திருச்சிராப்பள்ளி நகரின் மிகப் பிரபலமான
உச்சிப்பிள்ளையார் கோயிலைச் சுற்றி
தேரோடும் வீதிகள் நான்கு உள்ளன.
அவற்றில் ஆங்காங்கே பல
பிள்ளையார் கோயில்கள் உள்ளன.
அவை பற்றிய மேலும் விபரங்களை
‘ஏழைப் பிள்ளையார்’
என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள சுவையான
http://gopu1949.blogspot.in/ 2011/08/blog-post_28.html
இந்தப் பதிவினில் படிக்கலாம்.
இவற்றில் உச்சிப்பிள்ளையாரிலிருந்து ஆரம்பித்து
பிரதக்ஷணமாகச் சுற்றி வரும் போது ஐந்தாவது
பிள்ளையாராகவும், வடக்கு ஆண்டார் தெருவின்
ஆரம்பத்திலேயே முதல் பிள்ளையாராகவும்
வீற்றிருப்பவர் ஸ்ரீ வரசித்தி விநாயகர்.
மிகப்பெரிய அரசமரத்தின் அடியில் பல நூறு ஆண்டுகளாக
வீற்றிருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த விநாயகர் இவர்.
இந்தப் பிள்ளையாருக்கு 04.12.2016 ஞாயிறு காலை
9.30 to 10.30 மணிக்கு வெகு சிறப்பாக
கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும் கீழும் உள்ள இந்தப் படங்கள்
என் பழைய பதிவிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.
கீழேயுள்ள படங்கள் 03.12.2016 சனிக்கிழமையன்று
[கும்பாபிஷேகத்திற்கு முதல்நாள்]
பாலாலயம் செய்யப்பட்ட ஸ்வாமியை
பிரதிஷ்டை செய்யும் முன்பு எடுக்கப்பட்டவை
கீழேயுள்ள படம், கும்பாபிஷேகத்திற்கான
யாகசாலை பூஜைகள் நடக்குமிடம்
03.12.2016 சனிக்கிழமை எடுக்கப்பட்டது
04.12.2016 ஞாயிறு காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள்
வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நறைபெற்றபோது
எடுக்கப்பட்டுள்ள படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
^தெற்கு பார்த்த மிகச்சிறிய கோயில்
கோபுரத்தின் உச்சி^
^கோபுர உச்சியைக்
கிழக்கு திசையில் மேற்கு நோக்கி நின்று
எடுக்கப்பட்ட புகைப்படம்
EASTERN SIDE VIEW ^
^யாகசாலை பூஜைகள் + ஹோமங்கள்^
^தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் மூலவர்
ஸ்ரீ வரசித்தி விநாயகர்^
^மேற்கு நோக்கி நின்ற நிலையில்
ஸ்ரீ ஆஞ்சநேயர்^
[இந்த மிகச்சிறிய கோயிலின், பிரக்ஷண பாதையில்
கிழக்குச் சுவர்புறம் ..... கிழக்கு நோக்கி
ஸ்ரீ முருகனுக்கு ஓர் சந்நதியும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.]
^ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்கு எதிரே
சமீபத்தில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற
வடக்கு நோக்கி அமைந்துள்ள ஸ்ரீ கருப்பர் கோயில்^
கும்பாபிஷேகத்திற்கு முன் இருந்த கருப்பர் கோயில்
என் பழைய பதிவிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
-சுபம்-
என்றும் அன்புடன் தங்கள்,
[ வை. கோபாலகிருஷ்ணன் ]
புல்லுக்கும் அங்கே பொசியுமாம் என்று அருள் மழையை எங்களுக்கும் பொசிய விட்டுள்ளீர்கள். நன்றி.
பதிலளிநீக்குஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வாங்கோ, வணக்கம்.
நீக்குதங்களின் அன்பான வருகைக்கும் அருள் மழையாகப் பொழிந்துள்ள கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.
பிள்ளையார் கோவில் படங்கள் எல்லாம் அருமை, பேரன் அநிருத் மூலவர் சன்னதி வாசலில் நிற்கும் படமும் அழகு.
பதிலளிநீக்குஉச்சி பிள்ளையார் தரிசனம் செய்தேன் நன்றி.
