என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 23 ஜூலை, 2013

29] நிலையான சொத்து தருபவர் குரு !

2
ஸ்ரீராமஜயம்


தாயார், தகப்பனார் இந்த உலகத்தில் பிறப்பைக் கொடுத்து இந்த உலகத்தில் நன்றாக வாழப்பண்ணி, இந்த உலகத்திற்கான சொத்தைக் கொடுப்பார்கள்.

ஆனால் இவையெல்லாம் நிலையில்லாத சொத்துக்கள். நிலையான சொத்தாகிய, என்றும் அழிவில்லாத பிரம்மானுபவத்தைத் தருபவர் “குரு” தான். 

தனக்குப்பிடித்த ஒருவரைத் தானே தேர்ந்தெடுத்து வரிப்பதுதான் ‘வரணம்’ என்பது. 

சரியான குருவைத் தேர்ந்தெடுத்து அவரிடம் போய்ச்சேருவது “குருவர்ணம்” .

நல்ல சீடனைத்தேடி எடுப்பது “சிஷ்ய வரணம்”

தானும் கரை சேர்ந்து பிறரையும், கரை சேர்ப்பிக்கிற பிரம்ம ஞானி தான் குரு.

”காமன்” உள்ளே புகுவதற்கு முன் ”காயத்ரீ” மஹாமந்திரம் உள்ளே புகுந்து விடவேண்டும் என்பது முக்கியம்.

oooooOooooo


அற்புத நிகழ்வுகள் 

வில்வ இலைகளை 
வைத்து விட்டுப்போனது யார்?

மஹாஸ்வாமிகளை உருக வைத்த நிகழ்ச்சி.


[பகுதி-1  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/21.html  ]

[பகுதி-2  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/22.html  ]     

[பகுதி-3  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/23.html  ]   

[பகுதி-4  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/24.html ]   

[பகுதி-5 படிக்க:   http://gopu1949.blogspot.in/2013/07/26.html ] 

[பகுதி-6 படிக்க:   http://gopu1949.blogspot.in/2013/07/27.html ]     

[பகுதி-7 படிக்க:   http://gopu1949.blogspot.in/2013/07/28.html ]                 


பகுதி 8  of  9

அடுத்த நாள் முதல் சரியாக மதியம் மூன்று மணிக்கு முற்றத்தில் வந்து அமர்ந்து தனக்குத் தெரிந்த ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி கீர்த்தனைகளையும், ஸ்ரீபுரந்தரதாஸர் பாடல்களையும் பாட ஆரம்பித்தான், புரந்தரகேசவலு. 

கூடத்தில் அமர்ந்து ஸ்வாமிகள் ரஸித்துக்கேட்டார். அவன் குரல் மிக இனிமையாக இருந்தது. 

அவன் பாடும்போது ஏற்படுகிற உச்சரிப்புப் பிழைகளை, சரியாக உச்சரித்துத் திருத்தினார் ஸ்வாமிகள்.

அன்று இருபத்தோராம் நாள். ஸ்ரீ சந்திரமெளலீஸ்வர பூஜையைப் பூர்த்தி செய்து, பிக்ஷையை ஸ்வீகரித்துக்கொண்டு, அந்த ஊரை விட்டுப் புறப்பட்டார் ஸ்வாமிகள். 

சத்திரத்தை விட்டு வெளியே வந்த ஆச்சார்யாள், தம்மை வழியனுப்பக் கூடியிருந்த ஜனங்கள் மத்தியில், ஆசி உரை நிகழ்த்தினார். 

அதைக் கேட்ட அனைவர் கண்களிலும் நீர் பெருகியது. 

பரிவாரங்களுடன் மெதுவாக நடக்க ஆரம்பித்த ஆச்சார்யாள். 

திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவராக திரும்பி நின்று சத்திரத்தைப் பார்த்தார்.  

அங்கே ... வாசல் பந்தக்காலைக் கட்டியணைத்தவாறு, கேவிக்கேவி அழுதபடி நின்றிருந்தான் புரந்தரகேசவலு.

அவனை அழைத்து வரச்சொன்னார் ஸ்வாமிகள். 

ஓடி வந்தான். 

மண்ணில் விழுந்து நமஸ்கரித்து எழுந்தான். 

அவனைப் பார்த்து வாஞ்சையுடன் சிரித்தார் பரப்பிரம்மம்.


தொடரும்......


ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 
25.07.2013 வியாழக்கிழமை வெளியாகும்

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

43 கருத்துகள்:

 1. தானும் கரை சேர்ந்து பிறரையும், கரை சேர்ப்பிக்கிற பிரம்ம ஞானி தான் குரு.//
  சரியான வழிகாட்டும் குரு இல்லாமல் வாழ்வில் திசைமாறியவர்கள் எவ்வளவு பேர்!
  சிறந்த குருவை அடைந்தவர்கள் பாக்கியசாலிகள்.
  நீங்களும் பாக்கியசாலிதான்.
  உங்கள் வாழ்க்கை எல்லோருக்கும் உதவும் வண்ணம் உள்ளது.ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவர் அவர்களின் அமுத மொழிகள் எல்லோர் வாழ்க்கைக்கும் உதவும்.
  அமுத மொழிகளை எங்களுக்கு அளித்து வரும் உங்களுக்கு நன்றி. முன்பு கல்கியில் பெட்டி செய்தியாக தெய்வத்தின் குரல் படித்து இருக்கிறேன்.

  அங்கே ... வாசல் பந்தக்காலைக் கட்டியணைத்தவாறு, கேவிக்கேவி அழுதபடி நின்றிருந்தான் புரந்தரகேசவலு.//

  புரந்தரகேசவலுவை தன்னுடன் அழைத்து வந்து விட்டாரா சுவாமிகள்! அறிய ஆவல்.


  பதிலளிநீக்கு
 2. குருவின் பெருமைகள் அறிய
  புளங்காகிதம் அறிந்தோம்
  நாங்களும் பந்தல்கால் அருகில் நிற்கும்
  புரந்தர கேசவலு ஞாபகத்திலிலேயே அடுத்த பதிவு வரை
  இருக்கவைத்துவிட்டீர்களே

  பதிலளிநீக்கு
 3. குருவின் தகுதிகளையும் புரந்தர கேசவலு கதையும் அருமை! அவர் கேட்ட வரத்தை அறிந்து கொள்ள ஆவல்! முந்தைய பகுதியையும் அங்கு இணைத்திருந்த சுட்டி மூலம் வரம் கதையையும் படித்தேன்! அருமையான கதை! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு

 4. கொஞ்சம் கொஞ்சமாக எழுதி எதிர்பார்ப்பை எகிற வைக்கிறீர்கள். வாழ்வில் எல்லோருக்கும் குரு கிடைத்து விடுகிறாரா என்ன. ?வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. புரந்தரகேசவலுவின் நிலை... அடுத்து...?

  அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா...

  பதிலளிநீக்கு
 6. புரந்தரகேசவலு சாமிகளுடன் ஆசிரமம் வந்துவிட்டானா அறிய ஆவல் ஐயா...

  பதிலளிநீக்கு
 7. தானும் கரை சேர்ந்து பிறரையும், கரை சேர்ப்பிக்கிற பிரம்ம ஞானி தான் குரு.

  குருவுக்கான இலக்கணம் அருமை..~!

  பதிலளிநீக்கு
 8. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
  ’அமுத மழை ’
  தொடர்ந்து பொழியும்

  இனிய நன்றிகள்..!

  பதிலளிநீக்கு
 9. சத்திரத்தை விட்டு வெளியே வந்த ஆச்சார்யாள், தம்மை வழியனுப்பக் கூடியிருந்த ஜனங்கள் மத்தியில், ஆசி உரை நிகழ்த்தினார்.

  அமுத மழையாய் வர்ஷிக்கும் ஆசியுரை ..!

  பதிலளிநீக்கு
 10. மண்ணில் விழுந்து நமஸ்கரித்து எழுந்தான்.

  அவனைப் பார்த்து வாஞ்சையுடன் சிரித்தார் பரப்பிரம்மம்.

  பரப்பிரம்மம் தான் ..

  ஜன்ம வினைகளை தீர்த்துவைக்கும் கருணைக்கடலாயிற்றே..!

  பதிலளிநீக்கு
 11. என்ன தான் வரம் கேட்டான் புரந்தர கேசவலு? ஆர்வம் அதிகமாகிக் கொண்டே போகிறது.

  பதிலளிநீக்கு
 12. அமுத மழை பகுதிகள் அனைத்தும் அருமை....

  புரந்தர கேசவலு கேட்டது என்ன... தெரிந்து கொள்ளும் ஆவலுடன் நானும்....

  பதிலளிநீக்கு
 13. without (G)race of (G)uru you cannot attain (G)od

  we will remain as (DOG) for ever running from pillar to post without any purpose,without any goal ,without the knowledge of our soul
  and the purpose of taken birth in this world

  we must pray to GOD only to show a Sadguru

  The other worldly pleasures etc will
  automatically come to us according
  to our karmas without asking for.

  பதிலளிநீக்கு
 14. "அவனைப் பார்த்து வாஞ்சையுடன் சிரித்தார் பரப்பிரம்மம்." எல்லாம் அறிந்தவர் அல்லவா.

  புரந்தர கேசவலு மஹாபெரியவாளுடன் சேர்ந்து ஆசிரமம் வந்துவிட்டானா ? ..............

  பதிலளிநீக்கு
 15. //தானும் கரை சேர்ந்து பிறரையும், கரை சேர்ப்பிக்கிற பிரம்ம ஞானி தான் குரு.// என்ன ஒரு அருமையான விளக்கம்!

  புரந்தலுவின் இன்னொரு ஆசை என்ன என்று எப்போது தெரியும்?

  பதிலளிநீக்கு
 16. மிக்க நன்றி ஐயா தகவலுக்கு .நான் மீண்டும் முயற்சித்துப் பார்த்தேன் .COM என்று இருப்பது எமக்கு CH என்றே காட்டுகின்றது .இடையில் GOOGLE ஏற்படுத்திய மாற்றத்தின் பின்னர் இவ்வாறு தளங்கள் ஆடும் ஆடி முடித்தபின் சேவை துண்டிக்கப் பட்டு விடும் .இதற்குத் தீர்வு சொல்கின்றார் எங்கள் ப்ளாக்கர் நண்பன் .துள்ளித் திரியும் ப்ளாக் -தீர்வு என்ன ? என்ற தலைப்பில் .இதை எங்கள் சென்னைப் பித்தன் ஐயாவுக்கும் தெரிவிக்க முடிந்தால் மகிழ்ச்சியே
  http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள வலைச்சர ஆசிரியர் Ms. அம்பாள் அடியாள் அவர்களுக்கு,

   வணக்கம்.

   தங்கள் விருப்பப்படி, மேலே உள்ள தங்களின் தகவல்களை திரு. சென்னைப்பித்தன் ஐயா அவர்களுக்கு, அவரின் சமீபத்திய பதிவின், பின்னூட்டப்பெட்டி மூலம் தெரிவித்து விட்டேன்.

   தங்களின் இன்றைய வலைச்சரத்தில் திரு. ரிஷபன் அவர்களுக்கு தாங்கள் கொடுத்துள்ள வேண்டுகோளை, மின்னஞ்சல் மூலமும், பின்னூட்டப்பெட்டி மூலமும் என் அருமை நண்பர் ரிஷபன் அவர்களுக்கும் தெரிவித்து விட்டேன்.

   இது தங்கள் தகவலுக்காக மட்டும்.

   அன்புடன்
   VGK

   E-mail ID : valambal@gmail.com

   நீக்கு
 17. ஆன்மீகத்தினூடாக அருமையான தகவல்களை வழங்கிச் செல்கின்றீர்கள் .பார்ப்பதற்கு மிகவும் பெருமையாக உள்ளதையா .வாழ்த்தும் வயது எனக்கில்லை ஆதலினால் இப் பகிர்வுக்குத் தலை வணங்கி நிற்கின்றேன் .மிக்க நன்றி ஐயா
  பகிர்வுகளுக்கு .

  பதிலளிநீக்கு
 18. // நிலையான சொத்தாகிய, என்றும் அழிவில்லாத பிரம்மானுபவத்தைத் தருபவர் “குரு” தான். //

  இதனால்தான் பிச்சை புகினும் கற்கை நன்று என்றார்கள்.

  பதிலளிநீக்கு
 19. நல்ல குரு அமைவது ஒரு வரம் என்றால் அந்த குருவுக்கு சிஷ்யர்கள் அமைவது மற்றொரு வரம்தான். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி சார்.

  புரந்தரகேசவலுவின் அழுகைக்குக் காரணம் என்னவாக இருக்கும்? தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. Very beautiful explanation with aanmeegam... All the post in Amutha mazai is simply superb...

  பதிலளிநீக்கு
 21. //தானும் கரை சேர்ந்து பிறரையும், கரை சேர்ப்பிக்கிற பிரம்ம ஞானி தான் குரு.// Thoni PondRavar guru enRu thaan kElvippatrikkEn. Ithuvum nalla than irukku!

  பதிலளிநீக்கு
 22. புரந்தர கேசவலு கேட்டது என்ன? அறியும் ஆவலில் நானும்....

  பதிலளிநீக்கு
 23. நிலையான சொத்தாகிய, என்றும் அழிவில்லாத பிரம்மானுபவத்தைத் தருபவர் “குரு” தான். //

  உண்மை!

  பதிலளிநீக்கு
 24. கொஞ்சம் கொஞ்சமாக எழுதி எதிர்பார்ப்பை எகிற வைக்கிறீர்கள். அய்யா.நன்றி

  பதிலளிநீக்கு
 25. குரு பூர்ணிமாவுக்கு மறுநாள் வந்திருக்கும் இந்தப் பதிவில் குருவின் பெருமையை ஆசாரியாரின் அமுதமொழிகள் மூலம் காட்டியமைக்கு நன்றி. அன்று எங்களுக்கும் குருவின் பெருமை பற்றி அறிய நேர்ந்தது. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 26. குருவானவர் எப்படிப்பட்டவராக இருப்பார்? எப்படித் தேடி அமைத்துக் கொள்ள வேண்டும். நல்ல அருமையான தகவல்கள்.
  புரந்தர கேசவலு மிகவும் கொடுத்து வைத்தவன். சின்ன வயதிலேயே
  குருவின் கடாக்ஷத்திற்குப் பாத்திரமானவன். ஆசாரிய தேவோ பவ
  அவனுக்குக் கிடைத்தது. அருமை. அன்புடன்

  பதிலளிநீக்கு
 27. கூடத்தில் அமர்ந்து ஸ்வாமிகள் ரஸித்துக்கேட்டார். அவன் குரல் மிக இனிமையாக இருந்தது.

  அவன் பாடும்போது ஏற்படுகிற உச்சரிப்புப் பிழைகளை, சரியாக உச்சரித்துத் திருத்தினார் ஸ்வாமிகள்.//

  என்ன ஒரு குடுப்பினை. நல்ல குருவைத் தேடி அலைவார்கள். ஆனால் இந்தச் சிறுவனுக்கு எப்படி ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்லெண்ணம் கண்டிப்பாக நல்லதைத்தான் கொண்டு சேர்க்கும்.

  //அவனைப் பார்த்து வாஞ்சையுடன் சிரித்தார் பரப்பிரம்மம்.//

  புரந்தர கேசவலுவின் ஜென்மம் சாபல்யமாயிற்று.

  பதிலளிநீக்கு
 28. நல்ல குரு அமைவதே கோடி புண்யம்.

  அதற்குள்ளும் தொடரும் போட்டுவிட்டீங்களே

  பதிலளிநீக்கு
 29. அமுத மொழிகள் அருமை. கேவி கேவி அழும் புரந்தரகேசவலு என்ன சொல்லப் போகிறார்....

  பதிலளிநீக்கு


 30. //தாயார், தகப்பனார் இந்த உலகத்தில் பிறப்பைக் கொடுத்து இந்த உலகத்தில் நன்றாக வாழப்பண்ணி, இந்த உலகத்திற்கான சொத்தைக் கொடுப்பார்கள்.

  ஆனால் இவையெல்லாம் நிலையில்லாத சொத்துக்கள். நிலையான சொத்தாகிய, என்றும் அழிவில்லாத பிரம்மானுபவத்தைத் தருபவர் “குரு” தான். //

  எப்படியோ இதில் கமெண்ட் விட்டுப்போய் விட்டது..

  நல்ல குருவும்,சிஷ்யரும் கிடைப்பது இறைவன் கொடுத்த வரம்...பகிர்வுக்கு நன்றி ஐயா!!

  பதிலளிநீக்கு
 31. அன்பின் வை.கோ - நிலையான சொத்து தருபவர் குரு - பதிவு நன்று - 21 நாட்கள் முடிந்து ஊரை விட்டு ஸ்வாமிகள் புறப்படும் போது - அச்சிறுவன் அழுது கொண்டிருப்பதைக் கண்டு அழைத்து பார்த்து வாஞ்சையுடன் சிரித்தார் - சஸ்பென்ஸ் - அடுத்த பதிவில் பார்ப்ப்பொம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 32. வெள்ளி செவ்வாய்களில் நானும் காயத்ரி மந்திரம் படிப்பதுண்டு. கதைக்கு இன்னும் முடிவு வருகுதில்லை.. ஒரே சஸ்பென்ஸ் வைத்தே எழுதுறீங்க.

  பதிலளிநீக்கு
 33. சிறுவனின் இரண்டாவது ஆசை என்னவாக இருக்கும்?

  பதிலளிநீக்கு
 34. சிறுவனின் மீது குருவின் அருள் பார்வை விழுந்து விட்டது. இனி அவனுக்கு குறையொன்றுமில்லை

  பதிலளிநீக்கு
 35. என்னாச்சி அந்த பயபுள்ள எதுக்கு அப்படி அளுகுது

  பதிலளிநீக்கு
 36. அவன் என்ன கேக்கப்போறான். எதிர்பார்ப்புடன நாங்களும்.....

  பதிலளிநீக்கு
 37. தானும் கரை சேர்ந்து பிறரையும், கரை சேர்ப்பிக்கிற பிரம்ம ஞானி தான் குரு.// எளிமையாக புரியவைத்த விளக்கம்..

  பதிலளிநீக்கு
 38. மனதில் உண்மையான பக்தியும் அன்பும் பெரியவாளிடம் புரந்தர கேசவலு வைத்திருந்ததால் அதன் வெளிப்பாடுதான் அவன் கண்களில் கண்ணீரை வரவழைத்ததோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. happy November 12, 2016 at 6:10 PM

   //மனதில் உண்மையான பக்தியும் அன்பும் பெரியவாளிடம் புரந்தர கேசவலு வைத்திருந்ததால் அதன் வெளிப்பாடுதான் அவன் கண்களில் கண்ணீரை வரவழைத்ததோ..//

   இருக்கலாம்.....டா, ஹாப்பிப் பொண்ணே .... மேற்கொண்டு படித்துப்பார் தெரியும். :)

   நீக்கு
 39. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (06.06.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=409376696231697

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு