’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்
கதையின் தலைப்பு :
VGK-33
’ எல்லோருக்கும்
பெய்யும் மழை ‘
பெய்யும் மழை ‘
இணைப்பு:
மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு
மிக அதிக எண்ணிக்கையில்
பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு
வெகு அழகாக விமர்சனங்கள்
எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும்
என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
நடுவர் திரு. ஜீவி
நம் நடுவர் அவர்களால்
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
விமர்சனங்கள் மொத்தம் :
ஐந்து
மற்றவர்களுக்கு:
முத்தான மூன்றாம் பரிசினை
வென்றுள்ள விமர்சனம்:
கதையின் தலைப்பும், காட்சிகள் கண் முன்னே நடப்பது போல சொல்லிய விதமும் வசீகரிக்கின்றன..!
அவ்வளவு எளிதில் யாராலும் உணர்ந்துவிட முடியாத வலியுடன் வஸந்தி .. தன் குழந்தையின் ஜிமிக்கியாகத் தொங்கும் ஆறாவது விரலின் அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து ஒவ்வொரு நாள் வேலை முடிந்து வந்ததும் விரக்கதியின் உச்சத்தில் வாழ்க்கையில் பிரச்னை, உறவில் பிரச்னை, அங்கே இங்கே என்று திரும்பிய இடத்தில் எல்லாம் பிரச்சனையில் இருந்தவருக்கு கிடைத்த வங்கி வேலையிலும் பிரச்சனை என்று நம் உச்சபட்ச பரிதாபத்தை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும் கதாபாத்திரமாக அமைத்து கதையைத்தொடங்கி அவளுக்கு ஒரு விடிவுகாலம் வராதா என்று எதிர்பார்க்கவைத்துவிடுகிறார் கதை ஆசிரியர்..
நானூறு ரூபாய் காணோம் என்றதும் இயல்பாக தற்காலிகாலிகப்பணியாளராக இருக்கும், தன்னிடம் அவ்வப்பொழுது சிறு சிறு தொகைகளைக் கைம்மாற்றாக வாங்கும் அஞ்சலை மீது சந்தேகம் கொள்வது இயற்கையாகத்தான் இருக்கிறது..!
மனிதர்களின் அறச்சீற்றமானது எப்போதுமே தன்னை விட பலகீனமானவனின் மீதோ அல்லது யாரை அடித்தால் திருப்பி அடிக்கமாட்டாரோ 'அவர்கள்' மீதும் மட்டுமே எளிதில் பாயும் அல்லவா..!
கடல்பெரிது -மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகி விடும் என்பது போல எத்தனையோ பணம் படைத்தவர்கள் உதவிசெய்ய முன்வராத நிலையில் ஏழ்மைநிலை அஞ்சலை காலமறிந்து உதவி செய்தது நெகிழவைக்கிறது..
அஞ்சலையே தன் திருமாங்கல்யத்தை தன் தாயார் சிறுகச்சிறுக பணம் சேர்த்து வாங்கிப்போட்டதை நினைவு கூர்ந்து, தன் கணவன் கையில் கிடைக்கும் முன் தானே அடகு வைத்து தன் நான்கு பிள்ளைகளின் பசியாற்றியதோடு, வஸந்தியின் பிரச்சினையின் தன்மையை உணர்ந்து கடனையும் அடைக்க முன்வரும்போது நம் மனதில் மழைமேகம் சூல் கொள்வதை உணர்கிறோம்..
புலியை முறத்தால் அடித்துத் துரத்தியதாக சங்ககாலப்பெண்களைச் சொல்வார்கள். .!
கோழி ஒன்று யானையையைத் தாக்கியதால் உறையூர் கோழியூர் என்று அழைக்கப்பட்டதாக ஸ்தலபுராணம் குறிப்பிடும்..
ஏழு வேட்டைநாய்களை ஒரு குறிப்பிட்ட எல்லையிலிருந்து முயல் ஒன்று விரட்டி திருப்பி அடித்த வீரம் மிக்க பண்பாடு உடையது பாஞ்சாலங்குறிச்சி கோட்டை.!
வெறி நாய்கள் கூட வருவோர் போவோரைத்தான் கடித்து குதறும்!
ஆனால் "குடிவெறி" நாய்களோ தன் குடும்பத்தையே அசிங்க வார்த்தைகளால் குதறிவிடுவதோடு; குழந்தைகளுக்கு உணவுக்கு வைத்திருக்கும் சொற்ப பணத்தையும் பிடுங்கிக்கொள்வதோடு மனைவியை அடித்தும் இம்சைப்படுத்துகிறது..
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா ? என்று குடும்ப வன்முறைச் சட்டத்தில் கட்டிய கணவனையே சிறைக்கு அனுப்பவும் தயாராகும் அஞ்சலையின் தைரியமான குணச்சித்திரம், நேர்மையான மனப்பான்மை, ஆகியவை சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கும் கதாசிரியரின் தனித்திறமை பாராட்டுப்பெறுகிறது..! .
காசாளர் பொறுப்பின் அவஸ்தைகளை நுணுக்கமாக காட்சிப்படுத்தும் கதை அமைப்பு வியக்கவைக்கிறது ..
ஒருவேளை தவறாக செட்டில் செய்துவிட்டால் அவர்கள் பாக்கெட்டில் நிர்வாகம் கை வைத்துவிடுமோ என்ற பயம். "கஷ்டமராக" பார்க்காமல் "கஸ்டமராக" பார்க்கவைக்கிறது..கஸ்டமர் கேர் பணியில் "எம்பதி" (Empathy) இருக்கலாம். "சிம்பதி" (Sympathy) கூடாது என்று செய்யாத தவறுக்கு சுடு சொற்களை காணிக்கையாக்குகிறது..!..
”500 ரூபாய்த்தாளின் 41 இருந்தது. 100 ரூபாய்த்தாளில் 49 தான் இருந்தது. ஒரு நூறு ரூபாய்க்கு பதில் ஒரு ஐநூறு ரூபாயைக் கொடுத்து விட்டாய் போலிருக்கு ......” என்று கிராமத்துப்பெரியவரின் விளக்கம் கதை ஆசிரியர் துல்லியமாக பணத்தைக் கையாளும் பதவியில் இருந்ததை உள்ளங்கை நெல்லிக்கனியாகக் கைகாட்டுகிறது..
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.. அதற்கு இந்த ஒரு காட்சியே சான்று..!
வாடிக்கையாளர் தெய்வம் என்பதெல்லாம் ஏட்டளவில் தான். நடைமுறையில் சிக்கல்களைத்தான் தருகிறது... வாங்கும் தண்ணீரில் இருந்து தங்கம் வரைக்கும் இதுதான் நிலைமை.
சுவாரஸ்யம், கவித்துவமான காட்சிகள் என்று பின்னியிருக்கிறார் கதை ஆசிரியர் .. சொக்குப்பொடித்தூவலாக வர்ணணைகளும் வார்த்தை ஜாலங்களும் மனதை மயக்குகின்றன..
’தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழையாக’ வெளியே மழைக்கான அறிகுறிகளும் நல்லவர்களின் காட்சித்திரத்தீட்டல்களும் இணைந்து வானவில்லாக தோற்றம் காட்டி மனதை மகிழ்விக்கிறது..
என்னவோ நம் பிரச்சினைகளே தீர்ந்ததாக உணர்ந்து ஆசுவாசமைடையச் செய்வதில் கதையின் வெற்றி கொட்டும் முரசாக முழங்கி, ஆனந்த மின்னலாக வெளிச்சம் பரப்பி, செழிப்பான மழையாக வர்ஷிக்கிறது..!, படங்களும் கதைசொல்வதில் பங்கேற்கின்றன..
வலைத்தளம்: "மணிராஜ்" jaghamani.blogspot.com
முத்தான மூன்றாம் பரிசினையும் வென்று
ஆறாம் முறையாக
மேலும் ஓர் ஹாட்-ட்ரிக் அடித்து
சாதனை புரிந்துள்ளார்கள்.
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
மனம் நிறைந்த பாராட்டுக்கள் +
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
Hat-Trick Prize Amount will be fixed later
according to their further
Continuous Success in VGK-34, VGK-35 and VGK-36
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர
இடைவெளிகளில் வெளியிடப்பட உள்ளன.
அனைவரும் தொடர்ந்து ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
VGK-35
’ பூ பா ல ன் ’
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
எமது விமர்சனம் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு நடுவர் ஐயா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..
பதிலளிநீக்குஇயலாத மனிதர்களின் அறச்சீற்றம் தன்னிலும் இயலாதவர்களிடம்தான் பாயும் என்று அழகாக சொல்லியுள்ளீர்கள். மூன்றாம் பரிசுக்கும் தொடரும் ஹாட்ரிக் பரிசுகளுக்கும் அன்பான வாழ்த்துகள் மேடம்.
பதிலளிநீக்கு/மனிதர்களின் அறச்சீற்றமானது எப்போதுமே தன்னை விட பலகீனமானவனின் மீதோ அல்லது யாரை அடித்தால் திருப்பி அடிக்கமாட்டாரோ 'அவர்கள்' மீதும் மட்டுமே எளிதில் பாயும் அல்லவா..!
பதிலளிநீக்குகடல்பெரிது -மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகி விடும் என்பது போல எத்தனையோ பணம் படைத்தவர்கள் உதவிசெய்ய முன்வராத நிலையில் ஏழ்மைநிலை அஞ்சலை காலமறிந்து உதவி செய்தது நெகிழவைக்கிறது..// அருமையான வரிகள்! பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு பாராட்டுகள்! தொடரட்டும் பரிசு மழை!
அழகான விமரிசனம் எழுதி மூன்றாம் பரிசினை வென்று, ஹாட்-ட்ரிக் பரிசு மழையில் நனைந்து கொண்டிருக்கும் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமூன்றாம் பரிசினை வென்ற திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்குபரிசினை வென்ற திருமதி ராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஒரு ஹாட்ரிக் அடிக்கறதே பெரிய விஷயம். இவங்கள் எல்லாம் ரொம்ப சாதாரணமா தொடர்ந்து ஹாட்ரிக் அடிக்கறாங்களே, என்ன ஒரு ஆச்சரியமான விஷயம்.
பதிலளிநீக்குஹாட் ட்ரிக் வெற்றிபெற்றவங்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதொடர்ந்து ஹாட் ட்ரிக் பரிசு பெறும் சாதனையாளர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவெற்றிபெற்ற சகோதரிக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு