2
ஸ்ரீராமஜயம்
மாணவர்களுக்கு புத்தி மட்டும் வளர வேண்டுமென்றில்லாமல் குணநலனும் வளரவேண்டும் என்றால் அது சுத்தமான தனிப்பட்ட குருமார்களால் நடக்கிற அளவுக்கு, கல்வி நிறுவனத்தால் ஒரு நாளும் முடியாது.
நிறுவனத்தில் அறிவினைத்தான் பரீட்சித்து வளர்க்க முடியும். குணத்தை முடியாது.
வித்யையை வித்யை [அறிவு] என்று குருமார்கள் கற்றுக்கொடுப்பதும் சீடர்கள் கற்றுக்கொள்வதும் தான் உயர்ந்தது.
“பணத்துக்காகவும் வித்யை ” என்பது இடைப்பட்டது.
“பணத்திற்காகவே வித்யை” என்றால் அது தாழ்ந்தது.
குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எதுவுமில்லை.
oooooOooooo
அற்புத நிகழ்வுகள் - புதிய தொடர்
வில்வ இலைகளை
வைத்து விட்டுப்போனது யார்?
மஹாஸ்வாமிகளை உருக வைத்த நிகழ்ச்சி.
பகுதி 1 of 9
ஒருமுறை மஹாஸ்வாமிகள் ’தக்ஷிண கைலாயம்’ எனப்படும் ஸ்ரீசைல க்ஷேத்திரத்துக்குப் பரிவாரங்களுடன் திவ்ய தரிசன யாத்திரை மேற்கொண்டார்.
யாத்திரை கர்னூலை அடைந்ததும், நகர எல்லையில் ஆச்சார்யாளுக்குப் பிரும்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பஜனை மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட ஸ்வாமிகள், தனக்கு முன்பாகக் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் ‘ஸநாதன தர்மத்தை'ப்பற்றி, தெலுங்கில் உரை நிகழ்த்தினார். முடிவில் அனைவருக்கும் ஆசியும் பிரசாதமும் வழங்கி விட்டு யாத்திரையைத் தொடர்ந்தார்.
கர்னூல் எல்லையைத் தாண்டி கொஞ்சதூரம் சென்றது, வானம் தூறல் போட ஆரம்பித்தது. உடனே அடைமழையாகப் பொழிய ஆரம்பித்தது. ஒதுங்க இடம் இல்லை.
ஸ்ரீமடத்தைச் சேர்ந்த பக்தர்கள் அனைவரும், உடன் வந்து கொண்டிருந்த ’சிவிகை’யில் [பல்லக்கில்] ஏறி அமரும்படி ஸ்வாமிகளைப் பிரார்த்தித்தனர். ’போகி’களும் [பல்லக்கு சுமப்பவர்கள்] வேண்டிக்கொண்டனர். ஆச்சார்யாள் உடன்படவில்லை.
ஸ்ரீமடத்தைச் சேர்ந்த பக்தர்கள் அனைவரும், உடன் வந்து கொண்டிருந்த ’சிவிகை’யில் [பல்லக்கில்] ஏறி அமரும்படி ஸ்வாமிகளைப் பிரார்த்தித்தனர். ’போகி’களும் [பல்லக்கு சுமப்பவர்கள்] வேண்டிக்கொண்டனர். ஆச்சார்யாள் உடன்படவில்லை.
நீங்க அத்தன பேரும் நனஞ்சுண்டே வரச்சே நா மாத்ரம் பல்லக்ல வரணுமா ... வாண்டாம் ... வாண்டாம். நானும் இப்டியே வரேன்!” என்று கூறிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார் ஸ்வாமிகள். கூப்பிடு தூரத்தில் சிவன் கோயிலொன்று தென்பட்டது. அனைவருடனும் அந்த ஆலயத்துக்கு விஜயம் செய்தார் ஸ்வாமிகள். பூர்ண கும்ப மரியாதையும் வரவேற்பு நிகழ்ந்தது.
அனைவரும் சரீரத்தைத் துடைத்துவிட்டு, மாற்று வஸ்திரம் அணிந்து கொண்டனர். தரிசனம் முடிந்தபோது மழை முழுமையாக விட்டது. யாத்திரை தொடர்ந்தது.
சுமார் ஏழெட்டு மைல் கடந்ததும் செழிப்பான ஒரு ஜமீன் கிராமம் தென்பட்டது. அந்தக்கிராமத்து மக்கள் அனைவரும் தத்தம் குழந்தை குட்டிகளுடன் ஊர் எல்லையில் பூர்ண கும்ப மரியாதையுடன் மஹா ஸ்வாமிகளை வரவேற்றனர்.
பின், அந்த ஊர் ஜமீந்தார் ஸ்வாமிகளிடம் பெளவ்யமாகப் பிரார்த்தித்தார். ”எங்க கிராமத்துலே ஸ்வாமிகள் திருப்பாதம் பட்டு, புனிதமாகணும். இங்கே கொஞ்ச நாள் தங்கியிருந்துட்டுப்போகணும். பூஜை புனஷ்காரங்கள் பண்றதுக்கு வசதியா பெரிய சத்திரம் ஒண்ணு இருக்கு. பக்கத்திலேயே சுத்தமான புஷ்கரணியும் இருக்கு”.
கிராமமே கீழே விழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்தது. அவர்களின் ஆத்மார்த்த பக்தியைப் பார்த்த ஆச்சார்யாள் நெகிழ்ந்தார். இருபத்தோரு நாட்கள் அங்கு தங்கப்போவதாக அநுக்கிரஹித்தார். கிராமமே மகிழ்ந்தது.
அடுத்த நாள் காலையில் அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
தொடரும் ...
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்
இதன் தொடர்ச்சி 09.07.2013
செவ்வாய்க்கிழமை வெளியாகும்.
இதன் தொடர்ச்சி 09.07.2013
செவ்வாய்க்கிழமை வெளியாகும்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
அமுதமழை பெரியவரைப் பற்றிய செய்திகளை அழகாய்ப் பொழிகிறது..
ReplyDeleteதொடருங்கள்... தொடர்ந்து வருகிறோம் ஐயா....
நீங்க அத்தன பேரும் நனஞ்சுண்டே வரச்சே நா மாத்ரம் பல்லக்ல வரணுமா ... வாண்டாம் ... வாண்டாம். நானும் இப்டியே வரேன்!” என்று கூறிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார் ஸ்வாமிகள்.
ReplyDeleteஇந்த குணம்தான் இவரை
மற்றவர்களிடமிருந்து
தரம் உயர்த்திக் காட்டுகிறது
இன்றைக்கு ஆசிரியர்கள் சில பேர்கள் குருக்களாக இருக்கிறார்கள்... புதிய தொடர் சிறப்பான ஆரம்பம்... தொடர்கிறேன்...
ReplyDeleteமஹாப் பெரியவரின் வாழ்வில் நடந்தவைகள் மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கி எங்களின் ஆன்மீகத்தேடலை பூர்த்தி செய்து வருவதற்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteKali patriya vaarthtaigal arumai!
ReplyDeleteஅமுதமழை பொழிந்து கொண்டே யிருக்கட்டும்.நனைந்து கொண்டே இருக்கலாம். குருவின் மூலம் நல்ல வித்யை கிடைக்கப் பெற்றவர்கள் எல்லாம் பாக்யசாலிகள். அடுத்து என்ன என்ற தேடல் இப்போது உங்கள் வலைப்பூவினுள். அன்புடன்
ReplyDeleteமாணவர்களுக்கு புத்தி மட்டும் வளர வேண்டுமென்றில்லாமல் குணநலனும் வளரவேண்டும் என்றால் அது சுத்தமான தனிப்பட்ட குருமார்களால் நடக்கிற அளவுக்கு, கல்வி நிறுவனத்தால் ஒரு நாளும் முடியாது.
ReplyDeleteநிறுவனத்தில் அறிவினைத்தான் பரீட்சித்து வளர்க்க முடியும். குணத்தை முடியாது.//
இன்றைய கால கட்டத்தில் அனைவரும் மதிப் பெண்களைத் தேடித்தான் ஓடுகிறார்கள். நம்ப காலத்தில் படித்த MORAL INSTRUCTION PERIODS உள்ள பள்ளிகள் இன்று மிக மிகக் குறைவு.
கிராமத்தில் அடுத்த என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எதுவுமில்லை.
ReplyDeleteஅருமையான போதனை !
குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எதுவுமில்லை.
ReplyDeletevery very well said.
Like to read further,
viji
குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எதுவுமில்லை.
ReplyDeleteநிதர்சனமான வரிகள்..!
வில்வ இலைகளை
ReplyDeleteவைத்து விட்டுப்போனது யார்?
மஹாஸ்வாமிகளை உருக வைத்த நிகழ்ச்சி.
சிறப்பான சம்பவம்..!
கர்னூல் எல்லையைத் தாண்டி கொஞ்சதூரம் சென்றது, வானம் தூறல் போட ஆரம்பித்தது. உடனே அடைமழையாகப் பொழிய ஆரம்பித்தது.
ReplyDeleteஅனுக்ரஹ அமுதமும் பொழிகிறது..!
கிராமமே கீழே விழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்தது. அவர்களின் ஆத்மார்த்த பக்தியைப் பார்த்த ஆச்சார்யாள் நெகிழ்ந்தார். இருபத்தோரு நாட்கள் அங்கு தங்கப்போவதாக அநுக்கிரஹித்தார். கிராமமே மகிழ்ந்தது.
ReplyDeleteஆத்மார்த்த நிகழ்வுகள் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!
//குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எதுவுமில்லை//
ReplyDeleteஉண்மை....
தொடர்கிறேன்....
குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எதுவுமில்லை.
ReplyDeleteஉண்மையான வரிகள் அய்யா. வகுப்பறையில் அசிரியர் பலி, விவாகரத்து வழக்குகள் குவிகின்றன இவை எல்லாவற்றிற்கும், இக் குணமில்லா புத்திசாலித்தனமே காரணம் என்று நினைக்கின்றேன் அய்யா. குணமில்லா புத்திசாலித்தனம் சுயநலம்.நன்றி அய்யா
\\குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எதுவுமில்லை.\\
ReplyDeleteமிகவும் சரி. சுயநலமும் அடுத்தவர்களைக் கெடுக்கும் சூழ்ச்சியும்தான் குணமில்லாத புத்திசாலித்தனத்தின் விளைவுகள்.
மகாபெரியவரின் அற்புதங்களின் வரிசையில் அடுத்த அமுத மழையில் நனையக் காத்திருக்கிறேன்.
நீங்க அத்தன பேரும் நனஞ்சுண்டே வரச்சே நா மாத்ரம் பல்லக்ல வரணுமா ... வாண்டாம் ... வாண்டாம். நானும் இப்டியே வரேன்!” என்று கூறிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார் ஸ்வாமிகள்.// நெகிழ்ந்தேன்!
ReplyDelete//“பணத்திற்காகவே வித்யை” என்றால் அது தாழ்ந்தது.
குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எதுவுமில்லை.//
உண்மை ஐயா! மதிப்பெண்கள் மட்டுமே மாணவரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அளவுகோலாக்கப்பட்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்!//
நல்ல பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை என்ற வரிகள் நினைவுக்கு வந்தன! நன்றி! தொடர்கிறேன் ஐயா!
தொடர்ந்து வாசித்துக் கொண்டு வருகிறேன். தங்கள் தகவலுக்காக.
ReplyDeleteகுணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எதுவுமில்லை.//
ReplyDeleteஎத்தனை பொருள் பதிந்த வாக்கியம்!
கிராமத்தில் பெரியவாளின் காலடி பட்டு, கிராமத்தவர்கள் பெற்ற நன்மையை படிக்கக் காத்திருக்கிறேன்.
ஆசார்யப்பெருமானைப்பற்றிய வரிகள் என்பதாலே அமுதமாய் இனிக்கிறது அவரது எளிமை யாருக்கு வரும்!
ReplyDeleteகுணமில்லாத கல்வியினால் ஒரு பிரயோசனமும் இல்லை என்பது அனுபவபூர்வமாக நாம் உணர்வதே!
ReplyDeleteஅந்தக் கிராமத்திற்கு கிடைத்த அருளாசிகள் பற்றித் தெரியத் தொடர்கிறேன்........
பெரியவாளின் அமுதமழை தொடரட்டும். நாங்களும் தொடர்ந்து வருகிறோம்.
ReplyDeleteஅருள்மழையில் நனைகிறேன் நானும்.
ReplyDeleteஒரு புதிய தொடர் ஆரம்பம்.! மகிழ்ச்சியான செய்தி! வலைப்பதிவில் எழுதாமல் ஒதுங்கியிருந்த உங்களை, மீண்டும் மீண்டும் புதிய தொடர்களை எழுத வைத்த அந்த இறைவன் திருவருளை என்னவென்று சொல்வது? தொடர்கின்றேன்.
ReplyDelete
ReplyDeleteநான் சாதாரணன்தான் ஆனால் ஏதாவது சாதிக்கத் துடிப்பவன். உங்களை சந்தித்ததிலும் பதிவுகளைப் படிக்கையிலும் புரிகிறது. வாழ்த்துக்கள்.
Glad to follow this. Awaiting the next post..
ReplyDeleteகுணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எதுவுமில்லை.//
ReplyDeleteஉண்மை, குணமில்லாத புத்திசாலித்தனம் இருந்து எதற்கு?
//ஆத்மார்த்த பக்தியைப் பார்த்த ஆச்சார்யாள் நெகிழ்ந்தார்.//
கிராம மக்கள் 21 நாளும்
மகிழ்ச்சி கடலில் திளைத்து இருப்பார்கள்.
வாழ்த்துக்கள்.
பெரியவரின் அமுதமழை தொடரட்டும்,தொடர்கிறோம்..
ReplyDelete"வித்யையை வித்யை [அறிவு] என்று குருமார்கள் கற்றுக்கொடுப்பதும் சீடர்கள் கற்றுக்கொள்வதும் தான் உயர்ந்தது."
ReplyDeleteஅருள்மழையில் நனைகின்றோம்.
நிறுவனத்தில் அறிவினைத்தான் பரீட்சித்து வளர்க்க முடியும். குணத்தை முடியாது.//
ReplyDeleteகுருகுல அமைப்பே அதுக்குத் தானே ஏற்பட்டிருந்தது. இப்போது சுத்தமாய் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. :(
//குணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எதுவுமில்லை.//
ReplyDeletemikavum sariye!
thodarkiren
அன்பின் வை.கோ - புதிய தொடரா - தொடர்க - படிக்கிறோம் - தொடர்கிறோம்.
ReplyDeleteகல்வி அறிவுக்கா அல்லது குணத்துக்கா - பட்டி மன்றத் தீர்ப்பு இரண்டிற்கும் தான் -
திவ்ய தரிசன யாத்திரையில் - ஒரு நாள் கடும் மழை வந்து விட - பெரியவா நனைகிறார்களே என பக்த கோடிகள் குடை கொடுத்து உதவ - பெரியவாளோ - எல்லொரும் நனையும் போது நானும் நனைகிறேனே என நனைந்து கொண்டே அனைவருடனும் அவர்களில் ஒருவராக நடந்தே சென்றது பெரிய்வாளின் குணநலன்களைக் காட்டுகிறது.
வழியில் ஒரு கிராமத்தை அடைந்த போது - கிராமமே திரண்டு வந்து - இங்கு சில நாட்கள் தங்கி அருள வேண்டுமெனப் பிரார்த்திக்க - பெரியவளும் மனமுவந்து 21 நாட்கள் தங்குகிறேன் என ஆசிர்வதித்தார். கிராமமே விழாக் கோலம் பூண்டது.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
//கல்வி அறிவுக்கா அல்லது குணத்துக்கா ?//
ReplyDeleteஇரண்டுக்கும்தான்:)) அத்தோடு பணத்துக்கும்.
சுவாமிகள் அழகாக யாத்திரை போகிறார்.
மத்தவாளுக்கு இல்லாத சுகம் தனக்கும் வேண்டாம் என்பது சாதாரணமானது அல்ல.
ReplyDeleteஸ்வாமிகள் மனம் வைத்தால்எங்க வேணும்னாலும் தங்க அனுமதித்து விட்கிறார். உண்மையான பக்தியும் சிரத்தையும் தான் முக்கியம்
ReplyDeleteஅந்த கிராமத்து ஆளுகலாம் எத்தர அன்போட குருசாமிய அவங்க ஊருல தங்கி பூசலா பண்ண சொல்லினாங்க
ReplyDeleteஉள்ளன்புடன் பக்தி சிரத்தையுடன் அழைப்புக்கு பெரியவா அங்கே தங்க சம்மதிக்கறா.
ReplyDeleteகுணமில்லாத புத்திசாலித்தனத்தை விட பெரிய ஆபத்து எதுவுமில்லை.//சில நேரம் சில மனிதர்களிடம் நானே அனுபவிக்க நேர்ந்தது...
ReplyDelete:)
ReplyDeleteமத்தவாள்ளாம் நனையும்போது நான்மட்டும் பல்லாக்குல வரமாட்டேன்னு சொல்லிட்டாளே பெரியவா. மத்தவா மேல என்ன ஒரு கருணை.. கர்னூல்...தெலுங்கு தேசமா.... பெரியவா கூட யாத்திரை செல்ல கிடைத்தவால்லாம் பாக்கிய சாலிகள்..
ReplyDeletehappy November 2, 2016 at 12:11 PM
Deleteவாம்மா ... ஹாப்பி, வணக்கம்.
//மத்தவாள்ளாம் நனையும்போது நான்மட்டும் பல்லாக்குல வரமாட்டேன்னு சொல்லிட்டாளே பெரியவா. மத்தவா மேல என்ன ஒரு கருணை.. கர்னூல்...தெலுங்கு தேசமா.... பெரியவா கூட யாத்திரை செல்ல கிடைத்தவால்லாம் பாக்கிய சாலிகள்..//
ஆமாம். கர்னூல் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஓர் மிகப்பெரிய மாவட்டத்தின் தலைநகர். இதனை GATE WAY OF RAYALASEEMA என்றும் அடிக்கடி சொல்லுகிறார்கள்.
நானும் கர்னூலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு இருந்தபோது, இருமுறை அங்கு சென்று வழிபட்டு வரும் பாக்யம் பெற்றுள்ளேன். 1982 அல்லது 1983-ம் வருஷம் என்று ஞாபகம். :)
இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (30.05.2018) பகிரப்பட்டுள்ளது.
ReplyDeleteஅதற்கான இணைப்பு:
https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=405874776581889
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு