About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, January 29, 2017

நினைவாற்றல் - பகுதி 2 of 3

பகுதி-1 க்கான இணைப்பு:  
 a Lecture Demonstration on
Ashtaavadaanam
by
Sri V.Mahalingam, 
(Former AGM, UCO BANK - Retd.)

Time:  6.30 PM to 8 PM
Venue: Thathachariar House,
No.152, South Chitra Street, 
Srirangam, Trichy-620006.

பகுதி-2

பார்வையாளர்களாகிய நாம் பலரும் சேர்ந்து, அவ்வப்போது தாறுமாறுமாக தந்து குழப்பிவரும் பலவிதமான விஷயங்களை, அஷ்டாவதானியான ஒருவர் ஒரே நேரத்தில், தன் மூளைக்குள் கிரஹித்துக்கொண்டு, அவற்றை அப்படியே ஆங்காங்கே ஸ்டோரேஜ் செய்து கொண்டு, பேனா, பென்சில், பேப்பர் எதுவுமே தன்னிடம் வைத்துக்கொள்ளாமல், தனக்குள் உள்ள ஸ்பெஷல் மூளையால் மட்டுமே, ஒரு தியானம் போல ஆழ்ந்து யோசித்து, பல்வேறு கணக்குகள் போட்டு, மிகவும் ஆச்சர்யமான முறையில் கடைசியில், நமக்கு அந்தப் பல்வேறு தகவல்களை ஒழுங்குபடுத்தித் திரும்பத் தருவார் என்பதே இதில் உள்ள மிக முக்கியமான விஷயமாகும்.  

இதோ இந்தப்படம் ... நிகழ்ச்சி நடக்கும்போது 
மண்டை பூராவும் பல்வேறு யோசனைகளுடன்
தன் கைகளைக் கட்டிய நிலையில் 
திருவாளர்: அஷ்டாவதானி அவர்கள்.

முதலில், நிகழ்ச்சிக்கு வந்துள்ள பார்வையாளர்கள் ஒவ்வொருவரிடமும், ஒரே மாதிரியான மேட்டர்கள் டைப் செய்யப்பட்ட ஆறு பக்கங்கள் கொண்ட ஒரு பேப்பர் கொத்து அளிக்கப்படுகின்றன. 

[உண்மையில் Back to Back Print செய்யப்பட்ட ஒரேயொரு தாள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதில் இருபுறமும் சேர்த்து முக்கியமான (5 + 1 = 6) ஆறு பகுதிகள் இருந்தன. தங்களுக்கு அதனைப்பற்றி சுலபமாக புரிய வைப்பதற்காக நான் இங்கு, தனித்தனியே ஆறு தாள்கள் கொண்ட ஒரு பேப்பர் கொத்து (A Bunch of Papers with 6 Pages)  எனக் குறிப்பிட்டுள்ளேன்] 

எழுதுகோல்களான பென்சில் அல்லது பேனா கொண்டு வராமல் மறந்துபோய்விட்ட பார்வையாளர்களில் சிலருக்கு, அவைகள் அங்கு அஷ்டாவதானி அவர்களின் மகளினால் தந்து உதவப் பட்டன.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் ”யாராவது ஒருத்தர் மட்டும், ஒரு மூன்று ஸ்தான எண் சொல்லுங்கோ” என்றார். உடனே ஒருவர் எழுந்தார். 204 என்றார். மைக்கிலும் அந்த நம்பர் 204 என்று உரக்க அறிவிக்கப்பட்டது. அனைவரும் இதனை தங்களிடம் உள்ள பக்கம் எண்-1 இல் ஓர் ஓரமாகக் குறித்துக்கொண்டனர். 

இப்போது அந்த அஷ்டாவதானி அவர்களின் மூளையில் இந்த நம்பர் 204 நுழைந்து தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டது. இதில் அவரின் வேலை என்னவென்றால், எந்த ஒரு நான்கு எண்களின் கூட்டுத்தொகை 204 ஆக வரும் எனச் சொல்ல வேண்டும். அதுபோல ஒன்றல்ல இரண்டல்ல ..... நான்கு காம்பினேஷன்களை அவர் நமக்குச் சொல்ல வேண்டும். **என்னை யாராவது இதுபோலக் கேட்டால் ஒரே ஒரு முறை மட்டும் 51+51+51+51=204; 50+52+50+52=204; 1+1+1+201=204; 2+2+100+100=204 என சற்றே யோசித்து மிகச் சுலபமாகச் சொல்லி விடுவேன்.** 

ஆனால் அந்த நான்கு நம்பர்களும் மேலிருந்து கீழோ அல்லது படுக்கை வசமாகவோ கூட்டினாலும் அந்த கூட்டுத்தொகை 204 என வருமாறு அவர் தன் எண்களைச் சொல்ல வேண்டும். 

மேலும் அந்த அஷ்டாவதானி, இதன் விடையை என்னைப்போல ஒரேயடியாகச் சொல்லக்கூடாது. 

அடுத்தடுத்து பல்வேறு விஷயங்கள் நம்மிடமிருந்து அவர் மண்டைக்குள் நுழைந்து கொண்டிருக்கும் போது அவர் யோசித்து, நீண்ட இடைவெளி கொடுத்து, ஒவ்வொரு நம்பராக நம்மிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். 

அவர் இவ்வாறு சொல்லச்சொல்ல, நாம் நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள பக்கம் எண்-1 என்ற தாளில் உள்ள கட்டங்களில் குறித்துக்கொண்டே வரணும். 

அவர் நம்மிடம் சொல்வதில் ஒரே நம்பர்கள்  திரும்பவும் ரிப்பீட் ஆகவும் கூடாது. மேலும், மேலிருந்து கீழ் மற்றும் படுக்கை எண்களின் கூட்டல்கள் இரண்டும் சரியாக 204 என்று வர வேண்டும்.  

**நான் மேலே என் விடையாக அண்டர்லைன் செய்து சொல்லியுள்ளதில் இந்த இரண்டு கண்டிஷன்களுக்குமே பொருந்தாமல் உள்ளதை கவனிக்கவும்.**

பக்கம் எண்-1 [MAGIC SQUARE] மேலே நான் சொல்லியுள்ளதை அவ்வப்போது, பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் குறித்துக்கொள்ள மட்டுமே இந்த பக்கம் எண்-1 நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் நான்கு புள்ளி நான்கு வரிசை கோலம் போல, 4 x 4 = 16 காலிக் கட்டங்கள் மட்டுமே  போடப்பட்டுள்ளன.A    B   C   D
  E    F   G   H  
I     J    K    L
 M   N   O    P 

இந்த A, B, C, D order இல் தான் அவரால் அவ்வப்போது நம்பர்கள் சொல்லப்பட்டு வரும். 

அந்த அஷ்டாவதானி நம்மிடம் அவ்வப்போது சொல்லும் நம்பர்களை நாம் அதில் குறித்துக்கொண்டே வர வேண்டும். ஒவ்வொரு வரிசையிலும் வரக்கூடிய முதல் எண்ணை மட்டும், அவர் அவ்வப்போது சொல்லுவார். அதன் பின் ஒவ்வொரு வரிசையிலும் வரும் இரண்டாம் எண். அதன் பிறகு ஒவ்வொரு வரிசையிலும் வரும் மூன்றாம் எண் எனச் சொல்லுவார். இந்த மூன்று ஸ்டேஜ்கள் முடிந்ததும் அவர் சொல்லப்போகும் நாலாவது வரிசை எண்கள் (M  N  O  P) என்னென்ன என்பதை நாமே யூகித்து விடலாம்.  ஒவ்வொரு வரிசையிலும் உள்ள முதல் மூன்று எண்களையும் கூட்டி, 204-இல் இருந்து கழித்தால் போதுமே. இருப்பினும் அந்த ஒவ்வொரு வரிசையில் வரவேண்டிய நான்காவது எண்ணையும் அஷ்டாவதானியே நமக்குச் சொல்லுவார். நாம் அது சரியே என்பதை அவருக்கு அறிவிக்க நம் கைகளை பலமாகத் தட்டினால் மட்டும் போதும்.

அன்று அவரால் அவ்வப்போது அறிவிக்கப்பட்ட எண்கள்:

 81     25     29     69   = 204

 37     61     57     49   = 204

 53     45     41     65   = 204

 33     73     77     21   = 204
________________

204   204   204   204 
_________________

இதில் உள்ள 16 நம்பர்களில் எதுவுமே ரிப்பீட் ஆகவில்லை என்பதையும், அதில் உள்ள ஒவ்வொரு நான்கு நம்பர்களையும் மேலிருந்தும் கீழாகவோ அல்லது படுக்கை வசமாகவோ அல்லது ஒரு மூலையிலிருந்து மறு மூலை வரைக்குமோ எப்படிக் கூட்டினாலும் (ALL THE 10 DIRECTIONS) 204 வருகிறது என்பதையும் கவனிக்கவும்.

பக்கம் எண்-2 [ PLAYING CARDS ]


 

 

இந்த பக்கம் எண்-2 இல் சீட்டாட்டத்தில் உள்ள கிளாவர், இஸ்பேட், ஹாட்டீன், டைமன் ஆகிய நான்கு பூக்களின் பெயர்கள் தலையில் எழுதியிருந்தன. கீழே ஒவ்வொன்றிலும் 13 கட்டங்கள். அதாவது சீட்டுக்கட்டினில் உள்ள சீட்டுகளான ACE, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, JACK, QUEEN, KING என இடதுபுற மார்ஜினில் குறிப்பிடப்பட்டிருந்தன. இப்போது  4 x 13 = 52 கட்டங்கள் உள்ள பேப்பர் ஒன்று, பக்கம் எண்-2 என போடப்பட்டு உங்களிடம் கையில் உள்ளதாக கற்பனை செய்துகொள்ளவும்.

பார்வையாளர்களில் சிலர் இவற்றில் ஏதேனும் சில கார்டுகளின் பெயர்களை மாற்றி மாற்றிச் சொல்ல வேண்டும். உதாரணமாக எட்டு இஸ்பேடு, பத்து கிளாவர், கிங் ஹாட்டீன், ஏழு டைமன் என எது வேண்டுமானாலும் சற்றே இடைவெளி விட்டுச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அவை மைக்கில் ஒரு முறை சொன்னதும், அனைவராலும் அவர்களிடம் உள்ள பக்கம் எண்-2 இல், அந்த குறிப்பிட்ட கட்டத்தில் டிக் செய்து கொள்ளப்பட்டு விடும்.

அவ்வாறு சொல்லப்படும் சீட்டுகள் யாவும் அஷ்டாவதானி அவர்களின் மூளையில் அவ்வப்போது ஒரு பக்கமாக ஏற்றிக்கொள்ளப்பட்டு, அவர் மூளையில் பதிவாகிக்கொண்டே இருக்கும். 

இவ்வாறு 52 கார்டுகளில் சுமார் 40 கார்டுகள் டிக் ஆன பிறகு, டிக் ஆகாத கார்டுகள் ஒவ்வொரு ஜாதியிலும் என்னென்னவாக இருக்கும் என்று அந்த அஷ்டாவதானியானவர் மிகச் சரியாகச் சொல்லி ஆச்சர்யப்படுத்தி, பலத்த கரகோஷத்தைப் பெற்று விடுகிறார்.பக்கம் எண்-3

இதில் இரண்டே இரண்டு கட்டங்கள் வீதம் மொத்தம் பத்து வரிசைகள் இருக்கும். முதல் கட்டத்தில் 1 முதல் 10 வரை நம்பர்கள் ஏற்கனவே ஒன்றன்கீழ் ஒன்றாகப் போடப்பட்டு இருக்கும். அதன் அருகே உள்ள கட்டம் மட்டும் காலியாக இருக்கும். அதில் நடு நடுவே யாராவது ஒருவர் ஓர் இரண்டு இலக்க நம்பரை  எழுதிவிட்டு, அறிவிக்கலாம். அது மைக்கில் சொல்லப்பட்டதும், அனைவரும் அவரவர்களிடம் உள்ள பக்கம் எண்-3 இல் அந்த எண்ணைக் குறித்துக்கொள்ளலாம். 

உதாரணமாக .... 
பக்கம் எண்-3 .... வரிசை எண்-8 ..... நம்பர்: 49 எனச் சொல்லலாம். 
பக்கம் எண்-3 .... வரிசை எண்-3 ..... நம்பர்: 83 எனச் சொல்லலாம்.
பக்கம் எண்-3 .... வரிசை எண்-9 ..... நம்பர்: 71 எனச் சொல்லலாம். 

அவ்வப்போது இடை இடையே இதுபோல சொல்லப்படும் நம்பர்கள் அனைத்துமே கவனமாக அஷ்டாவதானியால் தன் மூளையில் ஏற்றிக்கொள்ளப்படும்.  கடைசியில் அவர் Serial Nos: 1 to 10 இல் உள்ள எண்களை  வரிசையாகச்  சொல்லி அசத்துவார்.


பக்கம் எண்-4 

இதிலும் மேலே சொன்னபடியே வரிசையாக Serial Nos: 1 to 10 என ஒன்றன்கீழ் ஒன்றாக இருக்கும். அதன் அருகே உள்ள கட்டத்தில் ஓர் வார்த்தை எழுதக்கூடிய அளவுக்கு இடம் விடப்பட்டிருக்கும். 

அதில் அவ்வப்போது பார்வையாளர்களில் சிலர் ஏதேனும் ஒரு வார்த்தையை எழுதிவிட்டு அதனைச் சொன்னால் மைக் மூலம் உரக்கச் சொல்லப்படும். அனைவரும் தங்களிடம் அதனைப் அப்படியே குறித்துக் கொள்ளலாம். 

உதாரணமாக ....

Serial No. 6   CHAIR

Serial No. 8   CAR

Serial No. 3   FISH

Serial No. 1   BOAT

அவ்வப்போது இடை இடையே இதுபோல சொல்லப்படும் வார்த்தைகள் அனைத்துமே கவனமாக அஷ்டாவதானியால் தன் மூளையில் ஏற்றிக்கொள்ளப்படும்.  கடைசியில் அவர் Serial Nos: 1 to 10 இல் உள்ள வார்த்தைகளை வரிசையாகச்  சொல்லி அசத்துவார்.


பக்கம் எண்-5 [ ராகங்கள் ]

பார்வையாளர்களில் சிலர் அவ்வப்போது எழுந்து ஏதேனும் பாட்டுக்கான ராகங்களை மட்டும் பாடி விட்டு அமரலாம். பாட்டாகப் பாடணும் என்ற அவசியம் இல்லை. ராகத்தை மட்டுமே ஆலாபணை செய்து காட்டினால் போதுமானது. 

அவை எந்த ராகங்கள் என இசை ஞானம் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள பக்கம் எண்-5 இல் குறித்துக்கொள்ளலாம். 

அந்த ராகங்கள் ஒவ்வொன்றும் வரிசைக்கிரமமாக அவ்வப்போது அந்த அஷ்டாவதானி அவர்களின் கம்ப்யூட்டர் ப்ரைனில் ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கும்.

அவ்வாறு ராகம் பாடிய ஒவ்வொருவரும் கல்யாணி, காம்போதி, கரகரப்பிரியா போன்ற எந்த ராகத்தில் பாடினார்கள் என்பதையும் அந்த அஷ்டவதானி கடைசியில் நமக்கு வரிசைக் கிரமமாகச்  சொல்லுவார்.

இதில் நான் மேலே சொல்லியுள்ள பக்கம் எண்-1 முதல் பக்கம் எண்-5 வரை, மாற்றி மாற்றி ஒரு சில நிமிட இடைவெளியில் பலராலும் கலந்துகட்டியாக சொல்லப்பட்டு, மைக்கிலும் அறிவிக்கப்படுகிறது. 

இதுபோன்ற பல தகவல்களை அந்த அஷ்டாவதானியின் மூளை தன்னுள் உடனுக்குடன் கிரஹித்துக்கொண்டு, ஏதேதோ கணக்குப்போட்டு வைத்துக்கொண்டு, கடைசியில் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி வரிசைக்கிரமமாகச் சொல்லி அசத்துகிறது என்பதுதான் மிகவும் ஆச்சர்யமானதோர் விஷயமாகும்.

இவையெல்லாவற்றிற்கும் சேர்த்தே, மொத்தமாக ஒரு 40-45 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இதைத்தவிர நடந்துள்ள இன்னும் ஒருசில அதிசய நிகழ்வுகளை இதன் அடுத்த பகுதியில் தொடர்ந்து சொல்லி, என் முடிவுரையுடன் நிறைவு செய்ய உள்ளேன்.  


என்றும் அன்புடன் தங்கள்,

 

(வை. கோபாலகிருஷ்ணன்)

68 comments:

 1. எத்தனை திறமை.... மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் நாகராஜ் January 29, 2017 at 3:47 PM

   வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

   //எத்தனை திறமை.... மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்....//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜி.

   Delete
 2. அசர வைக்கும் திறமை. ஒரே ஒரு முறை நேரிலும், ஓரிரு முறை தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கிறேன். தசாவதானி போன்றோர்களும் உண்டு என்பதை அறிந்திருக்கிறேன். இப்போது எடுத்த பொருளை எங்கே வைத்தேன் என்று திணறும் எனக்கு இந்த மாதிரி திறமையாளர்கள் மேல் பொறாமைதான் வரும்!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். January 29, 2017 at 4:03 PM

   வாங்கோ ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’! வணக்கம்.

   //அசர வைக்கும் திறமை.//

   ஆமாம். அசர வைக்கும் திறமையேதான். :)

   //ஒரே ஒரு முறை நேரிலும், ஓரிரு முறை தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கிறேன்.//

   நானும் அப்படியே .... ஏற்கனவே ஓரு முறை நேரிலும், ஒருமுறை தொலைகாட்சியிலும், சமீபத்தில் ஒரு முறை யூ-ட்யூப்பிலும் கண்டு களித்துள்ளேன்.

   >>>>>

   Delete
  2. கோபு >>>>> ஸ்ரீராம் (2)

   //தசாவதானி போன்றோர்களும் உண்டு என்பதை அறிந்திருக்கிறேன்.//

   ஆம். உண்டுதான். அஷ்டாவதானி (8), தஸாவதானி (10) மட்டுமல்ல, ஸதாவதானி (100), சஹஸ்ராவதானி (1000) போன்ற மஹா மேதைகளும், மஹான்களும் நம் புண்ணிய பூமியாம் பாரத நாட்டில் நிச்சயம் இருந்திருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஐயமே இல்லை.

   கணித மேதை ராமானுஜத்திலிருந்து ஆரம்பித்து சமீபத்தில் நம்மிடைய நடமாடும் தெய்வமாக விளங்கிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா வரையிலும் எண்ணிலடங்காத மஹாத்மாக்கள் இருந்துள்ளனர் .... நம் பாரத தேசத்தில்.

   >>>>>

   Delete
  3. கோபு >>>>> ஸ்ரீராம் (3)

   நம் வேதங்களிலும், நம் சாஸ்திரங்களிலும், நம் வான சாஸ்திரங்களிலும், நம் சம்ப்ரதாயங்களிலும் இல்லாத, கணக்குகளோ வழக்குகளோ, வாழ்க்கையின் நெறி முறைகளோ, ஆச்சார அனுஷ்டானங்களோ, சுத்தம் மற்றும் சுகாதாரங்களை எடுத்துச்சொல்லும் ஸத் விஷயங்களோ, வேறு எதிலும் கிடையவே கிடையாது. ஏனோ நம்மில் பலர் அதனை தொடர்ந்து கடைபிடிக்காமல் விட்டு விட்டோம். :(

   இன்றும் நம்மில் சிலராவது, ஆங்காங்கே அவற்றை சிரத்தையுடன் கடைபிடித்துத்தான் வருகிறார்கள் என்பது பார்க்கவும், கேட்கவும் மகிழ்ச்சியாகவும், மனதுக்கு ஆறுதலாகவும் உள்ளது.

   நம்மிடமிருந்தே திருடப்பட்டவைகளான இவை எதையும் வெளிநாட்டுக்காரன் அவன் பாஷையில் சொன்னால் மட்டுமே அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும், நாம் கேட்டுக்கொண்டு வருகிறோம்.

   இது ஒரு கலியுக சாபக்கேடு மட்டுமே.

   >>>>>

   Delete
  4. கோபு >>>>> ஸ்ரீராம் (4)

   திருச்சி E R HIGH SCHOOL இன் நிர்வாகக்குழுவில் ஸ்ரீமான் நடராஜ ஐயர் என்று ஒரு கணித மேதை இருந்து வந்தார். 1970 வரை அந்த திருச்சி E.R.High School இல் படித்த மாணவ மணிகளுக்கெல்லாம் அவரைப்பற்றி நன்கு தெரிந்திருக்கலாம்.

   நான் அந்தப்பள்ளியில் படித்தவன் அல்ல. இருப்பினும் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டும் இருக்கிறேன். நல்ல குண்டாக மூக்கும் முழியுமாக இருப்பார். கடைசிவரை அந்தக்கால பழைய சைக்கிளில் மட்டுமே பயணம் செய்து வந்துகொண்டிருந்தார். நல்ல வசதியானவர்தான்.

   அவரிடம் நாம் ஒரு நான்கு ஸ்தான எண்ணையும் மற்றொரு நான்கு ஸ்தான எண்ணையும் எழுதி (உதாரணமாக 4874 x 7893) அவற்றைப் பெருக்கச் சொன்னால், அடுத்த நிமிஷமே பெருக்கி வரக்கூடிய அதன் விடையை ஒரே வரியில் எழுதிக் காட்டி விடுவார். நம்மைப் போல ஒவ்வொரு ஸ்தானமாகப் பெருக்கிப் பெருக்கிக் கூட்டிக்கொண்டு இருக்க மாட்டார். அந்த அளவுக்குக் கணக்கில் புலி அவர்.

   பொழுது போக்குக்காக இங்கு அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த, திருச்சி ஸிட்டி கிளப்புக்குப் போய், மூன்று சீட்டும் விளையாடுவார் என்று கேள்வி.

   //இப்போது எடுத்த பொருளை எங்கே வைத்தேன் என்று திணறும் எனக்கு இந்த மாதிரி திறமையாளர்கள் மேல் பொறாமைதான் வரும்!//

   எனக்கும் அப்படியேதான். இந்த எங்கள் ஊர் அஷ்டாவதனி ஸார் மேல், எனக்கு ஒரு பக்கம் பெருமை ஏற்பட்டுள்ளது போலவே பொறாமையும் ஏற்பட்டுள்ளது. :)

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம்.

   Delete
 3. பிரமிப்பான நிகழ்ச்சி..

  அ தி ச ய ஆ ற் ற ல்..

  ReplyDelete
  Replies
  1. ரிஷபன் January 29, 2017 at 4:15 PM

   வாங்கோ ஸார், வணக்கம்.

   //பிரமிப்பான நிகழ்ச்சி.. அ தி ச ய ஆ ற் ற ல்..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

   தங்களாலேயே, தங்களுடனேயே அன்று நான் இந்த நிகழ்ச்சியைச் சேர்ந்து பார்க்கும் பாக்யம் கிடைக்கப்பெற்றேன். :)

   நினைத்துப் பார்க்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

   Delete
 4. Padikkave thalai sutukiradhe!! Hats off!!

  ReplyDelete
  Replies
  1. middleclassmadhavi January 29, 2017 at 4:19 PM

   வாங்கோ மேடம். வணக்கம்.

   //Padikkave thalai sutukiradhe!! Hats off!!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   { படிக்கவே தலை சுற்றும்படியாக எழுதியுள்ள என்னைத் தயவுசெய்து மன்னிக்க வேண்டுகிறேன். :) }

   Delete
 5. மிகுந்த திறமைதான். இதுக்கெல்லாம் கூர்த்த மதி வேண்டும். (focused). 'மதி'க்கே வழியைக் காணோம். இதில் 'கூர்த்த' மதிக்கு எங்க போக. கணிதமேதை சகுந்தலா தேவி அவர்களும் இதுபோன்றே மிகத் திறமை பெற்றவர். (ஒருவேளை நாம நம்ம மூளையை ரொம்ப உபயோகப்படுத்துவதால், உபயோகப்படுத்தாத பகுதி ரொம்பக் குறைந்துவிடுகிறதோ).

  ராகம் ஆலாபனை செய்யற அளவு வித்தை தெரிந்தவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்களா? அல்லது கர்'நாடிக் பாடலைப் பாடினாலே போதுமா? நீங்கள் ஏதேனும் ஆலாபனம் செய்தீர்களா?

  இன்னும் 3 திறமைகள் என்ன என்று படிக்கவேண்டும்.

  நெல்லையில், இவ்வாறு அஷ்டாவதானி perform பண்ணும்போது, பக்கத்தில் யாராவது பெரிய மணி ஒன்றை ஒலித்துக்கொண்டிருப்பார் (டங்.. டங். என்று). கடைசியில் அஷ்டாவதானி, மொத்தம் எத்தனைதடவை மணிகள் அடித்தார் என்றும் சொல்லுவார்.

  ReplyDelete
  Replies
  1. 'நெல்லைத் தமிழன் January 29, 2017 at 4:32 PM

   வாங்கோ ..... வணக்கம்.

   //மிகுந்த திறமைதான். இதுக்கெல்லாம் கூர்த்த மதி வேண்டும். (focused). 'மதி'க்கே வழியைக் காணோம். இதில் 'கூர்த்த' மதிக்கு எங்க போக.//

   மிகவும் கரெக்ட் ஆகச் சொல்லிவிட்டீர்கள். சந்தோஷம்.

   //கணிதமேதை சகுந்தலா தேவி அவர்களும் இதுபோன்றே மிகத் திறமை பெற்றவர்.//

   தெரியும். அவரின் புத்தகம் ஒன்றில் இருந்த சில கஷ்டமான கணக்குகளுக்கு விடை காண நானும் ஓர் ஆர்வத்தில் முயன்றுள்ளேன். அவைகளில் பலவற்றில் நானே சரியான விடைகளைப் கண்டுபிடித்து (பிறகு கடைசி பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விடையுடன் ஒப்பிட்டுப்பார்த்து) வெற்றியும் பெற்று எனக்குள் மகிழ்ந்துள்ளேன். அது ஒரு காலம். 15-20 ஆண்டுகளுக்கு முன்பு.

   //(ஒருவேளை நாம நம்ம மூளையை ரொம்ப உபயோகப்படுத்துவதால், உபயோகப்படுத்தாத பகுதி ரொம்பக் குறைந்துவிடுகிறதோ).//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இருக்கலாம். இருக்கலாம். ஆனால் நாம் நம் மூளையை எவ்வளவுக்கெவ்வளவு உபயோகப்படுத்துகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது, நன்கு சாணை பிடித்த கத்தி போல கூர்மையாகும் எனக் கேள்விப்பட்டுள்ளேன். இல்லாவிட்டால் சுத்தமாகத் துருப்பிடித்து விடும் எனவும் சொல்லுவார்கள்.

   >>>>>

   Delete
  2. கோபு >>>>> நெல்லைத்தமிழன் (2)

   //ராகம் ஆலாபனை செய்யற அளவு வித்தை தெரிந்தவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்களா?//

   என் ஒருவனைத்தவிர அங்கு வந்திருந்த அனைவரும் ராகம், தாளம், பல்லவி, ஆலாபனை ஆகியவற்றில் கரை கண்டவர்களாகவே எனக்குக் காட்சியளித்தார்கள்.

   இசைகளில் ஏதோ சிலவற்றை மட்டும், அதுவும் சில சமயங்களில் மட்டும் கேட்டு ரஸிப்பேனே தவிர, எனக்கும் இந்த இசைகளுக்கும் .... இசை பற்றிய என் அறிவிக்கும் வெகு தூரம் .... ஸ்வாமீ.

   //அல்லது கர்'நாடிக் பாடலைப் பாடினாலே போதுமா?//

   பாடலைப்பாடினால் அதன் ராகத்தைக் கண்டுபிடிப்பது தனக்கு வெகு சுலபமாகப் போய் விடும் என்பதால் பாட வேண்டாம் எனச் சொல்லிவிட்டார், அந்த அஷ்டாவதானி அவர்கள். பாட எழுந்தவர்களிடம் ராகத்தை மட்டுமே ஆலாபனை செய்யச் சொல்லிவிட்டார். [நேரமும் மிச்சமாகுமே]

   //நீங்கள் ஏதேனும் ஆலாபனம் செய்தீர்களா?//

   இல்லை. அது பற்றி எனக்கு எந்தவொரு சிறு அறிவும் கிடையாது, ஸ்வாமீ.

   //இன்னும் 3 திறமைகள் என்ன என்று படிக்கவேண்டும்.//

   சந்தோஷம். படியுங்கோ.

   //நெல்லையில், இவ்வாறு அஷ்டாவதானி perform பண்ணும்போது, பக்கத்தில் யாராவது பெரிய மணி ஒன்றை ஒலித்துக்கொண்டிருப்பார் (டங்.. டங். என்று). கடைசியில் அஷ்டாவதானி, மொத்தம் எத்தனைதடவை மணிகள் அடித்தார் என்றும் சொல்லுவார்.//

   தெரியும். மணி மட்டுமல்ல. அடிக்கடி அவரின் முதுகுப்பக்கம் ஒருவர் ஒரு தட்டு தட்டிவிட்டோ அல்லது ஏதேனும் எழுத்துக்களோ, எண்களோ எழுதிவிட்டோ போவார். அவர் அது போல மொத்தம் எத்தனை முறை தட்டினார், என்னென்ன எழுதினார் என்பதையும் நினைவில் வைத்துச் சொல்ல வேண்டியிருக்கும்.

   அதுபோல கடந்த நூறாண்டுகளில் உள்ள எந்த ஒரு தேதியையும், மாதத்தையும், வருடத்தையும் நாம் சொன்னால், அன்று என்ன கிழமை என்பதையும் உடனடியாக மிகச் சரியாகச் சொல்லுவார்கள்.

   இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
 6. சே சே இம்முறையும் 1ஸ்ட்டா வர முடியல்ல:(.

  இங்கு சொல்லப்பட்டிருக்கும் 5 பகுதியும் மிகவும் கஸ்டமானதாகவே இருக்கு.. இது சாதாரண மக்கள் யாராலுமே முடியாத விஷயம் ஸ்பெசல் ஐகியூ இருக்கோணும்....
  இது என்னிடம் சத்தியமா இல்லை என்பதை இந்த தேம்ஸ் கரையின் மீதிருக்கும் பபபபபச்சைப் பாசியின்மேல் அடிச்சுச் சத்தியம் செய்கிறேன்ன்ன்ன்:))..

  ReplyDelete
  Replies
  1. athira January 29, 2017 at 5:04 PM

   வாங்கோ அதிரா, வணக்கம்.

   //சே சே இம்முறையும் 1ஸ்ட்டா வர முடியல்ல:(.//

   அதனால் என்ன? எப்படியோ நீங்க இங்கு வந்ததில் மகிழ்ச்சியே. ஒரு வகுப்பின் அனைத்து மாணவர்களும் First Rank வாங்க முடியுமா என்ன?

   ஆறாவதாக வந்துள்ளீர்கள். அதனால் உங்களுக்கு ’ஆறுமுகன்’ அருள் உண்டு

   யார் அந்த ஆறுமுகன் என்றால் .... நீங்க ஒருமுறை வைரத்தோடு போடுவதாக வள்ளிக்கு நேர்த்திக்கடன் வைத்துள்ளதாகவும், அதுவும் பலரிடமிருந்து மடிப்பிச்சை வாங்கி அந்த நேர்த்திக்கடனை செய்ய நினைப்பதாகவும் சொல்லி .... எங்களிடமிருந்தெல்லாம் டொனேஷன் அனுப்பச் சொல்லிச் சொல்லியிருந்தீங்களே, அதே வள்ளியின் புருஷன் தான் இந்த ஆறுமுகன். :)

   //இங்கு சொல்லப்பட்டிருக்கும் 5 பகுதியும் மிகவும் கஸ்டமானதாகவே இருக்கு.. இது சாதாரண மக்கள் யாராலுமே முடியாத விஷயம் ஸ்பெசல் ஐகியூ இருக்கோணும்.... இது என்னிடம் சத்தியமா இல்லை என்பதை இந்த தேம்ஸ் கரையின் மீதிருக்கும் பபபபபச்சைப் பாசியின்மேல் அடிச்சுச் சத்தியம் செய்கிறேன்ன்ன்ன்:))..//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! எனக்கும் இதுபோன்ற ஐக்க்யூ ஏதும் இல்லவே இல்லை என்பதை இங்குள்ள (சொட்டுத்தண்ணிகூட இல்லாக்) காவிரி ஆற்று மணலின் மீது அடித்துச் சொல்லிக்கொள்கிறேன். :))

   Delete
  2. ஹா ஹா ஹா:).. வர வர எல்லோரையும் அதிராபோலவே எழுதப் பழக்கிடுவேன்ன்:))

   Delete
  3. athira February 7, 2017 at 5:40 PM

   //ஹா ஹா ஹா:).. வர வர எல்லோரையும் அதிராபோலவே எழுதப் பழக்கிடுவேன்ன்:))//

   மிக்க மகிழ்ச்சி, அதிரா. :))))))))))

   Delete
 7. தமிழ் நாட்டில்தான் ஒரு ஆண் குழந்தை 7/8 வயது இருக்கும்.. அவரும் நிறைய எண்களை ஞாபகப்படுத்திச் சொல்றார் என முன்பு பரவலாகப் பேசினார்கள், இப்போ அவரின் பேச்சேதும் வருவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. athira January 29, 2017 at 5:05 PM

   //தமிழ் நாட்டில்தான் ஒரு ஆண் குழந்தை 7/8 வயது இருக்கும்.. அவரும் நிறைய எண்களை ஞாபகப்படுத்திச் சொல்றார் என முன்பு பரவலாகப் பேசினார்கள், இப்போ அவரின் பேச்சேதும் வருவதில்லை.//

   ஆம். நிறைய குழந்தைகளிடம் தனித்திறமைகள் இருக்கும். திருக்குறளின் 1330 குறள்களையும் அப்படியே மனப்பாடம் செய்து, எந்த வரிசை எண்ணுக்கான குறளைக் கேட்டாலும் சொல்லக்கூடிய குழந்தைகள் உண்டு. அது போல ‘ஒரு சிறிய’ வார்த்தையைச் சொன்னால் அது எந்தெந்த குறள்களில் வருகிறது எனச் சொல்லும் குழந்தைகளும் உண்டு. ஏதாவது ஒரு குறளின் முடிவு வார்த்தையை மட்டும் சொன்னால் அது போல வார்த்தையுடன் முடியும் குறளை அல்லது குறள்களைச் சொல்லும் குழந்தைகளும் உண்டு. ஒவ்வொரு குறள்களுக்கும் அழகாக அர்த்தம் விளக்கிச் சொல்லக்கூடியவர்களும் உண்டு.

   இன்று (05.02.2017) திருச்சி தினமலர் செய்தித்தாளின் பக்கம் எண்: 13 இல் ஓர் அதிசயமான செய்தியினைப் படித்து மகிழ்ந்தேன்.

   செய்தியின் தலைப்பு: 10 நாட்களில் 100 திருக்குறள்கள் ஒப்பிக்கணும். போதை மாணவர்களுக்கு நூதன நிபந்தனையுடன் ஜாமீன்.

   கோவை மேட்டுப்பாளயத்தில், போதையால் நிகழ்ந்துள்ள தகராறில், போதையுடன் மூன்று மாணவர்கள் குற்றவாளிகளாகப் பிடிபட்டுள்ளனர். போலீஸார் அவர்களைக் கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, மேஜிஸ்ட்ரேட்டிடம் கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர். வழக்கை விசாரித்த மேஜிஸ்ட்ரேட் சுரேஷ்குமார் என்பவர், இந்த மூன்று மாணவர்களுக்கும், மேற்படி நூதனமான நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளார். :)

   Delete
 8. Replies
  1. Shakthiprabha January 29, 2017 at 6:05 PM

   வாங்கோ ஷக்தி, வணக்கம்.

   //wow amazing....Salute to his talent//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 9. //இதுபோன்ற பல தகவல்களை அந்த அஷ்டாவதானியின் மூளை தன்னுள் உடனுக்குடன் கிரஹித்துக்கொண்டு, ஏதேதோ கணக்குப்போட்டு வைத்துக்கொண்டு, கடைசியில் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி வரிசைக்கிரமமாகச் சொல்லி அசத்துகிறது என்பதுதான் மிகவும் ஆச்சர்யமானதோர் விஷயமாகும்.//

  ஆச்சர்யம்மான விஷயம் தான்.

  அஷ்டாவதானி அவர்கள் செய்து காட்டியதை அழகாய் விளக்கிய நீங்களும் மிக திறமையானவர்,உங்கள் திறமை வியக்க வைக்கிறது.

  பள்ளி பருவத்தில் கணிதமேதை சகுந்தலா அவர்கள் பள்ளிக்கு வந்து எவ்வளவு பெரிய கணக்குகளுக்கு விடை சொல்லும் போது வியப்பில் விழி விரிய அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தோம், எங்கள் கணக்கு டீச்சர்தான் நிறைய கணக்குகளை போட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

  அப்புறம் அஷ்டாவதானி ராமையா அவர்கள் திருவெண்காடு வந்து இருந்தார்கள் அவர் நிகழ்ச்சி பார்த்து வியந்து இருக்கிறேன்.

  அடுத்து நீங்கள் சொல்ல போக்கும் அதியநிகழ்வை படிக்க ஆவலாக இருக்கிறேன்..
  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு January 29, 2017 at 6:37 PM

   வாங்கோ மேடம். வணக்கம்.

   **இதுபோன்ற பல தகவல்களை அந்த அஷ்டாவதானியின் மூளை தன்னுள் உடனுக்குடன் கிரஹித்துக்கொண்டு, ஏதேதோ கணக்குப்போட்டு வைத்துக்கொண்டு, கடைசியில் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி வரிசைக்கிரமமாகச் சொல்லி அசத்துகிறது என்பதுதான் மிகவும் ஆச்சர்யமானதோர் விஷயமாகும்.**

   //ஆச்சர்யம்மான விஷயம் தான்.//

   சந்தோஷம், மேடம்.

   //அஷ்டாவதானி அவர்கள் செய்து காட்டியதை அழகாய் விளக்கிய நீங்களும் மிக திறமையானவர், உங்கள் திறமை வியக்க வைக்கிறது.//

   ஆஹா, மிகவும் சந்தோஷம், மேடம். :)

   //பள்ளி பருவத்தில் கணிதமேதை சகுந்தலா அவர்கள் பள்ளிக்கு வந்து எவ்வளவு பெரிய கணக்குகளுக்கு விடை சொல்லும் போது வியப்பில் விழி விரிய அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தோம், எங்கள் கணக்கு டீச்சர்தான் நிறைய கணக்குகளை போட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அப்புறம் அஷ்டாவதானி ராமையா அவர்கள் திருவெண்காடு வந்து இருந்தார்கள் அவர் நிகழ்ச்சி பார்த்து வியந்து இருக்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி, மேடம்.

   //அடுத்து நீங்கள் சொல்ல போக்கும் அதியநிகழ்வை படிக்க ஆவலாக இருக்கிறேன்..//

   தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
 10. பிரமிப்பாக இருக்கிறது அய்யா!

  ReplyDelete
  Replies
  1. S.P.SENTHIL KUMAR January 29, 2017 at 6:49 PM

   //பிரமிப்பாக இருக்கிறது அய்யா!//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 11. இந்த நிகழ்ச்சியை, வார்த்தைகளைக்கொண்டு விவரிப்பது எவ்வாறு என்று வியந்துகொண்டிருந்தேன் ...தாங்கள் தேர்ந்த எழுத்தாளர் ஆயிற்றே ..ஆகவே தான் தங்களுக்கு இது சுலபமாக சாத்தியமாயிற்று ...மிகவும் நன்றி ...

  magic square -மாயச்சதுரம் பற்றி :- மேலிருந்து கீழ் , மற்றும் இடமிருந்து வலம் மட்டும் அல்ல , இரண்டு குறுக்காகவும் கூட
  ( not only horizontally and vertically , but also diagonally,you get the same total )
  ஒரே கூட்டுத் தொகை வருகிறது என்பதையும் கவனிக்கவும் !

  மாலி

  ReplyDelete
  Replies
  1. V Mawley January 29, 2017 at 9:21 PM

   வாங்கோ என் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய அஷ்டாவதானி ஸார். தங்களுக்கு முதலில் என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

   //இந்த நிகழ்ச்சியை, வார்த்தைகளைக்கொண்டு விவரிப்பது எவ்வாறு என்று வியந்துகொண்டிருந்தேன் ... தாங்கள் தேர்ந்த எழுத்தாளர் ஆயிற்றே ... ஆகவே தான் தங்களுக்கு இது சுலபமாக சாத்தியமாயிற்று ... மிகவும் நன்றி ...//

   அடியேன் எப்போதுமே மிக மிகச் சாதாரணமானவன் மட்டுமே, ஸார். ஏதோ எனக்குக் கொஞ்சம் எழுத வருவது, தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசீர்வாதம் மட்டுமே.

   //magic square - மாயச்சதுரம் பற்றி :- மேலிருந்து கீழ் , மற்றும் இடமிருந்து வலம் மட்டும் அல்ல , இரண்டு குறுக்காகவும் கூட ( not only horizontally and vertically, but also diagonally, you get the same total ) ஒரே கூட்டுத் தொகை வருகிறது என்பதையும் கவனிக்கவும் ! - மாலி//

   ஆஹா, ஆச்சர்யம் + அற்புதம் ஸார். இந்த ஒரு Aspect ஐ ஏனோ நான் கவனிக்கத்தவறி விட்டேன், ஸார்.

   அதற்காக என்னைத் தாங்கள் மன்னிக்க வேண்டும், ஸார்.

   இதை எப்படி நான் கவனிக்கத் தவறினேன் என்பதை இப்போது நினைத்தாலும் எனக்கு மிகவும் வெட்கமாகவும், கூச்சமாகவும் உள்ளது, ஸார்.

   என் சிற்றறிவுக்கு சின்னதொரு தூண்டுதலாகத் தாங்களே இங்கு வந்து சொல்லியுள்ளதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன், ஸார்.

   தங்களின் அன்பான வருகைக்கும் என் அறிவுக்கண்ணை திறந்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   தங்கள் மேல் தனிப் பிரியமுள்ள
   கோபு

   Delete
  2. Respected & Dear Sir,

   Just now, I have made the necessary corrections in that particular paragraph.

   My sincere thanks to you, once again, Sir. - vgk

   Delete

 12. திரு.கனகசுப்புரத்தினம் அவர்கள் எட்டு அல்ல 16 கவனகர். அவரைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். vedio link
  https://youtu.be/FYwWC6F5NT4


  ReplyDelete
  Replies
  1. Pattabi Raman January 29, 2017 at 9:46 PM

   வாங்கோ அண்ணா, நமஸ்காரங்கள் + வணக்கங்கள் அண்ணா.

   //திரு. கனக சுப்புரத்தினம் அவர்கள் எட்டு அல்ல 16 கவனகர். அவரைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். vedio link : https://youtu.be/FYwWC6F5NT4 //

   முழுவதுமாகப் பார்த்தேன். ரஸித்தேன். வியந்தேன். மகிழ்ந்தேன் ..... அண்ணா.

   தங்களின் அன்பான + அபூர்வ வருகைக்கும், ஓர் உபயோகமான இணைப்பினைக் கொடுத்து ஓர் அரிய பெரிய நிகழ்ச்சியினைக் கண்குளிரக் காண வாய்ப்பளித்ததற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், அண்ணா.

   இப்படிக்கு உங்களின் அன்புத் தம்பி
   கோபு

   Delete
 13. வெகு சாதாரணமாகத் தோற்றமளிக்கும் அவரிடம் எத்தனை அசாதரணமானத் திறமை!..

  பேப்பரும் கையுமாய் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களிடம் எப்படியாவது அவரைத் தோற்கடித்து விடவேண்டும்
  என்கிற வேகம் தெரிவது போலத (படத்தைப் பார்க்கையில்) தோன்றுகிறது.

  சொல்லப்போனால் இவர் பணியாற்றிய யூ.கோ. வங்கிக்கு இவர் ஒரு அஸெட்டாகத் தான் இருந்திருப்பார் என்றூ தெரிகிறது.

  தாத்தாசாரியார் ஹவுஸூக்குள் நுழையும் போதே காலணியை கழட்டி விட்டு விட்டுத் தான் நுழைய வேண்டும் போலிருக்கு.

  இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நேரில் பார்த்துத் தான் வியக்க முடியும். படமெல்லாம் போட்டு விளக்கிய உங்கள் திறமையால் 90% நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டிருக்கிறது.
  நேரில் பார்க்கும் பொழுது கைத்தட்டல் ஒலி, அந்த சூழ்நிலையின் ஆர்வம் இதெல்லாம் சேர்ந்து அந்த 10%-ஐக் கூட்டியிருக்கும். அவ்வளவு தான்.

  திரு. மஹாலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த அரிய அனுபவத்தை எங்களுக்கும் நல்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஜீவி January 29, 2017 at 9:54 PM

   வாங்கோ ஸார், அடியேனின் நமஸ்காரங்கள் + வணக்கங்கள்.

   //வெகு சாதாரணமாகத் தோற்றமளிக்கும் அவரிடம் எத்தனை அசாதரணமானத் திறமை!..//

   ஆமாம், ஸார். நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.

   //பேப்பரும் கையுமாய் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களிடம் எப்படியாவது அவரைத் தோற்கடித்து விடவேண்டும் என்கிற வேகம் தெரிவது போலத் (படத்தைப் பார்க்கையில்) தோன்றுகிறது.//

   :) இருக்கலாம். படத்தைப் பார்த்தால் அப்படியும் தோன்றலாம் :)

   //சொல்லப்போனால் இவர் பணியாற்றிய யூ.கோ. வங்கிக்கு இவர் ஒரு அஸெட்டாகத் தான் இருந்திருப்பார் என்று தெரிகிறது.//

   இதில் சந்தேகமே இல்லை. ஓய்வெடுக்கும் வயதாகிவிட்டது என்ற ஒரே காரணத்தால், பொக்கிஷமாகக் கிடைத்துள்ள ’அஸெட்டை’ தங்களிடம் தக்க வைத்துக்கொள்ள இயலாத ’அஸடு’களாக இருந்து கோட்டை விட்டுள்ளனர் என்றுதான் நானும் எனக்குள் நினைத்துக்கொண்டேன்,

   //தாத்தாசாரியார் ஹவுஸூக்குள் நுழையும் போதே காலணியை கழட்டி விட்டு விட்டுத் தான் நுழைய வேண்டும் போலிருக்கு.//

   கழட்டி வைப்பதோடு மட்டுமல்லாமல், நம் கால்களை சுத்தமாக அலம்பித் துடைத்துக்கொண்டு, பய பக்தியுடன் மட்டும்தான் செல்ல வேண்டும். (இருப்பினும் அதற்கான ஜல வசதிகள் அங்கு செய்யப்படவில்லை)

   //இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நேரில் பார்த்துத் தான் வியக்க முடியும். படமெல்லாம் போட்டு விளக்கிய உங்கள் திறமையால் 90% நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டிருக்கிறது. நேரில் பார்க்கும் பொழுது கைத்தட்டல் ஒலி, அந்த சூழ்நிலையின் ஆர்வம் இதெல்லாம் சேர்ந்து அந்த 10%-ஐக் கூட்டியிருக்கும். அவ்வளவு தான். //

   ஏதோ மிகச் சாதாரணமான என்னால் இயன்றவரை மட்டுமே இங்கு எழுத முடிந்துள்ளது. இதையே எத்தனை பேர்கள் புரிந்து கொண்டார்களோ?

   என்ன இருந்தாலும் இதையெல்லாம் நேரில் கண்டு ரஸிப்பது போல, எழுத்துக்களில் வரவே வராது.

   எனினும் தாங்கள் என் எழுத்துக்களுக்கு அளித்துள்ள அதிகபக்ஷமான 90% மார்க்குகளுக்கு என் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

   //திரு. மஹாலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த அரிய அனுபவத்தை எங்களுக்கும் நல்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், எங்கள் இருவரையும் பாராட்டி, வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   Delete
 14. அட! நமக்குத் தெரிந்த திரு. Mawley தான் அந்த அதிதிறமை கொண்ட அஷ்டாவதானியா?.. ரொம்ப சந்தோஷம் சார்!

  ReplyDelete
  Replies
  1. ஜீவி January 29, 2017 at 10:12 PM

   //அட! நமக்குத் தெரிந்த திரு. Mawley தான் அந்த அதிதிறமை கொண்ட அஷ்டாவதானியா?.. ரொம்ப சந்தோஷம் சார்!//

   ஆமாம் ஸார். அந்த ‘V. Mawley' என்ற பெயரில் மட்டுமே நமக்குத் தெரிந்துள்ள, நமக்கெல்லாம் அபூர்வமாகப் பின்னூட்டமிட்டுவரும் பதிவரான அவரேதான்.

   நம்மிடம் இதுபோன்ற வியப்பூட்டும் திருவிளையாடல்கள் நடத்துவதில், திருவிடை மருதூர் ’மஹாலிங்கம்’ ஆகிய சிவபெருமானே தான்.

   இந்தத் திருவிடை மருதூர் கோயிலில் குடிகொண்டுள்ள ’மஹாலிங்கம்’ பற்றிய செய்திகளை, நான் என் ஒரு தொடரில் மிகச்சிறிய 10 பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்துள்ளேன்.

   தலைப்பு: அதிசய நிகழ்வு - நெஞ்சை உருக்கும் சம்பவம் - மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா!

   ஆரம்பப் பகுதிக்கான இணைப்பு:
   http://gopu1949.blogspot.in/2013/06/11.html

   Delete
 15. அவருக்கு இறைவன் கொடுத்த வரம். மீண்டும் ஒருமுறை நாளைக் காலை இந்த பதிவைப் படித்தால் தான் எனக்கு புரியும் என்று நினைக்கிறே. தொடர்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ January 29, 2017 at 10:31 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //அவருக்கு இறைவன் கொடுத்த வரம்.//

   மிகச்சரியாகச் சொல்லி விட்டீர்கள்.

   //மீண்டும் ஒருமுறை நாளைக் காலை இந்த பதிவைப் படித்தால் தான் எனக்கு புரியும் என்று நினைக்கிறேன். தொடர்கின்றேன்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார். மெதுவாகவே படியுங்கோ. தொடரப்போவதற்கும் என் நன்றிகள்.

   Delete
 16. தாங்கள் விவரித்துள்ள நிகழ்வுகள் மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தன! வெகு சிலருக்கு மட்டுமே இந்த நினைவாற்றல் அபார சக்தியுடன் விளங்கும். இளம் வயதென்றால் இதில் அத்தனை வியப்பில்லை. வயதாக வயதாகத்தான் நினைவாற்றல் குறையத்தொடங்குகிறது. அதனால் இவரின் திறமை மிகவும் அசத்துகிறது!!

  அட, நமக்குத் தெரிந்த மாலி அவர்களா இவர்? மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அவருக்கு!! அழகாய் விவரிக்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மனோ சாமிநாதன் January 29, 2017 at 11:02 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //தாங்கள் விவரித்துள்ள நிகழ்வுகள் மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தன!//

   மிகவும் சந்தோஷம் மேடம்.

   //வெகு சிலருக்கு மட்டுமே இந்த நினைவாற்றல் அபார சக்தியுடன் விளங்கும்.//

   ஆமாம் மேடம். அபாரமான விஷயத்தை, சக்தியுடன் வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

   //இளம் வயதென்றால் இதில் அத்தனை வியப்பில்லை. வயதாக வயதாகத்தான் நினைவாற்றல் குறையத்தொடங்குகிறது. அதனால் இவரின் திறமை மிகவும் அசத்துகிறது!!//

   திறமை வாய்ந்த தாங்கள் சொல்லும் இதுதான் மிகவும் அசத்தலாக உள்ளது. உங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் மேடம்.

   //அட, நமக்குத் தெரிந்த மாலி அவர்களா இவர்? மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அவருக்கு!! //

   சாக்ஷாத் அவரேதான் மேடம்.

   //அழகாய் விவரிக்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, விரிவான, அசத்தலான கருத்துக்களுக்கும், இனிய வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
 17. Excellant performance by Sri. Ashtavathani. Thank you for sharing.

  ReplyDelete
  Replies
  1. Nagarajan Narayanan January 30, 2017 at 12:16 AM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //Excellant performance by Sri. Ashtavathani. Thank you for sharing.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

   Delete
 18. வணக்கம் ஸார்,

  மேற்கூறிய நிகழ்ச்சியை நேரில் காணும் வாய்ப்பை இழந்துவிட்டேன் என்பதை நினைத்து மிகவும் வருந்துகிறேன். அடுத்து எப்பொழுது இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்பதை தெரிவியுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. Nagarajan Narayanan January 30, 2017 at 12:32 AM

   //வணக்கம் ஸார்,//

   வணக்கம் .... மாப்பிள்ளை ஸார்.

   //மேற்கூறிய நிகழ்ச்சியை நேரில் காணும் வாய்ப்பை இழந்துவிட்டேன் என்பதை நினைத்து மிகவும் வருந்துகிறேன்.//

   அன்று நான் ஒருவன் மட்டுமே போகவர பேசிக்கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறி, திடீரென்று கிளம்பிப் போனேன்.

   என்னைப்போல தங்களுக்கும் இதில் ஆர்வம் இருக்கும் என எனக்கு ஏனோ தோன்றவில்லை.

   என்னுடன் வர துணைக்கு அன்று ஆள் தேடினேன்.

   நானே இந்த நிகழ்ச்சியை மறந்துபோய், ஓர் REMINDER SMS கிடைத்து அவசரத்தில் புறப்பட்டதால் யாரும் எனக்கு அன்று சரிவர துணையாகக் கிடைக்கவில்லை.

   //அடுத்து எப்பொழுது இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்பதை தெரிவியுங்கள்.//

   நிச்சயமாகத் தெரிவிக்கிறேன். முடிந்தால் உங்களையும், உங்களின் மைத்துனர்களும், என் மீது பிரியமுள்ள மறுமான்களுமான சிலரையும் என்னுடனேயே கூட்டிச்செல்ல முயற்சிக்கிறேன். :)

   அன்புடன் கோபு மாமா

   Delete
 19. நானும் திரு ராமையா அவர்களின் நிகழ்ச்சியை சென்னை தூர்தர்ஷனில் பார்த்திருக்கேன். எங்க பள்ளிக்கு தசாவதானி ஒருத்தர் வந்து செய்து காட்டினார். இந்த நிகழ்ச்சியைத் தவற விட்டு விட்டேனே என வருத்தமாக இருக்கிறது. சமையல் செய்கையில் உப்புப் போட்டோமா இல்லையா என்பதே மறந்துவிடும்போது இத்தனை விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் அதிசயம் என்பதோடு கடவுள் கொடுத்த பரிசும் கூட!

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam January 30, 2017 at 3:08 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //நானும் திரு ராமையா அவர்களின் நிகழ்ச்சியை சென்னை தூர்தர்ஷனில் பார்த்திருக்கேன். எங்க பள்ளிக்கு தசாவதானி ஒருத்தர் வந்து செய்து காட்டினார்.//

   மிகவும் சந்தோஷம் மேடம்.

   //இந்த நிகழ்ச்சியைத் தவற விட்டு விட்டேனே என வருத்தமாக இருக்கிறது.//

   தாங்கள் இதை நினைத்து வருந்திக்கொண்டே இருக்காமல் இருக்க, சில ஆலோசனைகள் இதன் பகுதி-1 இல் உங்களுக்கு மட்டுமே (பிரத்யேகமாக) என் பதிலாகக் கொடுத்துள்ளேன்.

   //சமையல் செய்கையில் உப்புப் போட்டோமா இல்லையா என்பதே மறந்துவிடும்போது இத்தனை விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் அதிசயம் என்பதோடு கடவுள் கொடுத்த பரிசும் கூட!//

   மிகச்சரியான உதாரணத்துடன் வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

   மிகவும் அதிசயம் + கடவுள் கொடுத்த பரிசுதான்.

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
 20. மலைக்க வைக்கிறது
  மீண்டும் ஒருமுறை படித்தும்
  முயன்றும் பார்க்கவேண்டும்
  பகிர்வுக்கும் தொட்ரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. Ramani S January 30, 2017 at 6:14 AM

   வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

   //மலைக்க வைக்கிறது. மீண்டும் ஒருமுறை படித்தும்
   முயன்றும் பார்க்கவேண்டும். பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ‘மலைக்க வைக்கும்’ கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   Delete
 21. எண்கவனகர் திரு மகாலிங்கம் அவர்கள் தங்களை வியப்பில் ஆழ்த்தியதை அழகாக கோர்வையாக தந்திருக்கிறீர்கள். நேரில் பார்ப்பது போல் விவரித்திருக்கிறீர்கள். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி January 30, 2017 at 5:46 PM

   வாங்கோ ஸார். வணக்கம் ஸார்.

   //எண்கவனகர் திரு.மகாலிங்கம் அவர்கள் தங்களை வியப்பில் ஆழ்த்தியதை அழகாக கோர்வையாக தந்திருக்கிறீர்கள். நேரில் பார்ப்பது போல் விவரித்திருக்கிறீர்கள்.//

   தங்களின் இந்தப் பாராட்டுகளுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், ஸார். :)

   //அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

   Delete
 22. பிரமிப்பான விஷயங்கள்.. இதுவரை இம்மாதிரியான அஷ்டாவதான நிகழ்வுகளைச் சந்தித்ததில்லை..

  தங்களின் நேர்முக வர்ணனை மேலும் சிறப்பூட்டுகின்றது..

  ReplyDelete
  Replies
  1. துரை செல்வராஜூ January 31, 2017 at 9:37 AM

   வாங்கோ பிரதர். வணக்கம்.

   //பிரமிப்பான விஷயங்கள்.. இதுவரை இம்மாதிரியான அஷ்டாவதான நிகழ்வுகளைச் சந்தித்ததில்லை..//

   அப்படியா? !!!!!

   //தங்களின் நேர்முக வர்ணனை மேலும் சிறப்பூட்டுகின்றது..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, பிரதர். :)

   Delete
 23. அடேயப்பா... எவ்வளவு திறமைகள்... மலைப்பில் வாயடைத்துப் போகிறது... இப்படியான திறமைகள் அமைவது வெகு அபூர்வம்... ஐயாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். மிகத் தெளிவாகவும் புரியும்படியும் எழுதியமைக்காக உங்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுகளும் கோபு சார்.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி January 31, 2017 at 2:24 PM

   வாங்கோ மேடம். வணக்கம் மேடம்.

   //அடேயப்பா... எவ்வளவு திறமைகள்... மலைப்பில் வாயடைத்துப் போகிறது... இப்படியான திறமைகள் அமைவது வெகு அபூர்வம்... ஐயாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   //மிகத் தெளிவாகவும் புரியும்படியும் எழுதியமைக்காக உங்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுகளும் கோபு சார்.//

   எல்லாமே ’விமர்சன வித்தகி’யாகிய உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது மட்டுமே. :)))))

   http://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html

   http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

   தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.

   Delete
 24. படிக்கும்போதேபிரமிப்பாக இருக்கிறது. இவ்வளவு திறமைகளும் ஒருவரிடத்திலேவா. சிறுவயது முதற்கொண்டே நினைவாற்றல் பயிற்சி ஏதானும் எடுத்துக்கொண்டிருப்பார்களோ...

  ReplyDelete
  Replies
  1. ஆல் இஸ் வெல்....... January 31, 2017 at 5:54 PM

   வாங்கோ, வணக்கம்.

   //படிக்கும்போதேபிரமிப்பாக இருக்கிறது.//

   அப்படியா? மிகவும் சந்தோஷம். :)

   //இவ்வளவு திறமைகளும் ஒருவரிடத்திலேவா.//

   ஆமாம்.

   //சிறுவயது முதற்கொண்டே நினைவாற்றல் பயிற்சி ஏதானும் எடுத்துக்கொண்டிருப்பார்களோ...//

   தெரியலையே ......

   தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   Delete
 25. இந்த பதிவுக்கு வந்தேன்.

  கணக்கை எல்லாம் பார்த்ததும் பயந்து ஓடிட்டேன். ஏன்னா இங்க கணக்கில BODY யும் WEAK BASEMENT ம் WEAK.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya February 2, 2017 at 6:50 PM

   //இந்த பதிவுக்கு வந்தேன்.//

   அம்மாடி .... ஒருவழியா வந்துட்டேளா! வாங்கோ, வணக்கம்.

   //கணக்கை எல்லாம் பார்த்ததும் பயந்து ஓடிட்டேன்.//

   ஏன்? சர்வீஸில் இருந்து சம்பளம் வாங்கும் நாட்களில் PAY SLIP பார்த்து பயப்படாமல், கணக்குப் போட்டுக்கொண்டு ஜாலியாகத்தானே இருந்....’தேள்’

   (கொடுக்கு மிகவும் நீண்ட ’தேள்’ .... நம்ம ஜெயா)

   //ஏன்னா இங்க கணக்கில BODY யும் WEAK BASEMENT ம் WEAK.//

   அதனால் என்ன? WEAK ஆகவும், SLIM ஆகவும், சுறுசுறுப்பாகவும், ஊசி மிளகாய் போலவும் உள்ள ஜெயா போன்றவர்களைத்தான் எனக்கு மிகவும் பிடிக்குமாக்கும். :)

   Delete
 26. அஷ்டாவதானி திரு மகாலிங்கம் அவர்களை மானசீகமாக வலம் வந்து வணங்குகிறேன். கொஞ்சம் வாயடைத்துப் போய் இருக்கிறேன். HATS OFF TO SRI MAHALINGAM. அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வைத்த கோபு அண்ணாவுக்கு ஜே, ஜே.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya February 2, 2017 at 6:54 PM

   //அஷ்டாவதானி திரு. மகாலிங்கம் அவர்களை மானசீகமாக வலம் வந்து வணங்குகிறேன். கொஞ்சம் வாயடைத்துப் போய் இருக்கிறேன். HATS OFF TO SRI MAHALINGAM.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   [இதில், ஜெயாவே கொஞ்சம் வாயடைத்துப் போய் இருப்பதாகச் சொல்வதை மட்டும் என்னால் சுத்தமாக நம்பவே முடியவில்லையாக்கும். :) ]

   //அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வைத்த கோபு அண்ணாவுக்கு ஜே, ஜே.//

   ஆஹா, ‘ஜெ’ வாயால் எனக்கு இரு ஜே ... ஜே !! மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, ஜெயா. மிக்க நன்றி.

   Delete
 27. வியந்தேன்! என் பள்ளிநாட்களில் ஒருவர் இதுபோன்று நிகழ்ச்சி நடத்தியதைப் பார்த்து அதிசயித்தேன்! திரு மகாலிங்கம் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராடுகள். நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதுபோல் தொகுக்கும் உங்களின் படைப்பாற்றலுக்கும் தலைவணங்குகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s. February 3, 2017 at 9:46 PM

   வாங்கோ ஸார், வணக்கம்.

   //வியந்தேன்! என் பள்ளிநாட்களில் ஒருவர் இதுபோன்று நிகழ்ச்சி நடத்தியதைப் பார்த்து அதிசயித்தேன்!//

   அப்படியா ! வெரி குட்.

   //திரு. மகாலிங்கம் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.//

   மிக்க மகிழ்ச்சி.

   //நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதுபோல் தொகுக்கும் உங்களின் படைப்பாற்றலுக்கும் தலைவணங்குகிறேன்!//

   தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுதல்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள், ஸார்.

   Delete
 28. என்ன ஆற்றல்!! பிரமிப்பாக இருக்கிறது! தொடர்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. Thulasidharan V Thillaiakathu

   வாங்கோ, வணக்கம்.

   //என்ன ஆற்றல்!! பிரமிப்பாக இருக்கிறது! தொடர்கிறோம்//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 29. நான் பள்ளி மனைவியாக இருந்த பொழுது ஒரு முறை எங்கள் பள்ளியில் ஒரு அஷ்டாவதானி வழங்கிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இப்போது படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. இம்மாதிரி திறமைகளை வெளிக்காட்டிய உங்களுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. Bhanumathy Venkateswaran February 8, 2017 at 12:53 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //நான் பள்ளி மனைவியாக இருந்த பொழுது ஒரு முறை எங்கள் பள்ளியில் ஒரு அஷ்டாவதானி வழங்கிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.//

   அப்படியா? இதைக் கேட்க எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   //இப்போது படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. இம்மாதிரி திறமைகளை வெளிக்காட்டிய உங்களுக்கு நன்றி!//

   தங்களின் அன்பான, அபூர்வமான வருகைக்கும், திறமையுடன் சுவாரஸ்யமாக வெளிப்படுத்தியுள்ள இனிய கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
 30. வணக்கம் கோபு சார்! கேட்கவே மலைப்பாய் இருக்கிறது. இத்தனை விஷயங்களையும் மண்டையில் ஏற்றி வரிசைக்கிரமமாய்ச் சொல்வது எப்பேர்ப்பட்ட திறமை? அஷ்டாவதனிக்கு என் பாராட்டுகள்! எங்களுக்குப் புரியும் படியாகத் தொகுத்துக் கொடுக்கும் உங்களுக்கு என் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஞா. கலையரசி February 17, 2017 at 9:03 PM

   //வணக்கம் கோபு சார்!//

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //கேட்கவே மலைப்பாய் இருக்கிறது. இத்தனை விஷயங்களையும் மண்டையில் ஏற்றி வரிசைக்கிரமமாய்ச் சொல்வது எப்பேர்ப்பட்ட திறமை? அஷ்டாவதனிக்கு என் பாராட்டுகள்!//

   மிக்க மகிழ்ச்சி மேடம்.

   //எங்களுக்குப் புரியும் படியாகத் தொகுத்துக் கொடுக்கும் உங்களுக்கு என் நன்றி!//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய நன்றிகள், மேடம்.

   Delete
 31. I record with deep regret the sudden demise of Mr. Mahalingam (Ashtavathani) on 03.11.2017 evening. :(

  Face Book message released by his daughter is given below:

  -=-=-=-=-=-

  3rd November 2017, between 6.31 and 6.35 am- my father, Mahalingam Venkatramani, breathed his last. The cancer tried to steal his mind through its power to give him pain. He had the last laugh- for he suffered no pain during those final minutes. He was at home.. with me and my mother holding him as he sat in a chair. My mother's prayers and my calling him - "Appa" ( father) were the last words he heard.. he was at home.. it happened just the way he wanted it to happen.. at home.. with his family.. I thank all those who supported us through these days.. - Matangi Mawley

  -=-=-=-=-=-

  ReplyDelete