கதையின் தலைப்பு :
VGK-28
வாய் விட்டுச் சிரித்தால்
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
அவர்கள் அனைவருக்கும் என்
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
நடுவர் அவர்களால் பரிசுக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
விமர்சனங்கள் மொத்தம்:
தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று விமரிசனங்கள் 'வாய்விட்டுச் சிரித்தால்...' என்றே ஆரம்பிப்பது என்னவிதமான ஒற்றுமையோ தெரியவில்லை..
சட்டையைக் கழற்ற சங்கடப்படுவோரையோ, மறுப்போரையோ சாந்தப்படுத்தி, மசிய வைக்க ஆஸ்பத்திரி நிர்வாகத்தாலேயே அமர்த்தப்பட்ட ஊழியரோ அந்தக் கொரியர் ஆசாமி என்கிற சந்தேகத்தை யாராவது கிளப்புவார்கள் என்று எதிர்பார்த்தேன்.
-- நடுவர்
மற்றவர்களுக்கு:
“ வாய்விட்டுச் சிரித்தால்….!” தலைப்பே ஒரு செய்தியைத் தருகிறது!
“நோய்விட்டுப்போகும்” என்பதுதான் அது! அதையே laughing theraphy என்றும் சொல்லுகிறார் கள்! யாரையாவது ஒரு எதிர்மறையான சிரிக்கவே தெரியாத சிடுமூஞ்சியை உதாரணம் காட்டித்தானே இதைச் சொல்லவேண்டும்!முதல்வரியிலேயே அறிமுகம் முன்கோபியான - கோபி; நம் கதையின் நாயகன்! நைஸா அறிமுகம் பண்ணியாச்சா! வாங்க அந்த முன்’கோபி’ என்ன பண்றாருன்னு பார்ப்போம்! இதோ நம்பியார் மாதிரி எப்பவும் கஞ்சா கசக்குற மாதிரி கைய கசக்கி மொகத்த சுளிக்கிற ஒரு பாத்திரம் கண்ணுமுன்னால நிக்குதா? அதேதான்!
கை கஞ்சா கசக்க போயிட்டதால நடக்கசொல்ல கால் கட்டவிரலால ‘thumps up’ சொல்ல நெனச்சு கட்டவிரல் நகத்த பேத்துகிட்டு நிமிந்து பாத்தா ஒரு தனியார் மருத்துவமனை! இப்படிப்பட்ட சிடுமூஞ்சி அதுவும் கால்கட்டவிரல் நகத்த பேத்துகிட்ட கடுப்புல இருக்குறப்ப வாய்விட்டு சிரிக்கணுமா? எப்படி சிரிக்கவைக்குறாய்ங்கன்னு பாக்கணுமா? ஆஸ்பத்திரிக்குள்ளாற வந்தாதான பாக்கமுடியும்? கட்!
கை கஞ்சா கசக்க போயிட்டதால நடக்கசொல்ல கால் கட்டவிரலால ‘thumps up’ சொல்ல நெனச்சு கட்டவிரல் நகத்த பேத்துகிட்டு நிமிந்து பாத்தா ஒரு தனியார் மருத்துவமனை! இப்படிப்பட்ட சிடுமூஞ்சி அதுவும் கால்கட்டவிரல் நகத்த பேத்துகிட்ட கடுப்புல இருக்குறப்ப வாய்விட்டு சிரிக்கணுமா? எப்படி சிரிக்கவைக்குறாய்ங்கன்னு பாக்கணுமா? ஆஸ்பத்திரிக்குள்ளாற வந்தாதான பாக்கமுடியும்? கட்!
ஷாட் டூ! டேக் ஒன்! ஆக்ஷன்! இருபது பேருக்குமேல வெயிட்டிங்ல இருக்கசொல்ல பொறுமையில்லாம நம்பாளு அவசரமா டாக்டர பாக்கணுமுன்னு கேட்க நர்ஸுங்களோ கம்னு அஞ்சு நிமிஷம் உக்காரவைச்சு சட்ட பனியன கழட்டசொல்றாங்க! நம்பாளு சுடுதண்ணிக்கேசுக்கு ஒண்ணும் புரியாம முழிக்கசொல்ல… இன்னாடா இது இதுவரைக்கும் நம்ப ஹீரோவ உசுப்பேத்த யாரும் ஆளயேகாணுமேன்னு பாத்தா, அறிமுகம் மிஸ்டர். கூல் - நாகேஷ் மாதிரி இருபதாம் நம்பர் டோக்கன்.
கார்ப்பரேட் ஹாஸ்பிடல்னாக்க ஒரு டிசிப்ளின் வேணாமா? அதுக்குதான் வந்ததுமே சட்ட பனியன கழட்டச்சொல்லி, டெம்பரேச்சர் பாத்து, ஹார்ட் பீட், பீப்பி, எல்லாம் செக் பண்ணி டோக்கன் போட்டாத்தான் அடுத்த பேச்சே! கார்ப்பரேட் ஆஸ்பத்ரிய இன்னாமா கண்ணுமுன்னால காமிச்சிருக்காங்க? முன்கோபியான கோபிக்கு முன்னாலயே வந்து முன்னனுபவம் உள்ள 20ம் நம்பர் டோக்கன் நம்பாளுக்கு அட்வைஸ் குடுக்குறமாதிரியே நம்பாள உசுப்பேத்தி பீக்குக்கு கொண்டு போய் கடைசியா கொரியர் குடுக்கவந்தவனே டோக்கன் போடாம டெலிவரி செய்ய முடியாத நிலைமய விளக்க வைத்து - இங்கதான் நீங்க ஒரு விஷயத்த கவனிக்கனும். என்னதான் ஹீரோ ‘தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா!’ன்ற மாதிரி ரிப்பீட்டடா கால்ல அடிபட்டுடுச்சுன்னு கரடியாக் கத்துனாலும் சட்டயகழட்டு, பனியன கழட்டு, ஆல் டெஸ்ட், அப்புறம் டோக்கன்படிதான் டாக்டரப்பார்க்கமுடியும்! சம்சாரமோ அல்லது புள்ளயோ வந்தாக்கக்கூட டோக்கன் போட்டாத்தான் அப்பாய்ன்ட்மென்ட். இங்க பேஷன்ட்தான் கஸ்டமரு! ஆனா அவருக்கு கெடச்ச ‘டிரீட்மென்ட்’ட பாத்தீங்களா? கஸ்டமர ‘கஷ்ட’மராக்கிபுட்டானுன்களே! அதான் பெரீய்ய ஆஸ்பத்திரி! காசுக்குத்தான் மதிப்பு மருவாதி - மனுஷனுக்கு இல்ல! பாக்கப்போனா பெரியாஸ்பத்திரியே தேவலப்பா! 20ம் நம்பர் டோக்கனுக்கும் 21ம் நம்பர் டோக்கனுக்கும் நடுப்புற வர்ற டயலாக்க வச்சே கதைய நவத்தி நடுவாப்ல கோபியோட கோபத்த அதிகமாக்கி ஹீரோவ ஒரு வழியா வாய்விட்டு சிரிக்க வச்சு தமாசா சொல்றாப்ல முடிச்சு – சுபம். கார்ப்பரீட் ஆஸ்பத்ரில்லாம் இன்னாமா காசு புடுங்குற ஆஸ்பத்ரியா ஆகிபூட்சின்னு என்னா கலக்கலா கதைல சொல்லிக்கிறாரு! சூப்பர்ல்ல? அதவுட பெரீய மெஸேஜு மனச குஷாலா வச்சுகுனு டென்சனே ஆவாத வாயவுட்டு சிரிச்சிகுனு இருந்தாக்க நம்பளாண்ட நோயே அண்டாதுன்னு இன்னாமா சொல்லிக்கிறாரு.
கதைல முக்கியமா ரெண்டே கேரக்டருதான்! ஒருத்தரு நம்பாளு (முன்)கோபி! அடுத்தது 20 நம்பர் டொக்கன் கொரியர் பாய். அவரக்கூட பேரே சொல்லாம வெறும் நம்பரா வச்சே ரெண்டு மெஸேஜோட கதசொல்லிமுடிச்சுபுட்டாரே! இன்னா படா கில்லாடி நம்ப ரைட்டரு?
அப்பால கடசிவர நம்பாளுக்கு ட்ரீட்மென்டே குடுக்கலியா? அதத்தான் ரைட்டரு சொல்லாம சொல்லிபுட்டாரே! முன்கோபியான கோபி முழுகோபியாகி டோக்கன உட்டு கடாசிட்டு துண்ட காணும் துணியக்காணும்னு ஓடி தெருமுக்குல இருக்குற பொட்டிகடைல பாட்டி வைத்தியமே தேவலன்னு ஓஸிலயே தம்மாத்தூண்டு சுண்ணாம்ப வாங்கி காயத்துல தடவிகிட்டு வூட்டபாக்க ஓடியேபூட்டாம்பா! கடயாண்ட பீடி வலிச்சிக்னு நின்ன தோஸ்த் டவுசர் பாண்டி பாத்து சொன்னாருபா! டாங்ஸ்பா!
(சாதாரணமான தமிழ்ல ஆரம்பிச்சு கோபிகூட உட்கார்ந்த்திருந்ததிலேயே போரடிச்சுப்போய் தலவலி வந்து தர லோக்கல் லாங்குவேஜ் தானா வந்துடுச்சுப்பா! கோவிச்சுக்காத நைனா!).
(சாதாரணமான தமிழ்ல ஆரம்பிச்சு கோபிகூட உட்கார்ந்த்திருந்ததிலேயே போரடிச்சுப்போய் தலவலி வந்து தர லோக்கல் லாங்குவேஜ் தானா வந்துடுச்சுப்பா! கோவிச்சுக்காத நைனா!).
(ஒரு மாற்றத்துக்காக இந்த SLANG எல்லாம்! கோபம்கொள்ள வேண்டாம்!)
அன்புடன்,
உங்கள் MGR
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
VGK-25 TO VGK-28
இந்தப்புகைப்படத்தில் அருமையாக தோன்றுபவர்
நம் ரவிஜி மாயவரத்தான் MGR அவர்களே தான் ...
அதுவும் சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பு. ;)))))
மூன்றாம் முறையாக அடித்த தன்
ஹாட்-ட்ரிக் பரிசினை நான்காம் சுற்றிலும்
தக்கவைத்துக்கொண்டுள்ள
திரு. ரவிஜி அவர்களுக்கு
நம் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
நாம் இதுவரை ஒரு டஜன் முறைகள்
கண்டுகளித்த இந்தப்படம்
ஒரு டஜன் ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது.
மாயவரத்தான் MGR அவர்களின் மேலும் பளபளப்பான
இன்றைய லேடஸ்டு படம் கேட்டுள்ளோம்.
விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அதையும் காண மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம் !
தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்றார்
வள்ளுவப் பெருந்தகை - ஆனால்
கோபத்தோடு தோன்றிவிட்டானோ கோபி..
துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க
என்று சொல்லி வைத்தார் வள்ளுவரும் சரிங்க..
கல்லு வந்து காலில் இடிக்க விரல் நகம் பெயர்ந்து ரத்தம் கொட்டும் வேளையில் பாழும் உடல் வலியில் துடிக்கையில் யார் முகத்தில் பொங்கிவரும் சிரிப்பு. சொல்லுங்க..!
சிடுமூஞ்சி கோபியை சிரிக்கவைக்கும் யுக்தியில் 20 ஆம் நம்பர் டோக்கன் கொரியர்வாலா பாவம் வந்து உட்கார்ந்து வரிசையில் காத்திருந்தாலும் ஃப்ரீ அட்வைஸ் கோபிக்கு....
அத்தனை டெஸ்டும் பண்ணிட்டு அப்புறம் டாக்டரை பார்க்க வைக்கிறாங்க? அது டாக்டருக்கும் எளிதாகும் இல்லையா? டயக்னைஸ் பண்ண? அதைவிட மெஷின் வாங்குன காசை இப்படி வசூல் பண்றாங்க என்பதே சரி..!
இன்றைய மருத்துவமனைகள் தரும் தொல்லைகளை அடித்தளமாக வைத்து அடுக்கடுக்காக நகைச்சுவையாக வர்ணனைகளை கட்டமைத்து சம்பவங்களை கண்முன் உலவவிடும் திறமையான நுணுக்கம் படிப்பவர்களைக் கவர்கிறது..!
கதை என்று சொல்ல முடியாது! முதல் 5 நிமிடங்களுக்குள், படித்து முடித்து, குபீரென்று சிரிக்கக்கூடிய மிகச்சிறிய நகைச்சுவை சம்பவம் நுணுக்கமான வர்ணணைகளால் கைதேர்ந்த சிற்பியின் லாவகத்துடன் கதையாக்கம் பெற்றிருக்கிறது..
ஆலமரத்தின் கடுகினும் சிறிய விதை நம் கண்முன் சிறிய செடியாகி மரமாகி விழுதுவிட்டு மாபெரும் அரசப்படைச் சேனைக்கும் நிழல் தரும் மரமாகி நிற்கும் மாயாஜாலாமாக கதையைக் கட்டமைத்த நேர்த்தி சிலாகிக்கவைக்கிறது
கொரியர் கொண்டு வருபவருக்கும் நோயாளிகளுக்கும் சம ட்ரீட்மென்ட்...! சமரசம் உலாவும் இடம் ஒன்றே ஒன்றுதான் என எண்ணிக் கொண்டிருப்பவர்களை இதோ இன்னொரு இடம் என்று காட்சிப்படுத்துகிற மருத்துமனை..!
அரசருக்கும் ஆண்டிக்கும் அங்கே ஆறடி நிலம் ..
இங்கோ ரத்தம் கொட்டும் எமர்ஜென்சி நோயாளிக்கும், தபால்காரருக்கும் ஒரே மாதிரி பரிசோதனைகள்..
வாய்விட்டு_ குபீரென்று சிரிக்கிறோம். கதையின் தலைப்பு நினைவுக்கு வருகிறது பொருத்தமாக.. வாய்விட்டுச் சிரித்தால் என்னும் தலைப்பே மனம் விட்டுச் சிரிக்கவைத்து நோயை விரட்டியடிக்கும் கைங்கர்யத்தை கச்சிதமாகச் செய்கிறதே..!
கல்லுளி மங்கனுக்குக் காடுமேடெல்லாம் தவிடுபொடி என உற்சாக ஊற்றாக வலம் வந்தாலே பல தடங்கல்கள் காணாமல் போய்விடுமே.. !
மாறாக எதிலும் சலிப்பு, கடுப்பு, கொதிப்பு கடுப்பு ..கோபி!
பள்ளி மாணவர்கள் ஆசிரியர் முகச்சவரம் செய்து வந்த நாட்களில் குறும்பு செய்வதை சற்று அடக்கியே வாசிப்பார்கள்..
மொட்டை பிளேடு போட்டு அழகு நிலையக்காரர் தன் எரிச்சலை தீர்த்துக்கொண்ட கோபத்தை வாத்தியார் மாணவர்களிடம் தானே காட்டுவார்..!
நிரந்தரமாக அந்த சுறுசுறு சுறு கடுகடுப்பு எரிச்சலை முகத்தில் தேக்கிய கோபி முன் கோபக்காரன்.. எத்தனை பொருத்தமாக பெயர் அமைந்திருக்கிறது..!
நோயாளியை பேசவைத்து விவரங்களை அறிந்து மருத்துவம் பார்த்த காலமெல்லாம் மலை ஏறிப்போய் வாயில் தர்மாமீட்டரை வைத்து பேசமுடியாமல் செய்த பிறகே மருத்துவம் பார்ப்பதைக்காட்சிப்படுத்துவதிலும், படங்கள் எல்லாம் சூழ்நிலையை கண்முன் கொண்டுவருவதிலும், நகாசு வேலைகள் நிரம்பிய நுணுக்கமான வர்ணணைகள் படிப்பவர்கள் தாங்கள் கதையின் ஒரு பாத்திரமாக உணர வைப்பதிலும் வெற்றி பெறுகின்றன..
சின்னகாயம் என்றாலும் ரத்த அழுத்தம், எக்ஸ்ரே எல்லாம் பார்த்து ஃபீஸ் வாங்கிவிட்டுத்தான் சிகிச்சையே ஆரம்பிக்கும் ..!
சகித்துக்தொலைக்க வேண்டியவைகளைப்
பார்த்து எரிச்சல் கொள்ளாமல் கிண்டலுடன்
இதுபோல் சிரிக்கப் பழகிக் கொண்டாலே
பல நோவுகள் சரியாகிப் போகுமோ என்னவோ ..!
கதை படிப்பவர்களும் ஐநூறாவது டோக்கன் வாங்கி சட்டை கழற்றிவிட்டு டெஸ்ட்டுக்குத் தயாராக உட்கார்ந்துவிடுகிறார்கள் கதையின் நேர்த்தியில்..!
இதைத் தாண்டி என்ன புராணம் இருக்கிறது... அனைத்தையும் விழுங்கிய வரிகள் இவை.
வாழ்க்கையில் முதல் முறையாக உடல் உபாதையுடன் வாய்விட்டுச் சிரித்தான் கோபி என்றால் படிப்பவர்கள் சிரிப்பதற்கு கேட்பானேன்..!
நாமொன்றும் கோபிபோல் உம்மணாமூஞ்சிகள் அல்லவே..!
மருத்துவமனையின் மூலவரான மருத்துவர் கதையில் காட்சிப்படவே இல்லை. அதற்குள் இந்த தெருக்கூத்தே நடந்து முடிந்துவிடுகிறதே..!
புதுசு புதுசாக நிறைய மருத்துவ சாதனங்கள் வாங்கிப் போட்டு, நிறைய பேர்களை சம்பளம் கொடுத்துப் பணிக்கு அமர்த்தி பிரதானமான இடத்தில் பிரபலமாக இயங்கி வரும் ஒரு ஆஸ்பத்தரி நடத்துவது என்றால் சும்மாவா பின்னே... !
அந்த மருத்துவ சாதனங்கள் துருப்பிடித்துப் போகாமல் இருக்கவும், அங்கே இங்கே அலையாமல் ஒரே இடத்தில் அத்தனை டெஸ்ட்டுகளும் செய்துகொள்ளவும் வாரக்கணக்கில் பிரசன்னமாகி சட்டை கழற்றி, பர்ஸின் கனத்தையும் பதம் பார்க்கும் நடைமுறை விளக்கப்படும்போது .. கோபி அப்படியே எழுந்து வலியைப் பொறுத்துக் கொண்டு ஓடிவிடுவதுதான் புத்திசாலித்தனமோ.. என எண்ணுவது சரியோ என நினைக்க வைக்கிறது..!
அவசரமாய் நாலு இடம் போய் கொரியர் பட்டுவாடா செய்யும் பணியில் இருப்பவர் நூற்று எட்டாம் நம்பர் வரை டோக்கன் வாங்கி காத்திருப்பது நடைமுறைச் சிக்கலின் உச்சம் ..!! அரசாங்கத்தின் ரெட் டேப்பிஸம் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியவில்லை.. யாராக இருந்தாலும் விதிவிலக்கு கிடையாதாம்..!
டெத்துக்கு வரச்சொன்னால் பத்துக்கு வருவார்கள்..! கல்யாணத்துக்குக் கூப்பிட்டால் வளைகாப்புக்கு வருவார்களாயிருக்கும் ..!
ஏற்கெனவே துர்க்குணி இப்போ கர்ப்பிணி வேறு என்பார்கள்...!
கட்டுக்கடங்கா கோபத்துடன் கோபி குரங்குக்குப் புத்தி சொன்ன தூக்கணாக்குருவி கதையாக கொரியர் காரரை நாலு சாத்து சாத்த எண்ணுகிறான்.. பாவம் அவன் வலி அவனுக்கு ..!
ஏற்கெனவே சுபாவப்படி கோபக்காரன், அடிபட்ட வலி, காத்திருக்கும் வேதனை, மருத்துவமனையில் நடைமுறைகள் பொறுமைசாலிகளுக்கே பொறுமை இழக்கவைக்கும் என்றால் முன் கோப கோபிஷ்டன் எவ்வளவுதான் தாங்குவான்..! ..
நாய் போல் வள்.. வள்.. என கோபி எரிந்து விழுந்தாலும் புன்னகையுடன் தன் வரலாறு சொல்லும் கொரியர்காரர் நகைச்சுவையின் உச்சத்தையும், மருத்துவ நடைமுறைச் சிக்கல்களின் அதலபாதாள ஊழலையும் ஒருங்கே காட்சிப்படுத்தி சிரிப்பாய் சிரிக்கவைக்கும் நேர்த்தியில் கதாசிரியரின் கைதேர்ந்த நுட்பமான நகைச்சுவை நடையழகு பரிணமளிக்கிறது..!
வெண்புறா நர்சுகள் கோபியின் சட்டையைக் கழட்ட துச்சாதனர்களாக மாறி துகிலுரிய உதவுவதை விஷமச் சிரிப்புடன் வேடிக்கை பார்க்கும் கொரியர்காரர் குருஷேத்திரப் போர்க்களத்தில் பார்த்தனுக்கு கீதை உபதேசித்த கண்ணனாய் - அந்தப் பாத்திரம் வாயிலாக பல நடைமுறை வாழ்வியலையும் விளக்கும் கதாசிரியரின் சொக்குப்பொடி தூவலை ரசிக்கிறோம்..!
சிரிப்பே சிறந்த மருத்துவர் .. நகைச்சுவையே இனிப்பான மருந்தாகி நோய் தீர்க்கும் மருந்து..!
தான் எடுத்துக்கொண்ட இலக்கில் கவனம் சிதறாமல் குறிபார்த்து சிரிக்கவைக்கும் சிலாக்கியமான நகைச்சுவைக் கதை, வாழ்வியல் உண்மைகளையும் சிந்திக்கவைத்து, ஒரேகல்லில் இரண்டு மாங்கனிகளும் பெற்ற உணர்வைத்தோற்றுவிக்கிறது.!
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
VGK-26 TO VGK-28
முதல் பரிசினையும் வென்று
மீண்டும் ஐந்தாம் முறையாக
புதியதோர் ஹாட்-ட்ரிக் அடித்துள்ள
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு
நம் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி
முதல் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்
சரிசமமாகப்பிரித்து வழங்கப்பட உள்ளது.
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர
இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
இணைப்புகள் இதோ
http://gopu1949.blogspot.in/
http://gopu1949.blogspot.in/
காணத்தவறாதீர்கள் !
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
VGK-30
மடிசார் புடவை
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள
பதிலளிநீக்குதிரு. ரவிஜி மாயவரத்தான் MGR அவர்களுக்கு
இனிய வாழ்த்துகள்...
உற்சாகமான விமர்சனத்திற்குப்பாராட்டுக்கள்.!
எமது விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகியமைக்கு
பதிலளிநீக்குஇனிய் நன்றிகள்
600 ..??!! வாழ்த்துகள்..
பதிலளிநீக்குமுத்தான முதல் பரிசினை வென்று மீண்டும் ஒரு நீநீளமான ஹாட்ரிக் பயணம் துவக்கியுள்ள சகோதரி ராஜராஜரேஸ்வரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்! //கதை படிப்பவர்களும் ஐநூறாவது டோக்கன் வாங்கி சட்டை கழற்றிவிட்டு டெஸ்ட்டுக்குத் தயாராக உட்கார்ந்துவிடுகிறார்கள் கதையின் நேர்த்தியில்..!// ரசித்தேன் - சிரித்தேன்! தொடர வாழ்த்துகள்! அன்புடன் MGR
பதிலளிநீக்கு''பள பள'ப்பான படம் கூடிய விரைவில் அனுப்புகிறேன் வாத்யாரே! முதல் பரிசுக்கு தெரிவு செய்ததற்காக நடுவர் அவர்க்ளுக்கும், வாய்ப்பிற்காக நம்ப VGK வாத்யாருக்கும், வாழ்த்தவிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் எந்தன் நெஞ்சார்ந்த நன்றிகள்! என்றும் அன்புடன் உங்கள் MGR
பதிலளிநீக்கு''பள பள'ப்பான படம் கூடிய விரைவில் அனுப்புகிறேன் வாத்யாரே! முதல் பரிசுக்கு தெரிவு செய்ததற்காக நடுவர் அவர்க்ளுக்கும், வாய்ப்பிற்காக நம்ப VGK வாத்யாருக்கும், வாழ்த்தவிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் எந்தன் நெஞ்சார்ந்த நன்றிகள்! என்றும் அன்புடன் உங்கள் MGR
பதிலளிநீக்கு//அப்பால கடசிவர நம்பாளுக்கு ட்ரீட்மென்டே குடுக்கலியா? அதத்தான் ரைட்டரு சொல்லாம சொல்லிபுட்டாரே! முன்கோபியான கோபி முழுகோபியாகி டோக்கன உட்டு கடாசிட்டு துண்ட காணும் துணியக்காணும்னு ஓடி தெருமுக்குல இருக்குற பொட்டிகடைல பாட்டி வைத்தியமே தேவலன்னு ஓஸிலயே தம்மாத்தூண்டு சுண்ணாம்ப வாங்கி காயத்துல தடவிகிட்டு வூட்டபாக்க ஓடியேபூட்டாம்பா! கடயாண்ட பீடி வலிச்சிக்னு நின்ன தோஸ்த் டவுசர் பாண்டி பாத்து சொன்னாருபா! டாங்ஸ்பா!
பதிலளிநீக்கு//சென்னை செந்தமிழ் முழுவதும் படித்தேன்! தொடர் வெற்றியைத் தக்கவைத்துள்ள திரு.ரவிஜி அவர்களுக்குப் பாராட்டுகள்!
//வெண்புறா நர்சுகள் கோபியின் சட்டையைக் கழட்ட துச்சாதனர்களாக மாறி துகிலுரிய உதவுவதை விஷமச் சிரிப்புடன் வேடிக்கை பார்க்கும் கொரியர்காரர் குருஷேத்திரப் போர்க்களத்தில் பார்த்தனுக்கு கீதை உபதேசித்த கண்ணனாய் - அந்தப் பாத்திரம் வாயிலாக பல நடைமுறை வாழ்வியலையும் விளக்கும் கதாசிரியரின் சொக்குப்பொடி தூவலை ரசிக்கிறோம்..! // அருமையான விமர்சனம்! முதற்பரிசு பெற்றுள்ள, ஐந்தாம் முறையாக புதியதோர் ஹாட்-ட்ரிக் அடித்துள்ள திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு பாராட்டுகள்!
பதிலளிநீக்குசென்னைத்தமிழில் கலக்கலான விமர்சனமளித்து முதல் பரிசு பெற்றுள்ள திரு. ரவிஜி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு\\பள்ளி மாணவர்கள் ஆசிரியர் முகச்சவரம் செய்து வந்த நாட்களில் குறும்பு செய்வதை சற்று அடக்கியே வாசிப்பார்கள்..
பதிலளிநீக்குமொட்டை பிளேடு போட்டு அழகு நிலையக்காரர் தன் எரிச்சலை தீர்த்துக்கொண்ட கோபத்தை வாத்தியார் மாணவர்களிடம் தானே காட்டுவார்..!\\
ரசித்தேன். பல பழமொழிகளோடு அழகான விமர்சனத்தைத் தந்து முதல் பரிசு பெற்றுள்ள திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
600 வது பதிவா ஐயா இது
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
முதல் பரிசினை வென்றுள்ள ரவிஜி அவர்களுக்கும்
சகோதரியாரே இராஜேசுவரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
அருமையான சென்னைத் தமிழ் விமரிசனம் எழுதி வைரக் கல்லுடன் காட்சி தரும் திரு ரவிஜிக்கும், பழமொழிகளை உதாரணமாக்கி எழுதியுள்ள திருமதி ராஜராஜேஸ்வரிக்கும் முத்தான அல்ல...நவரத்னமான முதல் பரிசு பெற்றதுடன், தொடர் பரிசுகளை வென்று கொண்டிருப்பதற்கும் என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குhttp://mayavarathanmgr.blogspot.in/2014/08/vgk_10.html
பதிலளிநீக்குதிரு. ரவிஜி என்னும் மாயவரத்தான் MGR அவர்கள்
இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
600~ஆவது பதிவுக்கு நல்வாழ்த்துக்கள் ஐயா!!!
பதிலளிநீக்குதிரு. மாயவரத்தான் ரவிஜி!
பதிலளிநீக்குதிருமதி ராஜராஜேஸ்வரி!
முதல் பரிசு பெற்ற இருவருக்கும்
எனது நல்வாழ்த்துக்கள்!
அன்பின் வை.கோ - அறுநூறாவது பதிவினிற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு600 வது பதிவிற்கு நல்வாழ்த்துகள் !
பதிலளிநீக்குதிரு. மாயவரத்தான் ரவிஜி!
திருமதி ராஜராஜேஸ்வரி!
முதல் பரிசு பெற்ற இருவருக்கும்
எனது நல்வாழ்த்துகள்!
அன்பின் ரவிஜி மற்றும் இராஜ இராஜேஸ்வரிக்கு - பாராட்டுகள் - முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் - இரவிஜியின் தளத்திற்குச் சென்று பாராட்டி வாழ்த்தி விட்டேன் -
பதிலளிநீக்குஅறுநூறாவது பதிவு.....வாழ்த்துக்கள்! இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகளை வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த இறைவன் அருள் புரிவாராக!
பதிலளிநீக்கு600!!!!!
பதிலளிநீக்குCongratulations!!!!!!!!!!!!
வணக்கம் கோபு ஸார்.
பதிலளிநீக்குஉங்களது 600 வது பதிவிற்கு முதலில் வாழ்த்துக்கள்.
விமர்சன போட்டியில் ஹாட்-ட்ரிக் அடித்த திரு ரவிஜி அவர்களுக்கும், திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மேலும் மேலும் பதிவுகள் எழுதி எங்களையெல்லாம் மகிழ்விக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் உங்கள் முன் வைக்கிறேன்.
அன்புடன்,
ரஞ்சனி
இறையருளால் 600 ஆவது பதிவு விரைவில் ஆயிரமாகட்டும்! தங்களின் சாதனை வியக்க வைக்கிறது! நன்றி!
பதிலளிநீக்குஆரவாரமான அறுநூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!
பதிலளிநீக்கு600 விரைவில் ஆயிரத்தை தொட வேண்டும் என வாழ்த்துகிறேன் அண்ணா .
போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ..
தங்களின் 600 - ஆவது பதிவிற்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்! மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்!
பதிலளிநீக்கு600 வது பதிவு? ஆஹா! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு600ம் ஒரு வெற்றி.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
பதிவுகளுக்கான உங்கள் உழைப்பும் ரசனையும் பாராட்டுக்குரியது.600 வது பதிவு அருமை. வாழ்த்துக்கள்... தங்களுக்கும், பரிசு வென்றவர்களுக்கும்!!
பதிலளிநீக்கு600 ஆவது பதிவு. ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு முத்து. உங்களுக்கு அமோகமான வாழ்த்துகளும்,ஆசீர்வாதங்களும். எண்ணிக்கையிலடங்காத பதிவுகளாக மேன்மேலும் உங்கள்
பதிலளிநீக்குதளத்தைக் காணவேண்டும்.
போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும், தனித்தனியே
என் அன்பும் பாராட்டுகளும். அன்பும் ஆசியும்
அறுநூறாவது பதிவுக்கு அகமார்ந்த வாழ்த்துக்கள் கோபு சார். ஒவ்வொரு பதிவையும் சிரத்தை எடுத்து ஒரு சிற்பியின் நுணுக்கத்துடன் செதுக்கி செதுக்கி அழகாகப் பதிவிடுகிறீர்கள். ஒவ்வொரு பதிவுக்கும் பின்னாலிருக்கும் தங்கள் உழைப்புக்குத் தலைவணங்குகிறேன். தொடர்ந்து பல நூறு பதிவுகள் இட தங்கள் உடலும் மனமும் சூழலும் ஒத்துழைக்க வேண்டுமாய் எனது பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவணக்கம் சார், வாழ்க வளமுடன். 600 வது பதிவிற்கு முதலில் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகாலதாமதமாய் சொல்கிறேன் மன்னிக்கவும்.
மேலும் மேலும் இது போன்ற அருமையான கதைகளை எழுதவேண்டும்.
விமர்சன போட்டியில் ஹாட்-ட்ரிக் அடித்த திரு ரவிஜி அவர்களுக்கும், திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு
பதிலளிநீக்குஇனிய நல்வாழ்த்துகள்..
இராஜராஜேஸ்வரி August 14, 2014 at 8:21 AM
நீக்குவாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ ! வணக்கம்.
//இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு இனிய நல்வாழ்த்துகள்..//
அப்படியா ...... சந்தோஷம் ..... சந்தோஷம். அவசியமாக வலைச்சரப் பக்கம் போய் எட்டிப் பார்த்து விட்டு வருகிறேன்.
இத்தோடு 93 தடவைகள் ஆச்சுதுங்க ! இன்னும் ஏழு மட்டும் பாக்கியிருக்குதுங்க. அடுத்து வரும் நம்ம ஜெயந்தி எப்படியும் அதை 94 ஆக்கிடுவாங்கன்னு நினைக்கிறேன். பார்ப்போம்.
இதுவரை முதல் 30 அறிமுகங்களை மட்டும் 4-5 பதிவுகளாக கம்ப்போஸ் செய்து ரெடியாக வைத்து விட்டேன். வலைச்சர ஆசிரியரின் படம், இணைப்பு, வலைச்சரத்தில் என்னைப்பற்றியும், என் வலைத்தளத்தைப்பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள் என்ற தகவல், என சப்ஜாடா எல்லாவற்றையும் கவரேஜ் செய்து வெளியிடுவதாக உத்தேசித்துள்ளேன். பார்ப்போம்.
இருக்கும் வேலைகளில் இதுவேறு ஒன்று புதிதாக ;)
100 ஆச்சா என்று அவ்வப்போது இதுபோல வந்து தாங்கள் தான் எனக்கு எடுத்துச்சொல்லி புரிய வைக்கணுமாக்கும். இப்போதே சொல்லிட்டேன்.
இந்த இனிய தகவலுக்கு மிக்க நன்றி, மேடம்.
பிரியமுள்ள VGK
தங்களின் 600 - ஆவது பதிவிற்கு எனது நல்வாழ்த்துக்கள்! மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குVetha.Elangathilakam
அன்புள்ள ஐயா.
பதிலளிநீக்குவணக்கம். என்னுடைய தொடர்ந்த பணிச்சுமைகளால் எந்த வலைப்பக்கமும் அதிகம் செல்லமுடியாமல் போய்விட்டது. இருப்பினும் எப்படியாயினும் அவசியம் பார்க்கிற ஒருசில வலைப்பக்கங்களில் உங்களுடையது ஒன்று. கருத்து ஏதும் தெரிவிக்கமுடியாத சூழல் இருந்தாலும் உங்களின் பணி பிரமிக்க வைக்கிறது. சிறுகதை விமர்சனப்போட்டியும் அதுதொடர்பான பரிசு மற்ற நிகழ்வுகளும் வியப்பாக உள்ளது. ஒவ்வொன்றையும் இத்தனை சிரத்தையெடுத்து வெகு பொறுப்போடும் அழகோடும் செய்கிற தன்மையைப் பார்க்கும்போது மனம் குவித்துப் பாரர்ட்டாமல் என்ன செய்யமுடியும்? தவிரவும் அதேபோன்று முடிவுகளைத் தெரிவிக்கும் வெற்றிபெற்றவர்கள் பற்றிய விவரங்கள் அதற்குத் தாங்கள் தெரிவு செய்து போடும் படங்கள் உயிர்ப்புடன் உள்ளன. எத்தனை பெரிய கௌரவம் இது? படைப்பாளியாக மட்டுமில்லாமல் மனந்திறந்து அடுத்தவர் திறமைகளையும் அடையாளப்படுத்திப் பரிசுகள் வழங்கும் மேன்மை உயர்வானது. நீங்கள் உயர்வானவர்தான்.
வாழ்க்கை இலட்சியங்களுக்காகத்தான் உருவாக்கப்பட்டது. உங்களைப்போன்ற இலட்சிய மனிதர்களுக்காகத்தான் இதுபோன்ற கருத்துருக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கியிருக்கின்றன போலும்.
சான்றுக்கு ஒன்று திருமதி ராஜேஸ்வரிக்கான பரிசை அறிவிததுவிட்டு அவர்களுக்குப்பிடித்த படங்களை பதிவிறக்கம் செய்து போட்டிருப்பது உங்களின் அக்கறையையும் அன்பையும் காட்டுகிறது. மகிழ்ச்சியாக உள்ளது உங்களின் பணி குறிதது எண்ணும்போது.
தொடர்ந்து உங்கள் பயணம் தொடரட்டும். அது தமிழின் இலக்கியப் பரப்பில் தனக்கான ஓர் இடத்தைப் பெற்று மாண்புறும் என்பதில் ஐயமில்லை.
கருத்துரைக்க நேரம் இல்லையென்றாலும் ஒப்புக்கொண்ட பணிகள் என்னை இறுக்கிப்போட்டுள்ளன. எனவே வந்த வந்து பார்த்துவிட்டுப்போவேன். சமயம் வாய்க்கும்போது கருத்துரைப்பேன். பரிசுபெற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களின் தொண்டும் சேவையும் தொடரட்டும்.
சந்திப்போம் வைகோ ஐயா.
வண்க்கம்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களின் 600 பதிவிற்கும் வாழ்த்துக்கள் ஐயா.
வெளியூர் பயணத்தால் நேர்ந்த தாமதத்திற்கு மன்னிக்கவும்... தங்கள் 600 வது பதிவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. இது போல் மேலும் சிறப்புகள் பெற வாழ்த்தி வணங்குகிறேன்!.. பரிசு பெற்றோருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குஆஹா....இங்கே ஒரு உலகம் இருக்கா? எப்படி இதை ‘மிஸ்’பண்ணினேன் என்று தெரியவில்லையே...! இனி வருவேன்...அறுநூறு ஆவது பதிப்பிற்கு வாழ்த்துகள்...கின்னஸ் ஒர்ல்ட் ரிகார்டை வைகோ சார் நெருங்கி கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது....வெற்றி பெற்றவர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்களுடன்...
பதிலளிநீக்கு600 ஆவது பதிவுக்கு என் வாழ்த்துகள். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள். தொடர்ந்து சலிப்பின்றி இந்தப் போட்டியை நடத்திப் பரிசுகளை அளித்துவரும் திரு வைகோ அவர்களின் சுறுசுறுப்பும் விடாமுயற்சியும் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.
பதிலளிநீக்கு600வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சார். மேலும் மேலும் தங்களது பதிவுகளை நாங்கள் படித்து ரசிக்க வேண்டும். முதல் பரிசினை வென்ற இருவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிரு ரவிஜி மற்றும் திருமதி ராஜேஸ்வரி இருவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு600---வது பதிவுக்கு வாழ்த்துகள். திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் திரு ரவிஜிக்கும் வாழ்த்துகள்
பதிலளிநீக்கு600 வது பதிவு? ஆஹா! வாழ்த்துக்கள்! மயக்கமே வருது. உங்களுக்கு 1000, 10000 எல்லாம் சர்வ சாதாரணம்.
பதிலளிநீக்குமுதல் பரிசு பெற்ற திரு. மாயவரத்தான் ரவிஜி அவர்களுக்கும்,
திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
600---வது பதிவுக்கு வாழ்த்துகள். வெற்றி பெற்றவங்களுக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு600---வது பதிவுக்கு வாழ்த்துகள் திரு ரவிஜி திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள். இருவரின் விமரிசனமும் நல்லா இருக்கு.
பதிலளிநீக்கு600 ம் பதிவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஆசானே!!
பதிலளிநீக்கு:)) 600ஆவது பதிவுக்கு வாழ்த்துகள் ஐயா!
பதிலளிநீக்கு