என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

VGK 31 / 01 / 03 FIRST PRIZE WINNERS - முதிர்ந்த பார்வை

 

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :



 VGK-31  


 ’ முதிர்ந்த பார்வை ‘  

இணைப்பு:




    


 


மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு, மிக அதிக எண்ணிக்கையில் பலரும், மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, வெகு அழகாக விமர்சனங்கள் எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
விமர்சனங்கள் மொத்தம்: ஐந்து


  






இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 




  


மற்றவர்களுக்கு: 







    




முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள 

விமர்சனம் - 1


ஒரு மனிதனின் பார்வையில் முதிர்ச்சி எப்போது வரும்அனுபவத்தால் அல்லது வயதால்இங்கே வயதும் அனுபவமும் இணைந்த இரு முதிய பார்வைகளின் ஒரு புதிய பார்வைதான் இந்த முதிர்ந்த பார்வைக்கான கதைக்கரு.

பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டு வரும் மகன்தாரை தாரையாய்க் கண்ணீர் விடுகிறான் என்றால் நிச்சயமாக அவன் மனமொப்பி அக்காரியத்தை செய்திருக்கவில்லை என்பது ஆரம்ப வரிகளிலேயே புலப்பட்டுவிடுகிறது. அப்படியானால் ஏன் அவ்வாறு செய்தான்நம்முடைய சந்தேகப்பார்வை அவனைப் போலவே நமக்கும் அவன் மனைவியிடத்தில்தான் பதிகிறது.

கல்யாணி தன் மாமனார் மாமியாரை சொந்த தாய் தகப்பனைப் போலவே கவனித்துக் கொள்கிறாள் என்பதும் அது மணிகண்டனுக்கும் தெரியும் என்பதுமான வரிகள் அவளுக்கு சாதகமாகவே உள்ளன. சொல்லப்போனால் கல்யாணியின் பெற்றோரே மகளிடம் இந்த விஷயத்தால் மனத்தாங்கல் கொள்ளும் அளவுக்கு சம்பந்திமார் இருதரப்பிலும் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் வாழ்ந்திருக்கின்றனர். வேறு என்னதான் பிரச்சனையாக இருக்கமுடியும்கதையில் இதுவரை மணிகண்டன்கல்யாணி தம்பதியரின் குழந்தைகள் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கது. 

யாரோ ஒரு ஜோசியர் பேச்சைக் கேட்டுக்கொண்டு இப்படி தன் மேல் பாசமும் பற்றும் உள்ள மகனையும் மருமகளையும் அம்போவென்று பரிதவிக்க விட்டுவிட்டுப் போவார்களாஉண்மையிலேயே ஜோசியர் யாராவது வந்தாராஅவர்கள் சொன்னது போல் சொன்னாரா என்ற சந்தேகம் பிறக்கிறதுஇந்த இடத்தில் மகன் மருமகள் இருவரும் அப்போது வீட்டில் இல்லை என்றும் ஜோசியரைப் பற்றி வயதான அவர்களுக்கு மேற்கொண்டு எதுவும் சொல்லத் தெரியவில்லை என்றும் சாமர்த்தியமாக நமக்கு சமாதானம் சொல்லிவிடுகிறார் கதாசிரியர்.

\\அழகிய வாட்டர் ஹீட்டருடன் கூடியவெஸ்டேர்ன் பாத்ரூம் அட்டாச்சிடு சிங்கிள் பெட்ரூமில்இரண்டு கட்டில்கள் போட்டுஏ.ஸீ. வசதிகள் செய்து கொடுத்து\\

இந்த வரிகளுக்குள்தான் பிரச்சனையின் மையக்கரு ஒளிந்துகொண்டிருக்கிறது. அதைக் கூர்ந்து கவனித்தால் ஒழிய எளிதில் சட்டென்று பிடிபடாத வகையில் கதையின் போக்கை அழகாக நகர்த்தி வாசகராகிய நமக்கும் போக்கு காட்டியிருக்கிறார் கதாசிரியர். ஒரு அத்தியாவசியமான விஷயத்தைத்தான் இங்கு கதாசிரியர் சொல்ல வருகிறார் என்பதை வாசகர் அறியாதபடிக்கு சரளமாகக் கடந்து போகச்செய்யும் நேர்த்தியான நடை.

மருமகளாய் வாழவந்த சில பெண்கள்மாமியார் மாமனாரை மதிக்காமல் அவமரியாதையுடன் நடத்துவதும்அவர்களாகவே மனம் வெறுத்து முதியோர் இல்லத்தை நாடிப்போவதான சூழலுக்குத் தள்ளப்படுவதும் பல இடங்களில் நடக்கும்போது இப்படியொரு நல்ல நோக்கத்துக்காக கல்யாணியின் மாமனார் மாமியார், மகன் வீட்டைப் பிரிந்து முதியோர் இல்லத்துக்குப் போயிருப்பார்கள் என்று எவராலும் எண்ணியும் பார்க்க இயலாதுஅதனால் கதையில் குறிப்பிடப்படும்படி எல்லாருடைய எண்ணமும் கல்யாணிதான் அவர்களை வீட்டை விட்டு துரத்திவிட்டாள் என்பதாகத்தான் இருக்கும்செய்யாத ஒரு குற்றத்துக்காக பழி சுமப்பது எவ்வளவு பெரிய மன வேதனையைத் தரும் என்பதை அறியாதவர்களா மணிகண்டனின் பெற்றோர்ஆனாலும் அவர்களுக்கு தாங்கள் நினைத்த காரியம் கைகூடவேண்டும். அப்படி என்ன காரியம் அது?

பல் முளைத்த பின்னும் திட உணவு உண்ணாமல் அம்மாவின் முந்தானையைப் பற்றிக்கொண்டு பால் குடிக்க அலையும் குழந்தைகளுக்கு பால்குடி மறக்கடிக்க தாய் தன் மாரில் வேப்பெண்ணெய் தடவுவது போன்ற செயல்தான் இதுவும்குழந்தைக்கு தாய்மேல் கோபம் வரும்அழுகை வரும் என்றாலும் குழந்தையின் வளர்ச்சிக்காகஎதிர்கால நலனுக்காக தாய் அவற்றையெல்லாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

மணிகண்டனைப் பொறுத்தவரை அவன் தவறேதும் செய்யவில்லைஒரு நல்ல மகனாகதன் தாய்தந்தையரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள நினைக்கிறான்ஆனால் தாய்தந்தையருக்கு உண்மையான மகிழ்ச்சி என்பது வீடோதனியறையோஆடம்பரப் பொருட்களோ அல்லபிள்ளைகளின் அன்பும்மடியில் தவழும் பேரக்குழந்தைகளுமே என்பதை மணிகண்டன் அறிந்திருக்கவில்லைஅறியாத அவனுக்கு எடுத்துச் சொன்னால் புரிந்துகொண்டிருப்பானே என்று தோன்றலாம்தாய் தந்தை மீது அளவற்ற அன்பு கொண்டிருக்கும் அவனால் புரிந்துகொள்ள முடியுமா என்பது சந்தேகமேஅப்படியே புரிந்துகொண்டாலும் இருக்கும் ஒற்றை அறையை அவர்களிடமிருந்து பறித்து தான் பயன்படுத்த ஒருநாளும் சம்மதிக்க மாட்டான்.

மகனுக்கிருக்கும் பொருளாதார சூழலில் இன்னொரு அறை கட்டுவதென்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதை உணர்ந்த பெற்றோர், இருக்கும் ஒரே அறையையும் தங்களுக்கென ஒதுக்கிவிட்ட மகனின் பெருந்தன்மையைப் போற்றாமல் இருக்கமாட்டார்கள். ஆனாலும் மனத்துக்குள் மருகிக் கொண்டிருந்திருப்பார்கள். அவர்களும் அவனைப் போன்று இளம்பருவத்தைக் கடந்துவந்தவர்கள்தாமே!

மகனாய் தன் பெற்றோருக்கான கடமைகளைப் பொறுப்புடன் நிறைவேற்றும் மணிகண்டன்கணவனாய் இல்லறக் கடமையை சரிவர செய்யாமல் தவறுவது அந்த முதிய பெற்றோர்களை மனம் வருத்திக் கொண்டே இருந்திருக்கவேண்டும்மகன் செய்த தவறுக்கான தண்டனை என்பதை விடவும் அவனை இல்லறக் கடமையாற்ற விடாமல் இடைநிற்பதற்காய் தங்களுக்குத் தாங்களே தண்டனை கொடுக்க முன்வந்து விட்டனர் அவர்கள்அதற்குரிய சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கின்றனர்மகனும் மருமகளும் வீட்டில் இல்லாத நேரத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி தங்கள் எண்ணத்தை சாதித்துவிட்டனர்.

மகனை விட்டு கொஞ்சநாள் பிரிந்திருக்க வேண்டும் என்று ஜோசியர் சொன்னதாக சொன்னவர்கள் ஏன் காசி இராமேஸ்வரம் என்று தீர்த்த யாத்திரை போல் செல்ல விரும்பவில்லைஏன் முதியோர் இல்லப் பிரவேசம்அதற்கும் காரணத்தை வைத்திருக்கிறார் ஆசிரியர்அதைக் குறிப்பிடுமுன் இந்த வரிகளைக் குறிப்பிட விரும்புகிறேன்

\\ஒண்டியாகவே வீட்டுக்காரியங்கள் எல்லாவற்றையும் பார்த்து வந்த கல்யாணியின் உடம்பு சற்று இளைப்பாகவும்களைப்பாகவும் மாறத்தொடங்கியது.\\ இந்த வரிகளை வாசிக்கும்போது ஆச்சர்யத்தில் நமக்கு விழிகள் விரிகின்றனஒண்டியாகவே என்றால் இத்தனை நாளும் அப்படித்தானே செய்துவந்திருப்பாள்சொல்லப்போனால் இப்போது இரண்டு பேர் வீட்டில் இல்லை என்றால் வேலை குறைவாகத்தானே இருக்கவேண்டும்நன்றாக உண்டுஉறங்கிஓய்வெடுத்து உடல் எடை கூடவேண்டுமேஇவளோ இளைத்துப் போய் இருக்கிறாள்ம்… இப்போது புரிகிறது.

கல்யாணியின் மாமியார்மாமனார் இருவரும் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கவில்லைஅவர்களும் வேலைகளைப் பங்கிட்டு செய்துவந்திருக்கின்றனர்அதனால் கல்யாணிக்கு வேலை குறைவாகவே இருந்திருக்கிறதுகருப்பையில் கூடும் கொழுப்பின் காரணமாக சில பெண்களுக்கு கரு தங்காதுஇது போன்ற சூழல்களில் அதிகமான உடல் உழைப்பு கொழுப்பைக் கரைத்து கரு தங்குவதற்கான வாய்ப்பை அதிகப் படுத்தியிருக்கலாம்அதற்கு மணிகண்டனின் பெற்றோரின் முதிர்ந்த பார்வை உதவியிருக்கிறதுகல்யாணியின் வயிற்றில் ஒன்றுக்கு இரண்டாக கருவுருவாகி முதியவர்களின் மகிழ்ச்சியை இருமடங்காக்கியிருக்கிறது.

இப்படியொரு அற்புதமான நிகழ்வை எதிர்பார்த்துதான் பெரியவர்கள் இருவரும் மகனுக்கும் மருமகளுக்குமான அந்தரங்கத் தருணங்களை அளித்துவிட்டு முதியோர் இல்லத்தில் ஒதுங்கியிருந்திருக்கின்றனர்அவர்களுடைய தொலைநோக்குப் பார்வையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாதுஇந்த மாதிரி சமயத்தில் தாங்கள் ஊர் ஊராய் தீர்த்த யாத்திரை போயிருந்தால் தகவல் எப்படி வந்துசேரும்மருமகளுக்கு எப்படி உடனடியாக வந்து உதவ முடியும்இப்படி கண்பார்வையிலேயே இருந்தால்தானே காலாகாலத்தில் வந்து கவனிக்க முடியும்என்ன ஒரு அழகான தீர்க்கதரிசனப் பார்வை?

கதையின் கடைசியில் ஜோசியர் வந்தாரா இல்லையா என்னும் முடிச்சை கதாசிரியரே அவிழ்த்துவிடுகிறார்அதை அவர் சொல்லாமலேயே விட்டிருந்தால் வாசகரின் எண்ணவோட்டத்துக்கு இன்னும் கொஞ்சம் தீனி கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறதுகதை முடிந்தபின்னும் சில மர்மங்கள் நீடித்திருப்பது கதைக்கு கூடுதல் சுவாரசியம் அளிக்கும் என்பது என் கருத்து


 



இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியவர் : 
திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்



வலைத்தளம்: கீதமஞ்சரி  geethamanjari.blogspot.in  






மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.




முதல் பரிசுடன் மேலும் ஒரு புதிய 

ஹாட்-ட்ரிக் அடித்துள்ளார்கள்.




   


  

VGK-29 TO VGK-31


மனம் நிறைந்த பாராட்டுக்கள்

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


 [ Hat Trick Prize Amount will be fixed later according to their

further Continuous Success in VGK-32, VGK-33 and VGK-34 ]


     






முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள 

விமர்சனம் - 2



“முதிர்ந்த பார்வை” எனும் தலைப்போடு முதியோர் இல்லத்தில் துவங்கும் கதை நமக்குள் பற்பல சிந்தனைகளை எழுப்பிவிடுகிறது. இக்கதையில் ஒரு விஷயம் பலரால் பலவிதமாகப் பார்க்கப்படுவதாகக் காண்பிக்கப்பட்டிருக்குமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

அருமையான கதைக்கரு. அதற்கேற்ற பாத்திரப் படைப்புகள். மணியான மகனைப் பெற்ற தாய்தந்தையரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. பாத்திரத்திற்கேற்ப மணிகண்டன் எனும் பெயர் மகனுக்கு, வயதான காலத்தில் தன் பெற்றோருக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள, தன் வீட்டிலிருந்த ஒரே படுக்கையறையில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, குறையொன்றுமில்லாமல் பெற்றோரின் மனம் குளிரச் செய்யும் மகன், வள்ளுவரின் வாக்கிற்கிணங்க,

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.

எனும் குறளுக்கு இலக்கணமாய்த் திகழ்கிறான்.

இந்தப் பாத்திரப் படைப்பு இக்கால இளைஞர்களுக்கு, தன்னுடைய பெற்றோரைக் காக்க வேண்டிய கருத்தை வலியுறுத்திச் செல்கிறது.

இத்தகைய நல்ல மனம் படைத்தவனுக்கு மனைவியாக நல்ல குணவதிதான் கிடைத்திருப்பாள் என்பதில் ஐயமில்லை.

தனது கற்பு நெறியைக் காத்தல், கணவனைப் பேணுதல், குடும்ப நற்பெயரைக்காத்தல் போன்ற பண்புகளுடன் கணவனின் வருவாய்க்கேற்ப வாழ்க்கை நடத்தும் திறன் போன்றவற்றை வாழ்க்கைத்துணைக்கு நற்பண்புகளாகக் குறள் சொல்லும் வழிகாட்டுதல்கள். இதற்கு உதாரணமாய்த் திகழ்பவளாகக் கல்யாணியின் பாத்திரப்படைப்பு.

இதன்மூலம் கதாசிரியர், புகுந்த வீட்டில் எப்படி ஒரு பெண் தன் மாமனார், மாமியாரை தன் பெற்றோர்போல் பாவித்து பணிவிடைகள் செய்ய வேண்டும் என்பதை உணர்த்திவிடுகிறார்.

நல்ல மக்களைப் பெற்றெடுப்பது மங்கையரின் அழகுக்கு அழகு சேர்ப்பது!  என்பதும் வள்ளுவரின் வாக்கு. பெண்மை, முழுமை பெற்றுத் திகழ்வது தாய்மை அடைவதிலேயே அன்றோ? 

அத்தனையும் பெற்ற அந்தக் குடும்பத்தில் ஆனந்தத்தின் எல்லையாக அனைவரின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ள நான்கு வருடங்கள் ஓடியும், ஒரு குழந்தை இல்லாமல் இருப்பது அந்த முதியவர்களுக்குள் ஒரு கவலையைத் தோற்றுவித்திருக்கிறது.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.   ----               என்பது வள்ளுவரின் வாக்கு.

காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு
பட்டதே இன்பம் ! "                        -என்பது ஔவையார் வாக்கு!

குழந்தைகள் அலங்கார பொக்கிஷங்கள்! கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் பெட்டகங்கள்! குழந்தை இறைவன் நமக்கு அளிக்கும் அருட்கொடை !                                                     என்கிறது  திருக்குர்ரான்.

பருவத்தே பயிர் செய் என்பது பழமொழியன்றோ? வள்ளுவரின் வாக்கிற்கேற்ப நடந்து கொள்ளும் மகனுக்கு, இல்வாழ்வில் நிறைவும், எதிர்காலத்தில் தம்மைக் கவனிப்பதுபோல் அவனைக் கவனிக்க அருமையாய் மகனோ, மகளோ பிறக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் உள்ளத்தில் உதிக்க. அதன் விளைவுதான் அவர்கள் முதியோர் இல்லத்தில் தற்காலிமாகத் தங்க எடுத்த முடிவு. அதைச் செயல்படுத்தக் காரணியாகப் படைக்கப்படுகிறார் கற்பனைப் பாத்திரமான கேரள ஜோசியர்.

“பார்வைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்”.
இதை ஆசிரியரின் பார்வையில் பார்ப்போமே!

தன்மகனுக்கு ஒரு நல்ல குழந்தைச் செல்வம் அமைய வேண்டும் என்ற பெற்றோரின் முதிர்ந்த பார்வை. தான் பெற்ற இன்பம் தன் மகனும் பெறவேண்டும் எனும் நல்ல உளம்.

யாரோ ஒரு ஜோஸ்யன் வந்து ஒராண்டு பிரிந்திருக்க வேண்டுமென சொன்னதினால் தங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட வலியுறுத்தும் பெற்றோரின் முடிவால் மன வருத்தம் அடையும் மகனுக்கு, தன் மனைவிமீது ஒரு சந்தேகப் பார்வை. இவள் ஏதாவது அவர்கள் மனம் புண்படும்படி நடந்திருப்பாளோ என்று.

அதைவிடக் கொடுமை, தன் பெண்ணைச் சந்தேகித்து, என்று அவள் தன் மாமனார் மாமியாருடன் சேர்ந்து வாழ்கிறாளோ அன்றுதான் அவள் வீட்டில் அடியெடுத்துவைப்போம் என உரைக்கும் பெண்ணின் பெற்றோரின் கோபப் பார்வை. அவர்களின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை.

மாமனார், மாமியாரை வீட்டை விட்டு விரட்டிவிட்டு கல்யாணி மிகவும் ஜாலியாக இருப்பதாக எண்ணி தங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இல்லையே எனும்  அக்கம் பக்கத்துப் பெண்களின் பொறாமைப் பார்வை.

“பெண்ணுக்குப் பெண்ணே எதிரி” எனும் கருத்தை எடுத்துரைக்கும் விதத்தில் அக்கம் பக்கம் பெண்களின் பேச்சை அமைத்தது ஆசிரியரின் பார்வை!

ஒரு பாவமும் அறியாத கல்யாணியோ, தன்னை யாரும் நாலாண்டுகளுக்குப் பின்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தோடு கூடிய
ஏக்கப் பார்வை.

தன் மனைவி கருவுற்றிருப்பதாகக் கூறி, பெற்றோரைத் தன்னுடன் வந்து உதவியாக இருக்குமாறு மகன் வேண்டும்போது, அந்த பெற்றோர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அர்த்தபுஷ்டியான பார்வை  கதையை முடிவுக்குக் கொண்டுவருகிறது.

இவையனைத்திற்கும் காரணம் குருவாயூரப்பனின் கடைக்கண் பார்வையோ?

உறவின் வலிமை பிரிவில் தெரியும்!

பிரிந்திருக்கும்போதுதான் மற்றவர் மீது கொண்டுள்ள பாசத்தின் ஆழத்தை அறியமுடிகிறது. உறவின் வலிமை வெளிப்படுகிறது எனும் கருத்தை ஆசிரியர் எவ்வளவு அழகாகச் சித்தரிக்கிறார்!

முதியோர் இல்லத்தில் இருந்தாலும் மணிகண்டன் என்ன செய்கிறானோ? என்ற கவலை மட்டுமின்றி, தங்களை மகள் போல் கவனித்த கல்யாணி ஒண்டியாக எல்லா வேலைகலையும் செய்து கஷ்டப்படுகிறாளோ என எண்ணும் பெரியவர்கள்.

ஒவ்வொரு ஞாயிறன்றும் அவர்களுக்குப் பிடித்த பலகாரங்களுடன் முதியோர் இல்லம் சென்று, அவர்களுடன் அளவளாவி, ஆசி பெற்றுத் திரும்பும் மணிகண்டன், கல்யாணி தம்பதிகள்!

மணிகண்டன் அம்மாவிற்குத் தெரிந்துவிட்டதோ என்னவோ? ஒரு இனிய நாதம் பிறக்கப்போவது! அடுத்தமுறை வரும்போது வீணையுடன் வருமாறு சொல்வது சிம்பாலிக் ஷாட்.

முதியவர்கள் சொன்ன பொய் கூட வாய்மையாகிவிடுகிறது.
பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்த்த 
நன்மை பயக்கு மெனின் " என்ற வள்ளுவனின் வாக்குப்படி.

எப்படியோ பிரிந்தவர் மீண்டும் சேரும்போது ஆனந்தக் கண்ணீர் அரும்புவதில் வியப்பில்லை.

பெற்றோரின் மனபாரத்தையும், மகனின் மனபாரத்தையும், மருமகளின் மனபாரத்தையும், சம்பந்தி வீட்டாரின் மனபாரத்தையும் நீக்கவே கல்யாணியின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகளின் பாரமோ? இந்த பாரம் மகிழ்ந்து சுமக்கும் பாரம் அல்லவா! அனைவரின் பாரத்தையும் நீக்கிய குருவாயூரப்பனுக்கு துலாபாரம் என்பது துல்லியமான ஒரு முடிவு. அதையும் ஜோசியனே சொல்லிச் சென்றதாகக் காண்பித்ததும் அருமை.

இருதரப்புப் பெரியவர்களின் பரிபூரண ஆசிகளும், குருவாயூரப்பனின் கடைக்கண் பார்வையும் இரட்டைக் குழந்தைகளை அருளி இரட்டிப்பு மகிழ்வளித்ததோ?

“என்ன பிள்ளை பெற்றாளோ? என்ன பெயர் வைத்தாளோ?” எனும் கேள்வியை நம்முள் எழுப்பி விடையறியுமுன்னே கதை முடிந்துவிடுகிறது.

“பார்வை ஒன்றே போதுமே” என நான் பாடி விடைபெறும் வேளையில் என் பார்வையில், கண்ணீரில் துவங்கி, களிப்பில் முடியும் வண்ணம் கதைபடைத்த ஆசிரியர் ஒரு மிகச்சிறந்த படைப்பாளியாகத் தோன்றுகிறார். அவருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!




 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 
திரு. E.S. சேஷாத்ரி அவர்கள்


 வலைத்தளம்: காரஞ்சன் (சேஷ்) esseshadri.blogspot.com 








மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.




     






மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


 

நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

முதல் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்


சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது.




இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.



இணைப்புகள் இதோ:



http://gopu1949.blogspot.in/2014/08/vgk-31-03-03-third-prize-winner.html


http://gopu1949.blogspot.in/2014/08/vgk-31-02-03-second-prize-winners.html



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



VGK-33



’ எல்லோருக்கும் பெய்யும் மழை ’




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


04.09.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

21 கருத்துகள்:

  1. கீதமஞ்சரி, திரு சேஷாத்ரி ஆகியோரின் பார்வையும் தெரிந்து கொண்டேன். இருவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வெற்றீ பெற்ற் கீத மஞ்சரி கீதாவுக்கும்... மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பரிசுடன் ஒரு புதிய ஹாட்-ட்ரிக் அடித்துள்ள - திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும் ,

      திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கும்
      மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள் ..!
      நல்வாழ்த்துகள்.!

      நீக்கு
  3. பதிவுலகில் ஒரு பிரம்மோற்சவம்!

    என்ற தலைப்பில் நமது சிறுகதை விமர்சனப்போட்டிகளைப்பற்றி
    திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் இன்று ஓர் தனிப்பதிவு வெளியிட்டுள்ளார்கள். அதன் இணைப்பு இதோ:

    http://sivamgss.blogspot.in/2014/09/blog-post_2.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  4. //அவர்களுடைய தொலைநோக்குப் பார்வையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த மாதிரி சமயத்தில் தாங்கள் ஊர் ஊராய் தீர்த்த யாத்திரை போயிருந்தால் தகவல் எப்படி வந்துசேரும்? மருமகளுக்கு எப்படி உடனடியாக வந்து உதவ முடியும்? இப்படி கண்பார்வையிலேயே இருந்தால்தானே காலாகாலத்தில் வந்து கவனிக்க முடியும்? என்ன ஒரு அழகான தீர்க்கதரிசனப் பார்வை?
    // உண்மைதான்! அழகாக விமர்சனம் எழுதி பரிசுபெறும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  5. என்னுடைய விமர்சனம் பரிசுக்குத் தெரிவாகி இருப்பது மகிழ்வளிக்கிறது. நடுவரின் முதிர்ந்த பார்வைக்கு மிக்க நன்றி!
    பல கோணங்களில் பார்க்கும்படி கதையைப் படைத்து, வாய்ப்பளித்த திரு வைகோ ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. பரிசு பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பவித்ரா நந்தகுமார் September 3, 2014 at 9:37 PM

      //பரிசு பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.//

      வாங்கோ, அத்திப்பூத்தது போன்ற தங்களின் அபூர்வ வருகைக்கு மிக்க நன்றிங்கோ :)

      அன்புடன் கோபு

      நீக்கு
    2. பவித்ரா நந்தகுமார் September 3, 2014 at 9:37 PM

      அன்புடையீர், வாங்கோ, மீண்டும் வணக்கம்.

      //பரிசு பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.//

      தாங்கள் இந்தப்போட்டிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பதால்தான், மற்றவர்களால் மிகச்சுலபமாக பரிசுபெற முடிகிறது என்பது என் எண்ணமாக உள்ளது.

      என் இந்த எண்ணம் சரியா தவறா என்பதை தாங்கள் வரும் போட்டிகளில் கலந்துகொண்டு நிரூபிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      இதை தாங்கள் நிரூபிக்க இன்னும் ஏழு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. நினைவிருக்கட்டும். :)))))))

      நாளைய வெள்ளிக்கிழமை முதல் ஏழு வெள்ளிக்கிழமைகள் மட்டுமே உள்ளன.

      அன்புடன் கோபு

      நீக்கு
    3. பவித்ரா நந்தகுமார் September 3, 2014 at 9:37 PM

      அன்புடையீர், மீண்டும் வணக்கம்.

      தாங்கள் எழுத்துலகில் இதுவரை எவ்வளவோ சாதனைகள் செய்துள்ளீர்கள். தங்களின் அத்தகைய சாதனைகள் ஒவ்வொன்றையும் என்னுடன் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்டும் வருகிறீர்கள். தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, அதை என்னைப் பார்க்கவும் வைத்து, மிகச்சிறந்த சொற்பொழிவாளர் என்ற என் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் பெற்றுள்ளீர்கள்.

      இருப்பினும் இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிகளில் இதுவரை கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறீர்கள். இந்தப்போட்டிகளின் ஆரம்பத்தில் நான் அழைத்தபோது, அதற்கும் ஏதேதோ சூழ்நிலைக் காரணங்களை எடுத்துச்சொல்லி என்னை சமாதானப்படுத்தியுள்ளீர்கள். எல்லா மெயில்களும் என்னிடம் பத்திரமாகவே உள்ளன. எதையும் நான் DELETE செய்பவன் அல்ல.

      அடியேன் நடத்திவரும் இந்தப் போட்டியின் நடுவர் யார் என இன்னும் நான் அறிவிக்காமல் மர்மமாக வைத்துள்ளேன். அதை யூகித்துக் கண்டுபிடியுங்கள் எனவும் ஓர் போட்டி [போட்டிக்குள் போட்டி] வைத்துள்ளேன்.

      எனினும் இந்தப்போட்டியின் நடுவர் யார் என்ற முழு விபரங்களும் வரும் 13.09.2014 அன்று பகிரங்கமாக வெளியிட்டு விடுவதாகவே உள்ளேன்.

      இந்தப்போட்டிகளில் தாங்களும் கலந்துகொண்டு, தங்களின் விமர்சனம், இந்த நடுவர் அவர்களால் ஒரே ஒரு முறை பரிசுக்குத்தேர்வானால் ..... அதையும் தங்களின் இதுவரையிலான சாதனைகளில் ஒன்றாகவே தாங்கள் எடுத்துக்கொண்டு மகிழலாம். நடுவர் அவர்கள் சாதாரணமானவரே அல்ல என்பதால் இதைத் தங்களுக்கு இங்கு குறிப்பிட்டுச் சொல்லியுள்ளேன்.

      VGK-01 to VGK-30 வரை - அதாவது இதுவரை நடந்துள்ள 30 போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுக்குத் தேர்வானவர்கள் பட்டியல் இதோ இந்தப்பதிவுகளில் உள்ளன.

      http://gopu1949.blogspot.in/2014/08/vgk-21-to-vgk-30.html

      http://gopu1949.blogspot.in/2014/06/vgk-11-to-vgk-20_16.html

      http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-04-04-vgk-01-to-vgk-10.html

      எழுத்துலகின் இளம் தென்றலான தங்களின் பெயர் அடுத்த பட்டியலிலாவது இடம் பெற வேண்டாமா ? ........... யோசியுங்கள்.

      தங்களைப்போன்ற மிகத்திறமையான பத்திரிகை எழுத்தாளர்களின் விமர்சனங்களை வாசித்து மகிழவேதான், தான் ஒரு சாதக பட்சியாகக் காத்திருப்பதாக நடுவர் அவர்களே கூறியுள்ளார்கள் பாருங்கோ இந்தப்பதிவினில்:

      http://gopu1949.blogspot.in/2014/09/blog-post.html

      இதில் சொல்ல வேண்டியதெல்லாம் நானும் இங்கு சொல்லி விட்டேன். இனி போட்டியில் கலந்துகொள்வதோ கலந்துகொள்ளாமல் இருப்பதோ ..... தங்கள் இஷ்டம்.

      இருப்பினும் தாங்கள் அழைக்கும் போதெல்லாம் வழக்கம் போல தங்களின் பதிவுகள் பக்கம் தட்டாமல் வருவேன். கருத்தளிப்பேன். உற்சாகப்படுத்துவேன். ஊக்கமளிப்பேன். அது வேறு ..... இது வேறு.

      இதில் என் நிர்பந்தங்களோ, அன்புத்தொல்லைகளோ, வற்புருத்தல்களோ ஏதும் கிடையாது. எல்லாமே தங்கள் இஷ்டம் போல மட்டுமே. இதனால் கிடைக்கும் வெற்றி + பெருமை தங்களின் முன்னேற்றத்திற்கு நிச்சயம் உதவக்கூடும் என்பதால், எனக்கு மனதில் ஏற்பட்டுள்ள ஆதங்கத்தால் மட்டுமே, இத்தனை விளக்கமாகத் தங்களுக்கு மட்டுமே ஸ்பெஷலாகச் சொல்லியுள்ளேன்.

      அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
  7. பரிசு பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள். அய்யா நலமா. வெகு நாட்களாகிவிட்டது எல்லார்தளத்திற்க்கும் வந்துபோய். தங்களின் ஆக்கங்கள் சிறப்பாக செயல்பட நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடன் மலிக்கா September 4, 2014 at 12:47 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பரிசு பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள். அய்யா நலமா. வெகு நாட்களாகிவிட்டது எல்லார்தளத்திற்க்கும் வந்துபோய். //

      நான் நலமே. தாங்களும் நலம் தானே ! மிக்க மகிழ்ச்சி.

      நானும் இப்போதெல்லாம் பிறரின் பதிவுகள் பக்கம் செல்ல இயலாமல் நேர நெருக்கடியில் உள்ளேன்.

      இருப்பினும் தங்களை என்னால் மறக்க இயலாது.

      தாங்களே என்னை வலைச்சரத்தில் 2011 பிப்ரவரி மாதமே
      இரண்டாம் முறையாக அறிமுகம் செய்திருந்தீர்கள்.

      http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html

      அதில் ஆரம்பித்தது இப்போது வலைச்சரத்தில் என் 100வது அறிமுகம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

      அதற்கான இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2014/08/100.html

      தங்களைப்போன்றவர்களை நினைவுகூர்ந்து பதிவிட்டு சிறப்பிக்கலாம் என நினைத்துள்ளேன்.

      இந்த என் அறிவிக்கப்பட்டுள்ள போட்டிகள் முடிந்ததும், வரும் தீபாவளிக்குப்பிறகு இவைகளை வரிசையாக தினம் ஒன்று வீதம் 15 நாட்களுக்கு வெளியிட உள்ளேன். அதன் பகுதி-2 இல் தங்கள் பெயர் இடம் பெற உள்ளது

      //தங்களின் ஆக்கங்கள் சிறப்பாக செயல்பட நெஞ்சார்ந்த வாழ்த்துகள்... //

      தங்களின் அன்பு வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க. :)

      அன்புடன் VGK

      நீக்கு
  8. சகோதரி கீதமஞ்சரி, நண்பர் திரு சேஷாத்ரி இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. ’சேஷ் விருது’ க்கான முதலிடமும் மற்றும் ’கீதா விருது’ க்கான மூன்றாமிடமும் பெற்றுள்ள சாதனையாளர் திரு. E S சேஷாத்ரி அவர்கள், தான் இதுவரை பெற்ற தொடர் வெற்றிகளான VGK-25 TO VGK-40 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சிறப்பித்து தன் வலைத்தளத்தினில் இன்று தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.

    அதற்கான இணைப்பு:

    http://esseshadri.blogspot.com/2014/11/blog-post.html

    அவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  10. முதல் பரிசினை வென்ற திருமதி. கீதா மதிவாணன் அவர்களப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. முதல் பரிசினை வென்ற திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. முதல் பரிசினை வென்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் திரு சேஷாத்ரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. பரிசு வென்ற திருமதி கீதாமதிவாணன் திரு சேஷாத்திரி அவங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. திருமதி கீதாமதிவாணன் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. பரிசினை வென்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் திரு சேஷாத்ரி அவர்களுக்கும் எனது நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு