என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

VGK 27 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - ’அவன் போட்ட கணக்கு’





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 27 - ” அவன் போட்ட கணக்கு ”



 

 

  

 

 




மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 




நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து




  









இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 







  


மற்றவர்களுக்கு: 







    


முதல் பரிசினை முத்தாக


வென்றுள்ளவர்கள் இருவர் 


அதில் ஒருவர்: 




திருமதி



 இராஜராஜேஸ்வரி  




அவர்கள்






http://jaghamani.blogspot.com/

வலைத்தளம் : “மணிராஜ்”

http://rjaghamani.blogspot.in/

"krishna"




 






 




முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள 


திருமதி



 இராஜராஜேஸ்வரி  



அவர்களின் விமர்சனம் இதோ:














தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.


என்ற வள்ளுவர் வாக்குப்படி மகன் ஆசைப்படற டாக்டர் படிப்பு படிக்க கஷ்டப்பட்டு  சேமிப்பு, சொத்து பத்து எல்லாவற்றையும் விற்றும், படிக்கவைக்கிறார் பியூன் தமிழ்மணி 

                    

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.
என்று மெய்ப்பித்தானா மகன் மாசிலாமணி?
பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்னும் பழமொழியைத்தானே மெய்ப்பித்தான்..!
பள்ளிக்கணக்கு புள்ளிக்காகுமா??
ஏட்டுசுரைக்காய் கறிக்குதவுமா!
வாழ்க்கை என்பது வாய்ப்பாடா என்ன?
இதற்குபின் இந்தக்காட்சி வரும் என்று எதிர்பார்க்க..
மனித வாழ்வில் மாற்றம் ஒன்றே மாறாதது அல்லவா..
பால்கணக்கு போடுவதுபோல பல் கணக்கெல்லாம் புள்ளிவிவரத்தோடும்...அதையும் முத்து முத்தான கையெழுத்தில் பேப்பரிலும் எழுதி.. ரமணா பாணியில் அசத்தலாய்த்தான் போடுகிறார்  கணக்கு ஆசிரியர்..!
ஆசைதீர அழகு பார்க்கிறார் வாட்ச்மேன் வடிவேலுவான தமிழ்மணி..!

தேன் என்று எழுதி நாக்கில் தடவிக்கொண்டால் இனிக்குமா..!
சர்க்கரை என்றால் தித்திக்குமா?
கணக்கு வாத்தியார் காகிதத்தில் எழுதியபோதே ஏதோ சிரிப்புச்சத்தம் கேட்டமாதிரி இருந்ததே ..அது விதியின் சிரிப்பா? ஆண்டவன் கணக்கு அரண்டு போக வைக்கிறது.. 

எழுதியவன் ஏட்டைக்கெடுத் .. பாடியவன் பாட்டைக்கெடுத்த கதையாக மகன் மாசிலாமணி நன்றி கொன்ற மகனாக காதலிக்கும் பெண்ணின் தந்தையின் செலவில்  தான் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வதையும் ஏதோ நண்பனிடம் சொல்லும் பாணியில் சொல்லும்போது தன் பற்களெல்லாம் பிடுங்கிய உணர்வில் தவித்துப்போகும் போது பரிதாபப்பட வைக்கிறார் பெற்றவர்..



பல்லவன் பல்லவி பாடட்டுமே என்று பல்லவி பாடி 


பல் டாக்டர்கள் வெளிநாடு பறக்க -- வலையில் சிக்கிய பறவையும் 


தலையாட்டி பொம்மையின் படமும் --தந்தையின் பற்களை நொறுக்கிய 


உணர்வே இல்லாத தனயனின்


பாத்திரமும் நன்கு சித்தரிக்கப்படிருக்கிறது..



பல்லு போனா சொல்லு போச்சு... 

பல்லு படிப்பு படிக்கப் போனா சொந்தம் போச்சா..!


உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா மாதிரி சொத்தும் 

சேமிப்பும் மகனும் சொந்தமும் சேர்ந்தே பறந்ததோ..!  


கணக்கு வாத்தியார் லட்சத்திலேயும் கோடியிலும் 

கணக்குப் பண்ணிப் புரிய வைத்ததை, 

தப்புக்கணக்கா ஆக்கி வைத்த  பல் டாக்டர் மகன்..


தந்தைக்கு மனக் கணக்கு

பிள்ளைக்கு பணக் கணக்கு

தந்தை-அசைகின்ற கீழ் வரிசை பற்கள்

மகன்- அசையா மேல் வரிசைப் பற்கள்


ராஜபார்ட் ரங்கதுரை, ஆறிலிருந்து அறுபதுவரை, காலத்திலிருந்து பக்கத்து வீடு- ஏன் பலரது சொந்த அனுபவத்திலிருந்தும் இதெல்லாம் கற்பனையில் எங்கோ நிகழ்வதல்ல.. நிதர்சனமாக காட்சிப்படுவதுதான் என்று தமிழ்மணியை தேற்ற முனைவதில் கதாசிரியரின் வெற்றி முரசு முழங்குவதை உணர்கிறோம்..
உயர் நீதி மன்றத்தில் கூட இதே பிரச்சினையில் வழக்கு ஒன்று நடந்து தந்தை வெற்றி பெற்றதாக செய்திகளில் பரபரப்பாக படித்திருக்கிறோமே..!
ஏணி, தோணி, கறிவேப்பிலை போல உபயோகம் முடிந்தபின் உதறிவிடும் உறவா பெற்று பேணி வளர்த்து வாழ்நாள் முழுவதும் உழைத்து வார்த்தெடுத்த தந்தையின் உறவு?
காலம் பதில் சொல்லும் ..!
இரை ஊட்டிய பெற்றோர் பறவைகள் தங்கள் குஞ்சுப் பறவைகளிடம் நீங்களும் இதேபோல பார்த்துக்கொள்வீர்களா?? என்று ஆசையுடன் கேட்டதாம் .. குழந்தைப் பறவைகளும் உற்சாகமாகக் கூறியதாம்....ஓ.. பார்த்துக்கொள்வோமே எங்கள் குழந்தைப் பறவைகளை::..! என்றதாம்  விக்கித்துப்போன அந்த பறவைகள் நிலைதான் தமிழ்மணிக்கு..
பையன் படிக்கவேண்டும் சம்பாதிக்கவேண்டும்  என்ற பாதி கனவு பலித்தாலும், பற்கள் அனைத்தும் பிடுங்கப்பட்ட உணர்வில்  தள்ளாத வயதில் தாங்கிப்பிடிக்க ஆளின்றி சொத்தும் சேமிப்பும்  படிப்புக்குச் செலவிட்டு விட்டு புள்ளி விவரம் போட்ட காகிதத்தைப் பார்த்து பரிதவிக்க வேண்டியதுதானா..!
இனி மாசிலாமணி அடுத்த ஓவரில் தன்பிள்ளைகளுக்கு வாழ்க்கை விளையாட்டில் களமிறங்குவான்..!
வாழ்க்கை வட்டத்தின் அடுத்த சுழற்சி .. முடிவற்ற விடையற்ற சுவாரஸ்ய பிரபஞ்ச நிகழ்வு..

HEALTH - *BODY... MIND ... SOUL* என்ற ஹிந்திப் பத்திரிகையில் மொழி மாற்றம் செய்யப்பட ஏற்ற கதைதான் ..


உடல் உள்ளம், ஆன்மா எல்லாம் ஆரோக்கியமாக திழ மாற்றம் ஒன்றே மாறாதது என்று புரிந்துகொள்ள கடமையைச்செய் பலனை எதிர்பாராதே என்கிற கீதையின் தத்துவத்தை உணர வைக்கிறது கதை...

ஆறு கடக்கும் வரை படகு அவசியம் .. ஆறு கடந்தபின்னும் அதனை தூக்கிச்சுமப்பது அனாவசியம் என்பது மகன்களின் மனோபாவம்..
வளர்ந்து மரமாகி நிழல் கொடுக்கும் என்று பாடுபட்டு ----- தான் தன் சுகம் என்று எண்ணாமல் தகுதிக்கும் மீறி சிரமப்பட்டுப் படிக்கவைத்த அருமை மகன் -- பலன்தரும் காலத்தில் முடத்தெங்காய், கோணல் மரமாய் மாமனார் வீட்டுக்கும் - மனைவியின் கைப்பாவையாய் மாறி- அங்கே பலனளிக்க -- பல்லிளிக்கிறது.
தேவலோக வரவான பாரிஜாதப்பூ பாமா இல்லத்திலிருந்து பராமரிக்கப்பட்டாலும் ருக்மணியின் இல்லத்தில் மலர் சொரிந்ததாமே..
மாயக் கண்ணனிடம் நியாயம் கேட்டபோது பாமா பாரிஜாத மரம் வேண்டுமென்றுதானே கேட்டாள்? பூ வேண்டுமென்று வரம் கேட்கவில்லையே என்றாராம் நாரதரிடம் ..!

வில்லுக்கு விஜயன் போல் கதைக்கு ஆசிரியரே உதாரணம்..என்று வெற்றி முரசாக முழங்கி மின்னல்கீற்றுகளாக - மட்டைக்கு இரண்டு கீற்று என்று பளிச் என புரியவைத்து வாகை சூடுகிறது கதை..!


வெற்றிமகுடத்தில் மேலும் ஒரு மயிலிறாகாக மொழிமாற்றம் செய்யப்பட்டு பத்திரிகை உலகிலும் பளபளக்கிறது..



 



மனம் நிறைந்த பாராட்டுக்கள் 




அன்பான இனிய நல்வாழ்த்துகள்.





     





முதல் பரிசினை முத்தாக




வென்றுள்ள மற்றொருவர்





திரு. ரவிஜி 



மாயவரத்தான் MGR


அவர்கள்



mayavarathanmgr.blogspot.com



முதல் பரிசினை  முத்தாக வென்றுள்ள


திரு.


 ரவிஜி  



மாயவரத்தான் MGR 

அவர்களின் விமர்சனம் இதோ:





அவன் போட்ட கணக்கு !

1.எவன் போட்ட கணக்கு?
2.எதைப்பற்றிய கணக்கு?
3.எதற்கு அந்த கணக்கு?
4.என்னாச்சு அந்த கணக்கு?

தலைப்பே இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை நம் மனதில் தொற்றுவிக்கிறது! தலைப்பிலேயே கொக்கிபோடும் வாத்தியார் வைகோ இந்தக்கதையிலும் அதை விடவில்லை!

ஆரம்பத்திலேயே ஒரு கிராமத்துப் பள்ளிக்கூட பியூன் - கணக்கு வாத்தியார் வீட்டிற்கு வரும் காட்சியை பாரதி ராஜா திரைப்படம்போல கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆசிரியர்!

பள்ளிக்கூட மணி அடிக்கும் பியூன் – பெயர்மிழ்ணி!!! அடடா என்ன ஒரு பொருத்தமான பெயர்! அவரது பையனின் பெயரோ மாசிலாமணி! பேர்லயே அடி பின்றீங்களே! கணக்கு வாத்தியாரை பார்த்த உடனே தலையின் முண்டாசு இடுப்பிற்கு வந்துவிடுகிறது!  மரியாதை! கிராமத்து வாத்தியார்களுக்கே உரிய பாணியில்வா..ய்..யா .... தமிழ்மணி!”  என்ற நீட்டி முழக்கிய கணக்கு வாத்தியாரின் அழைப்பு! ஜனகராஜ் பியூன் வேஷத்திலும் விஜயகுமார் கணக்கு வாத்தியார் வேஷத்திலும் கண்முன்னே தோன்ற---நாம் கதைக்குள்ளே போகாமல் தப்பிக்கத்தான் முடியுமா? வாங்க! வாங்க!!  வை.கோ. வாத்தியார் என்ன சொல்றார்னு பார்க்கலாம்!

முதல் இரண்டுவரிகளிலேயே கதையின் (போக்கு) - கணக்கு எதை நோக்கிப்போகிறது என்பதை மட்டைக்கு இரண்டு கீற்று என்ற கணக்கைப்போல சொல்லிவிடுகிறது!

நல்ல மதிப்பெண்கள் வாங்கியும், சொத்தை விற்று, சேமிப்பை எல்லாம் ஒன்று சேர்த்தும், எம்.பி.பி.எஸ். சீட் கிடக்க வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் தனது மகனை பி.டி.எஸ். படிக்கவைக்கலாமா என்று அரைகுறை மனதுடன் ஆலோசனை கேட்க அதிக படிப்போ அல்லது உலக அனுபவமோ இல்லாத தமிழ்மணி கணக்கு வாத்தியாரிடம் வர கணக்கு வாத்தியார் கணக்கைத்துவக்கி விலாவாரியாக விளக்குகிறார்! அவனுக்கு பி.டி.எஸ். படித்தால் ஒன்றும் குறைச்சலில்லை என்பதில் துவங்கி அவர் கொடுக்கும் நீஈஈஈஈஈ—ளமான கணக்கு (கேப்டன் விஜயகாந்த்துக்கு எழுதுன டயலாக் மாதிரியில்ல இருக்கு! எவ்வளவு புள்ளி விவரம்?!) அட்டகாசம்! முதல்ல பல்பற்றிய கணக்கு. பின்னர் பல்வேறு விதமானபல் சிகிச்சைகளில் பணம் பல்கிப் பெருகும் வாய்ப்பு; பணத்தை எண்ணவே பல்வேறு ஆட்களை வேலைக்கு வைக்கவேண்டிய நிலைமை ஏற்படும் வாய்ப்பு! எவ்வளவு பெரிய ஆளாயிருந்தாலும் பல்மருத்துவர்கிட்ட பல்லக்காட்டி நின்னுதான் ஆகணும் (ரொம்பவே குசும்பு) என்று பால் கணக்கைப்போல பல் கணக்கையும் பற்றி ஒரு விளக்கம்! அருமை!

கணக்கு வாத்தியாரின்கணக்கைப்பார்த்து தமிழ்மணி தன் மகன் மாசிலாமணியின் எதிர்காலம்பற்றியும், தனது எதிர்காலம் பற்றியும் மன(பண)க் கணக்கு போடத்துவங்குகிறார்! மகனை பல் டாக்டருக்கே படிக்க வைக்கிறார்.  படிப்பு முடியுற தருணம் வருது!

இதுவரைக்கும் நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு?!  கணக்கு சரியா இருக்குறமாதிரிதானே தோணுதுன்னு நீங்க நினைக்குறது புரியுது! ஒரு பீக்குக்கு கொண்டு போய் அப்பால டுவிஸ்ட் குடுக்குறதுல “நம்ப வை.கோ. வாத்யார்” படா கில்லாடி நைனா! இதோ தமிழ்மணி கணக்கு(போட்ட)வாத்யார்கிட்ட தனியா பேசனுமுண்ணு சொல்லிட்டார்ல்ல! எதப்பத்தி பேசப்போறார்என்ன கேட்கபோறார்? என்ன கிளைமாக்ஸ் மணிஅடிக்கிறமாதிரி தோணுதா?

‘கடைசி’ பீரியடுக்கு ஆரம்ப மணி அடித்துவிட்டு ரெஸ்ட் ரூமுக்கு போய் கணக்கு வாத்தியாரைப் பார்த்தா –கிளைமாக்ஸே வந்துடுச்சே 

பையனை டாக்டருக்கு படிக்க வைக்க சேமிப்புக் கணக்கு போட்டு பத்தாம சொத்தையும் வித்து அந்த கணக்கையும் சேத்து சீட்டு கிடைக்காம, கணக்கு வாத்தியார் போட்டுகொடுத்த கணக்கைப்பார்த்து பல் டாக்டருக்கு படிக்கவச்சா, பையன் ஒரு பல்டாக்டருக்கு படிக்கிற பொண்ணோட காதல் கணக்கப் போட்டு பொண்ணோட அப்பா பையன வெளிநாட்டுக்கு தன் செலவுல அனுப்பி படிக்க வச்சு வீட்டோட மாப்பிள்ளயா ஆக்குறதுக்கு அவரு ஒரு கணக்கு போட்டு---(அம்மாடி! மூச்சு வாங்குதே)  கடைசில தமிழ்மணி தாம் புள்ள நல்லா சம்பாதிச்சு தன்னயும் காப்பாத்துவான்னு ஒரு கணக்கு போட்டு வச்சிருந்தது கடைசியில அம்போவாக்கிவிடுகிறது எல்லா(ர்)க்கணக்கையும் ஏற்கனவே போட்டு வைத்திருக்கும் வாத்தியார்க்கெல்லாம் வாத்தியாரான ஆண்டவனின் கணக்கு!

தமிழ்மணி, முத்துப்பற்கள், பல் டாக்டர், கட்டுக்கட்டாய் பணம், ‘நமோ’ கெட் அப்ல ஒரு கணக்கு வாத்தியார், காதலர்கள், இதயத்துடிப்பை கேட்கும் ஸ்டெதாஸ்கோப், பறக்கத்துவங்கும் விமானம், வலையில் சிக்கிய குருவி, தலையாட்டி பொம்மை, தலையப் பிய்த்துக்கொள்ளும் கணக்கு (போட்ட) வாத்தியார், பில்டிங் கிடுகிடுக்குறமாதிரி அடிக்கிற (இறுதி) மணி, படம் பார்த்துக் கதை சொல் என்பதுபோல அதி உன்னதமான கோர்வையான படங்களின் தெரிவு! அதற்கு ஒரு தனி சபாஷ்!

பியூன் தமிழ்மணி கடைசியாக தனது பற்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பிடுங்கி எறிந்தது போல உள்ளது என்று கூறுவது அவரது மகன் மூலமாக தனக்கு கிடைத்திருக்கக்கூடிய வருமானம், வாழ்க்கைத்தரம் உயரக்கூடிய வாய்ப்பு, மகன் மருமகள் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ந்திருக்கக்கூடிய வாய்ப்பு இத்யாதி இத்யாதி எல்லாமே பறிபோவதைத்தான். தினமும் ஸ்கூல் முடிவதற்கு மணியை அடித்துவரும் தமிழ்மணியின் பணக்கணக்கு, மனக்கணக்கு, வாழ்க்கைக்கணக்குஎல்லாவற்றிற்கும் ஆண்டவன் மணி அடிக்கும் தமிழ்மணியின் கனவுகளுக்கு ஒரு முடிவுமணி அடித்துவிடுவதை சொல்லாமல் சொல்லி கதையை முடிப்பது நல்ல DIRECTORIAL TOUCH! ஒரு கதை முழுவதுமே பியூன் தமிழ்மணி மற்றும் கணக்குவாத்தியார் இரண்டு பாத்திரங்களை மட்டுமேகொண்டு சற்றும் தோய்வின்றி, பேசப்படும் வசனங்களிலேயே மொத்தகதையையும் கணக்காக முடித்திருக்கும் பாங்கு எண்ணி எண்ணி வியக்கவைக்கிறது. இன்னும் ஒரு முக்கியமான பாத்திரமென்றால் அது பள்ளிக்கூட மணிதான்! மாசிலாமணி அவனது அப்பாவிற்குத்தரும் முக்கியத்துவம் அளவே அவனது பாத்திரத்திற்கும் ஆசிரியர் முக்கியத்துவம் தந்திருப்பது ஊன்றி கவனித்தால் புரியும்!  அவனது பெயர் மட்டுமே சில இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது! அவ்வளவே! 

“பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு” என்பதை எளிய நடையில் வலிய முறையில் சொல்லியிருக்கும் உத்தி அட்டகாசம்!

கணக்கு வாத்தியார் தமிழ்மணியின் கணக்கைத் துவக்கி வைக்கிறார்! வாத்தியாருக்கெல்லாம் வாத்தியார் மேலிருந்து ஒரே (பள்ளிக்கூட மணி) அடியில் அதை முடித்து வைக்கிறார்!
அவர் கணக்கிலிருந்து யார்தான் தப்பமுடியும்?! MAN PROPOSES - GOD DISPOSES!
    இந்தக் கதை 1. மிக அருமை – தமிழ்
                 2. தும்ப சன்னாகித்தே– கன்னடம்
                 3. பஹூத் அச்சா – ஹிந்தி
    என்று ஏற்கனவே சொல்லப்பட்டது போக
                4. பெய் சாங்கா –   சைனீஸ்
                5. ஷேர் கூட்   -   ஜெர்மனி
                6. மோல்டோ பீனி– இத்தாலியன்
                7. லிஸோ      -   ஜாப்பனீஸ்
                8. மூய் பியேன் –   ஸ்பானிஷ்
                9. சால பாக உந்தி – தெலுங்கு
               10. கேட்லு சாரு –    குஜராத்தி

என்று மற்ற பல உலக மொழிகளிலும் பாராட்டப் படும் வகையில்  மொழி பெயர்க்கப்படவேண்டும் என்ற வேணவாவோடு--- மீண்டும் ஒரு உன்னதக் கதையை எழுதிய வாத்தியார் வை.கோ. அவர்களுக்கு வணக்கத்தோடு சேத்து வாழ்த்தையும் சொல்லி – மொதல்ல கேட்ட நாலு கேள்வி -கணக்குதான் முடிஞ்சு போச்சே--- பிச்சுக்க வேண்டியதுதான்!
நன்றி
என்றும் அன்புடன்
உங்கள் MGR





   


 




முதல் பரிசினை முத்தாக வென்றதுடன்

மூன்றாம் முறையாக மீண்டும் 


ஒரு புது ஹாட்-ட்ரிக் அடித்துள்ள



     திரு. ரவிஜி    



அவர்களுக்கு நம் 

மனமார்ந்த பாராட்டுக்கள் +

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.




  VGK-25  To  VGK-27 


   
  


Hat-Trick Prize Amount will be fixed later according to his

Continuous Further Success in VGK-28, VGK-29 and VGK-30




நீண்ட நாட்களுக்குப்பின் இம்முறை 

ஆண்கள் அணி மட்டுமே முழுவதுமாக 

ஹாட்-ட்ரிக் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






    





மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.





நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

முதல் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.





இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.


அதற்கான இணைப்புகள்




http://gopu1949.blogspot.in/2014/08/vgk-27-02-03-second-prize-winners.html



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:


VGK-29



அட்டெண்டர் ஆறுமுகம்




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


07.08.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

24 கருத்துகள்:

  1. //தேன் என்று எழுதி நாக்கில் தடவிக்கொண்டால் இனிக்குமா..!
    சர்க்கரை என்றால் தித்திக்குமா?
    கணக்கு வாத்தியார் காகிதத்தில் எழுதியபோதே ஏதோ சிரிப்புச்சத்தம் கேட்டமாதிரி இருந்ததே ..அது விதியின் சிரிப்பா? ஆண்டவன் கணக்கு அரண்டு போக வைக்கிறது.. //- அருமையான விமர்சன வரிகள்! முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் சகோதரி! வாத்யாருக்கும் நடுவர் அவர்களுக்கும் என்னை முதல் பரிசுக்கு தெரிவுசெய்த்தற்காக நெஞ்சார்ந்த நன்றிகள்! அன்புடன் MGR

    பதிலளிநீக்கு
  2. முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள
    திரு. ரவிஜி மாயவரத்தான் MGR அவர்களுக்கு
    இனிய வாழ்த்துகள்..

    சுவையான விமர்சனம் ..வரிக்கு வரி ரசித்து படிக்கவைத்தது..
    பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. எமது விமர்சனத்தை பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்த
    நடுவர் அவர்களுக்கும் ,
    சிறப்பாக பதிப்பித்த ஆசிரியர் அவர்களுக்கும்
    மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  4. http://mayavarathanmgr.blogspot.in/2014/08/vgk.html
    திரு ரவிஜி என்கிற மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள்.

    இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசு பெற்றுள்ள மகிழ்ச்சியினையும், இதனால் தான் மேலும் ஒரு ஹாட்-ட்ரிக் அடித்துள்ள மகிழ்ச்சியினையும் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  5. முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள
    திரு. ரவிஜி மாயவரத்தான் MGR அவர்களுக்கு
    இனிய வாழ்த்துகள்..

    சுவையான விமர்சனம் ..வரிக்கு வரி ரசித்து படிக்கவைத்தது..
    பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  6. எமது விமர்சனத்தை பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்த
    நடுவர் அவர்களுக்கும் ,
    சிறப்பாக பதிப்பித்த ஆசிரியர் அவர்களுக்கும்
    மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  7. திருமதி ராஜாராஜேஸ்வரிக்கும் திரு ரவிஜி அவர்களுக்கும் முதல் பரிசினைப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. முதல் பரிசைப் பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    பரிசை அள்ளித்தரும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. முத்தான இரு விமரிசனங்களும் மிக மிக அருமை. இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. முதல் பரிசு பெற்றுள்ள திருமதி. இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கும் திரு. ரவிஜி அவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

    \\தந்தை-அசைகின்ற கீழ் வரிசை பற்கள்

    மகன்- அசையா மேல் வரிசைப் பற்கள்\\

    மிக அழகான ஒப்பீடு. பாராட்டுகள் மேடம்.

    தன்பாணியிலான நகைச்சுவையோடு விமர்சனத்தை அழகுற வழங்கிய திரு ரவிஜி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.


    பதிலளிநீக்கு
  11. முதல் பரிசினை வென்ற
    திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும்
    திரு. மாயவரத்தான் ரவி அவர்களுக்கும்
    நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  12. முத்தான முதல் பரிசினை வென்றுள்ள
    சகோதரி ராஜராஜேஸ்வரி அவரகளுக்கும்
    நண்பர் ரவிஜி அவர்களுக்கும்
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. இன்றைய வலைச்சரத்தில்
    பல்-சுவை வித்தகர் ,மிகப் பிரபலமான பதிவர்
    என்றெல்லாம் பாராட்டி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது..
    இனிய நல் வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.in/2014/08/3.html

    பதிலளிநீக்கு
  14. இராஜராஜேஸ்வரி August 6, 2014 at 8:17 AM

    வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ !

    வணக்கம். வந்தனம் !

    //இன்றைய வலைச்சரத்தில் பல்-சுவை வித்தகர், மிகப் பிரபலமான பதிவர் என்றெல்லாம் பாராட்டி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது..//

    இவையெல்லாம் உண்மை தானா? ...

    உங்கள் மனதைத்தொட்டு தங்கள் வாயால் உள்ளது உள்ளபடி உண்மையாகச் சொல்லுங்கோ.

    அப்போது தான் நான் நம்புவேனாக்கும்.

    //இனிய நல் வாழ்த்துகள்..http://blogintamil.blogspot.in/2014/08/3.html//

    தங்களின் தங்கமான இனிய நல்வாழ்த்துகளுக்கும், தொடர்புக்கு ஓர் வாய்ப்பளித்து மகிழச் செய்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இத்தோடு 92 ஆச்சு ! இன்னும் 8 பாக்கியுள்ளன. நினைவிருக்கட்டும். சொல்லிட்டேன்.

    இதுபோன்ற இனிய தகவல்கள் தங்கள் மூலம் கிடைப்பதில் எனக்கோர் தனி இன்பமாக உள்ளது. அதையும் மறக்க வேண்டாம். சொல்லிட்டேன்.

    பிரியமுள்ள VGK

    பதிலளிநீக்கு
  15. இன்றைய வலைச்சரத்தில் என் வலைத்தளமும், ஒருசில என் பதிவுகளும், நான் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டிகள் பற்றிய செய்திகளும் நம் அரட்டைப் பதிவர் திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களால் சிறப்பித்துப் பேசப்பட்டுள்ளன.

    இணைப்பு: http://blogintamil.blogspot.in/2014/08/3.html

    அந்த வலைச்சரப் பதிவினில் நான் எழுதியுள்ள பின்னூட்டக்கருத்துக்கள், விமர்சனப்போட்டிகளில் கலந்து கொண்டுவரும் பதிவர்களுக்கு, படிக்க சுவாரஸ்யமாக இருக்கக்கூடும்.

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  16. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    அவன் போட்ட கணக்கு:

    அம்மாடியோ..... கணக்கு வாத்தியார் போட்ட கணக்கு.... மணல்கயிறு விசு அவர்களையும், நம்ம விஜயகாந்த் அவர்களையும் கூட ஒரேயடியாத் தள்ளிப் போட்டுவிட்டது. அப்படி ஒரு துல்லியம்.

    எங்கிருந்து கண்டுபிடிச்சீங்க இப்படி ஒரு தனித்துவம் வாய்ந்த ஒரு கணக்குப் புலியை. நம்ப அரசியலுக்கும் இவர் தான் இப்போ அவசரத்தேவை.

    தமிழ்மணி, அவரது நம்பிக்கையின் பல்லை அவர் மகனே முதலில் பிடுங்கிய போது 'கணக்குத் தவறிப் போனதற்கு'.... ஆஹா..... கதையின் முடிவு நச்ச்ச்.....ன்னு கணக்கு வாத்தியார் தலையில் ஒன்று வைத்தது போல இருந்தது...!

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    பதிலளிநீக்கு
  17. முதல் பரிசினை வென்றுள்ள
    திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும்
    திரு ரவிஜி அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம், திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  19. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம், திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  20. முதல் பரிசினை வென்றுள்ள திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் திரு ரவிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா திரு ரவிஜி அவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. திருமதி இராஜராஜேஸ்வரிமேடம் திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள் மேடம் பழமொழிகள் நிறய சொல்லி விமரிசனத்தில் கலக்கி இருக்காங்கன்னா ரவிஜி உலக மொழிகள் பலவற்றிலும் பாராட்டி இருக்காங்க.

    பதிலளிநீக்கு