About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, March 5, 2009

'பெரியவா' அனுக்கிரகம் [ TRIAL ] சோதனை வெளியீடு

எழுத்து எனக்கு வாய்த்தது ' ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ' அனுக்கிரஹம் என்றே நம்புகிறேன்.


  
அதன் அடுத்த கட்டமாய் இதோ உங்களோடு என் எண்ணங்களை பகிர இந்த வலைப் பதிவு.

வாருங்கள் பேசலாம் !{எனக்காக வலைத்தளத்தில் இந்தப் புதிய இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்து உதவிய என் ஆருயிர் நண்பரும், என் எழுத்துலக மானஸீக குருநாதருமான திரு. ரிஷபன் ஆர். ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் vgk}

36 comments:

 1. காஞ்சிப் பெரியவரின் கருணையுடன் ஆரம்பித்த வலைப்பூ சிறப்புடன் நடை போடும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. என்னங்க அக்கிரமமா இருக்கு!!!!!! ரெண்டு வருசம் ஆகி இருக்கு நீங்க எழுதவந்து......... இன்னிக்குத்தான் என் கண்ணில் விழுந்துருக்கீங்க:-))))

  நான் ஊர் சுத்திக்கிட்டே இருந்து உங்களைக் கவனிக்கத் தவறிட்டேனே:(

  ReplyDelete
 3. வருகை தந்து வாழ்த்தியுள்ள நால்வருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  2009 ஆம் ஆண்டு என் அறிமுகப்பதிவு மட்டுமே.

  2010 ஆம் ஆண்டில் சோதனைப்பதிவாக 2 மட்டுமே

  2011 ஆம் ஆண்டு முதல் தான் முழுவீச்சில் பதிவிட ஆரம்பித்துள்ளேன்.

  தொடர்ந்து வாருங்கள். உற்சாகம் தாருங்கள்

  ReplyDelete
 4. 'பெரியவா' அனுக்கிரகம்

  நித்தியமான வாக்கு!

  ReplyDelete
 5. //இராஜராஜேஸ்வரி said...
  'பெரியவா' அனுக்கிரகம்

  நித்தியமான வாக்கு!
  January 8, 2012 9:01 AM //

  ஸத்யமான அருள் வாக்கும் கூட! ;)))))))))))))

  ReplyDelete
 6. //வாருங்கள் பேசலாம் !// ;) வந்தேன்.

  ReplyDelete
 7. இமா said...
  //வாருங்கள் பேசலாம் !// ;)

  ////வந்தேன்.////

  நன்றி! WELCOME TO YOU!

  அன்புள்ள vgk

  ReplyDelete
 8. வாங்கோ அண்ணா அன்பு வரவேற்புகள்...

  ரொம்ப தாமதமா வரவேற்றிருக்கேன்.....

  பெரியவா அருள் அனுக்ரஹம் எப்போதும் உங்களுக்கு இருக்கு அண்ணா....

  ReplyDelete
  Replies
  1. அன்பின் மஞ்சு,

   வாங்கோ, வணக்கம். வரவேற்புகளுக்கு சந்தோஷம். இதில் தாமதம் தவிர்க்க முடியாததே, அதனால் பரவாயில்லை.

   //பெரியவா அருள் அனுக்ரஹம் எப்போதும் உங்களுக்கு இருக்கு அண்ணா....//

   ஆம் மஞ்சு. அதில் எந்தவிதமான சந்தேகமும் எனக்கு இல்லை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகள் இன்றும் எங்களுடன், எங்களின் ஆத்தில் [அகத்தில்/வீட்டில்] தான் வாழ்ந்துகொண்டு, வழிகாட்டி வருகிறார். அவர் அனுக்கிரஹம் ஏராளமாக எங்களுக்கு உண்டு.

   மஞ்சு, இந்த நடமாடும் தெய்வமாக வாழ்ந்து காட்டியவரைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? கேள்விப்பட்டுள்ளீர்களா? ஒருமுறையேனும் தங்களின் 20-25 வயதுகளில், சென்னையிலோ, காஞ்சீபுரத்திலோ அல்லது இந்தியாவின் வேறு ஏதாவது ஊரிலோ தரிஸிக்கும் பாக்யம் பெற்றிருந்தீர்களா?

   முக்காலமும் உணர்ந்த மஹா ஞானி அவர்கள். அவதார புருஷர். இனிமை, எளிமை, தூய்மை, ஞானம், அருள், காருண்யம், கடாக்ஷகம், அன்பு, பண்பு, அனைத்து விஷயங்களிலும் தெளிவான நீரோடை போன்ற அறிவு, அனுஷ்டானங்கள் இவற்றிற்கெல்லாம் எடுத்துக்காட்டு அவர்.

   தொடரும்....


   Delete
  2. நான் இந்த மஹாஸ்வாமிகளை நிறைய முறை போய் தரிஸிக்கும் பாக்யம் பெற்றவன் மஞ்சு. ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்துடன் அவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் [முக்கியமாக சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ளும் காலங்களில் - இந்த விரதம் மேற்கொள்ளும் ஓரிரு மாதங்கள் துறவிகள் ஒரே இடத்தில் தான் தங்கியிருப்பது வழக்கம் - மற்ற காலங்களில் ஊர் ஊராகச் செல்வது வழக்கம்] போய் தரிஸித்து, பாதபூஜை, பிக்ஷாவந்தனம் முதலியவைகளில் கலந்து கொண்டு, ஆசிபெற்று வருவது வழக்கம்.

   எனக்கு நேரிடையாகவே நடந்துள்ள பல்வேறு MIRACLE அனுபவங்கள் உள்ளன, மஞ்சு.

   இவரின் வாழ்க்கைச்சரித்திரம் பற்றியும், மஹிமைகள் பற்றியும், இவருடன் எனக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள் பற்றியும், பிறருக்கு ஏற்பட்டு என்னுடன் அவர்களால் பகிரப்பட்ட அனுபவங்கள் பற்றியும், என்னால் நூற்றுக்கணக்கான பதிவுகள் தரமுடியும், மஞ்சு.

   ஆனால் அது போலெல்லாம் செய்து விளம்பரம் தேட நான் எப்போதுமே விரும்புவது இல்லை.

   எனக்கு இந்த மஹானுடன் ஏற்பட்ட இனிய யாருக்குமே எளிதில் கிடைக்க முடியாததோர் மெய்சிலிரிக்க வைக்கும் அனுபவத்தை, ஒரே ஒருமுறை மட்டும் நான் முதன்முதலாக ஓர் கட்டுரையாக எழுதும்படியாக ஆனது.

   அதுவும் கவிஞர் நெல்லை பாலு என்பவர் என்னை மிகவும் வற்புருத்திக் கேட்டுக்கொண்டதால், மட்டுமே எழுதிக்கொடுத்தேன்.

   கவிஞர் நெல்லை பாலு அவர்கள் 1995 ஜனவரியில் ஓர் தொகுப்பு நூல் புத்தகத்தை வெளியிட்டிருந்தார்.

   தலைப்பு: ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி பரமாச்சார்யார் மஹா பெரியவாள் அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிட்டியவர்களின் அனுபவக் கட்டுரைகள்.

   அதில் முன்னாள் இந்திய ஜனாதிபதி [President of India] திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்கள், பொள்ளாச்சி திரு. நா. மகாலிங்கம் அவர்கள், கவியரசு கண்ணதாசன் அவர்கள், கல்கி ஆசிரியர், ஆனந்தவிகடன் ஆசிரியர், கவியரசி செளந்தரா கைலாசம் அவர்கள், திரு. பரணீதரன் அவர்கள்,திரைக்கவித்தென்றல் வாலி அவர்கள், டாக்டர் வி.ஜி. சந்தோஷம் அவர்கள், திரு. ரா.கணபதி அவர்கள், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யார் அவர்கள், கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள், நீதிபதி எம்.எம். இஸ்மாயில் அவர்கள், டி.எஸ்.பார்த்தசாரதி அவர்கள், PAUL BRUNTON அவர்கள், எழுத்தாளர் மழபாடி ராஜாராம் அவர்கள், அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்ச்சரியார் அவர்கள், திரு. பாலகுமாரன் அவர்கள், ம.பொ.சிவஞானம் அவர்கள், திருமுருக கிருபாநந்த வாரியார் அவர்கள், பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் போன்ற பல்வேறு V I P க்களின் அனுபவக் கட்டுரைகளுடன், என்னுடைய அனுபவக்கட்டுரையையும் சேர்த்துத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டிருந்தார்கள்.

   என்னிடம் இன்றும் அதன் பிரதியொன்று பத்திரமாக உள்ளது.

   இதுபோல இன்னும் பலசுவையான அனுபவங்கள் உள்ளன, மஞ்சு. வாய்ப்புக்கிடைத்தால் தங்களுடன் மின்னஞ்சல் மூலம் அவ்வப்போது பகிர்ந்து கொள்வேன்.

   இங்கு வருகை தந்து சிறப்பித்துள்ளது மகிழ்வளிக்கிறது.

   பிரியமுள்ள,
   VGK

   Delete
 9. ஆச்சர்யமான ஆனந்த அனுபவம் அண்ணா மஹாஸ்வாமிகளை நான் கண்டதில்லை. ஆனால் என் பெரியப்பா கண்டிருக்கிறார்.. தரிசித்து இன்று மிக நல்ல நிலையில் இருக்கிறார். எல்லாம் மஹாஸ்வாமிகளின் கருணை என்று இன்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன் அண்ணா... மிக அற்புதமான கணங்கள் நீங்க இங்க பகிர்ந்தவை அண்ணா.... மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா மஹாஸ்வாமிகள் பற்றி நீங்க பகிர்ந்தவை எல்லாம் கேட்க ஆச்சர்யமாக இருக்கிறது.... எத்தனை அற்புதம்...

  ReplyDelete
 10. ;)))))) மிக்க சந்தோஷம் மஞ்சு. தங்கள் மெயில் பார்த்தேன். பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். எல்லாமே Miracles & Thrilling தான். அதில் தாங்கள் கேட்டுக்கொண்ட படி நானும் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

  பிரியமுள்ள
  கோபு அண்ணா

  ReplyDelete
 11. இவரின் வாழ்க்கைச்சரித்திரம் பற்றியும், மஹிமைகள் பற்றியும், இவருடன் எனக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள் பற்றியும், பிறருக்கு ஏற்பட்டு என்னுடன் அவர்களால் பகிரப்பட்ட அனுபவங்கள் பற்றியும், என்னால் நூற்றுக்கணக்கான பதிவுகள் தரமுடியும், மஞ்சு.

  ஆனால் அது போலெல்லாம் செய்து விளம்பரம் தேட நான் எப்போதுமே விரும்புவது இல்லை.//

  இது கண்டிப்பாக விளம்பரமே அல்ல. எங்களைப் போன்று அவரைப் பற்றித் தெரிந்து கொள்பவர்களுக்கு நீங்கள் அளிக்கும் பிரசாதம்.

  //இதுபோல இன்னும் பலசுவையான அனுபவங்கள் உள்ளன, மஞ்சு. வாய்ப்புக்கிடைத்தால் தங்களுடன் மின்னஞ்சல் மூலம் அவ்வப்போது பகிர்ந்து கொள்வேன்.//

  அதற்கு தனி ஒரு இழை ஆரம்பித்து பதிவுகளைப் பகிர்ந்து கொண்டால் கண்டிப்பாக நன்றியுடையவளாக இருப்பேன்.

  இந்த இயந்திர உலகில் எதையோ வலையில் தேடும் போது இது போன்று நல்ல விஷயங்கள் இளைஞர்களின் கண்களையும், இதயத்தையும் சென்று அடைந்தால் அது எவ்வளவு நல்லது.

  உங்களை வற்புறுத்த விரும்பவில்லை. ஆனால் உண்மையில் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய சொந்த அனுபவங்களை மட்டும் நான் பதிவாக வெளியிடாமல் பிறகு சமயம் வரும்போதெல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

   பிறர் அனுபவங்கள் பற்றி, கேள்விப்பட்டது பற்றி, பலர் எழுதியுள்ள அபூர்வமான விஷயங்கள் பற்றி, எனக்கு மெயில் மூலம், அடிக்கடி [அநேகமாக தினமுமே] ஸத் சங்க நண்பர்கள் பலர் மூலம் Forward செய்யப்படுபவை, வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் நான் படித்து, எனக்கு மிகவும் பிடித்த, மெய்சிலிரிக்க வைத்த, ஒருசில பதிவுகளை மட்டும், Filter செய்து, தங்களுக்கு மாதம் ஒன்று வீதம் அனுப்பி வைக்கிறேன். தாங்கள் பணி ஓய்வு பெற்றபின், கேட்டீர்களானால் அன்றாடம் நிறையவே அனுப்பி வைக்கிறேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும், வாசிக்க ஆவலுடன் கேட்கும் ஸத் விஷயங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பிரியமுள்ள
   கோபு

   Delete
 12. காஞ்சிப் பெரியவா ஆசியுடன் ஆரம்பித்து இன்று அமோகமா பதிவிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். சும்மாவா சொன்னார்கள், எதுக்கும் பெரியவாளைக் கேட்டு செய் என்று.

  ReplyDelete
  Replies
  1. பழனி. கந்தசாமி April 11, 2015 at 6:57 AM

   வாங்கோ, வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

   //காஞ்சிப் பெரியவா ஆசியுடன் ஆரம்பித்து இன்று அமோகமா பதிவிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். சும்மாவா சொன்னார்கள், எதுக்கும் பெரியவாளைக் கேட்டு செய் என்று.//

   ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் அவர்களைப்பற்றியே May 2013 இல் துவங்கி January 2014 வரை தொடர்ச்சியாக 108 பகுதிகளுக்கும் மேலான மெகா தொடர் எழுதிடும் வாய்ப்பு எனக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹத்தில் கிடைத்திருந்தது. அதனால் மட்டுமே என்னால் எழுதவும் முடிந்தது.

   அதற்கான அறிவிப்பு தொடக்கம் இதோ இதில் உள்ளது.
   http://gopu1949.blogspot.in/2013/05/blog-post_19.html

   ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹத்தில் அவை அத்தனையையும் படித்து ரஸிக்க தங்களுக்கும் ஓர் நல்ல வாய்ப்பு அமையட்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.

   அன்புடன் VGK

   Delete
 13. பெரியவா சொன்னா இந்த வைகோ செய்துடுவார் என்பதற்கிணங்க இதோ இன்று வரை வெற்றிநடை போடும் தங்களுக்கு வாழ்த்துகள் சார்!

  ReplyDelete
  Replies  1. Thulasidharan V Thillaiakathu April 16, 2015 at 7:49 AM

   வாங்கோ, வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

   //பெரியவா சொன்னா இந்த வைகோ செய்துடுவார் என்பதற்கிணங்க இதோ இன்று வரை வெற்றிநடை போடும் தங்களுக்கு வாழ்த்துகள் சார்!//

   ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் அவர்களைப்பற்றியே May 2013 இல் துவங்கி January 2014 வரை தொடர்ச்சியாக 108 பகுதிகளுக்கும் மேலான மெகா தொடர் எழுதிடும் வாய்ப்பு எனக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹத்தில் கிடைத்திருந்தது. அதனால் மட்டுமே என்னால் எழுதவும் முடிந்தது.

   அதற்கான அறிவிப்பு தொடக்கம் இதோ இதில் உள்ளது.
   http://gopu1949.blogspot.in/2013/05/blog-post_19.html

   ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹத்தில் அவை அத்தனையையும் படித்து ரஸிக்க தங்களுக்கும் ஓர் நல்ல வாய்ப்பு அமையட்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.

   அன்புடன் VGK

   Delete
 14. தாங்கள் பெரியவரின் ஆசியுடன் தான் வலைப்பதிவு ஆரம்பித்தீர்களா?
  அதான்,,,,,,,,,,,,,,
  ஆனா எனக்கு கொஞ்சம் தூரம் போங்க,
  புகைப்படங்கள் அத்துனையும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. mageswari balachandran April 30, 2015 at 4:54 PM

   வாங்கோ, வணக்கம்.

   //தாங்கள் பெரியவரின் ஆசியுடன் தான் வலைப்பதிவு ஆரம்பித்தீர்களா? //

   ஆமாம். சந்தேகமே இல்லாமல் அவர்களின் ஆசியில் மட்டுமே எனக்கு எழுத்து அமைந்துள்ளது.

   ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாள் அவர்களைப்பற்றியே தொடர்ச்சியாக 108 பதிவுகள் என்னால் கொடுக்க முடிந்ததும் அவர்களின் அனுக்கிரஹம் மட்டுமே.

   பகுதி-1 க்கான இணைப்பு:
   http://gopu1949.blogspot.in/2013/05/1.html


   பகுதி-108 க்கான இணைப்பு:
   http://gopu1949.blogspot.in/2014/01/108.html

   //ஆனா எனக்கு கொஞ்சம் தூரம் போங்க,//

   இந்த இடத்தில் நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியவில்லை, மேடம்.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   இன்று ‘குருவாரம்’ வியாழக்கிழமையில் என் முதல் TRIAL பதிவுக்கு வருகை தந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து என் அனைத்துப்பதிவுகளுக்கும் வருகை தந்து கருத்தளித்து பரிசினை வெல்லுங்கள்.

   போட்டி நிறைவு பெற இன்னும் எட்டு மாதங்களே உள்ளன.
   தினமும் சராசரியாக 5 பதிவுகளுக்குப் பின்னூட்டம் அளித்து வந்தாலே போதும். அடுத்த 150 நாட்களில் அதாவது அடுத்த 5 மாதங்களில் மிகச்சுலபமாக முடித்து வெற்றி பெறலாம். அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   //புகைப்படங்கள் அத்துனையும் அருமை.//

   மிக்க நன்றி, மேடம். WELCOME !

   அன்புடன் VGK

   Delete
 15. அசாதாரண மனிதர்கள் வரிசையில் உங்களையும் நிறுத்தலாம்.

  'பெரியவா' ஆசீர்வாதங்களுடன் தங்களது முதல் பதிவு அவரது படங்களுடன் அற்புதம். சாதாரணமாக ஆரம்பித்து நுழைந்த எழுத்துலக
  முன்னோட்டம் பின்னாளில் பெருத்த பின்னூட்டங்களின் கோட்டமாக அமைந்தது அவரது மானசிக ஆசீர்வாதங்கள் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மிக்க சந்தோஷம்.

  தங்களின் வலைப்பூ என் கண்ணில் பட்டது கூட எனக்கு 'பெரியவாளின்' அனுக்கிரஹம் சிறிது உண்டென்று தெரிந்து கொள்ளத்தானோ என்னவோ? படிக்கப் படிக்க சுவாரஸ்யங்களும் எதார்த்தங்களும் கொட்டிக் கிடக்கின்றதே. சிந்தாமணி கிரஹத்துக்குள் நுழைந்தார்போல.

  அன்புடன்,
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

  ReplyDelete
  Replies
  1. ஜெயஸ்ரீ ஷங்கர் July 3, 2015 at 10:28 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அசாதாரண மனிதர்கள் வரிசையில் உங்களையும் நிறுத்தலாம்.//

   ஆனால், நான் மிகச்சாதாரணமானவன் ஆச்சே !

   //'பெரியவா' ஆசீர்வாதங்களுடன் தங்களது முதல் பதிவு அவரது படங்களுடன் அற்புதம். சாதாரணமாக ஆரம்பித்து நுழைந்த எழுத்துலக முன்னோட்டம் பின்னாளில் பெருத்த பின்னூட்டங்களின் கோட்டமாக அமைந்தது அவரது மானசிக ஆசீர்வாதங்கள் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மிக்க சந்தோஷம்.//

   அதே ... அதே ... மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

   //தங்களின் வலைப்பூ என் கண்ணில் பட்டது கூட எனக்கு 'பெரியவாளின்' அனுக்கிரஹம் சிறிது உண்டென்று தெரிந்து கொள்ளத்தானோ என்னவோ?//

   நிச்சயமாக அதுபோலத்தான் இருக்கும். நானும் இதையேதான் என்னுள் நினைத்தேன்.

   உதாரணமாக .............
   http://gopu1949.blogspot.in/2013/04/9.html
   ‘நானும் என் அம்பாளும் - அதிசய நிகழ்வு’

   //படிக்கப் படிக்க சுவாரஸ்யங்களும் எதார்த்தங்களும் கொட்டிக் கிடக்கின்றதே. சிந்தாமணி கிரஹத்துக்குள் நுழைந்தார்போல.//

   சிந்தாமணி கிரஹத்துக்குள் நான் இன்னும் நுழைந்து பார்க்கவே சான்ஸே வரவில்லையாக்கும். ஆனாலும் மிகுந்த ஆவலுடன் முயற்சித்தேன்.

   ஆனால் அங்கே 'No posts found' என்றல்லவா கூறி என்னை ஏமாறச்செய்துவிட்டது. :)))))

   சிந்தாமணி = http://jayavinpaavaivilakku.blogspot.in/

   அன்புடன்,
   ஜெயஸ்ரீ ஷங்கர்.//

   என் TRIAL பதிவான இதற்கு, இங்கு இன்று [அதுவும் ஒர் விசேஷ நாளாகிய 3rd July இல்] தங்களின் அன்பான வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி.

   அன்புடன் கோபு

   Delete
 16. ஸார்வணக்கம்.. உங்க சாதனையாளர்கள் பதிவெல்லாம் படித்து முடித்த பிறகு தான் உங்க பழைய பதிவுகளை தேடிப்படிக்க எண்ணியிருந்தேன். ஒல்டர் போஸ்ட் ஓல்டர் போஸ்ட் க்ளிக் பண்ணி பண்ணி இங்க வர இவ்வளவு நாள் ஆனது. போட்டிகளில் கலந்து கொண்டிருந்தால் வேகமாக பின்னூட்டம் போட ஒரு அவசரத்தன்மை இருக்கும். இப்ப ஒவ்வொரு பதிவு பின்னூட்டங்கள் எல்லாம் நிதானமாக படித்து ரசிக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கு. நான் படிக்க தொடங்கும் முதல் பதிவே ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி ஆச்சார்யாளோட ஆசிர்வாதத்துடன் தொடங்கி இருக்கேன். வரிசையா எல்லா பதிவும் நிதானமா ரசித்து படிக்க போறேன். உங்க பதிவுகள் மூலமாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளப்போகிறேன் இனி ஓல்டர போஸ்ட் க்ளிக் பண்ணாம நியுயர் போஸ்ட் க்ளிக் பண்ணி படிக்கணும்

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... January 3, 2016 at 10:26 AM

   //ஸார் வணக்கம்.. //

   வாங்கோ வணக்கம்.

   //உங்க சாதனையாளர்கள் பதிவெல்லாம் படித்து முடித்த பிறகு தான் உங்க பழைய பதிவுகளை தேடிப்படிக்க எண்ணியிருந்தேன்.//

   மிகவும் சந்தோஷம்.

   //ஒல்டர் போஸ்ட் ஓல்டர் போஸ்ட் க்ளிக் பண்ணி பண்ணி இங்க வர இவ்வளவு நாள் ஆனது.//

   அதுபோலெல்லாம் கஷ்டப்பட்டு வராமல் மிகச்சுலபமாக வந்திருக்கலாமே. மெயில் மூலம் valambal@gmail.com என்னைத்தொடர்பு கொண்டு கேட்டிருந்தால், நானும் மெயில் மூலம் ஒவ்வொரு மாத இணைப்புகளையும் அனுப்பி வைத்திருப்பேன். அதிலிருந்தே வரிசையாகக் கிளிக் செய்து சம்பந்தப்பட்ட பதிவுக்கு மிகச்சுலபமாகத் தாங்கள் சென்றிருக்கலாம்.

   மேஜை கணினியோ அல்லது மடிக்கணினியோ தங்களிடம் இருப்பின் என் வலைத்தளப்பக்கத்தின் Full Screen அதில் தெரியுமே. அதில் வலதுபுறம் ஓரமாக வந்தீர்களானால் 386 Followers Photos சின்னச்சின்னதாக ஸ்டாம்ப் சைஸுக்குக் காட்சி அளிக்கிறது அல்லவா. அதன் கீழே வந்தீர்களானால், ஒவ்வொரு மாத INDEX இருக்கும் பாருங்கோ. அதில் Bottom most ஆக ஒரு சின்ன முக்கோணமும் அதன் அருகே 2011 (200) என்று இருக்கும் பாருங்கோ. அதை க்ளிக் செய்தால் அதில் 12 முக்கோணங்களுடன் 12 மாதங்கள் தனித்தனியாக உடைந்து வரும் பாருங்கோ. அதில் அடியில் கடைசியாகத் தோன்றும் January (22) என்பதை மேலும் ஒருமுறை கிளிக் செய்தால் 2011 ஜனவரியில் வெளியிடப்பட்டுள்ள 22 பதிவுகளும் தனித்தனியே காட்சியளிக்கும் பாருங்கோ. அதில் கீழே கடைசியாகக் காட்சியளிக்கு ‘இனி துயரம் இல்லை’ என்பதுதான் என்னுடைய முதல் வெளியீடாகும். அதை கிளிக் செய்தால் அந்தப்பதிவுக்குத் தங்களை சுலபமாகக் கொண்டு சென்று விடும்.

   இதுபோல INDEX மூலம் ஒவ்வொன்றையும் எட்டிப்பிடித்து, படித்து பின்னூட்டம் இடுவதுதான் மிகச்சுலபமான முறையாக இருக்கும் என்பதை அறியவும்.

   ஒவ்வொரு முறையும் சுமார் 800 பதிவுகளையும் ஒவ்வொன்றாக ஓல்டர் போஸ்ட் க்ளிக் செய்து வருவதானால், மஹா மஹா கஷ்டமாகும். வெறுத்துப் போய் விடும்.

   இந்த நான் சொல்லும் மிகச்சுலபமான வழியினைப் பின்பற்றினால் தான் தங்களுக்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

   //போட்டிகளில் கலந்து கொண்டிருந்தால் வேகமாக பின்னூட்டம் போட ஒரு அவசரத்தன்மை இருக்கும். இப்ப ஒவ்வொரு பதிவு பின்னூட்டங்கள் எல்லாம் நிதானமாக படித்து ரசிக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கு.//

   மெதுவாகவே தினமும் ஒன்றோ அல்லது வாரத்திற்கு 2-3 பதிவுகளோ வீதமோ ரஸித்துப் படித்து வாருங்கள் போதும். அப்போதுதான் அலுப்பு ஏற்படாமல் சுவாரஸ்யமாக இருக்கும்.

   //நான் படிக்க தொடங்கும் முதல் பதிவே ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி ஆச்சார்யாளோட ஆசிர்வாதத்துடன் தொடங்கி இருக்கேன்.//

   மிகவும் சந்தோஷம். 2009 மற்றும் 2010 இல் தலா ஒரு பதிவு வீதம் வெளியிட்டுள்ள இவை இரண்டும் TRIAL POSTS மட்டுமே. அதாவது நான் வலைப்பூ துவங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் பிறர் உதவிகளுடன் கொடுத்த சோதனைப் பதிவுகள் இவை.

   02.01.2011 முதல் நான் என் வலைத்தளத்தில் கொடுத்துள்ளவைகள் மட்டுமே, பிறர் உதவிகள் ஏதுமின்றி நானே தனியாகவே கொடுத்துள்ள என்னுடைய ஒரிஜினல் வெளியீடுகள்.

   //வரிசையா எல்லா பதிவும் நிதானமா ரசித்து படிக்க போறேன். உங்க பதிவுகள் மூலமாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளப்போகிறேன்.//

   மிகவும் சந்தோஷம். நிதானமாக அப்படியே செய்யுங்கோ.

   //இனி ஓல்டர போஸ்ட் க்ளிக் பண்ணாம நியூயர் போஸ்ட் க்ளிக் பண்ணி படிக்கணும்.//

   ஓல்டர் போஸ்ட் + நியூயர் போஸ்ட் என்றெல்லாம் கிளிக் செய்து சிரமப்பட்டு படிக்காமல், நான் மேலே சொன்னதுபோல, RIGHT SIDE END இல் APPEAR ஆகும் YEARLY / MONTHLY INDEX மூலம் ஒவ்வொன்றையும் Click செய்து OPEN செய்து சுலபமாகப் பதிவுக்குச் செல்லலாம்.

   தொடர்ச்சியாக ஒரே நாளில் அடுத்தடுத்து பல பதிவுகளைப் படிக்க வேண்டிய சூழ்நிலையும் ஆர்வமும் இருந்தால், அந்த சமயங்களில் மட்டும் Newer Post என்பதை க்ளிக் செய்துகொள்ளலாம்.

   வேறு ஏதேனும் சந்தேகங்களோ, உதவிகளோ தேவையென்றால் மெயில் மூலம் என்னைத் தொடர்பு கொள்ளுங்கோ.

   அன்புடன் VGK

   Delete
 17. ஸார் விவரமான ரிப்ளை கமெண்டிற்கு நன்றிஃ காலை 8-ளணி கிளம்பி போனா இரவு7-- மணி ரூம் வரமுடியும். ஆபீஸில் கம்ப்யூட்டர் இருந்தாலும் ஃபேஸ்புக் ப்ளாக் எல்லாம் ப்ளாக் பண்ணி வச்சிருப்பா. பர்சனல் எதுவும் கூடாதுன்னு. ஸோ.. மொபைல் நெட்தான் யூஸ் பண்ணி ஆகணும். கைக்குள்ளவே இருக்குமே.

  காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளுடன் தங்களுக்கு கிடைத்துள்ள அற்புதமான நிகழ்வுகளை பகிர்வது எந்தவிதத்தில் விளம்பரமாகும் சார். எல்லாருக்கும் அந்த மஹானை தரிசிக்கவோ அருள் மொழிகளைக்கேட்டு சந்தோஷப்படவோ வாய்ப்பு கிடைத்திருக்காது இல்லையா. தங்களுக்கு அந்த வாய்ப்புகள் தாராளமா கிடைத்திருக்கு. அதை பகிர்ந்து கொண்டால் எங்களுக்கும் அந்த ஆனந்த அநுபவம் கிடைக்குமில்லையா. நீங்க ஃபீல் பண்ணி உணர்ந்தவைகளை எழுத்தில் பிரதிபலிக்கும் திறமையும் நிறையாவே உங்களிடம் இருக்கு. ரசிக்க நாங்க நிறயபேர்கள் காத்திருக்கோம். எழுதுவதை ஒருபோதும் நிறுத்திவிடாதீர்கள்

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... January 7, 2016 at 10:11 AM

   //காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளுடன் தங்களுக்கு கிடைத்துள்ள அற்புதமான நிகழ்வுகளை பகிர்வது எந்தவிதத்தில் விளம்பரமாகும் சார். எல்லாருக்கும் அந்த மஹானை தரிசிக்கவோ அருள் மொழிகளைக்கேட்டு சந்தோஷப்படவோ வாய்ப்பு கிடைத்திருக்காது இல்லையா. தங்களுக்கு அந்த வாய்ப்புகள் தாராளமா கிடைத்திருக்கு. அதை பகிர்ந்து கொண்டால் எங்களுக்கும் அந்த ஆனந்த அநுபவம் கிடைக்குமில்லையா. நீங்க ஃபீல் பண்ணி உணர்ந்தவைகளை எழுத்தில் பிரதிபலிக்கும் திறமையும் நிறையாவே உங்களிடம் இருக்கு. ரசிக்க நாங்க நிறயபேர்கள் காத்திருக்கோம். எழுதுவதை ஒருபோதும் நிறுத்திவிடாதீர்கள்//

   இதுபோன்ற பலரின் அன்பான வேண்டுகோள்களுக்கு இணங்க, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா பற்றி, நான் நேரில் அனுபவித்த, பிற இதழ்களில் நான் படித்த, பிறர் சொல்லிக் கேட்ட சுவையான பல விஷயங்களை, ஜூஸ் ஆகப்பிழிந்து, வரிசையாக 108 பகுதிகளுடன் ஓர் மெகா தொடர் 2013-ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை, ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம் என் வலைத்தளத்தினில் வெளியிட்டுள்ளேன்.

   பகுதி-1 க்கான இணைப்பு:

   http://gopu1949.blogspot.in/2013/05/1.html

   பகுதி-108க்கான இணைப்பு:

   http://gopu1949.blogspot.in/2014/01/108.html

   என் முன்னுரைக்கான இணைப்பு:

   http://gopu1949.blogspot.in/2013/05/blog-post_19.html

   என் முடிவுரைக்கான இணைப்பு:

   http://gopu1949.blogspot.in/2014/01/108108.html

   இதெல்லாம் தங்களின் தகவலுக்காக மட்டுமே.

   அதிர்ஷ்டமும், பிராப்தமும் உள்ளவர்களால் மட்டுமே, இவற்றையெல்லாம் ஊன்றிப் படித்து ரஸிக்க முடியும். உங்களுக்கு எப்படியோ !

   அன்புடன் VGK

   Delete
 18. எனக்கும் அந்த அதிர்ஷ்டமும் ப்ராப்தமும் கிடைக்க ப்ரார்த்தனை பண்ணிக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... January 7, 2016 at 11:48 AM

   //எனக்கும் அந்த அதிர்ஷ்டமும் ப்ராப்தமும் கிடைக்க ப்ரார்த்தனை பண்ணிக்கொள்கிறேன்.//

   ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அனுக்கிரஹத்தால் தங்களின் பிரார்த்தனை நிறைவேறி, தங்களுக்கும் அந்த அதிர்ஷ்டமும் பிராப்தமும் கிடைக்கலாம்.

   தங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   அன்புடன் VGK

   Delete
 19. கிடைக்கலாம் என்று ஏன் சந்தேகமா சொல்றீங்க. கிடைக்கட்டும் என்று ஸ்ட்ராங்கா சொல்லலாமே. :)))

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... January 7, 2016 at 5:46 PM

   வாங்கோ, வணக்கம்.

   //கிடைக்கலாம் என்று ஏன் சந்தேகமா சொல்றீங்க. கிடைக்கட்டும் என்று ஸ்ட்ராங்கா சொல்லலாமே. :)))//

   ஆஹா, ததாஸ்து.

   கிடைக்கட்டும், கிடைக்கட்டும், கிடைக்கட்டும்.

   அப்படியே அனைத்துக்கும் தங்களின் விரிவான பின்னூட்டக்கருத்துக்களும் கிடைக்கட்டும்.

   எனக்கும் ஸ்ட்ராங்கான மகிழ்ச்சியே. :)

   Delete
 20. "காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளுடன் தங்களுக்கு கிடைத்துள்ள அற்புதமான நிகழ்வுகளை பகிர்வது எந்தவிதத்தில் விளம்பரமாகும்" - ஆன்மீகத்தில் சமயத்தில் தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்வது கடினம். சிலவற்றை நாம் சொன்னாலும் மற்றவர்கள் நம்ப மாட்டார்கள். தனக்கு அவர் அருள் இருக்கிறது என்பதைத் தனக்கு சாட்சியாக்குவதே இத்தகைய அனுபவங்கள்தான்.

  ReplyDelete
  Replies
  1. 'நெல்லைத் தமிழன் October 3, 2016 at 7:37 PM

   வாங்கோ, வணக்கம்.

   //"காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளுடன் தங்களுக்கு கிடைத்துள்ள அற்புதமான நிகழ்வுகளை பகிர்வது எந்தவிதத்தில் விளம்பரமாகும்" - ஆன்மீகத்தில் சமயத்தில் தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்வது கடினம். சிலவற்றை நாம் சொன்னாலும் மற்றவர்கள் நம்ப மாட்டார்கள். தனக்கு அவர் அருள் இருக்கிறது என்பதைத் தனக்கு சாட்சியாக்குவதே இத்தகைய அனுபவங்கள்தான்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் ஆலோசனைகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹம் இருந்தால் மட்டுமே, அடியேன் அவர்களைப்பற்றி, எனக்குத் தெரிந்ததை எழுதும் பாக்யம் கிடைக்கலாம் என்று நினைத்திருந்தேன். அதுபோலவும் கொஞ்சம் பாக்யம் கிட்டியது.

   28.05.2013 முதல் ஆரம்பித்து, 11.01.2014 வரை தொடர்ச்சியாக ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம் 108 பதிவுகள் கொடுக்க முடிந்ததில், மனதுக்கு மகிழ்ச்சியே. பார்ப்போம்.

   Delete
 21. வந்தனம் ! தங்களுடைய எல்லா பதிவுகளையும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி மனதில் எழுந்தாலும், சில பல காரணங்களால் முடியவில்லை.. இன்றுதான் ஆரம்பித்திருக்கின்றேன்... காஞ்சி பெரியவரின் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் ' நான் எதையோ இழந்திருப்பதாகவே " உணர்கிறேன்... மாணிக்க வாசகரின் " அவன் அருளாலே அவந்தாள் வணங்கி " என்ற வரிகள்தான் எனக்கு கிடைத்த சமாதானம்... ! கலவைக்கு அருகாமையிலேயே இருந்தும் அவரை தரிசித்ததில்லையே என்ற ஏக்கம் அவரின் புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஏற்படுவது உண்டு.. ! ம்... எதற்கும் பிராப்தம் வேண்டுமல்லவா?

  ReplyDelete
  Replies
  1. G Perumal Chettiar March 14, 2018 at 9:30 PM

   // வந்தனம் ! //

   வாங்கோ, வணக்கம். தங்களை அடிக்கடி நான் எனக்குள் நினைத்துக்கொள்வேன். பதிவினில் தங்களைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.

   //தங்களுடைய எல்லா பதிவுகளையும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி மனதில் எழுந்தாலும், சில பல காரணங்களால் முடியவில்லை.. இன்றுதான் ஆரம்பித்திருக்கின்றேன்...//

   ஆஹா, இதனைக் கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்று 14.03.2018 புதன்கிழமை, மாசி+பங்குனி கூடும் ஓர் நல்ல நாள். காரடையான் நோன்பு என இதனைச் சொல்லுவார்கள். எமதர்ம ராஜா இழுத்துச்சென்ற ’சத்தியவான்’ என்ற தன் அன்புக் கணவனை, மிகவும் பதிபக்தியுடைய அவனின் மனைவி ’சாவித்திரி’ உயிருடன் மீட்டு வந்த நல்ல நாளாகும். இதைப்பற்றி மேலும் சில விபரங்கள் இதோ இந்த என் பதிவினில் உள்ளது: http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_9400.html

   இந்த நல்லதொரு நாளில் தாங்கள் என் பழைய பதிவுகளை ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்துள்ளது என் பாக்யம் + ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவரின் அனுக்கிரஹம் என நினைக்கத் தோன்றுகிறது. சந்தோஷம். :)

   //காஞ்சி பெரியவரின் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் 'நான் எதையோ இழந்திருப்பதாகவே’ உணர்கிறேன்...//

   தங்களுக்கு மட்டுமல்ல. இந்த உணர்வு இன்று நம்மில் பலருக்குமே ஏற்படுகிறது என்பதுதான் உண்மை.

   //மாணிக்க வாசகரின் " அவன் அருளாலே அவந்தாள் வணங்கி " என்ற வரிகள்தான் எனக்கு கிடைத்த சமாதானம்... ! //

   அவர்கள் ஸ்தூல சரீரத்துடன் இன்று நம் கண்களுக்குப் புலப்படாமல் இருப்பினும், அவரை நினைத்து வழிபடும் பக்தர்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும், உள்ளத்திலும், இன்றும் சூட்சும சரீரத்துடன், வாழ்ந்துகொண்டும், அருள் பாலித்து ரக்ஷித்துக்கொண்டும் தான் இருந்து வருகிறார்கள்.

   //கலவைக்கு அருகாமையிலேயே இருந்தும் அவரை தரிசித்ததில்லையே என்ற ஏக்கம் அவரின் புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஏற்படுவது உண்டு.. ! ம்... எதற்கும் பிராப்தம் வேண்டுமல்லவா?//

   திருச்சி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு போன்ற தமிழ்நாட்டின் ஊர்களில் பலமுறையும், பண்டரிபுரம், கர்நூல், ஹகரி (Near குண்டக்கல்) போன்ற வெளிமாநில ஊர்களில் சிலமுறையும் தரிஸித்துள்ளேன். 1975-ம் ஆண்டு ’மே’ மாதம் அடியேன் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவரை தரிஸிக்கச் சென்ற போது மட்டும், அவர்கள் ’கலவை’யில் முகாமிட்டிருந்தார்கள்.

   நேரில் தரிஸிக்க வாய்ப்புகள் இருந்தும், தாங்கள் தரிஸிக்காமல் இருந்தது, தற்சமயம் மனதுக்கு வருத்தமளிக்கும் விஷயமாகத்தான் இருக்கக்கூடும். தாங்கள் சொல்லும் ‘எதற்கும் ஓர் ப்ராப்தம் வேண்டும்’ என்பது நூற்றுக்கு நூறு உண்மையே.

   தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   அன்புடன் கோபு

   Delete