About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, July 3, 2013

19] மதங்கள் வேறு பட்டாலும் மனம் ஒன்று படட்டும்


2
ஸ்ரீராமஜயம்




மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும் நடைமுறைகளில் சில வித்தியாசங்கள் இருப்பதில் தவறில்லை. 

எல்லா மதங்களையும் ஒரே போல ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. 

ஒரே மாதிரி ஆக்காமல் எல்லா மதத்தினரும் மனதில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்.

நல்லொழுக்கம், நல்ல தவம், சாந்தம், கருணை நிரம்பியவர்களை உண்டு பண்ணுவதே நம் மதம் தழைக்க வழி. 

எதிர் பிரச்சாரம் எதுவுமே வேண்டாம். 

முதுநெறிகளை உயிரோடு வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கிற பிரதிநிதிகள் தான் வேண்டும்.

இவர்களால்தான் இதுவரை காலம் காலமாக நம் மதம் உயிரோடிருந்து வந்திருக்கிறது. 

இனி மேலும் இப்படிப்பட்டவர்களால் தான் அது உயிர் வாழ வேண்டும்.

oooooOooooo


அதிசய நிகழ்வு 

நெஞ்சை உருக்கும் சம்பவம்

மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா! 


முன் கதை பகுதி- 1 of 10   

முன் கதை பகுதி- 2 of 10 

முன் கதை பகுதி- 3 of 10    

முன் கதை பகுதி- 4 of 10  

முன் கதை பகுதி- 5 of 10  

முன் கதை பகுதி- 6 of 10  

முன் கதை பகுதி- 7 of 10  

http://gopu1949.blogspot.in/2013/06/17.html

முன் கதை பகுதி- 8 of 10  ..... தங்கள் நினைவுக்காக 
http://gopu1949.blogspot.in/2013/07/18.html

”கண்ணுலேர்ந்து தாரையா நீர் வழிய, ”அப்பா ஜோதி மஹாலிங்கம்! நா ஒன்னோட பரம பக்தன். பால்யத்திலேந்து எத்தனையோ தடவ ஒன் சந்நதியிலே மஹன்யாச ஸ்ரீருத்ரம் ஜபிச்சிருக்கேன். நீ கேட்டிருக்கே. இப்போ நேக்கு எண்பளத்தோரு வயசாறது. மனசுலே பலமிருக்கு. வாக்குலே அந்த பலம் போயிடுத்துப்பா ! 



இன்னிக்கு மத்யானம் சாப்டறச்சே நடந்தது நோக்குத் தெரியாமல் இருக்காது. அந்த சர்க்கரைப் பொங்கல் ரொம்ப ரொம்ப ருசியாக இருந்ததேன்னு, இன்னும் கொஞ்சம் போடுங்கோன்னு, வெக்கத்தைவிட்டு, அந்த மிராசுதார்ட பலதடவை கேட்டேன். அவர் காதுலே விழுந்தும், விழாது மாதிரி நகர்ந்து போய்ட்டார். 


நேக்கு சர்க்கரைப் பொங்கல்ன்னா உசிருன்னு நோக்குத்தான் தெரியுமே! சபலப்பட்டுக் கேட்டும் அவர் போடலியேன்னும்  அப்போ ரொம்பத் தாபப்பட்டேன். 

ஆனா சாப்புட்டு கையலம்பிண்டு வாசத்திண்ணைக்கு வந்து ஒக்காந்தபுபறம்தான், ’இப்படியொரு ஜிஹ்வா சபலம்  [பதார்த்தத்தில் ஆசை] இந்த வயசிலே நமக்கு இருக்கலாமான்னு தோணித்து. 

அப்பா ... மஹாலிங்கம், இப்போ அதுக்காகத்தான் நோக்கு முன்னாடி வந்து நிக்கறேன். ஒன்னை மத்யஸ்தமா வெச்சுண்டு இந்த க்ஷணத்திலேந்து ஒரு பிரதிக்ஞை பண்ணிக்கறேன். 

எல்லோரும் காசிக்குப்போனா தனக்குப் பிடிச்ச பதார்த்தத்தை விட்டுடுவா.  காசியிலேயும் நீ தான், இங்கேயும் நீ தான். அதனால உனக்கு முன்னாலே இப்போ சொல்றேன்; இனிமே என் சரீரத்தைவிட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சர்க்கரைப் பொங்கலையோ அல்லது வேறு எந்த திதிப்பு வஸ்துக்களையோ தொடவே மாட்டேன்! இது சத்தியம்டாப்பா .... மஹாலிங்கம்’னு வைராக்யப் பிரமாணம் பண்ணிண்டு, ‘அப்பா ஜோதி மஹாலிங்கம், நா ஒங்கிட்ட உத்தரவு வாங்கிக்கறேன்’னு சொல்லி பன்னிரண்டு சாஷ்டாங்க நமஸ்காரங்கள் பண்ணினார்.    கனபாடிகள் கண்ணுலேந்து பொலபொலன்னு கண்ணீர். ஊருக்குப் பொறப்டுட்டார். 

இப்போ சொல்லு நீ பண்ணின கார்யம் தர்மமா? மஹாலிங்க ஸ்வாமி ஒத்துப்பாரா? ” பெரியவா நிறுத்தினார்.

அப்போது மதியம் மூன்று மணி. ”நேக்கு இன்னிக்கு பிக்ஷை வேண்டாம்” என்று சொல்லிவிட்டார் ஸ்வாமிகள். அங்கிருந்த ஒருவருமே நகரவில்லை. சாப்பிடவும் போகவில்லை. அமைதி நிலவியது. அனைவரது கண்களிலும் நீர். 



மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் பிரமித்துப்போய் நின்றிருந்தார். அவருக்குப்பேச நா எழவில்லை. பக்தர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. 

‘நேற்றையதினம் திருவிடைமருதூர் க்ஷேத்ரத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும், உடன் இருந்து நேரில் பார்த்த மாதிரி பெரியவா சொல்றாளே! இது எப்படி? என அனைவரும் வியந்தனர். 





[பகுதி 9 of 10


பெரியவா கால்களில் அப்படியே விழுந்தார் மிராசுதார். கேவிக்கேவி அழ ஆரம்பித்து விட்டார். அவர் நா தழுதழுத்தது. 

“பெரியவா, நா பண்ணினது மஹா பாபம்! அகம்பாவத்தில் அப்படிப் பண்ணிப்புட்டேன். என்னை மன்னிச்சிடுங்கோ. இனி என் ஜென்மாவில் இப்படி நடந்துக்கவே மாட்டேன். *மன்னிச்சுட்டேன்னு சொல்லணும் பெரியவா*” என்று கன்னத்தில் அறைந்து கொண்டார் மிராசுதார். 


ஆசார்யாள் வாய் திறக்கவில்லை. விடவில்லை மிராசுதார்


“பிரார்த்திக்கிறேன் பெரியவா! நீங்க இந்த மஹாலிங்க ஸ்வாமி பிரஸாதத்தை ஸ்வீகரித்துக்கொள்ளணும்; என்னை மன்னிச்சுடுங்கோ” என்று பிரஸாதத்தட்டை நோக்கிக் கைகளைக் காண்பித்தார்.


உடனே ஆச்சார்யாள் “இருக்கட்டும் .... இருக்கட்டும். எனக்கு அந்த மஹாலிங்க ஸ்வாமியே பிரஸாத அனுக்ரஹம் பண்ணுவார்” என்று சொல்லி முடிப்பதற்குள் ..... “நகருங்கோ ... நகருங்கோ” என்று ஒரு குரல்  கூட்டத்துக்கு வெளியே கேட்டது. 


எல்லோரும் விலகி வழிவிட்டனர். தலையில் கட்டுக்குடுமி,  பளிச்சென்ற பஞ்சக்கச்ச வேஷ்டி, இடுப்பில் பச்சைப்பட்டு வஸ்திரம், கழுத்தில் பெரிய ருத்ராக்ஷமாலை, பட்டுத்துணியில் பத்திரப்படுத்தப்பட்ட பிரஸாதத்தை ஒரு பித்தளைத் தட்டில் வைத்து, கைகளில் பக்தியோடு ஏந்தியபடி, சுமார் அறுபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர்,  பெரியவாளுக்கு அருகே வந்து சேர்ந்தார். 


பிரஸாதத்தட்டைப் பெரியவாளுக்கு முன்பு பெளயமாக சமர்பித்துவிட்டு, ”எம் பேரு மஹாலிங்கம், திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி கோயில் அர்ச்சகர். நேத்திக்கு ஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. ஒரு மிராசுதார் நடத்தினார். இந்தூர்ல தான் எங்க அக்காவை [சகோதரி] கல்யாணம் செய்து கொடுத்திருக்கு.ஆச்சார்யாளுக்கும் இந்தப் பிரஸாதத்தைக் கொடுத்துட்டு,  அவளையும் பார்த்துட்டுப்போகலாம்னு வந்தேன். நமஸ்காரம் பண்ணிக்கிறேன். பெரியவா அநுக்ரஹிக்கணும்” என்று நமஸ்காரம் பண்ணப்போனவரைத் தடுத்தார் ஸ்வாமிகள்.


