என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 30 டிசம்பர், 2016

யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே !





அன்புடையீர் ! அனைவருக்கும் வணக்கம். 

வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது.

புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'எனது எண்ணங்கள்’ http://tthamizhelango.blogspot.com/  வலைப்பதிவருமான திருச்சி தி. தமிழ் இளங்கோ அவர்கள் என்னை சந்திப்பதும், புத்தாண்டுக்கான நாட்குறிப்புப் புத்தகம் (DIARY) கொடுத்துவிட்டுச் செல்வதும் வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறார். இது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக நடைபெற்று வருவதை நினைக்க, எனக்கே மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது.  

25.12.2013 அன்று என் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து 2014-ம் ஆண்டுக்கான புதிய டைரியை முதன் முதலாகக் கொடுத்துச் சென்றார்.

25.12.2014 அன்று என் இல்லத்திற்கு வருகை தந்து 2015-ம் ஆண்டுக்கான புதிய டைரியைக் கொடுத்துச் சென்றார். அதுபற்றி என் பதிவினில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இணைப்பு: https://gopu1949.blogspot.in/2014/12/9.html



25.12.2015 அன்று என் இல்லத்திற்கு வருகை தந்து 2016-ம் ஆண்டுக்கான புதிய டைரியைக் கொடுத்துச் சென்றார். அதுபற்றி என் பதிவினில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இணைப்பு: https://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

 


அதே போல நேற்று 29.12.2016 வியாழக்கிழமை மாலை சுமார் 5.45 மணிக்கு திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் என் இல்லத்திற்கு நேரில் விஜயம் செய்து, பிறக்கவுள்ள 2017-ம் ஆண்டுக்கான புத்தம் புதிய DIARY கொடுத்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லி  மகிழ்வித்திருந்தார்கள். அப்போது எடுக்கப்பட்ட ஒரு சில படங்கள் இதோ தங்களின் பார்வைக்காக:






2014 முதல் 2017 வரை தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக, நேரில் வருகை தந்து எனக்குப் புத்தாண்டு வாழ்த்துகளும் சொல்லிப் புது வருட நாட்குறிப்புப் புத்தகமும் (DIARY) கொடுத்துச்செல்லும், அருமை நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


பதிவுலக நட்புகள் அனைவருக்கும் என் இனிய  ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.








என்றும் அன்புடன் தங்கள்


[ வை. கோபாலகிருஷ்ணன் ]


60 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Tamizhmuhil Prakasam December 30, 2016 at 3:22 AM

      //இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா !//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  2. தொடர்ந்து பதிவர் தமிழ் இளங்கோ அவர்கள்
    புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிக்க
    நேரடியாக வருவதும் அதை மிகச் சரியாக
    நினைவு கூர்ந்து பகிர்ந்து மகிழ்வதும்
    பதிர்வர்களுக்கே உரிய உயரிய மாண்பு

    இருவருக்க்கும் இனிய புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S December 30, 2016 at 5:31 AM

      //தொடர்ந்து பதிவர் தமிழ் இளங்கோ அவர்கள் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிக்க நேரடியாக வருவதும் அதை மிகச் சரியாக நினைவு கூர்ந்து பகிர்ந்து மகிழ்வதும் பதிர்வர்களுக்கே உரிய உயரிய மாண்பு

      இருவருக்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

      வாங்கோ, வணக்கம். Mr. Ramani Sir. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. middleclassmadhavi December 30, 2016 at 6:38 AM

      //Vaazhthukkal sir//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, MCM Madam. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  4. நட்புகள் வாழ்க. தமிழ் இளங்கோ ஸார்! பாராட்டுகள். வைகோ ஸார்.. டி ஷர்ட்டில் கலக்குகிறீர்கள்! ஆமாம், டைரி எழுதுகிறீர்களா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். December 30, 2016 at 6:39 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      //நட்புகள் வாழ்க. தமிழ் இளங்கோ ஸார்! பாராட்டுகள். //

      மிகவும் சந்தோஷம்.

      //வைகோ ஸார்.. டி ஷர்ட்டில் கலக்குகிறீர்கள்!//

      யாரையாவது நான் சந்திக்க நேர்ந்தால்தான், என்னிடமுள்ள ஒரு டஜனுக்கும் மேற்பட்ட டி.ஷர்ட்களுக்கே வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.

      நான் என் கைக்காசு போட்டு வாங்காத இந்த டி ஷர்ட்டுகளில் நான் ஒருபோதும் கலக்கவில்லை.

      முதலில் அணிந்து, பிறகு அவர்கள் போனதும் அவிழ்த்து, அவற்றைக் கசக்கி வாஷிங் மெஷினில் மற்ற துணிமணிகளுடன் கலக்குகிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

      //ஆமாம், டைரி எழுதுகிறீர்களா என்ன?//

      ஆஹ்ஹாஹ்ஹா! மிகவும் நல்ல சூப்பரான கேள்வி இது. டைரி விஷயமாக இருப்பதாலும் அது Confidential Matter என்பதாலும், இதற்கு நான் பதில் சொல்லுவதற்கு இல்லை. :)

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
    2. டி ஷர்ட்ல கலக்கறதில்லையா? ஆஹா, அந்த துபாய் பதிவுல போய் பாருங்கோ.

      நீக்கு
  5. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி December 30, 2016 at 8:00 AM

      //இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!//

      வாங்கோ ஸார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் December 30, 2016 at 8:42 AM

      //வாழ்த்துகள் ஐயா...//

      வாங்கோ Mr. DD Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  7. புத்தாண்டு கொண்டாட்டங்களில் டைரியும், காலண்டரும் எக்காலத்தும் தவிர்க்க முடியாத பங்களிப்பைத் தருகின்றன.

    'டைரி எழுதுகிறீர்களா, என்ன?' என்று ஸ்ரீராம் கேட்டிருக்கிறார். எனக்கு டைரிகள் தான் கணக்கெழுதும் குறிப்புப் புத்தகங்கள். அழக்காக கட்டம் எல்லாம் போட்டு தினச்செலவுகளைக் கூட பல வருடங்களாக டைரியில் பதிந்து விடுவது என் வழக்கம்.

    நண்பர்கள் இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி December 30, 2016 at 10:02 AM

      வாங்கோ ஸார். நமஸ்காரங்கள் + வணக்கங்கள்.

      //புத்தாண்டு கொண்டாட்டங்களில் டைரியும், காலண்டரும் எக்காலத்தும் தவிர்க்க முடியாத பங்களிப்பைத் தருகின்றன.//

      வாஸ்தவம் தான். பணி ஓய்வு பெறும்வரை இவற்றை நானே ஏராளமாகக் கையாண்டு, என் கைகளாலேயே அனைவருக்கும் தாராளமாகக் கொடுத்ததும் உண்டு.

      இப்போது இதிலெல்லாம் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும்கூட, ஓர் அவசர ஆத்திரத்திற்கு ஏதேனும் பார்க்கவோ, குறிக்கவோ இதில் ஒன்றும் அதில் ஒன்றும் தேவைப்படத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. அதற்கு மேல் வைத்துக்கொண்டால் வீட்டில் அடசல் மட்டுமே. :) Daily Sheet Calendar ஐ, அன்றாடம் கிழிக்கவே சோம்பல்படும் ஆசாமிகள் நாங்கள். :) எப்போதாவது மாதத்தில் ஒருநாள் சேர்த்துக் கிழிப்பதும் உண்டு.

      //'டைரி எழுதுகிறீர்களா, என்ன?' என்று ஸ்ரீராம் கேட்டிருக்கிறார். எனக்கு டைரிகள் தான் கணக்கெழுதும் குறிப்புப் புத்தகங்கள். அழகாகக் கட்டம் எல்லாம் போட்டு தினச்செலவுகளைக் கூட பல வருடங்களாக டைரியில் பதிந்து விடுவது என் வழக்கம்.//

      நானும் அவ்வாறே செய்து வருகிறேன். தினமும் சிரத்தையாக அனைத்தையுமே எழுதாவிட்டாலும், Routine Major Payments ஆன Flat Association Maintenance Payment, Gas Cylinder Payment, TNEB Payments, Land Line Telephone Bill Payment, மளிகைக்கடை பில், பால்காரருக்கான பணம், வேலைக்காரிக்கான சம்பளம் + her Advance Adjustments போன்றவற்றை மட்டும் குறித்துக்கொள்வது உண்டு.

      பழைய டைரிகளின் காலிப்பக்கங்கள் பேரன் பேத்திக்கு கிறுக்கக் கொடுக்க உபயோகமாக இருப்பதும் உண்டு. :)

      //நண்பர்கள் இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி, ஸார்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
    2. //பழைய டைரிகளின் காலிப்பக்கங்கள் பேரன் பேத்திக்கு கிறுக்கக் கொடுக்க உபயோகமாக இருப்பதும் உண்டு. :)//
      கொடுப்பதா, அவளே எடுத்துக் கொண்டு ‘இதை எடுத்துக்கவா’ என்று கண்ணாலேயே ஒரு கெஞ்சலுடன் கேட்கும் பொழுது மறுக்கத்தான் முடியுமா?

      நீக்கு
  8. சில வழக்கங்கள் தொடர்வது காண மகிழ்ச்சிதான் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. G.M Balasubramaniam December 30, 2016 at 4:47 PM
      சில வழக்கங்கள் தொடர்வது காண மகிழ்ச்சிதான் வாழ்த்துகள்//

      வாங்கோ ஸார். வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  9. வணக்கம் ஐயா, நலம் தானே,,

    வாழ்த்துக்கள், புத்தாண்டில் தொடர்ந்து எழுதுங்களேன். இளங்கோ ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mageswari balachandran December 30, 2016 at 5:17 PM

      //வணக்கம் ஐயா, நலம் தானே//

      வாங்கோ, வணக்கம், நலமே மேடம்.

      //வாழ்த்துக்கள், புத்தாண்டில் தொடர்ந்து எழுதுங்களேன்.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. முயற்சிக்கிறேன்.

      //இளங்கோ ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
      நன்றி.//

      :) தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், மேடம்.

      நீக்கு
  10. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ஸார். பின்னாடி சுவரில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரின் ஓவியம் தங்களின் கைவண்ணமா.. திரு இளங்கோ அவர்களுக்கும் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஹாப்பி நியூ இயர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆல் இஸ் வெல்....... December 30, 2016 at 6:03 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ஸார்.//

      மிகவும் சந்தோஷம்.

      //பின்னாடி சுவரில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரின் ஓவியம் தங்களின் கைவண்ணமா..//

      இல்லை. அது என் கை வண்ணம் இல்லை. WALL STICKER என விற்கப்படுகிறது. ON LINE இல் ORDER கொடுத்தால் வீடு தேடி வந்துவிடும்.

      என் பிள்ளைகளால் ஆர்டர் கொடுத்து வரவழைக்கப்பட்டது. இந்த ஒரு படத்தின் விலை ரூபாய் 200 மட்டுமே எனச் சொன்னார்கள். இதுபோல பல ஸ்வாமி படங்களும், இயற்கைக் காட்சிகளும், பழங்கள் போன்றவைகளும் நிறையவே உள்ளன. நாம் நம் விருப்பம் போல அவற்றில் எது வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்து, அதில் உள்ள ரெஃபரன்ஸ் நம்பருடன், எதை ஆர்டர் கொடுத்தாலும் ஒரே வாரத்தில் நம்மைத் தேடி அது வந்துவிடும்.

      பிறகு அதனை ஒரு 2-3 பேர்களாகச் சேர்ந்து சுவற்றில் மிகவும் பொறுமையாக, அசங்காமல், கோணலாகாமல், கிழிந்து போகாமல், மிகவும் சிரத்தையுடன் ஒட்ட வேண்டும்.

      >>>>>

      நீக்கு
    2. VGK >>>>> ஆல் இஸ் வெல் (2)

      சுவற்றில் ஒட்டும் ஸ்டிக்கர்ஸ் பற்றி மேலதிக விபரங்கள் இதோ இந்த இணைப்புகளில் உள்ளன:

      http://printmantras.com/
      (General Details)

      http://printmantras.com/products
      (Wall art various designs - All)

      http://printmantras.com/t/kids-room-wall-stickers
      (For kids room designs)

      http://printmantras.com/t/living/bed-room-stickers
      (For Living & Bed rooms)

      http://printmantras.com/t/god-wall-stickers
      (For spiritual wall stickers)

      http://printmantras.com/t/kitchens-wall-stickers
      (For kitchens)

      http://printmantras.com/p/faq
      (For FAQ .... Questions & Answers)

      On line booking & orders acceptable

      For any more Query you may write to

      info@printmantras.com

      >>>>>

      நீக்கு
    3. VGK >>>>> ஆல் இஸ் வெல் (3)

      தங்களுக்காகவே அந்த ஸ்ரீ கிருஷ்ணனின் முழுப்படத்தினையும், தனியாக இந்த என் பதிவின் இறுதியில் இப்போது சேர்த்துக் காட்டியுள்ளேன்.

      தாங்கள் எதிர்பார்ப்பதுபோல என்னாலும், இப்போதும், இதுபோல மிகப்பிரமாதமாக என் கையினால் சுலபமாக இதே படத்தினை வரையவும் முடியும் என்பதை மிகவும் அடக்கத்துடன் இங்கு நான் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      //திரு இளங்கோ அவர்களுக்கும் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஹாப்பி நியூ இயர்..//

      தங்களின் அன்பான வருகைக்கும், நியாயமான கேள்விகளுக்கும், புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  11. திரு இளங்கோ அவர்களுக்கு நட்பின் சந்தோஷத்தை வெளிப்படுத்த புதுவருட டைரி நல்ல வாய்ப்பளித்துள்ளது.அனைவருக்கும் ஹாப்பி நியு இயர் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... December 30, 2016 at 6:11 PM

      வாங்கோ, வணக்கம்.

      //திரு இளங்கோ அவர்களுக்கு நட்பின் சந்தோஷத்தை வெளிப்படுத்த புதுவருட டைரி நல்ல வாய்ப்பளித்துள்ளது.//

      அவர் அனைவருடனும் மிகவும் அன்புடனும் பண்புடனும் பழகிடும் மிகவும் நல்ல மனிதர்.

      //அனைவருக்கும் ஹாப்பி நியு இயர் வாழ்த்துகள்..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. ப.கந்தசாமி December 31, 2016 at 5:19 AM
      பாராட்டுகளும் வாழ்த்துகளும்.//

      வாங்கோ ஸார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  13. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபு சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி December 31, 2016 at 11:02 PM

      ஆஹா ! வாங்கோ மேடம், வணக்கம்.

      //தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபு சார்!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், மேடம்.

      நீக்கு
  14. தொடரட்டும் நட்பு....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் January 1, 2017 at 9:32 AM

      வாங்கோ வெங்கட் ஜி ... வணக்கம்.

      //தொடரட்டும் நட்பு....//

      :) சந்தோஷம்.

      //உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  15. Geetha Sambasivam December 30, 2016 at 2:14 AM

    //வாழ்த்துகள்.//

    வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jeevalingam Yarlpavanan Kasirajalingam
      January 1, 2017 at 5:14 PM

      //தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  17. தமிழ் இளங்கோ அவர்களின் நட்பைப் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்ட எழுத்தாள ஜாம்பவானான தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா நியுஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Chellappa Yagyaswamy January 2, 2017 at 9:24 AM

      வாங்கோ, ஸார் ! வணக்கம் ஸார் !!

      //தமிழ் இளங்கோ அவர்களின் நட்பைப் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்ட எழுத்தாள ஜாம்பவானான தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

      ஆஹா ! நான் மிகச்சிறிய, மிகச்சாதாரணமான, ஏழை எளிய அந்தணன் மட்டுமே. ஜாம்பவான் அல்ல.

      அதனால் எனக்குத் தங்களின் இந்தப்பின்னூட்டம் மிகவும் கூச்சத்தை ஏற்படுத்தி, என்னைக் குறுகிப்போக வைத்துவிட்டது.

      என்னைப் பொறுத்தவரை என்னைத்தவிர, தங்களைப்போன்ற மற்ற அனைவரும் மட்டுமே எழுத்துலக + பதிவுலக ஜாம்பவான்கள்.

      இருப்பினும் தங்களின் இந்த வித்யாசமான சொற்கள் ‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ ஆக ருசித்தன. :)

      // - இராய செல்லப்பா நியுஜெர்சி//

      சற்று முன் துபாயில் உள்ள என் மகன் என்னுடன் ஓர் ஆச்சர்யமான, வியப்பளிக்கும், உண்மையான செய்தியினைப் பகிர்ந்துகொண்டுள்ளான். தாங்கள் தற்சமயம் அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் இருப்பதால், அதனை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இங்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

      The Flight took off in 2017 and landed in 2016 !

      United Airlines Flight (Boeing 787-900) took off from Shanghai on 1st January, 2017 to land in San Francisco on 31st December, 2016.

      நாட்டுக்கு நாடு இரவு பகலும், தேதியும் நேரமும் வித்யாசப் படுவதால் இதுபோலவும் ஆச்சர்யமாகவும், அபூர்வமாகவும் நிகழக்கூடும் என்பதை நினைத்து மகிழத்தான் வேண்டியுள்ளது.

      மேற்படி விமானம் போலவே தங்களின் அபூர்வ வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், ஸார்.

      நீக்கு
  18. கோபு சார்... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2017, உங்கள் (நம்) எல்லோருக்கும் பல சிறப்புக்களைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று நம்புவோம்.

    சுவற்றில் கண்ணன் ஓவியம் அருமை.

    இந்த வருட டைரி, பிள்ளையார்பட்டி விநாயகரா அல்லது புதுகை மணக்குள விநாயகரா?

    ஒரு காரணத்தை முன்னிட்டு பதிவர்கள், நண்பர்கள் சந்திப்பது ரொம்ப சந்தோஷத்தைத் தரும் விஷயம்தானே. உங்களுக்கும் தமிழ் இளங்கோ அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் January 2, 2017 at 12:22 PM

      வாங்கோ, வணக்கம்.

      //கோபு சார்... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      //2017, உங்கள் (நம்) எல்லோருக்கும் பல சிறப்புக்களைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று நம்புவோம்.//

      ஆஹா, நாம் நிச்சயமாக நம்புவோம்.

      [ நம்புவதற்கு காசோ பணமோ தேவையில்லையே :) ]

      //சுவற்றில் கண்ணன் ஓவியம் அருமை.//

      ஆம். அது மிகவும் அழகாக உள்ளதாக வீட்டுக்கு வருவோர் எல்லோருமே சொல்லுகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணனை குழந்தை வடிவில் பார்க்க நமக்கும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

      //இந்த வருட டைரி, பிள்ளையார்பட்டி விநாயகரா அல்லது புதுகை மணக்குள விநாயகரா?//

      அதைப் பற்றிய விபரம் ஏதும் அதில் போடவில்லை. இருப்பினும் பள பளன்னு தங்கக் கலரில் ஜோராகவே உள்ளார் அந்த விநாயகர்.

      பிள்ளையார்பட்டி விநாயகரை நான் இதுவரை நேரில் பார்க்காவிட்டாலும், படங்களிலெல்லாம் பார்த்துள்ளதால், அவராகத்தான் இருக்க வேண்டும் என எனக்குள் யூகித்துள்ளேன்.

      புதுகை மணக்குள விநாயகரை ஒரேயொரு முறை மிகவும் அவசர அடியாக தரிஸித்து வந்துள்ளேன். அன்று நான் இருந்த குழப்பமான மன நிலையில் அவர் உருவம் என் மனதில் பதியவில்லை.

      அன்றைய என் சூழ்நிலையைப்பற்றி இதோ இந்தப் பதிவினில்கூட நான் எழுதியுள்ளேன்.

      http://gopu1949.blogspot.in/2013/04/6.html

      நீங்களும் அதில் விரிவான பின்னூட்டமிட்டுள்ளீர்கள்.

      //ஒரு காரணத்தை முன்னிட்டு பதிவர்கள், நண்பர்கள் சந்திப்பது ரொம்ப சந்தோஷத்தைத் தரும் விஷயம்தானே. உங்களுக்கும் தமிழ் இளங்கோ அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.//

      மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு (2017) நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  19. புத்தாண்டு வாழ்த்துகள் சார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Usha Srikumar January 3, 2017 at 4:04 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //புத்தாண்டு வாழ்த்துகள் சார்...//

      மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு (2017) நல்வாழ்த்துகள், மேடம்.

      நீக்கு
  20. உங்கள் பதிவை எப்படியோ பார்க்காமல் தவற விட்டிருக்கிறேன். இன்று ஏதேனும் புதிய பதிவை போட்டிருக்கிறீர்களா என்று உங்கள் வலைப்பக்கத்தைத் திறந்த போது இந்த புதிய பதிவைப்பார்த்து மகிழ்ச்சியுற்றேன். மறுபடியும் உங்களுக்கு என் மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்! எனக்குப்பிடித்த ஓவியப் பின்னணியில் நீங்களும் திரு. தமிழ் இளங்கோவும் சேர்ந்து நின்று புத்தாண்டினை இனிமையுடன் வரவேற்பது போல இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் January 5, 2017 at 12:19 PM

      வாங்கோ மேடம். வணக்கம்.

      //உங்கள் பதிவை எப்படியோ பார்க்காமல் தவற விட்டிருக்கிறேன்.//

      அதனால் என்ன? பரவாயில்லை. நானும் இதுபோல அபூர்வமாக, எப்போதாவது மட்டுமே, ஒருசில சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த :) பதிவுகள் மட்டுமே கொடுத்துக்கொண்டு வருகிறேன்.

      //இன்று ஏதேனும் புதிய பதிவை போட்டிருக்கிறீர்களா என்று உங்கள் வலைப்பக்கத்தைத் திறந்த போது இந்த புதிய பதிவைப்பார்த்து மகிழ்ச்சியுற்றேன்.//

      அப்படியா ! மிகவும் சந்தோஷம், மேடம்.

      //மறுபடியும் உங்களுக்கு என் மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

      மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் மேடம்.

      //எனக்குப்பிடித்த ஓவியப் பின்னணியில் நீங்களும் திரு. தமிழ் இளங்கோவும் சேர்ந்து நின்று புத்தாண்டினை இனிமையுடன் வரவேற்பது போல இருக்கிறது!!//

      ஆஹா, சந்தோஷம். தாங்கள், தங்கள் கணவருடன் என் இல்லத்திற்கு 01.09.2016 வருகை தந்திருந்தபோது http://gopu1949.blogspot.in/2016/09/blog-post.html
      நேரில் பார்த்துவிட்டுத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தீர்களே .... அதே சுவற்றில் ஒட்டப்பட்ட அதே படம்தான் இது.

      ஏனோ அன்று அந்த ஓவியப் பின்னணியில், உங்கள் இருவருடனும் நானும் நின்று போட்டோ எடுத்துக்கொள்ளணும் என எனக்குத் தோன்றவே இல்லை. :(

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  21. வாத்யாரே...! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!நாட்குறிப்பு அழகு...!!!ஜாகிங்-ஜிம் சென்று திரும்பியது போன்ற உங்களின் கெட்-அப் அதவிட சூப்ப்ப்பரு!!! நன்றி! மகிழ்ழ்ழ்ழ்ழ்ச்சி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAVIJI RAVI January 5, 2017 at 2:44 PM

      வாங்கோ சின்ன வாத்யாரே ! வணக்கம்.

      //வாத்யாரே...! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //நாட்குறிப்பு அழகு...!!!//

      அப்படியா? அது எப்போதும், அதுவும் புத்தம் புதுசில் அழகாகத்தான் இருக்கும். :)

      //ஜாகிங்-ஜிம் சென்று திரும்பியது போன்ற உங்களின் கெட்-அப் அதவிட சூப்ப்ப்பரு!!! நன்றி! மகிழ்ழ்ழ்ழ்ழ்ச்சி!!!//

      ஜாகிங் - வாக்கிங் - ஜிம் என எங்குமே செல்ல இஷ்டமில்லாத உலக மஹா சோம்பேறியாச்சே நான் !

      இந்த கெட்-அப், என் அன்றைய, செட்-அப் மட்டுமே. :)

      எனினும் தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான நகைச்சுவையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்வாமீ.

      நீக்கு
  22. நானும் பாக்குறேன். வருஷாவருஷம் யான-தான் வந்து வந்து போகுது!!! மணி ஓசய ஒண்ண்ணும் காணும்...ம்ம்ம்!! பேசாம திருச்சிலயே இருந்திருக்கலாமோ?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAVIJI RAVI January 5, 2017 at 2:46 PM

      //நானும் பாக்குறேன். வருஷாவருஷம் யான-தான் வந்து வந்து போகுது!!! மணி ஓசய ஒண்ண்ணும் காணும்...ம்ம்ம்!! பேசாம திருச்சிலயே இருந்திருக்கலாமோ?!!//

      பூனையின் வருகையை முன்கூட்டியே அறிந்து தப்பிக்க ”பூனைக்கு யார் மணி கட்டுவது?” என பூனைக்கு பயந்த எலிகள், தங்களுக்குள் பொதுக்குழுவையும், செயற்குழுவையும் கூட்டி, ஒரு மீட்டிங் போட்டு பேசிக்கொண்டனவாம்.

      ஆனால் நீங்கள் எலி அல்ல ...... புலி மட்டுமே. எழுத்துலகப் புலியும் கூட. அதற்கான ஆதாரமான இணைப்புகள் இதோ:

      https://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

      https://gopu1949.blogspot.in/2014/11/part-4-of-4.html

      https://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html

      https://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

      https://gopu1949.blogspot.in/2014/10/6-mgr.html

      https://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

      https://gopu1949.blogspot.in/2015/12/blog-post_25.html

      https://gopu1949.blogspot.in/2015/12/blog-post_27.html

      https://gopu1949.blogspot.in/2014/07/blog-post_28.html

      அதனால் அங்கு உங்கள் ஊரில் வந்து வந்து போகுது எனச் சொல்லும் யானைக்கு, நீங்களே பார்த்து முரட்டு மணிகளாக இரண்டு பக்கமும் தொங்குமாறு (இந்தப்பதிவின் யானைப் படத்தில் காட்டியுள்ளது போலவே) செயினுடன் வாங்கிக் கட்டி விடுங்கோ. புண்ணியமாகப் போகும்.

      அவனவன் ஆங்காங்கே சத்திரம்-சாவடி எனக் கட்டி, அன்னதானங்கள் செய்து ‘தர்மம் தலைகாக்கும்’ என நம்புகிறான். யானையின் நான்கு கால்களுக்கும் வெள்ளியில் கொலுசு வாங்கிக்கொடுத்து, அதை அதற்கு அணிவித்துப் பார்த்து இரசிப்பவர்களும் சிலர் இருக்கத்தான் இருக்கிறார்கள்.

      அதனால் நம் ரவிஜி ரவி வாத்யார், யானைக்குக் கட்டிவிடப்போகும் கிண்டாமணியின் ஓசை பாண்டிச்சேரி முழுவதும் ஒலிக்கட்டும். இதனால் ஒரு ’ஸ்பெஷல் கிக்’ ஏற்பட்டு, அங்குள்ள அனைவருக்கும் போதை தெளியட்டும். :)

      நீக்கு
  23. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கோபு சார். வருடந்தவறாமல் தமிழ் இளங்கோ ஐயா தங்களைக் காணவருவதும் புதுவருட நாட்குறிப்புப் பரிசளிப்பதும் தொடர்வது ஒருபுறம் நட்பைப் பேணும் அழகு என்றால் அந்த சந்திப்புகளை அழகாகப் பேணி வரிசையாக ஒரு தொகுப்பாக்கிப் பதிவிட்டு சிறப்பிப்பது இன்னொரு புறம் நட்பைப்பேணும் அழகு எனலாம்.. இருகைகளும் இணைந்து எழுப்பும் ஓசை மனத்துக்கு இதமளிக்கிறது... இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி January 6, 2017 at 1:18 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கோபு சார்.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், மேடம்.

      //வருடந்தவறாமல் தமிழ் இளங்கோ ஐயா தங்களைக் காணவருவதும் புதுவருட நாட்குறிப்புப் பரிசளிப்பதும் தொடர்வது ஒருபுறம் நட்பைப் பேணும் அழகு என்றால் அந்த சந்திப்புகளை அழகாகப் பேணி வரிசையாக ஒரு தொகுப்பாக்கிப் பதிவிட்டு சிறப்பிப்பது இன்னொரு புறம் நட்பைப்பேணும் அழகு எனலாம்.. இருகைகளும் இணைந்து எழுப்பும் ஓசை மனத்துக்கு இதமளிக்கிறது... இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், எங்கள் இருவர் மனதுக்கும் இதமான, அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் மேடம்.

      நீக்கு
  24. மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K அவர்களின் இந்தப்பதிவு என்னை திக்கு முக்காடச் செய்து வ்ட்டது.இங்கு கருத்துரையும், வாழ்த்துகளும் சொன்ன அன்பர்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ January 9, 2017 at 10:34 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //மூத்த வலைப்பதிவர் ஐயா V.G.K அவர்களின் இந்தப்பதிவு என்னை திக்கு முக்காடச் செய்து விட்டது.//

      ஏன் ஸார்? என்ன ஆச்சு ஸார்?

      கடந்த ஒன்பது நாட்களாக தினமும் பலமுறை டைரியை எடுக்கும் போதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்கிறேன். அதுபோல மேலும் அடுத்த 356 நாட்களுக்கும் நினைத்துக்கொண்டே இருப்பேனாக்கும். :) :) :) :) :)

      //இங்கு கருத்துரையும், வாழ்த்துகளும் சொன்ன அன்பர்களுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துகளும்.//

      அனைவர் சார்பிலும் + என் சார்பிலும் தங்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  25. உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபு அண்ணன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira January 9, 2017 at 11:02 PM

      வாங்கோ ஸ்வீட் சிக்ஸ்டீன்++++ அதிரா, வணக்கம்.

      //உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபு அண்ணன்.//

      மிக்க மகிழ்ச்சி, அதிரா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      தலைப்புக்கு ஏற்றாற்போலவே வருகை தந்துள்ளீர்கள்.

      30.12.2016 அன்றே மணியோசை வந்து விட்டது முன்னே.

      ஆனால் நீங்க _ _ போல இப்போ இன்று 09.01.2017 வந்துள்ளீர்கள் ... பின்னே :)

      நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அன்பான வருகைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், அதிரா.

      நீக்கு
  26. விநாயகரும் பெருமாளும் அற்புதம். வாழ்க வளமுடன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் விஜிகே சார் & இளங்கோ சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan January 11, 2017 at 2:38 PM

      வாங்கோ ஹனி மேடம். வணக்கம்.

      //விநாயகரும் பெருமாளும் அற்புதம். வாழ்க வளமுடன்.

      இனிய புத்தாண்டு வாழ்த்துகள் விஜிகே சார் & இளங்கோ சார்//

      தங்களின் அன்பான வருகைக்கும் அற்புதம் என்ற அற்புதமான கருத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  27. தமிழ்ப் புத்தாண்டாம் தைத்திருநாளில் அனைவரும் நலமும் வளமும் பெற்று வாழ்வு சிறக்க மனதார வாழ்த்துகிறேன். வள்ளுவராண்டு 2048 பிறந்துள்ள இந்நன்னாளில் நம் துன்பங்கள் எல்லாம் மறைந்து வாழ்வில் புதிய இன்பங்கள் பிறக்கட்டும்.என்ன புதுவருடத்தில் பதிவு இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிகரம் பாரதி January 15, 2017 at 6:15 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தமிழ்ப் புத்தாண்டாம் தைத்திருநாளில் அனைவரும் நலமும் வளமும் பெற்று வாழ்வு சிறக்க மனதார வாழ்த்துகிறேன். வள்ளுவராண்டு 2048 பிறந்துள்ள இந்நன்னாளில் நம் துன்பங்கள் எல்லாம் மறைந்து வாழ்வில் புதிய இன்பங்கள் பிறக்கட்டும்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //என்ன புதுவருடத்தில் பதிவு இல்லையா?//

      இதற்கான என் பதில் பற்றி, ஒருவேளை தாங்கள் என் அடுத்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதனை நான் வெளியிட உத்தேசித்துள்ள நாள்: 09.02.2017

      நீக்கு
  28. திரு. ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி அவர்களின் (18.01.2017) ஃபேஸ்-புக் பதிவு ஒன்றுக்கு நான் கொடுத்திருந்த ஏராளமான கருத்துக்களையெல்லாம் ஒருங்கிணைத்துத் தொகுத்து, இன்று (24.01.2017) ஓர் தனிப்பதிவாகக் கொடுத்துள்ளார்கள் நமது ‘மன அலைகள்’ வலைப்பதிவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள். அதற்கான இணைப்பு இதோ:

    http://swamysmusings.blogspot.com/2017/01/blog-post_24.html

    இது ‘சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகப்பிரும்மம் தியாகராஜ ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாற்றினை அறிந்துகொள்ள விருப்பமுள்ளவர்களின் தகவலுக்காக மட்டுமே. - VGK

    பதிலளிநீக்கு
  29. நாட்குறிப்பும் காலண்டரும் பெட்டியை ஸ்வீட்ஸ்சும் நம்ம ஊர்ல தொடரும் நல்ல விஷயங்கள் ..இங்கே சில கடைகளில் தராங்க சும்மா கட்டம் போட்ட காலாண்டர்தான் ..சாமி படங்கள் யார் கொடுத்தாலும் வாங்கி வச்சிப்பேன் நம்ம ஊரில் .. தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் ..உங்க இருவர் நடுவே கிருஷ்ணர் படம் அழகா இருக்கு ரசித்தேன் அழகா உங்க தோளில் கை போட்ட மாதிரி இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angelin January 25, 2017 at 8:51 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நாட்குறிப்பும் காலண்டரும் பெட்டியை ஸ்வீட்ஸ்சும் நம்ம ஊர்ல தொடரும் நல்ல விஷயங்கள்..//

      ஆமாம். இப்போதெல்லாம் பெரும்பாலும் கொடுப்போருக்கும், பெறுவோருக்கும் இதில் ஆர்வம் குறைந்துபோய் வருகிறது.

      //இங்கே சில கடைகளில் தராங்க சும்மா கட்டம் போட்ட காலாண்டர்தான் .. சாமி படங்கள் யார் கொடுத்தாலும் வாங்கி வச்சிப்பேன். நம்ம ஊரில் .. //

      ஏதோ புத்தம் புதிதாக இருக்கும்போது கண்களில் ஒத்திக்கொண்டு வாங்கி வைத்துக்கொள்வோம். பிறகு ஒருநாள் அதனை தூக்கி எறிய வேண்டிய நிலை ஏற்படும் போது, ஸ்வாமி கண்ணைக் குத்திவிடுவாரோ என்ற பயமும் ஏற்படத்தான் செய்கிறது. என்ன செய்ய? யோசித்துப்பார்த்தால் எல்லாமே ஒரே அடசல்கள் மட்டுமே.

      உங்களுக்காவது பிரச்சனை இல்லாமல் எதுவாக இருந்தாலும் அதனை மறு சுழற்சி செய்து உபயோகித்துக்கொள்ளத் தெரியும். எங்களுக்கெல்லாம் அதுவும் தெரியாது. :)

      //தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் ..//

      அதனால் என்ன? தாமதமான வருகையால்தான் என்னால் பொறுமையாகப் படித்து, பொறுமையாக பதிலும் அளிக்க முடிகிறது.

      //உங்க இருவர் நடுவே கிருஷ்ணர் படம் அழகா இருக்கு ரசித்தேன். அழகா உங்க தோளில் கை போட்ட மாதிரி இருக்கு//

      அதைவிட உங்களின் இந்தத் தனிப்பட்ட ரஸனைதான் எனக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக அழகாக உணர முடிகிறது. தேங்க்ஸ் ... ய ... லாட். :)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மென்மையான பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு