About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, August 2, 2014

VGK 27 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - ’அவன் போட்ட கணக்கு’

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு VGK 27 - ” அவன் போட்ட கணக்கு ” 

 

   

 

 
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 
நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  
ஐந்து
  

இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள்.   


மற்றவர்களுக்கு:     


இனிப்பான இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர் 


அதில் ஒருவர்:  திருமதி. ராதாபாலு   அவர்கள்

திருமதி.


 ராதாபாலு  


அவர்கள்வலைத்தளங்கள்: 

” எண்ணத்தின் வண்ணங்கள் ”
http://radhabaloo.blogspot.com/


“அறுசுவைக் களஞ்சியம் ”
http://arusuvaikkalanjiyam.blogspot.com/


“ என் மன ஊஞ்சலில் “
http://enmanaoonjalil.blogspot.com/
இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள


திருமதி.


 ராதாபாலு அவர்களின் விமர்சனம் இதோ:முந்தைய கதையில் பஞ்சாமியின் பல்லை பலவிதமாக பல்டாக்டர்  பாடாய்ப் படுத்தி, பின்பு அத்தனை பல்லையும் பிடுங்கி கடைசியில் போலிப்  பல்லைக் கட்டிய டாக்டரும் போலி என்று சொல்லி....பல்சுவை அல்ல...நகைச்சுவை கதை எழுதி பல்லாயிரக் கணக்கான மக்களையும் பல் வலிக்க சிரிக்க வைத்த அந்தக் கதையின்  தொடர்ச்சி போல இருக்கிறது 'அவன் போட்ட கணக்கு' !

ஆனால் இது ஒரு தந்தை-மகனுக்கிடையேயான உணர்ச்சிபூர்வக் கதை. பல்லைப் பற்றிய பல விஷயங்களை பல்லாராய்ச்சிகளைச் செய்து, பல் மருத்துவம் ஏன் படிக்கலாம், எதனால் படிக்கலாம், எப்படி படிக்கலாம், அதன் ப(ல்)லாபலன் என்ன, அதில் கிடைக்கும் பல்லாயிரம் வருமானம்,  போலியில்லாத பல் டாக்டர் உருவானால் அதன் பயன் என்ன .... இப்படி  பல் படிப்பு பற்றி ஒரு பெரிய பட்டியல் போட்டு  தமிழ்மணியின்  பிள்ளையை ஒரு பல் மருத்துவர் ஆக்க உதவி செய்து விட்டார் கணக்கு வாத்தியார் மூலமாக நம் கதாசிரியர்!
  
மனித மனங்களைப் படித்து  உணர்வுகளை நயமாக, சுவாரசியமாக எடுத்துக் கூறுவதில் ஆசிரியருக்கு இணை யாரும் இல்லை எனலாம். நாமும்  அப்படிப்பட்ட அனுபவங்களை அறிந்திருந்தால்  இது போன்ற கதைகளில் ஒன்றிவிட முடிகிறது.

'பெற்ற மனம் பித்து... பிள்ளை மனம் கல்லு', 'நாமொன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கும்' போன்ற பழமொழிகளை  அழகாக எடுத்துச் சொல்லும் நல்ல கதை. பள்ளி மணியை மட்டுமே அடித்து அயர்ந்த தமிழ்மணிக்கு தன் மகன் ஒரு நல்ல டாக்டரானால் மணி (money) யை தாராளமாகப் பெற்று  நிம்மதியாக ஒய்வு நாட்களைக் கழிக்கலாம்  என்ற ஆசை இருக்காதா என்ன? அதிலும் நன்கு படிக்கும் மகனை தான் கஷ்டப் பட்டும், கடன் வாங்கியும் நன்கு படிக்க வைத்து தோளில் கோட்டும், கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்புமாகப் பார்க்க விரும்பியது தவறில்லை. இது எல்லா தந்தைக்கும் இருக்கும் ஆசைதான்.

ஆனால் அந்த சீட் கிடைக்காதபோது, பல் டாக்டர் படிப்புக்கு வாய்ப்பு உண்டா என்பதைப் பற்றித் தெரியாதே அவனுக்கு. அதைப் பற்றி விபரம் அறியவே தன்னைவிட அதிகம் படித்து அறிந்த  கணக்கு வாத்தியாரிடம் ஆலோசனை கேட்க வந்தான்.

கணக்கு வாத்தியார் 'அந்தப் படிப்புக்கே சேர்த்துவிடு' என்று சொன்னதை அவன் விரும்பவில்லை. அவன் மட்டுமல்ல பல பெற்றோர்கள் தம் குழந்தை பெரிய டாக்டர் ஆக வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்;  பல் டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப் படுவதில்லை. பல் மருத்துவத்தை ஏதோ குறைவாகக் கருதுவதை நாம் காண முடிகிறது. மெடிகல் சீட் கிடைக்காவிட்டால்  பொறியியல் போன்ற வேறு துறைகளுக்கு மாணவர்கள்  முயல்கிறார்களே தவிர பல் மற்றும் கால்நடை மருத்துவம் படிக்க யாரும் ஆர்வம் காட்டாதது இயல்பாக உள்ளது.

ஒரு தெருவில் ஐந்து பொது மருத்துவர்கள் இருந்தால் ஒரு பல் மருத்துவர் மட்டுமே இருப்பார். மேலும் பல்லைப் பற்றி யாரும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.தாங்க முடியாத வலி வரும்போது மட்டுமே நாம் பல்மருத்துவரிடம் செல்கிறோம்.

ஆனால் கோணல் மாணலான பல்லையும் சீர்படுத்தி, முக அமைப்பை மாற்றி நம்மை அழகுறச் செய்வது பல் மருத்துவர்களால் மட்டுமே முடியும் எனலாம்! தற்காலத்தில் பல் சீரமைப்பு செய்து கொள்ள பலரும் விரும்புவதால் பல் மருத்துவர்களின் தேவையும்  அதிகமாகி இருக்கிறது. ஆசிரியர் தன்  கதையில் கூறியிருப்பது போல் பல் மருத்துவர்கள் இன்று நிறைய சம்பாதிக்க வாய்ப்புகளும் உள்ளது.

தலைவலி, வயிற்றுவலி என்று வருபவர்களைவிட பல்வலி என்று வரும் நோயாளிகள் 32 மடங்கு அதிகம் என்று கணக்கு வாத்தியார் சொன்னதைப் படித்து சிரிப்பை அடக்க முடியவில்லை! தலையும், வயிறும் நமக்கு ஒன்றுதான் இருக்கிறது: பல்லோ 32 இருக்கே... அதனால் அதற்கு 32 முறை டாக்டரிடம் போக வேண்டும் என்கிறார் ஆசிரியர் கணக்கு வாத்தியார் மூலமாக! நல்ல நகைச்சுவை!

நாட்டின் ஜனத்தொகை, அதில் குழவிகள், கிழவர்கள், கிழவிகள் இவர்களைக் கழித்து மிச்சமுள்ள பேருக்கு 32 பல்கள் வீதம் பெருக்கி, பல்வைத்தியம் செய்து கொள்ள வேண்டியவர்கள் 640 கோடி என்று....உஸ் ....அப்பாடா! அந்தக் கணக்கு வாத்தியார் போட்ட கணக்கை சிவப்பும், நீலமுமாக பட்டியல் போட்டு காட்டிய ஆசிரியருக்கு ஒரு '' போடலாம்!

பால் கணக்கு போல பல் கணக்கு...சூப்பர்! ஏழை, பணக்காரர், அரசியல்வாதி என்று அத்தனை பெரும் பல் டாக்டர் முன்னால மட்டும்தான் பல்லைக் காட்டிக்கிட்டு நிற்க முடியும் என்ற பெரிய உண்மையை சொல்லி தமிழ்மணியை கற்பனை உலகில் பறக்க வைத்து விட்டார் க.வாத்தியார்!

தன்  மகனின் மருத்துவமனையில் பல் நோயாளிகளின் கூட்டம் சமாளிக்க முடியாமல் இருப்பதாகவும், பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப் போவதாகவும் கற்பனையில் லயித்த தமிழ்மணி க. வாத்தியார் சொன்னபடியே  பல் மருத்துவத்தில் சேர்த்து விட்டான் மகன் மாசிலாமணியை....அந்தப் படிப்பே அவன் மனதை மாசுபடுத்தப் போவதை அறியாமல்!

தமிழ்மணியின் மகன் படிப்பு முடித்து வரப் போவதைத் தன்னிடம் சொல்ல விரும்புவதாக எண்ணிய க.வாத்தியாருக்கு மகிழ்ச்சியாக  இருந்தது அவன் சொன்ன காதல் கதை. இருவருமாக பல் மருத்துவத்தில் இரண்டு மடங்கு சம்பாதிப்பார்களே என்று எண்ணினார்  வாத்தியார். அதை சொல்லவும் செய்தார். தான் சொன்னதைக் கேட்டு படிக்க வைத்த தமிழ்மணிக்கு இனி நல்ல காலம் ஆரம்பித்து விட்டதாக வாத்தியாருடன் சேர்ந்து நாமும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு  ஆயுள் மிகக் குறைவு!
அவர்கள் இருவரும் மேலே படிக்க வெளிநாடு போகப் போவதாகவும், அவர்கள் விரித்த வலையில் தன் மகன் விழுந்து விட்டதாயும் புலம்பிய தமிழ்மணிக்கு ஆறுதல் சொல்வது யார்? தான் சீராட்டி, பாராட்டி பார்த்துப் பார்த்து வளர்த்த மகனைத்  தலையாட்டி பொம்மை, வீட்டு மாப்பிள்ளை, கொத்தடிமை போல் மாற்றி விடுவார்களே என்ற  அவரது ஆதங்கம்....நமக்கும் மனதை கனக்கச் செய்கிறது.

'தோளுக்கு மேல் உயர்ந்தால் தோழன்' ஆயிற்றே? அதை சரியாகப் புரிந்து கொண்ட(!) மாசிலாமணி தன்  தந்தையிடம் இந்த செய்தியை ஒரு நண்பனிடம் சொல்வது போல சொல்லிவிட்டான். அவனைப் பொறுத்தவரையில் இதில் தவறில்லை. ஆனால் பெற்ற மனம்தான் பதறித் துடிக்கிறது.

தான் வெளிநாடு போகும் விஷயத்தை அன்போடு, பாசத்தோடு தந்தையிடம் சொல்லியிருந்தால் கூட தமிழ்மணி எதுவும் மறுப்பு சொல்லியிருக்கப் போவதில்லை. அவன் தன்னை மதிக்காததால்தான் அவர்  தன்  அத்தனை  பற்களையும் பிடுங்கி எறிந்தாது போன்ற  துன்பத்தை அடைந்ததாகச் சொல்கிறார். ஒரு பல்லைப் பிடுங்கினாலே வலி உயிர் போய்விடும். இதில் 32 பல்லையும் ஒரே நேரத்தில் பிடுங்குவது என்றால்.... அவரது தாங்க முடியாத துக்கத்தை ஆசிரியர் பல் பிடுங்குவதை உதாரனமாக்கிச் சொல்வது வித்யாசமாக உள்ளது.

பாவப்பட்ட தமிழ்மணியின் புதிய கணக்கிற்கு விடை தெரியாமல் கணக்கு வாத்தியார் மட்டுமா முழிக்கிறார்! நாமும்தான்!!

மனம் வெதும்பி வருந்திய தமிழ்மணி அடிக்க வேண்டிய மணியை யாரோ அடித்ததை, அவன் வளர்த்து ஆளாக்கிய பிள்ளையை வேறு யாரோ உரிமையுடன் சொந்தம் கொண்டாடப் போவதை உவமையாகச்  சொல்லும் ஆசிரியரின் நயத்தைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

அவன் போட்ட கணக்கு..... மாசிலாமணி போட்டதா? அவன் மூலமாக இறைவன் போட்ட கணக்கா? கணக்கு வாத்தியாரின் கணக்கிலும் தவறு வருவதற்கு வாய்ப்பு உண்டு!


இக்காலப் பிள்ளைகளுக்கு பாசம், நேசம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

தான்  செய்வதும், நடந்து கொள்ளும் முறையும் மட்டும்தான் சரி என்பது அவர்களின் வாதம்.

பெரியவர்களின்  அனுபவத்தை அவர்கள் 'அந்தக் காலம்' என்று ஒதுக்கித் தள்ளும் அலட்சியம்.

அறிவுரை சொன்னாலோ 'பெரிசுக்கு இதைத் தவிர வேற வேலை இல்லையா?' என்ற பரிகசிப்பு.

'தென்னையைப் பெத்தா இளநீரு; பிள்ளையைப் பெத்தா கண்ணீரு' என்ற நிலையை இன்று முதியவர்கள் பலரிடம் காண முடிகிறது.

பிள்ளையைப் பாசத்துடன் பெற்று, வளர்த்து அவனுக்கு வேண்டியவற்றை கண்ணும், கருத்துமாகச் செய்து நல்ல படிப்பையும் படிக்க வைத்து அவன் தனக்கு பின்னாளில், வயதான காலத்தில்  கூட இருந்து கைகொடுப்பான் என்று கனவு காணும் பெற்றோர்கள் மாற  வேண்டும்.
எதிர்பார்ப்பு இல்லாத போது ஏமாற்றமும்  இருக்காது. அதற்கு பெரியவர்கள் தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

பிள்ளைகளை மட்டுமே நம்பி இராமல் நமக்கென்று ஒரு தொகையைத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

'பட்டம் மட்டும் வாங்கி வந்து பறந்து செல்லப் பார்க்குதடி' என்ற நடிகர் திலகத்தின் பாடல் காட்சிகள்தான் இந்தக் கதையைப் படித்ததும் கண்ணில் தெரிந்தது.

  


'யாரை நம்பி நான் பிறந்தேன்... போங்கடா போங்க. என் காலம் வெல்லும்... வென்ற பின்னே வாங்கடா வாங்க' என்று அவர் நெஞ்சு நிமிர்த்தி பாடியது போல அந்த நல்ல நாள் வரும்போது மாசிலாமணியும் தன்  தந்தையின் பெருமையை உணர்ந்து திரும்பி வர இறைவன் அருள் புரியட்டும்! நிச்சயம் இறைவன் அப்படி ஒரு கணக்கைப் போடுவார்!

இந்தக் கதைக்கு ஏற்றாற்போல்  தேர்ந்தெடுத்து பதிவு செய்துள்ள படக் காட்சிகள் ஒரு சித்திரப் படக்கதையை அனிமேஷனோடு பார்த்த அனுபவத்தைக் கொடுத்த  ஆசிரியருக்கு பல்லாயிரம் நன்றிகள்!

 

ராதாபாலு திருமதி. ராதாபாலு, திருச்சி
தன் கொழுகொழு குட்டிப்பேத்தியைக் கொஞ்சியவாறு !மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள் 


   


இனிப்பான இரண்டாம் பரிசினை 


வென்றுள்ள மற்றொருவர்திருமதி


 கீதா மதிவாணன் 


அவர்கள்


geethamanjari.blogspot.in


வலைத்தளம்: “ கீதமஞ்சரி “
இனிப்பான இரண்டாம் 


பரிசினை வென்றுள்ள 


திருமதி கீதா மதிவாணன் 


அவர்களின் விமர்சனம் இதோ:
அவன் போட்ட கணக்கு என்றால் அது எவன் போட்ட கணக்கு? நம் எல்லோரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் அந்த ஆண்டவன் போட்ட கணக்கு. அந்தக் கணக்கு தெரியாமல் கணக்கு வாத்தியார் ஒரு தனிக்கணக்கு சொல்ல அதை வைத்துக்கொண்டு பியூன் தமிழ்மணி ஒரு மனக்கணக்கு போட, முடிவில் எல்லாம் தப்புக்கணக்காகிவிட தன் தலையெழுத்தை நொந்துபோய் நிற்கிறார்.

தாங்கள்தான் படிக்கவில்லைசமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்தைப் பெறமுடியவில்லை தங்கள் பிள்ளைகளாவது படித்து பெரிய ஆளாகவேண்டும்கை நிறைய சம்பாதிக்கவேண்டும் என்ற ஆசைக் கனவுடனும் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்தால் தங்களுடைய வயோதிகக் காலத்தில் தங்களைப் பேணிப் பராமரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடனும் வாயைக்கட்டியும் வயிற்றைக்கட்டியும் கடன் வாங்கியும் கையிருப்பை அடமானம் வைத்தும் பிள்ளைகளைத் தங்கள் தகுதிக்கு மீறிய பள்ளிகளில் படிக்கவைக்கின்றனர் பல பெற்றோர். காலப்போக்கில் அவர்களுடைய கனவு நிறைவேறிவிடுகிறது. ஆனால் நம்பிக்கை நசுக்கப்பட்டுவிடுகிறது.

எத்தனைப் பிள்ளைகள் தங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்தவுடன் ஏறி வந்த ஏணியைத் திரும்பிப் பார்க்காமலிருப்பதோடு எட்டி உதைத்தும் தள்ளிவிடுபவர்களாக இருக்கிறார்கள். சொத்து சுகம் இவையெல்லாம் யாரால் வந்தது என்ற பிரக்ஞையின்றி பெற்றவர்களைக் கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு எந்த உறுத்தலும் இல்லாமல் நிம்மதியாக வாழ முடிகிறது அவர்களால். ஆனால் துக்கத்திலும் வேதனையிலும் உழன்று உழன்று பரிதவித்துக்கொண்டிருப்பவர்கள் பெற்றவர்களே. பிள்ளைகளுடனும் பேரப் பிள்ளைகளுடனும் சேர்ந்து மகிழ்ந்து வாழும் கொடுப்பினை அற்ற துர்பாக்கியப் பெற்றோர்களின் பிரதிநிதியாய் இங்கே பியூன் தமிழ்மணி.

மகனுக்கு பொது மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் பல் மருத்துவப் படிப்பில்தான் கிடைக்கும் என்பது போல் தெரியவும் பதறிக்கொண்டு நேராக கணக்கு வாத்தியாரின் வீட்டுக்கு வருகிறார். எதற்கு கணக்கு வாத்தியாரிடம் வரவேண்டும்பள்ளியில் எத்தனை வாத்தியார்கள் இருக்கிறார்கள்ஏன் அறிவியல் வாத்தியாரிடம் சென்றால் அழகாகப் புரியவைத்திருக்க மாட்டாராகணக்கு வாத்தியாரிடம் வரக் காரணம் இருக்கிறது.

கணக்கு வாத்தியார்தானே கணக்கில் கில்லாடி. அவர் போடும் ஒவ்வொரு கணக்கும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல் எப்படி கச்சிதமாக இருக்கும். அவரிடம் போனதால்தானே படிப்பறிவில்லாத பியூன் தமிழ்மணிக்கு பல் மருத்துவத்தின் மகத்துவம் புரிகிறது. என்னமாய் கணக்குப் போடுகிறார்!

இந்தியாவின் ஜனத்தொகையிலிருந்து அவர்களுக்கிருக்கும் பற்களின் எண்ணிக்கை முதல் சொத்தைப் பல் வரை கணக்கெடுத்து தமிழ்மணியின் வயிற்றில் பாலை வார்க்கிறார். சர்வே எடுப்பது போல் பல் கணக்கு எடுப்பதோடு மட்டுமல்லாமல் பல்லில் வரும் பிரச்சனைகளையும் பட்டியல் போட்டு அசத்துகிறார் மனிதர்.

பால் கணக்கு போடுவது போல் மிக எளிமையாக பல் கணக்கைப் போடுகிறீர்கள் என்று கணக்கு வாத்தியாரைப் பார்த்து ஒரு இடத்தில் தமிழ்மணி சொல்வது ரசிக்கவைக்கிறது. நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இதுவரை இப்படி யாரும் பல் வைத்தியம் படிக்க கணக்குப் போட்டுப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. அவ்வளவு நறுக்கான கணக்கு!

ஆனால் கரும்பலகையில் எவ்வளவு கடினமான கணக்கையும் திட்டமிட்டு சரியானபடி போட்டு விடைகாணும் எந்தக் கில்லாடியாலும் வாழ்க்கைக் கணக்கைத் திட்டமிட்டு தன் போக்கில் போட்டு விடைகாண இயலாது என்பதை மிக அழகாக உணர்த்திப் போகிறது கதை. எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றத்தைத் தவிர்க்க இயலாது என்பார்கள். இங்கே ஒரு பிள்ளையிடம் தந்தைக்கிருக்கும் நியாயமான எதிர்பார்ப்பும் பொய்த்துப்போகிறது.

மகனைப் பொறுத்தவரை என்ன சொல்வான்? ‘அப்பா அவரால் முடிந்தவரை படிக்கவைத்தார். அதற்கு மேல் அவரால் படிக்க வைக்க இயலாது. இப்போது இந்தப் பெண்ணின் மூலம் மேற்படிப்பு படிக்க எனக்கொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நான் ஏன் தட்டவேண்டும்? வலிய வரும் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளாதவன் மடையன் அல்லவா? அதனால் நான் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு இன்னும் பெரிய ஆளாவதுதான் சாமர்த்தியம்’ என்று அவன் ஒரு கணக்கு போட்டிருப்பான். அந்தக் கணக்குக்கும் ஆண்டவன் தரப்பில் மாற்றுக்கணக்கு இருக்கலாம். காலம் தவிர வேறு யார் அறியக்கூடும் அதை?

பிள்ளை எங்கிருந்தாலும் நல்லபடியாக வாழவேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தும் தமிழ்மணியின் உள்ள ஆதங்கத்தை நம்மால் உணர முடிகிறது. பணத்துக்காக தன் மகன் விலைபோகவிருப்பதைக் கண்டு அவர் மனம் படும் பாட்டையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆசைகளும் கனவுகளும் நம்பிக்கையும் வைத்திருந்த மகன் இல்லாத வாழ்க்கையை அவரால் எப்படி தாங்கிக் கொள்ளமுடியும்? ஆனால் ஒருவர் இல்லாவிடில் அதனால் உலகம் ஸ்தம்பித்து நின்றுவிடாது என்பதை தமிழ்மணிக்கு பதிலாக வேறு யாரோ பள்ளியின் மணியை அடிப்பதாக காட்டி நமக்கும் உணர்த்துகிறார் கதாசிரியர்.

கதையின் துவக்கத்தில் படர்க்கை ஒருமையில் ‘அவன் இவன்’ என்று குறிப்பிடப்படும் தமிழ்மணி பாதிக்கு மேல் மரியாதைப் பன்மையில் ‘அவர் இவர்’ என்று குறிப்பிடப்படுவதொன்றே சிறு நெருடல். மகனை மருத்துவப்படிப்பு படிக்கவைத்துவிட்டதால் சமுதாயத்தில் மதிக்கப்படுவதன் அடையாளமாக அப்படிக் குறிப்பிடப்படுவதற்கான சாத்தியம் உண்டு என்றாலும் முற்பாதியில் கணக்கு வாத்தியாருடன் பேசி முடிக்கையில்தான் அந்த மாற்றம் தொடங்குகிறது. இந்த சிறு நெருடல் தவிர மற்ற அனைத்தும் மனத்துக்கு நெகிழ்வான வருடலே.  

 பரிசுகளும் இந்தப்பதிவரும் போலவே 

 இணைபிரியா ஜோடி 
 திரு. மதிவாணன்  அவர்களும் 


திருமதி. கீதா மதிவாணன் அவர்களும் 
இதே ஆகஸ்டு மாதம் வரவிருக்கும் 

இவர்களது வெற்றிகரமான 

22வது திருமண நாளுக்குள்

இதே போட்டியில் 22 பரிசுகளாவது 


வாங்கிவிட வேண்டும் என்பதே 

இவர்களின் இப்போதைய இலக்காக இருக்குமோ  !


இதுவரை மிக அதிக அளவான


இருபது வெற்றிகள் ! 
மகிழ்ச்சியுடன் இந்தத் தம்பதி 

இன்றுபோல் என்றும் வாழ 

நாமும் வாழ்த்துவோம்.மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.
     

மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.

நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.காணத்தவறாதீர்கள் !


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:


VGK-29அட்டெண்டர் ஆறுமுகம்
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


07.08.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள்.என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

28 comments:

 1. வெற்றிகரமான 22வது திருமண நாள் காணவிருக்கும்
  திரு. மதிவாணன் - திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
  மகிழ்ச்சியுடன் இன்றுபோல் என்றும் வாழ இனிய வாழ்த்துகள்.
  அன்பான பிரார்த்தனைகள்.. வாழ்க வளமுடன் ..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்புக்கும் ஆசிக்கும் மிக்க நன்றி மேடம்.

   Delete
 2. தென்னையைப் பெத்தா இளநீரு; பிள்ளையைப் பெத்தா கண்ணீரு' என்ற நிலையை இன்று முதியவர்கள் பலரிடம் காண முடிகிறது.

  சிறப்பான வரிகளுடன் அருமையான விமர்சனம்..

  ReplyDelete
 3. ஒருவர் இல்லாவிடில் அதனால் உலகம் ஸ்தம்பித்து நின்றுவிடாது என்பதை தமிழ்மணிக்கு பதிலாக வேறு யாரோ பள்ளியின் மணியை அடிப்பதாக காட்டி நமக்கும் உணர்த்துகிறார் கதாசிரியர்.

  மாற்றுக்கணக்குக்கும் மணியடித்து ரசிக்கவைக்கும் அருமையான விமர்சனம்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி மேடம்.

   Delete
 4. எமது நான்கு கருத்துரைகளில் முதல் கருத்துரை
  ஒன்று காணவில்லை.

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி August 2, 2014 at 1:24 PM

   //எமது நான்கு கருத்துரைகளில் முதல் கருத்துரை
   ஒன்று காணவில்லை.//

   எனக்கு ஏதும் வந்து சேரவில்லை. தயவுசெய்து நம்புங்கோ.

   தயவுசெய்து மீண்டும் மீண்டும் அனுப்புங்கோ.

   அனுப்பும் முன்பு தயவுசெய்து [என்னைப்போல] சேமித்து வைத்துக்கொண்டு அனுப்புங்கோ, ப்ளீஸ்.

   பலரும் இதுபோலச் சொல்கிறார்கள். என்ன செய்வது என்றே புரியவில்லை. ஏதோ இடையில் கோளாறு நடக்கிறது என நினைக்கிறேன்.

   - VGK

   Delete
 5. திருமதி ராதாபாலு அவர்களுக்கும், திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. அவன் போட்ட கணக்கு சிறுகதைக்கு நடுவர் போட்ட கணக்காக என் விமர்சனத்துக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளதில் மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து களத்தில் இருக்கிறேன் என்பதான சாட்சி. இந்த மகிழ்வான தருணத்தில் எங்கள் திருமணநாள் வாழ்த்தையும் சேர்த்து வழங்கியுள்ள தங்களுக்கு என் அன்பான நன்றிகள் கோபு சார்.

  ReplyDelete
 7. என்னுடன் பரிசு பெற்றுள்ள திருமதி ராதாபாலு அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். முந்தைய பல் கதையோடு இந்தக் கதையைத் துவங்கி அழகாக விமர்சித்து நடிகர் திலகத்தின் பொருத்தமான பாடல் வரிகளோடு நிறைவு செய்தமை சிறப்பு.

  ReplyDelete
 8. எங்களை வாழ்த்திய வாழ்த்தும் அனைவருக்கும் அன்பான நன்றி.

  ReplyDelete
 9. //மனம் வெதும்பி வருந்திய தமிழ்மணி அடிக்க வேண்டிய மணியை யாரோ அடித்ததை, அவன் வளர்த்து ஆளாக்கிய பிள்ளையை வேறு யாரோ உரிமையுடன் சொந்தம் கொண்டாடப் போவதை உவமையாகச் சொல்லும் ஆசிரியரின் நயத்தைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.


  அவன் போட்ட கணக்கு..... மாசிலாமணி போட்டதா? அவன் மூலமாக இறைவன் போட்ட கணக்கா? கணக்கு வாத்தியாரின் கணக்கிலும் தவறு வருவதற்கு வாய்ப்பு உண்டு!// அருமையான வரிகள்! பரிசு பெற்ற திருமதி ராதாபாலு அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

  ReplyDelete
 10. //ஆசைகளும் கனவுகளும் நம்பிக்கையும் வைத்திருந்த மகன் இல்லாத வாழ்க்கையை அவரால் எப்படி தாங்கிக் கொள்ளமுடியும்? ஆனால் ஒருவர் இல்லாவிடில் அதனால் உலகம் ஸ்தம்பித்து நின்றுவிடாது என்பதை தமிழ்மணிக்கு பதிலாக வேறு யாரோ பள்ளியின் மணியை அடிப்பதாக காட்டி நமக்கும் உணர்த்துகிறார் கதாசிரியர்.
  // அருமை! பரிசுபெற்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!
  22வது திருமண நாள் காணவிருக்கும்
  திரு. மதிவாணன் - திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் பல்லாண்டு இன்புற்று வாழ எனது நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 11. சகோதரிகள் ராதாபாலு அவர்களுக்ம் கீதா மதிவாணன் அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
  திருமதிவாணன் திருமதி கீதா மதிவாணன் தம்பதியினர் பல்லாண்டு, வாழ வாழ்த்துகின்றேன்

  ReplyDelete
 12. http://geethamanjari.blogspot.in/2014/08/blog-post.html

  மேற்படி இணைப்பினில் திருமதி. கீதா மதிவாணன் [கீதமஞ்சரி] அவர்கள் ”மகிழ்வு தரும் அங்கீகாரங்கள்” என்ற தலைப்புக் கொடுத்து ஓர் தனிப்பதிவு வெளியிட்டுள்ளார்கள்.

  அதில் தனக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றியினையும் பற்றி சில செய்திகள் வெளியிட்டுள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் VGK

  ReplyDelete
 13. //ஒரு பல்லைப் பிடுங்கினாலே வலி உயிர் போய்விடும். இதில் 32 பல்லையும் ஒரே நேரத்தில் பிடுங்குவது என்றால்.... அவரது தாங்க முடியாத துக்கத்தை ஆசிரியர் பல் பிடுங்குவதை உதாரனமாக்கிச் சொல்வது வித்யாசமாக உள்ளது.// 32 மடங்கு வலி என்று விமர்சனத்தில் உணர்த்திய சகோதரி ராதா பாலு அவர்களுக்கும்,

  //ஆனால் ஒருவர் இல்லாவிடில் அதனால் உலகம் ஸ்தம்பித்து நின்றுவிடாது என்பதை தமிழ்மணிக்கு பதிலாக வேறு யாரோ பள்ளியின் மணியை அடிப்பதாக காட்டி நமக்கும் உணர்த்துகிறார் கதாசிரியர்.// “time and tide waits for none” என்று தனது விமர்சன வரிகள் வாயிலாக உணர்த்திய சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்! சிறப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
  சகோதரி ராதா பாலு ! பேத்தியின் போஸ்ஸ்ஸ்! சூப்ப்ப்பர்……!
  சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கும் துணைவருக்கும் எனது அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துகள்!
  கதைகளில் வெரைட்டி, உன்னத பாத்திரப்படைப்புகள் என்று திகட்டத்திகட்ட வாரி வழங்கும் VGK அவர்களின் கதைகளுக்கு விமர்சனமும் சிறப்பாகத்தானே இருக்கும்? எல்லாரும் சேர்ந்து – கலக்குங்க! தொடர வாழ்த்துக்கள்!!! என்றும் அன்புடன் MGR

  ReplyDelete
 14. ஹப்பா என்ன அழகான விமர்சனங்கள்!!! வெற்றி பெற்ற அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! போட்டி அறிவித்து எல்லோரையும் ஊக்குவிக்கும் வைகோ ஐயா அவர்களுக்கும் எங்கள் பாராட்டுக்கள்!

  ReplyDelete
 15. நிறைய நாட்களுக்கு பிறகு கிடைத்த பரிசு....மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. என் விமரிசனத்தை இரண்டாம் பரிசுக்கு தேர்ந்தெடுத்த நடுவருக்கும், பரிசுத்தொகையைக் கொடுக்கப் போகும் கதாசிரியருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

  என்னுடன் பரிசைப் பகிர்ந்து கொள்ளும் தோழி கீதாவுக்கு வாழ்த்துக்கள்.

  22 ஆண்டுகள் இல்லறத்தை இனிய அறமாக வாழ்ந்து copper anniversary யைக் கொண்டாடப் போகும் தோழி கீதா- மதிவாணன் தம்பதியர் எல்லா நலனும் பெற்று வாழ இனிய நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. என் விமரிசனத்தை படித்து, ரசித்துப் பாராட்டிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

  ReplyDelete
 17. http://enmanaoonjalil.blogspot.com/2014/08/blog-post_10.html
  திருமதி ராதாபாலு அவர்கள்.

  இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 18. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:

  -=-=-=-=-=-=-

  அவன் போட்ட கணக்கு:

  அம்மாடியோ..... கணக்கு வாத்தியார் போட்ட கணக்கு.... மணல்கயிறு விசு அவர்களையும், நம்ம விஜயகாந்த் அவர்களையும் கூட ஒரேயடியாத் தள்ளிப் போட்டுவிட்டது. அப்படி ஒரு துல்லியம்.

  எங்கிருந்து கண்டுபிடிச்சீங்க இப்படி ஒரு தனித்துவம் வாய்ந்த ஒரு கணக்குப் புலியை. நம்ப அரசியலுக்கும் இவர் தான் இப்போ அவசரத்தேவை.

  தமிழ்மணி, அவரது நம்பிக்கையின் பல்லை அவர் மகனே முதலில் பிடுங்கிய போது 'கணக்குத் தவறிப் போனதற்கு'.... ஆஹா..... கதையின் முடிவு நச்ச்ச்.....ன்னு கணக்கு வாத்தியார் தலையில் ஒன்று வைத்தது போல இருந்தது...!

  -=-=-=-=-=-=-

  இப்படிக்கு,
  தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

  ReplyDelete
 19. இரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி ராதாபாலு அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. பரிசு வென்ற திருமதிகள் ராதாபாலு,கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்

   Delete
 20. இரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி ராதாபாலு அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. பரிசு வென்ற திருமதி ராதாபாலு திருமதி கீதாமதிவாணனவங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 22. திருமதி ராதாபாலு திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள். இருவரின் விமரிசனமும் நல்லா இருக்கு. 22---வது திருமண நாள் காணும் தம்பதியருக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete