About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, August 21, 2013

39] பக்தி, மரியாதை, அருள், கருணை

2
ஸ்ரீராமஜயம்



உத்தமமான பொருளிடம் வைக்கும் அன்புக்கே ’பக்தி’ என்று பெயர்.

நமக்கு சமமானவர்களிடம் வைக்கும் அன்பு .... ’நட்பு’ என்பதாகும்.

நட்பு உத்தமமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், வயதில் பெரியவர்களிடம் நாம் வைக்கும் அன்பு .... ’மரியாதை’ என்பதாகும்.

சின்னவர்களிடமும், நமக்குக் கீழ்ப்பட்டவர்களிடமும் நாம் வைக்கும் அன்புதான் ‘அருள்’ என்பது.

கஷ்டப்படுபவர்களிடம் நாம் வைக்கும் அன்பு ‘கருணை’ எனப்படும்.

பாபிகளை நாம் வெறுப்பதிலும் அவர்களைக் கோபிப்பதிலும் பலனில்லை. அவர்களுடைய மனங்களும் நல்ல வழியில் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றே நாம் செய்ய வேண்டியது.

அம்பாளுக்கு செய்கிற அலங்காரம்தான் நமக்கு அழகு. 

நமக்கு நாமே செய்துகொள்கிற அலங்காரம்,. அகங்காரத்திற்குத்தான் வழிவகுக்கும்.

எக்காரணமும், எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி பிரியமாய் இருப்பது தான் உண்மையான அன்பு. 


oooooOooooo



மற்றொரு சம்பவம்

திருச்சியிலிருந்து கணபதி என்ற பக்தர், தன் பெற்றோருடன் மஹானை தரிசிக்கப்போனார்.

அவருக்கு வேலை கிடைப்பது பெரும் பிரச்னையாக இருந்தது. மஹானிடம் அதைச் சொன்னார். 

கணபதியிடம், திருச்சியில் என்னென்ன பெரிய பேங்குகள் இருக்கின்றன என்று கேட்டு இருக்கிறார் மஹான். கணபதியும் சொன்னார். 

சில நாட்கள் கழித்து இரண்டு இடங்களில் வேலைக்குச் சேரும்படி கணபதிக்கு ஆர்டர் வந்தது. 

சென்னையில் ஒன்று -  திருச்சியில் ஒன்று - சென்னை வேலை நிரந்தரம். திருச்சி வேலை  தற்காலிகமானது. 

குழம்பிப்போன கணபதி இதற்கும் மஹானை அணுகி யோசனை கேட்டார்.



"திருச்சி பேங்க் உத்யோகத்தில் போய்ச் சேர்"

இந்த பதிலும் கணபதிக்கு நெடுநேரம் பெரியவா தரிசனத்திற்குப் பிறகு 4 மணிக்குக் கிடைத்த உத்தரவு. தற்காலிகமான பேங்க் உத்தியோகத்திற்குப் போகச் சொல்கிறாரே மஹான் என்று  மனத்தில் கலக்கத்தோடு பேங்க் உத்தியோகத்திற்குப் போனார்.

இது லீவில் போய்விட்டவருக்கான உத்தியோகம். அவர்  திரும்பவும் வந்து  உத்தியோகத்தில் சேர்ந்து விட்டால், கணபதி வீட்டிற்குத் திரும்ப வேண்டியது தான்!


ஆனால் நடந்தது என்ன?

லீவில் போனவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.  அதன் பலனாக அந்த நல்ல பாங்க் வேலை கணபதிக்குக் கிடைத்தது.

கருணை வள்ளலான மகானின் தீர்க்க தரிசனத்தை எண்ணி  ஆனந்தக் கண்ணீர் வடித்தார் கணபதி. 

உள்ளன்போடு அணுகி பிரார்த்திப்பவர் யாராக இருந்தாலும்,மஹானிடம் ஏமாற்றம்  அடைய மாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. 

அதில் இதுவும் ஒன்று.

[Thanks to AMIRTHA VAHINI 14.06.2013]

oooooOooooo



மகிழ்ச்சிப் பகிர்வு

நம் தளத்திற்கு தொடர் வருகை தந்துவரும்
திருமதி பிரியா ஆனந்தகுமார் அவர்கள் 
சமையல் குறிப்புகள் போட்டியொன்றில் 
சமீபத்தில் பரிசினை வென்றுள்ளார். 

மனம் நிறைந்த பாராட்டுக்கள். 
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.









அன்புடன் கோபு


மேலும் விபரங்களுக்கு



  




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியிடப்படும்.





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

21.08.2013 புதன்கிழமை


47 comments:

  1. அருள், கருணை எனப்படுவதின் விளக்கம் அருமை...

    சிறப்பான சம்பவம்...!

    திருமதி பிரியா ஆனந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உள்ளன்போடு தரிசிக்கும் பக்தர்களுக்கு உண்மையாய் விளங்கும் தெய்வத்தின் கருணை என்பது சத்தியமே .உங்கள் நட்பைக் கண்டு நானும் வியந்தேன் .ஒவ்வொருவரையும் பாராட்டுவதில் எவ்வளவு
    ஆனந்தம் அடைகின்றீர்கள் ஐயா !! வாழ்த்துக்கள் வெற்றி பெற்ற தோழிக்கு .நன்றிகள் நன்றியுணர்வைப் பகிர்ந்து கொண்ட அன்பு நெஞ்சத்திற்கு .

    ReplyDelete
  3. உள்ளன்போடு அணுகி பிரார்த்திப்பவர் யாராக இருந்தாலும்,மஹானிடம் ஏமாற்றம் அடைய மாட்டார்கள்// சத்ய வாக்கு! பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  4. அடடா.. கோபு அண்ணன் பதிவைத் தொடர ஆரம்பித்திட்டாரா?:)) அவ்வ்வ்வ்வ்வ்.. நான் நினைத்திருந்தேன் ஜேமாமி மெது மெதுவா அங்கின பதில்கள் போட்டு முடிக்கோணும் என:))...

    மெது மெதுவா பதிவு 45 ஐ எட்டக் கடவது.. ஸ்லோபதி:))..

    ஹா..ஹா..ஹா.. பார்த்ததும் வந்தேன். பின்பு வருகிறேன்ன்.. படிக்க + பின்னூட்டமிட...

    ReplyDelete

  5. அன்பே பக்தி நட்பு மரியாதை கருணை என்று பெறுபவரைப் பொறுத்து கூறப்படுகிறது அது எதுவாயிருந்தாலும் சிவமே. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. பக்தி, நட்பு, மரியாதை, அருள், கருணை - அருமையான விளக்கம்.

    உள்ளன்போடு அணுகி பிரார்த்திப்பவர் யாராக இருந்தாலும்,மஹானிடம் ஏமாற்றம் அடைய மாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. //

    கிடைக்கறது கிடைக்காம போகாது. நமக்குத்தான் புரிவதில்லை.

    பிரியாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    ஏற்கனவே அவர் தளத்திலும் வாழ்த்தி இருந்தேன்.

    ReplyDelete
  7. //உள்ளன்புடன் அணுகி பிரார்த்திப்பவர் யாராக இருந்தாலும், மகானிடம் ஏமாற்றம் அடைய மாட்டார்கள்// சத்யமான வார்த்தை. வழங்கியமைக்கு நன்றி!..

    ReplyDelete
  8. அன்பின் வை.கோ

    பதிவு வழக்கம் போல் அருமை

    பக்தி, நட்பு, மரியாதை, அருள், கருணை, அழகு - விளக்கங்கள் அத்த்னையும் அருமை. நன்று.

    உள்ளன்போடு அணுகி பிரார்த்திப்பவர் யாராக இருந்தாலும்,மஹானிடம் ஏமாற்றம் அடைய மாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு.

    அவற்றில் ஒன்று திருச்சியில் ஒரு வங்கியில் வேலை கிடைக்கும் என ஆசிர்வதிக்கப் பட்ட பக்தர் ஒருவருக்கு நிரந்தர வேலை திருச்சியில் உள்ள ஒரு வங்கியில் கிடைத்தது.

    அன்பின் பிரியாவிற்குப் பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் - தகவல் பகிர்வினிற்கு நன்றி வை.கோ

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  9. எக்காரணமும், எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி பிரியமாய் இருப்பது தான் உண்மையான அன்பு. /?

    உண்மைதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்வது, ஆனால் சில நேரங்களில் எதிர்பார்ப்பு வந்து மனதை கஷ்டப்படுத்துகிறது. இப்படி அடிக்கடி மகான்களின் அமுத மொழிகள் படிக்கும் போது இனி வாழ்வில் யாரிடமும் எதையும் எதிர்ப்பார்க்க கூடாது என்ற நினைப்பு வருகிறது. அதற்கு முதலில் உங்களுக்கு நன்றி.

    உள்ளன்போடு அணுகி பிரார்த்திப்பவர் யாராக இருந்தாலும்,மஹானிடம் ஏமாற்றம் அடைய மாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. //

    அருமையான உதாரணம்.

    நம்பிக்கை வாழவைக்கும் .
    பிரியா ஆனந்த குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அருமை...
    பிரியாவிற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. அருமை. நம்பினோர் கெடுவதில்லை.

    ReplyDelete
  12. Tholainokkaana arulnokku - aascharyam!

    ReplyDelete
  13. எனக்கு அவ்வளவாக கடவுள் பக்தி இல்லை.ஆனால் நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்வேன்.

    ReplyDelete
  14. Very nice write up Sir.Discovered your blog through Priya's blog.I find this blog very resourceful and inspiring.Great work

    ReplyDelete
  15. Very very interesting sir. I am so very very happy you have made a special mention about the prizes that I won and I totally did not expect that sir. Thank you thank you very much sir... so excited about this special mention and lovely flowers... Will be continuing the same with all your blessings...

    ReplyDelete
  16. பக்தி, நட்பு, மரியாதை, கருணை ஆகியவற்றுக்கான விளக்கம்
    அருமை ஐயா..
    பெரியவர்கள் நம்மை நல்வழிக்கே நடத்திக்கொண்டு செல்வார்கள்...
    என்பதை விளக்கும் சம்பவம்...
    சகோதரி பிரியா ஆனந்தகுமாருக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  17. எக்காரணமும், எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி பிரியமாய் இருப்பது தான் உண்மையான அன்பு.

    ReplyDelete
  18. உண்மையான அன்புக்கு எப்பவுமே அதற்கான பலன் கிடைக்கும் என்று சொல்லும் பதிவு.

    வாழ்த்துக்கள்........தொடருங்கள்..........

    ReplyDelete
  19. எப்போதுமே கறுப்பு வெள்ளை புகைப்படங்களுக்கு என்று ஒரு பெயர் இருக்கிறது. அந்த வகையில் பெரியவரின் படம் நன்றாக உள்ளது .அந்த படத்தை அனைவரும் பார்க்கும் வண்ணம் பகிர்ந்தமைக்கு நன்றி!
    பரிசு பெற்ற வலைப்பதிவர், சகோதரி திருமதி பிரியா ஆனந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. ஜெகத்குரு மஹானின் படம் மனசை உருக்கியது. நான் காஞ்சியில் வசித்த காலங்கள் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  21. பக்தி, மரியாதை, கருணை, அருள் - அன்புக்கு எத்தனைவிதமான பெயர்கள்.இவையெல்லாம் மஹா பெரியவாளின் திருவாக்காக வரும்போது விலைமதிப்பற்றவை ஆகிவிடுகின்றன.
    சமையல் போட்டியில் பரிசு பெற்ற திருமதி ப்ரியா ஆனந்தகுமாருக்கு

    ReplyDelete
  22. அன்பின் விளக்கங்கள் அருமை.

    ReplyDelete
  23. //பாபிகளை நாம் வெறுப்பதிலும் அவர்களைக் கோபிப்பதிலும் பலனில்லை. அவர்களுடைய மனங்களும் நல்ல வழியில் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றே நாம் செய்ய வேண்டியது.//

    பிரார்த்தனை செய்து கொண்டாலும், கோபம் என்னமோ குறையறதில்லை. :)) அதான் என்ன பண்ணறதுனு புரியலை. பக்குவம் வரலை இன்னமும். அன்பின் விளக்கம் அருமையாகச் சொல்லி இருக்கார் பரமாசாரியார்.

    இந்த நிகழ்ச்சியை இன்று வரை படிக்கவில்லை.

    அப்பாடா, நான் படிக்காத ஒன்று இன்று வந்துள்ளது. :))))

    ReplyDelete
  24. நெகிழ்ச்சியான பகிர்வு,நம்பினோர் கைவிடப்படுவதில்லை...

    ப்ரியாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  25. கருணை வள்ளலான மகானின் தீர்க்க தரிசனத்தை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் கணபதி.

    உள்ளன்போடு அணுகி பிரார்த்திப்பவர் யாராக இருந்தாலும்,மஹானிடம் ஏமாற்றம் அடைய மாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு.

    அதில் இதுவும் ஒன்று.

    அமிர்தவாகினியாய் வர்ஷித்த
    அமிர்தப்பிரவாகம் அல்லவா..!

    ReplyDelete
  26. திருமதி பிரியா ஆனந்தகுமார் அவர்கள்
    பரிசினை வென்றுள்ளதற்கு.
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. அம்பாளுக்கு செய்கிற அலங்காரம்தான் நமக்கு அழகு.

    நமக்கு நாமே செய்துகொள்கிற அலங்காரம்,. அகங்காரத்திற்குத்தான் வழிவகுக்கும்.

    எக்காரணமும், எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி பிரியமாய் இருப்பது தான் உண்மையான அன்பு.

    அழகான வரிகள்..!

    ReplyDelete
  28. ப்ரியா ஆனந்தகுமார் அவர்கள் பரிசு வென்றதைக் குறித்து வாழ்த்துத் தெரிவிக்காமல் மறந்திருக்கேன். :))) இப்போ ராஜராஜேஸ்வரியின் பின்னூட்டத்தைப் பார்த்ததும் தான் நினைவிலே வந்தது. மறதிக்கு மன்னிக்கவும்.

    வாழ்த்துகள் ப்ரியா ஆனந்தகுமார்.

    ReplyDelete
  29. அடடா பக்தி, நட்பு, மரியாதை, அருள், அன்பு, கருணை... பற்றி அழகிய விளக்கம்..

    //நமக்கு நாமே செய்துகொள்கிற அலங்காரம்,. அகங்காரத்திற்குத்தான் வழிவகுக்கும்.///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  30. வழமைபோல் குட்டிச் சம்பவம் நன்று.

    பிரியாவுக்கு என் மனம்கனிந்த வாழ்த்துக்கள்...

    கோபு அண்ணன் அதிராவும் வாழ்த்தியிருக்கிறாவாம்... அதனால பரிசில பங்குகிங்கேதும் இருக்கோ என ஒருக்கால் கேட்ட்டுச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்:).

    ReplyDelete
  31. அன்பிற்கு வடிவம் ஏது ?மனதில் பதியும் கருத்துகள் & அருமையான நிகழ்வு .
    saho priya virku vaalthukal

    ReplyDelete
  32. பக்தி, மரியாதை, அருள், கருணை பற்றிய பெரியவா வாக்கு அற்புதம்.

    ReplyDelete
  33. அழுகும் பொருளுக்கு
    வாடும் மலர்களை கொண்டு
    அழகு செய்து மகிழ்கிறது. மனிதர் கூட்டம்.

    இறைவடிவங்களுக்கும்
    அதே மலர்களை கொண்டு
    அழகு செய்து வணங்கி மகிழ்கிறது
    அதே மனிதர் கூட்டம்.

    உள்ளத்தில் அன்பு, கருணை , பணிவு போன்ற
    வாடா மலர்களால், பக்தியுடன் செய்யப்படும் வழிபாடுகள் அனைவர்க்கும் ஆனந்தத்தை தரும்.

    அருமையான பதிவு. பாராட்டுக்கள் VGK

    ReplyDelete
  34. உண்மையான பக்தியைக் கண்டு கடவுள்கூட நட்பாகிவிடுவார் நம்மிடம்.
    கருணை இருந்தால் அன்பு அதுவாகவே வந்து விடும். பணிவு,பக்தி எல்லாம்,வந்துவிட்டால் வாழ்வே புனிதமாகி விடும். இப்படியெல்லாம்
    உங்கள் பதிவைப் பார்த்ததும், நினைக்கத் தோன்றுகிரது. நல்ல சிந்திக்கும்படியான பதிவு. அன்புடன்

    ReplyDelete
  35. அன்பு அது செலுத்தப்படும் இடத்தைப் பொறுத்து தக்கப் பெயர் கொண்டு குறிப்பிடப்படுவது சிறப்பு. பகிர்வுக்கு நன்றி சார்.

    ப்ரியா ஆனந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. பக்தி,நட்பு,மரியாதை நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

    தொடர்ந்தும் அமுத மழையில் நனைகின்றோம். நன்றி.

    ReplyDelete
  37. Congratulations to priya. Thanks for sharing nice info.

    ReplyDelete
  38. /எக்காரணமும், எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி பிரியமாய் இருப்பது தான் உண்மையான அன்பு.

    // - அப்படித்தான் நான் பெரும்பாலும் போய்கொண்டிருக்கிறேன்.. அதனால்தான் என் அம்மா, அப்பாவிற்கு என்னை ரொம்ப பிடிக்கும்...

    ReplyDelete
  39. அம்பாளுக்கு செய்கிற அலங்காரம்தான் நமக்கு அழகு.




    நமக்கு நாமே செய்துகொள்கிற அலங்காரம்,. அகங்காரத்திற்குத்தான் வழிவகுக்கும்.

    Aha this is said especially for me.
    I love to decarate my Devi well.
    Sure i will continue.

    உள்ளன்போடு அணுகி பிரார்த்திப்பவர் யாராக இருந்தாலும்,மஹானிடம் ஏமாற்றம் அடைய மாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு.
    Me too preying with hope and divine.
    Congragulations Priya.
    Respected Gopu sir...
    I appreciate you sir, the mention about Priya here.
    viji

    \

    ReplyDelete
  40. முதல் படம் மிகவும் பிடித்தது.

    ப்ரியா அவர்களுக்கு வாழ்த்துகள்....

    ReplyDelete
  41. என்ன ஒரு தீர்க்க தரிசனம்?

    ReplyDelete
  42. உண்மையிலும் உண்மை உள்ளன்புடன் பக்தியுடன் பகவானை அணுகியவர்களுக்கு நல்லதே நடக்கும்

    ReplyDelete
  43. பெரியவுகளுக்குதெரியாத வெசயமே கெடயாதுபோல.

    ReplyDelete
  44. உள்ளன்போடு அணுகி பிரார்த்திப்பவர் யாராக இருந்தாலும்,மஹானிடம் ஏமாற்றம் அடைய மாட்டார்கள் . இது ஒவ்வொரு தடவையும் நிரூபணமாகிவரும் உண்மைதான்..காரணமில்லாமல் ஸ்வாமிகள் எதுவுமே சொல்லமாட்டார்கள்.

    ReplyDelete
  45. திருச்சியில் வாழ்வது எல்லோருக்கும் வாய்க்குமா?

    ReplyDelete
  46. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (15.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/414637135705653/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete