என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 26 ஜூலை, 2016

பதிவர் ’சிட்டுக்குருவி விமலன்’ அவர்களின் புதிய நூல் அறிமுகம் .................... பகுதி 1 of 2





என்னுடைய ’ஜீவி - புதிய நூல் அறிமுகம் - பகுதி-3’  பதிவு வெளியீட்டின் போது நம்  ’சிட்டுக்குருவி’ வலைப்பதிவர் திரு. விமலன் அவர்கள் கீழ்க்கண்ட பின்னூட்டமிட்டிருந்தார்:

சார் தங்களின் முகவரி தரலாமா?

எனது நூலை அனுப்பி வைக்கிறேன்.



அவரின் சமீபத்திய புதிய நூல் வெளியீடான ‘இச்சி மரம் சொன்ன கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலினை, தன் கையொப்பமிட்டு எனக்கு 20.04.2016 அன்று அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்தார். 

அவருக்கு இங்கும் நான் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த நூலின் அட்டைகளே மரம் போல சொரசொரப்பாகவும் 
அதிலே ஒரு மனிதன் போலவும் வடிவமைத்திருப்பது 
எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் உள்ளது.

அட்டைப்படத்தைத் தேர்வு செய்து 
வடிவமைத்துள்ள
பதிப்பகத்தாருக்கு 
என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

அட்டைகள் நீங்கலாக 
176 பக்கங்கள்
விலை: ரூ. 120
ஓவியா பதிப்பக வெளியீடு
முதற்பதிப்பு ஜூலை 2015
OVIYA PATHIPPAGAM
17-16-5A, K.K. NAGAR
BATLAGUNDU - 642 202
TAMILNADU - INDIA
Phone: 04543-262686
Cell: 7667557114, 9629652652
e-mail: oviyapathippagam@gmail.com
vathilaipraba@gmail.com

இது விமலன் அவர்களின்  வெற்றிகரமான ஆறாவது நூல் வெளியீடாகும். 

கவிஞர். வதிலைபிரபா, வெளியீட்டாளர், ஓவியா பதிப்பகம் அவர்கள் இந்த நூலுக்கு பதிப்புரை எழுதியுள்ளார்.


oooooOooooo

நாவலாசிரியர் திரு. ம. கமலவேலன் (பாலசாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர்) 116, மாசிலாமணிபுரம், திண்டுகல்-5 ... அலைபேசி: 9942173875 அவர்கள் இந்த நூலுக்கு வெகு அழகாக அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளார்கள். அதிலிருந்து சில வரிகள் ....... இதோ:

இயற்கையை ரசிப்பவராக மட்டுமல்ல, இயற்கையை மதிப்பவராகவும் விமலன் விளங்குகிறார். சிவப்புச் சிந்தனைகளை ஆங்காங்கே பதிவு செய்துள்ளார், பாயசத்தில் மிதக்கும் முந்திரிப்பருப்பு போல. முந்திரிப்பருப்பைத் தூர எறிந்துவிட்டு யாரும் பாயசத்தைக் குடிப்பது இல்லை.  

கதையைச் சொல்லிக்கொண்டே வரும்போது ஒரு நிகழ்வு, பிறிதொரு நிகழ்வு என, தான் பார்த்த கேட்ட அனுபவங்களை வாசகர்களோடு பரிமாறிக்கொள்ள விரும்புகிறார்.  அதுவும் அவரது பாணி என்றுதான் சொல்ல வேண்டும்.

தான் வாழும் சூழ்நிலையிலிருந்தே சிறு கதைகளை உருவாக்கியிருக்கிறார், விமலன். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

முயற்சியும் பயிற்சியும் மேலும்  பல வெற்றிகளை இலக்கிய உலகம்  அவருக்கு அளிக்கும் என்பதற்கு ‘இச்சி மரம் சொன்ன கதை’ தொகுப்பு ஓர் தொடக்கம் ஆகும்.


oooooOooooo

திரு. விமலன் அவர்கள்

’என்னுரையாக அல்ல..... சொல்ல முடிந்த சொல்லாய்.....’ என விமலன் அவர்கள் எழுதியிருப்பதில் ......  சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தன் சைக்கிளில் செல்லும்போது தனக்குமுன் சென்ற சைக்கிளின் கேரியரில் கட்டப்பட்டிருந்ததோர் வெள்ளைத்துணி சுற்றிய பொருள் பற்றிய அவரின் ஆராய்ச்சி. அது அவருக்கு மட்டுமல்ல படிக்கும் நமக்கும் மனதைப் பிசைவதாக உள்ளது. 

இதுபோல அவர் சந்தித்துள்ள அனுபவங்களும், மிகவும் எளிமையான மக்களின்  அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களும், அவர் தன் கண்ணால் கண்ட மிக எளிமையான காட்சிகள் ஒவ்வொன்றுமே கதைகள் என்ற பெயரில் எழுத்தில் சொற்சித்திரமாகச் செதுக்கப்பட்டுள்ளன.   

இந்த அவரின் புதிய நூலினில் மொத்தம் 15 கதைகளை வழங்கியுள்ளார். பக்கம் எண்கள் 175 மற்றும் 176 ஆகிய இரண்டும், படிக்கும் நாம் நம் குறிப்புகளை எழுதிக்கொள்ள காலியிடமாக விடப்பட்டுள்ளது ஓர் புதுமையாக உள்ளது.

இனி இவர் இந்த நூலில் எழுதியுள்ள கதைகளைப்பற்றி இதன் அடுத்த பகுதியில் நாம் கொஞ்சம் நூல் அறிமுகமாகப் பார்ப்போம்.


தொடரும்......
  
என்றும் அன்புடன் தங்கள்


 
[ வை. கோபாலகிருஷ்ணன்]

39 கருத்துகள்:

  1. நல்லதொரு அறிமுகம். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். July 26, 2016 at 6:12 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      //நல்லதொரு அறிமுகம். தொடர்கிறேன்.//

      மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நூலறிமுகத்திற்கு ஓர் அறிமுகம். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dr B Jambulingam July 26, 2016 at 6:25 AM

      //நூலறிமுகத்திற்கு ஓர் அறிமுகம். அருமை.//

      வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம். மிக்க நன்றி,

      நீக்கு
  3. பதில்கள்
    1. ப.கந்தசாமி July 26, 2016 at 8:42 AM

      //படித்தேன் பதிவை.//

      வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம். மிக்க நன்றி.

      நீக்கு
  4. எழுத்தாளர்களுக்கேஉரிய தேடல் நிறைந்த ஒருவரின் சிறப்பான அறிமுகத்துக்கு நன்றிகள் வாழ்த்துகளும் பாராட்டுகளையும்...தெரிவித்துக்கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. July 26, 2016 at 10:39 AM

      வாங்கோ முன்னா, வணக்கம்....மா. :)

      //எழுத்தாளர்களுக்கே உரிய தேடல் நிறைந்த ஒருவரின் சிறப்பான அறிமுகத்துக்கு நன்றிகள் வாழ்த்துகளும் பாராட்டுகளையும்... தெரிவித்துக்கொள்கிறேன்...//

      ஆஹா, தங்கள் இல்லத்தின் கல்யாண அமர்க்களங்களுக்கு இடையேயும் இங்கு வருகை தந்து கருத்தளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி.

      இதன் அடுத்த பகுதிக்கும் அவசியம் வருகை தந்து கருத்தளிப்பீர்கள் என நம்புகிறேன். :) பார்ப்போம்.

      நீக்கு
  5. திரு விமலன் அவர்களின் ‘இச்சி மரம் சொன்ன கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றிய தங்களின் திறனாய்வை படிக்க காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி July 26, 2016 at 10:57 AM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //திரு விமலன் அவர்களின் ‘இச்சி மரம் சொன்ன கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றிய தங்களின் திறனாய்வை படிக்க காத்திருக்கிறேன்.//

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      நீக்கு
  6. நூல் அறிமுகம் அருமை விஜிகே சார். :) விமலன் அவர்களுக்கு பாராட்டுக்கள். நூல் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan July 26, 2016 at 12:12 PM

      வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

      ‘சிவப்புப் பட்டுக்கயிறு’ போன்ற தங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. :)

      //நூல் அறிமுகம் அருமை விஜிகே சார். :)//

      இது நூல் அறிமுகத்திற்கானதோர் பூர்வாங்க அறிமுகம் மட்டுமே. இதன் அடுத்த பகுதிக்கு அவசியம் வருகை தாருங்கள், ப்ளீஸ்.

      //விமலன் அவர்களுக்கு பாராட்டுக்கள். நூல் வெற்றி பெற வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  7. வண்ண அட்டை முகப்பும் வாத்யாரின் அறிமுகமும் அருமை! திறமையாளரின் திறனாய்விற்கு இவனின் காத்திருப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAVIJI RAVI July 26, 2016 at 2:18 PM

      வாங்கோ வாத்யாரே, வணக்கம். வாத்யாரின் அபூர்வ வருகை கனவா நனவா என ஆச்சர்யம் அளிக்குது. :)

      //வண்ண அட்டை முகப்பும் வாத்யாரின் அறிமுகமும் அருமை! திறமையாளரின் திறனாய்விற்கு இவனின் காத்திருப்பு...//

      காத்திருப்புக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. இதன் அடுத்த பகுதியில் நாம் மீண்டும் சந்திப்போம்.

      நீக்கு
  8. விமலன் சாரின் நூல் அறிமுகம் நன்று தொடர்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. KILLERGEE Devakottai July 26, 2016 at 5:06 PM

      வாங்கோ, வணக்கம்.

      //விமலன் சாரின் நூல் அறிமுகம் நன்று தொடர்கிறேன் ஐயா.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  9. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, உங்கள் மௌனம் கலைத்த உங்களது சிறப்பான நுல் விமர்சனம். எழுத்தாளர் விமலனின் ஆரம்பகால வலைப்பதிவுகளைப் படித்து இருக்கிறேன். இவரது படைப்புகளை, ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள், புதுமைப்பித்தன் எழுத்துக்களோடு ஒப்பிட்டு எழுதியதாக நினைவு. தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ July 26, 2016 at 7:41 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //நீண்ட இடைவெளிக்குப் பிறகு, உங்கள் மௌனம் கலைத்த உங்களது சிறப்பான நூல் விமர்சனம்.//

      என் வலைப் பதிவுகளுக்கு நீண்ட இடைவெளி கொடுத்ததால் மட்டுமே, இவர் அன்புடன் எனக்கு அனுப்பிவைத்த இந்த நூலினை, என்னால் பொறுமையாகப் படிக்கவும் அதுபற்றி கொஞ்சம் எழுதவும் இயன்றது. :)

      //தொடர்கின்றேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      இதன் தொடர்ச்சியான அடுத்த பகுதியில் நாம் மீண்டும் சந்திப்போம்.

      என்றும் அன்புடன் தங்கள் VGK

      நீக்கு
  10. விமலன் அவர்களின் பதிவுகளை
    நான் தொடர்ந்து வாசிப்பவன்

    அவருடைய கண்பார்வையைத் தொடர்ந்து
    விரியும் எண்ணப்பார்வையும்
    என்னை மிகவும் கவர்ந்ததுதான்

    ஆயினும் தொடர்ந்து வாக்கியங்களை
    முடிக்காமல் விட்டுவிடுதலே தன் பாணி
    என்பதைப் போல

    மிக மிக அவசியமான இடங்களில்
    அதைப் பயன்படுத்தாமல்...

    அதனைப் பயன்படுத்தவேண்டுமே
    என்பதுபோல் பயன்படுத்துக் கொண்டிருப்பது
    படிக்கையில் கொஞ்சம் உறுத்தும்
    இடங்களைப் போலவே.......

    (இப்படி விடுவதற்கும் ..படுகிறது
    என்கிற வார்த்தையைப் பதிவு செய்வதற்குமான
    வித்தியாசம் நிச்சயம் இருக்கத் தானே
    செய்கிறது )

    அதைப் போலவே டீ யும்
    வலுக்கட்டாயமாய் நுழைப்பதைப் போலவே...
    (நானும் அவர் பாணியில் )

    அருமையான
    விமர்சனப் பகிர்வு

    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S July 26, 2016 at 8:06 PM

      வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம் சார். தாங்கள் தற்சமயம் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் இருப்பதாக அறிந்தேன். பாராட்டுகள். வாழ்த்துகள். :)

      //விமலன் அவர்களின் பதிவுகளை நான் தொடர்ந்து வாசிப்பவன்//

      ஆஹா, மிகவும் சந்தோஷம்.

      //அவருடைய கண்பார்வையைத் தொடர்ந்து விரியும் எண்ணப்பார்வையும் என்னை மிகவும் கவர்ந்ததுதான்.//

      ஊத ஊத விரியும் பலூன்கள் போல, அவை தொடர்ந்து விரிந்துகொண்டே போவதை, ஓர் குழந்தை பலூனைப் பார்ப்பதுபோல என்னையும் கவரத்தான் செய்தது. :)

      //ஆயினும் தொடர்ந்து வாக்கியங்களை முடிக்காமல் விட்டுவிடுதலே தன் பாணி என்பதைப் போல

      மிக மிக அவசியமான இடங்களில் அதைப் பயன்படுத்தாமல்...

      அதனைப் பயன்படுத்தவேண்டுமே என்பதுபோல் பயன்படுத்துக் கொண்டிருப்பது படிக்கையில் கொஞ்சம் உறுத்தும் இடங்களைப் போலவே.......

      (இப்படி விடுவதற்கும் .. படுகிறது என்கிற வார்த்தையைப் பதிவு செய்வதற்குமான வித்தியாசம் நிச்சயம் இருக்கத் தானே செய்கிறது )

      அதைப் போலவே டீ யும் வலுக்கட்டாயமாய் நுழைப்பதைப் போலவே...

      (நானும் அவர் பாணியில்)//

      :)))))))))))))))))))))))))))))

      ஒருவரின் பேச்சைப்போலவே மற்றொருவர் பேசி மிமிக்ரி செய்து மகிழ்விப்பது போலவே .....

      அவர் எழுதும் பாணியிலேயே தாங்களும் இங்கு பின்னூட்டமிட்டுள்ளதை .....

      நான் எனக்குள் வெகுவாக ரஸித்துச் சிரித்து மகிழ்ந்தேன்.

      That is My Dear Mr. Ramani Sir .... Superb Sir .... Thanks a Lot, Sir.

      //அருமையான விமர்சனப் பகிர்வு. தொடர வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, மிகவும் அசத்தலான, ஆக்கபூர்வமான, நகைச்சுவை ததும்பும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      இதன் அடுத்த பகுதியில் நாம் மீண்டும் சந்திப்போம்.

      என்றும் அன்புடன் தங்கள் VGK

      நீக்கு
  11. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு.

    விமலன் அவர்களின் நூல் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் July 26, 2016 at 8:58 PM

      வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

      //நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு.//

      என் வலைப் பதிவுகளுக்கு நீண்ட இடைவெளி கொடுத்ததால் மட்டுமே, இவர் அன்புடன் எனக்கு அனுப்பிவைத்த இந்த நூலினை, என்னால் பொறுமையாகப் படிக்கவும், அதுபற்றி கொஞ்சம் எழுதவும் இயன்றது. :)

      நாளை முதல் மீண்டும் நீண்ட இடைவெளி கொடுக்கும்படியான நிர்பந்தங்களும் எனக்கு ஏற்பட்டுள்ளன.

      அதனால் மட்டுமே இதன் அடுத்த பகுதியையும் உடனடியாக இன்றே வெளியிட வேண்டிய சூழ்நிலை எனக்கு எற்பட்டு விட்டது.

      //விமலன் அவர்களின் நூல் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, வெங்கட்ஜி.

      நீக்கு
  12. நல்ல நூல் அறிமுகம்,நன்றியும் வணக்கமுமாய்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Vimalan Perali July 27, 2016 at 11:03 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //நல்ல நூல் அறிமுகம், நன்றியும் வணக்கமுமாய்...//

      மிக்க மகிழ்ச்சி சார்.

      நடுவில் எனக்கு ஏற்பட்டுவிட்ட பல்வேறு இடையூறுகளால், நான் புதிய பதிவுகள் ஏதும் என் வலைத்தளத்தினில் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்ட காலக்கட்டத்தில், தாங்கள் பேரன்புடன் எனக்கு அனுப்பி வைத்த தங்கள் நூல் 20.04.2016 அன்று என் கைகளுக்குக் கிடைத்தது.

      அதனை நான் பொறுமையாகப் படிக்கவும், அதுபற்றிய நூல் அறிமுகப் பதிவாக வெளியிடவும் சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் தாமதமாகி விட்டது.

      இருப்பினும் அதனை இப்போதாவது இரு பகுதிகளாகப் பிரித்து வெளியிட நேர்ந்துள்ளதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே.

      இதற்கு ஓர் வாய்ப்பளித்த இந்த நூலின் ஆசிரியராகியத் தங்களுக்கு என் நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  13. பின்னூட்டங்களைப் படித்த பின்னும்
    அவர் வார்த்தையை முடிக்காமல் விடுத்து
    நன்றியும் வணக்கமுமாய்.. எனச் சொல்லி
    வைத்திருப்பது அவர் அதை தன்னுடைய பலம்,
    தனித் தன்மையென நினைக்கிறார் எனப்
    புரிந்து கொள்ள முடிகிறது

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S July 28, 2016 at 4:42 AM

      வாங்கோ Mr. RAMANI Sir, தங்கள் மீண்டும் வருகை மீண்டும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //பின்னூட்டங்களைப் படித்த பின்னும் அவர் வார்த்தையை முடிக்காமல் விடுத்து, “நன்றியும் வணக்கமுமாய்...” எனச் சொல்லி வைத்திருப்பது அவர் அதை தன்னுடைய பலம், தனித் தன்மையென நினைக்கிறார் எனப் புரிந்து கொள்ள முடிகிறது.//

      அதுவே அவரின் பலமாகவும், தனித்தன்மையாகவும் அவர் இன்னும் நினைத்துக்கொண்டு இருக்கலாம்தான். இருப்பினும் அதில் தவறேதும் இல்லை என்பது எனது அபிப்ராயமாகும்.

      M.B.A., போன்ற மிகப்பெரிய Management படிப்புகளில் SWOT Analysis என்று ஒரு பாடம் உண்டு.

      அதாவது நாம் (நிர்வாகம்) ஒரு செயலைச் செய்ய முடிவு எடுப்பதற்கு முன்பு, (SWOT = STRENGTH, WEAKNESS, OPPORTUNITY, THREATS) நம் பலம் என்ன? நம் பலகீனங்கள் என்ன? நமக்காக அமைந்திருக்கும் வசதி வாய்ப்புகள் என்ன? நமக்கான இன்றைய அச்சுறுத்தல்கள் என்னென்ன? என்பவற்றை நன்கு ஆராய்ந்து பார்த்துவிட்டு செயலில் இறங்கத் திட்டமிட்டால், மிகச் சுலபமாக வெற்றியினை அடைய ஏதுவாகும் என அந்தப்பாடத்தில் மிகவும் விரிவாகச் சொல்லிக்கொடுப்பார்கள்.

      2014-ம் ஆண்டு நான் என் வலைத்தளத்தினில் தொடர்ச்சியாக 40 வாரங்களுக்கு ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ என்ற பெயரில் மிகுந்த பணச்செலவில் வெற்றிகரமாக நடத்தியும், என் கதைகளின் குறை + நிறைகளுடன் கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமர்சனங்களை நான் பெற்றிருந்தும்கூட, அவை என்னிடம் இன்னும் அப்படியே மிகவும் பத்திரமாக இருந்தும்கூட, எனக்கு இன்றும்கூட என் பாணியில் நான் எழுதுவதை மாற்றிக்கொள்ளவே ஏனோ தோன்றுவது இல்லை.

      அதுபோல இவரும் இவர் பாணியை பிறருக்காக மாற்றிக்கொள்ள தயாராக இல்லாதவராகவும் இருக்கலாம். அதில் தவறேதும் இல்லைதான்.

      நூல் அறிமுகம் + விமர்சனத்தில் நமக்குத்தோன்றிடும் குறை, நிறைக் கருத்துக்களை, நூல் ஆசிரியருக்கு ஓர் ஆலோசனையாக மட்டுமே நாம் சொல்லலாம்.

      அவற்றை அப்படியே முழுவதுமாக ஏற்றுக்கொள்வதோ, அப்படியே முழுவதுமாக நிராகரிப்பதோ அவரவர்களின் விருப்பமும் உரிமையுமாகும் அல்லவா!

      //வாழ்த்துக்களுடன்...//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். அன்புடன் VGK

      நீக்கு
  14. சில நாட்களாக வலைப்பதிவுக்கு வருவதைத் தவிர்த்திருந்தேன். தங்களின் இந்தப் பதிவைப் பார்த்ததும் ஏற்பட்ட உற்சாகத்தில் தவிர்ந்திருந்தது தளர்ந்து போனது. தொடர்ந்து வரும் பதிவு வாசிக்கக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி July 28, 2016 at 6:38 PM

      வாங்கோ சார், நமஸ்காரங்கள்.

      //சில நாட்களாக வலைப்பதிவுக்கு வருவதைத் தவிர்த்திருந்தேன். தங்களின் இந்தப் பதிவைப் பார்த்ததும் ஏற்பட்ட உற்சாகத்தில் தவிர்ந்திருந்தது தளர்ந்து போனது.//

      ஆஹா, தன்யனானேன், சார்.

      இதனைத் தங்கள் வாயிலாக இப்படிக் கேட்கவே என் உடல் தளர்ச்சிக்கு இடையேயும், என் உள்ளத்தில் மிகுந்த உற்சாகம் ஏற்படத்தான் செய்கிறது. :)

      //தொடர்ந்து வரும் பதிவு வாசிக்கக் காத்திருக்கிறேன்.//

      வெளிநாட்டிலிருந்து என் மூத்த மகன், மருமகள், அருமைப்பேத்தி + பேரன் ஆகியோர் நேற்று நள்ளிரவு இங்கு என் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளதால், இதன் அடுத்த பகுதியையும் நேற்று முன் தினமே அவசரமாக வெளியிட்டு விட்டேன்.

      இங்கு வீடே ஒரே அமர்க்களமாக இருப்பதால், அதில் (இதன் பகுதி-2 இல்) பின்னூட்டமிட்டுள்ளவர்களுக்கு உடனுக்குடன் என்னால் பதில் அளிக்க இயலாமல் உள்ளது.

      இப்போதைக்கு என் வலைத்தளத்தினில் புதிய பதிவு ஏதும் நான் வெளியிடப்போவது இல்லை என்பதால், பொறுமையாக பிறகு ஒருநாள், அதில் பின்னூட்டமிட்டவர்களுக்கு பதில் தரலாம் என நினைத்துள்ளேன்.

      இந்த பகுதி-1 க்கு தாங்கள் வருகை தந்துள்ளதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே. இதன் பகுதி-2 இல் மீண்டும் நாம் சந்திப்போம்.

      பிரியத்துடனும் நன்றியுடனும் தங்கள் VGK

      நீக்கு
  15. திரு விமலன் ஸார் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது. பல சிறப்பான எழுத்தாளர்களை அறிமுகம் செய்வது மிகச் சிறப்பான விஷயம். பாராட்டுகளும் வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான அறிமுகம். பாராட்டுகள் வாழ்த்துகள்..

      நீக்கு
    2. ஸ்ரத்தா, ஸபுரி... July 30, 2016 at 11:08 AM

      //திரு விமலன் ஸார் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது. பல சிறப்பான எழுத்தாளர்களை அறிமுகம் செய்வது மிகச் சிறப்பான விஷயம். பாராட்டுகளும் வாழ்த்துகளும்...//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
    3. ஆல் இஸ் வெல்....... July 30, 2016 at 12:31 PM

      //சிறப்பான அறிமுகம். பாராட்டுகள் வாழ்த்துகள்..//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  16. சிறப்பான எழுத்தாளர்களை அனைவரும் அறிர்ந்து கொள்ளும்படி அறிமுகம்செய்து ஊக்கப்படுத்துவது நல்லாருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. shamaine bosco August 5, 2016 at 1:28 PM

      //சிறப்பான எழுத்தாளர்களை அனைவரும் அறிர்ந்து கொள்ளும்படி அறிமுகம்செய்து ஊக்கப்படுத்துவது நல்லாருக்கு..//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
    2. இந்த என் வலைத்தளத்தின் பக்கப்பார்வையாளர்கள் எண்ணிக்கை இன்று 08.08.2016 நான்கு லக்ஷங்களைத் தாண்டியுள்ளதில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  17. நூல் அறிமுகம் அருமை ஐயா...
    அட்டைப்படமும் அதன் நிறமும்அழகு....
    நீங்கள் சொன்னதில் உணர்ந்து கொள்ள முடிந்தது

    அடுத்த பதிவுக்கு செல்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. R.Umayal Gayathri August 23, 2016 at 3:29 PM

      அடேடே, வாங்கோ வணக்கம். தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //நூல் அறிமுகம் அருமை ஐயா... அட்டைப்படமும் அதன் நிறமும் அழகு.... நீங்கள் சொன்னதில் உணர்ந்து கொள்ள முடிந்தது. அடுத்த பதிவுக்கு செல்கிறேன் ஐயா//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  18. வணக்கம் சார்.
    நீங்கள் வெகு நாட்களாக வலை பக்கம் வரவில்லை. உங்களை மீண்டும் பதிவுகள் எழுத வேண்டும் என்று தேனம்மை அவர்கள் வலைத்தளத்தில் உங்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

    உங்களை விமலன் அழைத்து வந்து விட்டார் , மகிழ்ச்சி.

    என் தம்பியின் நண்பர். இருவரும் ஒரே அலுவலகத்தில் பண்புரிந்தவர்கள். இப்போது தம்பி மதுரை கிளையில் பணிபுரிகிறான்.

    என் தம்பி நண்பர் என்று தெரியாமலேயே அவர் வலைத்தளத்தில் பதிவுகளை படித்து வந்தேன்.
    ஒருநாள் அவர் காக்காச் சோறு என்ற புத்தகத்தை தம்பி வீட்டில் பார்த்தேன். விமலனை உனக்கு தெரியுமா? என்று கேட்டேன் தெரியும் என்னுடன் பணி புரிபவர். அவரிடம் பேச வேண்டுமா என்று அவரை செல் போனில் அழைத்து பேசி விட்டு என்னிடம் கொடுத்தான் நான் அவர் காக்கை சோறு பற்றி பேசினேன், அவர் வலைத்தளத்தை பற்றி பேசினேன்.
    அடுத்த புத்தகம் போட்டு விட்டேன், அதை அனுப்பி வைக்கிறேன் என்று அனுப்பி வைத்தார். ’இச்சிமரம் சொன்ன கதை ” புத்தகத்தை.

    அவர் அனுப்பிய நேரம் எனக்கும் என் மகன் குடும்பத்துடன் வெளி நாட்டிலிருந்து வந்து இருந்தான் , அப்புறம் மதுரை குடி மாற்றம் என்று நிம்மதியாக படிக்க முடியவில்லை.
    முகநூலில் அவ்வப்போது பயணங்களில் செல் போனில் படித்து அதற்கு மட்டும் கருத்து சொல்லிக் கொண்டு இருந்தேன்.

    நீங்கள் சொல்வது போல் எளிமையான அவரின் கதை மாந்தர்கள் நம்மை ஈர்ந்து விடுவார்கள்.

    அவரின் எல்லா கதையிலும் டீகடை இடம் பெறும்.


    அவர் உறவுகளை அறிமுகம் செய்வது, மற்றவர்களுக்கு உதவும் கதை நாயகன் என்று அருமையாக எழுதி இருப்பார்.
    உங்கள் விமர்சனத்தை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    நீங்கள் நலம் தானே சார்?
    வீட்டில் மகன் குடும்பம் வரவு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டு இருக்கும்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு August 30, 2016 at 2:05 PM

      வாங்கோ மேடம், வணக்கம். வெகு நாட்களுக்குப்பின் தங்களை இங்கு பார்த்ததில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், பல்வேறு புதுப்புதுச் செய்திகளுடன் கூடிய விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      //நீங்கள் நலம் தானே சார்? வீட்டில் மகன் குடும்பம் வரவு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டு இருக்கும்.//

      நலமே மேடம். மகன் குடும்பம் சென்ற வாரம்தான் இங்கிருந்து பெங்களூர் சென்று, அங்கிருந்து அவர்கள் இடத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். இனிய பயணமாக நல்லபடியாகப் போய்ச் சேர்ந்துவிட்டதாகத் தகவலும் வந்தது. தங்களின் அன்பான இந்த விஜாரிப்புக்கு மிகவும் நன்றிகள், மேடம்.

      நீக்கு