என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

VGK 35 - பூ பா ல ன் - [சிறுகதை விமர்சனப்போட்டிக்கான கதை ]



இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்  : 18.09.2014

வியாழக்கிழமை


இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 

valambal@gmail.com 

[ V A L A M B A L @ G M A I L . C O M ]


REFERENCE NUMBER:  VGK 35

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:

 



’பூ பா ல ன்’ 

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




ந்தக் கிராமமே விழாக்கோலம் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் அந்தக் கிராமத்துக்காரராக இருந்த ஒருவர் இன்று மந்திரியாகி அந்தக் கிராமத்திற்கு விஜயம் செய்ய உள்ளார். பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி வாரிவழங்க உள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி சிறப்புச் சொற்பொழிவு ஆற்றப்போகிறார்.

எங்கும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. கட்சிக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. சுவரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மரக்கிளைகளில் மின் விளக்குகள் கலர்கலராக தோரணம் போல் தொங்கவிடப்பட்டு ஜொலிக்கின்றன.

துப்புரவுத்தொழிலாளி பூபாலனுக்கு கடந்த நான்கு நாட்களாகவே சரியான வேலை. குனிந்து நிமிர்ந்து வீட்டைக் கூட்டுவதே நமக்கெல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும் போது, ரோட்டையும் ஊரையும் கூட்டி சுத்தப்படுத்துவது என்றால் கேட்கவா வேண்டும்?

இருப்பினும் பூபாலனுக்கு இந்த அமைச்சர் ஐயாவுடன் சிறுவயது முதற்கொண்டே நல்ல அறிமுகமும் பழக்கமும் உண்டு. இருவரும் சேர்ந்தே கோலி அடித்து, பம்பரம் விளையாடி, பட்டம் பறக்க விட்டுள்ளவர்கள்தான். 

பள்ளிப்படிப்பு, பரம்பரைப் பணம், அரசியல் செல்வாக்கு முதலியவற்றால் பட்டம் போல உயரே பறந்து இன்று அவர் மாண்புமிகு மந்திரி ஆகிவிட்டார். 

பள்ளிப்படிப்போ, பணமோ, அரசியல் ஈடுபாடோ எதுவுமே இல்லாத பூபாலனோ பட்டம் பறக்க உபயோகப்படும் நூல்கண்டாக தரையில் தங்கிவிட்டதோடு, தரையைப்பெருக்கி சுத்தம் செய்ய வேண்டிய பொறுப்பானதோர் எளிய வேலையில் இன்று உள்ளார்.

இன்று மாண்புமிகு மந்திரியாகியுள்ள அவரின் வருகை பூபாலனுக்கே மனதில் ஒருவித மகிழ்ச்சியையும், செயலில் ஒரு வித எழுச்சியையும் உண்டாக்கி இருந்தது.

“செய்யும் தொழிலே தெய்வம், அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்” என்று இயற்கையாகவே உணர்ந்திருந்த பூபாலன் கிராமத்தின் பிரதான நுழை வாயிலிலிருந்து ஆரம்பித்து விழா நடைபெறும் மேடை வரை உள்ள, மண் சாலையை வழி நெடுக குப்பை ஏதும் இல்லாமல் சுத்தமாகக்கூட்டி, வெகு அழகாக வைத்திருந்தான்.

”மாண்புமிகு மந்திரி அவர்கள் வருகிறார். வந்து கொண்டே இருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் இங்கு வந்து விடுவார்” என ஒலிபெருக்கியில் கடந்த நான்கு மணி நேரமாகக் காட்டுக்கத்தலாகக் கத்திக்கொண்டே இருந்தனர். 

இடையிடையே கேட்பவர் காதுகளில் ரத்தம் வரவழைப்பது போல ஏதேதோ அர்த்தம் விளங்காத தற்கால சினிமாவில் வரும் புதுப்படப் பாடல்களும் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன.  

மாண்புமிகு மந்திரியின் வருகையால் வழியெங்கும் இருபுறமும் காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். 


 

போலீஸ் ஜீப்புகள் புடைசூழ, முன்னும் பின்னும் பலவித கார்கள் பவனிவர, அமைச்சர் விழா மேடையை, ஒருவழியாக நெருங்கி விட்டார்.

வேட்டுச்சத்தங்கள் முழங்கின. பத்தாயிரம் வாலா பட்டாசுகள் பல தொடர்ச்சியாகக் கொளுத்தப்பட்டன. அக்கம் பக்கத்து கிராம மக்களும், இந்தக்கிராம மக்களுமாக கூட்டம் முண்டியடித்து விழா மேடையை நெருங்கி விட்டனர். விழா மேடை மிகவும் சுறுசுறுப்பானது.

கட்சியின் முக்கியப்பிரமுகர்களும், தொண்டகளும், கிராமத்துப் பெரியவர்களுமாக மேடையேறி, மாலைகள் அணிவித்து, பொன்னாடைகள் பல போர்த்தி, அமைச்சருக்கு மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்தனர். 

அமைச்சர் பேசும் போது, சுற்றுச்சூழலை பேணிப்பாதுகாப்பது எப்படி என்பது பற்றி விரிவாக விளக்கமாக எடுத்துரைத்தார்.  தனது வருகைக்காக கிராமத்தின் பிரதான சாலை, அழகு படுத்தப்பட்டிருந்ததை நினைவு கூர்ந்து, அதற்காக உழைத்த துப்புரவுப் பணியாளர்களை மேடைக்கு வருமாறு அழைத்தார். அவர்கள் அனைவருக்கும் பரிசுகள் கொடுத்து கெளரவித்தார்.

நீண்ட நாட்களுக்குப்பின் தனது பால்ய நண்பனான பூபாலனைக் கண்ட அமைச்சர், அவனிடம் அன்புடன் நலம் விசாரித்து விட்டு, அவனுக்குத் தன் கையால் ஒரு பொன்னாடையைப் போர்த்திவிட்டு, தங்க மோதிரம் ஒன்று அவன் விரலில் மாட்டிவிட்டு, அவனைக்கட்டிப் பிடித்தவாறு, பத்திரிகை நிரூபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தார்.

தனது கடின உழைப்புக்கு இன்று கிடைத்த பாராட்டு + அங்கீகாரத்தினாலும், தன்னை அமைச்சர் அவர்கள் இன்றும் மறக்காமல் நினைவில் வைத்துள்ளார் என்பதாலும் பூபாலன் மனம் நெகிழ்ந்து போனான். 

அமைச்சர் தனது சிறப்புரையில். “பூபாலன் போன்ற பொதுநல நோக்குள்ள கடின உழைப்பாளிகளைக் காண்பது அரிது. துப்புரவுத் தொழிலாளிகள், சமுதாயத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்தவர்கள். அவர்கள் பணி என்றுமே அத்யாவசியமானது; 

அவர்கள் மட்டும் இல்லாவிட்டாலோ, வேலை நிறுத்தம் செய்தாலோ, நம் தெருவே, ஊரே, நாடே, உலகமே நாறிவிடும். எங்குமே சுத்தமும் சுகாதாரமும் இல்லாவிட்டால் பல்வேறு நோய்கள் பரவி விடும்; 

இந்த துப்புரவுத் தொழிலாளர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான் என்றும், அவர்கள் சேவை எப்போதும் நமக்கு அத்யாவசியத் தேவை என்றும், பொது மக்கள் உணர்ந்து, அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தி, அவர்களுக்குத் தங்களால் முடிந்தவரை, அன்பும் ஆதரவும் அளித்திட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.     

”இன்று இந்த விழாவுக்காகச் செய்யப்பட்டுள்ள சுத்தமும் சுகாதாரமும் எங்கும் என்றும் எப்போதுமே இருக்குமாறு துப்புரவுத் தொழிலாளர்கள் தொடர்ந்து பொறுப்புடன் பணியாற்றிட வேண்டும். பொதுமக்களும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து உதவிட வேண்டும். அனைவருக்குமே சுற்றுப்புறச் சூழல் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்” என்று அமைச்சர் மேலும் ஏதேதோ விளக்கி பேசி முடித்தார்.

விழா இனிதே நடைபெற்று முடிய, அமைச்சர் புறப்பட்டுச் சென்றதும், மக்கள் கூட்டம் கலைய ஆரம்பித்தது. துப்புரவுத்தொழிலாளி பூபாலனை ஒரு சிலர் பாராட்டினர். வாழ்த்தினர். அவனுக்கு இன்று ஏற்பட்ட அதிர்ஷ்டத்தை நினைத்து சிலர் வியந்தனர். மாண்புமிகு மந்திரி அவர்களால் பொது மேடையில் பாராட்டுப்பெறுவது என்றால் சும்மாவா ... என்ன? ஒரு சிலர் பொறாமை கூடப்பட்டனர். 

மறுநாள் செய்தித்தாள்களில் அமைச்சருடன் பூபாலன் படங்களும், பாராட்டுக்களும் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தன. படங்களை அவனிடம் சுட்டிக்காட்டிய ஒருசிலரிடம், மிகவும் வெட்கத்துடன் ஒரு சிரிப்புச் சிரித்துக்கொண்டே, கைகட்டி ஒதுங்கி நின்று தன் கண்களால் நன்றி கூறினான். 

ழுதப் படிக்கத் தெரியாத பூபாலன், வழக்கம்போல் தன் கடமையே கண்ணாயிரமாக, விழா நடந்த மேடையைச் சுற்றியும், தெருக்களிலும், பூ மாலைகளிலிருந்து விழுந்திருந்த உதிரிப்பூக்களையும், பட்டாசுக் குப்பைகளையும், பாடுபட்டுத் தேடித்தேடி கூட்டிக் குவித்துக் கொண்டிருந்தான். 

இன்று தன்னைப் புகழ்ந்து வந்துள்ள செய்திகளும், தன் படங்களைத் தாங்கி வந்துள்ள செய்தித்தாள்களும் கூட பழசாகி, பலராலும் பலவிதமாகப் பயன்படுத்தப்பட்டு, கசக்கியும் கிழித்தெறிந்தும், என்றாவது ஒரு நாள் தெருவுக்கு வந்துவிடும் என்பதையும், அவைகளையும் தானே தன் கையால் கூட்டி, கடைசியில் குப்பைத் தொட்டியில் போட்டு, குப்பை லாரியில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்பதையும், தன் அனுபவத்தில் மிகவும் நன்றாகத் தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தான், நம் சாதாரணமானவன் ஆகிய பூபாலன்.    






oooooOooooo



முக்கிய அறிவிப்பு



நடுவர் அவர்களின் பெயரும் 
அவர்களின் வலைத்தள முகவரியும்
அவரின் புகைப்படத்துடன் 
நாளை காலை தனிப்பதிவாக 
வெளியிடப்பட உள்ளது.

 


அத்துடன் சிறுகதை விமர்சனப் போட்டிக்கான 
’நடுவர் யார்? யூகியுங்கள்’ 
போட்டிக்கான பரிசு முடிவுகளும்  
நாளை காலை வெளியிடப்பட உள்ளன.

காணத்தவறாதீர்கள் !



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்



24 கருத்துகள்:

  1. இன்று தன்னைப் புகழ்ந்து வந்துள்ள செய்திகளும், தன் படங்களைத் தாங்கி வந்துள்ள செய்தித்தாள்களும் கூட பழசாகி, பலராலும் பலவிதமாகப் பயன்படுத்தப்பட்டு, கசிக்கியும் கிழித்தெறிந்தும், என்றாவது ஒரு நாள் தெருவுக்கு வந்துவிடும் என்பதையும், அவைகளையும் தானே தன் கையால் கூட்டி, கடைசியில் குப்பைத் தொட்டியில் போட்டு, குப்பை லாரியில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்பதையும், தன் அனுபவத்தில் மிகவும் நன்றாகத் தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தான், நம் சாதாரணமானவன் ஆகிய பூபாலன். //

    நேற்று அசாதாரமான பூபாலன் .. இன்று தன் படத்தையே குப்பையில் ஏற்றும் பணியில்..!

    கோபுரத்தில் ஏற்றுவதும் , குப்பையில் வீழ்த்துவதும்
    காலம் செய்யும் கோலம்..!!

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு முறையும் விமர்சனம் எழுதணும் என்கிற நினைப்பு மட்டுமே இருக்கிறது... வேலையின் காரணமாக எழுத முடிவதில்லை... இந்த முறை முயற்சிக்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. ஒரு சில எழுத்துப் பிழைகளை மட்டும் சரிபார்த்துவிடுங்கள். தவறாய் நினைக்கவேண்டாம்.

    சொற்பொழிவு, வருகைக்காக,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam September 12, 2014 at 1:55 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஒரு சில எழுத்துப் பிழைகளை மட்டும் சரிபார்த்துவிடுங்கள்.//

      OK தகவல் + நினைவூட்டலுக்கு மிக்க நன்றி.

      //தவறாய் நினைக்கவேண்டாம்.//

      தவறாக நினைக்கவே மாட்டேன்.

      எழுத்துப்பிழைகள் இருப்பின் அது எனக்கே சுத்தமாகப் பிடிக்காது.

      ஆனாலும் எவ்வளவு முறை திரும்பத்திரும்ப நாம் எழுதியதை நாமே படித்தாலும் சமயத்தில் நம் கண்களில் அகப்படாமல் போய் விடுகின்றன. அதுபோலவே இதுவும் இன்று நடந்துள்ளது.

      அவ்வப்போது தயவுசெய்து இதுபோலச் சொல்லுங்கோ. தாங்கள் எடுத்துச்சொன்னால் மகிழ்வுடன் + நன்றியுடன் ஏற்றுக்கொள்வேன்.

      //சொற்பொழிவு, வருகைக்காக,//

      ழு=ழி

      க் =க

      இவை இரண்டையும் இப்போதைக்கு மாற்றிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      மேலும் கடைசி பாராவில் ‘கசக்கி’ என்பது ’கசிக்கி’ என இருந்தது. அதையும் நானே இப்போது மாற்றிவிட்டேன்.

      நன்றியுடன் கோபு

      நீக்கு
  4. யதார்த்தம். உலக இயல்பு இதுதான். 'பார்வை ஆகாயம் தொட்டாலும் கால்கள் இருப்பதென்னவோ தரையில்தான்'. சாதாரணர்களுக்கு மட்டுமே இந்த உண்மை புரியும். நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல சிறுகதை.

    போட்டியில் பங்கு பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. தன் படங்களைத் தாங்கி வந்துள்ள செய்தித்தாள்களும் கூட பழசாகி, பலராலும் பலவிதமாகப் பயன்படுத்தப்பட்டு, கசக்கியும் கிழித்தெறிந்தும், என்றாவது ஒரு நாள் தெருவுக்கு வந்துவிடும் என்பதையும், அவைகளையும் தானே தன் கையால் கூட்டி, கடைசியில் குப்பைத் தொட்டியில் போட்டு, குப்பை லாரியில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்பதையும், தன் அனுபவத்தில் மிகவும் நன்றாகத் தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தான், நம் சாதாரணமானவன் ஆகிய பூபாலன். //

    அருமையான கதை.
    அவரிடம் அனுப படிப்பு இருக்கே ! உலகத்தை நன்கு புரிந்து கொண்டு இருக்கிறார் பூபாலன்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. ஒரு துப்புரவுத் தொழிலாளியின் மனதை அழகாக சொன்னது கதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. மனம் சுத்தம் பூபாலனுக்கு.அவன் ஏணியிலும் ஏறவில்லை. வானத்திலும் மிதக்கவில்லை. தரையைக் கூட்டிப் பெருக்கும் போது இயலபாக அகற்றும் குப்பைகளில் மாலைகளும் உண்டு.அழுக்குகளும் உண்டு. இரண்டையும் சமமாக நினைக்கக் கற்றுக் கொண்டுவிட்ட அசாதாரண மனிதன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. Arumayana kadhai sir. I remember you quoting this in my post on a tamil poem written bye ... the post diwali scene in the streets... ullaththai urukkum kadhai. thanks for sharing.

    பதிலளிநீக்கு
  10. Mira September 19, 2014 at 12:58 PM

    Welcome MIRA !

    //Arumayana kadhai sir. I remember you quoting this in my post on a tamil poem written bye ... the post diwali scene in the streets... ullaththai urukkum kadhai. thanks for sharing.//

    You have Good Memory Power. :))))) I appreciate you !

    Thanks a Lot for your kind visit here and also for your very valuable comments.

    Affectionately yours,
    GOPU

    பதிலளிநீக்கு
  11. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    பூ பா லன்....!

    கடமையைக் கண் போன்று செய்பவர்களுக்கு புகழ் ஒரு பொருட்டே அல்ல. என்பதை பூ பா லன் அவர்களின் செயலின் மூலம் சொல்லி இருக்கிறீர்கள். துப்புரவைப் பற்றி சிறப்புறையாற்ற வந்த அமைச்சர் சென்றவுடன் சுத்தமாக செய்யப்பட்ட அந்த இடமே 'உதிர்ந்த ரோஜா இதழ்களாலும், வெடித்த பட்டாசுக் குப்பையாலும் மீண்டும் சுற்றுப்புறம் பாதிக்கப் பட்ட விதத்தை அழகாக படம் பிடித்தார்போல் எழுதி இருக்கும் நடை சிறப்பு.

    புகழைவிட ஆத்மத்ருப்தி தான் பெரிதென பூ பா லன் பாடம் சொல்லித் தருவதும் சிறப்பு.

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    பதிலளிநீக்கு
  12. புகழ் தரும் போதையில் மயங்காதவர்கள் இல்லை.

    பதிலளிநீக்கு
  13. கதை சொன்ன பாடம் நல்லா இருக்கு.எதனைதான் புகழ் பெருமை வந்தாலும் அதை த்தலையில் ஏற்றிக்க கூடாதுதான்.

    பதிலளிநீக்கு
  14. // இன்று தன்னைப் புகழ்ந்து வந்துள்ள செய்திகளும், தன் படங்களைத் தாங்கி வந்துள்ள செய்தித்தாள்களும் கூட பழசாகி, பலராலும் பலவிதமாகப் பயன்படுத்தப்பட்டு, கசக்கியும் கிழித்தெறிந்தும், என்றாவது ஒரு நாள் தெருவுக்கு வந்துவிடும் என்பதையும், அவைகளையும் தானே தன் கையால் கூட்டி, கடைசியில் குப்பைத் தொட்டியில் போட்டு, குப்பை லாரியில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்பதையும், தன் அனுபவத்தில் மிகவும் நன்றாகத் தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தான், நம் சாதாரணமானவன் ஆகிய பூபாலன். ////

    நிறைகுடம்

    பதிலளிநீக்கு
  15. பூபாலன் துப்புறவு தொழிலாளிங்கற மன நெலயிலயிருந்து வெளியே வரமுடியல. பெரிய ஆளோட நண்பன்ற கர்வமும் இல்ல. யதார்த்தமான கத.

    பதிலளிநீக்கு
  16. பூபாலன் சாதாரணமானவன் இல்லை அசாதாரணமானவனாகவே தெரிகிறான். பெரிய பிரபலம் நண்பனாக இருந்தும் கூட அவன் நிதானமாகவே நடந்து கொள்கிறான். நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  17. அமைச்சர் “சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது எப்படி ?” என உரை நிகழ்த்த வரும்போது வரவேற்பு நிகழ்வுகளோ முரணாக அமைகின்றன. அதிகமான இரைச்சலுடன் காதுகளில் ரத்தம் வரவழைப்பது போல ஏதேதோ அர்த்தம் விளங்காத தற்கால சினிமாவில் வரும் புதுப்படப் பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்ததும், சுவரொட்டிகள் சுவர்களை ஆக்ரமிப்பு செய்திருந்ததும், அமைச்சர் வந்தவுடன் வேட்டுச் சத்தங்களும், பத்தாயிரம் வாலா சரவெடிகளும் வெடிக்கப்பட்டு சுற்றுச் சூழல் காத்தவிதம் (?) யதார்த்தம்.
    பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.

      தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  18. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 38

    அதற்கான இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_1908.html

    பதிலளிநீக்கு
  19. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/09/vgk-35-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/09/vgk-35-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/09/vgk-35-03-03-third-prize-winner.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு
  20. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. DURAI. MANIVANNAN SIR, 9750571234 ON 26.06.2021

    சின்ன சின்ன பாராட்டும்கூட மகிழ்ச்சியாக இருக்கும் வேலையின் தன்மை அவரவர்க்கான வாய்ப்பு, கிடைத்ததை நிறைவாக செய்வதே சிறப்பு, எந்த பாராட்டும் ஒருநாள் குப்பைக்குதான் போகும், மனநிறைவோடு வாழும் வாழ்க்கை வாழ்வோம். துரை.மணிவண்ணன்.
    -=-=-=-=-

    THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. 
    - VGK 

    பதிலளிநீக்கு