என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 2 ஜனவரி, 2015

எங்கள் பயணம் [துபாய்-17]


To MY BLOG


02.01.2011 To 02.01.2015











அடியேன் 02.01.2011 அன்று முதன்முதலாக 

என் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்தேன். 

   02.01.2012 

முதலாம் ஆண்டு நிறைவு நாளன்று 

கொடுத்துள்ள மொத்தப்பதிவுகள்: 200





                                                      

      
02.01.2013 

இரண்டாம் ஆண்டு நிறைவு நாளன்று 

கொடுத்துள்ள மொத்தப்பதிவுகள்: 316  









                                                      
  02.01.2014

மூன்றாம் ஆண்டு நிறைவு நாளன்று 

கொடுத்துள்ள மொத்தப்பதிவுகள்: 459










இன்று 02.01.2015 


என் வலைத்தளத்திற்கு


நான்காவது பிறந்த நாள்





நேற்றுடன் நிறைவடைந்த இந்த முதல்  


நான்கு ஆண்டுகளில் 697 பதிவுகள்  


என்னால் கொடுக்க முடிந்துள்ளதில் மகிழ்ச்சி. 






2011 முதல் 2014 வரை கடந்த நான்கு ஆண்டுகளில்


[4*52=208 வாரங்களில்] 


என் பெயரும் என் வலைத்தளமும்



வலைச்சரத்தில் 108 முறை 


பாராட்டிப் புகழ்ந்து பேசி


வெவ்வேறு வலைச்சர ஆசிரியர்களால் 


அறிமுகம் செய்யப்பட்டுள்ளதில் மேலும் மகிழ்ச்சி.




BLOG STATUS


 371 FOLLOWERS 


Total Page Views: 2,85,190


 



TOTAL NUMBER OF COMMENTS 


SO FAR RECEIVED: 26,171





G+ STATUS:





376 FOLLOWERS


27,50,332 VIEWS





இதுவரை தொடர்ந்து ஆதரவு அளித்து 


ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அன்புள்ளங்கள்


அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்


-oooooooooooooooooooooooooooooooooooooooo-





2004-ம் ஆண்டு துபாய் தமிழ்ச்சங்க 

ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில்

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு

விளையாட்டுப்போட்டிகளில் வென்றவர்களுக்கு

பரிசு அளித்து சிறப்புரை ஆற்றியபோது

எடுக்கப்பட்ட படங்கள்.


 2004-இல் துபாய் தங்கக்கடலில் 
எங்கள் வாரிசுத் தங்கங்களுடன் 

10 ஆண்டுகளுக்குப்பின் 
இப்போது மகன் குடியுள்ள வீட்டுக்குச்செல்லும் முன்
நுழைவாயிலில் பளிங்குத்தரையில் 
பளிச்சென்று ஓர் அழியாக்கோலம்


 

இங்கு எங்கள் ஊரில் எங்களைப்போன்ற சம்சாரிகள் வீடுகளில் பால், தயிர், மோர் இவற்றை பாதுகாத்து கையாள்வதும் நிர்வகிப்பதும் சற்றே சிரமமான காரியமாகும். பழைய பால், புதிய பால், காய்ச்சிய பால், காய்ச்சாத பச்சைப்பால், உரை ஊற்றிய தயிர் / மோர், தயிர் மோரில் புளித்தது / புளிக்காதது என பல பாத்திரங்களில் FRIDGE இல் வைத்துப்பாதுகாப்போம். எடுத்து உபயோகிக்கும் போது இதில் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் ஏற்படும்.

துபாயில் இந்தத்தொல்லையெல்லாம் இல்லவே இல்லை.  நல்ல தரமான பாலும், தோசைமாவு போல கெட்டியான புளிக்காத  மோரும் அழகான மிகத்தரமான ப்ளாஸ்டிக் கேனில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து மால்களிலும் இவை அன்றாடம் FRESH ஆகக் கிடைக்கின்றன. 

நாங்கள் ஊர் திரும்பும்போது 2 ஒரு லிட்டர் + 2 அரை லிட்டர் மோர் வாங்கி வந்தோம். AL RAWABI - FRESH LABAN - ROBIVIA - FROM 100% FRESH COW'S MILK - PRODUCTION DATE: 12.12.2014 - EXPIRY DATE: 18.12.2014 எனப்போட்டிருந்தது. ருசியோ ருசியாக இருந்தது. 

நம்மூரில் நாம் முழுத்தேங்காயை வாங்கிவந்து, அதைக் கஷ்டப்பட்டு நார் உரித்து, உடைத்து, அழுகல் இல்லையா என சோதித்து, தேங்காய்த்துருவியில் அதைத் துருவி சமையலுக்கு உபயோகிப்பது தானே வழக்கம். அங்கு துபாயில் இந்தக் கஷ்டமெல்லாம் இல்லை. தேங்காய் எனக்கேட்டாலே அழகாக பூப்போலத் துருவிய தேங்காயை ஒரு டப்பாவில் அடைத்து ஜில்லென்று ரெடிமேடாக விற்கிறார்கள். அதில் கொட்டாங்கச்சி துண்டு ஏதும் கலந்து இருக்காது.  வெள்ளை வெளேர் என துருவல் ஜோராக இருக்கும். அப்படியே சமையலுக்கு உபயோகிக்க வேண்டியது தான். எவ்வளவு சுலபமான வேலை !

அதுபோல ஒவ்வொரு மால்களிலும் FRESH ஆன பலவித காய்கறிகள் ஜில்லென்று குளிர்சாதன அறையில் வைத்து விற்கிறார்கள். கத்திரிக்காய் என்றால் அதில் சுமார் இருபது நாடுகளிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட தரமான கத்தரிக்காய்களாக தனித்தனியாக அந்தந்த நாடுகளின் பெயர்களுடன் இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஷேப்பில் இருக்கும். அதுபோலவே மற்ற அனைத்துக்காய்கறிகளுமே.


நம் ஊரில் கார்த்திகை மாதம் ஆங்காங்கே சில வீடுகளில் விளக்கேற்றி வைப்போம். கோயில்களில் விளக்கு எரியும். சில மலைகளில் தீபம் ஏற்றப்படும். இங்கு துபாயிலோ தினமும் வருடம் முழுவதும் 365 நாட்களும் அனைத்து கட்டடங்களும் மின் ஒளியில் ஜொலிக்கின்றன. 


இரவினில் துபாய் மாலிலிருந்து ஒரு மிகப்பெரிய சாலை வழியே காரில் வந்தபோது சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மரங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஜகத்ஜோதியாகத் திகழ்ந்ததைக்கண்டு வியந்து போனேன். தமிழ்நாட்டிலிருந்து போன எனக்கு மின்தடையில்லா பூலோக சொர்க்கத்தைக்காண அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. பெருமூச்சு விட்டுக்கொண்டேன். வேறென்ன செய்ய ?




oooooOooooo


பொதுவாக அந்த நாட்டில் இரவா பகலா என வித்யாசம் தெரியாமல் மின் விளக்குகளால் எல்லா இடங்களும் எப்போதும் ஜகத்ஜோதியாகவே காட்சியளிக்கின்றன.  பெண்களோ குழந்தைகளோ நள்ளிரவில் எங்கும் பயமில்லாமல் சென்று வரலாம். பல நாடுகளிலிருந்து பலரும் பிழைப்பைத் தேடி மட்டும் அங்கு வந்து தங்கியிருப்பதாலும்,  அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் சற்றே கடுமையானதாக இருப்பதாகச் சொல்வதாலும், யாரும் எந்தத்தவறும் துணிந்து செய்ய அஞ்சி நடுங்குவதாகத் தோன்றுகிறது.  

பொதுவாக அந்த நாட்டின் வம்சாவழியினரைவிட, பிழைப்பைத்தேடி பல நாடுகளிலிருந்து அங்கு குடிவந்துள்ளவர்களும்,  அன்றாடம் பல நாடுகளிலிருந்து வந்து போகும் சுற்றுலாப்பயணிகளுமே  மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

எல்லோருக்குமே அவரவர் உழைப்புக்கு ஏற்ப ஓரளவு நல்ல ஊதியம் தரப்படுவதால், பொதுவாக பிறர் பொருளுக்கு யாரும் ஆசைப்படுவது இல்லை. ஷாப்பிங் மால்கள் போன்ற அனைத்துப் பொது இடங்களிலும் வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகள் எங்கும் தப்பித்து ஓடிவிடவே இயலாது.  அவர்கள் நாட்டுக்குள் நுழையும் போதே AIRPORT இல் அனைவர் கண்களையும் SCAN செய்து பதிவு செய்து வைத்து விடுகிறார்கள். 

தெருக்களில் சாக்கடைகளையோ, குப்பைகளையோ பார்க்க முடியாது. கொசுத்தொல்லை இல்லை. நம்ம ஊர் போல ஆங்காங்கே தெருக்களின் மேலே தொங்கும் மின்சாரக்கம்பிகளையும் பார்க்க இயலவில்லை. சுத்தமும் சுகாதாரமும் நன்கு பராமரிக்கப்படுகின்றன. எங்கு திரும்பினாலும் மூடியுடன் கூடிய அழகிய குப்பைத்தொட்டிகள் [DUST BINS] காணப்படுகின்றன.  சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை மிகவும் பொறுப்புடன் பயன் படுத்துகிறார்கள். தெருக்களில் கீழே எங்கும் குப்பைகளைச் சிந்துவதோ சிதறுவதோ கிடையாது. 

எந்த ஷாப்பிங் மாலுக்குச்சென்றாலும், ஆங்காங்கே பளிச்சென்ற பராமரிப்புடன் டாய்லெட் வசதிகள் உள்ளன. தண்ணீருக்கோ மின்சாரத்திற்கோ பஞ்சமே இல்லை. இதைத்தவிர துடைத்தெரியும் காகிதங்கள் வேறு. டாய்லெட் போய் உபயோகித்துத் திரும்ப நம்ம ஊர்கள் போல சில்லரையோ நோட்டுக்களோ ஏதும் தேவையில்லை. எங்குமே இவை எல்லாமே இலவச சேவைகள் மட்டுமே. 




கார்கள் வழுக்கிச்செல்ல வசதியாக அகன்ற தரமான சாலைகள். குண்டு குழி கிடையாது. கல், மண், மேடு பள்ளங்கள் ஏதும் கிடையாது. சாலையின் குறுக்கே மனிதர்களோ, ஆடு, மாடு, நாய், பன்றி போன்ற பிராணிகளோ வரக்கூடும் என்ற கவலையே இல்லாமல் வாகனம் ஓட்டலாம். SPEED BREAKERS என்று எங்கும் ஏதும் கிடையாது. 


 






40-60, 60-80, 80-120 Kms Speed களுக்குத் தகுந்தாற்போல எங்கும் மூன்று அல்லது நான்கு வாகனங்கள் செல்ல வசதியாக அகலமான சாலைகள் உள்ளன. எதிர்புறம் எந்த வாகனமும் வந்து நம் வாகனத்தில் மோதாது. எதிர்புறம் வரும் வாகனங்களுக்கு இதே போல இணையான தனிப் பாதை. அதுபோல அங்கெல்லாம் வண்டியில் யாரும் ஹாரன் அடிப்பதே கிடையாது. ஹாரன் அடிப்பது அகெளரவமான செயலாகக் கருதுகிறார்கள்.  ஏதேனும் மிகுந்த ஆபத்தான சூழ்நிலை என்றால் மட்டும் மிக அபூர்வமாக மிகச்சிறிய ஹாரன் சப்தம் கேட்க முடிகிறது. SIGNAL தவிர வேறு எங்கும் TRAFFIC JAM ஏற்பட வாய்ப்பே இல்லை. SIGNAL இல் நூற்றுக்கணக்கான வண்டிகள் நின்றாலும் SIGNAL மாறியதும், ஒருசில நிமிடங்களில் அவை அனைத்துமே பறந்து சென்று விடும்.


 


ஆனாலும் INTERNATIONAL DRIVING LICENCE வைத்துக்கொண்டு அங்கு வெகு வேகமாகக் வாகனங்கள் ஓட்டுபவர்களால்கூட, இங்கு எங்கள் திருச்சியின் காந்தி மார்க்கெட் [பெரிய மார்க்கெட்] பக்கம் வண்டி ஓட்டவே முடியாது. இங்குள்ள எங்கள் ஓட்டுனர்கள் மட்டுமே நல்ல திறமைசாலிகள் + கில்லாடிகள் என நான் நினைத்துக்கொண்டேன். குண்டும் குழியுமான குறுகிய ரோட்டில், குறுக்கே எவன் வருவான், எது வரும் என்றே சொல்லமுடியாத ரோட்டில், அனைவரின் காதும் கிழிந்து செவிடாகி விடும் விதமாக ஓயாது ஏர் ஹாரன் அடித்துக்கொண்டு ’சத்திரம் பஸ் ஸ்டாண்டு முதல் பாய்லர் தொழிற்சாலை வரை’ எவ்வளவு வேகமாக பஸ்ஸைக் கஷ்டப்பட்டு ஓட்டிச்செல்கிறார்கள் ! எதிரே வரும் பேருந்துக்கும் இவர் ஓட்டிச்செல்லும் பேருந்துக்கும் நடுவே இரண்டு அங்குல இடைவெளியுடன் எவ்வளவு சாமர்த்தியமாக மோதாமல், உரசாமல், மிக லாவகமாக  ஓட்டிச் செல்கின்றனர் ! நம்மாட்களால் மட்டுமே இதெல்லாம் சாதிக்க முடியும் ! :)


oooooOooooo




13.12.2014 இரவு நாங்கள் புறப்படும் முன்பு
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் 
ஒரு சிறு பகுதியின் தோற்றம்.

துபாயிலிருந்து திருச்சிக்கான 
விமானப் படிக்கட்டுகளில் நாங்கள் ஏறும் முன்பு

துபாய் .... திருச்சி .... விமானப்பயணத்தின் போது

திருச்சி விமான நிலையத்திலிருந்து
14.12.2014 அதிகாலை 2 மணி சுமாருக்கு 
சற்றே திகிலுடன் :) }
வெளியேறும்போது  இங்குள்ள எங்கள் 
இளைய மகனால் தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட படம்.


[ நல்லபடியா திருச்சி வந்து சேர்ந்தாச்சு
பிள்ளையாருக்கு நாலு தேங்காயும் உடைச்சாச்சு ]


ஆனாலும் பயணக்கட்டுரை தொடரும்

வியாழன், 1 ஜனவரி, 2015

எங்கள் பயணம் [துபாய்-16]

அனைவருக்கும் 
 இனிய 
ஆங்கிலப் 
புத்தாண்டு 
நல்வாழ்த்துகள்.
2 0 1 5

 


துபாயில் உள்ள மிகப்பெரிய பூந்தோட்டத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் ஏற்கனவே ’இன்பச் சுற்றுலா இனிதே நிறைவடைந்தது’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தேன். http://gopu1949.blogspot.in/2014/12/blog-post.html அதில் இடம்பெறாத ஒருசில படங்கள் இதோ தங்களின் பார்வைக்காக:


Visited this Very Beautiful Place 
on 06.12.2014 
Dubai Time:
 12.30 PM to 3.30 PM

 தாயும் தலைச்சன் பிள்ளையும் 
 மதியம் 1 மணி நல்ல வெயில்
{மேலே உள்ள பூவினாலான 
கெடிகாரத்தைப்பாருங்கோ }
மேலே பூப்பந்தல் - கீழே சிற்றுண்டி சாலை
கீழேயுள்ள நம் தலையில் விழாதபடி ....
நிறைய பூந்தொட்டிகள் - மேலே பூப்பந்தலாக ...

 "பூக்களை விட அந்தப் பூக்காரி நல்ல அழகு !"
For further Details Please Refer : 
http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16.html

அவள் மூக்குக்கும் வாய்க்கும் இடையே 
வலது பக்கமாக ஓர் மச்சம் உள்ளது.
அது நல்ல அதிர்ஷ்ட மச்சமாக்கும் ! 
[உங்களில் அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு மட்டுமே அது தென்படும் ! :) ]



இப்போ தெரியுதா அவளின் அந்த அதிர்ஷ்ட மச்சம் ?
வெட்கத்தில் தலை கவிழ்ந்த பூக்களோ !
பூப்பூவாய்ப் பறந்துபோகாமல் 
அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சிகள்.


பூப்போன்ற மனம் கொண்ட மணம் வீசும் மகன்

 புதிதாகப் பூப்பெய்தியுள்ள 
மிக  நீண்ண்ண்ண்ண்ண்ட கார் ! ;)
ஆத்துல வந்துச்சு ..... மணலிலே சொருகிச்சு ..... என்பார்கள்.
 கார்களுக்கும் அது துபாயில் பொருந்துமோ !
  




  மகனுடனும், மயில்களுடனும் ,
மகிழ்ச்சியுடனும் மகராஜி ! 
மிகப்பெரிய கதவுக்கிடுக்கில் 
மிகப் பொடியனாக அடியேன் !


இருவருக்கும் இடையே தோகை விரித்ததோர் மயில்
 
மேலும் சில படங்களுக்கு

oooooOooooo

WISHING YOU ALL  
A VERY VERY 
HAPPY NEW YEAR 2015 !






பயணம் தொடரும்