About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, August 15, 2014

VGK 31 - முதிர்ந்த பார்வைஇது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 21.08.2014

வியாழக்கிழமை


இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 


REFERENCE NUMBER:  VGK 31

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:

 ’முதிர்ந்த பார்வை ‘

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

 

[ 1 ]

அந்த முதியோர் இல்லத்தில் தன் தாய் தந்தையரை ஒப்படைத்து விட்டு வெளியே வந்த மணிகண்டனுக்கு கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோடியது. அவன் மனைவி கல்யாணி அவனை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள்.

“என்னங்க இது. நடுரோட்டில் இப்படி ஒரு ஆம்பளை அழலாமா? கண்ணைத் துடையுங்க முன்னாடி” என்று டவலை நீட்டினாள்.

மீண்டும் மீண்டும் அவனுக்குத் தன் மனைவி மீதுதான் ஒரு சந்தேகம். தான் ஆபீஸுக்குப் போனபின், தன் பெற்றோர்கள் மனம் புண்படும்படி ஏதாவது பேசி, தவறாக அவர்களுக்கு ஏதாவது மன வருத்தம் ஏற்படும்படி நடந்து கொண்டிருப்பாளோ! பலமுறை அது விஷயமாக அவளிடமே கேட்டும் அவளிடமிருந்து, எந்த ஒரு உண்மையையும் அவனால் வரவழைக்க முடியவில்லை.  

கல்யாணியும் மிகவும் நல்லவள் தான். கல்யாணம் ஆகி வந்த கடந்த நாலு வருடங்களில், மாமியார், மாமனார் இருவரையும் தன் சொந்தத் தாய் தந்தையைப் போலவே மிகவும் அன்புடனும், அனுசரணையாகவும், மரியாதையாகவும் தான் கவனித்துக்கொண்டு வருகிறாள் என்பதும் மணிகண்டனுக்குத் தெரியாதது அல்ல.

வீட்டுக்கு அன்று ஒரு நாள், ஜோஸ்யம் சொல்ல கேரள மந்திரவாதி போல ஒருவர் வந்தாராம். ”கூட்டுக் குடும்பமாக இருந்தால் உங்கள் இருவருக்குமே மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது. எவ்வளவு சீக்கரம் பிரிந்து செல்லுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது”,  என்று சொன்னாராம்.

ஜோஸ்யர் வந்து போன சமயம் மணிகண்டனும் வீட்டில் இல்லை. ரேஷன் கடைக்குப்போய் கும்பலில் நின்று பொருட்கள் வாங்கி வந்த அவன் மனைவி கல்யாணியும் வீட்டில் இருக்க முடியாமல் போய் விட்டது.

அந்த ஜோஸ்யர் எவரோ சொன்னதை வேத வாக்காக எடுத்துக்கொண்ட, தன் பெற்றோர்கள் இப்படிப் பிடிவாதமாக வீட்டை விட்டு, முதியோர் இல்லத்தில் தங்களைச் சேர்க்கச் சொல்லி வற்புறுத்துவார்கள், என்று கனவிலும் நினைக்காத மணிகண்டனுக்கு, வேறு எந்த வழியும் தெரியவில்லை.

பெற்றோருக்கு அவன் ஒரே பிள்ளையாகப் பிறந்து விட்டதால், அவனை விட்டு அவர்களை வேறு எங்கு தான் அனுப்ப முடியும் அவனால். மற்ற இந்தக்கால பிள்ளைகள் போலன்றி, மணிகண்டன் தன் தாய் தந்தை மேல் அளவுக்கதிகமான பாசம் வைத்துள்ளவன்.

அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வதிலோ, வசதிகள் செய்து கொடுப்பதிலோ மிகவும் கவனமாக அவர்கள் மனது கோணாமல் இருந்து வருபவன்.

“இவனைப் பெற்றெடுக்க இவன் தந்தை என்ன நோன்பு நூற்றாரோ” என மற்றவர்கள் பொறாமை கொள்வது போல நேற்று வரை போய்க்கொண்டிருந்த கூட்டுக்குடும்பம் அது. 

அவனுக்கு வாய்த்த மனைவி கல்யாணியும் நேற்று வரை அவ்வாறே மிகவும் நல்லவளாக எல்லோரையும் அனுசரித்துத்தான் இருந்து வந்திருக்கிறாள். இப்போது யார் கண்ணு பட்டதோ, இந்த தேவையில்லாத பிரிவு.

மணிகண்டன் தன் வருமானத்திற்குத் தகுந்தபடி அழகாகத் திட்டமிட்டு செலவுகள் செய்து, யாருக்கும் எந்த ஒரு குறையும் இன்றி குடும்பம் நடத்தி வருபவன். தன்னுடைய சிறுசேமிப்புக்களுடன், வங்கியொன்றில் லோன் வாங்கி சிறியதாக ஒரு வீடும் கட்டி, சிறப்பாக வாழ்ந்து வருபவன். 

தன் தந்தையின் சொற்ப ஓய்வூதியத்தையும் கூட, அவர் பெயரிலேயே வங்கியில் மாதாந்திர சேமிப்பாக இருக்கட்டும்; ஏதாவது எதிர்பாராத செலவுகள் வந்தால் எடுத்துக்கொள்ளலாம் என்று விட்டு வைத்திருப்பவன்.   

அழகிய வாட்டர் ஹீட்டருடன் கூடிய, வெஸ்டேர்ன் பாத்ரூம் அட்டாச்சிடு சிங்கிள் பெட்ரூமில், இரண்டு கட்டில்கள் போட்டு, ஏ.ஸீ. வசதிகள் செய்து கொடுத்து, பொழுதுபோக்குக்கு டீ.வி, பக்திப்பாடல் கேஸட்டுக்கள் செய்தித்தாள்கள், வார மாத இதழ்கள் எல்லாமே கொடுத்து, வெயிலோ, மழையோ, பனியோ, காற்றோ எந்தப்பருவ காலங்களிலும், தன் தாய் தந்தையர் உடல் நிலைக்கு எந்தப் பாதிப்பும் வராமல் கவனமாகப் பார்த்துக்கொண்டவன் தான்.

ஜோஸ்யர் யாரோ ஒருவர் வந்து திருஷ்டிப்பட்டது போல ஏதேதோ சொல்லி குருவிக்கூட்டைக் கலைத்து விட்டதில், மணிகண்டனுக்கு மிகவும் வருத்தம்.

யார் அந்த ஜோஸ்யர்? அவர் பெயர் என்ன? அவருக்கு வீடு எங்கே உள்ளது? அவரின் விலாசம் என்ன? என்று கேட்டால் வயதான இவர்கள் இருவருக்கும் சொல்லத்தெரியவில்லை. 

”அவர் ஏதோ கேரளாவிலிருந்து புறப்பட்டு ஊர் ஊராகச் செல்பவர் என்றும், குருவாயூரப்பன் சொப்பனத்தில் வந்து சொன்னபடி நம் வீடு தேடி வந்து, வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டு, நமக்கு நல்லது தான் செய்து விட்டுப்போய் இருக்கிறார்”,  என்றும் திருப்பித்திருப்பி சொல்லி வருகின்றனர்.

இன்னும் ஒரு வருடத்திற்கு குருப்பெயர்ச்சி முடியும் வரை தான் இந்தப் பிரச்சனையாம். பிறகு பழையபடி கூட்டுக் குடும்பமாகவே வாழலாம் என்றும் அந்த ஜோஸ்யர் சொல்லியிருப்பதாகச் சொன்னதனால், மனது சற்றே சமாதானம் ஆனது மணிகண்டனுக்கு.

நடந்த கதைகளையெல்லாம் கேள்விப்பட்ட கல்யாணியின் பெற்றோர்களுக்கும், கல்யாணி மேல் ரொம்பவும் கோபமாக வந்தது. 

வயதான காலத்தில், நல்ல நடமாட்டத்துடன், தங்களால் முடிந்த சரீர ஒத்தாசைகள் செய்துகொடுத்துக்கொண்டு, தன் மகளுக்கும் ஒரு நல்ல பாதுகாப்பாக இருந்து வந்த தம்பதியை, சின்னஞ்சிறுசாகிய தன் மகள், இவ்வாறு முதியோர் இல்லத்திற்கு அனுப்பியுள்ளதை கேள்விப்பட்ட அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. 

கல்யாணி இங்கு நடந்த விஷயங்களைத் தனக்குத் தெரிந்தவரை விபரமாக எடுத்துக்கூறியும், தான் எந்தத்தவறும் செய்யவில்லை என்று சமாதானம் சொல்லியும், சம்பந்தி மேல் உள்ள அன்பினாலும், அவர்கள் இது நாள் வரை தங்களிடம் நடந்து கொண்ட பண்பினாலும், தங்கள் மகள் கல்யாணி சொல்வது எதையுமே நம்பாமலும், ஏற்றுக்கொள்ளாமலும் மறுத்து விட்டனர்.    

மேலும் “இனி உன் மாமியார், மாமனார் இருவரும் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்பி எப்போது திரும்பி வருகிறார்களோ, அப்போது தான் உன்னைப் பார்க்க நாங்கள் உங்கள் வீட்டுக்கு வருவோம்”  என்றும் சொல்லி விட்டனர்.

தொடரும் 

 


[ 2 ]இப்படியாக மணிகண்டனும் கல்யாணியும் தனிக்குடித்தனம் செய்ய ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. 

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அவர்கள் இருவரும், அந்த வயதான பெரியவர்களுக்குப் பிடித்தமான பலகாரங்களுடன், முதியோர் இல்லம் சென்று, அவர்களுடன் நெடுநேரம் பேசிவிட்டு, விடைபெறும் முன் அவர்களை நமஸ்கரித்து ஆசி வாங்கிவரத் தவறுவதில்லை. 

இசைப்பிரியரான மணிகண்டனின் தாய், அடுத்தமுறை தன்னைப்பார்க்க வரும்போது, தன் வீட்டிலுள்ள பழைய வீணையை மட்டும் தன்னிடம் கொண்டுவந்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாள்.  ஏதோ வேறு வழி தெரியாமல் புறப்பட்டு வந்து விட்டார்களே தவிர, குடும்பத்தை விட்டு, முதியோர் இல்லத்தில் சேர்ந்த அவர்களுக்கு ஒவ்வொரு நாள் போவதும் ஒரு யுகமாகவே தோன்றியது.  

”மணிகண்டன் என்ன செய்கிறானோ, எப்படி இருக்கிறானோ; பாவம் கல்யாணி வீட்டில் தனியாக இருந்து, எல்லா வேலைகளையும் ஒண்டியாகவே செய்து  என்ன கஷ்டப்படுகிறாளோ” என்ற நினைவுடனே இருந்து வந்தனர்.

நேரம் தவறாமல் வாய்க்கு ருசியாக சமையல் செய்துபோட்டு வந்த தங்கள் மருமகள் கல்யாணியை நினைத்து அவ்வப்போது கண் கலங்கி வந்தனர். 

ஏதோ ஒரு ஆத்ம திருப்திக்கு, அந்தத்தாய்க்கு, தான் என்றோ கற்ற வீணை இப்போது தேவைப்படுகிறது. 

வீணாக இங்கு உட்கார்ந்திருக்கும் நேரத்தில் வீணையையாவது மீட்டு, மனச்சாந்தி அடையலாமோ! என்ற ஒரு சிறு ஏக்கம், அந்த அம்மாளுக்கு. 

இது இவ்வாறு இருக்க, அக்கம் பக்கத்தில் உள்ள பெண்மணிகள், ஜாடைமாடையாக “இருந்தால் நம் கல்யாணி மாதிரி அதிர்ஷ்டமாக இருக்கணும்; வந்து நாலே வருஷத்தில், அப்பா அம்மாவின் செல்லப்பிள்ளையாண்டானாக இருந்த மணிகண்டனை அடியோடு மாற்றி, அவர்கள் இருவரையும் பேயோட்டுவது போல, வீட்டைவிட்டுத் துரத்தி விட்டு, ஜாலியாக இருக்கிறாள், பாரு; நம்ம எல்லோருக்கும் இதுபோல ஒரு அதிர்ஷ்டம் அடிக்குமா என்ன? எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பிணை வேண்டுமோல்யோ!” என்று பேசிக்கொள்வதைக் கேட்க கல்யாணிக்கு மனம் வேதனைப்பட்டு வந்தது. 

ஊர் வாயை மூடமுடியுமா என்ன? எல்லாம் நம் தலையெழுத்து என்று பேசாமலேயே இருந்து விட்டாள்.

ஒண்டியாகவே வீட்டுக்காரியங்கள் எல்லாவற்றையும் பார்த்து வந்த கல்யாணியின் உடம்பு சற்று இளைப்பாகவும், களைப்பாகவும் மாறத்தொடங்கியது. தலை சுற்றல், வாந்தி என அவதிப்பட்டவளை, மணிகண்டன் டாக்டரம்மாவிடம் கூட்டிச்சென்றான். 

எல்லாவித டெஸ்ட்களும் செய்த டாக்டரம்மா, அவள் கருவுற்றிருப்பதாகவும், இரட்டைக் குழந்தைகள் பிறக்கப்போவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிவதாகவும், அடுத்த மாத டெஸ்ட்டுக்கு வரும்போது அதை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்து விட்டு, கல்யாணியின் உடம்பை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகள் கூறிவிட்டு, ஒருசில மாத்திரைகளும், டானிக்கும் வாங்கி சாப்பிடும்படி சீட்டு எழுதிக்கொடுத்தார்கள்.   

டாக்டர் சொன்னதைக்கேட்ட மணிகண்டன் கல்யாணியைக் கூட்டிக்கொண்டு, நேராக முதியோர் இல்லத்திற்குச் சென்று, தன் தாய் தந்தையரிடம், டாக்டரம்மா சொன்ன விஷயங்களைத் தெரிவித்து விட்டு, இந்த நேரத்தில் அவளை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்? அவளுக்கு உதவிகள் செய்ய தன் மாமியாரையோ அல்லது மச்சினியையோ வரவழைக்க வேண்டுமா? என பல்வேறு சந்தேகங்களைத் தன் தாயிடம் கேட்கலானான். 

தங்களுக்கு பேரன்களோ, பேத்திகளோ அல்லது இரண்டுமோ பிறக்க இருக்கும் இனிப்பான சமாசாரத்தைக் கேள்விப்பட்ட, அந்த வயதான இருவரும், மிகவும் சந்தோஷப்பட்டு, வாழ்த்தினர்.

“இந்த சந்தோஷமான நேரத்தில் வயதான நீங்கள் இருவரும் வீட்டில் இருந்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்! ஜோஸ்யர் சொன்ன ஒரு வருடத்திற்கு இன்னும் பத்து மாதங்கள் இருக்கின்றதே; அதற்குள் பிரஸவ நேரமும் நெருங்கி விடலாம்; அல்லது பிரஸவமே கூட நிகழ்ந்து விடலாம்! யார் தான் வந்து எங்களுக்கு உதவப்போகிறார்களோ” என்று கணவன் மனைவி இருவரும் கண் கலங்கியபடி கூறினார்கள்.

மணிகண்டனின் தாயும் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர். பிறகு அவர்களுக்குள் தனியாகப்பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

“டேய் ... மணிகண்டா, வருவது வரட்டும்டா, நீ போய் ஒரு டாக்ஸி கூட்டிக்கொண்டு வா. நாங்கள் இருவரும் இப்போதே உங்களுடன் வீட்டுக்கு வந்து விடுகிறோம்; இதுபோன்ற நேரத்தில் கல்யாணிக்கு போஷாக்கான ஆகாரங்கள் நிறைய கொடுத்து, அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கச்சொல்லி கவனமாகப் பார்த்துக்கொள்ளணும்”  என்றார் மணிகண்டனின் தந்தை. 

கல்யாணியின் தலையைக் கோதிக் கொடுத்துக் கொண்டே மணிகண்டனின் தாயும் அதை அப்படியே ஆமோதித்தாள்.

“ஜோஸ்யர் சொன்னபடி, குருப்பெயர்ச்சி முடியும் முன்பு, நாம் எல்லோரும் சேர்ந்திருந்தால், ஒரு வேளை யாருக்காவது ஏதாவது ஆபத்து வருமோ?” என்று கவலையுடன் வினவினான், மணிகண்டன்.

“அதுபோல எதுவும் ஏற்படாதுடா; அதற்கும் ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார் அந்த ஜோஸ்யர்” என்றார் மணிகண்டனின் தந்தை.

“அப்படியா! அது என்னப்பா .... பரிகாரம்; நீங்க எங்களிடம் சொல்லவே இல்லையே” ஆச்சர்யத்துடன் கேட்டனர், மணிகண்டனும் கல்யாணியும். 

“குருப்பெயர்ச்சி முடிந்த ஒரு மூன்று மாதத்திற்குள், பேரனையோ அல்லது பேத்தியையோ அழைத்துக்கொண்டு, குருவாயூரப்பன் கோயிலுக்குப்போய் துலாபாரம் கொடுக்கணுமாம்; அதுபோல வேண்டிக்கொள்ளணுமாம்.  அது தான் அந்தப்பரிகாரம்;

நமக்குத்தான் பேரனோ அல்லது பேத்தியோ இதுவரை கடந்த நாலு வருஷமாகப் பிறக்காமலேயே உள்ளதே; எப்படி அந்த ஜோஸ்யர் சொன்னப் பரிகாரத்தை நம்மால் செய்ய முடியும் என்று தான், நாங்கள் முதியோர் இல்லம் போவதென்று முடிவெடுத்தோம்;

இப்போது தான் பேரனோ அல்லது பேத்தியோ பிறக்கப்போவதாக டாக்டரம்மாவே சொல்லி விட்டார்களே; குழந்தைகளை அழைத்துப்போய் துலாபாரம் கொடுத்து விட்டால் போச்சு! எல்லாம் அந்த குருவாயூரப்பன் செயல்!; அந்த குருவாயூரப்பன் மேலேயே பாரத்தைப்போட்டு விட்டு, நாம் வீட்டுக்குப்போய் ஆக வேண்டியதைப் பார்ப்போம்”  என்றனர் மணிகண்டனின் அப்பாவும், அம்மாவும்.
திருமணம் ஆகி, நான்கு வருடங்கள் ஆகியும், இதுவரை தங்கள் மருமகளுக்கு தாய்மை அடையும் பாக்யம் இல்லாமல் தட்டிப்போய் வருகிறதே! தன் மகன் கட்டியுள்ள சிறிய சிங்கிள் பெட்ரூம் வீட்டில், கணவனும் மனைவியும் தனிமையில் சந்தோஷமாக இருந்தால் தான் தங்களுக்குப் பேரனோ அல்லது பேத்தியோ பிறக்கக்கூடும். அதற்கு தாங்கள் எந்தவிதத்திலும் ஒரு இடையூறாக இருக்கவே கூடாது, என்று நினைத்து அவர்கள் இருவரும் நடத்திய நாடகமே, நடுவில் குருவாயூரிலிருந்து ஜோஸ்யர் ஒருவர் வந்து போனது என்ற கற்பனைக்கதை.

ஆனாலும் இந்த உண்மையான கதை, அந்த இரு வயதானவர்களையும், அந்த குருவாயூரப்பனையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.


[ஆனால் இப்போது உங்கள் எல்லோருக்குமே 
இந்த விஷயம் தெரிந்து விட்டதே ..... ! அடடா !!

ஹே! குருவாயூரப்பா  !

நீ தான் என்னைக் காத்தருள வேண்டும்!!]       

oooooOooooo


      அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்  

    

 நினைவூட்டுகிறோம் !

 

சிறுகதை விமர்சனப்போட்டியின்
நடுவர் யார் ?

VGK-31 To VGK-34 ஆகிய நான்கு கதைகளில்
ஏதாவது ஒன்றுக்காவது விமர்சனம் 
எழுதி அனுப்புபவர்கள் மட்டுமே 
இந்தப்போட்டியில் கலந்துகொள்ள முடியும்.

போட்டியில் கலந்து கொள்ள மறவாதீர்கள்.

மேற்படி போட்டியின் இதர
நிபந்தனைகள் காண இதோ இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/06/blog-post.html
    


 VGK-29 
 அட்டெண்டர் ஆறுமுகம்  


 

 


 சிறுகதை விமர்சனப்போட்டி முடிவுகள்
வழக்கம்போல் நாளை சனி / ஞாயிறு / திங்களுக்குள்
வெளியிடப்படும்.
காணத்தவறாதீர்கள்.

ஒவ்வொருவாரப் போட்டிகளிலும்

கலந்துகொள்ள மறவாதீர்கள்.

என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்29 comments:

 1. இனிய சுதந்திரத்திருநாள் வாழ்த்துகள்..!

  இனிய செய்தியாக
  இரட்டைக்குழந்தைகளுடன் கதையை நிறைவடையச்செய்த குருவாயூரப்பனுக்கு நன்றிகள்..!

  ReplyDelete
 2. எண்ட குருவாயூரப்பா....ஏனிந்த சோதனை!

  ReplyDelete
 3. சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 4. அனைவரும் நல்லவர்கள்....ஆகா...அருமை....

  ReplyDelete
 5. ஆஹா என்ன அருமையான கதை! கல்யாணி கருவுற்றிருக்கின்றாள் என்ற வரி படித்ததுமே எதற்காக வயதானவர்கள் முதியோர் இல்லம் சென்றனர் என்று யூகிக்க முடிந்து விட்டது....ஆனாலும் மிகவும் நல்ல கதை...அதுவும் முடிவு! இரட்டைக் குழந்தைகள்! சூப்பர்!

  கீதா: சார், மிக்க நன்றி! எனது குருவான அபூர்வ இசைக் கருவி ஜலதரங்க வித்வான் திருமதி சீதாலக்ஷ்மி துரைசாமி அம்மாளின் படத்தைப் போட்டதற்கு....அவரிடம் வாய்ப்பாட்டு ஒரு வருடம் கற்றுக் கொண்டேன். பின்னர் அவர் கணவர் இறந்த பிறகு, அவரது அடையார் வீடு விற்கப்பட்டு இப்போது இடிக்கப்பட்டு கட்டுமானப் பணிகளில் இருக்கின்றது. அவர் எங்கு இருக்கின்றார் என்று தெரியவில்லை. அவரது குடும்பம் பெரிது. அவர் எந்த மகனிடம், மகளிடம் இருகின்றார் என்று தெரியவில்லை....மிக அருமையான கலைஞர். மிக நல்ல மனதுடையவர். அன்பு என்றால் அப்படி. அவர் சிரித்துதான் பார்த்திருக்கின்றேன். தெய்வீகம் தவழும், பாசிட்டிவ் முகம். நல்ல ஞானம் உள்ளவர். நல்ல குரு!

  சமீபத்தில் வந்த திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் வரும் அமீர்கல்யாணி ராகத்தில் அமைந்த பாடலில் வரும் அந்தக் காட்சியில் இவர் ஜலதரங்கம் வாசிப்பது போன்ற காட்சி வரும். அதில் அவர் தற்போது உள்ள தோற்றம். அதைப் பார்த்து பின் இப்போது தங்கள் வலைத் தளத்திலும் பார்த்தால் இது நான் அவரிடம் 7 வருடங்களுக்கு முன் இசை கற்ற பொது இருந்த தோற்றம். அவரது கணவர் இறக்கும் முன்.....
  மிக்க நன்றி சார்!

  ReplyDelete
 6. சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள் சார். வலைச்சரத்தில் கண்டேன்.

  ReplyDelete
 7. தாங்கள் தனியாக முதியோர் இல்லத்தில் இருந்தாலும் பரவாயில்லை. பிள்ளையும் மருமகளும் சுதந்திரமாக இருந்து
  குழந்தை பாக்கியம் பெறவேன்டும் என்று கபட நாடகம் ஆடிய அந்த பெற்றோர்களின் உள்ளம் இமயமலையை விட உயர்ந்தது. அதற்குப் பரிசாகத்தான் அருள்மிகு குருவாயுரப்பன் தம்பதிகளு க்கு இரட்டை குழந்தைகளை கொடுத்துள்ளார்.

  ReplyDelete
 8. அருமையான கதை.
  குருவாயூர் கண்ணன் அருளால் இரட்டை குழந்தைகள் வந்து தாத்தா, பாட்டியை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டது. மகிழ்ச்சி.

  ReplyDelete
 9. இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. 'நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்' என்பார்கள்.
  அதன்படி, நாடகமாடிய நல்லுள்ளங்கள், மணிகண்டனின் பெற்றோரின் ஆசை நிறைவேறியதே! பெரு மகிழ்ச்சி!!

  ReplyDelete
 11. //நான்கு கதைகளில்
  ஏதாவது ஒன்றுக்கு விமர்சனம்
  எழுதி அனுப்புபவர்கள் மட்டுமே //

  2 கதைகளுக்கு விமர்சனம் எழுதுபவர்கள் அல்லது

  3 கதைகளுக்கு விமர்சனம் எழுதுபவர்கள் அல்லது

  4கதைகளுக்கும் விமர்சனம் எழுதுபவர்கள்

  யாரும் இதில் கலந்துகொள்ள முடியாது' என்பது போல ஓர் அர்த்தம் வருகின்றதே!

  ReplyDelete
  Replies
  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் August 15, 2014 at 9:39 PM

   வாருங்கள் என் இனிய நண்பரே ! வணக்கம்.

   ’ஒன்றுக்கு’ என்ற வார்த்தையை ’ஒன்றுக்காவது’ என இப்போது மாற்றிவிட்டேன். இதனைக் குறிப்பிட்டு என் கவனத்திற்கு கொண்டுவந்து சுட்டிக்காட்டியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. தங்களுக்கு என் இனிய அன்பு நன்றிகள். எல்லாம் தாங்கள் அடிக்கடி என்னிடம் சொல்வதுபோல இறை நாட்டப்படியே நடக்கின்றன. மகிழ்ச்சி. அன்புடன் VGK

   Delete
 12. சிறுகதை அருமை ஐயா...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. 3 ஆம் பரிசு வென்ற திரு சீனா ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. அன்பின் துளசி தரன் - வாழ்த்தினிற்கு மிக்க நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 15. சிங்கிள் பெட்ரூமில் தாய், தந்தையருக்கு வசதி என்பதைப் படித்ததுமே முதியோர் இல்லத்துக்குச் சென்றதன் காரணம் புரிந்து விட்டது. அருமையான கதைக்கு நன்றி.

  ReplyDelete
 16. இரட்டை குழந்தைகளைத் தந்த குருவாயூரப்பன்..... நல்லதொரு கதை. பாராட்டுகள் சார்.

  ReplyDelete
 17. பெரிசுகள் போட்ட டிராமாவினால் அந்த வீட்டில் குழந்தைகளின் ரகளை ஆரம்பமாகப் போகிறது.

  ReplyDelete
 18. கதை நல்லா இருக்கு. (என்ஜாயடு வெரிமச். வெல்கம்:)))))))))) ).

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் September 5, 2015 at 11:58 AM

   வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

   //கதை நல்லா இருக்கு. //

   மிகவும் சந்தோஷம்.

   //என்ஜாய்டு வெரிமச். வெல்கம் :)))))))))) //

   இன்று கோகுலாஷ்டமி. ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த நாள்.

   ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் யாவுமே நமக்கு வெரிமச் எஞ்சாயபிள் ஆகத்தான் இருக்கும்.

   தங்களுக்கு கோபாலகிருஷ்ணனின் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.

   இன்று நம் ஆத்துக்கு வந்தால் உப்புச்சீடை, வெல்லச்சீடை, முறுக்கு, தட்டை, தேன்குழல், ஓமப்பொடி, வெண்ணெய் என எல்லாமே சாப்பிட்டுப்போகலாம்.

   :) WELCOME :)

   கோகுலாஷ்டமியன்று குருவாயூரப்பனை இந்தப்பதிவினில் தரிஸித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

   அன்பான வருகைக்கும், அழகான வெரிமச் எஞ்சாயபிள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   பிரியமுள்ள கோபு

   Delete
 19. // ஆனாலும் இந்த உண்மையான கதை, அந்த இரு வயதானவர்களையும், அந்த குருவாயூரப்பனையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.//

  NEGATIVE விஷயத்தையும் POSITIVE ஆக காட்ட உங்களால் மட்டும்தான் முடியும்.

  ReplyDelete
 20. என்னா அம்மி இன்னா வாப்பா. யாரோசோசியக்காரங்க சொன்னத கேட்டுபிட்டு இப்பூடில்லா பண்ணுறாக. எது எப்படியோ பேரப்புள்ளிங்க வந்திச்சே.

  ReplyDelete
 21. ஜோசியம் ஜாதகம் மக்கள் வாழ்வுடன் எப்படி எல்லாம் விளையாடுகிறது. நம்புகிறவர்கள் இருக்கும்வரை. இதிலெல்லாம் எந்த மாற்றமும் ஏற்படாது. முடிவு நல்லா இருக்கு.

  ReplyDelete
 22. அக்கறையை மறைமுகமாக வெளிப்படுத்தும் அருமையான கதை. நன்றி.

  ReplyDelete
 23. பெற்றோரின் மனபாரத்தையும், மகனின் மனபாரத்தையும், மருமகளின் மனபாரத்தையும், சம்பந்தி வீட்டாரின் மனபாரத்தையும் நீக்கவே கல்யாணியின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகளின் பாரமோ? இந்த பாரம் மகிழ்ந்து சுமக்கும் பாரம் அல்லவா! அனைவரின் பாரத்தையும் நீக்கிய குருவாயூரப்பனுக்கு துலாபாரம் என்பது துல்லியமான ஒரு முடிவு. அதையும் ஜோசியனே சொல்லிச் சென்றதாகக் காண்பித்ததும் அருமை.

  “என்ன பிள்ளை பெற்றாளோ? என்ன பெயர் வைத்தாளோ?” எனும் கேள்வியை நம்முள் எழுப்பி விடையறியுமுன்னே கதை முடிந்துவிடுகிறது.  “பார்வை ஒன்றே போதுமே” என நான் பாடி விடைபெறும் வேளையில் என் பார்வையில், கண்ணீரில் துவங்கி, களிப்பில் முடியும் வண்ணம் கதைபடைத்த ஆசிரியர் ஒரு மிகச்சிறந்த படைப்பாளியாகத் தோன்றுகிறார். அவருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. My Dear Mr. Seshadri Sir,

   வாங்கோ, வணக்கம்.

   கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.

   //அனைவரின் பாரத்தையும் நீக்கிய குருவாயூரப்பனுக்கு துலாபாரம் என்பது துல்லியமான ஒரு முடிவு. அதையும் ஜோசியனே சொல்லிச் சென்றதாகக் காண்பித்ததும் அருமை.//

   //“பார்வை ஒன்றே போதுமே” என நான் பாடி விடைபெறும் வேளையில் என் பார்வையில், கண்ணீரில் துவங்கி, களிப்பில் முடியும் வண்ணம் கதைபடைத்த ஆசிரியர் ஒரு மிகச்சிறந்த படைப்பாளியாகத் தோன்றுகிறார்.//

   மிக்க மகிழ்ச்சி :)

   தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 24. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 43 + 46 = 89

  அதற்கான இணைப்புகள் (பகுதி-1 + பகுதி-2):

  http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2.html

  http://gopu1949.blogspot.in/2011/09/2-of-2_05.html

  ReplyDelete
 25. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

  முதல் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/09/vgk-31-01-03-first-prize-winners.html

  இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/08/vgk-31-02-03-second-prize-winners.html

  மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
  http://gopu1949.blogspot.in/2014/08/vgk-31-03-03-third-prize-winner.html

  சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

  ReplyDelete
 26. சிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார் என்பது பற்றிய முழு விபரங்களும், ’நடுவர் யார் யூகியுங்கள் போட்டி’யில் வெற்றி கிட்டி பரிசுக்குத் தேர்வானவர்கள் யார்-யார் என்பது பற்றியும் அறிய இதோ இணைப்பு:

  https://gopu1949.blogspot.in/2014/09/blog-post_13.html

  ReplyDelete