’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்
கதையின் தலைப்பு :
VGK-33
’ எல்லோருக்கும்
பெய்யும் மழை ‘
பெய்யும் மழை ‘
இணைப்பு:
மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு
மிக அதிக எண்ணிக்கையில்
பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு
வெகு அழகாக விமர்சனங்கள்
எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் என்
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
நடுவர் திரு. ஜீவி
நம் நடுவர் அவர்களால்
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
விமர்சனங்கள் மொத்தம் :
ஐந்து
மற்றவர்களுக்கு:
முதல் பரிசினை முத்தாக
வென்றுள்ள விமர்சனம் - 1
எல்லாருக்கும் பெய்யும் மழை என்பது கதைத்தலைப்பு. அப்படியெனில் நல்லார் ஒருவராவது இருக்கவேண்டும் கதைக்குள். யாரந்த நல்லார்? அதைத்தான் கதையின் ஆரம்பம் முதல் நம்மை யோசிக்க வைத்து இறுதியில் புதிரவிழ்க்கிறார் ஆசிரியர்.
ஒரு வங்கியில் நடைபெறும் நிகழ்வு அது. அந்த வங்கியில் பணிபுரியும் மானேஜர், காசாளர், தற்காலிய ஊழியரான பெண் அட்டெண்டர், வங்கியின் வாடிக்கையாளரான கிராமத்துப் பெரியவர் என்று நான்கு பேரும் அந்த நிகழ்வோடு எப்படி சம்பந்தப் படுகிறார்கள் என்று அழகான வட்டப் பாதையில் சுற்றிக் காட்டும் கதையோட்டம்.
கதை வஸந்தியின் பார்வையில் நகர்வதால் அவளே இக்கதையின் நாயகி. வங்கியில் பணத்தைப் பட்டுவாடா செய்யும்போது ஏற்படும் கவனக்குறைவு காரணமாக நானூறு ரூபாயைத் தவறவிட்டுவிடுகிறாள் வஸந்தி.
வங்கிப்பணியில் அதுவும் காசாளர் பொறுப்பில் இருப்பவர்கள் எவ்வளவு கவனத்துடன் இருக்கவேண்டும்? ஆனால் வஸந்தி ஏன் இப்படி? அதற்கான காரணத்தையும் நமக்கு சொல்லிவிடுகிறார் கதாசிரியர்.
திருமணமான ஒரே வருடத்தில் விதவையானவள். கணவனின் இறப்புக்குப் பின் பிறந்த பெண் குழந்தை, புகுந்த வீட்டாரின் பழிச்சொல் மற்றும் நிராகரிப்பு என்று எந்த ஒரு பிடிப்புமின்றி நிர்க்கதியாய் நின்றவளுக்கு கணவனின் வேலையை கருணை அடிப்படையில் வழங்கியிருக்கிறது வங்கி. அப்படிப்பட்ட வங்கிக்கு அவள் எவ்வளவு விசுவாசமாய் இருக்கவேண்டும்? ஆனால்… அவளுடைய சூழ்நிலையும் மன உளைச்சலும் அவளை வேலையில் கவனம் செலுத்தவிடாமல் பாடாய்ப் படுத்தி எடுத்தால் என்னதான் செய்வாள் பாவம்? இப்படி கவனம் தவறிவிடுகிறது சிலநேரம்.
மாதக் கடைசி என்பதாலும் காசாளர் பொறுப்பில் இருப்பதாலும் வஸந்தியே தன் தேவைக்கென பணத்தை எடுத்திருக்கலாம் என்று மானேஜர் அவளை சந்தேகப்படுகிறார். காரணம் வஸந்தியின் ஆதரவற்ற பின்புலம். வஸந்தியோ தனக்குக் கீழே வேலை பார்க்கும் அஞ்சலையை சந்தேகப்படுகிறாள். காரணம் அஞ்சலையின் வறுமையான பின்புலம்.
அஞ்சலை எவரையும் சந்தேகிக்கவில்லை. முடிந்தவரைக்கும் தானும் தேடுகிறாள்.
இதை வஸந்தி நேரடியாய் அஞ்சலையிடம் தெரிவிக்கவில்லை என்றாலும் வஸந்தியின் ஏதோ ஒரு சிறு சமிக்ஞை மூலம் அவள் தன்னை சந்தேகப்படுவதை அஞ்சலை உணர்ந்துகொண்டிருக்கவேண்டும். அதனால்தான் அன்றே போய் தன்னிடம் சொச்சமாய் இருந்த தாலியை அடகு வைத்து பணத்தைப் புரட்டிக் கொண்டுவந்து மறுநாள் வஸந்தியின் வீட்டுக்கே போய் தருகிறாள். அப்போது வஸந்தி இந்தப் பணம் எப்படிக் கிடைத்தது என்று இயல்பாகக் கேட்பது போல் கேட்டாலும் அதன் உள்ளர்த்தம் அஞ்சலைக்கு புரிந்திருக்கும். தன்னால் புருஷனின் அடியைப் பொறுத்துக்கொள்ள முடியும், பிள்ளைகளின் பசியைப் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் திருடி என்ற பட்டத்தைப் பொறுத்துக்கொள்ள இயலாது என்பதை செயலால் உணர்த்திவிட்டாளே.
மேலும் பெண்கள் மீதான வன்கொடுமை சட்டம் பற்றிப் பேசி, தான் ஒன்றும் உலகம் தெரியாத அப்பிராணி இல்லை என்பதையும், இனிமேல் புருஷன் அடித்தால் நேராக போலீஸுக்குப் போவேன் என்று சொல்லி, தான் ஒரு கோழை அல்ல என்பதையும் வஸந்திக்கு சாடையாகவே உணர்த்திவிட்டாளே.. இன்னொரு முறை பணத்தைத் தவறவிட்டுவிட்டு என்னை சந்தேகப்பார்வை பார்க்காதே, நான் அதைப் பொறுத்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன் என்பது போல் அல்லவா சொல்லாமல் சொல்லிவிட்டாள்.
தொலைந்த அந்த நானூறு ரூபாய் எங்கேதான் போனது? எங்கும் போகவில்லை. ஒரு வெள்ளந்தி மனிதரின் வேட்டி மடிப்புக்குள் பத்திரமாய் இருக்கிறது. பணத்தைப் பத்திரப்படுத்த வேண்டுமே என்ற பதைப்பில் எண்ணிக்கூட பார்க்காமல் அப்படியே எடுத்துச் சென்ற பெரியவர் எண்ணிப் பார்த்தபின் கூடுதலாய் இருக்கும் நானூறைத் திருப்பித் தர உடனடியாக கிளம்பி வருகிறார். அவரல்லவோ மனிதர்!
பணத்தைக் கொடுத்தவர் அஞ்சலை பற்றி விசாரிக்கிறார். அஞ்சலையின் குணத்தை சிலாகிக்கிறார். அவள் படும் குடும்ப கஷ்டத்தை எடுத்துரைக்கிறார். அவளுக்காக பரிகிறார். என்ன காரணமாய் இருக்கமுடியும்? ஒரே ஊர்க்காரி என்ற பாசமா? அல்லது இது போன்ற விஷயங்களில் கடைமட்ட ஊழியர்கள்தாம் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அஞ்சலை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையா?
சரி, இப்போது நல்லார் யாரென்ற கேள்விக்கு வருவோம். மானேஜர் வங்கியின் மேலாளர். அவருக்குக் கீழே பணியாற்றும் அலுவலர்களிடம் கடுமையும் கண்டிப்பும் காட்டவேண்டியது அவருடைய கடமை. அந்தக் கடமையைத்தான் அவர்செய்திருக்கிறார். அவரை விட்டுவிடுவோம்.
அடுத்து வஸந்தி. பணத்தை அவள் கையாடல் செய்யாத நிலையில் கவனக் குறைவாகத்தான் கொடுத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வராமல் உடனடியாக அஞ்சலையின் பணத்தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி அவளை சந்தேகித்தது தவறு. அதனால் அவளும் வரமாட்டாள்.
அஞ்சலையை நல்லார் என்று சொல்வதை விடவும் மானஸ்தி, ரோஷக்காரி அல்லது இளகிய மனசுக்காரி என்று சொல்லலாம். தன்னை சந்தேகப்பட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோ அல்லது வஸந்தியின் நிலை குறித்த பரிதாப உணர்வோ ஏதோ ஒன்று அவளை பணத்தைத் திருப்பித்தர செய்திருக்கிறது. அதுவும் அவள் கொஞ்சம் கொஞ்சமாய் வஸந்தியிடம் அதுவரை வாங்கிய பணம்தான். அதனால் அவளும் அந்த கூற்றுக்குள் வரமாட்டாள்.
சட்டை அணியாத அந்த கிராமத்துப் பெரியவர் – ம்.. அவர்தான் என்னைப் பொறுத்தவரை நல்லார். அந்த நல்லார் ஒருவர் உளதால்தான் எல்லோருக்கும் மழை பெய்கிறது. அவரிடம் நானூறு ரூபாய் கூடுதலாய் தரப்பட்டது குறித்த சாட்சியம் ஏதும் இல்லை. அதை அப்படியே அவர் வைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் மெனக்கெட்டு கிளம்பிவந்து திருப்பித் தருகிறார். அத்தோடு இந்த முறை மட்டுமல்ல, எப்போதுமே இது போன்ற சூழல்களில் அஞ்சலையின் மீது வஸந்தியின் சந்தேகப்பார்வை விழுந்துவிடக் கூடாது என்பதுபோல் அஞ்சலையைப் பற்றிய நல்லபிமானத்தை அவள் மனத்தில் விளைத்துச் செல்கிறார்.
தன் மனசாட்சிக்கும் நல்லவராய், வஸந்திக்கும் நல்லவராய், அஞ்சலைக்கும் நல்லவராய் இருக்கும் அவர் பொருட்டே அன்றைய மழை எல்லோருக்கும் பெய்தது என்று எனக்குத் தோன்றுகிறது.
இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியவர் :
வலைத்தளம்: கீதமஞ்சரி geethamanjari.blogspot.in
முதல் பரிசினை முத்தாக வென்றதுடன்
தனது நான்காவது
ஹாட்-ட்ரிக் பரிசினை
ஐந்தாம் சுற்றிலும்
தக்க வைத்துக்கொண்டுள்ளார்கள்
திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்.
தனது நான்காவது
ஹாட்-ட்ரிக் பரிசினை
ஐந்தாம் சுற்றிலும்
தக்க வைத்துக்கொண்டுள்ளார்கள்
திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்.
மனம் நிறைந்த பாராட்டுக்கள்
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
[ Hat Trick Prize Amount will be fixed later according to their
further Continuous Success in VGK-34 ]
மனிதனிடம் இயல்பாக உள்ள குணம் சந்தேகப்படுவது. எல்லா விஷயத்திலும் சந்தேகப்படுவது என்பது ஒரு நோய்போல் ஆகி நாமும் மனமுடைந்து, பிறரையும் ஆயுதம் இல்லாத துன்புறுத்தலுக்கு ஆளாக்கிவிடும். இதனால் யாருக்கும் பயனில்லை. சந்தேகப்படுபவருக்கும், சந்தேகத்திற்குள்ளானவருக்கும் அது சந்தோஷக்கேடாகிவிடும். இந்த முட்டாள்தனமான செயலால் உறவுகளிலும், நட்பு வட்டாரங்களிலும் விரிவடைதல் இன்றி விரிசலுக்காளாக நேரிடும்.
மனிதரிடம் இயல்பாகவே இருக்க வேண்டிய இன்னொரு குணம் நேர்மை. அது கால ஓட்டத்தில் அருகி வருவதால், நேர்மையாகச் செயல்படுபவர்களைப் பார்த்து ஆச்சர்யப்படும் நிலையில் இவ்வுலகு மாறியுள்ளது.
இவ்விரு கருத்துகளையும் ஆசிரியர் எளிமையான பாத்திரங்களைக் கொண்டு மிக அழகாக விளக்கிச் செல்கிறார்,
பல்லாண்டுகள் இன்பமாக வாழ்ந்திருக்கவேண்டிய வஸந்தி, ஓராண்டிலேயே கணவனை இழக்க நேர்ந்தாலும், கருணை அடிப்படையில் வங்கியில் வேலை கிடைக்கப்பெற்று பணியில் சேர்ந்தது, ஒருவாசல் மூடினாலும், மறுவாசல் திறப்பவன் இறைவன் என்பதை உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளது.
ஆறாம் விரலுடன் பிறந்த குழந்தை அதிர்ஷ்டம் என்று பலர் கூறியதும் உண்மைதானோ? கணவர் வீட்டார் கைவிட்டபோதும், அந்த எட்டுமாதக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஒண்டிக்கட்டையான அவள் அம்மா உடன் இருந்தது மன உளைச்சல்கள் இருந்தாலும் சற்று ஆறுதலளிக்கும் விஷயம்தானே! அந்த வகையில் அது அதிர்ஷ்டக்குழந்தைதான்.
வங்கியில் சேர்ந்த ஒரு வருடத்திலேயே காசாளராகப் பொறுப்பளித்தது அவள் பேரில் இருந்த நம்பிக்கையாலோ? தன்னையும் அறியாமல் ஏற்படும் கவனச் சிதறல்களால் அவ்வப்போது, பணத்தை இழக்க நேர்ந்தது அவளுக்கு மன உளைச்சலை அதிகப்படுத்தியதுடன், அவள் மீது தேவையற்ற சந்தேகப் பார்வை கொள்வதற்கு வழிவகுப்பதாக அமைந்தது நம்மை அவள்பால் பரிதாபப் பட வைத்துவிடுகிறது.
இந்த இடத்தில் நவீன வசதிகள் எதுவும் இல்லாத காலத்தில் ஒரு காசாளராகப் பணிபுரிவதில் இருந்த சிரமங்கள் மிக அழகாகப் பட்டியலிடப் பட்டுள்ளன. அதே வங்கியில் பணிபுரியும் அடிமட்ட தற்காலிக ஊழியரான பெண் அட்டெண்டர் அஞ்சலை அவ்வப்போது வஸந்தியிடம் கைமாற்றாக சிறு சிறு தொகையினைக் கேட்டுப் பெற்றுக்கொள்வதாக அமைக்கப்பட்டதில் ஆசிரியரின் பாத்திரப் படைப்பு வெளிப்படுகிறது.
கணவனை இழந்துவிட்ட வஸந்தி. கணவன் குடிகாரனாகவும், அவனால் குடும்பத்திற்கு எதுவும் பயனில்லாத நிலையில் (இருந்தும் இல்லாத நிலை) அஞ்சலையின் பாத்திரம். முப்பது வயதிற்குள் நான்கு குழந்தைகள் ஆகிவிட ஆறு உயிர்கள் அவளை நம்பி. அவளுடைய சிரமம் வஸந்திக்கு அதாவது இன்னொரு பெண்ணுக்கு அதிகம் புரியும் என்பதால் வஸந்தியிடம் கைமாற்றாகப் பணம் கேட்பதாகப் படைத்தாரோ? அந்தத் தொகையும் திரும்ப வராது என முடிவுக்கு வஸந்தி வந்ததாகக் காண்பித்தது இன்னும் அஞ்சலையில் பேரில் நமக்கு அனுதாபத்தைக் கூட்டிவிடுகிறது.
வழக்கம்போல் 200 ரூபாய் அஞ்சலை கடன் கேட்க நேர்ந்ததும், வஸந்தி இல்லையென மறுத்த, அன்றே 400 ரூபாய் பணம் குறைய நேர்வதும் கதையின் முடிச்சாய் அமைந்து சற்று விறுவிறுப்பைக் கூட்டுகிறது. வஸந்தி அஞ்சலைமேல் சந்தேகம் கொள்வதாகக் காண்பித்து, ஒருவேளை அப்படி இருக்கலாமோ என்ற எண்ணத்தை/சந்தேகத்தை வாசகர்களுக்குள் ஏற்படுத்த முயல்கிறார் கதாசிரியர்.
ஆனால் அஞ்சலையோ அடுத்தநாள் காலையில் நானூறு ரூபாய் பணத்தைக் கொண்டுவந்து இதுவரை வஸந்தியிடம் வாங்கிய கடனை திருப்பி அளிப்பதாகக் காண்பித்து எதிர்பாரா திருப்பத்தை ஏற்படுத்துகிறார் ஆசிரியர்.
குடிப்பழக்கத்திற்கு ஆளான பொறுப்பற்ற கணவனால் பாதிக்கப்படும் இளம் பெண்களின் துயரங்கள், அஞ்சலையின் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள விதம் மிகவும் அருமை. இரண்டாயிரம் ரூபாய்க்குத் தாலியை விற்று, அந்தப் பணத்தில் வாங்கிய கடனை அடைத்துவிட்டு, வயிராற நீண்ட நாட்களுக்குப் பின் சாப்பிட்டதாகக் கூறுவது உருகாத மனதையும் உருக வைக்கும்.
போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்கள், கட்டிய தாலியைக்கூட விட்டு வைக்க மாட்டார்கள் என்பது நூறுசதம் உண்மை. அதனால் கணவன் கட்டிய தாலியையும், அவன் பறித்துச் செல்வதற்கு முன்னேயே விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள் அஞ்சலை. இனிமேலும் தன் கணவன் துன்புறுத்தினால் காவல் நிலையத்தை அணுகி, வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கவும் தயங்கமாட்டேன் எனக் குறிப்பிடும்போது, பெண்கள் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தால் கட்டிய கணவனைக் கூட தண்டிக்கத் தயங்க மாட்டார்கள் என்பதை உணர்த்தி விடுகிறார். அஞ்சலை பாத்திரம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழிகாட்டியாகவும், புதுமைப் பெண்ணாகவும் படைக்கப் பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
அன்று கடவுளை வேண்டிக்கொண்டு பணியைத் துவங்கும்போது, இவளது சந்தேகத்தைப் போக்கும் வகையிலும், இந்த உலகத்தில் இன்னும் நல்லவர்கள், நேர்மையானவர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் ஒரு கிராமத்து முதியவரின் வருகை அமைகிறது. அவர் முதல் நாள் பெற்றுச் சென்ற பணத்தில் 400 ரூபாய் அதிகமிருந்ததையும், வங்கியிலேயே எண்ணிப் பார்க்காமல் இருந்ததற்கு ஒரு நியாயமான காரணத்தையும் கூறி, திருப்பியளித்தது மேன்மக்கள் மேன்மக்களே என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
அதைவிடப் பொருத்தம் அவர் வாய்மொழியில் அவர் ஊரைச் சேர்ந்த அஞ்சலை மிகவும் நல்ல பெண் என வஸந்தி கேட்க நேர்வது, கதையின் முடிச்சை அவிழ்த்து, வஸந்தியின் சந்தேகத் திரையை அகற்றி நம்பிக்கை வெளிச்சம் பரவச் செய்கிறது. வஸந்திக்கு மட்டுமல்ல நமக்குள்ளும் அஞ்சலைமேல் ஒரு உயர்வான எண்ணத்தை உருவாக்கிவிடுகிறது. வறுமையில் உழன்றாலும், நேர்மையாய் வாழ்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை” எனும் வள்ளுவரின் வாக்கினை மெய்யாக்குவதுபோல் இவர்களுக்காக பெய்யெனப் பெய்த மழையுடன் கதையை முடித்தது அருமை!.
கதையைப் படைத்த கதாசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!
-காரஞ்சன்(சேஷ்)
இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்:
திரு. E.S. SESHADRI அவர்கள்
முதல் பரிசினை முத்தாக வென்றதுடன்
மூன்றாம் முறையாக மீண்டும் புதியதோர்
ஹாட்-ட்ரிக் அடித்துள்ளார்
திரு. E.S. SESHADRI அவர்கள்
VGK-31 TO VGK-33
மனம் நிறைந்த பாராட்டுக்கள்
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
[ Hat Trick Prize Amount will be fixed later according to his
further Continuous Success in VGK-34, VGK-35, VGK-36 ]
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி
முதல் பரிசுக்கான தொகை
இவர்கள் இருவருக்கும்
சரிசமமாக பிரித்து அளிக்கப்பட உள்ளது.
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி
முதல் பரிசுக்கான தொகை
இவர்கள் இருவருக்கும்
சரிசமமாக பிரித்து அளிக்கப்பட உள்ளது.
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர
இடைவெளிகளில்
வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கான இணைப்புகள் இதோ:
http://gopu1949.blogspot.in/
http://gopu1949.blogspot.in/
அனைவரும் தொடர்ந்து ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
VGK-35
’ பூ பா ல ன் ’
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
முத்துப் போல் ஜொலிக்கும் முதல் பரிசுக்கான விமரிசனங்களின் உரிமையாளர்களான திருமதி கீதமஞ்சரி மற்றும் திரு சேஷ் அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குமேலும் தொடர் ஹாட் -ட்ரிக் பரிசுகளைப் பெற வாழ்த்துக்கள்.
முதல் பரிசினை வென்ற
பதிலளிநீக்குதிருமதி. கீதா மதிவாணன் அவர்கள் -,
திரு . காரஞ்சன்(சேஷ்) அவர்கள்
இருவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்..!
தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் கீதா மதிவாணனுக்கும், திரு காரஞ்சன் சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎன்னுடைய விமர்சனம் முதற்பரிசுக்குத் தேர்வாகி இருப்பது மகிழ்வளிக்கிறது. வாய்ப்பளித்த திரு வைகோ சார் அவர்களுக்கும், நடுவர் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி! வாழ்த்திய/வாழ்த்தப்போகும் அனைவருக்கும் என் நன்றி!
பதிலளிநீக்கு//ன் மனசாட்சிக்கும் நல்லவராய், வஸந்திக்கும் நல்லவராய், அஞ்சலைக்கும் நல்லவராய் இருக்கும் அவர் பொருட்டே அன்றைய மழை எல்லோருக்கும் பெய்தது என்று எனக்குத் தோன்றுகிறது. // அருமை! திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு பாராட்டுகள்
பதிலளிநீக்குபரிசுக்குரியதாக என் விமர்சனம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து அளவிலா மகிழ்ச்சி. நடுவர் அவர்களுக்கும் இவ்வாய்ப்பினை வழங்கிக்கொண்டிருக்கும் கோபு சார் அவர்களுக்கும் நெகிழ்வான நன்றிகள்.
பதிலளிநீக்குஇத்தொடர் பரிசுகள் என் எழுத்தின் மீதான நம்பிக்கையையும் பொறுப்பையும் அதிகரித்திருக்கின்றன. அதற்கான என் சிறப்பு நன்றிகள் தங்களுக்கு கோபு சார்.
என்னோடு முதல் பரிசினைப் பகிர்ந்துள்ள திரு.சேஷாத்ரி அவர்களுக்கு அன்பான பாராட்டுகள். வாழ்த்திய நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
’சேஷ் விருது’ க்கான முதலிடமும் மற்றும் ’கீதா விருது’ க்கான மூன்றாமிடமும் பெற்றுள்ள சாதனையாளர் திரு. E S சேஷாத்ரி அவர்கள், தான் இதுவரை பெற்ற தொடர் வெற்றிகளான VGK-25 TO VGK-40 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சிறப்பித்து தன் வலைத்தளத்தினில் இன்று தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.
பதிலளிநீக்குஅதற்கான இணைப்பு:
http://esseshadri.blogspot.com/2014/11/blog-post.html
அவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
முதல் பரிசினை வென்றுள்ள திருமதி கீதா மதிவாணனுக்கும், திரு காரஞ்சன் சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுதல் பரிசினை வென்றுள்ள திருமதி கீதா மதிவாணனுக்கும், திரு காரஞ்சன் சேஷாத்ரி அவர்களுக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுதல் பரிசினை வென்றுள்ள திருமதி கீதா மதிவாணனுக்கும், திரு சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபரிசு வென்ற திருமதி கீதாமதிவாணன் திரு சேஷாத்திரி அவங்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குதிருமதி கீதாமதிவாணன் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுதல் பரிசினை வென்றுள்ள திருமதி கீதா மதிவாணனுக்கும், திரு சேஷாத்ரி இருவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு