About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, January 30, 2017

நினைவாற்றல் - பகுதி 3 of 3


பகுதி-1 க்கான இணைப்பு: 
 http://gopu1949.blogspot.in/2017/01/1-of-3.html

பகுதி-2 க்கான இணைப்பு:


On 25th January, 2017 
 a Lecture Demonstration
on Ashtaavadaanam
by
Sri V.Mahalingam, 
(Former AGM, UCO BANK - Retd.)

Time:  6.30 PM to 8 PM
Venue: Thathachariar House,
No.152, South Chitra Street, 
Srirangam, Trichy-620006.பகுதி-3 

பக்கம் எண்-1 முதல் பக்கம் எண்-5 வரை இதன் சென்ற பகுதியில் நாம் பார்த்தோம்.


பக்கம் எண்-6  [DIGITAL MEMORY DEMONSTRATION] பற்றி இப்போது நாம்   பார்ப்போம்.


பக்கம் எண்-6 ஆன  இதில் மொத்தம் 10 x 10 = 100 கட்டங்கள் போடப்பட்டுள்ளன. 


தலைப்பக்கம் 1 முதல் 10 வரை தலைப்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன

இடது கை மார்ஜின் பக்கம் A, B, C, D, E, F, G, H, I, J என முதல் 10 ஆங்கில எழுத்துக்கள் ஒன்றன்கீழ் ஒன்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு நான்கு ஸ்தான இலக்கம், எந்த ஒரு ஒழுங்கான முறைப்படியும் இல்லாமல், ஒரேயடியாக  கலந்துகட்டியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.


பார்வையாளர்களில் ஒவ்வொருவராக கேட்க அஷ்டாவதானி, அந்தக் கட்டத்தில் உள்ள அதற்கான நம்பரை மிகச்சரியாக ஒரு கரும்பலகையில் எழுதிக்காட்டி அசத்துகிறார்.


உதாரணமாக ......


What is the Value written against G8 எனக்கேட்டால், G வரிசையில் 8-வது தலைப்பு எண்ணுக்குக்கீழேயுள்ள, நான்கு ஸ்தான எண்ணான 9467 என்பது அஷ்டாவதானி அவர்களால் அங்குள்ள கரும்பலகையில் உடனடியாக எழுதிக் காட்டப்படுகிறது. 

இதுபோல அந்த, பக்கம் எண்-6 இல் உள்ள 100 நான்கு ஸ்தான எண்களையும் அவரால் மிகச் சுலபமாகச் சொல்ல முடிகிறது என்பதும் ஆச்சர்யமாக உள்ளது.
இந்த இனிய நிகழ்ச்சியின் நிறைவாக
துக்ளக் + இந்தியா டுடே இதழ்களில்
அவரின் நினைவாற்றல் பற்றி:


 Invitees are requested to bring each a pencil and pen and INDIA TODAY ENGLISH EDITION with Cover date 23 January 2017 and THUGLAK Tamil Magazine with Cover date 18 January 2017. This will help to  understand and appreciate the skills of the ASHTAVADHANI

இதுபோன்றதொரு அறிவிப்பு அவர்களின் அழைப்பிதழிலேயே கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்வையாளர்களில் பெரும்பாலானோர் மேற்படி இரு இதழ்களையும் தங்களுடன் கொண்டு வரவில்லை. அங்கிருந்த ஓரிரு பிரதிகளையே சர்குலேஷன் முறையில் பலரிடமும் வரிசையாகத் தரப்பட்டது. 

அந்த இரண்டு இதழ்களிலும் உள்ள ஏதேனும் ஒரு பக்கத்தின் எண்ணையும், ’இந்தியா டுடே’ அல்லது ’துக்ளக்’ என்பதையும் நாம் சொன்னால் போதும், அந்தப்பக்கத்தில் உள்ள முழுச்செய்திகளையும் சுருக்கமாக நமக்குச் சொல்லிவிடுகிறார் அந்த அஷ்டாவதானி. 

செய்திகளோ, படங்களோ, விளம்பரங்கள் மட்டுமே உள்ள பக்கங்களோ, கேள்வி பதில் பகுதியோ, எதுவாக இருப்பினும் டாண் டாண் எனச் சொல்லி அசத்தி விடுகிறார். 

அந்த குறிப்பிட்ட இரண்டு இதழ்களையும், இந்தப்புறம் உள்ள முன் அட்டை முதல், அந்தப் பின்புறம் உள்ள கடைசி அட்டை வரை, அதன் பக்க நம்பர்களுடன் கரைத்துக்குடித்து மண்டையில் ஏற்றியுள்ளார் என்பது அறிய நமக்கு  மிக மிக ஆச்சர்யமாகவே உள்ளது.இவ்வாறு அடுத்த ஒரு அரைமணி நேர நிகழ்ச்சி முடிந்ததும், கடைசியாக ஒருசிலர், அவரால் எவ்வாறு இதுபோன்ற ஒரு தனித்திறமையை வளர்த்துக்கொள்ள முடிந்தது என ஆர்வத்துடன் கேட்டார்கள். 

நம்பர் எண்ணிக்கைகளில் 1 to 9 and 0 ஆகிய 10 நம்பர்கள் + 26 ஆங்கில எழுத்துக்கள் + நம்பர் எண்ணிக்கைகளில் உள்ள ரோமன் லெட்டர்ஸ் போன்றவைகளை உபயோகித்து, தன் பாணியில் ஒருசில குறியீடுகளாக மாற்றிக்கொண்டு (உதாரணமாக Date of Birth of some of his Friends and Relatives, Car Registration Numbers of some of his friends போன்றவைகளை) மனதில் ஏற்றிக்கொள்வாராம். இதுபோல பழகிப்பழகி, தன் மூளையில் பலவற்றை அவர் ஓரு குறியீடாகவே (Just like Password) பதிந்து வைத்திருப்பதால், தன்னால் இவ்வாறு மேஜிக் செய்ய முடிகிறது என்று சொல்லி மகிழ்வித்தார்.

மொத்தத்தில் அன்றைய அந்த ஒன்றரை மணி நேர நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும், அனைவரையும் ஆச்சர்யப்பட வைப்பதாகவும் இருந்தது. 
அஷ்டாவதானி அவர்களுக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் உங்கள் அனைவரின் பலத்த கரகோஷங்களுடன் இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.
  


எல்லா அஷ்டாவதானிகளும், இதே போன்ற இவரின் இந்த முறையைத்தான் கடைபிடிப்பார்கள் என்று தயவுசெய்து நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமான பாணியில் தங்களின் திறமைகளை நிரூபிப்பார்கள். 

ஏற்கனவே நான் பள்ளியில் படிக்கும் சிறிய பையனாக இருந்தபோது, வேறு ஒரு அஷ்டாவதானி அவர்களின் செய்முறையை நேரில் கண்டு வியந்துள்ள அனுபவமும் எனக்கு உள்ளது. 

அதுபோல ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் தோன்றிய வேறொரு அஷ்டாவதானி, வேறொரு முறையில் சாதனைகள் செய்து மகிழ்வித்திருந்தார்.

நேற்று கூட என் அன்புக்குரிய பதிவர் அண்ணா திரு. பட்டாபிராமன் அவர்கள் (’ராமரஸம்’ வலைத்தளப் பதிவர்) தனது பின்னூட்டத்தில் கொடுத்திருந்த You Tube Link ....  https://youtu.be/FYwWC6F5NT4  மூலம் மேலும் ஒரு மிகச்சிறந்த நிபுணரின் நிகழ்ச்சியைக் கண்டு களிக்கும் பாக்யம் பெற்றேன். 

என்னதான் நான் இவரைப்பற்றியும், இவரின் தனித்திறமைகள் பற்றியும், அபூர்வமான + அதிசயமான இவரின் நினைவாற்றல்கள் பற்றியும், என்னால் இயன்றவரை, என் சிற்றறிவுக்கு எட்டியவரை,  என் எழுத்துக்களில் இங்கு வடிவமைத்து எடுத்துக்  கூறியிருப்பினும், உங்களில் பலராலும் அதனை சரிவரப் புரிந்துகொண்டு, ரஸித்து மகிழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏனோ இல்லை. 

இந்தத் தொடரின் பகுதி-1 க்கும் பகுதி-2 க்கும் கிடைத்துள்ள பின்னூட்ட எண்ணிக்கைகளின் வித்யாசத்தின் மூலம் இதனை என்னால் நன்கு, மிகச்சுலபமாக உணர முடிகிறது.

அதனால் இவரின் இதுபோன்ற நிகழ்ச்சிகளை, தாங்கள் அனைவருமே நேரில் சென்று கண்டு களிக்க வேண்டும்.  அப்போதுதான், அதைப்பற்றி நன்கு புரிந்துகொண்டு ரஸிக்கவும் முடியும். 

அடிக்கடி பல ஊர்களிலும், பல பள்ளிகளிலும், பல கல்லூரிகளிலும் இவரின் நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்து வருகிறார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளேன். அது சம்பந்தமாக ’THE HINDU’ போன்ற பிரபல செய்தித்தாள்களிலும், ’அன்றாட நிகழ்ச்சி நிரல்’ பகுதியில் விளம்பரம் செய்யப்பட்டு வருவதாகவும் பிறர் மூலம் கேள்விப்பட்டுள்ளேன்.

இதற்கு நுழைவுக் கட்டணமோ அல்லது வேறு எந்த அன்பளிப்புச் செலவுகளோ ஏதும் நமக்குக் கிடையவே கிடையாது. ஆர்வமுள்ளவர் போய்க் கலந்துகொண்டு, அவரின் தனித்திறமைகளைக் கண்டு களித்து கைதட்டிப் பாராட்டினாலே போதும் ..... அவருக்கு உடனே மேலும் ஊக்கமும், உற்சாகமும், பேரெழுச்சியும் ஏற்பட்டு அவர் மிகவும் மனம் மகிழக் கூடும். நம்மையும் அவர் என்றும் மறக்காமல் தன் நினைவாற்றலில் வைத்துக்கொள்ளவும் கூடும்.

இதில் உண்மையிலேயே ஆர்வமுள்ளவர்கள் அவரை தொலைபேசியில் அழைத்தோ அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொண்டோ, தங்களின் பெயர்களை, இப்போதே பதிவு செய்து கொண்டால், அடுத்த நிகழ்ச்சி நடைபெறும் ஊர், நாள், இடம், நேரம் முதலியனவற்றை அவரே தங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க ஏதுவாகும். 

அவரைத் தொடர்பு கொள்ள 
விரும்புவோருக்காக ....

அஷ்டாவதானி 
திரு. V. மஹாலிங்கம் அவர்கள்.
M.Com., L.L.B., C.A.I.I.B., 

Phone: 0431-2432340


Residing now at

Dhanraj Complex
B-6, First Floor
15, Veereswaram Main Road
Srirangam  
Thiruchirappalli-620 006  

-oOo-


இந்த அஷ்டாவதானி திரு. V. மஹாலிங்கம் அவர்கள், சிலரால் அன்புடன் ‘மாலி’ என்றும், வேறு சிலரால் ‘மெளலி’ என்றும் அழைக்கப் பட்டு வருகிறார். எனக்கென்னவோ அதுபோல அவர்கள், அவரைச் செல்லப்பெயரில் அழைக்கும்போதெல்லாம் சமீபத்தில் எங்கள் வீட்டில் தயாரித்த ’மாகாளி’ ஊறுகாய் மட்டுமே நினைவுக்கு வருகிறது. 

எனது நினைவாற்றல் எப்போதுமே சாப்பாடு விஷயங்களில் மட்டும் தானே !  :)


அதற்கு உதாரணமாக என் பதிவுகள் சிலவற்றின் இணைப்புகள்:


 

gopu1949.blogspot.com/2012/12/blog-post_14.html 
அடடா என்ன அழகு ..... !
அடையைத் தின்னு பழகு ..... !! 
Total No. of Comments as on 29.01.2017 = 297 


வெண்ணிலவைத் தொட்டு.....
 முத்தமிட ஆசை .....
மிளகாய்ப்பொடி கொஞ்சம் .....
தொட்டுக்கொள்ள ஆசை  .....
Total No. of Comments as on 29.01.2017 = 187


 உணவே வா .... உயிரே போ !
Total No. of Comments as on 29.01.2017 = 163

 

மீண்டும் உங்களை நான் 
என் பதிவுகளில் சந்திக்கும் வரை

என்றும் அன்புடன் தங்கள்,

 

(வை. கோபாலகிருஷ்ணன்)

79 comments:

 1. அசாத்தியமான மனிதர். அசாத்தியமான திறமை. கடவுள் எல்லோரையும் ஒரே மாதிரிதான் படைக்கிறான். தங்கள் தனித்திறமையினாலும், பயிற்சியினாலுமே இப்படி சாதனையாளர்கள் உருவாகிறார்கள். வணங்குகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். January 30, 2017 at 3:32 PM

   வாங்கோ ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’! வணக்கம்.

   //அசாத்தியமான மனிதர். அசாத்தியமான திறமை. கடவுள் எல்லோரையும் ஒரே மாதிரிதான் படைக்கிறான். தங்கள் தனித்திறமையினாலும், பயிற்சியினாலுமே இப்படி சாதனையாளர்கள் உருவாகிறார்கள். வணங்குகிறேன்.//

   மிகவும் அழகாக அருமையாகச் சொல்லிவிட்டீர்கள், ஸ்ரீராம். இந்தப்பதிவுக்குத் தங்களின் அன்பான முதல் வருகைக்கும், ஆழமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம்.

   Delete
 2. ஆவ்வ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ஸூஊஊஊஊ.. இங்கேயும் நேக்குத்தான் வைர நெக்லெஸ் கிடைக்கப்போகுதூஊஊஊ:)

  ReplyDelete
  Replies
  1. நோஓஓஓஓஓஓஓஓஓஓஒ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீ செகண்ட் ஆத்தான் வந்திருக்கிறேன்ன்ன்.. இது அநீதி.. அநியாயம்... விடுங்கோ விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்:))

   Delete
  2. athira January 30, 2017 at 3:34 PM

   //ஆவ்வ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ஸூஊஊஊஊ.. //

   அதிரா தான் எங்கேயும் எப்போதும் ஃபர்ஸ்டூஊஊஊ.

   //இங்கேயும் நேக்குத்தான் வைர நெக்லெஸ் கிடைக்கப்போகுதூஊஊஊ:)//

   கிடைக்கட்டும். கிடைக்கட்டும். என் மனமார்ந்த நல்லாசிகள், அதிரா.

   Delete
  3. athira January 30, 2017 at 4:07 PM

   //நோஓஓஓஓஓஓஓஓஓஓஒ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீ செகண்ட் ஆத்தான் வந்திருக்கிறேன்ன்ன்..//

   அதனால் என்ன அதிரா? 120 செகண்டுகள் மட்டுமே தப்பிப் போய் உள்ளன. அதனால் செகண்டு ஆக வந்துள்ளீர்கள்.

   //இது அநீதி.. அநியாயம்...//

   ஸ்ரீராம் (ஸ்ரீராம பிரான்) எப்போதும் அநீதி அநியாயம் எல்லாம் செய்யவே மாட்டார். அவர் மனிதனாக அவதாரம் எடுத்து, தர்மத்தின் வழியேயும், சத்தியத்தின் வழியேயும் நடந்து, நாமெல்லாம் எப்படி வாழணும் என நமக்கெல்லாம் வழி காட்டியவராக்கும்.

   //விடுங்கோ விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்:))//

   தயவுசெய்து தேம்ஸ்க்குப் போகாதீங்கோ அதிரா. உங்களுக்கு வேண்டியது வைர நெக்லஸ் தானே.

   அதனை சத்யவானாகிய ’ஸ்ரீராம்’ உங்களுக்கு உடனடியாக வாங்கி அனுப்பி வைப்பார். கவலையே படாதீங்கோ. :)

   ’ஸ்ரீராம்’-இன் குட் குவாலிடீஸ் பற்றி உங்க அஞ்சுவிடம் கேளுங்கோ. சொல்லுவா.

   Delete
 3. ///அந்த குறிப்பிட்ட இரண்டு இதழ்களையும், இந்தப்புறம் உள்ள முன் அட்டை முதல், அந்தப் பின்புறம் உள்ள கடைசி அட்டை வரை, அதன் பக்க நம்பர்களுடன் கரைத்துக்குடித்து மண்டையில் ஏற்றியுள்ளார் என்பது அறிய நமக்கு மிக மிக ஆச்சர்யமாகவே உள்ளது.///

  இத்தனையையும் அழகாக தொகுத்து, மறக்காமல் இங்கு பதிவிட எப்படி உங்களுக்கு முடிந்தது என நினைக்க நேக்கு ஆச்ச்ச்ச்ச்சர்ர்ர்யமாவே உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. athira January 30, 2017 at 4:02 PM

   **அந்த குறிப்பிட்ட இரண்டு இதழ்களையும், இந்தப்புறம் உள்ள முன் அட்டை முதல், அந்தப் பின்புறம் உள்ள கடைசி அட்டை வரை, அதன் பக்க நம்பர்களுடன் கரைத்துக்குடித்து மண்டையில் ஏற்றியுள்ளார் என்பது அறிய நமக்கு மிக மிக ஆச்சர்யமாகவே உள்ளது.**

   //இத்தனையையும் அழகாக தொகுத்து, மறக்காமல் இங்கு பதிவிட எப்படி உங்களுக்கு முடிந்தது என நினைக்க நேக்கு ஆச்ச்ச்ச்ச்சர்ர்ர்யமாவே உள்ளது...//

   தங்களின் இந்த ஆச்சர்யமானப் புரிதலை அழகாகத் தொகுத்துச் சொல்லி பாராட்டியுள்ளதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள், அதிரா.

   Delete
 4. ///மொத்தத்தில் அன்றைய அந்த ஒன்றரை மணி நேர நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும், அனைவரையும் ஆச்சர்யப்பட வைப்பதாகவும் இருந்தது///

  ஒன்றரை மணிநேர நிகழ்வை .. மும்மூர்த்திகளாகப் பிரிச்சுப் பிரிச்சுப் போட்டு எம்மையும் ஆச்சர்யப்பட வச்சிட்டீங்களே!!! அவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. athira January 30, 2017 at 4:03 PM

   **மொத்தத்தில் அன்றைய அந்த ஒன்றரை மணி நேர நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும், அனைவரையும் ஆச்சர்யப்பட வைப்பதாகவும் இருந்தது**

   //ஒன்றரை மணிநேர நிகழ்வை .. மும்மூர்த்திகளாகப் பிரிச்சுப் பிரிச்சுப் போட்டு எம்மையும் ஆச்சர்யப்பட வச்சிட்டீங்களே!!!//

   மும்மூர்த்திகளாக அல்ல ....

   கல்வியா.. செல்வமா.. வீரமா.. என்பது போல ’அஞ்சு, மஞ்சு, அதிரா’ ஆகிய முப்பெரும் தேவிகளாகப் பிரிச்சுப் பிரிச்சுப் போட்டுள்ளேனாக்கும்.

   //அவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 5. //சமீபத்தில் எங்கள் வீட்டில் தயாரித்த ’மகாளி’ ஊறுகாய் மட்டுமே நினைவுக்கு வருகிறது. ///

  அதென்ன கோபு அண்ணன் அது.. மகாளி... ?? பார்க்க சூப்பராக இருக்கு.. ஏதும் கிழங்கு வகையோ?

  ///எனது நினைவாற்றல் எப்போதுமே சாப்பாடு விஷயங்களில் மட்டும் தானே ! :)///
  ம்கூம்ம்ம் இதைச் சொன்னால்மட்டும்தான் எங்களுக்குப் புரியுமாக்கும்:) அதுதான் எப்பவோ தெரியுமே எங்களுக்கு..:)) ஆவ்வ்வ்வ் மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))

  ReplyDelete
  Replies
  1. athira January 30, 2017 at 4:09 PM

   **சமீபத்தில் எங்கள் வீட்டில் தயாரித்த ’மகாளி’ ஊறுகாய் மட்டுமே நினைவுக்கு வருகிறது.**

   //அதென்ன கோபு அண்ணன் அது.. மகாளி... ?? பார்க்க சூப்பராக இருக்கு.. ஏதும் கிழங்கு வகையோ?//

   ஒருவித கிழங்கு வகையே தான். இதனை சிலர் மகாளிக்கிழங்கு என்றும், சிலர் மாகாளிக் கிழங்கு என்றும் நம் ஜெயா மாமி போல வேறு சிலர் மாகாணிக்கிழங்கு என்றும் சொல்லுவார்கள்.

   ஊறுகாய் போடுவதற்கான சூப்பர் ஐட்டம் இது.

   இதைப்பற்றிய அனைத்து விபரங்களும் உங்கள் ஃப்ரெண்டான நம் அஞ்சுவுக்கு நான் மெயில் மூலம் அனுப்பியுள்ளேன். உங்களுக்குத் தேவைப்பட்டால் கேட்டு வாங்கிக்கொள்ளவும்.

   **எனது நினைவாற்றல் எப்போதுமே சாப்பாடு விஷயங்களில் மட்டும் தானே ! :)**

   //ம்கூம்ம்ம் இதைச் சொன்னால் மட்டும்தான் எங்களுக்குப் புரியுமாக்கும்:) அதுதான் எப்பவோ தெரியுமே எங்களுக்கு..:))//

   யூ ஆர் ய குட் கேர்ள் ..... 'ஸ்வீட் சிக்ஸ்டீன்'

   Refer: http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html

   With 190 Comments.

   //ஆவ்வ்வ்வ் மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))//

   நல்லவேளையாப் போச்சு. நாங்கள் இத்துடன் தப்பிச்சோம். :)))))

   நன்னா மழை பெய்து ஓய்ந்தாற்போல உள்ளது.

   Delete
 6. மாலியின் திறமைக்கு
  சல்யூட்
  அ ழ கா ய் த் தொ கு த் த உ ங் க ளு க் கு ம்.

  ReplyDelete
  Replies
  1. ரிஷபன் January 30, 2017 at 4:24 PM

   வாங்கோ, வணக்கம் ஸார்.

   //மாலியின் திறமைக்கு சல்யூட்
   அ ழ கா ய் த் தொ கு த் த உ ங் க ளு க் கு ம்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார். :)

   Delete
 7. நண்பர் ஆர்ஆர்ஆர் நேற்று போனில் பேசி அவருடைய மகள் கல்யாணத்திற்கு அவசியம் வரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். நான் உங்களையும் பார்த்து விட்டு கல்யாணத்தையும் அட்டெண்ட் செய்யலாம் என்று இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ப.கந்தசாமி January 30, 2017 at 5:47 PM

   WELCOME TO TIRUCHI AGAIN !

   இது சம்பந்தமாக நாம் நமக்குள் மெயிலில் மூலமோ அல்லது தொலைபேசி மூலமோ பேசிக்கொள்வோம்.

   Delete
 8. எண்கவனகர் திரு மகாலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். அவரது நிகழ்ச்சியை கண் முன்னே கொண்டு வந்து காண்பித்த தங்களுக்கும் பாராட்டுகள்! தங்களின் பதிவைப் படித்ததும்,அவர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பார்வையாளனாக இருந்து இரசிக்க ஆசை!

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி January 30, 2017 at 5:53 PM

   வாங்கோ ஸார், வணக்கம்.

   //எண்கவனகர் திரு மகாலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//

   மிக்க மகிழ்ச்சி.

   //அவரது நிகழ்ச்சியை கண் முன்னே கொண்டு வந்து காண்பித்த தங்களுக்கும் பாராட்டுகள்!//

   தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஸார்.

   //தங்களின் பதிவைப் படித்ததும், அவர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பார்வையாளனாக இருந்து இரசிக்க ஆசை!//

   சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், நியாயமான + யதார்த்தமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஸார்.

   Delete
 9. அஸாத்திய திறமை
  (ஒரு வகையில் எனக்கு நேர் எதிரி )
  என் ஞாபக சக்தியினைக் குறித்து
  உதாரணங்களுடன் எழுதினால்
  படிப்பவர்கள் பயந்து போவார்கள்

  இவருடைய அபாரத் திற்ன் குறித்து
  நேரில் பார்த்துக் கேட்டுப்
  புரிந்து கொள்ளல் வேண்டுமானால்
  எளிதாய் இருக்கச் சாத்தியம்

  அதை எழுத்தாக்கிப் படிப்பவர்கள்
  புரிந்து கொள்ளும்படியாகச் செய்வது
  அத்தனை எளிதல்ல

  அதை மிக இயல்பாய்ச் செய்துள்ளதும்
  பிரமிப்பூட்டவே செய்கிறது

  பகிர்வுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

  ReplyDelete
  Replies
  1. Ramani S January 30, 2017 at 6:10 PM

   வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

   //அஸாத்திய திறமை (ஒரு வகையில் எனக்கு நேர் எதிரி) என் ஞாபக சக்தியினைக் குறித்து
   உதாரணங்களுடன் எழுதினால் படிப்பவர்கள் பயந்து போவார்கள்.//

   அடாடா ..... அப்படியா ! நம்மில் பலரும் அப்படியேதான், ஸார். இதில் நாம்தான் மெஜாரிட்டி.

   //இவருடைய அபாரத் திறன் குறித்து நேரில் பார்த்துக் கேட்டுப் புரிந்து கொள்ளல் வேண்டுமானால் எளிதாய் இருக்கச் சாத்தியம். அதை எழுத்தாக்கிப் படிப்பவர்கள் புரிந்து கொள்ளும்படியாகச் செய்வது அத்தனை எளிதல்ல. அதை மிக இயல்பாய்ச் செய்துள்ளதும் பிரமிப்பூட்டவே செய்கிறது.//

   தங்களின் இந்த மிகச்சரியான புரிதலுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், ஸார்.

   //பகிர்வுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   Delete
 10. மாதங்கி அப்பாவுக்கு மனம் நிரம்பிய மகிழ்ச்சி வாழ்த்துக்கள். அவர் அசாத்திய திறமை அசத்தியது. உங்கள் நேரஷனில் அந்த அசத்தல் முழுமை பெற்றது என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  அஷ்டாவதானி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை இருக்கும் என்று நீங்கள் சொன்னவுடன் ஒரு சின்ன கற்பனை.

  வித்வத் சபை மாதிரி எட்டு அஷ்டாவதனிகளை ஒரு ஹாலில் அமர வைத்து அவர்களுக்குள்ளேயே மாற்றி மாற்றி
  கேள்விகள் எழுப்பி விடை கண்டு நாம் பார்வையாளர்களாய் இருக்கும் பாக்யம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஓடியது. கொல்லன் களத்தில் ஈ பட்ட பாடு தான்.

  என்ன தான் இருந்தாலும் பார்வையாளர்களாய் இருப்பதில் ஒரு ரகசிய சந்தோஷமும் உண்டு. போட்டியாளர்கள் என்னதான் தங்கள் திறமையை வெளிப்படுத்தினாலும் அதையும் விஞ்சி 'இப்படி அவரை மடக்கியிருக்க வேண்டும், அப்படிக் கேட்டிருக்க வேண்டும்' என்று பீலா விடுவது பார்வையாளர்கள் வரமாய் பெற்ற சாபம். ஆனால் அந்த சாபம் அந்த நேரத்து சந்தோஷமாய் கித்தாப்பாய் வெளிப்படாமல் மட்டும் இருக்காது. (உ.ம்) கிரிகெட் மேட்சுகள்.

  மூன்று பகுதிகள் அடுத்தடுத்து ஓடிப் போனதே தெரியவில்லை. பட்ட சிரமம் பட்டவர்களுக்குத் தானே தவிர பார்த்தவர்களுக்கு இல்லை என்பது உலக வழக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஜீவி January 30, 2017 at 6:30 PM

   வாங்கோ ஸார். நமஸ்காரங்கள் + வணக்கங்கள், ஸார்.

   //மாதங்கி அப்பாவுக்கு மனம் நிரம்பிய மகிழ்ச்சி வாழ்த்துக்கள். அவர் அசாத்திய திறமை அசத்தியது.//

   அசாத்யத் திறமைகளுடன் கூடிய அசத்தலான இந்தத் தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சி, ஸார்.

   //உங்கள் நேரஷனில் அந்த அசத்தல் முழுமை பெற்றது என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.//

   அடடா ..... மிகவும் சந்தோஷம், ஸார். :)

   //அஷ்டாவதானி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை இருக்கும் என்று நீங்கள் சொன்னவுடன் ஒரு சின்ன கற்பனை.

   வித்வத் சபை மாதிரி எட்டு அஷ்டாவதனிகளை ஒரு ஹாலில் அமர வைத்து அவர்களுக்குள்ளேயே மாற்றி மாற்றி கேள்விகள் எழுப்பி விடை கண்டு நாம் பார்வையாளர்களாய் இருக்கும் பாக்யம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஓடியது.//

   மிகச் சிறந்த கற்பனைதான் ..... இப்படித் தங்களுக்குத் தோன்றியுள்ளது.

   //கொல்லன் களத்தில் ஈ பட்ட பாடு தான்.//

   பார்வையாளர்களின் பாட்டைச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். :)

   //என்ன தான் இருந்தாலும் பார்வையாளர்களாய் இருப்பதில் ஒரு ரகசிய சந்தோஷமும் உண்டு. போட்டியாளர்கள் என்னதான் தங்கள் திறமையை வெளிப்படுத்தினாலும் அதையும் விஞ்சி 'இப்படி அவரை மடக்கியிருக்க வேண்டும், அப்படிக் கேட்டிருக்க வேண்டும்' என்று பீலா விடுவது பார்வையாளர்கள் வரமாய் பெற்ற சாபம். ஆனால் அந்த சாபம் அந்த நேரத்து சந்தோஷமாய் கித்தாப்பாய் வெளிப்படாமல் மட்டும் இருக்காது. (உ.ம்) கிரிகெட் மேட்சுகள்.//

   ஆனால் அப்படி எந்தவொரு பார்வையாளரும் அன்று அங்கு நடந்து கொள்ளவில்லை. ஒருவேளை அதுபோல ’பீலா’ விடத் தெரியாதவர்களாகவே அன்று கூடி விட்டார்களோ என்னவோ !

   >>>>>

   Delete
  2. கோபு >>>>> ஜீவி ஸார் (2)

   //மூன்று பகுதிகள் அடுத்தடுத்து ஓடிப் போனதே தெரியவில்லை.//

   நான் ஓர் மிகச் சாதாரண பார்வையாளராக மட்டுமே, மிகவும் கேஷுவலாக, அங்கு சென்று வந்தேன்.

   நிகழ்ச்சிகளைக் காணும்போதுகூட, இதுபோன்று நான் மூன்று பகுதிகளாக ஓர் சின்னத்தொடர் பதிவு என் வலைத்தளத்தினில் எழுதப்போகிறேன் என்று சத்தியமாக நான் நினைக்கவும் இல்லை.

   நிகழ்ச்சியின் நிறைவினில், அன்று அந்த அஷ்டாவதானி அவர்களிடம் சரியாக நான் சொல்லிக்கொள்ளாமல், வெளியே எனக்காக என் ஆட்டோக்காரர் வெயிட்டிங் என்பதால், அவசரத்தில் நம் ரிஷபன் ஸார் அவர்களிடம் மட்டும் சொல்லிக்கொண்டுவிட்டு, அங்கிருந்து முதல் ஆளாகப் புறப்பட்டு வந்து விட்டேன்.

   வீட்டுக்கு வந்த பிறகும் ஏனோ ஓரிரு நாட்கள் அது பற்றிய ஞாபகமாகவே எனக்கு இருந்து வந்தது.

   >>>>>

   Delete
  3. கோபு >>>>> ஜீவி ஸார் (3)

   மறுநாள் அவரிடம் நான் தொலைபேசியில் பேசி, அவரையும் அவரின் அந்த நிகழ்ச்சிகளையும் பாராட்டிப் பேசியபோது, அவரும், அவருக்கு என் வருகை மகிழ்ச்சியளித்ததாகச் சொன்னதுடன் நில்லாமல் ”இது பற்றி ஏதேனும் பதிவு வெளிவருமா?” எனக்கேட்டு என்னிடம் ஓர் கேள்விக் குறியையும் எழுப்பி வாட்ஸ்-அப் செய்தி அனுப்பியிருந்தார்.

   இதற்கிடையில் இரண்டு நாட்கள் என் சொந்த வலைப்பதிவையே நான் திறக்க முடியாமல் ஏதேதோ கணினி + நெட் தொந்தரவுகளும் நீடித்து வந்தன.

   அவரின் அந்தக் கேள்விக்குறி(?)க்கு என்னிடமிருந்து உடனடியாக எந்தவொரு பதிலும் என்னால் அவருக்குத் தெரிவிக்க முடியாத சூழலில் நான் இருந்து வந்த போதிலும், அவரின் கேள்விக்குறியையே ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, இந்தப்பதிவினை வடிவமைத்து வெளியிடுவது என சங்கல்பித்துக்கொண்டு, அதற்கான வேலைகளை உடனடியாகப் பார்க்கத் தொடங்கியும் விட்டேன்.

   என் வலைத்தளத்தில் பதிவாக நான் இதனை வெளியிடும் வரை, அவரிடமும் இதுபற்றி எதுவும் நான் சொல்லிக்கொள்ளவும் இல்லை.

   >>>>>

   Delete
  4. கோபு >>>>> ஜீவி ஸார் (4)

   //பட்ட சிரமம் பட்டவர்களுக்குத் தானே தவிர பார்த்தவர்களுக்கு இல்லை என்பது உலக வழக்கு.//

   அது என்னவோ உண்மைதான். :)

   நிறைமாதம் ஆகி இடுப்புவலி எடுத்துத் துடிப்பவளுக்கு, இனி இந்த அவஸ்தையே கூடாது என்றுதான் நினைக்கத் தோன்றும்.

   ஒரு வழியாக நல்லபடியாகப் பிரஸவம் ஆகி, நல்லபடியாக அழகான + ஆரோக்யமான குழந்தையும் பிறந்து, தாயும் சேயும் நலமாகப் பிழைத்து, அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் அந்த முதல் நேரம் முதல், பட்ட சிரமமெல்லாம் பட்டவளுக்கு எங்கோ பறந்தோ மறந்தோ போய்விடும்.

   அதுபோல இந்தப் பதிவின் மூன்று பகுதிகளை மிகவும் யோசித்து வெளியிட சற்றே எனக்கு சிரமமாக (பிரஸவ வலி போல) இருந்திருப்பினும், உங்களைப் போன்ற பலரின் பாராட்டுகளை இங்கு பின்னூட்டங்களாகக் கண்டபின், என் சிரமமெல்லாம் பறந்தும், மறந்தும் போய் விட்டன என்றே நானும் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, ஆத்மார்த்தமான, விரிவான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 11. அருமையான தொகுப்பு. பார்வையாளராக இருக்க முடியலையே என்ற வருத்தம் மேலும் மேலும் அதிகம் ஆகிறது. இத்தகைய தனித்திறமை சிலருக்குத் தான் வாய்க்கும். கடவுள் தந்த பரிசு!

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam January 30, 2017 at 7:05 PM

   வாங்கோ மேடம். வணக்கம்.

   //அருமையான தொகுப்பு.//

   மிக்க மகிழ்ச்சி :)

   //பார்வையாளராக இருக்க முடியலையே என்ற வருத்தம் மேலும் மேலும் அதிகம் ஆகிறது.//

   இந்தத்தொடரின் முதல் பகுதியில் தங்களின் பின்னூட்டத்திற்கான என் பதிலில் தங்களின் இந்த வருத்தத்தை மேலும் மேலும் குறைப்பதற்கான + சுத்தமாக இல்லாமலேயே போகச் செய்வதற்கான பயனுள்ள இலவச ஆலோசனைகள் என்னால் தரப்பட்டுள்ளன. தயவுசெய்து படித்துப் பாருங்கோ. :)

   http://gopu1949.blogspot.in/2017/01/1-of-3.html

   //இத்தகைய தனித்திறமை சிலருக்குத் தான் வாய்க்கும். கடவுள் தந்த பரிசு!//

   கரெக்ட். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   Delete
 12. Very interesting. I too attended a memory course conducted by an Australian a few years back. For a few days, I could remember the process of keeping the memory by connecting different things. Gradually, due to lack of continuous practice, I couldn't pursue the hobby.

  ReplyDelete
  Replies
  1. D. Chandramouli January 30, 2017 at 7:32 PM

   My Dear Sir, Welcome to you Sir,

   //Very interesting.//

   Very Glad .... Sir. :)

   //I too attended a memory course conducted by an Australian a few years back. For a few days, I could remember the process of keeping the memory by connecting different things.//

   Very Nice & happy to hear this, Sir.

   //Gradually, due to lack of continuous practice, I couldn't pursue the hobby.//

   I see ......

   Thanks a Lot, Sir, for your kind visit to this post & sharing valuable matters.

   With affection ..... vgk

   Delete
 13. //அஷ்டாவதானி, அந்தக் கட்டத்தில் உள்ள அதற்காக நம்பரை மிகச்சரியாக ஒரு கரும்பலகையில் எழுதிக்காட்டி அசத்துகிறார்.//
  #
  அபார திறமை .சிலருக்கு மட்டுமே இந்த வரப்பிரசாதம் கிடைக்கும் ..

  ReplyDelete
  Replies
  1. Angelin January 30, 2017 at 8:13 PM

   வாங்கோ, வணக்கம்.

   **அஷ்டாவதானி, அந்தக் கட்டத்தில் உள்ள அதற்காக நம்பரை மிகச்சரியாக ஒரு கரும்பலகையில் எழுதிக்காட்டி அசத்துகிறார்.**

   //அபார திறமை. சிலருக்கு மட்டுமே இந்த வரப்பிரசாதம் கிடைக்கும் ..//

   கரெக்ட். மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அபார வரப்பிரசாதமான கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.

   Delete
 14. இதுதான் மகாளி கிழங்கா !!இங்கே வட இந்தியர் கடையில் பார்த்திருக்கேன் .எனக்கு ரெசிப்பி தந்தீங்கன்னா முயற்சித்து பார்க்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. அதிரா.... ஏஞ்சலின்

   நாட்டுல விளைஞ்சா நன்னாரி ; மலையிலே விளைஞ்சா மாகாளி என்பார்கள். மாகாளிக்கிழங்கை , ஒருநாள் முழுவதும் ஊறவைத்து, மறுநாள் தோல் சீவி கழுவி சுத்தம் செய்து நடுவிலிருக்கும் கட்டையை உருவி விட்டு, கிழங்கைச் சிறு துண்டுகளாக்கி தயிரில் / மோரில் போட்டு, காரம் தேவைப்படும் அளவு கார மிளகாய் அரைத்து விட்டு(விதை எடுத்துவிட்டு என்று சிலர் சொல்வார்கள்!), மஞ்சள்பொடி உப்பு போட்டு ஊறவைத்து... அது ஊறியதும் எடுத்துத் தயிர்சாதத்துக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால்.....


   சிலர் மோரிலேயே ஊறவைத்து மறுநாள் காரப்பொடி சேர்த்து விடுவார்கள்.

   Delete
  2. எல்லோருக்கும் மாகாளி பிடித்துவிடும் என்றும் சொல்லமுடியாது!

   Delete
  3. தாங்க்ஸ்அ ப்படியே காப்பி பேஸ்டிக்கறேன் :)

   நிச்சயம் தயிர் சாதம் காம்பினேஷன் எல்லாமே எனக்கு பிடிக்கும் ..என் பொண்ணுக்கும் பிடிக்கும் ..வாங்கி வந்து கன்பர்ம் செய்து இந்த ரெசிப்பி செய்திடறேன்

   Delete
  4. Angelin January 30, 2017 at 8:17 PM

   //இதுதான் மகாளி கிழங்கா !! இங்கே வட இந்தியர் கடையில் பார்த்திருக்கேன். எனக்கு ரெசிப்பி தந்தீங்கன்னா முயற்சித்து பார்க்கிறேன்.//

   மாகாளிக்கிழங்கு ஊறுகாய் சம்பந்தமாக மேலே நம் ஸ்ரீராம் சொல்லியுள்ளதைத் தவிர, மேலும் பல தொழில் நுட்ப இரகசியங்களை உங்களுக்கு மட்டும் மெயில் மூலம் நான் தெரிவித்துள்ளேன். :)))))

   Delete
 15. சிறந்ததொரு நிகழ்வில் அஷ்டாவதானி திரு. V. மஹாலிங்கம் அவர்களைச் சிறப்பாக அறிய முடிந்ததில் மகிழ்ச்சி..

  நிகழ்வினை இத்தனை அழகாக தொகுத்து வழங்க தங்களால் மட்டுமே இயலும்.. அருகிருந்து கவனித்ததைப் போன்றதொரு உணர்வு..

  மேலும் சீரும் சிறப்பும் எய்திட எம்பெருமானை வேண்டிக் கொள்கின்றேன்..

  ReplyDelete
  Replies
  1. துரை செல்வராஜூ January 31, 2017 at 9:43 AM

   வாங்கோ பிரதர், வணக்கம்.

   //சிறந்ததொரு நிகழ்வில் அஷ்டாவதானி திரு. V. மஹாலிங்கம் அவர்களைச் சிறப்பாக அறிய முடிந்ததில் மகிழ்ச்சி..//

   மிக்க மகிழ்ச்சி.

   //நிகழ்வினை இத்தனை அழகாக தொகுத்து வழங்க தங்களால் மட்டுமே இயலும்.. அருகிருந்து கவனித்ததைப் போன்றதொரு உணர்வு..//

   ஆஹா, மிகவும் சந்தோஷம் பிரதர். தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

   //மேலும் சீரும் சிறப்பும் எய்திட எம்பெருமானை வேண்டிக் கொள்கின்றேன்..//

   தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுகளுக்கும், வேண்டுதல்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், பிரதர்.

   Delete
 16. அஷ்டாவதானி திரு .மஹாலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்.

  //எல்லோருக்கும் மாகாளி பிடித்துவிடும் என்றும் சொல்லமுடியாது!//
  சரியாக சொன்னீர்கள் ஸ்ரீராம். பள்ளி படிக்கும் போது சில தோழிகள் மதிய உணவுக்கு கொண்டு வருவார்கள் அதன் வாசம் எனக்கு பிடிக்காது . அன்று அவர்கள் உணவை பகிர்ந்து கொள்ள மாட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு January 31, 2017 at 12:25 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //அஷ்டாவதானி திரு .மஹாலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
 17. பிரமிக்க வைக்கும் சாதனை.... ஐயாவுக்கு மீண்டும் எனது பாராட்டுகள். மௌலி ஐயாவின் பின்னூட்டங்கள் சிலவற்றை சிலர் பதிவுகளில் வாசித்திருக்கிறேன். ஆனால் அவர் இப்படிப்பட்ட சாதனையாளர் என்பதை இப்போதுதான் அறிகிறேன்.. அவரது திறமைகள் இன்னும் பலராலும் அறியப்படவேண்டும். அவரிடமிருந்து இளைய தலைமுறையினர் ஒருசிலவற்றையாவது கற்றுத்தேர்ந்தால் சிறப்பாக இருக்கும். எளிய முறையில் நினைவாற்றலைப் பெருக்கும் பயிற்சிகளை அப்போதுதான் அவரிடமிருந்து நாம் அறிந்துகொள்ளமுடியும். இச்சாதனையாளரைப் பற்றி அறிய வாய்ப்பினை அமைத்துக்கொடுத்தமைக்கு நன்றி கோபு சார்.

  பதிவின் இறுதியில் உங்கள் 'டச்' அசத்தல். :)))

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி January 31, 2017 at 2:29 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //பிரமிக்க வைக்கும் சாதனை.... ஐயாவுக்கு மீண்டும் எனது பாராட்டுகள். மௌலி ஐயாவின் பின்னூட்டங்கள் சிலவற்றை சிலர் பதிவுகளில் வாசித்திருக்கிறேன். ஆனால் அவர் இப்படிப்பட்ட சாதனையாளர் என்பதை இப்போதுதான் அறிகிறேன்.. அவரது திறமைகள் இன்னும் பலராலும் அறியப்படவேண்டும். அவரிடமிருந்து இளைய தலைமுறையினர் ஒருசிலவற்றையாவது கற்றுத்தேர்ந்தால் சிறப்பாக இருக்கும். எளிய முறையில் நினைவாற்றலைப் பெருக்கும் பயிற்சிகளை அப்போதுதான் அவரிடமிருந்து நாம் அறிந்துகொள்ளமுடியும்.//

   மிகவும் பிரமிக்க வைக்கும் கருத்துக்களாகவே தாங்களும் இங்கு சொல்லியிருக்கிறீர்கள். தாங்கள் சொல்வது அனைத்தும், இளைய தலைமுறையினரால் ஏற்று பரிசீலிக்கப்பட்டு, அவ்வாறே அவர்களில் சிலராவது இந்த அதிசயமான நினைவாற்றல் கலையைக் கற்று அறிந்தால் மிகவும் நல்லதுதான்.

   //இச்சாதனையாளரைப் பற்றி அறிய வாய்ப்பினை அமைத்துக்கொடுத்தமைக்கு நன்றி கோபு சார்.//

   மிக்க மகிழ்ச்சி, மேடம். :)

   //பதிவின் இறுதியில் உங்கள் 'டச்' அசத்தல். :)))//

   எனது ‘டச்’சைப்பற்றி ‘நச்’செனச் சொல்லி அசத்தியுள்ள தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம். :)))))))

   பிரியமுள்ள கோபு

   Delete
 18. Namasthe/-

  கடந்த ஜனவரி 25.-, புதன் மாலை 6.30 முதல் 8.00 pm வரை நான் நிகழ்த்திக்காட்டிய ' அஷ்டாவதானம்' பற்றி , மிகவும் விரிவாகவும் ஆர்வத்துடனும் அனைவருக்கும் புரியும் வண்ணம் லாகவமாகவும் தொகுத்து 28,29,and 30 ஆகிய மூன்று நாட்களாக மூன்று பகுதிகளாக பதிவிட்ட தங்களுக்கு எவ்விதம் நன்றி கூறுவது என்று புரியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன் ..

  மதிப்பிற்குரிய ஜீவி அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல தாங்கள் பட்ட ச்ரமம் தாங்களே அறிவீர்கள் ..

  உண்மையில் , தங்களை போன்ற புகழ் வாய்ந்த பதிவர்கள் என் நிகழ்ச்சியைக் காணவேண்டும் ..தங்கள் பதிவில் பகிரவேண்டும் என்ற வேட்கையில் உந்தப் பட்டே தங்களையும் திருவாளர்கள் ரிஷபன் மற்றும் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களையும் வெறும் அழைப்போடு நிறுத்திக்கொள்ளாமல் reminder -ம் அனுப்பி தொந்திரவு கொடுத்து வர வாழைத்தேன் !
  இதற்கு நான் மன்னிப்பு கோரப்போவதில்லை !ஆனால் என் உளப்பூர்வமான நன்றியறிதல்களை தயவுகூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள் ...I am indeed GRATEFUL to you for the time ,trouble and efforts you invested in this matter...
  THANK YOU ONCE AGAIN...

  மாலி

  ReplyDelete
  Replies
  1. V Mawley January 31, 2017 at 3:42 PM

   //Namasthe//

   வாங்கோ ஸார். தங்களுக்கு அடியேனின் சாஷ்டாங்க நமஸ்காரங்கள் + வணக்கங்கள்.

   //கடந்த ஜனவரி 25.-, புதன் மாலை 6.30 முதல் 8.00 pm வரை நான் நிகழ்த்திக்காட்டிய 'அஷ்டாவதானம்' பற்றி, மிகவும் விரிவாகவும் ஆர்வத்துடனும் அனைவருக்கும் புரியும் வண்ணம் லாகவமாகவும் தொகுத்து 28, 29 and 30 ஆகிய மூன்று நாட்களாக மூன்று பகுதிகளாக பதிவிட்ட தங்களுக்கு எவ்விதம் நன்றி கூறுவது என்று புரியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன் ..//

   இதற்கான முழுக் காரண கர்தாவான தங்களுக்குத்தான் நான் என் நன்றிகளைக் கூறிக்கொள்ள வேண்டும்.

   என் வலைத்தளத்தினில் இனி ஏதும் புதிதாகப் பதிவுகள் தர வேண்டாம் என்று நினைத்து ஒதுங்கிக்கொண்டு, தூங்கிக்கொண்டிருந்த என்னை, தங்களின் இந்த அபூர்வ + அதிஸய நிகழ்ச்சிகள்தான் தட்டி எழுப்பி, எனக்கு ஓர் எழுச்சியையும் புத்துணர்ச்சியையும் கொடுத்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

   //மதிப்பிற்குரிய ஜீவி அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல தாங்கள் பட்ட ச்ரமம் தாங்களே அறிவீர்கள் ..//

   அவருக்கு எப்போதுமே என் மீதுள்ள ஓர் தனிப் பிரியத்தால், அவர் இதுபோல ஏதாவது சிரமப்பட்டு, அவ்வப்போது கொஞ்சம் கொளுத்திப் போட்டுக்கொண்டேதான் இருப்பார். :)

   //உண்மையில், தங்களை போன்ற புகழ் வாய்ந்த பதிவர்கள் என் நிகழ்ச்சியைக் காணவேண்டும்.. தங்கள் பதிவில் பகிரவேண்டும் என்ற வேட்கையில் உந்தப் பட்டே தங்களையும், திருவாளர்கள் ரிஷபன் மற்றும் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களையும் வெறும் அழைப்போடு நிறுத்திக்கொள்ளாமல் reminder -ம் அனுப்பி தொந்திரவு கொடுத்து வர வாழைத்தேன் ! //

   In fact நிகழ்ச்சி துவங்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு தாங்கள் அனுப்பிவைத்த தங்களின் அந்த reminder மட்டுமே என்னை அங்கு வரவழைத்தது என்பதே இதில் உள்ள மிகப்பெரியதோர் உண்மையாகும்.

   21st அன்றே எனக்கு நம் ரிஷபன் ஸார், மெயில் மூலம் அனுப்பி வைத்திருந்த அழைப்பிதழை நான் ஏனோ என் ’நினைவாற்றல் குறைவினால்’ சுத்தமாக மறந்தே போய் விட்டேன். :(

   //இதற்கு நான் மன்னிப்பு கோரப்போவதில்லை! ஆனால் என் உளப்பூர்வமான நன்றியறிதல்களை தயவுகூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள் ... I am indeed GRATEFUL to you for the time, trouble and efforts you invested in this matter... THANK YOU ONCE AGAIN... மாலி //

   அபூர்வமான, ஆச்சர்யப்படும்படியான, என்னை வியப்பில் ஆழ்த்திய தங்களின் நிகழ்ச்சியை நான் அங்கு அன்று நேரில் வந்து பார்க்க நேர்ந்தது, என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்ததோர் மிகப் பெரிய பாக்யம் என்றே நினைத்து மகிழ்கிறேன்.

   மேலும் அந்த ஒரு இனிய நிகழ்ச்சியைப் பற்றிய செய்திகளே, இந்த 2017-ம் ஆண்டில் என் வலைத்தளத்தினில் முதல் மூன்று பதிவுகளாகவும் இடம் பெற்றுள்ளதில் மேலும் எனக்கு மகிழ்ச்சியே.

   இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான இனிமையான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   பிரியத்துடன் கோபு

   Delete
 19. அது மாகாணி கிழங்கு ஊறுகாயோ....
  இந்த பதிவின்மூலமாக ஒரு புதியவரின் ஆற்றல்களை தெரிந்து கொள்ள முடிந்தது..

  ReplyDelete
  Replies
  1. ஆல் இஸ் வெல்....... January 31, 2017 at 6:00 PM

   வாங்கோ, வணக்கம்.

   //அது மாகாணி கிழங்கு ஊறுகாயோ....//

   அதனைப் பெரும்பாலோர் மாகாளிக் கிழங்கு ஊறுகாய் எனச் சொல்லுவார்கள். சிலர் மகாளிக்கிழங்கு என்றும் உங்களைப்போல சிலர் மாகாணிக்கிழங்கு என்றும் சொல்லி வருகிறார்கள்.

   //இந்த பதிவின்மூலமாக ஒரு புதியவரின் ஆற்றல்களை தெரிந்து கொள்ள முடிந்தது..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 20. பிரமிக்க வைக்கும் மனிதர்....

  நிகழ்வு பற்றிய உங்கள் பதிவுகள் மூலம் நாங்களும் கண்டுகளித்தோம்.

  திரு மஹாலிங்கம் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்....

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் நாகராஜ் January 31, 2017 at 8:05 PM

   வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

   //பிரமிக்க வைக்கும் மனிதர்.... // ஆம்.

   //நிகழ்வு பற்றிய உங்கள் பதிவுகள் மூலம் நாங்களும் கண்டுகளித்தோம்.//

   மிக்க மகிழ்ச்சி.

   //திரு மஹாலிங்கம் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்....//

   தங்களின் அன்பான வருகைக்கும், மனம் நிறைந்த பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி, வெங்கட்ஜி.

   Delete
 21. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது... அதிசயிக்கத்தக்கவரைப் பற்றிய பதிவுக்கு நன்றி.கடைசி பத்தி (நினைவாற்றல் சாப்பாட்டு நிலை) அதிகம் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. Dr B Jambulingam February 1, 2017 at 6:42 AM

   வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

   //ஜனவரி 2017-இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது... //

   அதனால் பரவாயில்லை. வாழ்த்துகள் ஐயா.

   //அதிசயிக்கத்தக்கவரைப் பற்றிய பதிவுக்கு நன்றி.//

   மிக்க மகிழ்ச்சி, ஐயா.

   //கடைசி பத்தி (நினைவாற்றல் சாப்பாட்டு நிலை) அதிகம் ரசித்தேன்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் குறிப்பாக அந்த கடைசி பத்தியை அதிகம் ரசித்ததற்கும் என் ஸ்பெஷல் நன்றிகள், ஐயா.

   Delete
 22. http://swamysmusings.blogspot.com/2017/01/blog-post_24.html

  மேற்படி பதிவினில் ‘தியாகப் பிரும்மம்’ தியாகராஜ ஸ்வாமிகள் பற்றிய சில குறிப்புகள்’ என்ற தலைப்பினில் ஓர் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

  அந்தப்பதிவும் அதில் இதுவரை உள்ள 112 பின்னூட்டங்களும், படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் இருக்கக்கூடும்.

  விருப்பமுள்ளவர்கள் அங்கு போய் அதனைப் படித்து மகிழலாம்.

  ReplyDelete
 23. Mail message received today (01.02.2017) 14:24 Hrs. from Hyderabad

  -=-=-=-=-=-

  அன்பின் கோபு ஸார்,

  நீண்ட மாதங்களுக்குப் பிறகு தங்களின் பதிவுகள் கலக்கலாக வெளி வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

  இணையத்தின் அஷ்டாவதானி.....தாங்கள் தான்.

  திரு.மஹாலிங்கம் அவர்களின் தனித்திறமையை தாங்கள் நேரில் கண்டதை அப்படியே நினைவில் ஏற்றி எழுத்தில் காட்சிப் படுத்தி அவரையும் பாராட்டி மகிழ்ந்திருக்கிறீர்கள். ஒரு கட்டுரையின் மூலம் ஒரு திறமையை கண்டறிந்ததில் மகிழ்ச்சி.

  உங்கள் பதிவில் மாகாளிக் கிழங்கை பார்த்ததில் கூட மகிழ்ச்சி தான்.... மணம் தான் மறந்தே போச்சு.... ஊரைத் தூக்கும் ஊறுகாய். இரத்த விருத்திக்கு மிகவும் நல்லதாம்.

  இன்னொரு விஷயமும்...கூடவே... அடைப் பதிவையும் படித்து விட்டு... பருப்புகளை ஊற வைத்தாயிற்று. எழுத்தின் தாக்கம் என்று தான் சொல்ல வேண்டும்.

  நன்றி.

  இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
  பரம ரஸிகை

  -=-=-=-=-=-

  ReplyDelete
 24. உங்கள் பதிவில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை, மாலியின் நிகழ்ச்சிகளை நேரில் பார்த்தால் தான் என் மண்டைக்குள் ஏறும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ February 1, 2017 at 10:15 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //உங்கள் பதிவில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை, மாலியின் நிகழ்ச்சிகளை நேரில் பார்த்தால் தான் என் மண்டைக்குள் ஏறும் என்று நினைக்கிறேன்.//

   அதனால் பரவாயில்லை. அடுத்தமுறை அந்த நிகழ்ச்சி எங்கேயாவது ஏற்பாடு செய்யப்பட்டால், நான் தங்களுக்குத் தகவல் தருகிறேன். நாம் இருவரும் சேர்ந்தே செல்ல முயற்சி செய்வோம்.

   தங்களின் வருகைக்கு மிக்க நன்றி, ஸார்.

   Delete
 25. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா. கண்ணக் கட்டுதே.

  நான் உங்களுடைய மானசீக சிஷ்யை. அதனால என் கண்ணும் உங்கள மாதிரியே அந்த மாகாணிக் கிழங்கு மேலேயே தான்.

  நல்ல நேரத்துல ஞாபகப் படுத்தினேள். மாகாணி ஊறுகாய் தீரப் போறது. வாங்கி போடணும். நான் என்ன பண்ண. எனக்கு வாய்ச்சவர் ஊறுகாய் இல்லைன்னா தயிருஞ்சாதமே சாப்பிட மாட்டேங்கறார். நன்னா நாக்கை வளர்த்துண்டு இருக்கறவாளுக்கு வாக்கப்பட்டா கணக்கு போட முடியாது, ஊறுகா தான் போட முடியும்.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya February 2, 2017 at 7:02 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்.

   //ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா. கண்ணக் கட்டுதே. //

   :))))))) கட்டும் ..... கட்டும் :)))))))

   //நான் உங்களுடைய மானசீக சிஷ்யை. அதனால என் கண்ணும் உங்கள மாதிரியே அந்த மாகாணிக் கிழங்கு மேலேயே தான்.//

   வெரி குட். சபாஷ் ஜெயா. :))))))

   //நல்ல நேரத்துல ஞாபகப் படுத்தினேள். மாகாணி ஊறுகாய் தீரப் போறது. வாங்கி போடணும்.//

   போடுங்கோ ..... போடுங்கோ ..... சீக்கரமாகப் போடுங்கோ. சீஸன் போனால் பிறகு கிடைக்காமல் போய்விடும்.

   //நான் என்ன பண்ண. எனக்கு வாய்ச்சவர் ஊறுகாய் இல்லைன்னா தயிருஞ்சாதமே சாப்பிட மாட்டேங்கறார்.//

   நானும் அப்படியேதான், ஜெயா.

   //நன்னா நாக்கை வளர்த்துண்டு இருக்கறவாளுக்கு வாக்கப்பட்டா கணக்கு போட முடியாது, ஊறுகா தான் போட முடியும்.//

   கணக்குப் போடுவது மிகவும் சுலபம்தான், ஜெயா.

   ஆனால் ஊறுகாய் .... அதுவும் இந்த மாகாளிக் கிழங்கு ஊறுகாய் போடுவதுதான் மிகவும் சிரமமான காரியம்.

   நல்லதாக (என்னைப்போல) குண்டு குண்டாக வாங்கி வருவதும் ..... அவற்றைத் தண்ணீரில் போட்டு ஊற வைத்து அதன் மேல் உள்ள அழுக்குகளையும், மண்களையும் நீக்குவதும் ..... அவற்றின் மேல் தோல்களை சுரண்டி எடுப்பதும் ..... அவற்றைப் பொடிப்பொடியாக நறுக்குவதும் ..... அதில் உள்ள (ஜெயா போன்ற ஒல்லியான) உள் நரம்புகளை வெளியே எடுப்பதும் ..... உப்பு, காரம் முதலியன மிக்ஸியில் அரைத்து அதன் தலையில் அபிஷேகம் செய்வதும் ..... ஃப்ரிட்ஜில் பாது காத்துவைப்பதும் ..... அவ்வப்போது கெட்டித் தயிர் அல்லது கெட்டி மோரில், தனியாகக் கொஞ்சம் கொஞ்சம் மட்டும் கலந்துகொள்வதும் ..... ஞாபகமாக எடுத்துப் பரிமாறுவதும் தான் மிகவும் கஷ்டமான வேலைகளாகும்.

   தெரியாத்தனமாக ஒரு மாதம் முன்பு நல்லதாக ஃப்ரெஷ்ஷாகவும், குண்டு குண்டாகவும், புதுசாகவும், பளிச்சென்றும் கிடைத்ததால் ரூ. 160 கொடுத்து ஒரு கிலோவாக வாங்கி வந்து விட்டேன். உங்கள் மன்னி உள்பட எல்லோருக்கும் ..... ஒரேயடியாக ஒரு கிலோ வாங்கி வந்துவிட்டதில் ... என் மேல் மிகுந்த கோபம்.

   அதற்குப் பனிஷ்மெண்டாக என்னை விட்டே மேற்படி அனைத்து வேலைகளையும் செய்யச்சொல்லி விட்டார்கள். நானும் சிரமப்பட்டு, கத்தியும் கையுமாகவே பலமணி நேரங்கள் அதனுடன் போராடி ஒருவழியாக, செய்து முடித்து விட்டேன்.

   பிறகு அதனை தினமும் தொட்டுக்கொண்டு காலி செய்வதில் மட்டும் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு வந்து, ஒரே மாதத்தில் இன்றுடன் காலியாகி விட்டது. அதன் ஜலம் மட்டுமே கொஞ்சம் உள்ளது. அதுவும் இன்னும் 2-3 நாட்களுக்கு மட்டுமே வரும். :)

   அடுத்தது கடாரங்காய் அல்லது கசப்பு நார்த்தங்காய் போய் வாங்கி வருவதாக உள்ளேன். எனக்கும், காரசாரமான ஃப்ரெஷ் ஊறுகாய் இல்லாமல் சாதம் உள்ளே போகாது.

   தங்களின் அன்பான வருகைக்கு என் நன்றிகள், ஜெ.

   அன்புடன் கோபு அண்ணா

   Delete
 26. நானும் மாகாளி ஊறுகாய் ' பிரியமானவன் ' தான் ..முழு பரிச்ரமத்தையும் தவிர்க்க,இப்பொழுதெல்லாம் 'trichy mayavaram lodge -ல் கிடைக்கும் ( பாலக்காடு தங்கம் ஊறுகாய் கம்பெனியின் ) மாகாளி ஊறுகாய்பாக்கெட்டை வாங்கி விடுகிறேன் ..நல்ல ருஜி ...

  மாலி

  ReplyDelete
  Replies
  1. V Mawley February 2, 2017 at 11:33 PM

   வாங்கோ ஸார். தங்களின் மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

   //நானும் மாகாளி ஊறுகாய் 'பிரியமானவன்'தான்..//

   பொதுவாக நம் ஆட்களுக்கு இது பிடிக்காமலேயே இருக்காது. சந்தோஷம். அதன் மிக அபூர்வமான .... தெய்வீக ஸ்மெல் ஒன்றே போதுமே. :)

   //முழு பரிச்ரமத்தையும் தவிர்க்க, இப்பொழுதெல்லாம் 'trichy mayavaram lodge -ல் கிடைக்கும் (பாலக்காடு தங்கம் ஊறுகாய் கம்பெனியின்) மாகாளி ஊறுகாய் பாக்கெட்டை வாங்கி விடுகிறேன் ..நல்ல ருஜி ... மாலி//

   ஒரு விதத்தில் இதுவும் நல்லதுதான்.

   நான் 2-3 ஆண்டுகளுக்கு முன்பு, என் பெரிய பிள்ளை + அவனின் குடும்பத்தார் இவ்விடம் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த போது (அப்போது வடு மாங்காய் சீஸன் இல்லாததால்) இதே மாயவரம் லாட்ஜில் தாங்கள் சொல்லும் அதே பாலக்காட்டு கம்பெனியின் வடு மாங்காய் ஊறுகாய் சில பாக்கெட்டுகள் வாங்கி வந்துள்ளேன்.

   மிகவும் திக்கான ப்ளாஸ்டிக் பாக்கெட்டுகள் .. ஒவ்வொன்றிலும் பொடிப்பொடியாக, மிகவும் ருசியோ ருசியான, நன்கு ஊறி சுருங்கிப்போன பத்தே பத்து வடுக்களும், ஒரு டம்ளர் அளவுக்கு கார சாரமான வற்றல் குழம்புபோல ..... கொஞ்சம் மாங்காய் ஜலமும் இருந்தது.

   அதன் அப்போதைய ஒரு பாக்கெட் விலை ரூ. 100/- எனக்கொடுத்து வாங்கி வந்தேன். அந்தப் பாக்கெட்டில் உள்ள ஒவ்வொரு பொடிப்பொடி வடு மாங்காயும் சுமார் ரூ.10 வீதம் COST ஆனது என நினைத்துக்கொண்டேன். இப்போது விலைவாசி உயர்வுகளால் இன்னும் விலை கூடுதலாகச் சொன்னாலும் சொல்லலாம். விலை மிகவும் அதிகம் தான் என்றாலும், நமக்கு வீட்டுக்கு அருகிலேயே, சீஸனே இல்லாவிட்டாலும், நினைத்த நேரத்தில் ரெடி மேடாகக் கிடைக்கிறதே என்பதில் சந்தோஷம் மட்டுமே.

   அது போல அந்த மாயவரம் லாட்ஜுக்கு எதிர்புறம் ‘ரமணா’ என்றொரு கடை உள்ளது. கை முறுக்கு, சீடைகள், மனோரக்கா உருண்டைகள் போன்ற அனைத்தும் கிடைக்கின்றன. நல்ல குவாலிடியாகவும் உள்ளன. அந்தக் கடையில் ரெடி மேடாக ‘வேப்பிலைக்கட்டி’ [மணமுள்ள நார்த்தம் இலையைப் பொடியாக்கி உப்பு, காரம் முதலியன சேர்த்து செய்த, தேவாமிர்தமான ஊறுகாய்] கிடைக்கிறது. அதுவும் நான் அவ்வப்போது வாங்கி வருவேன். ரூ. 25 க்கு வெல்லச்சீடை அளவுக்கு நாலு உருண்டைகளுடன் மட்டும் ஒரு ’வேப்பிலைக்கட்டி’ பாக்கெட் தருகிறார்கள்.

   இந்த ரமணாவுக்கு எதிரிலேயே ஒரு பால்கோவா கடை உள்ளது. அதில் ஸ்பெஷல் திரட்டுப்பால் கிடைக்கிறது. கிலோ ரூ. 300 (கால் கிலோ ரூ. 75 மட்டுமே). அதுவும் பிரமாதமாகவே உள்ளது.

   மொத்தத்தில் எங்கள் ஆண்டார் தெருவின் மிக அருகே, என் வீட்டுக்குப் பக்கத்தில் இதுபோல கிடைக்காத தின்பண்டப் பொருட்கள் எதுவுமே இல்லை எனச் சொல்லலாம். மொத்தத்தில் சொர்க்க லோக சுகம் மட்டுமே! :)))))

   Delete
 27. நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள எப்படியெல்லாம் முயற்சி செய்திருப்பார் என வியந்து தொடர்கையில் மாகாளி ஊறுகாய் நினைவை விட்டு நீங்க மறுக்கிறது! நன்றி ஐயா!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s. February 3, 2017 at 9:53 PM

   வாங்கோ ஸார், வணக்கம்.

   //நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள எப்படியெல்லாம் முயற்சி செய்திருப்பார் என வியந்து தொடர்கையில் மாகாளி ஊறுகாய் நினைவை விட்டு நீங்க மறுக்கிறது! நன்றி ஐயா!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

   Delete
 28. ரொம்ப நல்ல பதிவு. அவர் பேங்க்ல வேற வேலை பார்த்திருக்கிறார். தப்பித் தவறி அது சம்பந்தமான ஆட்களும் பார்வையாளர்களாக இருந்தால், "ஏம்பா... so & so, 78 ஜனவரி 7ம் தேதி வாங்கின 25,000 ரூ கடன்ல பாதிக்குமேல பாக்கிவச்சிருந்தயே.. இப்போ கட்டிட்டயா"ன்னு கேட்டிடுவாரோ? Jokes apart, இது அபூர்வத் திறமை. பகிர்ந்துகொண்ட உங்களுக்குப் பாராட்டுகள். (அதிலும் எல்லா relevant detailsஉடன் பகிர்ந்ததற்குப் பாராட்டு.)

  ReplyDelete
  Replies
  1. 'நெல்லைத் தமிழன் February 6, 2017 at 1:41 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ரொம்ப நல்ல பதிவு.//

   ரொம்ப சந்தோஷம். :)

   //அவர் பேங்க்ல வேற வேலை பார்த்திருக்கிறார். தப்பித் தவறி அது சம்பந்தமான ஆட்களும் பார்வையாளர்களாக இருந்தால், "ஏம்பா... so & so, 78 ஜனவரி 7ம் தேதி வாங்கின 25,000 ரூ கடன்ல பாதிக்குமேல பாக்கிவச்சிருந்தயே.. இப்போ கட்டிட்டயா"ன்னு கேட்டிடுவாரோ?//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நல்லதொரு கற்பனை. :)))))

   //Jokes apart, இது அபூர்வத் திறமை.//

   ஆமாம். மிகவும் அபூர்வத் திறமைகள்தான்.

   //பகிர்ந்துகொண்ட உங்களுக்குப் பாராட்டுகள். (அதிலும் எல்லா relevant details உடன் பகிர்ந்ததற்குப் பாராட்டு.) //

   மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

   Delete
 29. "எண்கவனகர் திரு மகாலிங்கம்" - திரு நடனசபாபதி அவர்கள் எழுதியதைப் படித்தவுடன் எனக்கு ஒன்று தோன்றியது.

  இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில், 'அவதானித்தார்' என்ற சொல் பதம் பயன்படுத்தப்படுகிறது. இது ஈழத் தமிழர்களிடையே புழங்கிவரும் சொல். (கவனித்தார் என்பது அர்த்தம் என்று நினைக்கிறேன்). ஆனால், அஷ்டாவதானி என்பது வடமொழிச் சொல் என்று நினைக்கிறேன். அதற்கு அர்த்தம் எட்டு விதமானவைகளைக் கவனிக்கிறவர். இதைத்தான் வே.ந அவர்கள், 'எண்கவனகர்' என்று குறிப்பிட்டுள்ளார் என்று நினைக்கிறேன்.

  அப்படீன்னா, அவதானிப்பு என்பது வடமொழிச் சொல்லா?

  நீங்களோ, ஜீவி சாரோ, வே.ந அவர்களோ தெளிவுபடுத்துவீர்களா?

  ReplyDelete
  Replies
  1. 'நெல்லைத் தமிழன் February 7, 2017 at 3:06 PM

   வாங்கோ .... வணக்கம். மீண்டும் வருகைக்கும் ஓர் புதிய தமிழ் இலக்கிய சர்ச்சையினை ஆரம்பித்துக் கொடுத்துள்ளதற்கும் மகிழ்ச்சி.

   //"எண்கவனகர் திரு மகாலிங்கம்" - திரு நடனசபாபதி அவர்கள் எழுதியதைப் படித்தவுடன் எனக்கு ஒன்று தோன்றியது.

   இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில், 'அவதானித்தார்' என்ற சொல் பதம் பயன்படுத்தப்படுகிறது. இது ஈழத் தமிழர்களிடையே புழங்கிவரும் சொல். (கவனித்தார் என்பது அர்த்தம் என்று நினைக்கிறேன்).//

   ஆமாம். இந்த ‘அவதானித்தல்’ என்பது இலங்கைத் தமிழர்கள் உபயோகிக்கும் ஓர் அழகிய சொல்லாகும். அதற்கு கவனித்தல் என்பதே அர்த்தமுமாகும்.

   //ஆனால், அஷ்டாவதானி என்பது வடமொழிச் சொல் என்று நினைக்கிறேன்.//

   ஆம். இது நிச்சயமாக வடமொழிச் சொல்லாகத்தான் இருக்க வேண்டும்.

   திதியில் ’அஷ்டமி’ என்றால் அமாவாசை அல்லது பெளர்ணமியிலிருந்து வரும் எட்டாம் நாள் என்பதைக்குறிப்பதாகும்.

   எட்டு திசைகளை ’அஷ்ட திக்குகள்’ எனச் சொல்வதும் உண்டு.

   ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த திதி: அஷ்டமி. அவன் கோகுலத்தில் வளர்ந்தவன் ஆதலால் அது ’கோகுலாஷ்டமி’ என்ற சிறப்பினையும் பெற்றது.

   அவலக்ஷணமாக இருப்பவர்களின் முகம் ’அஷ்ட கோணலாக’ இருக்கிறது என்றும் சிலர் சொல்லுவார்கள்.

   மொத்தத்தில் ‘அஷ்டம்’ என்றால் ‘எட்டு’ என்பதை கஷ்டமில்லாமலேயே நாம் உணரலாம்.

   //அதற்கு அர்த்தம் எட்டு விதமானவைகளைக் கவனிக்கிறவர்.//

   ஆமாம். அஷ்டாவதானி என்றால் ஒரே நேரத்தில் எட்டு விதமான விஷயங்களைக் கவனிக்கிறவர் என்றே அர்த்தமாகும்.

   //இதைத்தான் வே.ந அவர்கள், 'எண்கவனகர்' என்று குறிப்பிட்டுள்ளார் என்று நினைக்கிறேன்.//

   நானும் அப்படியே நினைக்கிறேன். தூய தமிழில் பேசுவது சிறப்புத்தான் என்றாலும் கூட, ’அஷ்டாவதானி’ என்பதே என்னால் சுலபமாகப் புரிந்து கொள்ள இயலுகிறது. தூய தமிழில் ’எண்கவனகர்’ என்பதை உச்சரிக்கும் போதே எனக்குத் தடுமாற்றம் மட்டுமே ஏற்படுகிறது.

   நாம் சொல்லும் / எழுதும் எந்த ஒரு சொல்லுமே பிறருக்கு சுலபமாகப் புரிந்துகொள்ளப்படுவதாக மட்டும் இருக்க வேண்டும்.

   ’ஃபேஸ்-புக்’ என்பதை ’ஃபேஸ்-புக்’ என்றே சொல்லிவிட்டோ எழுதி விட்டோ போகலாம். மிகவும் கஷ்டப்பட்டு சிலர் ’முகப்புத்தகம்’ என்றும் வெறுசிலர் ’வதனநூல்’ என்றும் மற்றும் சிலர் ’மூஞ்சிப்புத்தகம்’ எனவும் சொல்லி ஹிம்சித்து வருகிறார்கள்.

   இதைப்பற்றியே கூட நம் திருச்சி பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் ஒரு பதிவு எழுதியிருந்த ஞாபகம் உள்ளது.

   //அப்படீன்னா, அவதானிப்பு என்பது வடமொழிச் சொல்லா?//

   இல்லை. அது நிச்சயமாக வடமொழிச் சொல்லாக இருக்கவே முடியாது என்பது என் எண்ணமாகும்.

   //நீங்களோ, ஜீவி சாரோ, வே.ந அவர்களோ தெளிவுபடுத்துவீர்களா?//

   நான் மேலே எனக்குத் தெரிந்தவரை தெளிவு படுத்தி விட்டேன்.

   நம் பிரபல பதிவர் திரு. ரமணி ஸார் அவர்கள் ஒரு வேடிக்கையான பதிவினை எழுதி வெளியிட்டிருந்தார். அதனை தயவுசெய்து படித்துப்பார்க்கவும். அதில் இது சம்பந்தமான மொழி ஆராய்ச்சிகளின் அபத்தங்கள் யாவும் புட்டுப்புட்டு வைக்கப்பட்டுள்ளன.

   அதன் இணைப்பினைத் தேடி இன்னும் சற்று நேரத்தில் இங்கேயே கொடுத்து விடுகிறேன்.

   Delete
 30. எங்கு தமிழ்? .... எதில் தமிழ் ?
  ==================================

  வெகு நாட்களுக்குப் பின் என் நண்பனின் கடைக்குப் போனேன்

  'சங்கர் சைக்கிள் மார்ட்' என இருந்த நேம் போர்டை
  'சங்கர் மிதிவண்டிக்கான அங்காடி' என அழகாக மாற்றி இருந்தான்.

  நான் பூரித்துப் போனேன்.

  "நேம் போர்டை எப்போது மாற்றினாய்? சிறப்பாக இருக்கிறது" என்றேன்.

  "யார் மாறினாலும் நீ எல்லாம் மாற மாட்டாய்; பெயர் பலகை எனச் சொல்" என்றான்.

  "ஓ சாரி சாரி.. பெயர் பலகையை எப்போது மாற்றினாய்?" என்றேன்

  தலையில் அடித்து கொண்டான்.

  "ஏன் 'தவறு.. தவறு' எனச் சொல்லக் கூடாதா?" என்றான்.

  அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது அப்போதுதான் புரிந்தது. இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்.

  "ஒரு மிதி வண்டிக்கு இருபது சிறு பொருட்கள் தேவைப் படுமா" என்றேன்.

  முதன் முதலில் முழுத் தமிழில் பேசியது எனக்கே பெருமையாக இருந்தது.

  "படும் " என்றான் சுருக்கமாக.

  "நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச் சொல்ல முடியுமா" என்றேன்.

  என்னை அலட்சியமாக பார்த்தபடி மடமடவென சொல்லத் துவங்கினான்:

  "டயர், ட்யுப், ரிம், போக்ஸ், ஹேண்ட்பார், பெல், ப்ரேக், பெடல், சீட், ஸ்பிரிங், மக்காட், செயின், பால்ரஸ், வால்டுப், பெடல் கவர் ..... பதினைந்து ஆச்சா?" என்றான்.

  "மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்; மிக விரைவாகவும் சொல்லிவிட்டாய்; பொருட்கள் பதினைந்து சரி; தமிழ் என்ன ஆயிற்று?" என வைரமுத்து பாணியில் பேசிவிட்டு கிளம்பத் தயாரானேன்.

  விடைகொடுத்து அனுப்பிய அவன் கண்களில் ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது.

  விரைவாகக் குழம்புகிறவனே, விரைவாகவும் தெளிவடைவான். எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது நிச்சயமாக நம்மைப் போலவே அவனுக்கும் சில நாட்களில் புரியக் கூடும்.

  -=-=-=-=-=-=-=-=-

  http://yaathoramani.blogspot.in/2011/09/blog-post_15.html

  Thanks a Lot to Mr. S. Ramani Sir.

  -=-=-=-=-=-=-=-=-

  ReplyDelete
 31. To நெல்லைத்தமிழன்
  =======================

  ’எண்கவனகர்’ என்ற தூய தமிழ்ச் சொல்லை, ஏதோ ஒரு அவசரத்திலோ அல்லது ஆர்வத்திலோ அல்லது வேகத்திலோ, ஒரு பெண்மணி, தன் நாக்கு குளறிப்போய் ’என்கணவரவர்” என்றோ ‘என் கணவர் அவர்’ என்றோ சொல்லி விட்டாலோ எழுதிவிட்டாலோ, அவளுக்கு மட்டுமல்லாது, அந்த அஷ்டாவதானிக்கும், தர்ம சங்கடமாகி, மிகவும் திண்டாட்டமாகப் போய் விடும், என நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன். :)))))

  ReplyDelete
 32. 2011ல் ரமணி சார் எழுதியதை நினைவில் இருத்தி இங்கு சேர்த்ததற்கு நன்றி. என் குழந்தைகளிடமே அவ்வப்போது, இன்னும் 10 நிமிடங்களுக்குள் யார் முதலில் தூய தமிழில் இல்லாது பேசுகிறார்கள் என்று பார்க்கலாம் எனப் போட்டி வைப்பேன். அது உடனே வீட்டில் அமைதியை உண்டாக்கும் (அவங்க இந்த ஊரில் வளர்ந்தவங்க. எங்களின், அவர்களின் ஆர்வத்தால் தமிழ் கொஞ்சம் கற்றுக்கொண்டவங்க. நான் தமிழில்தான் அவர்களிடம் பேசுவேன். திட்டுவதும் தமிழில்தான். அவர்கள் அசால்டாக உபயோகப்படுத்தும் ஆங்கிலத் திட்டுச் சொற்களைத் தமிழில் கூறி எவ்வளவு மோசமான வார்த்தைகள் அவை என்பதைப் புரியவைப்பேன்). ஆனாலும் என் மகள் ஓரளவு வெற்றி பெற்றுவிடுவாள். நானே சில சமயங்களில் அவர்களிடம் தோற்றிருக்கிறேன்.

  நிற்க... தூய தமிழ் என்பதும் ஓரளவுக்குத்தான். உதாரணமாக, 'Bun' என்பதை ஈழத் தமிழர்கள் 'பாண்' என்று உபயோகப்படுத்துகிறார்கள். தப்பில்லை. அதற்குப் பதிலாக மைதா ரொட்டி, கோதுமை ரொட்டி என்று ஆரம்பித்தால், பிஸ்கட், மஃபின்ஸ் போன்று பல வித பேக்கரி பொருட்களுக்குத் தமிழில் எங்கு தேடுவது? அதனால்தான் ஆங்கிலத்தில் சர்வசாதாரணமாக பிறமொழிச்சொற்களை எடுத்தாண்டு, ஆங்கிலச்சொல் என்று துண்டைப்போட்டுத் தாண்டிவிடுகிறான் (கட்டமராங்க், சீயர் என்று பலப் பலச் சொற்களைச் சொல்லலாம்). சென்னையில் எல்லாக் கடைகளிலும் தமிழில் பெயர்ப்பலகை வைக்கிறேன் என்று, எந்த உசிதமணியோ சொன்னதை வைத்துத் தமிழைக் கொலை செய்திருக்கிறார்கள் (அதாவது ஒரு தமிழனும் உபயோகப்படுத்தாத தமிழில்). சந்தேகம் இருந்தால், கோபமான மூடு இருக்கும்போது, சென்னையின் தமிழ்படுத்திய பெயர்ப்பலகையைப் படித்து மனதாரச் சிரிக்கலாம்..எவன் இந்தப் பயித்தியக்காரத்தனத்துக்குக் காரணகர்த்தா என்று. இதைத் தனித் தமிழ் ஆர்வலர்கள் புரிந்துகொண்டு தமிழ் வளர்க்க முற்பட்டால் தமிழ் நிச்சயம் வளரும். அப்படி முயற்சி செய்யவில்லை என்றால், விரைவில், தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் பேசுவதுபோல்தான் தமிழ் இருக்கும்.

  'எண்கவனகர்' - இதை 'என் கணவர் அவர்' - நல்ல நகைச்சுவை. சொல்ல சாத்தியம் இருக்கவும் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. //ஆனாலும் என் மகள் ஓரளவு வெற்றி பெற்றுவிடுவாள். நானே சில சமயங்களில் அவர்களிடம் தோற்றிருக்கிறேன்.//

   நம் குழந்தைகளிடம் நாம் தோற்பது தோல்வியே அல்ல. அதுவும் நமக்கு ஓர் வெற்றி மட்டுமே.

   //சென்னையில் எல்லாக் கடைகளிலும் தமிழில் பெயர்ப்பலகை வைக்கிறேன் என்று, எந்த உசிதமணியோ சொன்னதை வைத்துத் தமிழைக் கொலை செய்திருக்கிறார்கள்//

   பெயர் பலகை வைக்கும் முன் ஓர் நல்ல தமிழாசிரியரிடமோ அல்லது தமிழில் புலமை வாய்ந்த ஒருவரிடமோ சென்று, எழுத்துப்பிழைகள் ஏதும் இதில் இல்லாமல் உள்ளதா என்பதைக் கேட்டுக்கொண்டு செய்யப்பட வேண்டும் என சட்டம் இயற்றி, அதனைக் கடுமையான நடைமுறைக்குக் கொண்டுவந்தால் மட்டுமே இவற்றைத் தவிர்க்க முடியும்.

   //நல்ல நகைச்சுவை. சொல்ல சாத்தியம் இருக்கவும் இருக்கு.//

   மிக்க நன்றி. :)))))

   Delete
 33. இத்தகைய திறமைசாலிகளை சந்த்தித்ததில்லை. திரு மஹாலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்களும், நிகழ்ச்சியை
  கண்முன் கொண்டுவந்து நிறுத்திய தங்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும் !

  ReplyDelete
  Replies
  1. G Perumal Chettiar February 7, 2017 at 7:12 PM

   வாங்கோ, வணக்கம். தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   //இத்தகைய திறமைசாலிகளை சந்த்தித்ததில்லை. திரு மஹாலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்களும், நிகழ்ச்சியை கண்முன் கொண்டுவந்து நிறுத்திய தங்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும் !//

   தங்களின் அன்பான + அபூர்வ வருகைக்கும், ஆதரவான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   Delete
 34. என் எழுத்து தங்கள்
  நினைவில் இருந்ததும்
  அது எடுத்துக் காட்டாகப் பயன்பட்டதும்
  என் பாக்கியம்

  நன்றியுடனும் வாழ்த்துக்களுடனும்

  ReplyDelete
  Replies
  1. Ramani S February 8, 2017 at 4:29 AM

   வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

   //என் எழுத்து தங்கள் நினைவில் இருந்ததும், அது எடுத்துக் காட்டாகப் பயன்பட்டதும், என் பாக்கியம். நன்றியுடனும் வாழ்த்துக்களுடனும்//

   என்னைப் பொறுத்தவரை, எழுத்து என்றால் எல்லோருடைய எல்லா எழுத்துக்களும் (படைப்புகளும்) எழுத்தாகிவிடாது.

   பலரும் எதோ பொழுதுபோகாமல் பக்கம் பக்கமாக எதை எதையோ பதிவுகள் என்ற பெயரில் எழுதி வருகிறார்கள். நாமும் நமக்குப் பொழுதுபோகாத நேரங்களில் அவற்றைப் படித்து வருகிறோம். அதில் சுவாரஸ்யம் இருக்கோ இல்லையோ, படித்தோம் என்பதற்கு அடையாளமாக ஏதேனும் கருத்தளித்தும் வருகிறோம். பொதுவாக அத்துடன் அதை நாம் சுத்தமாக மறந்தே போய் விடுகிறோம்.

   ஆனால் தங்களின் பல படைப்புகள், பலநேரம் என்னைச் சற்றே சிந்திக்க வைத்துள்ளன. மிக நன்றாக ரஸிக்கவும் வைத்துள்ளன. அதுவும் குறிப்பாக அவற்றில் இதுபோல சில மட்டுமே என் மனதில் ஓர் தாக்கத்தை உண்டாக்கி, என்றும் என் நினைவினை விட்டு நீங்காமல் இருந்து வருகின்றன.

   -=-=-=-

   உதாரணமாக ’மிகச்சிறந்ததோர் சிறுகதை என்றால், அதை எழுதியவர் யார்? அது வெளிவந்த பத்திரிகை எது? அந்த சிறுகதையின் தலைப்பு என்ன? என்பதையெல்லாம் நாளடைவில் மறந்துவிட நேர்ந்தாலும்கூட, அதில் வரும் ஏதேனும் ஒரு சம்பவம் வாசகர் மனதை விட்டு என்றும் நீங்காமல் அப்படியே தங்கிவிட வேண்டும் .... அதுதான் எழுத்தாளரின் மாபெரும் வெற்றி’ .... என நான் ஒரு மிகச்சிறந்த எழுத்தாள நண்பர் மூலம் கேள்விப்பட்டுள்ளேன்.

   அதையேதான் நானும் என் கதைகள் பலவற்றில் கடைபிடித்தும் வந்துள்ளேன் என்பது, என் கதைகளை ஆர்வமாகப் படித்துவிட்டு, ஆங்காங்கே என்னை சந்திக்கும் பலரின் பாராட்டுகள் மூலம் அறிந்து மகிழ்ந்து வருகிறேன்.

   நேற்றுகூட (7.2.2017) நான் சென்று வந்த ஓர் சஷ்டியப்தபூர்த்தி விழாவில், என்னைச் சுற்றி ஒரு சிறு வாசகர் கூட்டம். அதில் பெரும்பாலானவர்கள் நடு வயதைத் தாண்டிய குடும்பத் தலைவிகள். அவர்களை நான் இதற்கு முன்பு சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

   நான் எழுதியுள்ள பல கதைகளில் அவரவர்களுக்குப் பிடித்தமான, மறக்கவே முடியாத சில சம்பவங்களை எடுத்துச் சொல்லி என்னை மிகவும் பாராட்டிப் புகழ்ந்து மகிழ்வித்தனர்.

   அருகில் நின்று கொண்டிருந்த என் மனைவிக்கு (என் கதைகளைப் படிக்காததால் அவர்கள் சொல்லுவது சரியாக ஒன்றுமே புரியாமல் இருந்தும்கூட) மிகவும் வியப்பாகவே இருந்தது.

   -=-=-=-

   என் நினைவை விட்டு என்றும் நீங்காத இந்த குறிப்பிட்ட ஆக்கத்தில் தாங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளீர்கள். தங்களுக்குத்தான் நான் என் ஸ்பெஷல் பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகளைக் கூறிக்கொள்ள வேண்டும். மிக்க நன்றி, Mr. RAMANI Sir.

   அன்புடன் VGK

   Delete
 35. வணக்கம் கோபு சார்! சிலருக்கு மட்டுமே இப்படிப்பட்ட நினைவாற்றல் வாய்க்கிறது. அதனைக் கடுமையான பயிற்சிகளின் மூலம் அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். உங்கள் பதிவைப் படிக்கும் போதே மலைப்பாய் இருக்கிறது. அவர் மூளை ஒரு கணிணி போலச் செயல்படுகிறது. அஷ்டாவதனிக்கு என் பாராட்டுகள்! தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஞா. கலையரசி February 17, 2017 at 9:12 PM

   //வணக்கம் கோபு சார்!//

   வாங்கோ மேடம். வணக்கம்.

   //சிலருக்கு மட்டுமே இப்படிப்பட்ட நினைவாற்றல் வாய்க்கிறது.//

   ஆமாம்.

   //அதனைக் கடுமையான பயிற்சிகளின் மூலம் அதிகப்படுத்திக் கொள்கிறார்கள்.//

   ஆமாம். ஆமாம். அதே ... அதே.

   //உங்கள் பதிவைப் படிக்கும் போதே மலைப்பாய் இருக்கிறது. அவர் மூளை ஒரு கணிணி போலச் செயல்படுகிறது.//

   ஆமாம் மேடம். நேரில் கண்டு களித்த எனக்கும் மலைப்பாய்த்தான் இருந்தது. வயதாக வயதாக மூளை பலருக்கும் (எனக்கும்கூடத்தான்) மழுங்கும் என மட்டுமே எண்ணி வந்தேன். இவர்களைப் போன்ற சிலருக்கு மட்டும் அது மழுங்காமல் கூர்மையாகி வருவதில் எனக்கே கொஞ்சம் பெருமையாகவும் அதேசமயம் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. :)

   //அஷ்டாவதனிக்கு என் பாராட்டுகள்! தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி!//

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   Delete
 36. அடேங்கப்பா...!!! அஷ்டாவதானம் பெரும் திறமைதான். காலைல இன்னா டிஃபன்னு கேட்டாலே சொல்ல கஷ்டாவதானமா இருக்கு. நான்.... டோட்டலி அம்பேல்!!! உங்களோட திசையப்பாத்து ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம். (பக்கத்துலயே பிள்ளையார் இருக்காருல்ல?) ஊறுகாய நெனச்சாக்கவே நாக்கு அவுட்டாகி ஜொள்ளு வடியுது...சுவை(கோ)-ஆன பதிவு!!! பகிர்வுக்கு நன்றி வாத்யாரே!

  ReplyDelete
  Replies
  1. RAVIJI RAVI February 25, 2017 at 2:51 PM

   வாங்கோ சின்ன வாத்யாரே ! வணக்கம்.

   //அடேங்கப்பா...!!! அஷ்டாவதானம் பெரும் திறமைதான்.//

   சந்தேகமே இல்லாமல் மிகப்பெரிய திறமை மட்டுமேதான்.

   //காலைல இன்னா டிஃபன்னு கேட்டாலே சொல்ல கஷ்டாவதானமா இருக்கு.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   அஷ்தாவதானம்--கஷ்டாவதானம் ..... நகைச்சுவையான சொல்லாடலில் வலைப்பதிவர்களில் ’கவிஞர்’ என்றால், எனக்குத் தெரிந்து நீர் ஒருவரே ஒருவர் மட்டுமே. :)

   ரஸித்தேன் ..... சிரித்தேன்.

   //நான்.... டோட்டலி அம்பேல்!!! உங்களோட திசையப்பாத்து ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம். (பக்கத்துலயே பிள்ளையார் இருக்காருல்ல?)//

   பிள்ளையார் ஒருவர் மட்டுமே, பல நூற்றாண்டுகளாக நிரந்தரமாக அங்கேயே நிலைகொண்டு இருக்கிறார்.

   நீர் தான், நீர் அற்ற வரண்ட காவிரி ஆறு போல அடிக்கடி, மணலுடன் கூடவே, காணாமல் போய் விடுகிறீர்.

   //ஊறுகாய நெனச்சாக்கவே நாக்கு அவுட்டாகி ஜொள்ளு வடியுது...சுவை(கோ)-ஆன பதிவு!!! பகிர்வுக்கு நன்றி வாத்யாரே!//

   இதிலும் சுவை(க்’கோ’) என்று மேலும் ஒரு பஞ்ச் வைத்து மகிழ்வித்துள்ளீர் ! வாழ்க !!

   என் ’இதயக்கனி’யான தங்களின் அபூர்வ வருகைக்கும், ஆச்சர்யமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   உங்களை என்னால் மறக்க முடியாத ஒருசில பதிவுகள்:

   http://gopu1949.blogspot.in/2014/07/blog-post_28.html

   http://gopu1949.blogspot.in/2014/08/vgk-28-01-03-first-prize-winners.html

   http://gopu1949.blogspot.in/2014/10/6-mgr.html

   http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_27.html

   அன்புடன் VGK

   Delete
 37. I record with deep regret the sudden demise of Mr. Mahalingam (Ashtavathani) on 03.11.2017 evening. :(

  Face Book message released by his daughter is given below:

  -=-=-=-=-=-

  3rd November 2017, between 6.31 and 6.35 am- my father, Mahalingam Venkatramani, breathed his last. The cancer tried to steal his mind through its power to give him pain. He had the last laugh- for he suffered no pain during those final minutes. He was at home.. with me and my mother holding him as he sat in a chair. My mother's prayers and my calling him - "Appa" ( father) were the last words he heard.. he was at home.. it happened just the way he wanted it to happen.. at home.. with his family.. I thank all those who supported us through these days.. - Matangi Mawley

  -=-=-=-=-=-

  ReplyDelete

 38. It was an honor to have known such a great person
  deepest sympathies :(
  May his soul rest in peace

  ReplyDelete
 39. அதிசயத் திறமை படைத்த மனிதர்! இவ்வளவு சீக்கிரம் மறைவார் என எதிர்பார்க்கவே இல்லை!

  ReplyDelete