”நீங்களெல்லாம் சிவதீக்ஷை வாங்கிண்டவா. நமஸ்காரம் பண்ணப்படாது” என்று சொன்னப்பெரியவா, அவர் கொண்டுவந்த பிரஸாதங்களை ஸ்வீகரித்துக்கொண்டு, சிவாச்சாரியாருக்கு மடத்து மரியாதை செய்யச்சொன்னார்.


அதற்குள் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த மிராசுதாரைப் பார்த்து விட்டார், சிவாச்சாரியார். 


“பெரியவா! இவர் தான் நேற்று அங்கே ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சவர். அவரே இங்கே வந்திருக்காரே!” என்று ஆச்சர்யத்துடன் கூறிவிட்டு, உத்தரவு பெற்றுக்கொண்டு போயே விட்டார், அந்த மஹாலிங்கம் சிவாச்சாரியார்.  


ஆச்சார்யாளை மீண்டும் ஒருமுறை நமஸ்கரித்து எழுந்து கன்னத்தில் போட்டுக்கொண்ட மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர், ”திரும்பத் திரும்பப் பிரார்த்திக்கிறேன் பெரியவா ... நா பண்ணினது ரொம்பப் பெரிய பாவகாரியம் தான்! இதுக்கு நீங்கதான் ஒரு பிராயச்சித்தம் சொல்லணும்” என்று மன்றாடினார். 



தொடரும்

oooooOooooo



அன்புத்தம்பி 
திரு. அஜீம்பாஷா அவர்களின் 
திடீர் வருகை.

எங்கள் திருச்சியைச் சேர்ந்தவரும், என் எழுத்துக்களின் ரஸிகருமான  திரு. அஜீம்பாஷா அவர்கள் என் இல்லத்திற்கு திடீர் விஜயம் செய்து என்னை சந்தித்துச்சென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. 

அவர் குடும்பம் [மனைவி + 1 பெண் குழந்தை + 2  பிள்ளைக் குழந்தைகள்] திருச்சியில் தென்னூர் அண்ணா நகரில் இருப்பதாகவும், இவர் மட்டும் செளதி அரேபியாவில் பணியாற்றி வருவதாகவும் சொன்னார். 

விடுமுறைக்குத் தன் குடும்பத்தைக்காண திருச்சிக்கு வந்துள்ள இவர், என்னை இதற்கு முன்பு பார்த்ததும் இல்லை. போனில் பேசியதும் இல்லை. ஆனால் எப்படியோ என் பதிவுகளைப் படித்ததன் மூலம் என் வீட்டை மிகச்சரியாக அடையாளம் கண்டுபிடித்து, நேற்று 02.07.2013 மதியம் 11.30 மணி சுமாருக்கு, என் இல்லத்தின் அழைப்பு மணியை அடித்து, என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டார்.



அன்புத்தம்பிக்கு என் கையொப்பமிட்ட 
என் சிறுகதைத் தொகுப்பு நூல் ஒன்று
அன்புப்பரிசாக அளிக்கப்பட்டது.


திரு. அஜீம் பாஷா அவர்கள்.


திரு. அஜீம்பாஷா அவர்கள் என் பதிவுகளுக்குக் கொடுத்துள்ள பின்னூட்டங்களில் ஒருசில மட்டும் இதோ உங்கள் பர்வைக்காக:


ரொம்ப நன்றி சார், உங்கள் ஜன்னல் பதிவு மூலமாக என் மாணவ பருவத்தின் நினைவுகளை நியாபகப்படுத்தி விட்டிர்கள். நான் ஈ ஆர் ஹைஸ்கூல்லில் படித்த காலத்தில் என்.எஸ்.பி ரோட்டிற்கு போவதற்கு நாங்கள் இந்த ஆண்டார் தெருவில் உள்ள எல்லா சந்துகளிலும் புகுந்து வருவோம். ரமா கபேக்கு ஒவ்வொரு வருடம் லீவுக்கு வரும்போதும் தவறாமல் நான் மாலை டிபன் சாப்பிட வருவதுண்டு. வாணப்பட்டரை மூலையில் RTC ஹோட்டல் இருந்தது இங்கு சாம்பார் மிக சுவையாக இருக்கும். அப்படியே நந்தி கோவில் தெருவில் வந்தால் சர்ச்க்கு எதிர்புறம் ஒரு பால்கோவா கடை இருக்கிறது. அங்கு பால்கோவா மிக அருமையாக இருக்கும்.


எப்போ வந்தாலும் இவ்வளவு நொறுக்கு தீனி கிடைக்குமா, இருங்க வரும் ஜூன்லே லீவுலே ஊருக்கு வரும் போது என் பசங்களையும் கூட கொண்டு வந்து எல்லாத்தையும் ஒரு கை பார்க்க சொல்கிறேன்.

சகோதரர் ரிஷபன் சொன்ன கருத்துதான் நூறு சதவீதம் சரி. நீங்கதான் சார் எங்க பொக்கிஷம் .

"எனக்குப் பொக்கிஷமாகத் தோன்றுபவையெல்லாம் உங்களுக்கும் பொக்கிஷமாகத் தோன்றும் என நான் நினைக்கவே முடியாது. பொக்கிஷங்கள் அவரவர் பார்வையில், எண்ணங்களில், உணர்வுகளில், மதிப்பினில் வேறுபடக்கூடியவைகளே! "

என்ன இப்படி சொல்லிட்டிங்க சார், ஏறக்குறைய நாங்க எல்லாம் உங்களை மாதிரிதான் சார், உங்க பதிவை படித்து நாங்க எழுதியதாக நினைத்து சந்தோசப்படுகிறோம். எங்களை உங்கள் குடும்ப அங்கமாக நினைத்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .



நான் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல், அன்புத்தம்பி திரு. அஜீம்பாஷா அவர்களால், எனக்கு அளித்துச் செல்லப்பட்டுள்ள ஒருசில அன்புப் பரிசுகள். [பேசீச்சம்பழங்கள், செண்ட் ஸ்ப்ரேயர், தலைவலி மூட்டுவலி மருந்துகள் / களிம்புகள் முதலியன.] 

அவர் என்னிடமிருந்து விடைபெற்று புறப்பட்டுச்சென்றபின், நான் ஸ்ப்ரே செய்து பார்த்த செண்டின் நறுமணத்தில், செண்டிமெண்டாக அவரின் நட்பின் ஆழமும் கலந்துள்ளது என்பதை என்னால் நன்கு உணர முடிந்தது. 

அன்புடன் வருகை தந்து மகிழ்வித்துச்சென்ற 

திரு. அஜீம்பாஷா அவர்களுக்கு 

என் மனமார்ந்த இனிய நன்றிகள்.





ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 05.07.2013 
வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்.


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

48 comments:

  1. ஆன்மிக மழையில் நனையவைக்கிறீர்கள்..உங்கள் ஆன்மிகப்பணி தொடரட்டும்

    ReplyDelete
  2. தங்களை சந்தித்து மகிழ்ந்த நண்பர் திரு. அஜீம்பாஷா அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய வாழ்த்துகள்.. சந்திப்புகள் தொடரட்டும்..

    ReplyDelete
  3. எல்லா மதத்தினரும் மனதில் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் - சிறப்பான ஆரம்பம்...

    பிராயச்சித்தம் கிடைத்ததா...? அறிய ஆவலுடன்...

    திரு. அஜீம்பாஷா அவர்களின் இனிய சந்திப்பு மனம் கவர்ந்து மணத்தது...

    வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
  4. எல்லா மதத்தினரும் மனதில் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் - சிறப்பான ஆரம்பம்
    To proove it Thiru Bashas visit.
    How nice to hear and see.
    We too felt happy seeing Basha with you.
    Then what was the prayasidam to that mirasudar?
    viji

    ReplyDelete
  5. நல்ல மனங்களுக்கு இல்லை மதம்...

    ReplyDelete
  6. பெரியவாளைப்பற்றிய செய்திகள் பிரமிக்க வைக்கிறது! அன்பு நண்பரின் வருகையையும் பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி சார்! தொடர்கிறேன்! பிராயச்சித்தம் என்ன ஆயிற்று என்பதை அறிந்துகொள்ள! நன்றி!

    ReplyDelete
  7. இனிமே என் சரீரத்தைவிட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சர்க்கரைப் பொங்கலையோ அல்லது வேறு எந்த திதிப்பு வஸ்துக்களையோ தொடவே மாட்டேன்! இது சத்தியம்டாப்பா .... மஹாலிங்கம்’னு வைராக்யப் பிரமாணம் பண்ணிண்டு, ‘அப்பா ஜோதி மஹாலிங்கம், நா ஒங்கிட்ட உத்தரவு வாங்கிக்கறேன்’//

    மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறது.

    //எல்லா மதத்தினரும் மனதில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்.//

    ஆம், உண்மை.
    பதிவர் சந்திப்பு அருமை.

    திரு. அஜீம்பாஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நல்லொழுக்கம், நல்ல தவம், சாந்தம், கருணை நிரம்பியவர்களை உண்டு பண்ணுவதே நம் மதம் தழைக்க வழி.

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம் பொழியும் வரிகள்..!

    ReplyDelete
  9. அவர் என்னிடமிருந்து விடைபெற்று புறப்பட்டுச்சென்றபின், நான் ஸ்ப்ரே செய்து பார்த்த செண்டின் நறுமணத்தில், செண்டிமெண்டாக அவரின் நட்பின் ஆழமும் கலந்துள்ளது என்பதை என்னால் நன்கு உணர முடிந்தது.

    பதிவை மணக்கவைத்த அஜீம் பாஷா
    அவர்களின் சந்திப்புக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  10. ஆச்சார்யாள் “இருக்கட்டும் .... இருக்கட்டும். எனக்கு அந்த மஹாலிங்க ஸ்வாமியே பிரஸாத அனுக்ரஹம் பண்ணுவார்” என்று சொல்லி முடிப்பதற்குள் ..... “நகருங்கோ ... நகருங்கோ” என்று ஒரு குரல் கூட்டத்துக்கு வெளியே கேட்டது.

    பெரியவா ஸ்வீகரித்துக்கொண்ட பிரஸாதங்கள், வியப்பளித்தன..

    ReplyDelete
  11. //ஒரே மாதிரி ஆக்காமல் எல்லா மதத்தினரும் மனதில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்.// உண்மையான கருத்து.

    நல்லொழுக்கம், நல்ல தவம், சாந்தம், கருணை நிரம்பியவர்களை உண்டு பண்ணுவதே நம் மதம் தழைக்க வழி// எல்லாம் மதமும் அன்பை வலியுறுத்தி சொல்கிறது.
    கதை வெகு சுவாரஸ்யமாக செல்கிறது மிராசுதருக்கு என்ன நடந்தது? என்பது உட்பட பலகேள்விகள்.
    உங்க சந்திப்புக்கள் தொடரட்டும்.வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  12. Great men see unity in diversity
    Greed men see diversity in unity

    ReplyDelete
  13. அகம்பாவத்திற்கு ஆண்டவன் சன்னிதியில் இடமில்லை என்று சொல்லாமல் சொன்ன கருணையுள்ளம்..

    தொடர் அருமையாப்போகுது.

    ReplyDelete
  14. மதநல்லிணக்கம் அவசியம்.உங்கள் நண்பரின் வரவு நல்வரவு.
    நட்பு,வலைநட்பு,மரியாதை, ஒரு நல்ல அன்புள்ளம். ஒரே ஊர்ப்பாசமும் காவிரி தண்ணீரு்ம். ருசியானது.
    பெரியவாளுக்கு திருவிடைமருதூர் ப்ரஸாதம், அவர்தம் பெயர் கொண்டவரே வந்து கொடுப்பது எவ்வளவு ஸிலாக்யமாக இருக்கு.
    பக்தி மணம், கமழுகிரது. அன்புடன்

    ReplyDelete
  15. தங்கள் பதிவுகளைப் படிக்கிற
    அனைவருக்கும் தங்கள் வீடும்
    தெருவும் நிச்சயம் தெரியும்

    தங்கள் ஆன்மீக சிந்தனைகளும் பதிவுகளும்
    மதம் கடந்தது என்பதற்கு இது கூட
    ஒரு சிறந்த அத்தாட்சி

    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. //ஒரே மாதிரி ஆக்காமல் எல்லா மதத்தினரும் மனதில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்.//

    இப்படி இருந்து விட்டால் அமைதியான உலகம் அமையும்!

    ஆமாம் என்ன எல்லோரும் திருச்சிக்கு படை எடுத்து கொண்டே இருக்கிறார்கள்... நாங்களும் ஒரு நாள் வேலூர் கோட்டையிலிருந்து படை எடுத்து வருவோம் ஜாக்கிரதை சார்...!

    ReplyDelete
  17. மிராசுதார் கதறிய காட்சியைப் படித்தவுடன் “ காரொளி வண்ணனே! கண்ணனே கதறுகின்றேன் ” - என்ற வரிகள்தான் ஞாபகம் வந்தன.

    // எங்கள் திருச்சியைச் சேர்ந்தவரும், என் எழுத்துக்களின் ரஸிகருமான திரு. அஜீம்பாஷா அவர்கள் //

    உங்களுக்கு அவர் மட்டுமா? ... ... ஜாதி, மதம் இவைகளுக்கு அப்பாற்பட்டு ஏகப்பட்ட ரசிகர்கள். இதுவும் ஒரு சாதனைதான்.


    // அன்புடன் வருகை தந்து மகிழ்வித்துச் சென்ற திரு. அஜீம்பாஷா அவர்களுக்கு .என் மனமார்ந்த இனிய நன்றிகள். //

    உங்கள் வீட்டிற்கு அவர் வந்து இருந்தபோது, உங்கள் செல்போனிலேயே அவரை என்னிடம் பேசச் சொல்லியமைக்கு நன்றி! அவருக்கு எனது வாழ்த்துக்கள்!

    நேற்று (03.07.2013) உங்களது திருமண நாள்! நேற்றே நேரில் மூத்த பதிவர் திரு GMB அவர்களின் சந்திப்பின்போது சொல்லி விட்டேன்! இருந்தாலும் மறுமுறையும் இந்த பதிவின் வழியாக தெரிவித்துக் கொள்கிறேன்!




    ReplyDelete
  18. கண்ணீரே வந்துவிட்டது. என்ன ஒரு வைராக்கியம் பாருங்க. பரமாசாரியார் இருந்த இடத்தில் இருந்தே எல்லாமும் அறிந்து வைத்திருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. இதை ஏற்கெனவே படிச்சிருக்கேன். என்றாலும் மீண்டும் படிக்கக் கொடுத்ததுக்கு நன்றி.

    நேற்று உங்க திருமணநாளா? தொலைபேசியில் பேசினப்போ சொல்லவே இல்லையே? அதனால் என்ன? மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் இதே சுறுசுறுப்பும் ஆவலும், ஆர்வமும் நிறைந்திருக்கப் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  19. உங்கள் வீட்டிற்கு வருகை புரிந்த அஜீம் பாஷா அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. மிராசுதார் மன்னிக்கப்பட்டிருப்பார் என்றே நினைக்கிறேன்.நல்ல சம்பவம். அவருடைய ஈகோ எங்கோ போய் விட்டிருக்கும்.
    உங்களுக்கும் சகோதரர் திரு.அஜீம் பாஷா அவர்களுடைய சந்திப்பை உங்கள் ஸ்டைலில் அழகாக எழுதி அசத்தியிருக்கிறீர்கள்.
    இந்தத் தொடரை ஆர்வத்துடன் படித்து வருகிறேன்.

    ReplyDelete
  21. நல்ல பகிர்வு...
    உங்கள் வாசகராய்... ரசிகராய்... வந்திருந்து உங்கள் சிறுகதைத் தொகுப்பைப் பெற்றுச் சென்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  22. முதலில் திருமண நாள் நல்வாழ்த்துகள் உங்களுக்கும், வாலாம்பா மாமிக்கும்.

    மத நல்லிணக்கம் பற்றி மகா பெரியவாளின் கருத்துக்களை எல்லோரும் கடைபிடித்தால் எவ்வளவோ சண்டைகளைத் தவிர்க்கலாமே.

    மஹா பெரியாவாளுக்கு அந்த மஹாலிங்க ஸ்வாமியே பிரசாதம் கொண்டு வந்து கொடுத்திருப்பாரோ?

    ReplyDelete
    Replies
    1. திரு அஜீம் பாஷாவை சந்தித்ததை - அவர் உங்கள் பதிவுகளுக்குப் போட்ட பின்னூட்டங்களையே வைத்து கலக்கலாக எழுதிவிட்டீர்கள். திரு அஜீம் பாஷாவிற்கு வாழ்த்துக்கள்.

      Delete
  23. திருமணநாள் வாழ்த்துகள் கோபு சார்.ஆரோக்கியமும் சர்வமங்களுங்களும் நிறைந்து இருக்க வேண்டும்.
    இதே நிகழ்வை படித்திருந்தாலும் மீண்டும் படிக்கவைத்தத்ற்கு மிகவும் நன்றி. பெரிவா அநுக்கிரஹம் எப்பொழுதும் நிறைந்திருக்கணும்.,

    ReplyDelete
  24. நட்பின் வருகையை அழகாய் பதிவு செய்த விதம் உங்கள் தனித்துவம்.

    ReplyDelete
  25. தாமதமான திருமண நாள் வாழ்த்துகள் சார். உங்கள் இருவரின் ஆசீர்வாதம் எங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்.

    பெரியவாளின் செயலை நினைத்து மெய் சிலிர்க்க வைத்து விட்டது.

    பதிவர் சந்திப்பு குறித்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  26. ஆம் உண்மைதான் ஐயா நல்ல மனங்களுக்கு மதம் இல்லை தான்...தங்கள் நட்பு தொடரட்டும் ஐயா!!

    தாமதமான இனிய மணநாள் வாழ்த்துக்கள் ஐயா!! வணங்குகிறேன்...

    ReplyDelete
  27. திருமண நாள் நல்வாழ்த்துகள்....

    மத நல்லிணக்கம் பற்றிய பதிவு நன்று.

    தொடர்ந்து பதிவர்கள் உங்களைச் சந்திப்பது அறிந்து மனதில் மகிழ்ச்சி.....

    தொடரட்டும் பதிவுகள். நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
  28. மிராசுதாருக்கு பாவ மன்னிப்பு கிடைத்ததா?

    ஆவலில் நாங்கள்.

    தாமதமான திருமண நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும், வாலாம்பா மன்னிக்கும்.

    இப்படி பதிவர்களாவது வந்து சந்திப்பது காதில் புகை வருகிறது எனக்கு. நான் எப்ப வந்து உங்களையும், மன்னியையும் சந்திப்பது. விரைவில் அதற்கு மகா பெரியவாள்தான் ஏற்பாடு செய்யணும். அவர் காதில் போட்டு விட்டேன். அவர்தான் அருள் புரியணும்.

    ReplyDelete
  29. இனிய திருமண நாள் வாழ்த்துகள். மத நல்லிணக்கம் அவசியம்.

    நண்பர் சந்திப்பு மிக்க மகிழ்ச்சி .வாழ்த்துகள்.

    ReplyDelete
  30. எல்லா மதங்களையும் ஒரே போல ஆக்க வேண்டிய அவசியம் இல்லை.
    ஒரே மாதிரி ஆக்காமல் எல்லா மதத்தினரும் மனதில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்./அற்புதம்

    இனிய திருமண நாள் வாழ்த்துகள் ஐயா! ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹம் தங்களுக்கு என்றும் உண்டு!

    ReplyDelete
  31. மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும் நடைமுறைகளில் சில வித்தியாசங்கள் இருப்பதில் தவறில்லை.
    அனைத்து மதங்களும் அன்பைத்தானே போதிக்கின்றன.
    நன்றி அய்யா

    ReplyDelete
  32. மிராசுதாரரின் மனத்தை மாற்றி உண்மையை விளங்கச்செய்ய மகாபெரியவர் நிகழ்த்திய அற்புதம் கண்டு வியந்தேன். கனபாடிகளை அவமதித்த அவர் கையால் தொட்ட பிரசாதத்தைத் தவிர்த்ததன் மூலம் கனபாடிகள் பட்ட துயரை மிராசும் அனுபவித்து உணரவைத்துவிட்டார். இனி மிராசுதாரர் தன் வாழ்நாளில் யாருக்கும் அவ்வித கொடுமையைச் செய்யமாட்டார்.

    \\எல்லா மதங்களையும் ஒரே போல ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே மாதிரி ஆக்காமல் எல்லா மதத்தினரும் மனதில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்.\\

    மிக கருத்தாழமிக்க செய்தி. மெய்ப்பிக்கும் வண்ணம் நண்பரின் வருகையும், தங்கள் உபசரிப்பும், பரஸ்பர அன்பின் பரிசுகளும் மனம் நெகிழவைத்தன. பாராட்டுகள் வை.கோ.சார்.

    ReplyDelete
  33. Very good post. Thank you for sharing these high values.Belated Wedding anniversary wishes.

    ReplyDelete
  34. என்ன ஓர் ஆச்சர்யம்!

    இங்கபாருங்கப்பா சார் டீசர்ட்லாம் போட்டு எம்புட்டு வயசு கம்மியா தெரியுறார்.

    ReplyDelete
  35. அன்பின் வை.கோ - பதிவு அருமை - மிராசுதார் கொடுத்த பிரசாத்தை ஏற்க மனமில்லாமால் பெரியவா அவருக்குப் புத்திமதி கூறும் பொழுதே இறையருளால் கோவில் சிவாச்சாரியாரே நேரில் வந்து பெரியவாளுக்கு பிரசாதம் அளித்துச் சென்ற செயல் பதிவில் அருமையாக எழுதப் பட்டிருக்கிறது - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  36. குட்டிக் கதைகள் வழமைபோல் ரசிக்கப்படக்கூடியன.

    திரு. அஜீம்பாஷா அவர்களைச் சந்தித்தமை மகிழ்ச்சி. சொல்லாமல் கொள்ளாமல் கதவைத் தட்டியிருந்தாலும், நீங்கள் முன் ஆயத்தம் இல்லாமல் இருந்தாலும், தவறாமல் அன்பளிப்பு கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    என் மாமியைத்தான் நினைவு படுத்துகிறது.(கணவரின் அம்மா). வீட்டுக்கு ஆர் வந்தாலும், எப்போ வந்தாலும், திரும்பிப் போகும்போது அவர்களின் கையில் எதையாவது கொடுத்தனுப்பினால்தான் அவவுக்கு திருப்பி. ஒன்னுமில்லையெனில், மேசையில் இருக்கும் ஆப்பிள், ஒரேஞ்ஞை பாக்கில் போட்டுக் கொடுப்பா.

    ReplyDelete
  37. பதிவர் சந்திப்பு அருமை.

    ReplyDelete
  38. நல்ல சந்திப்பு. ஆண்டார் தெரு கொடுத்து வைத்தது.

    ReplyDelete
  39. ஆன்மீக பதிவுகள படிப்பதில் நாங்களும் நிறய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடிகிறது. நீங்க பெரிய ஆலமரம் போன்றவர்தான் அதான் பல வித பறவைகள( பதிவர்கள) உங்களைத் தேடி வந்து சந்திக்கும் சந்தோஷத்தை அடைகிறார்கள் ஐயாம் ஆல்ஸோ வெயிட்டிங்கு

    ReplyDelete
  40. அந்த கோவிலு பிரசாதமா அது. அப்பாலிக்கா அந்த மிராசுதாருக்கு மன்னாப்பு கெடச்சி போட்டுதா

    ReplyDelete
  41. மிராசுதார் செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்பு கேட்டதும் நம் கருணைக்கடல் சும்மா இருப்பாரா.

    ReplyDelete
  42. மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும் நடைமுறைகளில் சில வித்தியாசங்கள் இருப்பதில் தவறில்லை.

    எல்லா மதங்களையும் ஒரே போல ஆக்க வேண்டிய அவசியம் இல்லை.

    ஒரே மாதிரி ஆக்காமல் எல்லா மதத்தினரும் மனதில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்.

    நல்லொழுக்கம், நல்ல தவம், சாந்தம், கருணை நிரம்பியவர்களை உண்டு பண்ணுவதே நம் மதம் தழைக்க வழி.

    எதிர் பிரச்சாரம் எதுவுமே வேண்டாம். /// எல்லா மதங்களுக்கும் பொருந்தக்கூடிய தத்துவம்...அருமை.

    ReplyDelete
  43. மத்தவா செய்த தப்புக்கு பெரியவா தனக்கு பிஷை வேணாம்னு தண்டனை கொடுத்துக்கறாளே.

    ReplyDelete
    Replies
    1. happy November 1, 2016 at 11:24 AM

      //மத்தவா செய்த தப்புக்கு பெரியவா தனக்கு பிஷை வேணாம்னு தண்டனை கொடுத்துக்கறாளே.//

      அதனால்தான் அவா பெரியவா.

      வேதத்திலும், வேத வித்துக்களிடமும் அவருக்கு எப்போதுமே தனி பிரியமும் மரியாதையும் உண்டு. வேதம் படித்ததோர் முதியவருக்கு இதுபோல ஓர் வருத்தம் ஏற்பட்டுள்ளதை, தன் ஞான திருஷ்டியினால் அப்போது தெரிய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டதால், தானும் ஏதும் சாப்பிடாமல் இருந்துவிடுவது என்று முடிவெடுத்து தன் பிக்ஷையைக்கூட வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

      Delete
  44. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (26.05.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/404132983422735/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete