About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, July 29, 2013

32] அர்ப்பணித்தல்

2
ஸ்ரீராமஜயம்





வாக்குக் கட்டுப்பாட்டை வழக்கத்தில் கொண்டுவர வேண்டும். கணக்காகப் பேச வேண்டும். 

பிறருடைய மனதைப் புண்படுத்தாத பேச்சே பேச வேண்டும். 

தன் ஆத்மாவை உயர்த்திக்கொள்ள உதவுகிற விஷயங்களையே பேச வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மூலம், அகம்பாவத்தை விட்டுத் தொலைப்பதுதான். 

அது தொலைந்தால் அடக்கத்தோடு, ஆனந்தத்தோடு எந்த காரியத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் புத்தியோடு செய்து. நாமும் நலம் பெறலாம்;  உலகத்தையும் நலமாக வைத்திருக்கலாம்.


நம் காரியத்தை நாமே செய்து கொள்கிறதிலே கெளரவக் குறைச்சலே இல்லை. பிறத்தியாரிடம் இவற்றை விடுவதுதான் கெளரவக் குறைச்சல்.




oooooOooooo





பதி-பக்தி

ஓர் அபூர்வ நிகழ்வு


ஹோசூர் அம்மன் ஆலயத்தில் பெரியவா தங்கியிருந்தார்கள்.

கோயிலுக்கு வெளியே ஒரு எருமைமாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஓட்டிக்கொண்டு வந்தது ஒரு நாடோடி இனத்தைச் சார்ந்த பெண். அவள் புருஷனுக்கு கடுமையான காய்ச்சல், வாந்தி, பேதி. அவனைத்தான், அந்த வண்டியில் அழைத்து வந்திருந்தாள். 

பெரியவா கோயிலில் தங்கியிருப்பதைத் தெரிந்துகொண்டு, அவர்கள் அனுக்ரஹம் செய்தால், தன் கணவன் உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தாள்.

வண்டியில் படுத்திருந்த தன் புருஷனை, ஒரு குழந்தையைத் தூக்குவது போல அலாக்காகத் தூக்கிக்கொண்டுவந்து பெரியவா முன்பு தரையில் கிடத்தினாள். 

இரு கைகளையும் கூப்பிக்கொண்டு ’காரே-பூரே’ என்று ஏதோ பாஷையில் பிரார்த்தித்தாள்.

பெரியவா உடன் இருந்த தொண்டர்களிடம் சொன்னார்கள்:

”இந்த நாடோடி இனப்பெண்ணுக்கு எவ்வளவு பதிபக்தி பாரு. 

ஒரு ஆண்பிள்ளையை - புருஷனை - தான் ஒன்றியாகவே தூக்கிக்கொண்டு வந்திருக்காளே! பகவான், இவளுக்கு அவ்வளவு சக்தியைக் கொடுத்திருக்கிறான் ...... “சத்யவான் - சாவித்ரி” கதை புராணத்தில் படிக்கிறோம். 

இவளும் சாவித்ரி தான். ஆனா, நான்......” என்று மெல்லிய முறுவலுடன் சொல்லும்போதே, அடுத்து என்ன சொல்லப்போகிறார்கள் என்பதைத் தெளிவாகவே ஊகிக்க முடிந்தது.

“...... எமன் இல்லே! ..... எமனுக்கு எமன் - காலகாலன்!” என்று ஒரு தொண்டர் சொல்லி முடித்தார்.

பெரியவா மிக்க கனிவுடன் ஒரு ஆரஞ்சுக்கனியை அளித்து அனுக்ரஹம் செய்தார்கள்.

மறுநாள் அந்த நாடோடி இனப்பெண்ணும், அவளுடைய புருஷனும் ஜோடியாக நடந்து வந்தார்கள் தரிஸனத்துக்கு.

முந்தய தினம் பார்த்தபோது ’அந்தப்புருஷன் பிழைப்பானா?’ என்ற கேள்விக்குறி  இருந்தது. ஆனால் இன்றைக்கோ, உற்சாகமாக நடந்து வந்து நமஸ்காரம் செய்கிறான் அவன்!   

நாடோடி இனப்பெண்ணின் கண்களில் ஏராளமான நன்றிப்பெருக்கு. ”தேவுடு, தேவுடு” என்று சொல்லிச்சொல்லி விழுந்து விழுந்து வணங்கினாள்.

காலகாலர் கொடுத்தது, ஆரஞ்சுக் கனியா அல்லது அமிர்தக் கனியா?

அந்த நாடோடிப் பெண்ணுக்குத்தான் விடை தெரியும்!

oooooOooooo





ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்


இதன் தொடர்ச்சி நாளை மறுநாள் 
புதன்கிழமை வெளியாகும்





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

44 comments:

  1. பெரியவா அனுக்ரஹம் என்றும் வீண் போவதில்லை.

    ReplyDelete
  2. நம்முடைய காரியத்தை நாமே செய்வது கவுரவ குறைச்சல் இல்லை! அடுத்தவரிடம் செய்யச்சொல்வதே கவுரவ குறைச்சல்! அருமையான பொன்மொழி! பெரியவா நாடோடி பெண்ணுக்கு அனுக்கிரகம் செய்தமையை சிறப்பாக பகிர்ந்து பெரிய்வாளின் மகிமையை பூரணமாய் உணரச்செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. காலகாலர் கொடுத்தது, ஆரஞ்சுக் கனியா அல்லது அமிர்தக் கனியா?
    அந்த நாடோடிப் பெண்ணுக்குத்தான் விடை தெரியும்!

    சிலிர்க்க செய்த அனுபவம்.

    ReplyDelete
  4. சிறப்பான கருத்துகளோடு, அபூர்வ நிகழ்வு அற்புதம்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
  5. Very nice.
    Really Periyava is kalakalar no doubt.
    viji

    ReplyDelete
  6. //எல்லாவற்றிற்கும் மூலம், அகம்பாவத்தை விட்டுத் தொலைப்பதுதான். //

    அதைத் தொலைப்பது தான் கடினம்...... :)

    அமுத மொழிகளும் நிகழ்வும் படித்து ரசித்தேன்..... தொடரட்டும் அமுத மொழிகள்....

    ReplyDelete
  7. //வாக்குக் கட்டுப்பாட்டை வழக்கத்தில் கொண்டுவர வேண்டும். கணக்காகப் பேச வேண்டும்.

    பிறருடைய மனதைப் புண்படுத்தாத பேச்சே பேச வேண்டும்.

    தன் ஆத்மாவை உயர்த்திக்கொள்ள உதவுகிற விஷயங்களையே பேச வேண்டும்.//

    மிக மிக உயர்ந்த வரிகள்!

    ReplyDelete
  8. எல்லாவற்றிற்கும் மூலம், அகம்பாவத்தை விட்டுத் தொலைப்பதுதான்.

    அது தொலைந்தால் அடக்கத்தோடு, ஆனந்தத்தோடு எந்த காரியத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் புத்தியோடு செய்து. நாமும் நலம் பெறலாம்; உலகத்தையும் நலமாக வைத்திருக்கலாம்.

    அகம்பாவத்தை அகற்றும் அறிவுரைகள்...

    ReplyDelete
  9. காலகாலர் கொடுத்தது, ஆரஞ்சுக் கனியா அல்லது அமிர்தக் கனியா?

    அமிர்தக்கனியாய்
    அருமையான பகிர்வுகள்..!

    ReplyDelete
  10. “...... எமன் இல்லே! .....
    எமனுக்கு எமன் - காலகாலன்!”

    அந்த பரமேஸ்வரனின்
    அவதாரமாயிற்றே..!

    ReplyDelete
  11. அபூர்வ நிகழ்வு ....
    அருமையான பகிர்வு..!

    ReplyDelete
  12. நாடோடிப் பெண்ணுக்கு தான் எவ்வளவு பக்தி மகா பெரியவர் மேல்.
    இந்த மாதிரி அற்புத ந்கழ்வுகள் தொடரட்டும்......

    ReplyDelete
  13. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல என்ற வள்ளுவனின் வாக்குப்படி பெரியவாவின் பாதங்களை சரணடைந்தவர்கள்துன்பம், தாபம் நீங்கி அவருடைய அருளை பெறாமல் சென்றதில்லை .

    மனதை நெகிழ வைக்கும் பதிவு
    ,பாராட்டுக்கள்

    அகம்பாவம்
    நீங்கஏகம்பனை எந்நேரமும்
    நினைக்கவேண்டும்


    ஏ கம்பன் என்றால்
    கம்பத்தில் தோன்றியவன் என்று
    பொருள்

    கம்பத்தில் தோன்றியவன் யார்?

    அகம்பாவம் தலை உச்சிக்கேறி
    தானே கடவுள் என்று தன்னை நினைத்துக்கொண்டு மகன் என்றும் கூட பார்க்காமல் பரம பக்தனான பிரகலாதனை கொல்ல துணிந்த ஹிரநியகசிபுவை அழித்தவன் அந்த அழகிய சிங்கன்

    அவன் பாதம் பற்றினால் ஹிரன்னியனின் அகந்தை ஒழிந்ததுபோல் நம்மை துன்பத்தில் ஆழ்த்தும்
    நம்முடைய அகம்பாவமும் தொலையும்
    அதனால் விளையும்,விளைந்த
    பாவங்களும் நீங்கும்.

    ReplyDelete
  14. பெரியவா அபூர்வ நிகழ்வுகள் படிக்கும் போதே மனம் உருகுகின்றது. சமீபத்தில் என் உறவினர் பெண்ணுக்காக திருமணம் வேண்டியபோது அற்புதமான வரன் உடனே அமைந்ததும் உண்மையில் நெகிழ்வாகத்தான் இருக்கிறது. பெரியவா அருளை உணர செய்த உங்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  15. பெரியவர் மீது அந்த பெண் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.

    ReplyDelete
  16. அற்புத நிகழ்வு...
    அந்தப் பெண்ணின் நம்பிக்கை வீண்போகவில்லை...

    ReplyDelete
  17. இது அமுதக் கனியே தான் .இல்லாது போனால் இவ்வாறான அற்புதங்கள் எவாறு நிகழும் ! மனம் கவர்ந்த பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  18. பிறருடைய மனதைப் புண்படுத்தாத பேச்சே பேச வேண்டும்.
    அதனால்தானே நா காக்க என்று நம் முன்னோர் உரைத்தனர்.
    நன்றி அய்யா

    ReplyDelete
  19. Periyavaalaippatri yevvalavu padiththaalum pothavaillai. Nandri, Gopu Sir!

    ReplyDelete
  20. நம்பினார் கெடுவதில்லை - நான்குமறை தீர்ப்பு
    அற்புதமான மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்!
    நாடோடிப் பெண்ணின் பெரியவா பக்தி, பதி பக்தி இரண்டுமே பாராட்டப் பட வேண்டிய ஒன்று - ஒன்றல்ல - இரண்டு!

    ReplyDelete
  21. \\நம் காரியத்தை நாமே செய்து கொள்கிறதிலே கெளரவக் குறைச்சலே இல்லை. பிறத்தியாரிடம் இவற்றை விடுவதுதான் கெளரவக் குறைச்சல்.\\

    கௌரவம் என்பது எதிலிருக்கிறது என்பதை அறியாதவர்கள்தாம் கௌளரவக்குறைச்சலான செயல்பாடுகளில் ஈடுபட்டுத் தங்கள் மாண்பினைக் குலைத்துக்கொள்கிறார்கள். மிக அருமையான பகிர்வு.

    நாடோடிப்பெண்ணின் நம்பிக்கை வீண்போகவில்லை. அற்புத நிகழ்வின் பகிர்வுக்கு மிக்க நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  22. //வாக்குக் கட்டுப்பாட்டை வழக்கத்தில் கொண்டுவர வேண்டும். கணக்காகப் பேச வேண்டும்.

    பிறருடைய மனதைப் புண்படுத்தாத பேச்சே பேச வேண்டும்//

    முடியவில்லையா. பேசாமல் இருப்பது உத்தமம்.

    \\நம் காரியத்தை நாமே செய்து கொள்கிறதிலே கெளரவக் குறைச்சலே இல்லை. பிறத்தியாரிடம் இவற்றை விடுவதுதான் கெளரவக் குறைச்சல்.\\

    தன் கையே தனக்குதவி. இந்த மாதிரி நிறைய நல்ல விஷயங்கள நம்ம முன்னோர்கள் எல்லாம் சொல்லிட்டுத்தான் போயிருக்காங்க. ஆனால் அதை கடைபிடிப்பதை நாம சிரமம்ன்னு நினைக்கிறோம்.

    //காலகாலர் கொடுத்தது, ஆரஞ்சுக் கனியா அல்லது அமிர்தக் கனியா?

    அந்த நாடோடிப் பெண்ணுக்குத்தான் விடை தெரியும்!//

    இறைவனின் சந்நிதியைப் போல் மகா பெரியவாளின் சந்நிதியிலும் சாதி, மத, இன பேதமின்றி அனைவரும் சமம்.

    ReplyDelete
  23. எல்லாவற்றிற்கும் மூலம், அகம்பாவத்தை விட்டுத் தொலைப்பதுதான்.

    அருமையான உபதேசம்! எளிமையாய் சொல்லும் அழகும் அருமை.

    ReplyDelete
  24. Blessings of periyavar and the amazing incident is all heart filling. azhagana arivuraigal, mikka nandri iyyah....
    Thanks a lot for sharing it with us sir...

    ReplyDelete
  25. அபூர்வமான நிகழ்வுகள் மனதை தொட்டன.

    ReplyDelete
  26. நம் காரியத்தை நாமே செய்து கொள்கிறதிலே கெளரவக் குறைச்சலே இல்லை. பிறத்தியாரிடம் இவற்றை விடுவதுதான் கெளரவக் குறைச்சல்.

    ஆம், அருமையான தெய்வ வாக்கு.

    /காலகாலர் கொடுத்தது, ஆரஞ்சுக் கனியா அல்லது அமிர்தக் கனியா?

    அந்த நாடோடிப் பெண்ணுக்குத்தான் விடை தெரியும்!///

    இறைவனை நம்பியது போல் நாடமாடும் தெய்வத்தை நம்பிய அந்த பெண்ணுக்கு கிடைத்த பரிசு அமிர்தகனிதான் இதில் என்ன சந்தேகம்!
    நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.நன்றி.

    ReplyDelete
  27. நம்பிக்கை நல்ல முறையில் அமைந்தது.அகம்பாவத்தை நாவடக்கத்தில்
    காட்டாமல் இருப்பதுடன், அகம்பாவத்தைக் காட்டுபவர்களைக் கண்டு
    வெகுளாமில் நாவடக்கத்துடன் பதில் கொடுக்காமலும் இருப்பதுதான்.
    நல்ல காரியங்களை நாமே செய்யவேண்டும். நல்ல அறிவுரை. அன்புடன்

    ReplyDelete
  28. //நம் காரியத்தை நாமே செய்து கொள்கிறதிலே கெளரவக் குறைச்சலே இல்லை. பிறத்தியாரிடம் இவற்றை விடுவதுதான் கெளரவக் குறைச்சல்.//

    ஆமாம், நம்ம காரியத்தை நாமே தான் செய்துக்கணும். ஆனாலும் சிலருக்கு அது கேலியாகவும் தெரியும். லக்ஷியம் செய்யக் கூடாது. :)))))

    ReplyDelete
  29. இந்தப் பதிவு படிச்சிருக்கேன். :))))

    ReplyDelete

  30. நம்பிக்கையூட்டும் , நம்பிக்கை வளர்க்கும் பதிவு. நம்பிக்கை பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்.

    ReplyDelete
  31. அற்புதமான நிகழ்ச்சி..அந்த பெண்மணியின் நம்பிக்கை வீண்போகவில்லை!!

    ReplyDelete
  32. சிலிர்க்க வைத்த அனுபவம்... பெரியவாளின் கருணையே கருணை தான்..

    ReplyDelete
  33. அதிசய சம்பவம் அருமை

    ReplyDelete
  34. எல்லாவற்றிற்கும் மூலம், அகம்பாவத்தை விட்டுத் தொலைப்பதுதான்.

    அது தொலைந்தால் அடக்கத்தோடு, ஆனந்தத்தோடு எந்த காரியத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் புத்தியோடு செய்து. நாமும் நலம் பெறலாம்; உலகத்தையும் நலமாக வைத்திருக்கலாம்.
    நம் காரியத்தை நாமே செய்து கொள்கிறதிலே கெளரவக் குறைச்சலே இல்லை. பிறத்தியாரிடம் இவற்றை விடுவதுதான் கெளரவக் குறைச்சல்.//

    அற்புத வரிகள்!

    “...... எமன் இல்லே! .....
    எமனுக்கு எமன் - காலகாலன்!”
    //
    உண்மை!
    பகிர்விற்கு நன்றீ ஐயா!

    ReplyDelete
  35. அன்பின் வை.கோ - வழக்கமாகப் பதிவினையும் மறுமொழிகளையும் படிப்பேன். பிறகு தான் மறுமொழி இடத் துவங்குவேன்.

    //வாக்குக் கட்டுப்பாட்டை வழக்கத்தில் கொண்டுவர வேண்டும். கணக்காகப் பேச வேண்டும்.

    பிறருடைய மனதைப் புண்படுத்தாத பேச்சே பேச வேண்டும்.

    தன் ஆத்மாவை உயர்த்திக்கொள்ள உதவுகிற விஷயங்களையே பேச வேண்டும்.

    எல்லாவற்றிற்கும் மூலம், அகம்பாவத்தை விட்டுத் தொலைப்பதுதான்.

    அது தொலைந்தால் அடக்கத்தோடு, ஆனந்தத்தோடு எந்த காரியத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் புத்தியோடு செய்து. நாமும் நலம் பெறலாம்; உலகத்தையும் நலமாக வைத்திருக்கலாம்.// - துவக்கமே அருமை. ஒவ்வொருவரும் இவ் வைர வரிகளைக் கடைப் பிடித்தால் நல்வாழ்வு வாழலாம்.

    ஒரு அபூர்வ நிகழ்வினை கதை போலப் பதிவிட்டிருக்கிறார் வை.கோ.

    கோவிலில் அமர்ந்திருக்கிறார் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா. அப்போது ஒரு பெண் அவரது நோய் வாய்ப்பட்ட கணவனைத் தூக்கிக் கொண்டு வந்து பெரியவாளின் முன்னால் தரையில் கிடத்தினார். பெரியவா கோயிலில் தங்கியிருப்பதைத் தெரிந்துகொண்டு, அவர்கள் அனுக்ரஹம் செய்தால், தன் கணவன் உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தாள்.

    பெரியாவாளோ சத்யவான் சாவித்ரி கதை கூறி இவளும் ஒரு சாவித்ரிதானெனக் கூடிய வுடன் - பக்தர் ஒருவர் மகாப் பெரியவா காலகாலன் - இவரைன் உயிரைக் காக்க முடியும் - நோயினக் குணப் படுத்த முடியுமெனக் கூறினார்.

    பெரியவா ஒரு ஆரஞ்சு பழத்தினைக் கொடுத்து அனுக்கிரஹம் பண்ணினார்.

    மறு தினம் அந்தப் பெண்னூம் பூரண குணமடைந்த அவளது கணவனும் நட்ந்தே ஜோடியாக வந்தார்கள் - தரிசித்தார்கள் - மன மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.

    மேலே கொடுத்திருப்பது பதிவின் சுருக்கமே |!

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  36. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு அதிசயம் சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  37. இவர்கிட்ட வந்தா புருஷன் பொழச்சுபான் என்று நம் வந்திருக்கா.. நம்பினோர் கெடுவதில்லையே குருவின் ஆசிகள் கிடைத்துவிட்டது. மெயின் நம்பிக்கைதான்

    ReplyDelete
  38. இன்னாலாமோ அற்புதங்கலா நடத்துறாங்க குருசாமி

    ReplyDelete
  39. ஆரஞ்சு கனி அல்ல அமுதக்கனியேதான். ஆத்மார்த்தமாக நம்பி வருபவர்களை ஸ்வாமி எனுறுமே கைவிட மாட்டார்கள்.

    ReplyDelete
  40. நம் காரியத்தை நாமே செய்து கொள்கிறதிலே கெளரவக் குறைச்சலே இல்லை. பிறத்தியாரிடம் இவற்றை விடுவதுதான் கெளரவக் குறைச்சல்.// இதையே பல பெ(அ)ரிய தலைவர்கள் கடைபிடித்தனர். வைர வரிகள்!!

    ReplyDelete
  41. "நம் காரியத்தை நாமே செய்து கொள்கிறதிலே கெளரவக் குறைச்சலே இல்லை" - இதைப் படிக்கும்போது நான் படித்த ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருகிறது. ராஜீவ்காந்தி கர்'நாடகாவுக்கு வருகிறார். (பிரச்சாரத்திற்காக) குண்டுராவ் (முன்னாள் முதலமைச்சர்) வீட்டில் தங்கும்போது, இரவு ராஜீவ்காந்தி, தன்னுடைய குர்த்தா பஜாமாவைத் தோய்த்துக்கொள்கிறார். ஏன்என்று குண்டுராவ் கேட்டதற்கு, தான் இரண்டு செட் டிரஸ்தான் கொண்டுவந்ததாகவும், ஒன்றில், மக்கள் குங்குமம் போன்றவற்றைத் தீற்றிவிட்டதனால் இரவே தோய்க்க நேர்ந்ததாகவும் சொல்கிறார். இதை யாரிடம் சொன்னாலும் அவர்கள் உடனே செய்துவிடுவார்களே என்று கேட்டதற்கு, நம்முடைய டிரெஸை நாம் தோய்ப்பதில் என்ன இருக்கிறது என்று ராஜீவ் சொல்கிறார். யார் ராஜீவ்? அவர் நினைத்தால் என்ன வேணுமானாலும் செய்வதற்கு அவருக்கு லட்சக்கணக்கான ஆட்கள் உண்டு. மிக நம்பிக்கையான ஆயிரக்கணக்கானோர் உண்டு. நம்ம ஊர்ல என்னடான்னா, மக்களைப் பாதுகாக்கும் போலீசார், அவரது உயரதிகாரி வீட்டுக்குக் காய்கறி வாங்குவதற்கும், தோய்ப்பதற்கும் சலவைத் துணிகளை வாங்கிவருவதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறார்கள் (சிலர் அல்லது பலர்).

    பெரியவாளின் அனுக்ரகத்தைப் பற்றி எனக்குத் தோன்றியது.. ப்ராப்தம் இருக்கிறவர்கள்தான், அவரிடம் விண்ண்ப்பித்துக்கொள்ளவோ அல்லது அவரது தரிசனம், அருட்பார்வை படவோ வாய்க்கிறது. ப்ராப்தம் இருந்தவர்கள் யாராகிலும் அவரின் அருட்பார்வை பகலவனைக் கண்ட பனிபோல் பிரச்சனைகளை மறையச் செய்கிறது.

    ReplyDelete
    Replies
    1. 'நெல்லைத் தமிழன் October 18, 2016 at 5:49 PM

      வாங்கோ வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான சில உதாரணங்களுடன் கூடிய நீண்ட கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  42. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (09.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/410947799407920/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete