About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, September 6, 2014

VGK 32 / 02 / 03 - SECOND PRIZE WINNERS ...... ச கு ன ம் !

 

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :






 VGK-32 ’ சகுனம் '    


இணைப்பு:




மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு, மிக அதிக எண்ணிக்கையில் பலரும், மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, வெகு அழகாக விமர்சனங்கள் எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
விமர்சனங்கள் மொத்தம்: 

ஐந்து




  







இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 





  


மற்றவர்களுக்கு: 







    






இனிப்பான இரண்டாம் பரிசினை 

வென்றுள்ள விமர்சனம் - 1




சாதாரண நிகழ்வுகளைக் கருவாக்கிக் கதை புனையும் வை.கோவின் திறமை தொடர்ந்து பிரமிக்க வைக்கிறது. அந்த வரிசையில் இன்னொரு கதை 'சகுனம்'.


சகுனங்களில் அதிகம் நம்பிக்கையில்லாத சிவராமன், ஒரு சராசரி வாசி. உறங்கி எழந்து படியிறங்கி பால் மளிகை வாங்கி ஆபீஸ் போய் அவ்வப்போது உறவினர்களைச் சந்தித்து மனைவியிடம் சூடான காபி கேட்டு வாங்கி அருந்தி - வாழ்க்கையை சிக்கலில்லாது வாழும் சராசரி வாசி.



வெளியில் போகும் பொழுது அவ்வப்பொழுது எதிரில் வரும் விதவைப் பெண்மணி ஸ்ரீமதிப் பாட்டி, இவர் எதிரில் வந்த தீச்சகுனத்துக்காக வருத்தப்படுகையில் சற்றும் தயங்காமல் இன்முகத்தோடு சமாதானம் சொல்லிப் பிரிகிறார் சிவராமன்.



வைகுண்ட ஏகாதசியன்று வழக்கம் போல் இருவரும் எதிரெதிரே சந்திக்கிறார்கள். ஆனால் அன்றிரவு ஸ்ரீமதிப் பாட்டி இறந்து விடுகிறார். ஊரில் மற்றவர்கள் 'வைகுண்ட ஏகாதசிச் சாவு' என்று நல்ல சகுனப் பார்வையில் பேசுகிறார்கள். ஆனால், ''ஒற்றைப் பிராமணன்' சிவராமன்  எதிரில் வந்த தீச்சகுனத்தால் தன் தாய் இறந்துவிட்டதாக அவதூறு பேசுகிறார் இறந்தவரின் ஐம்பது வயது மகன். 'என்ன உலகமடா!'

என்று வியந்து வழக்கம் போல் சராசரியாகிறார் சிவராமன்.



கொஞ்சம் யோசித்தால் 'இதெல்லாம் ஒரு கதையா' என்று எண்ணத் தோன்றுகிறது. அதே நேரம், மனித நேயம் மற்றும் உளவியல் பார்வைகளில் இந்தக் கதைக்குள் எத்தனை ஆழம் என்றும் சிந்திக்க வைக்கிறது.



கதையைப் படித்த உடனே மறக்கலாம் - உண்மையில் அப்படிப்பட்ட கரு, கதை.



அல்லது நிதானமாக அசை போடலாம். இத்தனை படிப்பு, இத்தனை வளர்ச்சி, இத்தனை முற்போக்கு, இத்தனை முன்னேற்றம்...  எல்லாம் இருந்தும் மனிதரின் உள்பார்வை மட்டும் பின்னோக்கியே போகிறதே, ஏன்?



எளிமை என்பது வலிமையான ஆமையோடாக இங்கே பயன்பட்டிருப்பது புரிந்து வியக்கலாம். இது கதாசிரியரின் வெற்றி. 



சம்பவங்களின் இடையில் சமையல் குறிப்புக்கு விலகி மீண்டும் பாதையில் வந்து சேருகிறது கதை. இது வரை பார்த்திராத வித்தியாசம். கதையோ ஏற்கனவே சாதாரண நிகழ்வின் இழை. இதில் சமையல் குறிப்புக்காக விலகி கதையை விட்ட இடத்தில், வாசகரின் கவனம் விலகாமல், மீண்டும்  சேரும்படி பின்னத் துணிச்சல் வேண்டும். பாராட்டுக்கள்.



சில புதுச் சொற்கள் (எனக்கு). தடிப்பிரம்மச்சாரி. இறந்த பெண்மணியின் திருமணமாகாத மகனை இப்படி 'வை'கிறார் சிவராமன்.



தடிப்பிரம்மசாரியா? பிரம்மச்சாரி என்பது வசவா? திருமணமானவர்களை எப்படி வைவது? தடிக்கிருஹஸ்தன்? கொஞ்சம் சிரிப்பு வந்தது உண்மை.



கதையெங்கும் நிறைய கண்மூடித்தன சம்பிரதாயத் தூவல்கள். வாசல் தெளிக்காமல் வெளியேறத் தடை, தடிப்பிரம்மசாரி, அமங்கலி எதிர்காணல், பிள்ளையாரை மனதில் எண்ணி தீச்சகுன விளைவைத் தவிர்ப்பது, ஒற்றைப் பிராமணன் (மிக கவனமாக எழுதியிருக்கிறார் வைகோ: 'ஒத்தப் பிராமணன்' என்று:-). ஏகாதசி மரணம், துவாதசி தகனம்... இன்னும் பல.  'இவற்றை நம்பி இயற்கையான மனித நேயங்களைத் தவற விடுகிறோம்' என்ற செய்தியை, 'மனிதர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படியெல்லாம் பேசுகிறார்கள், எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள், நன்றிகெட்ட ஜன்மங்கள்' என்ற சிவராமனின் ஆதங்க வாயிலாகச் சொல்கிறார் கதாசிரியர்.



சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாதது போல் சித்தரிக்கப்பட்டிருக்கும் சிவராமன் பாத்திரம் சில இடங்களில் அதே சடங்கு சம்பிரதாய்ங்களில் இடறுவது முரண். ஸ்ரீமதிப் பாட்டி இறந்ததும் சிவராமன் தன் வீட்டிலிருந்து 'கங்கை நீர் அடைத்து வைத்திருந்த சொம்பை ஞாபகமாக எடுத்துப்போய் அதை உடைத்து பாட்டியின் வாயில் கொஞ்சம் ஊற்றி' வருவது ஒரு உதாரணம்.



வாழ்க்கை வம்புகள் ஆங்காங்கே சுவாரசியமாக பின்னப்பட்டிருக்கின்றன. மாமியார் செய்த உணவை சுவைத்தபடி மனைவியிடம் 'நீ செஞ்சதா? சூப்பரா இருக்கே?' என்பது, 'அம்மாவுக்குச் சமையல் நன்றாக வந்தால் மகளுக்கு வராது' என்ற 'சோதித்துப் பார்த்த உண்மை', சகுனம் பார்ப்பதில்லை என்றவுடன் ஸ்ரீமதிப் பாட்டியின் 'மகராஜனா இருடா' என்ற இயற்கையான நெகிழ்வு, இறந்தவரைப் பற்றிய ஊர்பேச்சு,  இறந்தவரின் இரண்டு மகன்களின் வெவ்வேறு கோண உரையாடல், கல்யாணச் சாவுக்கு வந்தவருக்குச் சாப்பாடு போட்ட புண்ணியத்தைப் பங்கு போட்டுக்கொண்ட மாமியார்-மருமகள்.. இப்படி பல இடங்களில் இயல்பாகப் பின்னியிருக்கும் விதம் சாதாரண கதைக்கு சுவாரசிய மெருகூட்டுவது நிஜம்.



'வைகுண்ட ஏகாதசி' என்ற setupல் தொடங்கி கடைசியில் கண்மூடித்தனம் ஒட்டிய சமூக சச்சரவில் paybackஆக முடிவது ரசிக்க வைத்தது. இல்லையெனில் வைகுண்ட ஏகாதசி பெருமாள் தரிசனம் தொட்டு சிவராமன் அதிகாலையில் எழுந்தது மறந்தே போயிருக்கும்.



ஓரளவுக்கு யூகிக்க முடிந்ததென்றாலும் ரசிக்க வைத்த முடிவு. 'எந்நாளோ?' என்று கவிபோல் ஏங்க வைத்த முடிவு.



கதைக்கு கரு கிடைக்காமல் அவனவள் (நான்) தவிக்கும் பொழுது வைகோவால் எப்படி முடிகிறது? கொஞ்சம் விட்டால், 'இரவு படுத்து உறங்கி காலையில் விழித்து எழும்' அல்லது 'எட்டு மணிக்கு சாப்பிட உட்கார்ந்து நிதானமாக ஒன்பதரைக்கு சாப்பிட்டு எழும்' அல்லது 'வெயில் களைப்பினால் பானையிலிருக்கும் கடைசி டம்ளர் தண்ணீரைக் குடிக்கும்'... சப்பில்லாத சம்பவங்கள் இவர் கற்பனையில் சுவாரசியமான கதைகளாகலாம்.



இந்த மேஜிக் - இந்த விமரிசனப் போட்டியில் நான் இவரிடம் கற்றுக் கொண்டது என்றுத் தயங்காமல் சொல்வேன்.




 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 

திரு. அப்பாதுரை அவர்கள்
 


 வலைத்தளம்: மூன்றாம் சுழி   http://moonramsuzhi.blogspot.com






Thanks a Lot My Dear Appadurai Sir.

- vgk




மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



      



இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றதுடன்

இந்தப்போட்டியில் முதன்முதலாக ஹாட்-ட்ரிக் அடித்துள்ள

திரு. அப்பாதுரை அவர்களுக்கு 

நம் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.





  

VGK-30 TO VGK-32


Hat-Trick Prize Amount will be fixed later 

according to his Further Continuous Success 

in VGK-33, VGK-34 and VGK-35



     







இனிப்பான இரண்டாம் பரிசினை 

வென்றுள்ள விமர்சனம் - 2





கதையின் தலைப்பிலேயே கதைக்குள் விறுவிறுப்பாக நுழையும் வகையில் அமைப்பது ஆசிரியரின் தனித்திறமை ..

பதிவில் ஆங்காங்கே குறுக்கே குறுக்கே ஓடும் பூனைகள் கதைக்கு வலுசேர்க்கும் வகையில் திறமையாகக் கை(கால்?!)யாளப்பட்டிருக்கிறது.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி ஸ்வர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை கதையின் ஆரம்பத்திலேயே மனக்கண்களில் காட்சிப்படுத்தி கன்னத்தில் தட்டிக்கொண்டு பெருமாளே.. ரங்கா..! என்று கதைக்குள் நுழைகிறோம்..


வாசல் தெளித்தபின்பே இல்லத்தில் உள்ளவர்களை வெளியனுப்பும் சம்ப்ரதாயம் இன்னும் பலரும் கடைப்பிடிப்பதுதான்..அதையும் கதையில் நுணுக்கமாகக் காட்சிப்படுத்துவது பிரமிக்கவைக்கிறது..!


கதாநாயகன் சிவராமன் பால் பாக்கெட்டுகளுடன் படிஏறி வருவதும், எண்பது வயது ஸ்ரீமதிப்பாட்டியும் , ஐம்பது வயது  இரண்டாவது மகனும் இறங்கி வருவதும் பாட்டி அன்றே திரட்டுப்பால் கடைசியாக சுவைத்து பால் தெளிக்கும் சடங்கும் நடைபெறப்போவதை சூசகமாகத்தெரிவிக்கும் குறிப்பாகவும் எடுத்துக்கொண்டால் கதை  இன்னும் சுவைக்கிறது .. கதையின் தலைப்பு ஆங்காங்கே பின்னிப் பிணைந்து மின்னலடித்து பளீரிடுகிறது..!


இந்த அவசர யுகத்தில், விஞ்ஞான உலகத்தில், சகுனம் பார்ப்பது எவ்வளவு ஒரு மூட நம்பிக்கை என்பதை , நாசூக்காக உணர்த்திவிடும் கட்டம் மிகவும் இதமாக இருக்கிறது..


அம்மா சமையலில் கெட்டிக்காரியாக இருந்தால்,  பெண் நேர்மாறாகத்தான் இருப்பார்கள் என்று பல இடங்களில் சோதித்துக் கண்டு பிடித்த உண்மையை வெளிச்சத்துக்குக்கொண்டு வந்து அதன் காரண காரியங்களையும் பட்டியலிடும் நேர்த்தி சிலாகிக்கவைக்கிறது..!


சரியாக திரட்டுப்பால் செய்யாவிட்டால் வெங்காய்ச்சட்னி மாதிரி இருக்கும் என்று உதாரணம் காட்டும் போது திகைத்துப்போகிறோம் .. எப்படி எல்லாம் நுணுக்கமான அவதானிப்பு என்று..


பாட்டியின் இரண்டாவது மகனின் குணச்சித்திரத்தை மீதம் வைக்காமல் திரட்டுப்பால் முழுவடையும் வழித்துச் சாப்பிடுவதிலும் , பெற்றதாயார் உயிர் ஊசலாடும் நேரத்திலும் கல் மனதின் மகிழ்ச்சியையும் , அழுகையைக்கூட வலுக்கட்டாயமாக வரவழைக்கும் முயற்சியும் உள்ளங்கை நெல்லிக்கனியாக  தெற்றெனக் காட்டும் உத்தி பாராட்டுப்பெறுகிறது..


ஒவ்வொருவர் குணச்சித்திரத்தையும் , எண்ணத்தின் வண்ணங்களையும் நவரசங்களாய் இழைத்து இழைத்து மெருகேற்றி பட்டை தீட்டிய வைரங்களாய் மிளிர்கின்ற வகையில் கதையை அமைத்த கதாசிரியரின் கைதேர்ந்ததிறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ..


ஓயாமாரி சுடுகாட்டின் ஓயாத ஒப்பாரியும் ,, கதையில் காட்சிப்படுத்துவது சற்றே நெருடுகிறது..?!!


எத்தனையோ நல்ல நிகழ்வுகளை விலாவரியாகச்சொல்லாம்.. இந்தமாதிரி அசம்பாவிதங்களை பூடகமாக்ச்சொல்லி நிறுத்துவதுதான் சரி.


பாகவதத்தில் கூட பாருங்கள் .. நரகானு வர்ணணைகளை படிக்கவே சிரமப்படும் வகையில் கடினமாக சொற்பிரயோகங்களை உபயோகித்திருப்பார்கள்..


மற்ற ஸ்கந்தங்களின் அர்த்தங்களை விரிவாகச்சொல்லுபவர்கள்  அந்த நரக அனுபவங்களை மேலோட்டமாகத்தொட்டுக்கூட சொல்லமாட்டார்கள்..


காரணம் பாகவதம் படிப்பவர்கள் அந்த நரக அனுபவத்திற்கு உட்படமாட்டார்கள் என்பதோடு அதைப்போய் சொல்லி ஏன் பயமுறுத்தவேண்டும் என்பதும் கூடத்தான் ..!


அதுவே கண்ணன் பிறப்பு போன்ற சுப நிகழ்வுகளை நாள் கணக்கில் விரிவாக விவரித்து மகிழ்வார்கள்..பாகவதம் முடிவிலும் சந்தோஷமாக மீண்டும் ஒருமுறை படிப்பார்கள்.. 


ஒரு கதை வாழ்வின் போக்கில் சுப அதிர்வுகளை ஏற்படுத்தவேண்டும் ..


அதுவும் வெள்ளிக்கிழமையும் முகூர்த்தநாளும் அதுவுமாக விமர்சனப்போட்டிக்கு படிக்கும் போது அன்று நடந்த அசம்பாவிதத்துக்கு கவனக்குறைவே காரணமென்றாலும் கதாசிரியரைத்தான் கைகாட்டுகிறது மனித மனம் ..அந்த இரண்டாவது மகனைப்போல..! மனிதர்கள் யாருமே விதிவிலக்குக்கிடையாது.. 


முள் வந்து காலில் தைத்தது என்றுதான் தேமே என்று கிடக்கும் முள்ளின் மீது பழியைப்போடுவார்களே.. தவிர நான் போய் முள்ளைக்காலில் ஏற்றிக்கொண்டேன் என்றெல்லாம் வாயில் வராது..


செவிடன் காதில் ஊதிய சங்குபோலத்தான் சரியான கருத்துகள் உரக்கச்சொல்லப்படும் ..


உதவி செய்தவர் வீட்டிலிருந்துகொண்டே அவரைப்பற்றி தூற்றிபேசுவது . எத்தனை காலம் ஆனாலும் இப்படிபட்டவர்களின் குணங்கள் மட்டும் மாறவே மாறாதுதான்..


எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு - அல்லவா?

கீதையின் ஆரம்பத்தில் யுத்தம் ஆரம்பிக்குமுன் அர்ஜுனன் பகவானிடம் சொல்கிறான். ‘கெட்ட சகுனங்களைப் பார்க்கிறேன்’ என்று நாம் சொல்வதைத்தான், ‘விபரீதமான நிமித்தங்களைப் பார்க்கிறேன்’என்கிறான்.


இந்த சகுனமோ நிமித்தமோ அதுவே பலனை உண்டாக்குவதில்லை. முன்பே நிர்ணயிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு indicator  ஆக மட்டுமே இருக்கிறது..


இவற்றை எல்லாம் காலம் காலமாக கொட்டி முரசாக அறைந்து அறிவுறுத்தி அருமையான கதையைப்படைத்த படைப்பாளியின் சமூக சிந்தனையையும்  படைப்பு க்கத்தையும் பாராட்டுகிறோம்.. வைகுண்டத்திலிருந்து வாழ்த்தும் பாட்டியோடு சேர்ந்து..!



 



இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 

திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்


  வலைத்தளம்: "மணிராஜ்"  jaghamani.blogspot.com









Thanks a Lot,  Madam.

-vgk




மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.




     




மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்


சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது.



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.



காணத்தவறாதீர்கள் !






    



அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



VGK-34



’ பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் ’




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


11.09.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்




20 comments:

  1. இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றதுடன்

    விமர்சனப்போட்டியில் முதன்முதலாக
    ஹாட்-ட்ரிக் அடித்துள்ள
    திரு. அப்பாதுரை அவர்களுக்கு
    பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  2. பரிசுபெற்ற திரு. அப்பாதுரை திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. எமது விமர்சனம் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  4. என்னோட பின்னூட்டம் மறுபடி, மறுபடி காக்கா உஷ்ஷா? :)))

    அப்பாதுரை போட்டியில் கலந்து கொள்ள ஆரம்பித்தால் நமக்கெல்லாம் பரிசே கிடைக்காது என நான் நினைத்தது சரியாப் போயிற்று. :)) வித்தியாசமான கோணத்தில் விமரிசனம் எழுதிய அப்பாதுரைக்கும், அழகான பார்வையோடு விமரிசனம் எழுதிய ராஜராஜேஸ்வரிக்கும் வாழ்த்துகள்.

    வந்து எழுத ஆரம்பிச்ச உடனே ஹாட் ட்ரிக் அடிச்ச அப்பாதுரையைப் பார்த்தால் பொறாமையா இருக்கு! :))))

    ReplyDelete
  5. மறுபடி அனுப்பிச்சிருக்கேன். போயிருக்கானு தெரியலை. என்றாலும் மீண்டும்......
    என்னோட பின்னூட்டம் மறுபடி, மறுபடி காக்கா உஷ்ஷா? :)))

    அப்பாதுரை போட்டியில் கலந்து கொள்ள ஆரம்பித்தால் நமக்கெல்லாம் பரிசே கிடைக்காது என நான் நினைத்தது சரியாப் போயிற்று. :)) வித்தியாசமான கோணத்தில் விமரிசனம் எழுதிய அப்பாதுரைக்கும், அழகான பார்வையோடு விமரிசனம் எழுதிய ராஜராஜேஸ்வரிக்கும் வாழ்த்துகள்.

    வந்து எழுத ஆரம்பிச்ச உடனே ஹாட் ட்ரிக் அடிச்ச அப்பாதுரையைப் பார்த்தால் பொறாமையா இருக்கு! :))))

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி.

      பரிசுத் தேர்வை எதிர்ப்பார்க்கவில்லை. பரிசு கிடைக்காட்டா பரவாயில்லை; அடுத்த இந்தியப் பயணத்தில் தினம் அவர் வீட்டுக்கு வந்து ஜன்னலில் தினம் ரெண்டு மணி நேரம் உட்காருவதே பெரிய பரிசு தான் என்று ஒரு சின்ன இமெயில் அனுப்பியிருந்தேன்.

      Delete
  6. சகோதரி இராஜராஜசுவரி மற்றும் திரு அப்பாதுரை இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. பரிசுத் தேர்வுக்கு மிகவும் நன்றி.
    தேர்வு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் காரஞ்சன் ( சேஷ் ) என்கிற சேஷாத்ரி , கீத மஞ்சரி, இராஜ இராஜேஸ்வரி, அப்பாதுரை ஆகியோருக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      Delete
  8. ஆஹா..... அப்பாதுரையும் களத்தில் இறங்கிவிட்டாரா....

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கம் வருவதால் தெரியவில்லை.

    இரண்டாம் பரிசு பெற்ற அப்பாதுரை மற்றும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. //வாழ்க்கை வம்புகள் ஆங்காங்கே சுவாரசியமாக பின்னப்பட்டிருக்கின்றன. மாமியார் செய்த உணவை சுவைத்தபடி மனைவியிடம் 'நீ செஞ்சதா? சூப்பரா இருக்கே?' என்பது, 'அம்மாவுக்குச் சமையல் நன்றாக வந்தால் மகளுக்கு வராது' என்ற 'சோதித்துப் பார்த்த உண்மை', சகுனம் பார்ப்பதில்லை என்றவுடன் ஸ்ரீமதிப் பாட்டியின் 'மகராஜனா இருடா' என்ற இயற்கையான நெகிழ்வு, இறந்தவரைப் பற்றிய ஊர்பேச்சு, இறந்தவரின் இரண்டு மகன்களின் வெவ்வேறு கோண உரையாடல், கல்யாணச் சாவுக்கு வந்தவருக்குச் சாப்பாடு போட்ட புண்ணியத்தைப் பங்கு போட்டுக்கொண்ட மாமியார்-மருமகள்.. இப்படி பல இடங்களில் இயல்பாகப் பின்னியிருக்கும் விதம் சாதாரண கதைக்கு சுவாரசிய மெருகூட்டுவது நிஜம்.
    // அருமையாக விமர்சனம் எழுதி பரிசு பெறும் திரு. அப்பாதுரை ஐயா அவர்களுக்கு என் பாராட்டுகள்!

    ReplyDelete
  10. //இந்த சகுனமோ நிமித்தமோ அதுவே பலனை உண்டாக்குவதில்லை. முன்பே நிர்ணயிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு indicator ஆக மட்டுமே இருக்கிறது..




    இவற்றை எல்லாம் காலம் காலமாக கொட்டி முரசாக அறைந்து அறிவுறுத்தி அருமையான கதையைப்படைத்த படைப்பாளியின் சமூக சிந்தனையையும் படைப்பு ஆக்கத்தையும் பாராட்டுகிறோம்.. வைகுண்டத்திலிருந்து வாழ்த்தும் பாட்டியோடு சேர்ந்து..!
    // அருமை! திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

    ReplyDelete
  11. இரண்டாம் பரிசை வென்ற இராஜராஜேஸ்வரி அம்மாவுக்கும், அப்பாதுரை சாருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20/21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    கதையின் ஒவ்வொரு வரியும் நிஜத்தில் நடப்பதைப் போன்ற உணர்வை தந்தது. ஸ்ரீமதி பாட்டி இறந்த சமயம்... நடந்த நிகழ்வுகளை படிக்கும் போது, ஒரு தத்ரூபம்... ஒரு பேரமைதி, மனத்துள் ஒரு அதிர்வு கூடவே இருந்தது.

    நன்றி கெட்ட மனிதனின் வார்த்தைகள் சுட்டபோது இதயம் அடைந்த உணர்வு கூட தொற்றிக் கொண்டது.

    திரட்டுப் பாலின் ருசியும், சமையலின் ருசியும், அங்கங்கே மனத்தைப் பறிகொடுக்க வைத்தது. பசியையும் தூண்டியது. எழுத்தால் உணர்வுகளைத் தூண்டும் ரகசியம் கதை முழுக்க தெரிகிறது... இது கதையல்ல நிஜம்... என்று.!

    இது தான் உங்கள் வெற்றி. வாழ்க..!

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    ReplyDelete
  13. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திரு அப்பாதுரை அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திரு அப்பாதுரை அவர்களுக்கும் பரிசு வென்றதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும், திரு அப்பாதுரை அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. பரிசு வெனற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா திரு அப்பாதுரையவங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. திருமதி இராஜராஜேஸ்வரிமேடம் திரு அப்பாதுரை அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. பரிசினை வென்ற விமர்சகர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துகள்

    ReplyDelete