கோமதி அரசு December 5, 2016 at 8:23 AM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//பிள்ளையார் கோவில் படங்கள் எல்லாம் அருமை, பேரன் அநிருத் மூலவர் சன்னதி வாசலில் நிற்கும் படமும் அழகு. உச்சி பிள்ளையார் தரிசனம் செய்தேன் நன்றி.//
மிக்க மகிழ்ச்சி. முதலில் பேரன் அநிருத் படத்தை மட்டுமே காட்டியிருந்தேன். அதன்பின் அவன் தம்பி (அங்கதன்) ஆதர்ஷ் படமும் இணைத்து வெளியிட்டுள்ளேன்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
அருமை ஐயா...
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் December 5, 2016 at 8:56 AM
நீக்குஅருமை ஐயா...//
வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
கும்பாபிஷேக வைபவ கோயில் புகைப்படங்களுக்கு நன்றி!!
பதிலளிநீக்குmiddleclassmadhavi December 5, 2016 at 9:26 AM
நீக்குகும்பாபிஷேக வைபவ கோயில் புகைப்படங்களுக்கு நன்றி!!//
வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மலைக்கோட்டை கோவில் படம், சில வருடங்களுக்கு முன்பு, மனைவி, குழந்தைகளுடன் சென்றதை ஞாபகப்படுத்தியது.
பதிலளிநீக்குவரசித்தி விநாயகர் கும்பாபிஷேகப் படங்களும் அருமை. கும்பாபிஷேகம் நடந்த தினம் எங்கள் திருமண நாள் என்பதறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி.
'நெல்லைத் தமிழன் December 5, 2016 at 10:56 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//மலைக்கோட்டை கோவில் படம், சில வருடங்களுக்கு முன்பு, மனைவி, குழந்தைகளுடன் சென்றதை ஞாபகப்படுத்தியது. வரசித்தி விநாயகர் கும்பாபிஷேகப் படங்களும் அருமை.//
அருமையான நினைவலைகள் + கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
//கும்பாபிஷேகம் நடந்த தினம் எங்கள் திருமண நாள் என்பதறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி.//
ஆஹா, அப்படியா!! இதை அறிய எனக்கு மும்மடங்கு மகிழ்ச்சியாக உள்ளது. தங்களுக்கும் தங்களின் துணைவியாருக்கும் என் மனமார்ந்த நல்லாசிகள் + இனிய நல்வாழ்த்துகள். வாழ்க !!!
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான + மகிழ்ச்சிகள் நிறைந்த கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.
கோவில் இல்லாஊரில் குடியிருக்க வேண்டா. நம்மூரில் கோவில்களுக்குப் பஞ்சம் இல்லை. சீக்கிரமே பிரசித்திபெற்று விடும்
பதிலளிநீக்குG.M Balasubramaniam December 5, 2016 at 2:37 PM
நீக்குவாங்கோ ஸார், வணக்கம்.
//கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா.//
நல்லது.
//நம்மூரில் கோவில்களுக்குப் பஞ்சம் இல்லை.//
சந்தோஷம்.
//சீக்கிரமே பிரசித்தி பெற்று விடும்//
ஏற்கனவே பிரசித்தி பெற்ற கோயில் மட்டுமே. புதிதாக பிரசித்தி பெற ஒன்றுமே இல்லை. பல்லாண்டுகளுக்குப் பின் இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குஏழைப்பிள்ளையார் என்கிற பெயர் வரக் காரணத்தோடு
பதியப்பட்டிருந்த பதிவு இன்னும் நினைவில் இருக்கிறது
உங்கள் விலாசமாகக் கூட இதுவரை
ஏழைப்பிள்ளையார் தெருவைத்தான்
நினத்து வைத்துள்ளேன்
படங்களுடன் பதிவு மிக மிக அருமை
நேரடியாகத் தரிசித்த திருப்தி
வாழ்த்துக்களுடன்...
Ramani S December 5, 2016 at 5:05 PM
நீக்குவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.
//ஏழைப்பிள்ளையார் என்கிற பெயர் வரக் காரணத்தோடு
பதியப்பட்டிருந்த பதிவு இன்னும் நினைவில் இருக்கிறது
உங்கள் விலாசமாகக் கூட இதுவரை ஏழைப்பிள்ளையார் தெருவைத்தான் நினத்து வைத்துள்ளேன்.//
அப்படியா! சந்தோஷம், ஸார்.
//படங்களுடன் பதிவு மிக மிக அருமை. நேரடியாகத் தரிசித்த திருப்தி. வாழ்த்துக்களுடன்...//
தங்களின் அன்பான வருகைக்கும், திருப்தியுடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.
புகைப்படங்கள் அனைத்தும் அருமை!
பதிலளிநீக்குமனோ சாமிநாதன் December 5, 2016 at 8:21 PM
நீக்குபுகைப்படங்கள் அனைத்தும் அருமை!//
வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
புகைப்படங்கள் அழகு. தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ் December 5, 2016 at 8:39 PM
நீக்குவாங்கோ வெங்கட் ஜி, வணக்கம்.
//புகைப்படங்கள் அழகு. தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜி.
வந்து பார்க்க ஆசைதான். ஆசை மனதில் இருக்கிறது. ஆனால் உடல் நான் சொன்னதைக் கேட்கமாட்டேன் என்கிறது.
பதிலளிநீக்குப.கந்தசாமி December 6, 2016 at 5:42 AM
நீக்குவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.
//வந்து பார்க்க ஆசைதான். ஆசை மனதில் இருக்கிறது. ஆனால் உடல் நான் சொன்னதைக் கேட்கமாட்டேன் என்கிறது.//
அதனால் பரவாயில்லை ஸார். இவ்வாறு ஆசையுள்ள நம்மைப் போன்றவர்களின் வசதிக்காகவே, இன்று பல்வேறு கோயில்களில் உள்ள தெய்வங்கள், இவ்வாறு பதிவுகள் மூலமும், வாட்ஸ்-அப் மூலமும் உடனுக்குடன் நமக்குக் காட்சியளித்து மகிழ்வித்து வருகின்றனர். :)
தங்களின் அன்பான வருகைக்கும், நேரில் வந்து பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
பிள்ளையார் தான் எல்லோருக்குமே நெருக்கமான கடவுளாய் அருள்பாலிக்கிறார். பெருமாள்-- தாயார் தவிர வேறு கடவுள்ர்கள் அறியாத வைணவர்களுக்குக் கூட அவர் தும்பிக்கை ஆழ்வார் என்று நாமம் தரிக்கிறார்.
பதிலளிநீக்குபிள்ளையாரே நம்பர் 1 தெய்வமாய் இருக்கையில் தலைப்பு
ஊர், தெரு என்று வந்து ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேகத்தையும் காட்சிப்படுத்தியது அருமை.
ஜீவி December 6, 2016 at 1:59 PM
நீக்குவாங்கோ ஸார், நமஸ்காரங்கள் + வணக்கங்கள்.
//பிள்ளையார் தான் எல்லோருக்குமே நெருக்கமான கடவுளாய் அருள்பாலிக்கிறார். //
யெஸ் ஸார். இஷ்ட தெய்வம் என்ற முறையில் எனக்கும் இவருடன் எப்போதுமே நெருக்கம் அதிகம்.
//பெருமாள் -- தாயார் தவிர வேறு கடவுளர்கள் அறியாத வைணவர்களுக்குக் கூட அவர் தும்பிக்கை ஆழ்வார் என்று நாமம் தரிக்கிறார்.//
ஆமாம் ஸார். இதனை பெருமாள் கோயில்களில் நானும் பார்த்துள்ளேன். இதோ இந்த என் பதிவினில் கூட ‘தும்பிக்கை ஆழ்வார்’ அவர்களைக் காட்டியுள்ளேன்.
http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_28.html
//பிள்ளையாரே நம்பர் 1 தெய்வமாய் இருக்கையில் தலைப்பு ஊர், தெரு என்று வந்து ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேகத்தையும் காட்சிப்படுத்தியது அருமை.//
தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான நம்பர்-1 கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார். :)
அருமை..
பதிலளிநீக்குகே. பி. ஜனா... December 6, 2016 at 11:53 PM
நீக்குஅருமை..//
வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
2016 மகாமகத்தின்போது கும்பகோணத்தில் நடைபெற்ற பெரும்பாலான கோயில் குடமுழுக்குகளில் கலந்துகொண்டேன். இப்பதிவு அதனை நினைவுபடுத்தியது. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குDr B Jambulingam December 7, 2016 at 7:19 AM
நீக்குவாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.
//2016 மகாமகத்தின்போது கும்பகோணத்தில் நடைபெற்ற பெரும்பாலான கோயில் குடமுழுக்குகளில் கலந்துகொண்டேன்.//
அதுபற்றி எனக்கும் ஓரளவுக்குத் தெரியும். தங்களின் அப்போதையப் பதிவுகளில் பார்த்துள்ளேன் + படித்துள்ளேன். :)
//இப்பதிவு அதனை நினைவுபடுத்தியது. பகிர்வுக்கு நன்றி.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஐயா.
அழகான படங்களுடன் விளக்கம் தந்து கும்பாபிஷேகத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியமைக்கு நன்றி! திருச்சிக்கு வந்தால் தங்களை பார்க்க விருப்பம். அப்போது ஸ்ரீ வரசித்தி விநாயகரையும் தரிசிப்பேன்
பதிலளிநீக்குவே.நடனசபாபதி December 7, 2016 at 7:58 AM
நீக்குவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.
//அழகான படங்களுடன் விளக்கம் தந்து கும்பாபிஷேகத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியமைக்கு நன்றி!//
மிக்க மகிழ்ச்சி, ஸார்.
//திருச்சிக்கு வந்தால் தங்களை பார்க்க விருப்பம்.//
ஆஹா, மிகவும் சந்தோஷம், ஸார்.
//அப்போது ஸ்ரீ வரசித்தி விநாயகரையும் தரிசிப்பேன்.//
தாங்கள் அநேகமாக இவரை தரிஸித்த பின்னரே என்னைப் பார்க்க வரமுடியும். ஏனெனில் இவர் எங்கள் தெருவில் No. 1 ஆகக் கோயில் கொண்டு வீற்றிருக்கிறார்.
எங்கள் கட்டடம் No. 5 ஆக அமைந்துள்ளது. :)
இதோ இந்தப்பதிவினில் லொகேஷன்ஸ் படங்களுடன் விபரமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html
தங்களின் அன்பான வருகைக்கும், ஆர்வத்துடனான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.
வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வரசித்தி விநாயகர் எல்லா நலங்களையும் அருள்வார்.
கோமதி அரசு December 8, 2016 at 8:32 AM
நீக்குவாங்கோ மேடம், தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.
//வணக்கம் சார், வாழ்க வளமுடன்.//
வணக்கம் மேடம். மிக்க மகிழ்ச்சி.
//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வரசித்தி விநாயகர் எல்லா நலங்களையும் அருள்வார்.//
ஆஹா, நன்கு நினைவு வைத்துக்கொண்டு வாழ்த்தியுள்ளீர்கள். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
தாங்கள் சொல்லியுள்ளதுபோல வரசித்தி விநாயகர் எல்லா நலங்களையும் அருளட்டும். :)
தங்களின் மீண்டும் வருகைக்கும், பிறந்தநாள் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள், மேடம்.
[இங்கு கடந்த 2-3 நாட்களாகவே இண்டர்நெட் கனெக்ஷன் கிடைப்பது இல்லை. அபூர்வமாகக் கிடைத்தாலும் மிகவும் டெட்-ஸ்லோவாகவே உள்ளது. அதனால் உடனுக்குடன் பதில் அளிக்க முடியவில்லை.]
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்.விசேஷ தரிசனங்கள் மிக்க நன்றி.அன்புடன்
பதிலளிநீக்குகாமாட்சி December 9, 2016 at 9:51 PM
நீக்குவாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.
//பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார். விசேஷ தரிசனங்கள். மிக்க நன்றி. அன்புடன்//
தங்களின் அன்பான வருகைக்கும், பெருமை வாய்ந்த பிள்ளையார் பற்றி அழகாகச் சொல்லியுள்ளதற்கும் என் அன்பான இனிய நன்றிகள் மாமி. மிகவும் சந்தோஷம்.
அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். இன்று (10.12.16) காலைதான் உங்களது இந்தப் பதிவினை பார்க்க நேரம் கிடைத்தது. காலை எழுந்ததும், உங்கள் வலைப்பதிவின் வழியே, திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில் தரிசனம். மகிழ்ச்சியும் நன்றியும்.
பதிலளிநீக்குதிருச்சி ஆண்டார்தெரு (ஆண்டார் தெருவா அல்லது ஆண்டாள் தெருவா என்ற சந்தேகம் எனக்குள், இன்னமும் உண்டு) அரச மரத்துப் பிள்ளையார் கோயில் மறக்க முடியாத ஒன்று. இந்த கோயிலின் பிள்ளையார் தரிசனமும், அருகில் இருக்கும் நேஷனல் ஹைஸ்கூலில் படித்த நாட்களும், கோயிலின் வாசலில் இருந்த வடு மாங்காய் கிழவியின் வியாபாரமும் நினைவுக்கு வந்தன. மேலும் கோயிலின் எதிரே இருக்கும், பெரியவனாக ஆனதும் (அப்போதைய பழைய நிர்வாகத்தின் கீழ் இருந்த) ராமா கபேயில் சுடச்சுட சாப்பிட்ட முறுகலான ரவா தோசையும் , சீனி சர்க்கரையைத் தோட்டுக் கொண்டு சாப்பிட்ட ரவா பொங்கலும் இன்னும் பல உணவுப் பண்டங்களும் நினைவுக்கு வந்தன. கூடவே அருகில் இருக்கும். மறக்க முடியாத மதுரா லாட்ஜ் சாப்பாடு.
இந்த அரசமரத்துப் பிள்ளையார் கோயில் ( ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில் ) கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை அழகிய வண்ணப் படங்களாக வெளியிட்டமைக்கு நன்றி. கோயில் வாசலில் தரிசனம் செய்ய வந்த அந்த பேரக் குழந்தைகளில் ஒருவர் உங்கள் பேரன் அநிருத் என்று நினைக்கிறேன். இவர்கள் பிற்பாடு பெரியவர்கள் ஆனதும், உங்களுடைய இந்த பதிவினைப் பார்க்கும் போது ஏற்படப் போகும் பரவசம் நிச்சயம் அளவிட முடியாததாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த கோயிலின் வரலாறு முக்கியம் அல்லவா? இதனை உங்களுடைய இந்த பதிவும் , பழைய பதிவுகளும் நிறைவேற்றி விட்டன.
( உங்கள் மின்னஞ்சலை அப்போதே பார்த்தும், பதிவினைப் படித்தும், பின்னூட்டம் அப்புறம் எழுதலாம் என்று இருந்த வேளையில் தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையில் கவனம் திசை திரும்பி விட்டது. எனவே தாமதத்திற்கு மன்னிக்கவும்)
தி.தமிழ் இளங்கோ December 10, 2016 at 6:22 AM
நீக்கு//அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்.//
என் அன்புக்குரிய திரு. தமிழ் இளங்கோ ஸார், வாங்கோ, வணக்கம்.
//இன்று (10.12.16) காலைதான் உங்களது இந்தப் பதிவினை பார்க்க நேரம் கிடைத்தது.//
அதனால் என்ன? ..... பரவாயில்லை, ஸார்.
//காலை எழுந்ததும், உங்கள் வலைப்பதிவின் வழியே, திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில் தரிசனம். மகிழ்ச்சியும் நன்றியும்.//
மிக்க மகிழ்ச்சி.
>>>>>
VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ (2)
நீக்கு//திருச்சி ஆண்டார்தெரு (ஆண்டார் தெருவா அல்லது ஆண்டாள் தெருவா என்ற சந்தேகம் எனக்குள், இன்னமும் உண்டு)//
இது எல்லோருக்குமே இன்றுவரை உள்ள மாபெரும் சந்தேகம்தான். முன்பு எனக்கு வந்துகொண்டிருந்த தபால்களில் பாதி ‘ஆண்டார்” என்றும் மீதி ‘ஆண்டாள்’ என்றும் விலாசம் எழுதப்பட்டதாகவே இருந்து வந்தன. இப்போது தபால்கள் வருவதே மிகவும் அரிதாகிப் போய்விட்டதால் பிரச்சனை ஏதும் இல்லை.
’ஆண்டார்’ என்பது ஆண்பாலாகவும், ’ஆண்டாள்’ என்பது பெண்பாலாகவும் இருக்கலாம் என்பது, இது விஷயத்தில் எனது ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு ஆகும். [ஆணும் பெண்ணும் தானே மாறி மாறி நம்மை ஆண்டுகொண்டு வருகிறார்கள்.]
இருப்பினும் திருச்சி மாவட்ட மாநகராட்சியால் ஆங்காங்கே தெரு முனைகளில் வைக்கப்பட்டுள்ள புத்தம்புதிய அறிவிப்புப் பலகையில் அம்புக்குறியுடன் ‘வடக்கு ஆண்டார் தெரு’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்கழி மாதம் பிறக்க இருப்பதால் ‘ஆண்டாள்’ என்பதும் மேலும் தெருவின் பெயரின் அழகுக்கு அழகூட்டுவதாகவே உள்ளது. :)
>>>>>
VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ (3)
நீக்கு//அரச மரத்துப் பிள்ளையார் கோயில் மறக்க முடியாத ஒன்று. இந்த கோயிலின் பிள்ளையார் தரிசனமும், அருகில் இருக்கும் நேஷனல் ஹைஸ்கூலில் படித்த நாட்களும், கோயிலின் வாசலில் இருந்த வடு மாங்காய் கிழவியின் வியாபாரமும் நினைவுக்கு வந்தன.//
ஆம் ..... ஒரே பள்ளியில் படித்துள்ள நம்மால் இந்தக்கோயிலையும், நமது பள்ளி வாழ்க்கையையும், அந்த ’அங்கம் பெருத்த அங்கம்மா’க் கிழவியின் மிகப்பெரிய தொக்கு மாங்காய் + வடுமாங்காய் வியாபாரத்தையும் எப்படி மறக்க முடியும்? :)
’மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என் தொடர் பதிவின் ஆரம்ப இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2012/03/1.html
>>>>>
VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ (4)
நீக்கு//மேலும் கோயிலின் எதிரே இருக்கும், பெரியவனாக ஆனதும் (அப்போதைய பழைய நிர்வாகத்தின் கீழ் இருந்த) ராமா கபேயில் சுடச்சுட சாப்பிட்ட முறுகலான ரவா தோசையும் , சீனி சர்க்கரையைத் தோட்டுக் கொண்டு சாப்பிட்ட ரவா பொங்கலும் இன்னும் பல உணவுப் பண்டங்களும் நினைவுக்கு வந்தன. கூடவே அருகில் இருக்கும். மறக்க முடியாத மதுரா லாட்ஜ் சாப்பாடு.//
தற்போது நிர்வாகம் மாறியிருப்பினும், விலைவாசிகள் ஏறியிருப்பினும், இன்றும் அதே ராமா கஃபே + நியூ மதுரா ஹோட்டல் நம் வயிற்றுப்பசிக்கும், ருசிக்கும் ஏற்றதாக என் வீட்டுக்கு அருகிலேயே நீடித்து வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
http://gopu1949.blogspot.in/2015/10/2015-via.html
http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html
>>>>>
VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ (5)
நீக்கு//இந்த அரசமரத்துப் பிள்ளையார் கோயில் (ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில்) கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை அழகிய வண்ணப் படங்களாக வெளியிட்டமைக்கு நன்றி.//
அன்றைய தினம் தாங்கள் வெளியூருக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் இருப்பதாகவும், அதனால் கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரில் கண்டுகளிக்க வர இயலாமல் இருப்பதாகவும், அதனால் இதனை மட்டுமாவது ஓர் தனிப்பதிவாக நான் வெளியிட வேண்டும் எனச் சொல்லி, என்னைத் தொலைபேசி மூலம், தாங்கள்தான் முன்கூட்டியே வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருந்தீர்கள். நான் இதனை வெளியிட்டுள்ளதும் தங்களின் அன்பான அந்த வேண்டுகோளுக்காக மட்டுமே என்பதையும் நன்றியுடன் இங்கு இப்போது தெரிவித்துக் கொள்கிறேன்.
>>>>>
VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ (6)
நீக்கு//கோயில் வாசலில் தரிசனம் செய்ய வந்த அந்த பேரக் குழந்தைகளில் ஒருவர் உங்கள் பேரன் அநிருத் என்று நினைக்கிறேன். இவர்கள் பிற்பாடு பெரியவர்கள் ஆனதும், உங்களுடைய இந்த பதிவினைப் பார்க்கும் போது ஏற்படப் போகும் பரவசம் நிச்சயம் அளவிட முடியாததாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த கோயிலின் வரலாறு முக்கியம் அல்லவா? இதனை உங்களுடைய இந்த பதிவும், பழைய பதிவுகளும் நிறைவேற்றி விட்டன.//
ஆம். இருவரும் என் பேரக்குழந்தைகளே. பெரியவன் அநிருத் (2011 மாடல்), சிறியவன் அவன் தம்பி ஆதர்ஷ் (2014 மாடல்). தாங்கள் சொல்வது மிகவும் நியாயமே. இவையெல்லாம், என் குடியிருப்புப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவைகளே. பிற்காலத்தில் ஒருவேளை நம் வாரிசுகளும், பேத்தி + பேரன்களும் படித்து மகிழக்கூடும்.
>>>>>
VGK >>>>> திரு. தி. தமிழ் இளங்கோ (7)
நீக்கு//(உங்கள் மின்னஞ்சலை அப்போதே பார்த்தும், பதிவினைப் படித்தும், பின்னூட்டம் அப்புறம் எழுதலாம் என்று இருந்த வேளையில் தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையில் கவனம் திசை திரும்பி விட்டது. எனவே தாமதத்திற்கு மன்னிக்கவும்)//
இது எனக்கு மிகவும் நன்றாகவே புரிகிறது. அரசியல் சூழ்நிலைகளால் எல்லோருடைய கவனங்களும் திசை திரும்பி விட்டது என்பதை என்னாலும் மறுக்கவே முடியாது. தங்களின் அன்பான வேண்டுகோளுக்காகவே இந்தப் பதிவினை நான் வெளியிட வேண்டியிருந்ததால், தங்களுக்கு மட்டுமே இதற்கான லிங்கினை மின்னஞ்சல் மூலம் நான் அனுப்பியிருந்தேன். நமக்குள் மன்னிப்பெல்லாம் எதற்கு?
தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான நீண்ட கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.
என்றும் அன்புடன் தங்கள் VGK
அருமை ஐயா...
பதிலளிநீக்குபிள்ளையார்களை ரசித்தேன்...
பரிவை சே.குமார்December 10, 2016 at 11:49 PM
நீக்குஅருமை ஐயா... பிள்ளையார்களை ரசித்தேன்...//
வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
இன்றுதான் இந்த பதிவு பற்றிய விபரம் பார்க்க முடிந்தது. கொஞ்சநாள் வெளியூர் பயணத்தில் இருந்தேன். அதான் உங்க பழய பதிவுகள் பக்கமும் வர முடியல. ஸாரி ஸார். படங்களுடன் பகிர்வு ரொம்ப நல்லா இருக்கு. உங்க பேரக்குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள். வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... December 22, 2016 at 5:54 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இன்றுதான் இந்த பதிவு பற்றிய விபரம் பார்க்க முடிந்தது. கொஞ்சநாள் வெளியூர் பயணத்தில் இருந்தேன். அதான் உங்க பழய பதிவுகள் பக்கமும் வர முடியல. ஸாரி ஸார்.//
அதனால் என்ன? பரவாயில்லை.
//படங்களுடன் பகிர்வு ரொம்ப நல்லா இருக்கு. உங்க பேரக்குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள். வாழ்க வளமுடன்//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
மலை கோட்டைபிள்ளையார்,வரசித்தி விநாயகர் தரிசனங்கள் கிடைத்தன. நன்றி.
பதிலளிநீக்குமாதேவி December 29, 2016 at 10:06 AM
நீக்குவாங்கோ .... வணக்கம்.
//மலை கோட்டைபிள்ளையார், வரசித்தி விநாயகர் தரிசனங்கள் கிடைத்தன. நன்றி.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
குடமுழுக்குப் படங்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி .
பதிலளிநீக்குசொ.ஞானசம்பந்தன் December 29, 2016 at 1:04 PM
நீக்குகுடமுழுக்குப் படங்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி.//
வாங்கோ ஐயா, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
ஞான வடிவமான பிள்ளையாரின் குடமுழுக்கு வைபவங்கள் பற்றிய படங்களுக்கு ’ஞானசம்பந்தன் ஐயா’ அவர்களின் வருகை மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. :) மிக்க மகிழ்ச்சி !
நீக்கு