற்றுப்பசியை ராமா கஃபே  இரண்டு இட்லியும் சூடான சாம்பாரும் தீர்க்க,  முனியாண்டி மட்டும் இலவச தண்ணீர் பந்தலில் தரும் நீர்மோர், நீர் குடித்து தன் வயிற்றுப்பசி போக்கி... கதையாசிரியர் மிக உன்னதமான ஒரு கருணைகொண்ட  மனிதரின் குணாதிசயங்களை விவரித்திருக்கிறார்  தெளிந்த நீரோடையாய் கதையை. நகர்த்தியிருக்கும் பாங்கு வியக்கவைக்கிறது..!. 

சந்தோஷிமாதாவிடம் சென்று அங்கு சர்க்கரைப்பொங்கல்  நைவேத்யம் இருவரும் உண்டு, உறங்க ஆரம்பிக்க  குழந்தை மட்டும் தன்னை கவசமாய் காக்கும் முனியாண்டியிடம்  பெற்ற அடைக்கலத்தில் சௌக்கியமாய் இருக்கிறாள்.... 

முனியாண்டி பற்றிச் சொல்லிச் சென்று அவர் மனைவிக்குத் தலைப்புச் சொன்ன  விதம் ஒரு திருப்புமுனையாக இருக்கிறது..

தன்னைச்சுற்றிலும் குந்தைகள் வளைய வரும் தொழிலில் இருக்கும் 

முனியாண்டிக்கு குந்தை பெறும் வாய்ப்பு  ஏழாண்டுகளாக இல்லாமல் 

போன ஏக்கம் கூடுதல் தான்..


மழலை இல்லா அந்த ஏக்கம்தான் கர்ப்பக்கிரஹ வாணப்ப்பட்டரை 

மகமாயியையே தேரேறி வந்து அடைக்கலம் அடையச் செய்ததோ 

என்னவோ.. !


அந்தத் தம்பதியர் முடிவெடுக்கும் முன் சரியான முடிவை குழந்தை எடுத்து விட்டது போலும். மம்மி .... மம்மி ....ஸாரி ... ஸாரி ... ஆண்ட்டீ... ஆண்ட்டீ... எனும்போதே தாய்மையைத் தேடும் குழந்தையின் மனசை அழகாகக் காட்டி விடுகிறார் கதை ஆசிரியர்.


குழந்தை சந்தோஷமாய் இயல்பாய் மம்மி என்று அழைத்து  அதன்பின் ஆண்ட்டி என்று மாற்றிக்கொண்டது காலச்சூழல்  குழந்தையை இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டதே...!


தோசை சுட்டுக் கொடுத்து குழந்தையுடன் சேர்ந்து தானும் மகிழும் மரகதம் தாயுணர்வுடன் குழந்தையை தன் குழந்தையாய் வளர்க்க அப்பொழுதே தீர்மானித்து விடுகிறாள்.


மரகதமும் முனியாண்டியும் இரவெல்லாம் செய்த  விவாதத்தில் குழந்தை மனம் கலங்கி மறுபடி நாம்  வெளியேற்றப்படுவோமோ போலீஸ் ஸ்டேஷனில்  கொண்டுப்போய் சேர்க்கப்படுவோமோ என்ற பயத்தில்  ஜுரம் வந்துவிட... குழந்தை வெகு இயல்பாய் அவர்கள் இருவரிடமும் கெஞ்சுவது மனதை உலுக்குகிறது.


அந்தக்குழந்தை மன நிலையை எவ்வளவு அழகாக சொல்லி  இருக்கிறார் கதை ஆசிரியர்  ! 


இதைக்கேட்டுவிட்ட  இருவரின் மனதில் இருந்த கருணையை வெளிக்கொணரவே இந்த நாடகம் இறைவன் நடத்தியது போல..உணர்கிறோம்..

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்-  காந்தியடிகள்

அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்

முடிவு சுபம்... குழந்தைக்கும் அம்மா அப்பா கிடைத்தது.  அம்மா அப்பாவுக்கும் குழந்தை கிடைத்தது... இறைவனுக்கு  தெரியும் அல்லவா யாரை யாரிடம் எப்போது ஏன் எங்கே  சேர்ப்பது என்று?


முனியாண்டி தேவையா 3000 சேர்ந்து விட்டதை மனைவியிடம் சொல்லும் போது - மரகதத்திற்கு வாணப்பட்டரை மகமாயி மாரியாத்தா கொடுத்த குழந்தை இருக்கும் போது எதற்கு செயற்கைக் கருத்தரிப்பு என ஒரு சிந்தனை மனதில் ஓடுவது இதமான தென்றலாக மனதை மகிழ்விக்கிறது..!


விஜியை படிக்க வைக்க தன் உயிர்மூச்சான காற்றை பலூனுக்குள் 

செலுத்தி, பத்துவிரல்களும் பத்துவிதமான பணிகளைச் செய்து 

சாப்பிடக்கூட நேரமில்லாமல் வெயிலில் காய்ந்து வேர்வை சிந்தி 

உழைத்து ,  வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சிறுகச்சிறுக சேர்த்த 

பணத்தை செலவிட முனையும் அந்த உயர்ந்த   தருணத்தில் நிகழ்வது 

கதையின்  உச்சம்..


இறைவன் தானே நேரில் வர இயலாததால்தான் தாயைப் படைத்தான்

என்று ஒரு பொன்மொழிகூட உண்டு..


கருவுற்றுத்தாயாக வேண்டி  செற்கைமுறை சிக்கலான மருத்துவ 

முறையை எதிர் நோக்கியிருப்பவளுக்கு கருணையுற்றுத் தாயாகும் 

வரம் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது..!  

உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது. -

ஏழையான அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பலநாட்களாக சேமித்த தொகையல்லவா அது! 

அதை எடுத்து இந்தக் குழந்தையை பள்ளியில் சேர்க்க செலவழிக்க வேண்டும் என்றால், எவ்வளவு ஒரு பரந்த நல்ல மனம் வேண்டும்! 

மனதளவில் பெரும் செல்வந்தர்கள் அல்லவா!! ; இது தான் தாய்மை. இயற்கையிலேயே மரகதத்திடம் இருக்கும் போது செயற்கையில் ஏன்?!

மனம் முழுக்க பலூன் மாதிரி லேசாகி உயர உயர பறப்பது போன்ற 
உணர்வில் மிதக்கிறோம் ..

அந்த 3000த்தினை குழந்தையின் படிப்புச் செலவுக்கு  பயன்படுத்தலாம் எனக் கூறும் மரகதம் அந்த நிமிடமே  தாயுமானவள் ஆகி விடுகிறாள். 

இந்தப்புள்ளைய நல்லபடியா வளர்த்து ஆளாக்கினா  அதுவே போதுமய்யா! அந்தப்பணத்தை அப்படியே  எடுத்துட்டுப் போயீ, பக்கத்துல உள்ள இஸ்கூலிலே, இதை சேர்த்துப்பாங்களான்னு, விசாரித்துட்டு வாய்யா” என்ற மரகதம்  அன்பு அரசாளும்  உள்ளங்கள் அனைத்துமே அரண்மனை தானே .... என உணர்த்துகிறாள்..

அப்பா அம்மாவை இழந்தாலும் அன்பு அரசாளும் அரண்மனையில் அரசகுமாரியாக வளர்வாள்  அந்தக் குழந்தை.

அன்பு மட்டும் இருந்தால் போதும் ...  குடிசையே அரண்மனையாகும், அதில் உள்ள ஏழைக்குழந்தையே கூட அரசகுமாரியாவாள் ... பெற்றால்தான் பிள்ளையா.

கதையில் வரும் விஜி போல எவ்வளவு குழந்தைகள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்குமோ என நினைத்தால் மனதுக்கு மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது. 

கருகவிருந்த ஒரு பெண்குழந்தையின் வாழ்வை மலரச் செய்த அருமையான கதை.   வானதி பிரசுரத்தால் புத்தகமாக வெளிவந்ததும் முதல் கதையே ஒரு முத்திரைக் கதையாகி  பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கதையின் முடிவு... இல்லை இல்லை ... குழந்தையின் வாழ்வின் தொடக்கம்....

ஆளுமை மிகுந்த தனித்தன்மையுடன் உருவாகி வந்த உணர்வுகளை எழுத்துக்களாகப் பதிப்பது கதாசிரியரைப் போன்ற திறமையாளர்களுக்கே உரிய பெருமை.

அமர்க்களமான கதையை  களத்தில் கண்டு ரசித்தது ஆனந்தம் அடைகிறோம்..


கதை போல இல்லாமல் எளிமையான மனதைத் தொடும் வர்னைகள். 

இதுதான் அனுபவம். நேரிலேயே இருந்து பார்த்து ரசிப்பது போலவே 

உணர்வைத் தருகின்றன..



கதையாசிரியரின் தெள்ளிய நடையில் அற்புதமாய் ஒரு கதை- முதல் கதை - தேர்வாகி அதிலும் முதல் இடத்தைப்பெற்றது எத்தனை பெருமைக்குரிய விஷயம்..!!

கதையாசிரியரிடம் திறமை இருக்கிறது. அதை சீராக்கி  கதை வடிக்கும் அற்புதமான க்ரியேட்டிவிட்டி இருக்கிறது...  படைப்பாற்றல் இயற்கையில் விளைந்த கொடை.. கருவிலே திரு ..

இந்த விளக்கை தூண்டிவிட்ட  நல்ல உள்ளத்தால்,  பிரபலமாகி எல்லோர் மனதிலும் நிலையான இடம் பிடித்து வெற்றிகள் குவித்து ..  நல்வழி நடத்தும் ஆசிரியரின் திறமை பளிச்சிடுகிறது..

திருடனை ராஜமுழி முழிக்கச்சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி பலரும் கதை எழுதுவது எப்படி என்று பயிற்சி எடுத்துக்கொண்டு, கதைக் கருவுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று ரூம் போட்டு யோசித்தும்  எழுதிய கதைகள் பல கேலிச்சித்திரங்களாகி வாசகர்களின் கவனத்தைப்பெறாமலே போகின்றன..


தான் தினசரி தரிசிக்கும் தாயுமானசுவாமி சந்நிதியைச்சுற்றியும், உலக மக்களை உலுக்கிய சுனாமியை மையப்படுத்தியும், தன் கண்முன் நிகழும் வாணப்பட்டரை மகமாயி சித்திரைத்திருவிழா நிகழ்ச்சியைப் பின்னிப் பிணைந்தும் மண்மணம் மணக்கும் சிறுகதையை முதல் கதையாக எழுதி மலைக்கோட்டையில் ஏற்றி வைத்த தீபமாக  திறமை ஒளிர்ந்து கம்பீரமான  இடத்தைப்பிடிக்கிறார் கதை ஆசிரியர்..

முதல் கதையிலேயே இவ்வளவு திறமையான எழுத்து எப்படி கைவந்தது என ஆச்சரியப்படவைக்கிறார் ஆசிரியர்..!

வர்ணனைகள் அதிகம் கொடுத்து கதையினை நகர்த்திச்  செல்லும் திறமையில் மலைக்கோட்டையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும்  வர்ணித்த அழகு, மலைக்கோட்டையைத் தரிசித்தபடியே நினைவுபடுத்தி நெஞ்சம்  மலர்கிறது..!. 

நேரில் நடப்பது போல் சம்பவங்களைக் கொண்டுவந்து  பாத்திரங்களுக்கு உயிரூட்டி வர்ணனைகள் காட்சிகளைக் கண்முன் நிறுத்துகின்றன.

தன் இலக்கிலேயே கவனம் வைத்து ஜெயம் பெறும் விஜயன் போல தான் சொல்லவந்த கதைக்கருவை இனிப்பான தேன் தடவி சொல்லி வெற்றி பெறுகிறார் .. 

அதை தண்டோரா முழங்கி தனித்துவமான மெருகேறிக் கொண்டே வரும் கதை சொல்லும் பாங்குடன் இதோ ஒரு வெற்றிகரமான சிறுகதை நட்த்திரம் உதயமாகி இருக்கிறது என்று உலகிற்கு முரசறைவிக்கிறது.. 


Thank you very much ....
My Dear Arvind Kumar ! 
- vgk

  






மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.  



      
  

   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.





நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

முதல் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது

.



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.



இணைப்புகள் இதோ


http://gopu1949.blogspot.in/2014/07/vgk-24-02-03-second-prize-winners.html


http://gopu1949.blogspot.in/2014/07/vgk-24-03-03-third-prize-winner.html




காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 


இணைப்பு: 




கதையின் தலைப்பு:



 VGK-26 



       பல்லெல்லாம்  


பஞ்சாமியின் பல்லாகுமா !  

  
[ நகைச்சுவை விருந்து ]








விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


17.07.2014




இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.
















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்
    

25 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி July 13, 2014 at 1:54 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தாயுமானவள் என்கிற தலைப்பில் எழுதிய முதல்கதைக்கு விமர்சனப்போட்டியில் தாய்க்கும் மகனுக்கும் முதல் பரிசினை பகிர்ந்து கொடுத்த வித்தகர் நடுவருவருக்கும் கதை ஆசிரியருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..வெகு பொருத்தமான பரிசு..!!//

      அந்த அரும்பு மீசை, குறும்புப்பார்வை, கட்டிளம் காளை, ஆண் அழகன், மூக்கும் முழியுமான அசத்தலான இளைஞன் தங்கள் குழந்தையா ?

      ஆஹா! இதைக் கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      என்ன தவம் செய்தீர்களோ !!!!! அவருக்கு முதலில் திருஷ்டி சுத்திப்போடுங்கோ, ப்ளீஸ். உங்களுக்கும் தான்.

      சந்தோஷம் ..... மிகவும் சந்தோஷம் !! - vgk

      நீக்கு
    2. கலரில் அப்படியே அம்மாவையும், முகஜாடையில் மூக்கும் முழியுமாக அப்படியே அப்பாவின் தீர்க்கத்தையும் உரித்து வைத்து அமைந்துள்ளது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. ;)))))

      1992 இல் வெளிவந்த ‘ரோஜா’ தமிழ் திரைப் படத்தில் வரும் அரவிந்தசாமியை ஞாபகப்படுத்துவதாக உள்ளது அவரின் அசத்தலான குழந்தை முகத்தோற்றம்.

      பெயரும் அதுபோலவே அரவிந்த் குமார் என வைத்துள்ளீர்கள் ....... மிகப்பொருத்தமாக. ;)))))

      மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள் ;))))) - vgk

      நீக்கு
  2. தாயுமானவள் என்கிற தலைப்பில் எழுதிய முதல்கதைக்கு
    விமர்சனப்போட்டியில்- தாய்க்கும் மகனுக்கும் முதல் பரிசினை பகிர்ந்து கொடுத்த வித்தகர் நடுவருக்கும், கதை ஆசிரியருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..வெகு பொருத்தமான பரிசு..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி July 13, 2014 at 1:54 PM

      வாங்கோ, மீண்டும் வருகை இரட்டிப்பு மகிழ்ச்சியாகத்தானே இருந்தது. அதற்குள் அது
      பொறுக்கவில்லையா ? ;(

      என் முதல் கதைக்கு, முதல் பரிசுகளுக்கு, முதன்முதலாகக் கொடுத்துள்ள பின்னூட்டத்தை இப்படி
      அநியாயமாக நீக்கலாமா? அது நியாயமா?

      தாய்க்கும் சேய்க்கும் பரிசு என்பதால் இருமுறை
      அனுப்பப்பட்டுள்ளது என்றல்லவா நான் நினைத்து மகிழ்ந்தேன்.

      //தாயுமானவள் என்கிற தலைப்பில் எழுதிய முதல்கதைக்கு விமர்சனப்போட்டியில்- தாய்க்கும் மகனுக்கும் முதல் பரிசினை பகிர்ந்து கொடுத்த வித்தகர்
      நடுவருக்கும், கதை ஆசிரியருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..//

      பரிசினைப்பகிர்ந்து கொடுத்துள்ள வித்தகர் உயர்திரு நடுவர் ஐயா / அம்மா சார்பிலும், என் சார்பிலும் தங்களுக்கும், தங்கள் கைக்குழந்தைக்கும் என் அன்பான இனிய பாராட்டுக்கள்.

      மனம் நிறைந்த நல் வாழ்த்துகள்.

      //வெகு பொருத்தமான பரிசு..!!//

      எல்லாமே மிகப்பொருத்தமாகத்தான் அழகாக அமைந்துள்ளன.

      ஏற்கனவே VGK-09 "அஞ்சலை” விமர்சனத்திலும் தாங்கள் இருவரும் சேர்ந்தே முதல் பரிசினை வென்றிருந்தீர்கள்.

      http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09-01-03-first-prize-winners.html

      அதுவும் ஒரு தாய்+சேய் பற்றிய கதையே தான்.

      என்னப் பொருத்தம் ..... ஆஹா, என்னப்பொருத்தம் ........ இந்தப்பொருத்தம். ;) மீண்டும் வாழ்த்துகள். - vgk

      நீக்கு
  3. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். உங்களுக்கும், உங்கள் மகன் அரவிந்குமார் அவர்களுக்கும் முதல் பரிசுகிடைத்தமை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
    இருவரும் மிக நன்றாக விமர்சனம் எழுதி உள்ளீர்கள்.
    உங்கள் இருவருக்கும் வெகு பொருத்தமான பரிசுதான்.
    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    உங்களை எழுத ஊக்குவித்த வை.கோபாலகிருஷ்ணன் சாருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. பரிசு பெற்ற இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. சகோதரி இராஜேசுவரி மற்றும் அரவிந்த் குமார் இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. முதல் பரிசினை வென்ற திருமதி ராஜராஜேஸ்வரிக்கும், திரு அரவிந்த்குமார் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து பரிசினைப் பெற வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. பரிசு பெற்றோருக்கும், இவ்வாறான ஒரு பெருமுயற்சியை மேற்கொள்ளும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும், திரு. J. அரவிந்த் குமார் அவர்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான விமர்சனம் எழுதி
    பரிசு பெற்ற
    திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும்,
    திரு. J , அரவிந்த் குமார் அவர்களுக்கும்
    பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  10. முதல் பரிசினை வென்ற –
    ஆன்மீகப் பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும்
    மற்றும் சகோதரர் திரு. J. அரவிந்த் குமார் அவர்களுக்கும் எனது
    மனது நிறைந்த வாழ்த்துக்கள்!

    தினம் ஒரு பதிவினைத் தரும் ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள், போட்டிகளுக்கு என்று தனியே நேரம் ஒதுக்கி கதைகளைப் படிப்பது, கலந்து கொள்வது என்பது மேலும் பாராட்ட வேண்டிய விஷயம்தான்.

    பதிலளிநீக்கு
  11. மொதல்ல ஹஸ்பண்டு – ஒய்பு, அப்பால அம்மா புள்ளயா? இப்படி ரூம் போட்டு யோசிச்சு குடும்பம் குடும்பமா ப்ரைச கெலிச்சா இன்னா நைனா பண்றது? பேண்ட்ல எல்லாம் தொடச்சு, ரொம்ப தூரம் ஓஓ….டி வந்து பெளலிங் போட்டா கடசீல நோ பாலா பூட்சே! (வட போச்சே!?)அடுத்த ஒவர்ல பாக்கலாம்! (ஒரு ஜாலிக்காக மெட்ராஸ் பாஷை!) வெற்றி பெற்ற அம்மாவுக்கும் மகனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! தொடருங்கள்! அரவிந்த் குமார் போட்டோ லொகேஷன் & போஸ் அருமை! விமர்சனமும்தான்! அந்த லொகேஷன்லயே உட்கார்ந்து எழுதினீங்களோ? நடத்துங்க பாஸ்! அன்புடன் MGR

    பதிலளிநீக்கு
  12. முதல் பரிசினை வென்ற இராஜராஜேஸ்வரி அம்மாவுக்கும், அர்விந்த்குமார் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. முதல் பரிசை வெல்ல திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் முழு தகுதி ஆனவங்கதான் திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா,அவர்களுக்கும் அரவிந்தகுமார் அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    பதிலளிநீக்கு
  14. முதல் பரிசு பெற்ற திரு. அரவிந்த் குமார் அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள். தாய்சேய் பந்தம் சிறப்பிக்கும் கதை விமர்சனங்களில் தாயும் சேயும் பரிசுகளைப் பங்கிட்டுக்கொள்வது மகிழ்வைத் தருகிறது. இருவருக்கும் அன்பான பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  15. முதல் பரிசினை வென்ற திரு. அரவிந்த் குமார் அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிசு வென்ற தி
      ருமதி இராஜராஜீஸ்வரி மேடம் திரு அரவிந்தகுமார் வாழ்த்துகள்

      நீக்கு
  16. அம்மாவுக்கும், பிள்ளைக்கும் முதல் பரிசா? அட என்ன ஒற்றுமை. தாயுமானவன் கதைக்கு தாய்க்கும், மகனுக்கும் முதல் பரிசு. அருமை, அருமை, அருமையோ அருமை.

    பதிலளிநீக்கு
  17. ஓ ஓ... அம்மிக்கு மகனாருக்கும் பரிசா சூப்பருங்கோ. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. ஓ..ஓ.. க்ரேட் தாய்க்கும் மகனுக்கும் பரிசா அதுவும் தாயமானவன் கதைக்கு. என்ன பொருத்தம் இந்த பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  19. பரிசு பெற்ற இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  20. பத்திரிகையில் அச்சிடப்பட்டு பிரசுரமான என் கதைகளில் ஒன்றான இதனை (தாயுமானவள்) என்னிடம் கேட்டு வாங்கி, எங்கள் BLOG என்ற வலைத்தளத்தில், 02.02.2016 அன்று படங்களுடன் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அதற்கான இணைப்பு:
    http://engalblog.blogspot.com/2016/02/blog-post.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு