என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 11 செப்டம்பர், 2014

யாரோ ...... இவர் ..... யாரோ ?








அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

வெற்றிகரமாக தொடர்ந்து வாராவாரம் நடைபெற்று வரும் நம் சிறுகதை விமர்சனப்போட்டியின் நடுவர் யார் என யூகித்துச் சொல்லுமாறு கேட்டு போட்டிக்குள் ஒரு போட்டி வைத்திருந்தோம். 

அதற்கான இணைப்பு: 



 


இந்தப்போட்டியில் பலரும் கலந்துகொண்டு, நடுவர் யார் என்ற தங்களின் யூகத்தினை பலவாறாக அளித்துச் சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 

நடுவர் பற்றிய என் அறிவிப்பினை VGK-36 கதைக்கான விமர்சனப்போட்டி பரிசு முடிவுகள் அறிவிப்புக்குப் பின் தெரிவிப்பதாகச் சொல்லியிருந்தேன்.

இதில் பலரும் இப்போது மிகுந்த ஆவலுடன் இருப்பதால் இன்னும் ஓரிரு நாட்களிலேயே அறிவித்து விடலாம் என தீர்மானித்துள்ளேன்.  

அதாவது  90% கதைகளின் பரிசுப்போட்டி முடிவுகளுக்குப்பின் அறிவிக்கலாம்  என்று நான் முன்பு சொல்லியிருந்ததை, [http://gopu1949.blogspot.in/2014/06/blog-post.html இப்போது  85% கதைகளின் வெளியீட்டுக்குப்பின்  என மாற்றிக்கொண்டுள்ளேன். 

அதன்படி VGK-35 போட்டிக்கான கதை நாளை 12.09.2014 வெள்ளிக்கிழமை வெளியிட்ட பின், இந்தப்போட்டிக்கான நடுவர் யார் என்பது பகிரங்கமாக 13.09.2014 சனிக்கிழமையன்றே அறிவிக்கப்பட உள்ளது. 

அத்துடன் ’நடுவர் யார் யூகியுங்கள்’ என்ற இந்தப் போட்டிக்குள் போட்டியில், மிகச் சரியான விடையளித்து,  வெற்றி பெற்று, பரிசுக்குத் தேர்வாகியுள்ளவர்கள் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

இதன்மூலம் VGK-35 To VGK-40 ஆகிய கடைசி ஆறு கதைகளுக்கும் உயர்திரு நடுவர் அவர்களும் நம்மோடு ஒருவராக சங்கமம் ஆகி, ஒவ்வொரு விமர்சகர்களுடனும் தன்னுடைய கருத்துக்களையும் பின்னூட்டங்கள் மூலம் பகிர்ந்து கொள்வார்கள்.

இதற்கிடையில் நடுவர் யார்? என்பது பற்றிய ஒருசில குறிப்புகள் இங்கு கீழே இப்போதே கொடுத்துள்ளேன். 

தாங்கள் எழுதியனுப்பியுள்ள யூகத்துடன் ஓரளவாவது ஒத்து வருகிறதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள். 




யாரோ இவர் யாரோ ?

1] உயர்திரு நடுவர் அவர்கள் ‘ஐயா’ தான்.

2] அவர்களை நானும் இதுவரை நேரில் சந்தித்ததே இல்லை.

3] அவர் சென்னையில் வசிப்பவர் என்பது எனக்குத் தெரியும்.


4] இந்தப்போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே பாதியில் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். போட்டி முற்றிலும் முடிவதற்குள் சென்னை  திரும்பி விடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

5] அவரும் நம்மைப்போன்ற ஒரு தமிழ் வலைப்பதிவர் தான்.

6] அவ்வப்போது குறிப்பிட்ட சிலரின் பதிவுகளில் இவரின் வித்யாசமான + ஆக்கபூர்வமான + அறிவுபூர்வமான அரிய கருத்துக்களை நானும் படித்து மகிழ்ந்துள்ளேன்.

7] என்னுடைய பழைய பதிவுகளிலும் அவ்வப்போது நிறைய கருத்துக்கள் அளித்துள்ளார்கள். 

8] இருப்பினும் இவரின் வலைத்தளப்பக்கம் நான் எப்போதாவது மட்டுமே [Very Very Rare] சென்று கருத்தளித்துள்ளேன்.

9] தன்னுடைய பெயரை மிகச்சுருக்கமாக ’ரகு’ ’ரவி’ ‘ராமா’ ’ஏபி’ ’பீஸீ’ ‘ஸீடி’ ‘டீஈ’ ' வீஜீ ’ ’ஐஜே’ என்பதுபோல தமிழில் இரண்டே எழுத்துக்களில் அமைத்துக்கொண்டுள்ளார்கள்.

10] அந்தக்குட்டியூண்டு பெயரையே ஆங்கில உச்சரிப்பில் எழுத 6 Letters தேவைப்படுவதாக உள்ளது. 

11] நடுவர் வயதிலும், அனுபவத்திலும், ஆற்றலிலும், எழுத்துத்திறமையிலும் மிகவும் மூத்தவர் ஆவார்.


12] இவரின் வலைத்தளப்பெயர் மொத்தம் நான்கு எழுத்துக்கள் கொண்டாதாகும். 

13] மேற்படி நான்கு எழுத்துக்கள் கொண்ட இவரின் வலைத்தளப் பெயரில் தனித்தனியே  இரண்டு வார்த்தைகள் வருகின்றன. அவற்றைத் தனித்தனியேவும் பிரித்துச் சொல்லலாம் / எழுதலாம். பிரிக்காமல் சேர்த்தும் சொல்லலாம் / எழுதலாம்.  எப்படிச் சொன்னாலும் எழுதினாலும் பொருள் ஒன்றும் மாறப்போவது இல்லை என்பதே தனிச்சிறப்பாக உள்ளது.

14]* இவருக்கு இவர் தந்தையால் மிகப்பெரியதாகவே பெயர் வைக்கப்பட்டுள்ளது. அது பெருமாளைக்குறிக்கும் ஓர் பெயராகும்.

15]* இவருக்குப் பெயர் வைத்த இவரின் தந்தைக்கோ முழு முதற்கடவுளாம் விநாயகரின் பெயராக அமைந்துள்ளது.

கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள 14]* 15]*  பற்றி இவரின் வலைத்தளத்தினில் ஒன்றும் செய்திகள் இல்லை. இவருடன் மின்னஞ்சல் தொடர்பு கொண்டுள்ள நண்பர்களுக்கு மட்டுமே, இந்த இரு விஷயங்களும் இவரை யார் என யூகிக்கப் பயன்படக்கூடும்.

’நடுவர் யார் யூகியுங்கள்’ என்று நாம் அறிவித்திருந்த போட்டியின் கெடுதேதி + நேரம் சற்றுமுன் முடிந்துபோய் விட்டதால், இந்தக்குறிப்புகளையும் அவரின் புகைப்படம் ஒன்றினையும் இப்போது நான் வெளியிட்டுள்ளேன்.  

பரிசுக்கென்று இல்லாவிட்டாலும், நடுவர் யாராக இருக்கும் என்பதை இதன் மூலம் இப்போதைக்கு யூகிக்க முடிந்தவர்கள் யூகித்துக்கொள்ளுங்கள்.

13.09.2014 சனிக்கிழமை அதிகாலை உயர்திரு நடுவர் அவர்களின் பெயரும், அவரின் வலைத்தளத்தின் பெயரும் என்னால் தனிப்பதிவின் மூலம் அறிவிக்கப்படும். நடுவர் யார் என மிகச்சரியாக யூகித்து எழுதி அதற்கான பரிசு பெறப்போகிறவர்கள் பெயர்களும் வெளியிடப்படும்.

இதனால் VGK-33 சிறுகதை விமர்சனப்போட்டி முடிவுகள் மட்டும் 14.09.2014 ஞாயிறு மற்றும் 15.09.2014 திங்களுக்குள் வெளியிடப்பட உள்ளன.

ஆனாலும் ஒன்று ..... நடுவர் அவர்களைத்தான் தங்கள் எல்லோருக்கும் இப்போது நான் அறிவித்துள்ளேனே தவிர, விமர்சனம் எழுதியனுப்பும் தாங்கள் யார் என்பதை வழக்கம்போல கடைசிவரை நான் நடுவருக்கு அறிவிக்காமல் மிகவும் இரகசியமாகவே கட்டிக்காத்து வரப்போகிறேன். 

எனவே விமர்சகர்கள் தயக்கம் ஏதுமின்றி தங்களின் விமரிசனங்களை தொடர்ந்து வழக்கம் போல இதுவரை நடந்த போட்டிகளில் தங்கள் திறமையைக் காட்டி எழுதியது போலவே எழுதி அனுப்பிக் கொண்டே இருக்கலாம்;  தொடர்ந்து பரிசுகளையும் பெற்றுக் கொண்டே இருக்கலாம்.

 


 


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

18 கருத்துகள்:

  1. விரிவான குறிப்புகள்..

    வீ..ஜீ ..ஐயா கதைக்கு
    ஜீ வி ஐயா நடுவர் ..!
    ..
    பூ வனமாக மணக்கும்
    மிகவும் பொருத்தம் தான்..!

    வாழ்த்துகள் ..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. நடுவரைப் பற்றி புகைப்படத்துடன் நல்ல குறிப்புகள்...வெற்றியாளர் யாரோ?

    பதிலளிநீக்கு
  3. நானும் ஜிவி சார் என்றுதான் நினைக்கிறேன்.நல்லதீர்மானமாக எழுதுபவர்.நடுவர் பதவிக்குப் பொருத்தமானவர்.

    பதிலளிநீக்கு
  4. நடுவரின் போட்டோவை வெளியிட்டும் என்னால் யூகிக்க முடியவில்லை. ஒருசிலர் யூகித்து விட்டார்கள் போலிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நடுவர் யார் என்பதில் எனக்கு இன்னும் சஸ்பென்ஸ் தான்! நாளை காலை விடியலில் காண்கிறேன்!

    பதிலளிநீக்கு
  5. அவருடைய எழுத்துக்கள் அவரைக் காட்டிக் கொடுக்கும். விமரிசனத்துக்கு விமரிசனம் எழுதியதைப் பார்த்ததுமே புரிந்தது. இவ்வளவு நாட்கள் ஏன் எழுதாமல் இருந்தார் என்பதன் காரணம் புரிந்தது. அவருடைய கருத்துக்களை மறைக்க அவருக்குச் சிரமம் அதிகம் அவரது புகைப்படத்தை வாங்கி வெளியிட்ட உங்களுக்கு பாராட்டுக்கள். .

    பதிலளிநீக்கு
  6. புகைப்படத்தைப் பார்த்து என்னால் ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. சிலரது பின்னுட்டங்கள் அவரிக் கண்டு பிடிக்க உதவின , ஆனாலும் எனக்கு அவர் பரிச்சயமில்லை

    பதிலளிநீக்கு
  7. நான் யூகித்தது சரி தான் போல. உங்கள் பதிவில் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. நானும் திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் கருத்தை வழி மொழிகிறேன்.
    அப்பாதுரை சார், கீதாசாம்பசிவம், இராஜராஜேஸ்வரி அவர்களை விமர்சித்தபோதே தெரிந்து விட்டது ஜீவி சார் தான் என்று.
    கீதாமதிவாணன் அவர்களுக்கு கொடுத்த டிபஸ் அவர் தான் என்று மேலும் உறுதிபடுத்தி விட்டது.
    மற்றவர்கள் எழுத்தை உங்களை போல் மனம் திறந்து பாராட்டுவதும், மேலும் எழுத தூண்டுவது போல் அவர் பின்னூட்டம் இருக்கும்.
    நல்ல நடுவரை தேர்ந்து எடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    நடுவர் சாருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. புதிர் விடுபடும் நாளை எதிர்நோக்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. ஆஹா நடுவர் யாரென்பதற்கும் ஒரு போட்டியா? யாரு சரியா கண்டுபிடிச்சாங்க?

    பதிலளிநீக்கு
  11. ஒருவழியா சஸ்பென்ஸ் முடிந்தது. யார் நடுவர் என்று தெரிந்தது.

    பதிலளிநீக்கு
  12. யார் நடவர் என்று யாரு சரியா சொன்னாங்க.

    பதிலளிநீக்கு
  13. ஸாரி நடுவர்னு டைப் பண்ணினேன் நடவர்னு வந்திருக்கு. இன்று நிறய நிறய தப்பு தப்பா டைப் ஆகிவிட்டது. மொபைலில் இது மஹா மஹா கஷ்டம்.

    பதிலளிநீக்கு
  14. நடுவரை கண்ணால் காணமுடிந்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  15. நடுவர் யாரென்று அறிய முடிந்ததில் மகிழ்ச்சி! :)

    பதிலளிநீக்கு
  16. சிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார் என்பது பற்றிய முழு விபரங்களும், ’நடுவர் யார் யூகியுங்கள் போட்டி’யில் வெற்றி கிட்டி பரிசுக்குத் தேர்வானவர்கள் யார்-யார் என்பது பற்றியும் அறிய இதோ இணைப்பு:

    https://gopu1949.blogspot.in/2014/09/blog-post_13.html

    பதிலளிநீக்கு