என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 2 அக்டோபர், 2014

நேயர் கடிதம் - [ 2 ] முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள்.



’மன அலைகள்’
swamysmusings.blogspot.com


பெரியவர்
முனைவர்  திருவாளர் 

 பழனி கந்தசாமி  


ஐயா  அவர்களின் பார்வையில் ...... 






1] போட்டியின்   பொதுவான  
சிறப்பு அம்சங்கள்  

1.      இது ஒரு புது மாதிரியான போட்டி. இது வரையில் பதிவுலகில் யாரும் முயற்சிக்காத ஒன்று. புதுமையான சிந்தனை.

2.      நீங்கள் எழுதிய சிறுகதைகளை ஆழமாகப் படிக்க ஒரு அரிய வாய்ப்பு. சாதாரணமாக இப்படி சிறுகதைகளைப் படிக்க மாட்டோம். மேலோட்டமாக படித்து கதையின் சாரத்தை மட்டும் உள்வாங்கிக்கொண்டு அடுத்த வேலைக்குச் சென்று விடுவோம்.

3.      சிறுகதைகளின் நிறை குறைகளை சிந்தித்து அதை விமரிசனமாக வடிப்பதற்கு ஒரு வாய்ப்பு. இந்த வேலையை இந்தப் போட்டி இல்லாவிட்டால் ஒருவரும் செய்யமாட்டார்கள்.

4.      இந்த விமர்சனத் திறமை நம்மிடம் எந்த அளவு இருக்கிறது என்பதை ஒரு சுய மதிப்பீடு செய்ய ஒரு வாய்ப்பு.

2] இந்தப்போட்டிகளில் 
 VGK யின் ஆர்வம் + ஈடுபாடுகள்  

5.   அளவற்ற ஆர்வம் இல்லாவிடில் இத்தகைய முயற்சிகள் தோற்றுப்போகும். ஏறக்குறைய 9 மாதங்களாக இதைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஏகப்பட்ட சிரமங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும்.

6.   உங்களுக்கு யாராவது உதவுகிறார்களா என்று தெரியவில்லை. அப்படி உதவினால்கூட இந்த திட்டத்தை பிசிறில்லாமல் வழி நடத்துவது எளிதான காரியம் அல்ல. தூக்கத்தில் கூட இதைப்பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

7.   உங்கள் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் கண்டு பொறாமைப் படுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

 3] போட்டியின் பின்னனியில்  
 உள்ள அடிப்படை நோக்கங்கள்  

8.      எந்த செயலும் ஒரு அங்கீகாரத்திற்காகவே செய்யப்படுகிறது. ஆனால் பெரிய செயல்களைச் செய்வதற்கு அசாத்திய மனத்துணிவும் முயற்சியும் தேவை. அந்த ஊக்கமும் முயற்சியும் தங்களிடம் இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

9.      தங்களின் மனத் திருப்திக்கு இந்த திட்டம் ஏற்புடையதாய் இருப்பதால்தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளீர்கள். வாழ்க உங்கள் முயற்சி.

10.      “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” என்ற குறளுக்கு ஏற்ப தங்கள் படைப்புகளை மற்றவர்கள் பாராட்டும்போது கிடைக்கும் இன்பம் சொல்லிலடங்காது. அதை அனுபவிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும். அந்த கொடுப்பினை உங்களுக்கு இருக்கிறது.


 4] என்னைக் கவர்ந்த அம்சங்கள்  

11.      இந்த திட்டத்தை வகுத்து, பதிவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இதுவரை எந்தப் பிசிறும் இல்லாமல் நடத்திக்கொண்டு வரும் உங்கள் செயல்திறன் என்னை ஆச்சரியப்படுத்துகின்றது.

5] நடுவர் அவர்களின் 
செயல்பாடுகள் மற்றும் தீர்ப்புகள்  

12.      நடுவர் அவர்களின் முடிவுகளில் எந்தப் பார பட்சத்தையும் நான் காணவில்லை.

 6] பரிசுத்தொகைகள் பற்றி  

13.      பரிசு வாங்குவது என்பது எப்பொழுதும் மகிழ்ச்சி தரும் அனுபவம். தாங்கள் சிறந்த விமரிசனங்களுக்கு மட்டுமல்லாமல் பல ஆறுதல் பரிசுகளையும் தருவது என்னைப் போன்றவர்களுக்கு உற்சாகத்தைத் தருகின்றது.

7] பரிசுத்தொகைகளைக்  கணக்கிட்டு  
அவ்வப்போது அனுப்பி வைக்கும் 
முறைகள் பற்றி ...  


14.      இதில் யாராவது குறை சொன்னால் அவர்கள் வாய் வெந்து விடும்.

15.      “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற குறட்பாவின் வழி இந்த பரிசுகளை உரியவர்களின் கணக்கில் சேர்க்க ஏற்பாடு செய்தது மிகவும் மெச்சத்தகுந்த செயல்.

8] இந்தப்போட்டிகளில் எனக்கு  
இதுவரை   ஏற்பட்டுள்ள  
 அனுபவங்கள்  


16.      நல்ல சிறுகதைகளை மீண்டும் ஆழமாகப் படிக்க ஒரு வாய்ப்பு கிட்டியது.

17.      நல்ல விமர்சனங்களைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

18.      என்னால் இது போன்ற விமர்சனங்களை எழுத முடியவில்லையே என்ற ஆதங்கமும் இருந்தது. 

  

 

என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய 
முனைவர் திரு பழனி கந்தசாமி ஐயா அவர்களே !

தங்களுக்கு முதலில் அடியேனின் வணக்கங்கள்

தாங்கள் இங்கு மனம் திறந்து பேசியிருப்பவை யாவும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது ஐயா. என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   

அன்றொரு நாள் நாம் நேரில் சந்தித்து மகிழ்ந்தோம்.

http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.html
” சந்தித்த வேளையில் .... 
சிந்திக்கவே இல்லை ....
தந்துவிட்டேன் என்னை! ”
அதனை நான் மீண்டும் இன்று நினைத்து மகிழ்கிறேன்.


பிரியமுள்ள கோபு [VGK]



    



நினைவூட்டுகிறோம்

இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான

இணைப்பு:


கதையின் தலைப்பு:

VGK-37 
எங்கெங்கும்...
எப்போதும்...
என்னோடு... !

விமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்

02.10.2014
இன்று வியாழக்கிழமை
இந்திய நேரம் 
இரவு 8 மணிக்குள் .

போட்டியில் கலந்துகொள்ள 
மறவாதீர்கள் !

இன்னும் தங்களுக்கு இருப்பதோ 
நான்கு வாய்ப்புகள் மட்டுமே !


என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

28 கருத்துகள்:

  1. என்னை மிகவும் உயர்த்தி விட்டீர்கள் வைகோ அவர்களே. இந்த பெருமைக்கு என்ன கைம்மாறு செய்வேன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழனி. கந்தசாமி October 2, 2014 at 12:44 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      இங்கு இந்தப்பதிவினில் தங்களின் முதல் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது ஐயா.

      வெளிப்படையாகப் பேசும் தங்களின் தங்கமான குணம் எனக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமானது ஐயா.

      தங்களின் POINT Nos: 2, 3 and 14 படித்ததும் குபீரென்று வாய் விட்டுச் சிரித்து விட்டேன்.

      இந்தப்போட்டியின் நிறைவு விழாவினில் தங்களுக்கும் ஓர் சிறப்பிடம் தந்து கெளரவிக்க நினைத்துள்ளேன். வாழ்க !

      //என்னை மிகவும் உயர்த்தி விட்டீர்கள் வைகோ அவர்களே. இந்த பெருமைக்கு என்ன கைம்மாறு செய்வேன்?//

      Sir, You are very well deserved for all these things.

      மீண்டும் என் நன்றிகள், ஐயா.

      அன்புடன் VGK

      நீக்கு
  2. அனுபவச்செறிவுள்ள கருத்துகளை
    அருமையாக அளித்த
    திரு.பழனி. கந்தசாமி ஐயா
    அவர்களுக்குப் பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  3. நறுக்குத் தெறித்தாற்போல் என்பார்கள். அப்படி மிகவும் அழகாக சுருக்கமாக அதே சமயம் சிறப்பான மனந்திறந்த கருத்துகள். பாராட்டுகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  4. 'உள்ளத்து உணர்வுகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையிலேயே ஜொலிக்கும்' என்று எப்போதோ எழுதியது இப்போது நினைவுக்கு வந்தது. ஐயா பழனி கந்தசாமி அவர்களின் இந்த உணர்வு பிரவாகத்தைப் படித்ததும் என்றோஅப்படி எழுதியதும் மனசில் திருத்தம் வேண்டி நின்றது. உள்ளத்திலிருந்து பீறிடும் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை,அவையே சத்திய உயிர்ப்புடன் ஜொலிப்பது தெரிந்தது. கோபு சாருடனான சில மாதங்கள் பழக்கத்தில் நானும் உணர்ந்ததும் இதுவாகையால் அந்த ஜொலிப்பின் விசேஷமும் என்னுள் கூடியது. அந்த அனுபவத்தை வார்த்தைகளில் உணரச் செய்தமைக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  5. பழனி ஐயா அவர்களின் கருத்தே என் கருத்தும் ஆகும்.
    சிறுகதைகளை சிறப்பாக எழுதி விமர்சனப் போட்டிகள் நடத்தி,
    சொந்த பணத்தினை பரிசாக வழங்கி, எழுத்துலகினை வளர்க்கும் தங்களின் பணி போற்றுதலுக்கு உரியது
    போற்றுகிறோம் ஐயா

    பதிலளிநீக்கு
  6. சகோதர் ஜெயக்குமார் சொன்னது போல உங்கள் உழைப்பையும் எழுத்துத் திறமையையும் பார்க்கையில் பிரமிப்பாக உள்ளது. இனிய பாராட்டுக்கள்!

    சகோதரர் பழனி கந்தசாமி அவர்களது கருத்துக்கள் யாவும் அருமை!!

    பதிலளிநீக்கு
  7. பழனி ஐயா மிக அருமையாகக் கருத்துகளை எடுத்து சுவையாக எழுதியுள்ளார். நன்றி கோபு சார் பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
  8. திரு.பழனி கந்தசாமி ஐயா அவர்களின் கருத்துகள் அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. பெரிய செயல்களைச் செய்வதற்கு அசாத்திய மனத்துணிவும் முயற்சியும் தேவை. அந்த ஊக்கமும் முயற்சியும் தங்களிடம் இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.//

    நடுவர் அவர்களின் முடிவுகளில் எந்தப் பார பட்சத்தையும் நான் காணவில்லை.//

    மிக சரியாக உங்களைப்பற்றியும், நடுவர் அவர்களைப்பற்றியும் சொல்லி இருக்கிறார்கள் திரு பழனி .கந்தசாமி ஐயாஅவர்கள்.
    வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
  10. விமரிசனப் போட்டியைப் பற்றிய இந்த விமரிசனத்தை ரசித்துப் படித்தேன்....

    பதிலளிநீக்கு
  11. திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் மிகச் சிறப்பாக மடல் வரைந்திருக்கிறார்.

    வாழ்த்துக்கள் இருவருக்கும்....

    பதிலளிநீக்கு
  12. ஜீவி சார்
    /உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தையில் உயிர் கொடுத்தால் உண்மயில் ஜொலிக்கும்/ இது என் வலைப் பூவின் முகப்பில் நான் எழுதி வைத்திருக்கும் வார்த்தைகளல்லவா. நீங்கள் எப்போதோ எழுதியதா எங்கோ படித்ததா?

    பதிலளிநீக்கு
  13. ஜிஎம்பீ சார்!

    'உள்ளத்து உணர்வுகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்' என்பது எனது உணர்வுபூர்வமான
    சொந்த வரி தான்!

    இந்த மாதிரியான நிறைய முத்துக்களை என் பதிவுகளிலும்
    பிறர் பதிவுகளுக்கான பின்னூட்டங்களிலும் வாரி இறைத்திருக்கிறேன்! அதுவும் உங்கள் பதிவுகளில் எக்கச்சக்கம்.

    'தன் நெஞ்சு அறிவது பொய்யற்க' என்னும் குறள் வரியை உணர்வு பூர்வமாக உணர்ந்தவனும் நான்.

    நீங்கள் தாம் உங்கள் நினைவுகளை மீட்டிப் பார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  14. ஜீவி சார் உணர்வு பூர்வமான உங்கள் இந்த வரிகள் இறைந்து கிடக்கும் இடங்கள் என் நினைவுக்கு வரவில்லையே. உதவுங்களேன்

    பதிலளிநீக்கு
  15. நீங்களே இந்த முகப்பு வார்த்தைகளைக் கோர்த்து எழுதினீர்களா இல்லை எங்கோ படித்ததா என்பதை மட்டும் ஞாபகப்படுத்திப் பாருங்கள். இரண்டாவது என்றால் எப்பொழுது என்று சொன்னீர்களென்றால் என்னால் தேடிப் பார்த்துத் தெரிவிக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  16. ஜீவிஐயா. நண்பர் ஒருவரது பதிவின் பின்னூட்டங்களில் சர்ச்சை செய்ய விருப்பமில்லை. நான் உங்களுக்கு ஒரு மடல் எழுதி இருக்கிறேன். பாருங்கள். விளங்கும்

    பதிலளிநீக்கு
  17. அன்பின் கந்தசாமி ஐயா

    அருமையான நேயர் கடிதம் - மிக மிக இரசித்தேன் - இரு முறை படித்தேன் - நன்று நன்று - அதுவும் அருமை நண்பர் வை.கோவின் சிறந்த சிந்தனையும் அவரது ஆற்றலும் - விடாமுயற்சியும் பாராட்டுக்குரியவை. அவருக்கும் தங்களுக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  18. நான் இதுவரை இந்த பின்னூட்டங்களைப் படிக்காமல் விட்டதிற்கு வருந்துகிறேன். நேயர் கடிதத்திற்கு பெரிதாக என்ன பின்னூட்டம் வந்துவிடப்போகிறது என்ற மெத்தனம்தான் காரணம். ஆனால் சீனா ஐயா அவர்கள் போன்றவர்கள் என் கடிதத்தைப் பாராட்டியிருக்கிறார்கள் என்பது எனக்குப் பெரிய பெருமை. எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    கருத்துகள் தனி மனித உரிமை அல்ல என்பதை பலரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அனைத்தும் அடுத்தவரிடமிருந்து பெற்றவையே. இந்த முதிர்ச்சி எல்லோருக்கும் வர வேண்டும் என்று விழைகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. திரு பழனி கந்த சாமி சார் கருத்துக்கள் மிகவும் அருமையா இருக்கு.இப்படி எல்லாம் யோசித்து எழுத தனி திறமை வேணும்

    பதிலளிநீக்கு
  20. புள்ளி விவர மன்னனுக்கு POINT POINTஆக, திரு பழனி கந்தசாமி ஐயா அவர்கள் அழகாக, அருமையாக பட்டியல் இட்டு அளித்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  21. திரு பழனி ஐயா நல்ல நல்ல கருத்துகள் சொல்லினாங்க.நல்லா இருந்திச்சி.

    பதிலளிநீக்கு
  22. திரு பழனி கந்தசாமி சாரின் கருத்துகள் சிறப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  23. 'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html

    தலைப்பு: ’இன்று போல் என்றும்’

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு