என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 23 ஆகஸ்ட், 2014

VGK 30 / 03 / 03 - THIRD PRIZE WINNER - மடிசார் புடவை





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :



 VGK-30  


 ’ மடிசார் புடவை ‘  


இணைப்பு:



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 




நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  



ஐந்து




  








இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 







  


மற்றவர்களுக்கு: 







    


முத்தான மூன்றாம் பரிசினை 


 வென்றுள்ளவர் 





  திரு. அப்பாதுரை அவர்கள்  

http://moonramsuzhi.blogspot.com

வலைத்தளம்: மூன்றாம் சுழி



 



முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள



  திரு. அப்பாதுரை   



அவர்களின் விமர்சனம் இதோ:




இயல்பான, மிகச் சாதாரணமான ஒரு நிகழ்வைக் கதைக் கருவாக்கி க்ளைமேக்ஸ் உள்பட மூன்று ஆக்டில் சொல்லியிருக்கும் சாமர்த்தியத்தை முதலில் பாராட்டி விடுவோம்.

கதையில் ஒரு அம்மா, அப்பா, பெண், அப்பாவின் அக்கா (அத்தை என்கிற நாத்தனார்), நிழலாகக் கோடி காட்டப்படும் அத்தை மகன். இவர்கள் கதை மாந்தர்கள். எதிலும் குற்றம் காணும் அத்தை எ நாத்தனாருக்குப் புடவை வாங்கிக் கொடுக்கிறார்கள் அம்மாவும் பெண்ணும். இதான் கதை. சுபம். ஓவர். வணக்கம். தி என்ட்.

புடவை வாங்கித் தரும் வெந்த பருப்புக் கருவை பருப்புருண்டைக் காரக்குழம்பாகச் சொல்லியிருக்கும் விதம் - படித்ததும் உடனே விமரிசனம் எழுதத் தூண்டியது. இந்தக் கதையை முதல் சுற்றில் எப்படிப் படிக்கத் தவறினேன் என்று தெரியவில்லை. 

நிற்க, கதைக்கான படங்கள் பிரமாதம். முதல் படம் தவிர. திருஷ்டிப் பூசணி தேவைப்பட்டதோ? பயந்தே போனேன். எப்படியோ சுதாரித்து விமரிசனம் எழுத வந்தேன். புது சேம்ஸங்க் ப்ரிஜ்ஜில் நேற்றிரவு அம்மா கடைந்து வைத்த கறிவேப்பிலை கலந்த நீர்மோர், அலமாரியில் இருந்த விபூதிப் பொட்டலம், ஜன்னல் ஓரமாக இருந்த பக்கத்து வீட்டு வேப்பமரக் கிளை - இவை காணாமல் போனதாக யாராவது குரல் கொடுப்பதற்குள் விமரிசனம் எழுதிவிட வேண்டும். 

ஒரு நாத்தனார் ஒன்பது நாத்தனார்களுக்குச் சமம். 

இது ரஜினிகாந்த் வசனம் போல் தொனித்தாலும், சொல்ல வந்தது பாஸிடிவா நெகடிவா என்று யோசிப்பதற்குள் கதை களை கட்டி விடுகிறது. 

இந்த நாத்தனார் சம்பந்தி/மாமியாராகும் சாத்தியம், கதையின் முதல் ஆக்ட். கொக்கி நம்பர் ஒன். கொக்கியின் வலிமையைத் தொடர்ந்து வரும் வரிகள் சுவாரசியமாகக் காட்டியிருக்கின்றன. தன்னை முன்னிறுத்தாமல் தன் தாயின் ஆற்றாமை அமைதி அச்சம் அப்பாவித்தனம் இவற்றின் வழியாகப் பெண் சொல்லியிருக்கும் விதம், 'சாதா நாத்தனார் வில்லி இனிமேல் மெகா சீரியல் மாமியார் வில்லியாக வரப் போகிறாரே! தன் பெண்ணுக்காவது வேறு இடத்தில் மணம் பார்த்து வைக்கத் தெரியவில்லையே இந்த அம்மாவுக்கு?' என்ற பரபரப்பை உண்டாக்குவது நிஜம். முதல் ஆக்டின் கொக்கி மூன்றாம் ஆக்ட் வரை இழுக்கிறது.

இது போன்ற நிறைய பேரைச் சந்தித்திருப்பதால் வில்லி நாத்தனாருடனும் விவரக்குறை அம்மாவுடனும் நம்மால் ஒட்ட முடிகிறது. 'ஏதாவது ஓரிரு வார்த்தைகள், அதுவும் மரியாதை நிமித்தமாகப் பேசிவிட்டாலும் அதில் ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து பொடுகைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளியாக்கி அம்மாவை அழ வைத்துவிட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பாள்' - இந்த வரிகள் நான் சந்தித்திருக்கும் நாத்தனார்கள் பாட்டிகள் அத்தைகள் மாமிகள் மாமியார்களை கண்முன் கொண்டு வந்தன. [ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிவிட்டது. கதாசிரியர் மேல் கேஸ் போடலாமாவென்று பார்க்கிறேன். கேஸ் ஜெயித்தால் வாசனை மிளகு ஒத்தடம் கொடுக்கும் செலவுக்காவது ஆகும்.]

பெறுபவர் மனதில் திருப்தி ஏற்படுவது பற்றிச் சொல்லியிருக்கும் விதம் அற்புதம். தருபவர் பெறுபவர் பற்றிய பலவிதச் சிந்தனைகளைக் கிளறியது. இரு வகையிலும் இரு முனைகளைச் சந்தித்திருக்கிறோம்..

எத்தனை கொடுத்தாலும் எப்படிக் கொடுத்தாலும் திருப்தி அடையாத கூட்டம் உண்டு. பிரியமாகக் கொடுத்தாலும் இது சொத்தை சொள்ளையென்று பத்து விதமாக புலம்பும் கூட்டம் உண்டு. மறந்து போய் இன்னொருவருக்கு முதலில் கொடுத்துவிட்டால் 'எனக்கு முதல் மரியாதையில்லை.. அதனால் கொடுத்தும் பயனில்லை' என்று இடிக்கும்  கேனைக் கூட்டம் உண்டு. கொடுத்ததை வாங்கிக் கொண்டு பாராட்டாவிட்டால் கூட பரவாயில்லை, ஆனால் 'இதை எங்கயாவது சீப்பா தட்டிட்டியோ?' எனும் உள்குத்து வெட்டிகளை வெட்டிப் போட மனம் வெந்தது உண்டு. பத்து ரூபாய்க்கு எதையாவது கொடுத்து விட்டு காலம் முழுதும் சொல்லிக் காட்டும் அல்பக் கூட்டம் உண்டு.  ஒன்றுமே செய்யாமல், செய்ய நினைத்ததையே சதா சொல்லிக் காட்டும் குரங்குகள் உண்டு. எனக்குத் தெரிந்த ஒருவர், 'பெண்டாட்டிக்கு முப்பது லட்சம் எழுதி வைக்கப் போறேன்' என்று பத்து வருடமாகச் சொல்லிச் சொல்லி எதுவுமே செய்யவில்லை. ஆனால் அவர் மனைவியைப் பார்ப்பவரெல்லாம் 'உனக்கென்னடியம்மா உன் புருசன் முப்பது லட்சம் எழுதி வச்சிருக்கான்' என்று நடந்தது போல் எடுத்துச் சொல்லும் அவலம் கண்டு ஆத்திரப்பட்டது உண்டு. ஒரு ரூபாய் கொடுப்பதை ஊரறியக் கொடுக்கும் கேவலத்தை என் குடும்பத்திலேயே கண்டதுண்டு. எதிர் முனைகளையும் சந்தித்திருக்கிறேன். ஆயிரக்கணக்கில் கொடுத்தாலும் அடுத்தவரறியாமல் கொடுக்கும் மனிதம். கொடுத்தாலும் பயனுள்ளதாகக் கொடுக்க வேண்டும் என்று மெனக்கெடும் மனிதம். பைசா பெறாதது எதையாவது கொடுத்தாலும் முகம் முழுதும் புன்னகையோடு பெற்றுக் கொண்டு வருவோர் போவோரிடமெல்லாம் 'இவர் கொடுத்தது' என்று சொல்லிப் பெருமைப்படும் மனிதம். கொடுக்க நினைத்த மனதே போதும் என்று உண்மையாக நிறைவடையும் மனிதம். கொடுப்பவரெல்லாம் மேலாவார் என்ற [கவைக்குதவாத] தத்துவம் கலந்த கண்ணதாசன் பாடலின் இந்த உன்னத வரிகள் ஏனோ நினைவுக்கு வந்தன: 'தருபவன் இல்லையோ கர்ணா நீ, தருமத்தின் தாயே கலங்காதே.' எதைக் கொடுத்தாலும் மன நிறைவோடு கொடுத்தால் பெறுபவர் மனதிலும் நிறைவுண்டாகும் சாத்தியம் கூடுகிறது என்று நினைக்கிறேன். 

கதைக்கு வருகிறேன்.

பெறுபவர் மனதில் திருப்தி.. இதைத் தொடரும் வரிகள் கதையின் இரண்டாவது ஆக்ட். கொக்கி நம்பர் டூ. கதை மாந்தர்கள் புடவை வாங்கு முன்னே இதைப் படிக்க வைப்பதால் புடவை வாங்கும் பொழுது, 'அடப்பாவமே, இத்தனை முயற்சி செய்து இத்தனை விலை கொடுத்து வாங்கிவிட்டு வில்லி வாயில் சிக்கிச் சீரழியப் போகிறார்களே!' என்று லேசாகப் பதறுகிறது. புடவைக் கடை விவரம், புடவைகள் விவரம் எல்லாம் கொஞ்சம் இழுவை என்றாலும் படங்கள் அழகாக இருக்கின்றன. முதல் படம் மறுபடி வருமோ என்று பயந்தேன். நல்ல வேளை. [ஹ்ம்ம். ஒரு புடவைப் படம் கொஞ்சம் படுத்தியது. காதலிக்கு வாங்கிக் கொடுத்து கட்டச் சொல்லி கழற்றும் ஆசையைத் தூண்டியது. ஹ்ம்ம்..] சில விவரங்களும் கற்றுக் கொள்ள முடிவது உண்மை. உதாரணத்துக்கு, 'ரன்னிங் ப்ளவுஸ்' என்றால் என்னவென்று உங்களைக் கேட்கிறேன். 'ஓடும் பொழுது அணியும் சட்டை' என்று நீங்கள் சொல்கிறீர்கள். நான் உடனே இடியிடி என்று சிரித்து, 'முதலில் வைகோவின் மடிசார் புடவை கதையைப் படியுங்கள்' என்கிறேன்.

ஓகே, கதை.

புடவை வாங்குவதில் ஒரு சுவாரசியமான setup. இதன் payback கதை முடிவில் தெரிவதால் நான் உஷ். முடிவைச் சொல்லாமல் முடிவின் சாமர்த்தியக் குறும்பை மட்டும் ரசித்த விவரத்தை சமர்ப்பிக்கிறேன்.

புடவைக் கடையில் பணம் கொடுக்கும் இடத்தில், 'பிடிக்காவிட்டால் திருப்பிக் கொடுத்து காசை வாங்கிக் கொள்ள உத்திரவாதம் பெறும்' இயல்பான செயல் ரசிக்க முடிந்தது.

ரசித்த இன்னொரு இடம். அத்தை என்கிற நாத்தனார் வீட்டுக்குப் போகும் வழியில் ஐஸ்க்ரீம் சாப்பிட ஆசைப் படுகிறாள் மகள். அம்மாவோ சங்கடப்பட்டு 'வேண்டாம்' என்கிறாள். அம்மா ஐஸ்க்ரீம் மறுத்த காரணத்தைப் புரிந்து கொண்ட மகள், 'புடவையைக் கொடுத்துவிட்டுத் திரும்பும் வழியில் ஐஸ்க்ரீம்' சாப்பிடலாமென்கிறாள். அம்மா சந்தோஷமாகச் சம்மதிக்கிறாள். இதில் ரசிக்க என்ன இருக்கிறது புடலங்காய் என்று தோன்றலாம். அம்மா வேண்டாம் என்பதன் காரணம் - எங்கே நாத்தனார் புடவை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுவாரோ என்ற பயம் - இதைப் புரிந்து கொள்கிறாள் மகள். ஐஸ்க்ரீம் சாப்பிடும் சிறிய மகிழ்ச்சியைக் கூட அம்மாவுடன் சேர்ந்து அனுபவிக்க விரும்பும் மகள் - இந்த இடம் அம்மாவின் அப்பாவித்தனத்துக்கு இரங்கிப் புரிதலுடன் நடக்கும் ஒரு இனிய மகளை எனக்கு நினைவு படுத்தியது. நெஞ்சைத் தொட்டது. புடவை கொடுத்து விட்டுத் திரும்பும் வழியில் ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் என்றதும், "மகிழ்ச்சியுடன் சம்மதிக்கும்" தாய் - இதில் தான் ரசனை அடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்.

நாத்தனார் 'புடவை நன்றாக இருக்கிறது' என்றதும் அப்பாவி அம்மாவுக்குப் பெரும் நிம்மதி. அடுத்து நடக்கும் குறும்பு நாடகம், மூன்றாவது ஆக்ட். கொக்கி நம்பர் த்ரீ. க்லைமேக்ஸ். நாத்தனார், அம்மா, பெண் எல்லோரும் உலக அமைதி கிடைத்த சந்தோஷத்தில் திளைக்கிறார்கள். போகிற போக்கில் ரகசியக் காதல் சமிக்ஞை ஒன்றையும் செய்கிறாள் பெண் - ரசிக்க வைக்கிறது. நிறைவு.

கதை இத்தோடு முடிகிறது என்றால் கதாசிரியர் இதற்கு மேலும் வெளிப்படுகிறார் வரிசையாக வரும் தீனி ஐட்டங்கள்! கதாசிரியரை அறிந்தவர்கள் நிச்சயம் முகம் நிறையப் புன்னகைப்பார்கள். கதைக்கும் இதற்கும் தொடர்பு இல்லையென்றாலும்.

சாதாரண விஷயத்தைக் கருவாக்கி, கதை உருவாக்குவது கடினம். கடைசி வரை படிக்கும்படி எழுதுவது இன்னும் கடினம். குறையில்லாமல் எழுதுவது இ இ க.  வை கோவின் திறமை பளிச்சிடும் குறையற்ற  எளிய சிறுகதை.. [ஓகே, முதல் படத்தை மறப்போம்]. 

  






அன்புள்ள திரு. அப்பாதுரை அவர்களுக்கு, 


வணக்கம்.


மிகவும் அபூர்வமாக 

முதன் முறையாக

இந்தப்போட்டியில் கலந்துகொண்டுள்ள

தங்களுக்குப் பரிசு கிடைத்துள்ளது 

எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது.




மனம் நிறைந்த பாராட்டுக்கள்


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.




நல்லவேளையாக தங்களின் இந்த அழகான புகைப்படத்தினை அனுப்பிவைத்தீர்கள்.  

அதனால் தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போச்சு. 

04.01.2013 அன்று நாம் திருச்சியில் நேரில் சந்தித்தோம். 


அந்தப்படத்தைக் கஷ்டப்பட்டு தேடி வைத்திருந்தேன்.

நாளுக்கு நாள் தங்களுக்கு இளமை ஊஞ்சலாடுவது வியப்பளிப்பதாக உள்ளது.

தங்களின் இளமையின் இரகசியத்தை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியே !

படத்தைப் பார்க்கப்பார்க்க எனக்கும் ஓரே ஆசையாகவும் பொறாமையாகவும் உள்ளது ;)



அன்புடன் VGK




     


   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.







இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.





காணத்தவறாதீர்கள் !





அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



 VGK-32 



  ’ச கு ன ம்’  


விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


28.08.2014




இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

18 கருத்துகள்:

  1. மிகவும் நன்றி.

    ஹிஹி.. இந்தக் காலத்தில் இளமை ரொம்ப ஈசி சார். தொழில்நுட்பம் கொட்டிக்கிடக்கிறது. hair implantலந்து வரிசையாக implant செய்துக்கலாம். இப்போதைக்கு இது போதும். முடி சூடா மன்னனாக இருக்கப் பிடிக்கவில்லை, அதான். (ஒரு முடிக்கு இத்தனை காசு என்று அளந்து வாங்கிவிடுகிறார்கள். முடியாப் போச்சு என்று சாதாரணமாக இருக்க முடியவில்லை).

    அப்புறம் வாரம் இருபது மைலாவது ஓடணும். அல்லது நடக்கவாவது செய்யணும்.

    நிற்க, மனம் இளமையாக இருந்தால் எல்லாமே சாத்தியம் என்று நம்புகிறேன். கொஞ்சம் சுயதர்மம், கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் காதல், கொஞ்சம் அறிவாண்மை கலந்த வாழ்க்கை நிம்மதியையும், படுத்தால் உறக்கமும் எழுந்தால் மலக்கழிப்பும் தருகிறது. இதை வைத்துக் கொண்டு இன்னும் கொஞ்ச நாள் இளமையாகக் காலத்தை ஓட்டுவோம் எனறிருக்கிறேன் ;-)

    விமரிசனம் எழுத நினைத்து எழுதாமல் போனதற்கு காரணம் இல்லை. சாக்குகள் உண்டு :-)

    மறுபடியும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. திரு அப்பாதுரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள
    திரு. அப்பாதுரை அவர்களின் ரசித்துப்படிக்கும் வகையில்
    அபூர்வமாக விமர்சனம் எழுதி பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. நாத்தனார், அம்மா, பெண் எல்லோரும் உலக அமைதி கிடைத்த சந்தோஷத்தில் திளைக்கிறார்கள். போகிற போக்கில் ரகசியக் காதல் சமிக்ஞை ஒன்றையும் செய்கிறாள் பெண் - ரசிக்க வைக்கிறது. நிறைவு.

    நிறைவான வரிகள்..!

    பதிலளிநீக்கு
  5. முதலில் என் குருநாதர் வை கோபால கிருஷ்ணன்.
    மஹா பெரியவாளைப் பற்றி இவர் எழுத்துக்களைப் படியுங்களேன்.
    ஆஞ்சனேயருக்கு ஏன் வடைமாலை (சுத்திச் சுத்தி சாப்பாட்டு மேல தான் வந்து நிக்கறது புத்தி )
    http://gopu1949.blogspot.in/2014/01/108.html

    அன்னதான மகிமை பகுதி 1 முதல் 3 வரை
    http://gopu1949.blogspot.in/2013/12/98-1-of-3.html
    http://gopu1949.blogspot.in/2013/12/99-2-of-3.html
    http://gopu1949.blogspot.in/2013/12/100-1-2-3-of-3.html //

    இன்றைய இனிக்கும் வலைச்சர
    அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரிAugust 23, 2014 at 9:18 AM

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

      *****முதலில் என் குருநாதர் வை கோபால கிருஷ்ணன்.
      மஹா பெரியவாளைப் பற்றி இவர் எழுத்துக்களைப் படியுங்களேன்.

      ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை (சுத்திச் சுத்தி சாப்பாட்டு மேல தான் வந்து நிக்கறது புத்தி )
      http://gopu1949.blogspot.in/2014/01/108.html

      அன்னதான மகிமை பகுதி 1 முதல் 3 வரை
      http://gopu1949.blogspot.in/2013/12/98-1-of-3.html
      http://gopu1949.blogspot.in/2013/12/99-2-of-3.html
      http://gopu1949.blogspot.in/2013/12/100-1-2-3-of-3.html *****

      //இன்றைய இனிக்கும் வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான தித்திக்கும் தகவலுக்கும், வாழ்த்துகள் + பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      இத்தோடு 99 ஆச்சு !

      நாளை ......

      இந்த வேளை பார்த்து ......

      ஓடி வா நிலா !

      :))))) பிரியமுள்ள VGK :)))))

      நீக்கு
  6. திரு அப்பாத்துரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அருமையாக விமர்சனம் எழுதி பரிசுபெற்றுள்ள திரு. அப்பாதுரை ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  8. அருமையான விமரிசனத்தை எழுதி பரிசு வென்றுள்ள திரு. அப்பாதுரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அப்பாதுரையோரியல் டச்! அருமையான விமரிசனம். சில கருத்துகள் நான் எழுதிவிட்டு நீக்கினேன். அப்பாதுரை எழுதிவிட்டார். உதாரணமாக நாத்தனார் குறித்துச் சொல்லி இருப்பவை! தன் சகோதரனுக்குத் திருமணமாகி 40 வருடங்களுக்கு மேல் ஆனாலும் தன்னுடைய ஆதிக்கத்தைத் தொடர்ந்து சகோதரன் மேல் செலுத்தும் சகோதரிகளைப் பார்த்து வருகிறேன். தான் செய்யும் சாப்பாடைத் தான் சாப்பிடணும். ஐம்பது வருடங்கள் முன்னால் எது பிடிச்சதோ அதான் இன்னிக்கும் பிடிக்கும் போன்ற சில அசட்டுத்தனமான எண்ணங்கள் உண்டு. சகோதரன் மனைவிக்கு எதிரே தன்னை புத்திசாலியாகவும், சகோதரனை அவன் மனைவியை விட நன்றாகக் கவனிப்பவளாகவும் காட்டிக்கொள்ளும் நாத்தனார்களும் உண்டு. :)))))))

    பதிலளிநீக்கு
  10. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    மடிசார் புடவை....:

    உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் 'அவள்' எழுதிய சிறுகதை.. அதுதான் புடவைக் கடைக்குள்ளே அலசி, ஆராய்ந்து, அடடா......எத்தனை சூட்சுமம்...! கதை பிரமாதம்..

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    பதிலளிநீக்கு
  11. மூன்றாம் பரிசு பெற்றுள்ள திரு.அப்பாதுரை அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  12. பரிசு வென்ற திரு அப்பாதுரை அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. மூன்றாம் பரிசினை வென்ற திரு.அப்பாதுரை அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. பரிசு வென்ற திரு அப்பாதுரை அவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. திரு அப்பாதுரை சார் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. பரிசு வென்றுள்ள திரு அப்பாதுரை அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. அருமையாக விமர்சனம் எழுதி பரிசுபெற்றுள்ள திரு. அப்பாதுரை ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு