என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 6 செப்டம்பர், 2014

VGK-32 / 03 / 03 THIRD PRIZE WINNER ................. ’ச கு ன ம்’

 

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :






 VGK-32 ’ சகுனம் '    


இணைப்பு:




மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு, மிக அதிக எண்ணிக்கையில் பலரும், மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, வெகு அழகாக விமர்சனங்கள் எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
விமர்சனங்கள் மொத்தம்: 

ஐந்து



  







இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 





  


மற்றவர்களுக்கு: 







    


 


முத்தான மூன்றாம் பரிசினை 

வென்றுள்ள விமர்சனம்:


இதை எழுதுவதற்காகக் கதையை மீண்டும் படிக்க வேண்டி வைகோ சாரின் பதிவைப் படிக்கத் திறந்தால், கறுப்புப்  பூனை குதித்துக் குதித்து ஓடியது.  சரி தான், நல்ல சகுனம்னு நினைத்த வண்ணம் எழுத ஆரம்பித்தேன்.  இந்த சகுனம் பார்ப்பது என்பது இந்தியர்களிடம் மட்டும் இல்லை.  மற்ற வெளிநாட்டினரிடமும் உள்ளதே.  ஆகவே இதற்காக நாம் வெட்கப் பட வேண்டாம். மனித மனம் எப்போவும் நன்மையையே எதிர்பார்க்கும். சகுனம் பார்ப்பதும் பார்க்காததும் அவரவர் விருப்பம் என்றாலும் அங்கெல்லாம் பெரும்பாலும் அஃறிணைப் பொருட்களின் இடம் மாறுதல், வீட்டுச் செல்லங்கள் குறுக்கே வருதல் போன்றவை மாத்திரமே பார்க்கப்படுகின்றன.  நம் நாட்டில் அதுவும் தமிழ்நாட்டில் மனிதர்களை வைத்துக் கூட சகுனம் பார்ப்பது என்பது இன்றும் நடக்கிறது. அதிலும் விதவைப் பெண்களை ஒதுக்கித் தள்ளுவது என்பதும், அவர்கள் எதிரே வந்தால் நல்லது நடக்காது என்றும் வெறுப்பவர்கள் பலர் இன்றும் உள்ளனர். அவ்வளவு ஏன், பெற்ற பெண்ணாகவே இருந்தாலும், விதவையாகிவிட்டால் அந்தப் பெண் எதிரே வந்தால் நல்ல காரியம் நடக்காது எனச் சொல்லும் பெற்றோரைப் பார்த்திருக்கிறேன்.


பரிக்ஷைக்குப் போகும்போதும் சகுனம் பார்ப்பார்கள்.  நேரம் பார்ப்பார்கள். ஆனால் பரிக்ஷைக்கு நன்கு படிப்பது முக்கியம் என்பது பெரும்பாலான பெற்றோருக்குத் தெரிவதில்லை; புரிவதில்லை.  படிக்காமல் வீணே நாட்களைக் கழித்துவிட்டுப் பின்னர் சகுனம் சரியில்லை, ராகு காலத்தில் பரிக்ஷை ஆரம்பிச்சது என்றெல்லாம் சொல்வது சப்பைக்கட்டுத் தான். 


நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசன் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.


எனக் குமரகுருபரர் கந்தரலங்காரத்திலே கூறியது போல் இறைவன் எந்நேரமும் நமக்குத் துணை இருக்க சகுனம் வந்து என்ன செய்துவிடும்! கல்மிஷமில்லாமல் இருக்கும் சிவராமனுக்குக் கிடைத்த அவப்பெயர் தான் கதைக்கருவே.  மிகச் சிறிய கருவை வைத்துக் கொண்டு தேவையான இடங்களில் நகாசுவேலைகளைச் செய்து கதையை எழுதி இருக்கிறார் வைகோ அவர்கள்.   அன்றாட நிகழ்வுகளை உன்னிப்பாய்க் கவனித்து அதோடு மட்டுமில்லாமல் மனித மனங்களின் எண்ணங்களையும், அவை ஒரு மனிதரைத் தூக்கி வைக்கும் அதே நாக்கால் தூக்கி எறிவதையும் நன்கு புரிந்து கொண்டிருக்கும் ஆசிரியர் சம்பவ தினத்தன்று நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியை வைத்துக் கதையைப் பின்னி நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறார்;


அடுக்குமாடிக் குடியிருப்பில் இருப்பவர்கள் மாடி ஏறி, இறங்கினாலோ அல்லது லிஃப்டில் போனாலோ ஒருத்தருக்கொருத்தர் பார்க்காமல் இருக்க முடியாது. பார்த்துத் தான் தீர வேண்டும். பலதரப்பட்டவர்களும் இருப்பார்கள். அவர்களில் விதவைகளும் இருக்கலாம்; சுமங்கலிகளும் இருக்கலாம்; பிராமணர்களும் இருக்கலாம்; மற்றவர்களும் இருக்கலாம். எல்லாம் தெரிந்து கொண்டு தானே அங்கே குடி போகிறோம்! இங்கே சிவராமன் இருக்கும் குடியிருப்பில் லிஃப்ட் பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடுகள் இருப்பதையும் அதனால் தான் படிகளில் ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்கிறது என்பதையும் ஆசிரியர் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்.


காவிரிக்குத் தினமும் குளிக்கச் செல்லும் ஶ்ரீமதிப்பாட்டி நம் கதாநாயகர் சிவராமனுக்கு உறவு தான். ஶ்ரீமதிப்பாட்டி காவிரியில் தினந்தோறும் குளித்துவிட்டு வரும்போது அலுவலகம் செல்லும் சிவராமனைப் பார்ப்பவர்கள் தான். ஶ்ரீமதிப்பாட்டி சுமங்கலியாக இருந்தவரைக்கும் கணவனோடு காவிரிக்குச் சென்றவர்கள் கணவன் இறந்ததால் தன் இரண்டாம் மகனுடன் செல்ல ஆரம்பித்திருக்கிறார்.  கணவன் இறந்துவிட்டதால் தான் விதவை, சிவராமன் அலுவலகம் செல்கையில் எதிரே வரக்கூடாது என ஒதுங்கி இருந்து அவர் கீழே இறங்கி அலுவலகம் செல்லும் திசையில் சென்ற பின்னர் ஶ்ரீமதிப்பாட்டி மேலே ஏறுவார். ஆனால் ஒருநாள் கவனிக்காமல் நேருக்கு நேரே சந்திக்கையில், நேரடியாக சிவராமனிடம் பாட்டியே, தான் எதிரே வந்துவிட்டதால் சகுனம் சரியில்லை என்றும், சற்று உட்கார்ந்து விட்டு போகச் சொல்லியும் சிவராமன் மனதில் துளியும் கல்மிஷமின்றித் தான் சகுனம் பார்ப்பது இல்லை என்றும், இறைவனின் நாமங்களை உச்சரித்த வண்ணம் செல்வதால் தனக்குப் பிரச்னைகள் ஏற்படாது என்றும் சொன்னவர் இத்தனை வருடங்கள் கணவனோடு வாழ்ந்து அனுபவித்த பழுத்த பழமான ஶ்ரீமதிப்பாட்டியை சகுனத் தடை எனத் தான் சொல்ல மாட்டேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டுப் பாட்டியை எப்போதும்போல் சகஜமாகத் தனக்கெதிரே வரும்படியும் சொல்கிறார்.


இத்தனை நல்லமனம் படைத்த சிவராமன் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சுவாமி தரிசனம் செய்ய வரும் மாமியாரை வரவேற்று அழைத்துவர வேண்டி அன்று காலை நான்கு மணிக்கே எழுந்து ரயில் நிலையம் செல்கிறார். மாமியாரை அழைத்து வந்து வீட்டில் விட்டு விட்டு ஏழு மணிக்குள் அலுவலகமும் கிளம்பவேண்டும்.  லிஃப்டோ விடிந்த பின்னரே இயங்கும்.  மாடிப்படிகளில் இறங்கி வந்து  ஆட்டோ பிடித்து ஓட்டுநரைக் காத்திருக்க  வைத்து அன்றாடத் தேவைக்கான பாலை வாங்கி மீண்டும் மாடி ஏறி மனைவியிடம் கொடுக்க மாடி ஏறுகையில் ஶ்ரீமதிப்பாட்டியையும், அவர் மகனையும் பார்க்க நேர்கிறது. இருவரும் காவிரிக்குச் சென்று கொண்டிருந்தனர்.  மனதில் எவ்விதமான கெட்ட எண்ணங்களும் இல்லாத சிவராமன் இதை சாதாரணமான சந்திப்பாகவே எடுத்துக் கொள்கிறார். 


ஆகவே மீண்டும் கீழே இறங்கி ரயில் நிலையம் சென்று மாமியாரை அழைத்துவந்து வீட்டில் விட்டு விட்டு வழக்கமான நேரத்தில் அலுவலகமும் கிளம்பி விடுகிறார்.  அலுவலகத்தில் இருக்கையில் தான் ஶ்ரீமதிப்பாட்டி வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு, இப்போவோ, அப்போவோ என்று கிடக்கும் நிலைமையை மனைவியின் வாயிலாக அறிந்து கொள்கிறார்.  ஏதும் நடக்கும் முன்னர் சிவராமனின் மனைவியும், தன் தாயை அழைத்துக் கொண்டு கோயிலுக்கும் போயிட்டு வந்து விடுகிறார்.  மாமியாரும் மாப்பிள்ளை சிவராமனுக்காகத் திரட்டுப்பாலும் காய்ச்சுகின்றார். இந்த இடத்தில் சிவராமன் தன் மனைவி சமையலில் அவ்வளவு கெட்டிக்காரி இல்லை என்பதை ஜாடையாகச் சுட்டிக்காட்டுகிறார்.  ஆனால் தாயைப்போலவே, நன்கு சமைக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.  :)


ஶ்ரீமதிப்பாட்டி வீட்டில் தான் இருக்கிறார்கள் என்பதால் சிவராமன் தன் மனைவியுடன் ஶ்ரீமதிப்பாட்டிக்காகத் திரட்டுப்பாலும் எடுத்துக் கொண்டு அவரைப் பார்க்கப் போகிறார்.  அங்கே பாட்டிக்கும் கொடுத்துவிட்டுச் சுற்றி இருப்பவர்களுக்கும் கொடுக்கையில் இரண்டாவது மகன், அதாவது பாட்டியுடன் தங்கி இருப்பவர் அந்தக் கலவரமான மனநிலையிலும் அந்தத் திரட்டுப்பால் பாத்திரத்தை வாங்கி மிச்சம் இருப்பது எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுகிறார். இது முதல் அதிர்ச்சி சிவராமனுக்கு. தாய் சாகக் கிடக்கும்போது இவர் இப்படிக் கொஞ்சம் கூடக்கூச்சநாச்சம் இல்லாமல் திரட்டுப்பாலை விழுங்குவது நமக்கே ஒரு மாதிரியாகத் தான் இருக்கிறது.  பின்னர் பாட்டியின் மூத்த பிள்ளை குடும்பத்தோடு வருவதை நிச்சயம் செய்து கொண்டு வீட்டிற்கு வரும் சிவராமனுக்கு இரவு பத்தரை மணி அளவில் பாட்டியின் உயிர் பிரிந்தது தெரிந்து உடனே அங்கே சென்று சம்பிரதாயமான சில சடங்குகளைச் செய்து கொடுத்து உதவுகிறார்.  மறுநாளும் காலையில் பாட்டியின் கடைசிக்காரியம் முடிந்ததும், தங்கள் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு தருவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் வலியச் சொல்கிறார் சிவராமன்.


இங்கே ஒரு சின்ன திருத்தம் சொல்லணுமோனு நினைக்கிறேன். சாதாரணமாகச் சாவு நிகழ்ந்த வீட்டில் கர்த்தாக்கள், அதாவது பிள்ளை, நாட்டுப்பெண் ஆகியோர் வீட்டை விட்டுப் பதின்மூன்று நாட்களுக்கு வெளிக்கிளம்ப மாட்டார்கள்.  பதின்மூன்றாம் நாள் காலை, (புண்யாஹவசனம்) ஹோமம், கர்த்தாவுக்கு சுத்திகரிப்பு அபிஷேஹம் எல்லாம் ஆனதும் அன்று காலையோ, மாலையோ முதலில் கோயிலுக்குப் போகச் சொல்வார்கள்  முதல் முதல் கோயில் தான் போகணும். அது வரைக்கும் யார் வீட்டுக்கும் போகக் கூடாது.  துக்கத்தை எதிர்கொண்டு போகக் கூடாது என்பார்கள். ஆகவே பாட்டியின் பிள்ளைகள், மற்றும் நாட்டுப் பெண் ஆகியோர் சிவராமன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டது என்பது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் சாப்பாட்டை அவர்கள் வீட்டில் தான் கொண்டு வைக்க வேண்டும். மற்ற உறவினர்கள் தீட்டில்லாதவர்கள் சிவராமன் வீட்டில் வந்து சாப்பிடலாம்.  இதை வைகோ அவர்கள் எப்படியோ மறந்திருக்கிறார். வாசல் தெளிக்காமல் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்பதைக் குறிப்பிட்டவர் இதை மறந்தே போயிட்டார் போல! :))). 


அதை விடுங்க.  விஷயத்துக்கு வருவோம்.  இவ்வளவு பரோபகாரியான சிவராமனைக் குற்றம் சாட்டுகிறார் இரண்டாம் மகன். அன்று குளிக்கச் செல்கையில் சிவராமன் ஒத்தப் பிராமணனாக எதிரே வந்ததில் தான் தன் தாய் கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டதாகத் திரட்டுப்பாலை வழித்து முழுங்கிய இரண்டாவது பிள்ளை சொல்வது தான் கொடுமை! ஒத்தப் பிராமணனாக சிவராமன் எதிரே வந்தது தான் தன் தாய் வழுக்கி விழுந்து சாகக் காரணம் என்று அவர் மேல் பழியைப் போடுவது தான் தன் தாயைச் சரிவரக் கவனிக்கவில்லை என யாரேனும் சொல்லிட்டால் என்ன செய்வது என்ற குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பிக்கவேண்டித் தானே அன்றி உண்மையில் சிவராமன் காரணமே அல்ல. இன்னொரு பக்கம் பாட்டியைக் கடைசி வரை கிட்டே இருந்து பார்த்துக்கொள்ளாத மூத்த மருமகள் இந்த மட்டும் பாட்டி போய்ச் சேர்ந்தாளே என சந்தோஷப் பட்டுக்கொள்கிறார்.  எல்லோருடைய பேச்சையும் அதிர்ச்சியுடன் கேட்கும் சிவராமனுக்குப் பகல் தூக்கத்தில் பாட்டி வந்து தன்னை ஆசீர்வதிப்பது போல் கனவு வருகிறது.  அது கனவில்லை; உண்மை! சிவராமன் தீர்காயுசோடு சந்தோஷமாக இருக்கணும்  என மனப்பூர்வமாப் பாட்டி ஆசீர்வதித்திருப்பார்.


உப்பும், நீரும் இறங்க இறங்க துக்கம் போகும் என்பார்கள்.  ஆனால் இவர்களுக்கோப் பாட்டி போனதை விட ஒத்த பிராமணன் சகுனம் தான் பெரிதாகத் தெரிகிறது. அதற்குப் பாட்டியின் மூத்த மருமகள் இந்த மட்டும் தொந்திரவு கொடுக்காமல் போய்ச் சேர்ந்த பாட்டியை வாழ்த்துவது எவ்வளவோ பரவாயில்லை. உண்மையும் அதுதானே.  எல்லோருமோ கிடக்காமல், கொள்ளாமல், பிறருக்குச் சங்கடம் தராமல் போகத் தானே விரும்புவோம். அது எளிதில் கிடைக்குமா?  அந்த வகையில் பாட்டி அதிர்ஷ்டசாலி தான். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் எளிதில் கிடைக்காதே!  


 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 

திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்



 வலைத்தளம்: எண்ணங்கள் sivamgss.blogspot.com







Thanks a Lot, Madam.

- vgk




மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



      





மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.






இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.



காணத்தவறாதீர்கள் !






    



அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



VGK-34



’ பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் ’




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


11.09.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்



22 கருத்துகள்:

  1. மிக்க நன்றி. என் விமரிசனம் தேர்ந்தெடுக்கப்படும்கிறது என்பதே எனக்கு ஒரு வகையில் ஆச்சரியம் தான். :))) மற்றப் பரிசுகள் பெற்றவர்களையும் காண ஆவலுடன் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha SambasivamSeptember 6, 2014 at 6:25 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மிக்க நன்றி. என் விமரிசனம் தேர்ந்தெடுக்கப்படும்கிறது என்பதே எனக்கு ஒரு வகையில் ஆச்சரியம் தான். :))) மற்றப் பரிசுகள் பெற்றவர்களையும் காண ஆவலுடன் காத்திருக்கேன்.//

      ’சகுனம், சிவராமன், விமர்சகர்கள் மற்றும் நான்’ என்ற தலைப்பில் உயர்திரு நடுவர் அவர்கள் ஒரு சிறப்புக்கட்டுரை எழுதி அனுப்ப உள்ளார்கள்.

      அது வரும் திங்கட்கிழமை [08.09.2014] அன்று மாலை 6 மணி சுமாருக்கு என் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட உள்ளது.

      அதை ஊன்றிப்படியுங்கோ. மேலும் மேலும் இதே போட்டியில் பல பரிசுகளைத் தாங்கள் பெற்றிட மிகவும் உதவியாக இருக்கக்கூடும்.

      அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
  2. சகோதரி கீதா சாம்பசிலம் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. //அன்றாட நிகழ்வுகளை உன்னிப்பாய்க் கவனித்து அதோடு மட்டுமில்லாமல் மனித மனங்களின் எண்ணங்களையும், அவை ஒரு மனிதரைத் தூக்கி வைக்கும் அதே நாக்கால் தூக்கி எறிவதையும் நன்கு புரிந்து கொண்டிருக்கும் ஆசிரியர் சம்பவ தினத்தன்று நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியை வைத்துக் கதையைப் பின்னி நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறார்;
    //அருமை! பரிசுபெற்ற தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  4. பல அரிய கருத்துகளுடன்
    அருமையாக விமர்சனம் எழுதி
    பரிசுபெற்ற திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. படிக்கப் படிக்க முகத்தைச் சுளிக்க வைத்தக் கதை. அது வைகோவின் வெற்றி.

    விமரிசனம் நன்று. விவரம் தெரிந்தவர் என்று தொடர்ந்து நிரூபிக்கிறீர்கள். இருந்தாலும்.. ஹிஹி.. கோள் மீதான நம்பிக்கைக்கும் குமரேசன் மீதான நம்பிக்கைக்கும் வித்தியாசமே இல்லை.

    இந்தக் கதையில் சிவராமன் அந்தப்பாட்டியின் பிள்ளை இருவரில் யார் நேர்மையானவர் என்றக் கேள்வி எனக்கு அடிக்கடி தோன்றியது. உங்க. விமரிசனம் கொஞ்சம் தெளிய வைக்குது.

    பதிலளிநீக்கு
  6. //தேர்ந்தெடுக்கப்படும்கிறது//

    "தேர்ந்தெடுக்கப்படும் /கிறது" என வந்திருக்க வேண்டும். நடுவில் போடவேண்டிய ஸ்லாஷ் விழலை! :))) கீ போர்டில் மறுபடி சிலது விழறதில்லை. அதைக் கவனிக்கணும் என்னனு! :)))))

    பதிலளிநீக்கு
  7. //ஹிஹி.. கோள் மீதான நம்பிக்கைக்கும் குமரேசன் மீதான நம்பிக்கைக்கும் வித்தியாசமே இல்லை. //

    கோள் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய அவசியம் குறித்த ஒரு கட்டுரை அறிவியல் ரீதியாக எழுதியதைப் படித்திருக்கேன் அப்பாதுரை. எங்கேனு தான் நினைவில் இல்லை. மற்றபடி உங்கள் கருத்து/ குற்றச்சாட்டு(?) ஹிஹிஹி, சரியே. எனக்குக் குமரேசனிடமும் நம்பிக்கை உண்டு. கோள்கள் மீதும் நம்பிக்கை உண்டு. ஆனால் ஜாதகம், ஜோசியம், வாரபலன், தினபலன் அப்படினு அலைய மாட்டேன். ராகுகாலத்திலே எந்தக் காரியம் செய்தாலும் வெற்றி கிட்டுவதையும் பார்த்திருக்கேன். அதே சமயம் மனதில் ராகு காலமா என்ற எண்ணம் தோன்றினால் அதில் சுணக்கம் ஏற்படுவதையும் கவனித்திருக்கேன். :)))) இது மனதைப் பொறுத்ததே!

    பதிலளிநீக்கு
  8. விட்டுப்போன சில விஷயங்களையும் ஞாபகப்படுத்தி, கடைசி பாராவில் நிதர்சனமான வயதானவர்களின் உண்மை எதிர்பார்ப்பையும் எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.
    கிராமத்துப் பாட்டிகளுக்கு கோவிலும்,குளமும் கிடைத்தது. நகரத்துப் பாட்டிகளுக்கு?
    நல்ல விமரிசனம். கதையும் உள்ளங்கை,நெல்லிக்கனி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  9. //கிராமத்துப் பாட்டிகளுக்கு கோவிலும்,குளமும் கிடைத்தது. நகரத்துப் பாட்டிகளுக்கு?

    அருமையான கேள்வி. எத்தனை இழந்திருக்கிறோம் வளர்ச்சியின் வேகத்தில்?

    பதிலளிநீக்கு
  10. நல்ல விமர்சனம். மூன்றாம் பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. அன்பின் கீதா சாம்பசிவம் அவர்களுக்கு - வெற்றி பெற்று பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும். நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  12. மூன்றாம் பரிசு வென்ற கீதா மாமிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. http://sivamgss.blogspot.in/2014/09/blog-post_12.html
    திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்.

    இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  14. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20/21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    கதையின் ஒவ்வொரு வரியும் நிஜத்தில் நடப்பதைப் போன்ற உணர்வை தந்தது. ஸ்ரீமதி பாட்டி இறந்த சமயம்... நடந்த நிகழ்வுகளை படிக்கும் போது, ஒரு தத்ரூபம்... ஒரு பேரமைதி, மனத்துள் ஒரு அதிர்வு கூடவே இருந்தது.

    நன்றி கெட்ட மனிதனின் வார்த்தைகள் சுட்டபோது இதயம் அடைந்த உணர்வு கூட தொற்றிக் கொண்டது.

    திரட்டுப் பாலின் ருசியும், சமையலின் ருசியும், அங்கங்கே மனத்தைப் பறிகொடுக்க வைத்தது. பசியையும் தூண்டியது. எழுத்தால் உணர்வுகளைத் தூண்டும் ரகசியம் கதை முழுக்க தெரிகிறது... இது கதையல்ல நிஜம்... என்று.!

    இது தான் உங்கள் வெற்றி. வாழ்க..!

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    பதிலளிநீக்கு
  15. மூன்றாம் பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. மூன்றாம் பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. மூன்றாம் பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. பரிசு வென்ற திருமதி கீதா சாம்பசிவமவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. திருமதி கீதாசாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. //எனக் குமரகுருபரர் கந்தரலங்காரத்திலே கூறியது போல் இறைவன் எந்நேரமும் நமக்குத் துணை இருக்க சகுனம் வந்து என்ன செய்துவிடும்! கல்மிஷமில்லாமல் இருக்கும் சிவராமனுக்குக் கிடைத்த அவப்பெயர் தான் கதைக்கருவே. மிகச் சிறிய கருவை வைத்துக் கொண்டு தேவையான இடங்களில் நகாசுவேலைகளைச் செய்து கதையை எழுதி இருக்கிறார் வைகோ அவர்கள். அன்றாட நிகழ்வுகளை உன்னிப்பாய்க் கவனித்து அதோடு மட்டுமில்லாமல் மனித மனங்களின் எண்ணங்களையும், அவை ஒரு மனிதரைத் தூக்கி வைக்கும் அதே நாக்கால் தூக்கி எறிவதையும் நன்கு புரிந்து கொண்டிருக்கும் ஆசிரியர் சம்பவ தினத்தன்று நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியை வைத்துக் கதையைப் பின்னி நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறார்;//-ஒட்டுமொத்தமாக..ரசித்தேன்.

    பதிலளிநீக்கு