’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்
கதையின் தலைப்பு :
VGK-35
’ பூபாலன் ‘
மிக அதிக எண்ணிக்கையில்
பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு
வெகு அழகாக விமர்சனங்கள்
எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும்
என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
நடுவர் திரு. ஜீவி
நம் நடுவர் அவர்களால்
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
விமர்சனங்கள் மொத்தம் :
ஐந்து
மற்றவர்களுக்கு:
முத்தான மூன்றாம் பரிசினை
வென்றுள்ள விமர்சனம்:
சிறுகதை விமர்சனப்போட்டி என்னும் வேதாளம் வாராவாரம் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வதும் விமர்சகர்கள் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தர்களாக விமர்சனம் செய்வதற்காக கதையைச் சுமந்து செல்வதும் நாற்பது வாரங்களுக்கு தொடர்வதுதானே ..
வேதாளம் உலவும் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குத்தான் விமர்சனச்சிறுகதைகள் வெளியாகி கணினி மரத்துல தொங்கும் .. விமர்சன வாளால் கதையை விமர்சித்து நடுவர் முன்னிலைக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் இறங்கும் நவீன விக்ரமாதித்தர்கள் விமர்சனர்களே..!
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி கணினியில் கதை படிக்கத்தொடங்கினான்.
அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது...
”சிறுகதையை சரியாக விமர்சனம் செய்யும் விமர்சகர்களுக்குப் பரிசு உண்டு.. விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!
இந்த பயங்கர நள்ளிரவில் விடா முயற்சியுடன் விமர்சனம் செய்ய கதை படிக்கும் முயற்சிகளைப் பாராட்டினாலும் உன்னுடைய கண் மூடித்தனமான முயற்சிகளைக் கண்டு உன் மீது பரிதாபம் தான் உண்டாகிறது. சிலசமயம் நீ இவ்வளவு பாடுபடுவது பரோபகார சிந்தையினாலா அல்லது உனது சுயநலத்திற்காகவா என்று எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது. சில சமயங்களில் சுயநலத்திற்கும் பரோபகாரத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வது கூட கடினம். இதை விளக்க உனக்கு பூபாலனின் கதையைச் சொல்கிறேன் கேள்" என்றது...!
ஆகாரத்துக்காக அழுக்குகளை உண்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறது மீன்.. அழுகிய உணவுகளை உண்டு சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தி ஆகாயத்தோட்டி என்று அழைக்கப்படுகிறது காகம். தன் வாழ்வாதாரத்திற்காக தன் கிராமத்தைக் கூட்டிபெருக்கி சுத்தம் செய்து குப்பைகளை அள்ளி கிடைக்கும் வருமானத்தில் வயிறுவளர்க்கிறான் பூபாலன்..! அவனுக்கு சுத்தம் தான் சோறு போடுகிறது..!
பழமையான மரங்கள் நிறைந்த மக்களின் வாழ்வாதாரமான அடர்ந்த காட்டை அழித்து மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடத்தும் புத்திசாலித்தனம் மிக்க அமைச்சர் பெருமக்கள் ஆட்சி நடத்தும் புண்ணிய பூமியில் பூபாலன் பூமி பாரம் தீர்க்கவந்த பரந்தாமனாக குப்பைகளை அகற்றும் தூய்மையான புனிதப்பணி செய்து வரலானான்..
கண்ணனும் குசேலனும் சாந்தீபனி முனிவர் ஆசிரமத்தில் ஒரே குருகுலத்தில் படித்தாற்போல அந்த ஊர் அமைச்சரும் பூபாலனும் ஒரேபள்ளியில் படித்தவர்கள்..!
பள்ளிப்படிப்பு, பரம்பரைப் பணம், அரசியல் செல்வாக்கு முதலியவற்றால் பட்டம் போல உயரே பறந்து இன்று அவர் மாண்புமிகு மந்திரி நலத்திட்டங்களை அறிவிக்க. அற்புதமான மலரலங்காரங்கள், மேடை ஜோடனைகள் செய்யப்பட்டு, விழா நடைபெறும் இடத்தை கூட்டி பெருக்கி தூய்மைப்படுத்துவது கர்மயோகியான பூபாலன் தான்..!
கண்ணன் குசேலனின் ஒருபிடி அவலை வலுவில் வாங்கி, மண்ணை உண்டு தாய் யசோதைக்கு வையகம் காட்டிய திருவாயில் போட்டுக்கொண்டு, உப்பரிகையில் அமர்த்தி உபசரித்து ருக்மிணி தேவியார் சாமரம் வீச, அறுசுவை உணவளித்து பெருமைப்படுத்தியது போலத்தானே, அமைச்சரும் கிராமத்தின் பிரதான சாலை, அழகு படுத்தப்பட்டிருந்ததை நினைவு கூர்ந்து, தனது பால்ய நண்பனான பூபாலனைக் மேடைக்கு அழைத்து, பொன்னாடை அணிவித்து, மோதிரம் அணிவித்து கட்டித்தழுவி தன் எளிமையைப் பறைசாற்றும் போட்டோக்கள் பத்திரிகையில் என அமர்க்களப்படுத்துகிறார் !
பூபாலன் போன்ற துப்புறவுத்தொழிலாளிகள் சேவை இந்நாட்டுக்குத்தேவை என கைதட்டல்களுடன் இன்னும் பல உபசார வார்த்தைகளுடன் புகழ்ந்து பேசி மகிழ்விக்கிறார்.. அமைச்சரிடம் பாராட்டு பெறுவது லேசா என்ன என்று பொறாமைப் பார்வையுடன் பூபாலன் படத்தையும் பத்திரிகையில் காட்டி படிக்கத்தெரியாதவனை அசட்டுச்சிரிப்புடன் கூச்சப்படுத்துகிறார்கள் கிராமமக்கள்..!.
அடுத்தநாள், பட்டாசுக்குப்பை, மலர்மாலைகள், பூபாலனின் படம் போட்ட பத்திரிகை குப்பைகள் எல்லாம் அவன் கைப்படவே தேடித்தேடி பொறுக்கி குப்பை வண்டியில் ஏற்றும் உத்தியோகம் செய்கிறான்.. பூபாலன்.. நேற்று அசாதாரணமாக வர்ணினிக்கப்பட்டவன் இன்று குப்பைகளின் நடுவில் சாதாரணமாக ..... ரணப்படுகிறானே.! அச்சச்சோ என பரிதாபபடவைக்கிறான்..!
காற்றடித்தால் குப்பைச்சருகு கோபுரத்தின் உச்சியில் போய் ஒட்டிக்கொள்கிறது.. உலகத்தைப் பெருமிதமாகப் பார்க்கி றது.. காற்று நின்றதும் மீண்டும் தரைக்கு வந்து காலில் மிதிபடுவது போல, எளிய மக்கள் நிலையை பூபாலன் கதையில் காட்சிப்படும் விந்தையில் நீ உணர்வது என்ன? இந்த கேள்விக்கு சரியான விடை தெரிந்திருந்தும் நீ விமர்சிக்கத் தவறினால், உன் தலை சுக்கு நூறாக வெடித்து சிதறிவிடும்" என்று மிரட்டியது கதை வேதாளம்..!
இவ்வளவு நேரம் பொறுமையாக வேதாளம் கூறிய கதையை கேட்ட மன்னன் விக்ரமன் வேதாளத்தின் கேள்விக்கு விடை கூறலானான் :
ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுத்தவன் மறுநாள் பார்க்கையில் ஜாடையில் மாறியிருப்பதைப் போன்றதாயிற்று பூபாலன் நிலைமை..!
ஆயிரம் வாலா பட்டாசுகள் தயாரிக்க எத்தனை ஆயிரம் குழந்தைகள் ரத்தம் சிந்தியிருப்பார்கள் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக சிவப்பு நிற காகிதத்தூள்களும், கந்தக நெடியும், காதுகளை கஷ்டப்படுத்தும் சப்தத்துடன் வெடித்து சுற்றுப்புற சுகாதாரத்தை சீர்குலைக்க மேடை ஏறி சுற்றுசூழல் பேணிப் பாதுகாப்பது பற்றி உரையாற்றும் முரண்பாடு நகைக்கவைக்கிறது.. .. கைதட்டல் அமர்க்களம்.. வேறு..!
ஆயிரம் வாலா பட்டாசுகள் தயாரிக்க எத்தனை ஆயிரம் குழந்தைகள் ரத்தம் சிந்தியிருப்பார்கள் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக சிவப்பு நிற காகிதத்தூள்களும், கந்தக நெடியும், காதுகளை கஷ்டப்படுத்தும் சப்தத்துடன் வெடித்து சுற்றுப்புற சுகாதாரத்தை சீர்குலைக்க மேடை ஏறி சுற்றுசூழல் பேணிப் பாதுகாப்பது பற்றி உரையாற்றும் முரண்பாடு நகைக்கவைக்கிறது.. .. கைதட்டல் அமர்க்களம்.. வேறு..!
குடத்திலிட்ட விளக்கு போல உள்ள பூபாலன்கள் எத்தனையோ. அவர்களை பற்றி சிந்தித்து கதை எழுதி, வாழ்க்கை பாடம் அவசியம் கற்றிருத்தல் வேண்டும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறது கதை.. மனதில் சிம்மாசனமிட்டு அமரும் வண்ணம் நவரசங்களையும் கைதேர்ந்த சித்திரக்காரராக அற்புதமான கதையை கண்முன் நடமாடும் உணர்வினைப் பெறுமாறு வடித்த கதை சொல்லும் வசீகரமான சொக்குப்பொடித்தூவலான நடையில் நேர்த்தியை காத்திருந்து படிக்கும் வாசிப்பனுவபத்துக்கு நிகருண்டா ..! கருத்தும் கதையும் அனுபவமும் பின்னிப்பிணைந்து கதை கதையாகச் சொல்லும் ஆசிரியரின் திறமையை விவரிக்க உன்னாலேயே முடியாதே வேதாளம் .. எங்களால் எப்படி முடியும்? .... சொல்லு பார்க்கலாம் .. அத்தனை ஆழமான பொருள் பொதிந்த யதார்த்தமான நடையில் அற்புத கதை இது.!
விமர்சகர்கள் எல்லாம் ரொம்பத்தான் டயர்ட் ஆகிவிட்டோம்.. ரொம்ப போர் வேறு அடிக்கிறது (அடித்துவிட்டோம்) இல்லாவிட்டால் இன்னும் கதையைப்பற்றி காதில் ரத்தம் வர அமைச்சர் ஆற்றிய உரையை விட பெரிய உரை ஆற்றுவோம்.. ஜாக்கிரதையாக இரு வேதாளம்.. உன்னைப்பார்த்தால்தான் ரொம்பப்பாவமாக இருக்கிறது..!!!!???
விக்ரமனின் பதிலால் மிகவும் திருப்தி அடைந்த வேதாளம் "வீரம் மட்டும் உன் கூட பிறந்ததில்லை, விவேகமும்தான், என்று உன்னுடைய தெளிவான மற்றும் சாமர்த்தியமான விடையினால் நீ நிரூபித்து விட்டாய் விக்ரமாதித்தா" என்று கூறி விட்டு மௌனத்தை கலைத்த மன்னனின் தோளில் இருந்து பறந்து மீண்டும் தான் குடியிருந்த முருங்கை மரத்திற்கே சென்று சேர்ந்தது. மன்னன் விக்ரமாதித்தனும் தன்னுடைய மௌனம் கலைந்ததால் விடுதலை பெற்று பறந்து சென்ற வேதாளத்தை மீண்டும் கொண்டு வருவதற்காக அது குடி கொண்டு இருக்கும் முருங்கை மரம் ( சிறுகதைப்போட்டி ) நோக்கி திரும்பி நடக்கலானான்.
இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்:
திருமதி.
வலைத்தளம்: மணிராஜ்
http://jaghamani.blogspot.com/
http://jaghamani.blogspot.com/
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
அனைவரும் தொடர்ந்து ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்
முருங்கை மர
வேதாளத்தின் சார்பாக
விமர்சகர்களாகிய
விக்ரமாதித்தர்களை
வேதாளத்தின் சார்பாக
விமர்சகர்களாகிய
விக்ரமாதித்தர்களை
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
VGK-37
’எங்கெங்கும் ...
எப்போதும் ...
என்னோடு ... ‘
எப்போதும் ...
என்னோடு ... ‘
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
வணக்கம் !
பதிலளிநீக்குமிகவும் சிறப்பான விமர்சனம் !தோழி இராஜெஸ்வரிக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .தங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஐயா .
சகோதரி இராஜராஜசுவரி அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிகவும் அருமையான விமர்சனம் ஐயா....
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு பாராட்டுக்கள்.
மிக அருமையான விமர்சனம். இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு!
பதிலளிநீக்குமூன்றாம் பரிசைப் பெற்றுத் தொடர்ந்து ஏதேனும் ஓர் பரிசை வென்று வரும் ராஜராஜேஸ்வரிக்குப் பாராட்டுகள்; வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவேதாளமும் விக்கிரமாதித்தனும் பேசுவது போன்ற பாணியில் வித்தியாசமான முறையில் விமர்சித்து மூன்றாம் பரிசு பெற்றுள்ள தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் மேடம்.
பதிலளிநீக்குவேதாளமும், விக்கிரமாதித்தனும் பேசுவதாக விமரிசனத்தை அமைத்துத் தனி முத்திரை பதித்த திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஎமது விமர்சனத்தை பரிசுக்குரியதாகத்தேர்ந்தெடுத்தமைக்கு
பதிலளிநீக்குமனம் நிறைந்த நன்றிகள்..
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு இனிய நன்றிகள்..!
அருமையாக விமர்சனம் எழுதி பரிசை வென்றுள்ள திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்! சிறுவயதில் அம்புலிமாமா புத்தகம் படித்ததை நினைவூட்டும் வண்ணம் அமைந்த படமும் அருமை! நன்றி!
பதிலளிநீக்குSeshadri e.s. September 30, 2014 at 10:35 PM
நீக்கு//அருமையாக விமர்சனம் எழுதி பரிசை வென்றுள்ள திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்! சிறுவயதில் அம்புலிமாமா புத்தகம் படித்ததை நினைவூட்டும் வண்ணம் அமைந்த படமும் அருமை! நன்றி!//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)
வித்தியாசமான முறையில் ஒரு விமர்சனம். மூன்றாம் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-
பூ பா லன்....!
கடமையைக் கண் போன்று செய்பவர்களுக்கு புகழ் ஒரு பொருட்டே அல்ல. என்பதை பூ பா லன் அவர்களின் செயலின் மூலம் சொல்லி இருக்கிறீர்கள். துப்புரவைப் பற்றி சிறப்புறையாற்ற வந்த அமைச்சர் சென்றவுடன் சுத்தமாக செய்யப்பட்ட அந்த இடமே 'உதிர்ந்த ரோஜா இதழ்களாலும், வெடித்த பட்டாசுக் குப்பையாலும் மீண்டும் சுற்றுப்புறம் பாதிக்கப் பட்ட விதத்தை அழகாக படம் பிடித்தார்போல் எழுதி இருக்கும் நடை சிறப்பு.
புகழைவிட ஆத்மத்ருப்தி தான் பெரிதென பூ பா லன் பாடம் சொல்லித் தருவதும் சிறப்பு.
-=-=-=-=-=-=-
இப்படிக்கு,
தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.
மூன்றாம் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குபரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்
பதிலளிநீக்குமூன்றாம் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மாவங்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅம்புலிமாமா ஞாபகம் ஏற்படுத்தி பரிசு வென்றமைக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்கு