About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, September 13, 2014

சிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார்? சரியாக யூகித்து பரிசு பெறுபவர்கள் பட்டியல்.


சிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார்?  


திரை விலகுகிறது !

 
 
யாரோ இவர் யாரோ? வுக்கான விடை இதோ

                                                
 நடுவர் அவர்கள்

 திரு. ஜி. வெங்கட்ராமன் [ஜீவி]

GANESAN  VENKATARAMAN ]

[ வயது?  சட்டையில் காணப்படுகிறதே! ]

அனைவராலும் அன்புடன் 

ஜீவி [ Jeevee ]

என்று அழைக்கப்படுவர்.

வலைத்தளம்: 

 'பூ ம்

  

வலைத்தள முகவரி:  

சென்னையில் வசிப்பவர்.

[ஆனால் தற்சமயம் அமெரிக்காவில் !]
இவரைப்பற்றி இவரே தன் வலைத்தளத்தில் கூறியுள்ளது:

சின்ன வயதிலிருந்தே பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டு இன்று வரைத் தொடர்கிறது. விதம் விதமாகக் கதை சொல்லும் பாணிக்கும், எழுத்து நடைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அத்தனை எழுத்தாளர்களையும் பிடிக்கும். இவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று இன்றும் நினைப்பவன். 'ஜீவி' எனும் புனைப்பெயர் எழுதுவதற்காக என்றாலும், நண்பர்கள் மத்தியில் 'ஜீவி' என்றால் தான் சட்டென்று புரியும்.உயர்திரு நடுவர் 

  ஜீவி 

ஐயா அவர்களை

வருக ! வருக !! வருக !!!

என்று இருகரம் கூப்பி 
அன்புடன் வரவேற்கிறோம் !
  

 சிறுகதை விமர்சனப் போட்டிக்கு
நடுவர் யார்? - யூகியுங்கள்’

போட்டியில் மிகச்சரியான 
விடையை யூகித்து எழுதியுள்ளவர்கள் 

நால்வர் மட்டுமே.

    

1. திருமதி. 

 கீதா சாம்பசிவம்  

அவர்கள்

 வலைத்தளம்: எண்ணங்கள் 

sivamgss.blogspot.com  

2.  திருமதி. 

 இராஜராஜேஸ்வரி  

அவர்கள் 

  வலைத்தளம்: "மணிராஜ்"  
  

3.  திரு. 

 அப்பாதுரை  

அவர்கள்

வலைத்தளம்: மூன்றாம் சுழி   
http://moonramsuzhi.blogspot.com

  

4. திருமதி. 

 கீதா மதிவாணன்  

அவர்கள்

வலைத்தளம்: கீதமஞ்சரி  இந்தப்போட்டியில் வெற்றி பெற்றுள்ள 
இவர்கள் நால்வருக்கும்
நம் மனமார்ந்த பாராட்டுக்கள் + 
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


இந்தப்போட்டிக்கான மொத்தப் பரிசுத்தொகை
இவர்களுக்கு சரிசமமாகப் பிரித்து அளிக்கப்பட உள்ளது. 
இந்தப்போட்டியில் ஆர்வத்துடன் 
பங்குகொண்டு சிறப்பித்த அனைவருக்கும்
என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.    ’VGK-33 எல்லோருக்கும் பெய்யும் மழை’ 


சிறுகதை விமர்சனப்போட்டிக்கான
பரிசு முடிவுகள் நாளை ஞாயிறு  / திங்களுக்குள் 
வெளியிடப்பட உள்ளன.

காணத்தவறாதீர்கள்.


    

இந்த வாரப் போட்டிக்கான இணைப்பு:


கதையின் தலைப்பு:

 'VGK-35 பூபாலன்'  

விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள் 
வரும் வியாழக்கிழமை 18.09.2014 
இந்திய நேரம் இரவு 8 மணிக்குள்.

போட்டியில் கலந்துகொள்ள
மறவாதீர்கள்என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

51 comments:

 1. நான் யூகித்தது சரி தான்....

  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. பங்கு பெற்ற அனைவருக்கும், பரிசைப் பகிர்ந்து கொண்ட ராஜராஜேஸ்வரி, அப்பாதுரை, கீதா மதிவாணன் ஆகியோருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. நடுவர் யார் என்பதை சரியாக சொல்லி வெற்றி பெற்ற நால்வருக்கும் வாழ்த்துக்கள்.

  இந்த நால்வரையும் பாராட்டி அவர்களின் திறமைகளை சொல்லிய விதம், அவர்களை மேலும் அருமையாக எழுத அளித்த குறிப்புகள் எல்லாம் அவரை அடையாளம் காட்டிவிட்டது.

  நடுவர் அவர்களை நானும் இருகரம் கூப்பி வணங்குகிறேன்.
  அருமையான விமர்சகர். பாசாங்கு இல்லாமல் மனதில் பட்டதை சொல்லி பாராட்டவும் செய்வார். பின்னூட்டங்கள் மூலம் மேலும் எழுத ஊக்கம் அளிப்பார் உங்களை போலவே.

  நடுவர் அவர்களை அருமையாக தேர்ந்து எடுத்து பொறுப்பை கொடுத்தமைக்கு உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  பூவனத்தில் வெகு நாட்களாக காணவில்லை என்ற போது முதலில் வெளிநாடு போய் இருப்பார்கள் என்று நினைத்து இருந்தேன். நடுவர் அவர்கள் விமர்சனம் செய்தவர்களைப்பற்றி கருத்து சொன்ன போதே தெரிந்து விட்டது. ஜீவி சார் தான் என்று.
  அப்புறம் ஒருமுறை எப்படி கதை விமர்சனம் செய்ய வேண்டும் என்று நடுவர் அவர்கள் சொன்ன போதும் அது ஜீவி சாராய் இருப்பார் என்று தோன்றியது.

  ஒரு முறை ஜீவி சார் வெற்றி பெற்றவர்களை பாராட்டிவிட்டு புதியவர்கள் கதை விமர்சனத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று பின்னூட்டம் அளித்து இருந்தார் .

  நல்ல எழுத்தாளர், நல்ல விமர்சகர். நடுவர் பதவிக்கு ஏற்றவர்.
  நடுவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு September 13, 2014 at 6:50 AM

   வாங்கோ, வணக்கம்.

   //நடுவர் அவர்களை அருமையாக தேர்ந்து எடுத்து பொறுப்பை கொடுத்தமைக்கு உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.//

   சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான மிக நீண்ட இனிமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு [VGK]

   Delete
 4. திறமை மிக்க பங்களிப்பை அளித்து
  சிறுகதை விமர்சனப்போட்டிக்கு ஜீவனுள்ளதாக
  சிறப்பிக்கும் ந்டுவர் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..
  பாராட்டுக்கள்.!

  ReplyDelete
 5. போட்டியில் மிகச்சரியான
  விடையை யூகித்து எழுதியுள்ளவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. ஜீவி ஸார்... கலக்கிட்டீங்க... புகைப்படம் ஜோர்.

  வைகோ ஸார்... ஒரு திருவிழாவை இவ்வளவு சிறப்பாக நடத்த முடியுமா? தொப்பியை இறக்கி கைதட்டல்கள், கை குலுக்கல்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். September 13, 2014 at 10:05 AM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   //வைகோ ஸார்... ஒரு திருவிழாவை இவ்வளவு சிறப்பாக நடத்த முடியுமா?//

   இந்தத்திருவிழா ஸ்ரீராமர் க்ருபையால் மட்டுமே இனிதே இவ்வளவு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது, ஸ்ரீராம்.

   கோபண்ணா என்று அழைக்கப்பட்ட ராமதாஸர் சரித்திரம் படித்திருப்பீர்களே ! பல்வேறு கஷ்டங்கள் பட்டும், வீண்பழி சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைகள் அனுபவித்தும், மிகத்தீவிரமான தன் ஸ்ரீராம பக்தியினால் அனைத்தையும் தாங்கிக்கொண்டு, பத்ராசலத்தில் ஸ்ரீராமருக்கு கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்த பெருமை போலவே இதெல்லாம் ஏதோ தெய்வானுக்கிரஹத்தில் மட்டுமே இவ்வளவு சிறப்பாக நடந்து வருவதாக நான் உணர்கிறேன்.

   ஸ்ரீராமன் என்னை இதற்கு ஓர் கருவியாக உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார் என்பதைத்தவிர வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை, ஸ்ரீராம்.

   //தொப்பியை இறக்கி கைதட்டல்கள், கை குலுக்கல்கள்...//

   ஆஹா, இன்று தங்கள் மூலம் Hats off ! என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கத்தினைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன். மிக்க மகிழ்ச்சி, ஸ்ரீராம்.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஸ்ரீராம்.

   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   அன்புடன் கோபு [VGK]

   Delete
 7. வாழ்த்துகள் கோபு சார்.சரியான நபரைத்தான் சொல்லி இருக்கிறீர்கள். நறுக் எனும் வார்த்தைதான் ஜிவி அவர்களை நினைக்கும்போது வருவது.,அப்புறம் நியாயாதிபதி பதிவுக்கு வேறு யார் இருக்கமுடியும். ஜீவி சாருக்கும் வணக்கங்கள்.வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வல்லிசிம்ஹன் September 13, 2014 at 10:15 AM

   வாங்கோ, நமஸ்காரங்கள், வணக்கம்.

   //வாழ்த்துகள் கோபு சார். சரியான நபரைத்தான் சொல்லி இருக்கிறீர்கள். நறுக் எனும் வார்த்தைதான் ஜிவி அவர்களை நினைக்கும்போது வருவது. அப்புறம் நியாயாதிபதி ப த வி க்கு வேறு யார் இருக்கமுடியும்.//

   ’நியாயாதிபதி’ என்ற தங்களின் சொல் என்னை அப்படியேச் சொக்குப்பொடி போட்டதுபோலச் சொக்க வைக்கிறதே ! :)

   ஏதோ நான் செய்த பாக்யம் திரு. ஜீவி அவர்கள் இந்தப் பொறுப்பினை என் மேல் அவருக்கு உள்ளதோர் தனிப் பிரியத்தினால் மட்டுமே ஏற்றது.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, மேடம்.

   அன்புள்ள கோபு [VGK]

   Delete
 8. அன்பின் வை.கோ - அருமையான நடுவரைத் தேர்ந்தெடுத்து - அவரும் நடுவர் பதவியினைத் திறம்பட வகித்து - அவரையும் கண்டு பிடித்த நான்கு பதிவர்களுக்கும் ( கீதா சாம்பசிவம், இராஜ இராஜேஸ்வரி, அப்பாதுரை, கீதா மதிவாணன் ) பாராட்டுகள் - நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

  நலல்தொரு நடுவரைத் தேர்ந்தெடுத்த வை.கோ விற்கும் திறம்பட நடுவர் பதவியினை .வகித்த ஜீவிக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. cheena (சீனா) September 13, 2014 at 11:12 AM

   வாங்கோ என் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே !

   வணக்கம் ஐயா. 15.09.2014 முதல் தாங்கள் என்னைக் கேட்கச் சொன்ன நபர் தன் இயலாமையைத் தெரிவித்து விட்டார்கள். கடைசியில் பார்த்தால் ..... ‘பிடிச்சாலும் பிடிச்சுள்ளீர்கள் ..... நல்ல புளியங்கொம்பாவே பார்த்து' :) கேள்விப்பட்டதும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாகி விட்டது. :))))) அவர்களும் முதலில் என் பரிந்துரையில் தங்களுக்குக் கிடைக்கப்பட்ட ’வைரம்’ தான் என்பது நினைவிருக்கட்டும். இன்றைக்கும் வைரமாகவே ஜொலித்து வருகிறார்கள். அது தான் என் தேர்வுகளின் / பரிந்துரைகளின் தனிச்சிறப்பாகும். :)))))

   //நல்லதொரு நடுவரைத் தேர்ந்தெடுத்த வை.கோ விற்கும் திறம்பட நடுவர் பதவியினை .வகித்த / வகித்துவரும் ஜீவிக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, ஐயா.

   அன்புடன் VGK

   Delete
 9. நடுவரின் புகைப்படம் வெளியிட்டதற்கு நன்றி. நடுவரைக் கண்டு பிடித்தவர்கள் ஆனால் போட்டியில் கலந்து கொள்ளாதஎன்னைப் போல் இன்னும் சிலர் இருப்பார்கள். ஜீவிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. G.M Balasubramaniam September 13, 2014 at 11:22 AM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //நடுவரின் புகைப்படம் வெளியிட்டதற்கு நன்றி.//

   சந்தோஷம் ஐயா.

   //நடுவரைக் கண்டு பிடித்தவர்கள் ஆனால் போட்டியில் கலந்து கொள்ளாத என்னைப் போல் இன்னும் சிலர் இருப்பார்கள்.//

   போட்டியோ முடிந்து விட்டது. முடிவும் தெரிந்து விட்டது.

   இனி யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்தான். அதனால் என்ன?

   அப்படியானால் எனக்கும் மகிழ்ச்சியே + அதிர்ச்சியே.

   //ஜீவிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, ஐயா.

   அன்புடன் கோபு [VGK]

   Delete
 10. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். நடுவருக்கு எனது வணக்கம்.

  ReplyDelete
 11. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். நடுவருக்கு என் வணக்கங்கள்.

  ReplyDelete
 12. கோபு சார்,
  உங்களுடன் என் விருதினைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
  இணைப்பு http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/09/blog-post_13.html

  ReplyDelete
  Replies
  1. rajalakshmi paramasivam September 13, 2014 at 12:13 PM

   வாங்கோ, வணக்கம்.

   //கோபு சார், உங்களுடன் என் விருதினைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இணைப்பு http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/09/blog-post_13.html//

   ஆஹா, ’அரட்டை’யே ஆனாலும், எனக்கு மிகவும் மனதுக்குப் பிடித்தமான நல்லாசிரியரான தங்கள் திருக்கரங்களால் அடியேனுக்கு ஓர் விருதா !!!!!!

   ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !

   விருதுக்கும் அதுபற்றிய இனிய இந்தத்தகவலுக்கும் மிக்க நன்றி, மேடம்.

   அன்புடன் கோபு

   Delete
 13. திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்.

  இந்த வெற்றியாளர் தான் பெற்ற வெற்றியினைத் தனிப்பதிவாக இன்று வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  இணைப்பு: http://sivamgss.blogspot.in/2014/09/2.html

  ’திரு. ஜீவி அவர்கள்தான் இந்தப்போட்டியின் நடுவர்’ என்பதைத் தான் எவ்வாறு மிகச்சீக்கரமாகவே யூகித்தேன் என்பதற்கான பல காரண காரணிகளையும் அடுக்கி, தன் பதிவினில் மிகவும் சுவாரஸ்யமாகவே எழுதியுள்ளார்கள்.

  இதைத்தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 14. நடுவர் யார் என்ற புதிருக்கான விடையில் என் யூகமும் பலித்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. என்னோடு பரிசு பெறும் அனைவருக்கும் பாராட்டுகள்.

  யானை தன்னை மறைத்துக்கொண்டாலும் அவ்வப்போது தன் தும்பிக்கையை நீட்டி தன் இருப்பைத் தெரிவித்துக் கொள்வது போல் என்று கோபு சார் சொல்லியிருந்தார். எத்தனையோ பேர் பின்னூட்டங்கள் இட்டாலும் விமர்சனம் குறித்த மிகவும் சுவாரசியமான பின்னூட்டங்கள் இட்டுக்கொண்டிருந்த ஜீவி சார் அவர்களின் பின்னூட்டங்கள் ஒரு சிறப்புக் கவனத்தை உண்டாக்கியிருந்தன. ஒவ்வொரு முடிவின் போதும் அவற்றை ஒரு பெரும் எதிர்பார்ப்போடு கவனித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் நடுவராக இருப்பார் என்று ஆரம்பத்தில் யூகித்திருக்கவில்லை.

  கோபு சாரின் எழுத்துலக மானசீக குருவும் நண்பருமான ரிஷபன் சார் அவர்களே நடுவராக இருக்கலாம் என்ற எண்ணம் ஆரம்பம் முதல் இருந்துவந்தது. ஆனால் ரிஷபன் சார் அவர்களின் பின்னூட்டங்கள் குழப்பத்தை அதிகரித்துப் போயின. நடுவர் ஐயாவா அம்மாவா என்ற கேள்வி எழுந்தபோது திருமதி ரஞ்சனி மேடமாக இருக்குமோ என்றும் தோன்றியது.

  ஆனால் விமர்சனங்களை விமர்சனம் செய்த தொணியிலும் ஆராய்ந்து தெளிந்து எழுதிய முடிவுகளிலும் எழுத்தின் பாணியிலுமாக ஜீவி சாராக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றியது.

  ஜீவி சார் அவர்கள் தொடர்வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் எங்களிடம் விமர்சனத்தை எப்படி எழுதுகிறீர்கள் என்ற ரகசியத்தை சொன்னால் மற்றவர்களுக்கும் உதவுமே என்று ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். போட்டியில் கலந்துகொள்ளாத இவருக்கேன் இவ்வளவு அக்கறை என்று அப்போது மெலியதாய் ஒரு சந்தேகம் எட்டிப் பார்த்தது. இப்போது உறுதியாகிவிட்டது.

  நடுவுநிலை தவறாது, வரும் அத்தனை விமர்சனங்களையும் வாசித்து, அவற்றை முறைப்படுத்தி, தரவரிசைப்படி தேர்ந்தெடுத்து பரிசுக்கானவற்றை அறிவிப்பதென்பது அத்தனை எளிதான காரியமன்று.

  ஒரு போட்டிக்கான விமர்சனங்களை வாசகர்களாகிய நாங்களே தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஒருமுறை எங்களிடம் வழங்கியிருந்தார் கோபு சார். ஒன்பதே விமர்சனங்கள் என்றபோதும் அவற்றை வகைப்படுத்தி, பரிசுக்குரியவற்றைத் தேர்ந்தெடுப்பதென்பது எவ்வளவு சிரமம் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தோம்.

  அந்தக் கடினமான பொறுப்பை வாராவாரம் சிறப்பாக செய்துதரும் ஜீவி சார் அவர்களுடைய பொறுமையையும் சீர்தூக்கி ஆராயும் திறனையும் பாராட்டுவதில் பெருமையடைகிறோம். மனம் நிறைந்த பாராட்டுகள் ஜீவி சார்.

  அற்புதமான ஒரு விமர்சகரை நடுவராக்கியமையால் இப்போட்டியானது மேலும் சிறப்பு பெறுகிறது. அதற்காக அகமார்ந்த பாராட்டுகள் கோபு சார். இப்படியொரு வாய்ப்பினை வழங்கிய தங்களுக்கு அன்பான நன்றியும் பாராட்டும் கோபு சார்.

  இப்போட்டியின் பின்னணியில் உள்ள உங்கள் இருவரின் அயராத உழைப்பையும் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி September 13, 2014 at 5:21 PM

   வாங்கோ, வணக்கம்.

   //நடுவர் யார் என்ற புதிருக்கான விடையில் என் யூகமும் பலித்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி ............................................................................................................................................. மனம் நிறைந்த பாராட்டுகள் ஜீவி சார்.//

   நூல்கண்டிலிருந்து நூலைப் பிரித்து இழுக்கிற மாதிரி நேர்த்தியாய் ஒவ்வொரு விஷயமாய் நினைவு படுத்திச் சொல்கிற மாதிரி எப்படித்தான் தங்களால் அழகாக இப்படி எழுதமுடிகிறதோ. வாசிக்கும் எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளதாக்கும் ! :)))))

   உள்ளதை உள்ளபடி உள்ளம் திறந்து வெகு அழகாக, வெகு நேர்த்தியாகச் சொல்லியுள்ளீர்கள். ‘விமர்சன வித்தகி’ என்றால் சும்மாவா பின்னே !!!!! :)))))) இந்தத்தங்களின் கருத்துக்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

   >>>>>

   Delete
  2. கீத மஞ்சரி September 13, 2014 at 5:21 PM

   //அற்புதமான ஒரு விமர்சகரை நடுவராக்கியமையால் இப்போட்டியானது மேலும் சிறப்பு பெறுகிறது. அதற்காக அகமார்ந்த பாராட்டுகள் கோபு சார். இப்படியொரு வாய்ப்பினை வழங்கிய தங்களுக்கு அன்பான நன்றியும் பாராட்டும் கோபு சார்.//

   இதை ’விமர்சன வித்தகி’ யாகிய தங்களின் மூலம் இன்று கேட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
   தங்களின் இந்த பாராட்டுகளுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

   //இப்போட்டியின் பின்னணியில் உள்ள உங்கள் இருவரின் அயராத உழைப்பையும் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.//

   தங்களிடமுள்ள இந்தப்பணிவும் பக்குவமும் புரிதலுமே தங்களை வெற்றியின் சிகரத்தினை எட்ட வைத்துள்ளது. மேலும் மேலும் எட்ட வைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான இனிமையான மிக நீண்ட கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள கோபு [VGK]

   Delete
  3. கீத மஞ்சரி September 13, 2014 at 5:21 PM

   //போட்டியில் கலந்துகொள்ளாத இவருக்கேன் இவ்வளவு அக்கறை //

   அதானே ! :))))) மிகவும் ரஸித்தேன், சிரித்தேன்.

   - கோபு

   Delete
  4. நீங்களும் ரிஷபன் ரஞ்சனினு நினைச்சிருக்கீங்க..

   Delete
 15. அன்புடையீர்..
  விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
  இணைப்பு - http://thanjavur14.blogspot.com/2014/09/blog-post84-blog-award.html

  ReplyDelete
  Replies
  1. துரை செல்வராஜூ September 13, 2014 at 6:15 PM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //அன்புடையீர்.. விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இணைப்பு - http://thanjavur14.blogspot.com/2014/09/blog-post84-blog-award.html//

   வருகைக்கும், விருதுக்கும், இனிய இந்த தகவலுக்கும் மிக்க நன்றி, ஐயா. - அன்புடன் VGK

   Delete
 16. நடுவரை அறிந்து கொண்டதுடன் அவரது தளத்தினையும் கண்டுகொண்டேன்! இனி தளிர் பூவனத்திலும் தவழும்! நன்றி!

  ReplyDelete
 17. நடுவர் யாரென்று அறிந்து கொண்டேன். அவரது வலைப்பூவிற்கும் சென்று வந்தேன். மிகுந்த கவனமுடன் கடினமான பணியைத் திறம்பட ஆற்றிவரும் அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்! வைகோ சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s.September 13, 2014 at 8:10 PM

   வாங்கோ வணக்கம்.

   //வைகோ சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!//

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   அன்புடன் VGK

   Delete
 18. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்களை எடுத்துச்சொல்லி, நமது உயர்திரு நடுவர் அவர்களை வரவேற்று சிறப்பித்துள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 19. அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. பத்து வருடங்களுக்கு மேலாக பதிவுலகில் வாசம். பதிவுகளில் என்னோடு பழகியவர்களுக்கு அலாதியான என் எழுத்தைக் கண்டுபிடிக்கத் தெரியாதா என்ன?.. தெரியும் என்று எனக்கும் தெரியும். இருந்தும் என் எழுத்தை வைத்து என்னைக் கண்டுபிடித்து விடாமலிருப்பதற்காக படாத பாடு பட்டேன். இந்தப் போட்டியில் ஏனோ ஸ்ரீராம் அவர்கள் கலந்து கொள்ளவில்லையாயினும் 'யானையையும் அதன் தும்பிக்கையையும்' பற்றிச் சொல்லி புதிர் போல அவர் பின்னூட்டமிட்டிருந்தது என்னை யாரென்று கண்டுபிடிப்பதற்கான முதல் சம்சயம் ஆயிற்று. அவருக்கு என் எழுத்து நடை அத்துபடி. இருந்தும் அவருக்கே சந்தேகம் வரும்படி என் எழுத்து நடையை மாற்றி எழுத முயற்சித்தேன்.

  இந்த போட்டிகள் பற்றி கீதாம்மா பதிவுகள் இட்டு அவரது வாசகர்களுடன் கலந்து கொண்ட பொழுது, என்னை இந்தப் போட்டியுடன் சம்பந்தமில்லாவன் மாதிரி காட்டிக் கொண்டு கருத்துக்கள் இட்டேன். 'அவர் கருத்துக்களை மறைப்பதற்கு அவருக்கு மிகவும் சிரமம்' என்று ஜீஎம்பீ சார் சொல்லியிருந்தார்கள். என்னை உணர்ந்து சொன்ன வார்த்தைகள் அவை; அது தான் உண்மையான உண்மை. இந்த எட்டு மாதங்களாக என் தளத்தில் எதுவும் நான் எழுதாமலிருந்தாலும் என்னைத் தெரிந்த அன்பர்கள் பதிவுகள் இடும் பொழுது அவர்களின் பதிவுகளில் போய் அவர்களுடன் பேசாமல் என்னால் இருக்க முடிய வில்லை. அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லைதான். பேராசான் வள்ளுவருக்கு நன்றி.
  எவ்வளவு காலத்திற்கு முன் எவ்வளவு அழகாகச் சொல்லிப் போய் விட்டார்கள்!

  இந்த பொறுப்பும் நட்புக்காக ஏற்றுக் கொண்டது தான். நாளாவட்டத்தில் விமரிசனம் குறித்து நிறைய தகவல்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிந்த பொழுது இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ள விழைந்தேன். அந்த என் ஆசையே ஈடுபாட்டுடன் இந்தப் பணியைச் செய்ய எனக்குத் தூண்டுகோலாக இருந்தது.

  வை.கோ.சாரின் இந்தத் தளத்திலும் எனக்குக் கிடைத்த அன்புக்கும் நட்புக்கும் மனசார நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இனிமேல் வெளிப்பட மனம் திறந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள எந்தத் தடையும் இல்லை.
  இனி சிறுகதைகளை எழுதுவது பற்றியும் (குறிப்பாக கதைகளை எழுதுவது பற்றி; சொல்வது பற்றி அல்ல) விமரிசனங்களின் ஆக்கங்கள் பற்றியும் உங்களுக்குத் தெரிந்ததையும், எனக்குத் தெரிந்ததையும் பகிர்ந்து கொள்ளலாம். நமது பொது எண்ணம், தமிழில் விமரிசனங்களின் தகுதிச் சிறப்பைக் கூட்டுவது ஒன்று தான்.

  கருத்துக்கள் எங்கிருந்து எப்படி வந்தாலும் திறந்த மனத்துடன் ரசித்துக் கொண்டே அதை உள்வாங்கிக் கொள்ளும் வை.கோ. சார் நமக்குக் கிடைத்திருக்கிறார். அவருடைய பொறுமையும் கடமை உணர்வும் என்னை மலைக்க வைத்திருக்கின்றன. இங்கு பகல், அங்கு இரவு என்று இருந்த போதிலும் நடு இரவு இரண்டு மணி, ஒரு மணிக்கெல்லாம் நான் அனுப்பும் விமரிசன குறிப்புகளுக்கு அவர் உடனே பதில் அளிப்பதில் நெகிழ்ந்து போயிருக்கிறேன்.
  இந்த செயல்பாடு இல்லை என்றால் வாராவாரம் போட்டியின் வெற்றிப்பட்டியலை வெளியிடுவதில் குறைபாடு ஏற்பட்டிருக்கும். அந்த பொறுப்பு உணர்வு இல்லையென்றால் இத்தகைய சாதனைகள் சாத்தியப்பட்டிருக்காது.

  ஆகச் சிறந்த எழுத்தாளர் ரிஷபன் சார், வலைச்சர ஆசிரியர் சீனா சார், அப்பாதுரை சார், பெரியவர் ஜிஎம்பீ சார், வல்லிம்மா, கோமதிம்மா, 'எங்கள் பிளாக்' ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஸ்ரீராம், இந்த போட்டியில் கலந்து கொள்ளாத கோபு சாரின் வாசக அன்பர்கள் எல்லோரும் நம்முடன் இருப்பது நமக்கு பெரும் பலம். அவர்கள் ஆசியுடன் எடுத்துக் கொண்ட இந்த பெரும் பணியை பூர்த்தி செய்து நிறைவேற்றுவோம்.

  சொல்லப் போனால் 'இது ஒரு விமரிசனப் போட்டி' என்று தோற்றம் கொடுத்தாலும் வழக்கமான நமது பதிவுலக பகிர்தல்
  மாதிரி மாறிப் போயிருப்பது தான் வேடிக்கை. அந்த உற்சாகம் கொடுத்திருக்கும் சக்தியில் தொடர்வோம்.

  தங்கள் அன்புள்ள,
  ஜீவி

  ReplyDelete
  Replies
  1. எனக்கு நேரம் கிடைக்கவில்லையேனு வருத்தப்படுவேன். அப்புறம் கீதா அவர்களின் விமரிசனங்கள், உங்க பின்னூட்டங்களை பார்த்ததும் (ஹிஹி அதுல ஒண்ணு குதிருக்குள்ளே இல்லே டைப்) தூண்டப்பட்டேன்.

   உங்கள் ஈடுபாடு சிலிர்க்க வைக்கிறது.

   Delete
  2. வைகோ அவர்களின் கடமையுணர்வுக்கு நீங்கள் தந்திருக்கும் அங்கீகாரம் சரியே.

   எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய நிர்வாகத்திறன், ஒழுங்குமுறை, வற்றாத உற்சாகம் இவை மலைக்க வைக்கின்றன. நான் பார்த்த வரையில் அவருக்கு இரண்டு கைகள் தான்.

   Delete
 20. வாழ்த்துக்கள் சார். வைபவம்னு இதைத்தான் சொல்றது.

  ஜீவி அவர்கள் இந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்னு நினைத்தேன். அவருடைய கடமையுணர்வுக்கு பாராட்டுக்களும் நன்றியும்.

  இவர்தான்னு ஒரு ஐடியா இருந்தது. நடுவில் வேறே மாதிரி எழுதினதும் ரிஷபன், சுநதர்ஜி, ஷைலஜா, ரஞ்சனி இவர்கள்ள ஒருத்தரா இருக்குமோனு ஒரு சந்தேகம். பிறகு இந்த யானைக்கு ரெண்டு தும்பிக்கைகள்னு தெரிஞ்சு போச்சு. முதல் தும்பிக்கை இவர் உபயோகித்த ஒரு சொற்றொடர்.

  ReplyDelete
  Replies
  1. Durai ASeptember 14, 2014 at 6:02 AM
   [1]

   வாங்கோ, வணக்கம்.

   //வாழ்த்துக்கள் சார். வைபவம்னு இதைத்தான் சொல்றது.//

   இதைத்தங்கள் மூலம் கேட்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.

   >>>>>

   Delete
  2. Durai ASeptember 14, 2014 at 6:02 AM
   [2]

   //ஜீவி அவர்கள் இந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்னு நினைத்தேன். //

   நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் இதுவரை நேரில் சந்தித்துக்கொள்ளவில்லையே தவிர மெயில் மூலமும், பதிவுகள் மூலமும், டெலிஃபோன் போன்ற இதர எல்லா தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமும் அவ்வப்போது எங்களுக்குள் மிகவும் இனிமையான தொடர்புகள் உண்டு.

   மிகச் சிலருடன் மட்டும் எனக்கு இதுபோல ஒரு ஸ்பெஷல் அட்டாச்மெண்ட் ஏற்பட்டுப்போவது உண்டு என்பதை நானும் நன்கு என் அனுபவத்திலேயே உணர்ந்துள்ளேன். அதை சொல்லிக்கொள்வதில் எனக்கு எந்தவிதமான வெட்கமோ கூச்சமோ இல்லை ....

   ஏனெனில் நம்மைபோலவே இவரும் ஓர் ஆண்
   என்பதால் .... தைர்யமாகவே சொல்லிக்கொள்ள முடிகிறது. :)))))

   அதே சமயம் நான் ஒன்றை பகிரங்கமாக மனம் திறந்து உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல ஆத்மார்த்தமான நட்புக்கும், தொடர்ந்து ஒருவரின் நலம்
   விரும்பியாக நாம் இருப்பதற்கும், அவர்களின் [ஆணோ / பெண்ணோ] எழுத்துக்களிலோ, பதிவுகளிலோ உள்ள ஏதோ ஒன்றை மிகவும் ரஸித்து மனதார அவர்களை நேசிப்பதற்கும், அவர்களை நேரில் சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் என்னைப்பொறுத்தவரை
   எனக்கு இல்லை.

   அதை நான் பெரும்பாலும் விரும்புவதும் இல்லை. இதை நான் ஏற்கனவே என்னை சந்திக்க வருவதாக முன் தகவலும், அனுமதியும் கேட்டிருந்த பலரிடமும் தெளிவாகச் சொல்லி, சந்திப்பையே தவிர்த்துள்ளேன்.

   இதில் சிலருக்கு என்மீது உள்ளூரக் கோபமும் கூட உண்டு. ஆனாலும் அதுபோன்றவர்களுடனான என் நட்பு இன்றும் எழுத்துக்கள் மூலம் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன. முற்றிலுமாக முறிந்து போவது இல்லை. IN FACTஅத்தகைய நட்புகள் மேலும் வலுப்பட்டுத்தான் வருகின்றன .... என்பேன்.

   சிலரை நேரில் சந்திப்பதால் ஏற்கனவே உள்ள நட்பு வலுப்படலாம். ஏற்கனவே உள்ள நட்பு மேலும் மேலும் ’வளரலாம்’ அல்லது ’குறையலாம்.

   ஒருவருக்கொருவர் ஏற்கனவே இருந்து வந்த ஒரு மிக நல்ல IMAGE மாறக் கூடிய ஆபத்தும் இதில் உள்ளது.

   இதையெல்லாம் எடுத்துச்சொல்லி இதுவரை நான் பலரின் சந்திப்புகளைத் தவிர்த்துள்ளேன். அது சரியோ / தவறோ எனக்குத் தெரியாது.

   என்னைப்பொறுத்தவரை என் மனதுக்கு அது சரியே என்று இப்போதும் நான்சொல்வேன். IN FACT அதுதான் உண்மையும் கூட, என்பது தங்களுக்கே தெரியும் ..... ஆழ்ந்து இதை மேலும் சிந்தித்துப்பார்த்தீர்களானால்.

   அப்படியும் பலர் என்னை இதுவரை நேரில் வந்து சந்தித்துச்சென்றுள்ளார்கள். இன்னும் பலர்
   சந்திப்பதற்கான வாய்ப்புகளுக்காக ஏங்கிக்கொண்டிருப்பதாகச் சொல்லி வருகிறார்கள்.

   இந்தப் பட்டியல் சற்றே நீளமானது. இங்கு யார் பெயர்களையும் நான் குறிப்பிடுச் சொல்ல
   விரும்பவில்லை.

   இதெற்கெல்லாம் தாங்களும் ஒரு விதத்தில் காரணமே ....... :))))) இதோ அதற்கான இணைப்பு:

   http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html

   >>>>>

   Delete
  3. Durai ASeptember 14, 2014 at 6:02 AM
   [3]

   தங்களுடையது உள்பட பலரின் பதிவுகளுக்கு நான் அடிக்கடி வருகை தருவது உண்டு. ஆனாலும் அந்தப்பதிவுகளைப் படிக்கவோ ரஸிக்கவோ கருத்திடவோ எனக்கு நேரம் இருப்பது இல்லை.

   எதையும் ஊன்றிப்படிக்காமல் நான் கருத்திடவும் மாட்டேன். பிறகு ஏன் எல்லாப்பதிவுகளுக்கும் வருகை தருகிறேன் என்ற நியாயமான சந்தேகம் தங்களுக்கு வரலாம்.

   நம் திரு. ஜீவி சார், அதில் என்ன பின்னூட்டக்கருத்து கூறியுள்ளார்கள் என்பதைப்பார்க்க மட்டுமே நான் வருகிறேன் என்பதை இங்கு பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.

   அவர் எந்தெந்தப்பதிவுகளுக்கெல்லாம் போவார் / கருத்துச்சொல்வார் என்பதை நான் நன்கு அறிவேன்.

   அந்தந்தப்பதிவுகளிலெல்லாம் நான் முன்கூட்டியே சென்று COMMENT BOX அருகேயுள்ள NOTIFY ME என்பதில் TICK அடித்துவிட்டு வந்துவிடுவேன்.

   பிறகு அதற்கு யார் என்ன கமெண்ட்ஸ் கொடுத்தாலும் அவை Automatic ஆக எனக்கு மெயில் மூலம் கிடைத்து விடும்.

   அதில் நம் திரு. ஜீவி சார் போன்ற ஒரு சிலரின் கருத்துக்களை மட்டும் ரஸித்துப்படித்து விட்டு, மற்றவைகளை உடனுக்குடன் Delete செய்து விடுவேன்.

   இதைப்பற்றி சில சமயங்களில் நானும் நம் ஜீவி சார் அவர்களும் எங்களுக்குள் தனியே விவாதித்துக்கொள்வதும் உண்டு.

   >>>>>

   Delete
  4. Durai A September 14, 2014 at 6:02 AM
   [4]

   நம் ஜீவி சார் இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிக்கு நடுவர் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள சம்மதித்தது என் மீது அவருக்குள்ள ஆழமான பிரியத்தினால் மட்டுமே. அது நான் செய்த பாக்யம் எனச் சொல்லிக்கொள்கிறேன்.

   இதுவரை எந்தப்பிரபலங்களின் எழுத்துக்களையும், நாவல்களையும் நான் அதிகமாகப் படித்ததே கிடையாது. அதற்கான வாய்ப்புகளும் எனக்கு கிட்டவில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை. வருத்தமும் இல்லை.

   இருப்பினும் நான் ஏதோ என் பாணியில் கதை எழுதி வருகிறேன். என் சொந்த அனுபவங்களையும், சந்தித்த வேடிக்கை மனிதர்களையும், எனக்கே உண்டான நகைச்சுவை உணர்வுகளையும் குழைத்து, அவற்றிற்கு கொஞ்சம் கற்பனையில் கண், காது, மூக்கு என்று வைத்து என் பாணியில் நான் கதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

   இவ்வாறான என் கதைகளில் உள்ள குறை நிறைகளையும் பகிரங்கமாக எனக்குச் சொல்ல வேண்டும் என நான் நம் திரு. ஜீவி சார் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதுவே என்னை மேலும் செம்மை படுத்திக்கொள்ளவும், என் எழுத்துக்களை மேலும் மெருகூட்டிக்கொள்ளவும் எனக்கு உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

   அது தான் இந்தப்போட்டியின் அடிப்படை நோக்கமும் ஆகும்.

   >>>>>

   Delete
  5. Durai A September 14, 2014 at 6:02 AM
   [5]

   //அவருடைய கடமையுணர்வுக்கு பாராட்டுக்களும் நன்றியும்.//

   HE IS REALLY A GREAT MAN.

   SO FAR, I HAVE LEARNT SO MANY THINGS FROM HIM.

   STILL THERE ARE PLENTY MORE TO LEARN FROM HIM. :)

   >>>>>

   Delete
  6. Durai A September 14, 2014 at 6:02 AM
   [6]

   //இவர்தான்னு ஒரு ஐடியா இருந்தது. நடுவில் வேறே மாதிரி எழுதினதும் ரிஷபன், சுந்தர்ஜி, ஷைலஜா, ரஞ்சனி இவர்கள்ள ஒருத்தரா இருக்குமோனு ஒரு சந்தேகம். //

   திரு. ரிஷபன் அல்லது திரு. சுந்தர்ஜி என தாங்கள் யூகித்தது நியாயமே. இவர்கள் இருவருடனும் எனக்கு ஓரளவு நல்ல TOUCH உண்டு தான். அவர்கள் இருவருக்கும் என்னைப்பற்றி நன்றாகத் தெரியும். அவர்கள் இருவருக்குமே என் மீதும் என் எழுத்துக்கள்
   மீதும் மிக நல்ல அபிப்ராயங்களும் உண்டு தான். ஆரம்ப காலக்கட்டத்தில் இருவருமே என்னை மிகவும் உற்சாகப்படுத்தி எழுத வைத்துள்ளவர்கள் என்பது மறுப்பதற்கு இல்லை.

   மீதி இருவரான திருமதி. ஷைலஜா + திருமதி ரஞ்ஜனி நானே சற்றும் யோசித்துப்பார்க்காத நபர்கள் என்று சொல்லிக்கொள்கிறேன்.

   இதில் திருமதி ரஞ்ஜனி அவர்களுடன் எனக்கு நல்ல நட்பும் தொடர்புகளும் உண்டுதான்.

   திருமதி ரஞ்ஜனி அவர்கள் இந்தப்போட்டியில் கலந்து கொள்ளாததாலும், எந்தவொரு போட்டிக்கான பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் கூட கொடுக்காததாலும் அவராக இருக்குமோ என தாங்கள் கொஞ்சம் யோசித்ததிலும் நியாயம் உண்டுதான்.

   >>>>>

   Delete
  7. Durai A September 14, 2014 at 6:02 AM
   [7]

   //பிறகு இந்த யானைக்கு ரெண்டு தும்பிக்கைகள்னு தெரிஞ்சு போச்சு. முதல் தும்பிக்கை

   இவர் உபயோகித்த ஒரு சொற்றொடர்.//

   :)))))

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான சுவாரஸ்யமான பல கருத்துக்களுக்கும் என்
   மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு [VGK]

   Delete
 21. போட்டிக்குள் போட்டி! யார்? யார்? யார் அவர் யாரோ? நடுவர் சஸ்பென்ஸ் நீங்கியது. போட்டியில் வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ September 14, 2014 at 6:44 AM

   வாருங்கள், ஐயா, வணக்கம் ஐயா.

   //போட்டிக்குள் போட்டி! யார்? யார்? யார் அவர் யாரோ? நடுவர் சஸ்பென்ஸ் நீங்கியது. //

   ஆம் ஐயா, ஒருவழியாக அந்த சஸ்பென்ஸ் நீங்கியது.

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஐயா.

   அன்புடன் VGK

   Delete
 22. நான் வனவாசம் சென்றுவிட்டதால், இங்கே நடக்கும் நிகழ்வுகளை ஒரு திருவிழாவை காணும் பக்குவத்தில் கவனிக்கிறேன். பூஜ்ஜியத்திற்குள் ஒரு ராஜ்ஜியம் என்று சொல்வதுபோல, கனவைப் போல பலர் கடக்கும் இந்த இணைய உலகில் ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளீர்கள் என்று புரிந்து கொண்டேன். தங்களின் பங்களிப்புடன் மற்றவர்களையும் பங்கேற்க வைக்கும் தங்களின் வியத்தகு செயலை எண்ணி வானம். பார்த்து தலை உயர்த்தி சொல்கிறேன் " Sir, You are very great."

  ReplyDelete
  Replies
  1. சாகம்பரிSeptember 16, 2014 at 3:20 PM

   Most Respected Madam, வாங்கோ, வணக்கம்.

   //நான் வனவாசம் சென்றுவிட்டதால், இங்கே நடக்கும் நிகழ்வுகளை ஒரு திருவிழாவை காணும் பக்குவத்தில் கவனிக்கிறேன்//

   தாங்கள் மட்டுமல்ல. தங்களைப்போல என்னுடன் மிகவும் ஆத்மார்த்தமாகப்பழகி வந்த பதிவர்கள் பலரும் இப்போது காணோம். எல்லோருமே வனவாசம் சென்றிருப்பார்களோ என்னவோ. இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டி விழாக்கள் முடிந்ததும் நானும் கொஞ்சம் வனவாசம் செல்லலாம் என என் மனதுக்குள் நினைத்துள்ளேன்.

   இந்தத்திருவிழா 2014 ஜனவரி பொங்கல் பண்டிகை சமயம் ஆரம்பித்தது. தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. வரும் தீபாவளிப்பண்டிகை சமயம் நிறைவடையலாம் என நம்புகிறேன்.

   திருவிழாவைத்தாங்கள் ஒட்டுமொத்தமாகக் காண்பது சற்றே சிரமமாக இருக்கும் என்பதால் இந்தத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை மட்டும் இதோ இந்தக்கீழ்க்கண்ட பதிவுகளில் பார்த்து ரஸித்து மகிழவும்:

   http://gopu1949.blogspot.in/2014/08/vgk-01-to-vgk-30-total-list-of-hat.html

   http://gopu1949.blogspot.in/2014/08/vgk-21-to-vgk-30.html

   http://gopu1949.blogspot.in/2014/06/vgk-11-to-vgk-20_16.html

   http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-04-04-vgk-01-to-vgk-10.html

   இந்தப்போட்டியில் பங்குபெற தங்களுக்கும் ஒருவேளை விருப்பமிருந்தால் இன்னும் ஆறே ஆறு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.

   இந்தப்போட்டிபற்றிய பொதுவான விதிமுறைகள் இதோ இந்தப்பதிவினில் உள்ளது:

   http://gopu1949.blogspot.in/2014/01/blog-post.html

   இதில் என் கட்டாயமோ வற்புருத்தலோ ஏதும் கிடையாது. தாங்கள் விருப்பப்பட்டால் மட்டும் கலந்துகொண்டு, இதனை மேலும் மேலும் சிறப்பிக்கலாம்.

   //. பூஜ்ஜியத்திற்குள் ஒரு ராஜ்ஜியம் என்று சொல்வதுபோல, கனவைப் போல பலர் கடக்கும் இந்த இணைய உலகில் ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளீர்கள் என்று புரிந்து கொண்டேன். //

   இது என் நெடுநாள் ஆசை. இப்போதுதான் பூர்த்தியாகி வருகிறது.

   //தங்களின் பங்களிப்புடன் மற்றவர்களையும் பங்கேற்க வைக்கும் தங்களின் வியத்தகு செயலை எண்ணி வானம். பார்த்து தலை உயர்த்தி சொல்கிறேன் " Sir, You are very great."//

   ;)))))

   நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துகள் + பாராட்டுகள் + வியப்புகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கோபு [VGK]

   Delete
 23. போட்டியில் வென்றவர்களுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
 24. நடுவர் யார் என்பதை சரியாக சொல்லி வெற்றி பெற்ற நால்வருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. நடுவர் யார் என்பதை சரியாக சொல்லி வெற்றி பெற்ற நால்வருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. வெற்றி பெற்றவங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 27. நடுவரைப்பற்றி அவருடைய திறமைகளை சொல்லியவதம் நல்லா இருக்கு. சரியாக சொன்னவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 28. ஜட்ஜ்க்கு உரிய ப்ரோடொகாலுடன் வாத்தியாரின் வரவேற்பு சூப்பர். வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete