என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 30 ஆகஸ்ட், 2014

VGK 31 / 03 / 03 THIRD PRIZE WINNER - முதிர்ந்த பார்வை

 

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு : VGK-31  


 ’ முதிர்ந்த பார்வை ‘  

இணைப்பு:
    


 


மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு, மிக அதிக எண்ணிக்கையில் பலரும், மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, வெகு அழகாக விமர்சனங்கள் எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
விமர்சனங்கள் மொத்தம்: ஐந்து


  


இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 
  


மற்றவர்களுக்கு:      

முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள விமர்சனம்:


முதிர்ந்த பார்வை  என்னும் தலைப்பே ஒட்டு மொத்த பாராட்டை அள்ளிச்செல்கிறது..!

குழலினிது யாழினிது என்பர் -தம்மக்கள் 
மழலைச் சொல் கேளாதவர் ..

அந்த மழலை  வந்து தவழ தவம் செய்ய செய்த இடப்பெயர்ச்சியே முதிர்ந்த பார்வையுடன் திட்டமிட்டு சென்ற முதியோரில்லம்...! 

மலையாள மந்திரவாதி ஜோஸ்யர் சொன்ன பரிகாரமாக குருப்பெயர்ச்சிவரை தனிமை என்பதெல்லாம் ஜோடிக்கப்பட்ட கற்பனை..! .

ஆரம்பத்திலேயே கதையில் வலுவான சஸ்பென்ஸ் கலந்த திகிலான முடிச்சு வலுவாகப்போட்ட கதாசிரியரின் உத்தி கதையை பரபரப்பாக்குவதில் சிறப்பிடம் பெறுகிறது.

எத்தனை செலவழித்து அலங்காரமான சுவர் எழுப்பி பிரம்மாண்டமான மாளிகை எழுப்பினாலும் அறைகளுக்கு நடுவில் உள்ள வெற்றிடம்தானே வாழ உபயோகப்படுத்துகிறோம்? 

எண்ணங்களை அலங்கரித்து மேடைகட்டி கதையைக் கட்டமைத்து நேர்த்தியான படைப்பில், சொல்லாமல் விட்ட வரிகளுக்கிடையேயான அர்த்தம் மிக்ப்பெரியது ... READ BETWEEN THE LINE - மிகப்பொருள் பொதிந்த ஆழமான வாழ்வியல் தத்துவம்..! 

சொல்லிய சொல்லின் இடையே விளங்கும் பொருளும், சுவையும் அதிகம். நிறைய யோசிக்க வைக்கும் கதை, இந்த மாதிரி தேடலில் சுலபமாகத் தொலைந்து போக முடியும். !

தர்மரின் பார்வையில் எல்லோரும் நல்லவராக காட்சிப்பட்டது போல இந்தக்கதையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒருவரை ஒருவர் விஞ்சும் வகையில் நல்ல மனதை காட்சிப்படுத்துவது சந்தோஷமளிக்கிறது. நேர்மறை சிந்தனையை விதைப்பதில் இந்தமாதிரி கதைகளின் பங்கு தனித்துவம் மிக்கது..!

தம்பதியினரின் தனிமை தேவையை உணர்ந்து மாமியார் மாமனார் ஜோதிடத்தின் மீது பழியைப்போட்டு குருப்பெயர்ச்சி வரை முதியோர் இல்லம் பெயர்ந்ததும், கல்யாணியின் பெற்றோரும் சம்பந்திகள் திரும்பவரும்வரை அஞ்ஞாத வாசம் என்று உணர்த்தி சந்ததி விருத்திக்கு அடித்தளம் இடுகின்றனர் இங்கிதமாக..

கை மடக்காமல் சாப்பிடும் நிபந்தனையில் - கை மடக்காமல் அவரவர்தானே  சாப்பிட முடியாது. ஆனால் அடுத்தவருக்கு கை மடக்காமல் கொடுக்கலாம் அல்லவா? புத்திக் கூர்மையாய் "ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையாக இருந்தால் பயன் எல்லோருக்கும் கிடைக்கும் என்பதை அழகாக எடுத்துரைக்கிறது கதை.. 

தன் தந்தை தாயாருக்கு எத்தனை வசதிகள் பார்த்துப்பார்த்து செய்து கொடுத்து மரியாதையாதையாக வைத்திருந்தாலும் இளம் தம்பதியினருக்கு தனிமையின் இனிமையை தரவேண்டுமென்றே தங்கள் சௌகர்யங்களை பொருட்படுத்தாமல் முதியோர் இல்லம் சென்று தவிக்கின்றனர்..

மகனின் மழலை இல்லாத பிரச்சினையின் ஆணிவேரை சரியாகக்கண்டறிந்து அதற்கான தீர்வினையும் மனமுதிர்ச்சியுடன் தந்தது அனுபவ அறிவு..

வீணையில் கானமிசைக்க விரும்பும் அன்னை விரைவில் தாலாட்டும் இசைக்கும் இசைக்குயிலாய் பாட்டியாய் பதவி உயர்வு பெறுவது ஆனந்தமளிக்கிறது..

எதற்காக முதியோர் இல்லம் வந்தார்களோ அதன் நோக்கம் நிறைவேறியதில் மட்டற்ற மகிழ்ச்சியடையும் வகையில் திறமையாக காய் நகர்த்தி வெற்றிக்கனி பறித்து,  நல்லமுடிவைத் தந்த கதை ஆசிரியர் பாராட்டுப்பெறுகிறார்..! 

ஒரே கல்லில் உடனடியாக எதிர்பார்த்த பிள்ளைக்கனி ஒன்றுக்கு இரண்டாக கிடைத்து ஒரேகல்லில் இரண்டுகனிகளும் மடியில் கிடைக்க இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கதை நிறைவடைகிறது..! 

காலாகாலத்தில் மழலை  வரம் கிடைத்தால் தானே நல்லது..  இநதச் சாரமற்ற வாழ்க்கையை சற்றே மாற்றி, வாழ்வில் வண்ணம் சேர்க்க நினைத்தது முதிர்ந்த பார்வை..!

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல

மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
 நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல

ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல

ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்லை..

ஆக காலாகாலத்தில் நடக்கவேண்டியதை பெறவேண்டியதை பெறுவது அவசியம் .. காலம் கடந்தபின் வருந்துவதில் பயனில்லை..

பொன்போன்ற காலத்தைத்தவறவிட்டால் பின் மருத்துவ சிகிச்சையும் பலனின்றிப்போகலாம்..

காலடிசுவடுகள் கூடவருவதில்லை.. காலமும் கடலலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.. ..முதுமைக்கோலத்தை பூசிவிட்டுப்போய்விடும்..  

மூத்தோர் வார்த்தை அமிர்தமாக பலனளித்து இரட்டை குழந்தைகள் என்று ரிசல்ட் தெரிந்ததும், ஒரேகல்லில் இரண்டு மாங்காய் என்று படிப்பவர்கள் அனைவரும் மகிழ்ந்து ரசிக்கும் வகையில் கதையில் கரைந்து போவது போல ஒரு சஸ்பென்ஸ் திரில்லரில் எதிர்பார்த்ததற்கும் மேல் நிறைவு காணும் வகையில் அமைந்த முடிவு சொக்குப்பொடித்தூவலாக வசீகரிக்கிறது..

இந்த மாதிரி கதை சொல்லும் நேர்த்தியும், நுணுக்கமும், அந்தந்த  வயதினரின் அபிலாஷைகளை துல்லியமாக பொருத்தமாக காட்சிப்படுத்துவதும், கதை சொல்லும் பாங்கும் கதாசிரியருக்கே இயற்கையாக கைவந்த கலை..!

நவரசங்களையும் அருமையாக விரவி பார்த்துப்பார்த்து சமைத்த கதை அறுசுவை விருந்து உண்ட நிறைவைத்தருகிறது..

எல்லாக் கதைகளும் ஒரு தண்டோராவை முழக்கினால் இங்கே இரட்டைக் குழந்தைகளும்  இணைந்து கொட்டுவதால் வெற்றிமுரசு பலமாக ஒலிக்கிறது..

தேர்ந்த வீணையின் நாதம் தாலாட்டாக ரீங்கரித்து  இசைமழையாகப்பொழிந்து மனதைக் குளிர்விக்கிறது..!

 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியவர்: 
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்


  வலைத்தளம்: "மணிராஜ்"  jaghamani.blogspot.com
மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
     
மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.காணத்தவறாதீர்கள் !

     

 ஓர் மகிழ்ச்சியான செய்தி  

நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய பதிவர்
திருமதி. ஞா. கலையரசி பாண்டியன் 
அவர்களின் அன்பு மகள்

திருநிறைச்செல்வி: 

 Dr. P. SINDHU M.B.B.S., [M.D.,] 

அவர்களுக்கும்திருநிறைச்செல்வன்:

 Dr. M. MEDHUN KUMAR  M.B.B.S., D.N.B., 

அவர்களுக்கும்

நேற்று 29.08.2014 
வெள்ளிக்கிழமையன்று
புதுச்சேரியில் உள்ள

ஸ்ரீ இராஜராஜேஸ்வரி 
திருமண நிலையத்தில்

மிகச்சிறப்பாக திருமணம் நடைபெற்றது.இந்த இனிய விழாவினில் 
நம் வலையுலகப் பிரபலம்

திருமதி :

  கீதா மதிவாணன்   

அவர்கள்

நேரில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா வளமும் நலமும் பெற்று 
புதுமண தம்பதியினர்
சந்தோஷமாக நீடூழி வாழ

பிரார்த்திக்கிறோம்,
ஆசீர்வதிக்கிறோம், 
வாழ்த்துகிறோம்.

     

அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:VGK-33’ எல்லோருக்கும் பெய்யும் மழை ’
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


04.09.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள்.என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

18 கருத்துகள்:

 1. சகோதரி இராஜராஜசுவரி அவர்களுக்கு மானமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
  திருமணத் தம்பதியினர் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துகள் ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு

  பதிலளிநீக்கு
 3. திருமதி. ஞா. கலையரசி பாண்டியன்
  அவர்களின் அன்பு மகள் இனிய திருமணத்திற்கு
  மனம் நிறைந்த வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 4. எமது விமர்சனம் பரிசுக்கு
  தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  ஐயா.
  தங்களின் முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன் இப்படியான போட்டிகள் மூலம் பலரது திறமை வெளிக்கு வரும்... தொடரட்டும் பணி எனது வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. திருமணம் பற்றிய குறிப்பைச் சரியாகக் கவனிக்கவில்லை. இப்போது தான் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் பின்னூட்டத்தைப் பார்த்ததும் மீண்டும் வந்தேன். புதுமணத்தம்பதிகளுக்கு மனம் நிறைந்த நல்லாசிகள், வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam August 30, 2014 at 12:56 PM

   வாங்கோ, வணக்கம்.

   //திருமணம் பற்றிய குறிப்பைச் சரியாகக் கவனிக்கவில்லை. இப்போது தான் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் பின்னூட்டத்தைப் பார்த்ததும் மீண்டும் வந்தேன். புதுமணத்தம்பதிகளுக்கு மனம் நிறைந்த நல்லாசிகள், வாழ்த்துகள்.//

   இந்த இனிய செய்தியை என் பதிவினில் வெளியிடலாமா வேண்டாமா என நானும் கடந்த ஒரு மாதமாகவே யோசித்துக்கொண்டிருந்தேன்.

   அவ்வாறு வெளியிடுவதாக இருந்தால் திருமணநாளுக்கு சில நாட்கள் முன்பாகவே வெளியிடலாமா அல்லது திருமணநாள் அன்றே அடியேன் தரப்போகும் பதிவினில் வெளியிடலாமா என பலவாறு யோசித்தேன்.

   பல்வேறு யோசனைகளுக்குப்பின் நேற்றே இதனை வெளியிடாமல் இன்று வெளியிட்டுள்ளேன். அதற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. வாய்ப்பு கிடைக்கும் போது பிறகு தங்களுடன் இதனைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

   புதுமண தம்பதியினருக்கு தங்களின் மனம் நிறைந்த நல்லாசிகளும் வாழ்த்துகளும் தெரிவித்துள்ளது எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி, மேடம்.

   அன்புடன் கோபு [VGK]

   நீக்கு
 7. அம்பாளடியாள் உனக்கு இந்தப் பக்கம் என்ன வேலை ? ..நீ எவ்வளவு தான் ஐஸ் வைத்தாலும் உன்னை யாரும் இங்கு கண்டு கொள்ளப் போவதில்லை அப்புறம் எதுக்கு வந்தாய் ?...மன்னித்து விடுங்கள் ஐயா மனசு நிறைய ஆசை உண்டு எல்லா ஆக்கங்களையும் வாசித்து மகிழ வேண்டும் என்று இருப்பினும் இந்தப் பக்கம் வந்தால் வீடு வாசல் ,புள்ள குட்டி இருக்கிற நினைப்பே அற்றுப் போய்விடும் ஆதலால் சாவகாசமாய் வந்து படிக்க வேண்டும் தீர்த்தமானால் தெளித்து விட்டுப் போகலாம் கங்கையானால் குளித்து விட்டுத் தான் போகணும் !(சைக்கிள் காப்பில தத்துவம் என்னமா வருது:)) உண்மை இது தானே! )என்ன நான் சொல்வது சரிதானே ?..:)) இது ஐஸ் இல்லை ஐயா என்னை நம்புங்கள் .இன்று பரிசினை அள்ளிச் சென்ற சகோதரிக்கும் திருமணம் முடித்துக் கொண்ட தோழிக்கும் அருமையான நல்ல நல்ல கதைகளை அள்ளிக் கொடுக்கும் சிந்தனைச் சிற்பி எங்கள் VGK ஐயா வர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்பாளடியாள் வலைத்தளம் August 30, 2014 at 1:48 PM

   வாங்கோ, வணக்கம்.

   //அம்பாளடியாள் உனக்கு இந்தப் பக்கம் என்ன வேலை ? ..நீ எவ்வளவு தான் ஐஸ் வைத்தாலும் உன்னை யாரும் இங்கு கண்டு கொள்ளப் போவதில்லை அப்புறம் எதுக்கு வந்தாய் ?....//

   நான் இவ்வாறு நினைப்பதாக ஏன் இப்படிக்கற்பனை செய்து கொண்டுள்ளீர்கள்? அது தவறு அல்லவா !

   உங்கள் நிலைமை எனக்குத்தெரியாதா ! அதுபோல என் நிலைமை உங்களுக்குத்தெரியாதா !!

   நான் ஒருபோதும் அம்பாளைத் [நம்பாளைத்] தப்பாக நினைக்கவே மாட்டேன் என்பதை மட்டும் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

   //மன்னித்து விடுங்கள் ஐயா மனசு நிறைய ஆசை உண்டு எல்லா ஆக்கங்களையும் வாசித்து மகிழ வேண்டும் என்று. இருப்பினும் இந்தப் பக்கம் வந்தால் வீடு வாசல், புள்ள குட்டி இருக்கிற நினைப்பே அற்றுப் போய்விடும் ஆதலால் சாவகாசமாய் வந்து படிக்க வேண்டும்.//

   தெரியும். எனக்கு நன்றாகவே தெரியும் உங்களையும் உங்கள் சூழ்நிலைகளையும் பற்றி. எனவே இவ்வளவு விளக்கங்கள் தேவையே இல்லை.

   அன்பு கொண்ட நெஞ்சங்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பினும், அவர்களின் அன்பு என்றுமே மாறாது என்பதே உண்மை.

   பின்னூட்டத்தொடர்புகளோ, மற்ற கடிதத்தொடர்புகளோ இல்லாவிட்டாலும் கூட ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பு பெருகுமே தவிர ஒருபோதும் அது குறையவே குறையாது என்பதை நான் நன்கு உணர்கிறேன்.

   // தீர்த்தமானால் தெளித்து விட்டுப் போகலாம் கங்கையானால் குளித்து விட்டுத் தான் போகணும் !(சைக்கிள் காப்பில தத்துவம் என்னமா வருது:)) உண்மை இது தானே! )என்ன நான் சொல்வது சரிதானே ?..:)) இது ஐஸ் இல்லை ஐயா என்னை நம்புங்கள்.//

   என் பதிவுகள் புனிதமான கங்கை என்று மிக அழகாகவே சொல்லி விட்டீர்கள். எனக்கும் இதைக்கேட்க மிகவும் சந்தோஷமாக உள்ளது. இது ஐஸ் என்று நானும் சொல்லவில்லையே; உண்மை தான் என்று நம்புகிறேன் என்பதைத் தாங்களும் தயவுசெய்து நம்புங்கோ.

   //இன்று பரிசினை அள்ளிச் சென்ற சகோதரிக்கும் திருமணம் முடித்துக் கொண்ட தோழிக்கும் அருமையான நல்ல நல்ல கதைகளை அள்ளிக் கொடுக்கும் சிந்தனைச் சிற்பி எங்கள் VGK ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் !//

   இன்று பரிசினை அள்ளிச் சென்ற தங்கள் சகோதரி சார்பிலும், திருமணம் முடித்துக் கொண்ட தோழி சார்பிலும், அடியேன் சார்பிலும் தங்களின் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   http://gopu1949.blogspot.in/2011/07/4.html எனக்கு ஏற்கனவே ’சிந்தனைப்பேரொளி’ என்று பட்டம் கொடுத்துள்ளார் எங்கள் ஊர் ஜில்லாக் கலெக்டர் அவர்கள்.

   இப்போது தங்கள் மூலம் ’சிந்தனைச்சிற்பி’ என்ற பட்டமா? :) மகிழ்ச்சி + நன்றி.

   உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். உடல்நிலை முன்னேற்றங்கள் பற்றி முன்புபோல அவ்வப்போது எனக்குச் செய்திகள் அனுப்பவும்.

   என்றும் அன்புடன் தங்கள் VGK

   நீக்கு
 8. //இந்த மாதிரி கதை சொல்லும் நேர்த்தியும், நுணுக்கமும், அந்தந்த வயதினரின் அபிலாஷைகளை துல்லியமாக பொருத்தமாக காட்சிப்படுத்துவதும், கதை சொல்லும் பாங்கும் கதாசிரியருக்கே இயற்கையாக கைவந்த கலை..!
  //உண்மைதான்! பரிசுபெற்ற தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 9. மூன்றாம் பரிசினை வென்ற திருமதி இராஜராஜேஸ்வரியைப் பாராட்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 10. பரிசு வென்ற திருமதி இராஜராஜீஸ்வரி மேடம் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 11. பரிசு வென்ற திருமதி இராஜராஜீஸ்வரி மேடம் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. மூன்றாம் பரிசினை வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மாவங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. //எதற்காக முதியோர் இல்லம் வந்தார்களோ அதன் நோக்கம் நிறைவேறியதில் மட்டற்ற மகிழ்ச்சியடையும் வகையில் திறமையாக காய் நகர்த்தி வெற்றிக்கனி பறித்து, நல்லமுடிவைத் தந்த கதை ஆசிரியர் பாராட்டுப்பெறுகிறார்..! // ரசித்தேன்..வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு