[ சிறுகதை நிறைவுப்பகுதி (5 of 5) ]
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
முன்கதை முடிந்த இடம்:
எனவே தங்கள் தாயாரின் எதிர்பார்ப்பு என்பது மிகவும் நியாயமானதே. அவர்களிடம் உண்மையைச்சொல்லி விட்டு, பிறகு அவர்கள் விருப்பப்படியே, நீங்கள் வேறு யாரையாவது உங்கள் ஸ்டேட்டஸுக்குத் தகுதியானவளாகப் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்;
ALL THE BEST ...... AND ..... GOOD BYE ......." என்று சொல்லி போனை வைத்துவிட்டாள், சுமதி.
சுந்தர் அடுத்த ஒரு வாரமும் சுமதியின் நினைவினில் தவியாய்த் தவித்து வந்தான். வேறு எந்த வேலையும் அவனுக்கு ஓடவில்லை.
தன் தாயிடமும் இதுபற்றிப் பேசவும், உண்மையைச் சொல்லவும் மிகவும் தயங்கினான்.
இப்போது இந்த உண்மையை தன் வாயால் தன் தாயிடம் சொல்லப்போய், ஒருவேளை அதன் காரணமாகவே, தன் மனதுக்கு மிகவும் பிடித்தமான தேவதையாகிவிட்ட, சுமதியை தன் மனைவி ஆக்கிக்கொள்ள முடியால் போய் விடுமோ! என்ற கவலையும் அவனுக்கு ஏற்பட்டது.
அவன் தாயார் மரகதமும் அவனை அழைத்துக்கொண்டு, சுமதி வீட்டுக்குப் பெண் கேட்கப்போக, எந்தவொரு துரித நடவடிக்கைகளும் எடுக்காமலேயே காலம் கடத்தி வந்தாள்.

==================================
தொடர்ச்சி இப்போது இங்கே ..............
தினமும் இரண்டு வேளைகள் வீதம் கூட, ஷேவிங் செய்துகொண்டு, தன் சிவந்த முகத்தில், பச்சைநிறக் கன்னங்களுடன், எப்போதுமே பளபளப்பாகவும் பொலிவுடனும் காட்சி அளித்து வந்த சுந்தர், கடந்த நான்கு நாட்களாக ஷேவிங் செய்துகொள்ளாமலும், ஆபீஸுக்கு போகாமலும், ஏதோ பித்துப்பிடித்தவன் போலக் காட்சியளிப்பதை கண்டு மரகதம் வருந்தினாள்.
சுமதி வந்து விட்டுப் போனதிலிருந்து, சுந்தரின் போக்கினில் ஒருவித மாற்றத்தையும், சோகத்தையும் உணர்ந்த மரகதம் மேற்கொண்டு என்ன செய்வதென்று தீவிரமாகச் சிந்திக்கலானாள்.
“உடம்பு ஏதும் சுகமில்லையாப்பா? நம் டாக்டரிடம் வேண்டுமானால் போய்க் காட்டி விட்டு வருகிறாயா?” என்றாள் மரகதம்.
இந்த எயிட்ஸ் என்ற சனியன், ஏதாவது தன் மகனை இதுபோலெல்லாம் உள்ளூர வாட்டி வதைக்கிறதோ என்ற கவலை அவளுக்கு.
“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்” என்று சொல்லி சட்டையை மாட்டிக்கொண்டு எங்கோ வெளியில் புறப்படத் தயாராகி விட்டான், சுந்தர்.
“இந்தா, வீட்டுச்சாவியில் ஒன்றை நீ எடுத்துக்கொண்டு போ. மற்றொன்றை எடுத்துக்கொண்டு நான் கோயிலுக்குப் போய்விட்டு வருகிறேன்” என்றாள், மரகதம்.
சுந்தர் தன் பைக்கில் எங்கோ கிளம்பியதைப் பார்த்த பிறகு, மரகதம் தானும் தன் வீட்டைப்பூட்டிக்கொண்டு, ஓர் ஆட்டோ பிடித்து, திடீரென்று சுமதி வேலை பார்க்கும் மருத்துவமனைக்குப் புறப்பட்டுச் சென்றாள்.
அங்குள்ள ரிஸப்ஷன் + என்கொயரியில், தான் ”சுமதி” என்ற பெயரில் இங்கு வேலை பார்க்கும் நர்ஸை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்து விட்டு, சுழலும் மின் விசிறிக்கு அடியில், பெருமூச்சு வாங்கியபடி அமர்ந்து கொண்டாள்.
ஆட்டோவில் புறப்பட்டு பயணம் செய்து வந்ததே, அவளுக்கு என்னவோ அவளே பொடிநடையாக நடந்து வந்தது போல மூச்சு வாங்கித் திணறியது, அவளின் அசத்தலான தேகவாகினால்.
மோதமொழங்க ‘கும்’ என்றிருக்கும் ஆசாமியல்லவா நம் மரகதம் அம்மாள்!
வைர டாலர் டாலடிக்க, ஜில்லென்று குளிர்ச்சியுடன், B M W காரில், சீருடை அணிந்த டிரைவர் கார்க்கதவை திறக்க, ஒரு கெட்-அப் ஆக வந்து இறங்கியிருக்க வேண்டிய, செல்வச் சீமாட்டி தான் இந்த மரகதம் அம்மாள்.
என்ன செய்வது; இன்று தன் மகன் சுந்தருக்கும், தன் கார் டிரைவருக்குமே கூட தெரியாமல் ரகசியமாக, சுமதியை சந்தித்து விட்டு வரவேண்டும் என்று அவள் நினைத்ததால், ஏதோ ஒரு ஆட்டோவைப்பிடித்து, அவசரமாகப் புறப்பட்டு வந்து விட்டாள்.
ஜில்லென்று எப்போதும் ஏ.ஸீ. வீடு, ஏ.ஸீ. கார், ஏ.ஸீ. பாத்ரூம் என்றே வாழ்ந்து பழகிவிட்டவளுக்கு, இப்போது இன்று மட்டும் ஆட்டோவில் வந்ததால் சற்றே அவஸ்தையாகி விட்டது.
அவளின் ’ரவிக்+கை’ க்கு இடைப்பட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட நீரூற்று போன்ற கசகசப்பே வெளியே அடிக்கும் வெய்யில் 40 டிகிரிக்குக் குறையாது என்று வானிலை அறிக்கை போல் அவளுக்கு உணர்த்தியது.
அவள் கண்ணெதிரே, அதே மருத்துவமனைக்குள் சில வெளிநாட்டுப் பெண்மணிகள், துள்ளிவரும் புள்ளி மான் கூட்டம் போல அப்போது நுழையக்கண்டாள், மரகதம்.
வாழைத்தண்டு போல வழவழப்பான கைகளும் கால்களும் அவர்களுக்கு. புதிதாகப் பறித்து வந்த, பச்சை வேர்க்கடலையின் மேல்தோலியை உடைத்ததும் உள்ளே இருக்குமே, அதே ரோஸ் கலர் (கடலையின் உள்தோலியின் கலர்) போலவே அவர்களின் ஒட்டுமொத்த நிறம்.
அவர்களில் ஒருசிலர் பெளர்ணமி முழுநிலவு போல பால் வெண்மையாகவும், சிலர் குட்டியூண்டு இளம் நொங்கு போல பார்க்கவே பரவசமாகவும், சிலர் பறங்கிப்பழத்தைப் பிளந்தது போல செக்கசெவேலென்றும், முகத்தோற்றம் கொண்டிருந்தனர்.
அவர்கள் அணிந்திருந்த ஆடைகளோ, காத்தாட அங்கு கொஞ்சம் இங்கும் கொஞ்சம் மட்டுமே.
அவர்கள் எல்லோருமே மேலாடைகளில் கை இல்லாத ”ரவிக்” மட்டுமே [’ரவிக்கை’ மைனஸ் ’கை’ = ரவிக்] அணிந்திருந்தனர். அதாவது எல்லோருமே மொத்தத்தில் முண்டா பனியன் கேஸ்கள் தான்.
அடிக்கும் வெய்யிலுக்கு என்னமாய் சுதந்திரமாக காற்றோடமாக இவர்கள் திரிகிறார்கள்! என்ற எண்ணத்தில் அவர்களைப் பார்த்ததும், மரகதம் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
ஆனாலும் அந்தக்கூட்டத்தை நம் ஆட்கள், வாயைப்பிளந்தபடி பார்க்கும் பார்வையைக் கண்ட மரகதத்திற்கு, தன் புடவைத்தலைப்பை சரி செய்து, இழுத்துப் போர்த்திக் கொள்ளத் தோன்றியது, ஒரு வித கூச்சத்தால்.
இதுபோல புடவைத்தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொள்வதால் அவள் கழுத்தில் இன்று அணிந்து வந்துள்ள, டால் அடிக்கும் புத்தம் புதிய வைர நெக்லஸ், மற்ற பெண்மணிகளின் பார்வையிலிருந்து மறைவதில், மரகதத்திற்கும் கொஞ்சம் வருத்தமே!
[ ”அடடா! மருத்துவமனை என்றால் பலரும் பலவிதமாக இதுபோல வரத்தான் செய்வார்கள்!
இந்த வர்ணனைகளிலிருந்து முதலில் வெளியே வந்து மெயின் கதை என்னாச்சுன்னு சொல்லுங்கள்!” ,,,.. என உங்களில் சிலர் முணுமுணுப்பது எனக்கும் புரிகிறது.
சும்மா ஒரு ஜாலிக்குத்தான்!
சுமதியும் மரகதமும் ஒருவரையொருவர் சந்திக்கும் வரை உங்களுக்கும் எனக்கும் போர் அடிக்கக்கூடாது அல்லவா!!
அதனால் தான், அதுவரை அங்கு நடந்தவற்றை, நான் கொஞ்சம் வர்ணிக்கும் படியாகி விட்டது!!!
இதோ நம் சுமதியே வந்துவிட்டாள்! ......................... மெயின் கதைக்குப் போவோமா? ]

திடீரென்று மருத்துவ மனைக்கு, தன்னை சந்திக்க வருகை தந்துள்ள மரகதம்மாவை சுமதி சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவர்களை கைகூப்பி வரவேற்று, தனி அறை ஒன்றுக்குள் கூட்டிச்சென்றாள்.
கொஞ்சநேரம் எதுவுமே பேசாமல் சுமதி மிகவும் அமைதியாகவே இருந்தாள்.
அவள் ஏதோ இறுக்கமாக இருந்ததை உணர்ந்த மரகதம், தானே பேசலானாள்:
“சுமதி! உன் வீட்டுக்கு நானும் சுந்தரும் எப்போதும்மா புறப்பட்டு வரட்டும்? ;
நீயாகவே என்னிடம் போன் செய்து ஏதாவது இதுபற்றிப் பேசுவாய் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன், நான்;
உன்னை மறுபடியும் நேரில் பார்க்கணும் போல எனக்கு ஒரு சின்ன ஆசை மனதுக்குள் இருந்தது;
அதனால் தான் இப்போ நானே உன்னைப்பார்க்க புறப்பட்டு வந்துட்டேன்;
உன் வீட்டில் உள்ள எல்லோரிடமும் இதுபற்றி ஏதாவது நீ பேசினாயா?
அவர்கள் எல்லோரும் என்ன சொல்லுகிறார்கள்?
எல்லோருக்குமே இதில் திருப்தி தானே?
பிரச்சனை ஏதும் இல்லையே?”
என பலவிதக் கேள்விகளை ஆதங்கத்துடன் கேட்கலானாள், மரகதம்.

“என்னை மன்னித்து விடுங்கள் அம்மா; நான் எடுக்கும் எந்த முடிவுக்கும் என் வீட்டில் யாரும் எப்போதும் மறுபேச்சோ, மறுப்போ ஏதும் சொல்ல மாட்டார்கள்;
நன்கு யோசித்துப் பார்த்ததில், எனக்குத்தான் இப்போது இந்த விஷயத்தில் சுத்தமாக விருப்பம் இல்லை” என்றாள் சுமதி.

சுமதி வாயால் இப்படிச்சொன்னதும், மரகதத்திற்கு ஒருவித ஏமாற்றமும், வருத்தமும், கோபமும் வந்து விட்டன.
“என் பிள்ளை சுந்தரையா வேண்டாம் என்கிறாய்? ;
அவனுக்கு வந்திருக்கும் வியாதியைக்கண்டு பயப்படுகிறாய் போலிருக்கு;
வியாதி என்று சொல்லித்தானே விளம்பரம் கொடுத்திருந்தான்?
பிறகு எதற்காக அன்று எங்கள் வீட்டுக்கு வந்து அவ்வளவு பேச்சுப் பேசிவிட்டுப் போனாய்?;

உன் நினைவாகவே நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கும் என் மகன் சுந்தரின் நிலைமையை யோசித்துப் பார்த்திருந்தால், நீ மிகச்சுலபமாக ’நன்கு யோசித்துப் பார்த்ததில், எனக்குத்தான் இப்போது இந்த விஷயத்தில் சுத்தமாக விருப்பம் இல்லை’ என்று இப்போது நீ என்னிடம் சொல்லியிருக்க மாட்டாய்!
எல்லாம் என் தலையெழுத்து”
என்று சொல்லிவிட்டு, கோபமாகப் புறப்பட்டு விட்டாள், மரகதம்.
மரகதம் மிகக்கோபமாக எழுந்த வேகத்தில், அவள் அமர்ந்திருந்த சுழலும் நாற்காலி, நீண்ட நேரம் அசைந்து ஆடிக்கொண்டே இருந்தது.

சுமதிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. சுந்தர் நடத்தியுள்ள எயிட்ஸ் என்ற நாடக விளையாட்டை, தன் வாயால் அவர்களுக்கு விளக்கிக் கூறவும் விருப்பமின்றி, மிகவும் தயங்கியபடி மெளனமாகவே, இருந்து விட்டாள்.
தன் மீது மிகுந்த கோபத்துடன் மரகதம் வெளியே செல்வதையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள், சுமதி.
பிறகு ஏழாம் நம்பர் கட்டிலில் உள்ள பேஷண்ட் ஆன பெரியவருக்கு ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டுமே! என்று நினைவுக்கு வந்தவளாக, தன் கடமையில் மூழ்கிப்போனாள்.

எங்கோ பைக்கில் வெட்டியாக ஊரைச் சுற்றிவிட்டு வந்திருந்த சுந்தர் மிகவும் சோகத்தில் மூழ்கியிருந்தான். வீட்டின் மேல் கூரையில் சுழலும் மின் விசிறியை வெறித்துப்பார்த்தபடி, கட்டிலில் மல்லாக்காகப் படுத்திருந்த சுந்தரை நெருங்கி மரகதம் பேசலானாள்:
“நமக்கு அதிர்ஷ்டம் இல்லேடா, சுந்தர். சுமதிக்கு இந்தக் கல்யாணத்தில் சுத்தமாக விருப்பம் இல்லையாம்; என்னிடமே இதை அவள் நேரில் சொல்லிவிட்டாளே! நான் என்ன செய்வது? ;
எவ்வளவு தான் பணம் காசு, சொத்து சுகம் நம்மிடம் கொட்டி இருந்தாலும், சுமதியைப்போல ஒரு அழகான, அமைதியான, அடக்கமான, நாகரீகமான, படித்த, பண்புள்ள, புத்திசாலியான பெண் எனக்கு மருமகளாக அடையக் கொடுத்து வைக்க வில்லையே .....” எனக்கூறி கண்ணீர் விட்டுப் புலம்பினாள், மரகதம்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட சுந்தருக்கு, தன் விபரீத விளையாட்டை, தன் தாயாரிடம் மேலும் மறைக்க விருப்பமில்லை.
நடந்த விஷயங்களை ஒன்றுவிடாமல் தன் தாயாரிடம் விளக்கிக்கூறி, சுமதியின் விருப்பமின்மைக்கான உண்மைக் காரணத்தையும் எடுத்துச்சொல்லி, தனக்கு எப்படியாவது சுமதியே மனைவியாக வருமாறு ஏற்பாடுகள் செய்து உதவுமாறு, தன் தாயிடம் கெஞ்சினான்.
எப்படியோ தான் பெற்ற ஒரே பிள்ளை சுந்தருக்கு, எயிட்ஸ் என்ற கொடிய வியாதி ஏதும் இல்லை என்றதைக் கேள்விப்பட்டதும், அவளின் பெற்ற வயிறு, பாலை வார்த்தது போல குளிர்ந்து போனது.
தன் மகன் சுந்தர் தன்னிடமே நடத்தியுள்ள பொய் நாடகத்தையும், அதற்கு துணைபோன குடும்ப டாக்டரையும், மனதிற்குள், கண்டபடி திட்டித்தீர்த்தாள்.
இருப்பினும் சுந்தரைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு சுமதி ஏன் மறுப்பு தெரிவித்தாள் என்பதன் உண்மைக்காரணம் இப்போதுதான் மரகதத்திற்கும் புரிய வந்தது. உடனே, சுமதி மீது மரகதத்தின் மதிப்பு பலமடங்கு உயர்ந்தது.

தனக்கு ஆதாயம் இருப்பினும், தன் மகன் தன்னிடமே பொய் சொன்னதைப் பொறுத்துக் கொள்ள மனமின்றி, கொஞ்சமும் சுயநலமில்லாமல், துணிச்சலுடன் நடந்து கொண்ட சுமதியே, தனக்கு ஏற்ற மிகச்சிறந்ததொரு மருமகளாக இருக்க முடியும் என்று பேரானந்தப்பட்டாள் மரகதம்.
அடுத்த ஒரே மாதத்திலேயே “சுமதி+சுந்தர்” திருமணம் வெகு விமரிசையாக, மரகதத்தால் நடத்தி வைக்கப்பட்டது.
ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே !
-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-
[ என் அடுத்த நகைச்சுவைச் சிறுகதை
“முன்னெச்சரிக்கை முகுந்தன்”
என்ற தலைப்பில் வருகிற 27.12.2011
செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்படும். ]
அன்புடன்
vgk
“முன்னெச்சரிக்கை முகுந்தன்”
என்ற தலைப்பில் வருகிற 27.12.2011
செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்படும். ]
அன்புடன்
vgk