என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 9 பிப்ரவரி, 2017

அதற்குள் ஓராண்டு ஓடிப்போனதே ! :(


முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
09.02.2017


"வாசிப்பது என்பது சுவாசிப்பது ! 

வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள் !!”

திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்

[ மறைவு: 09.02.2016  ]
http://gopu1949.blogspot.in/2016/03/blog-post.html 


வலையுலக நட்பிலிருந்து
தாங்கள் 2016-ம் ஆண்டு முதல் 
பிரிந்து சென்றுவிட்டாலும் ....

2011 முதல் 2015 வரை, 
அடியேன் வெளியிட்டுள்ள 
என் 806 பதிவுகள் அனைத்திலும் உள்ள 
   பின்னூட்டங்களிலும்

எங்கள் நினைவலைகளிலும் நீங்கள் 
நிரந்தரமாக இன்றும் வாழ்ந்து வருகிறீர்கள்.

-oOo-

தங்களிடமிருந்து எனக்குக்  
கடைசியாக பின்னூட்டங்கள்
கிடைக்கப்பெற்ற நாள் : 31.12.2015
http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

(சாதனையாளர்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பு 

 100% பின்னூட்டப் போட்டி 2015)
 1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் !!
  1. இராஜராஜேஸ்வரி December 31, 2015 at 8:24 AM

   வாங்கோ மேடம், வாங்கோ, வணக்கம்.

   //இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
   இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் !!//

   தங்களின் இனிமையான, ருசியான, தித்திக்கும் பொங்கல் போன்ற நல்வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

 2. போட்டிகள் வைத்து, திறம்பட நடத்தி
  பரிகள் அளித்த சாதனையாளருக்கு
  இனிய நன்றிகள்..!!
  1. இராஜராஜேஸ்வரி December 31, 2015 at 8:26 AM

   //போட்டிகள் வைத்து, திறம்பட நடத்தி பரிகள் அளித்த சாதனையாளருக்கு இனிய நன்றிகள்..!! //

   // போட்டிகள் வைத்து, திறம்பட நடத்தி...... //

   இதுவரை OK ... OK ...

   //ப ரி க ள் அளித்த//

   போட்டியில் கலந்துகொண்ட பந்தயக்குதிரைகளுக்கு நான் அளித்ததும் பரிகளா .... குதிரைகளா ?

   { பரி = ’குதிரை’ அல்லவா! }

   அதில் இருவரை மட்டும் நான் சண்டிக்குதிரைகள் என்று சொல்லியிருந்ததால், ஒருவேளை அதே சிந்தனையில் தாங்களும் இருந்து, ‘பரிசுகள் அளித்த’ என்பதைப் ’பரிகள் அளித்த’ என குதிரை வேகத்தில் எழுதியிருப்பீர்களோ என்னவோ !! :)

   //சாதனையாளருக்கு இனிய நன்றிகள்..!! //

   உண்மையில் இந்தப்போட்டியில் சாதனையாளர்கள் தாங்கள் எட்டுப் பேர்கள் மட்டும் அல்லவா. உங்கள் அனைவரையும் அடையாளம் காட்டி சிறப்பிக்க ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது, இந்த மிகச் சாதாரணமானவனின் பெரும் பாக்யமே.

   என்னையும் இங்கு தாங்கள் ஒரு சாதனையாளர் ஆக்கியுள்ளதற்கும், தங்களின் இனிய நன்றிக்கும், என் இதயம் கனிந்த நன்றிகள், மேடம்.

  oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

2015ம் ஆண்டு என் வலைத்தளத்தினில் நடைபெற்ற 
100% பின்னூட்டமிடும் போட்டியில் 
வெற்றிவாகை சூடிய தங்களுக்கான 
பரிசுப்பொருட்களை 29.10.2015 அன்றே
தங்களுக்கு கொரியர் மூலம் என்னால்
அனுப்பி வைக்க முடிந்ததில் 
நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 

அதற்குத் தாங்கள் சந்தோஷமாக எனக்கு 
அனுப்பியுள்ள  கடைசி மெயில் செய்தி:
30/10/2015
to me

’ஸ்பெஷல் கிஃப்ட்’ உள்பட அனைத்தும் கிடைக்கப்பெற்றேன்.

என்றும் பிரிக்காமல் பொக்கிஷமாகப் பாதுகாப்போம்.

வெள்ளிக்கிழமையும் அதுவுமாக அரவிந்த்குமாருக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் இல்லத்துக்கு வந்து, உப்பு மஞ்சள் வாங்கிய திருநாளில் வெள்ளிக்காசு கிடைக்கப்பட்டது மட்டற்ற மகிழ்ச்சி தந்தது .. நிறைந்த நன்றிகள்..


oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

நினைவை விட்டு என்றும் நீங்காத
மற்ற சில பதிவுகளின் இணைப்புகள்:

2011

http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

நான் ஏறி வந்த ஏணி, தோணி, கோணி! 

[2011 இந்த வருடத்தில் நான் ]


2012


ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம்.

2013

ஆயிரம் நிலவே வா! .... ஓர் ஆயிரம் நிலவே வா !!

2014  
சிறுகதை விமர்சனப் போட்டிகள்


   

போட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி

ஒட்டுமொத்த ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் பட்டியல்

பரிசு மழை பற்றியதோர் அலசல் - VGK-01 to VGK-10

பரிசு மழை பற்றியதோர் அலசல் - VGK-11 to VGK-20

பரிசு மழை பற்றியதோர் அலசல் - VGK-21 to VGK-30

பரிசு மழை பற்றியதோர் ஒட்டுமொத்த அலசல் 
 VGK-31 to VGK-40

போட்டி பற்றிய பல்வேறு அலசல்களும் புள்ளி விபரங்களும் VGK-01 to VGK-40


சிறுகதை  விமர்சனப் போட்டிகளில் 
தங்களின் மகத்தான 
28 வெற்றிகள்.

முதல் பரிசு பெற்றவை


  

காதலாவது கத்திரிக்காயாவது ....

அமுதைப்பொழியும் நிலவே

அஞ்சலை

வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம் !! 

முன்னெச்சரிக்கை முகுந்தன்

தாயுமானவள்

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா ?

அவன் போட்ட கணக்கு

வாய் விட்டுச் சிரித்தால்

மாமியார்
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-39-01-03-first-prize-winners.html


இரண்டாம் பரிசு பெற்றவை
மறக்க மனம் கூடுதில்லையே

உண்மை சற்றே வெண்மை

சூழ்நிலை

வடிகால்

அட்டெண்டர் ஆறுமுகம்

சகுனம்

’எலி’ஸபத் டவர்ஸ்


மூன்றாம் பரிசு பெற்றவை

காதல் வங்கி

உடம்பெல்லாம் உப்புச்சீடை

நீ .... முன்னாலே போனா .... நா .... பின்னாலே வாரேன் !

அழைப்பு

மூக்குத்தி

யாதும் ஊரே .... யாவையும் கேளிர் !

முதிர்ந்த பார்வை

எல்லோருக்கும் பெய்யும் மழை

பூபாலன்

எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு ...
ஜாதிப்பூ


 2015      
 100% பின்னூட்டப்போட்டி - 2015

http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_16.html

சாதனையாளர் விருது  
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் 


                                            http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

சாதனையாளர்களின் 
ஒட்டுமொத்த அணிவகுப்பு.  


    

2016


கிட்டத்தட்ட சமவயதில் இருந்த நாம் இருவருமே 
2011 ஜனவரி முதல் வலைப்பதிவு ஆரம்பித்து தொடர்ச்சியாக அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பதிவுகள் கொடுத்து வந்தோம்.  

மிகச்சிறந்த அறிவாளியாகவும், 
ஆன்மீக அத்தாரிட்டியாகவும், 
தெய்வாம்சம் நிறைந்த பதிவராகவும், 
மிகச்சிறப்பான பின்னூட்டங்கள் கொடுப்பவராகவும் உங்களை நான் எனக்குள் நினைத்து 
மகிழ்ந்து கொண்டிருந்தேன். 

தங்களின் எதிர்பாராத திடீர் மறைவு 
எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி 
என்னை மிகவும் கலங்க வைத்துவிட்டது.  

தாங்கள் இனி பின்னூட்டமிட 
வரப்போவது இல்லை என்று தெரிந்ததும், 
நானும் என் வலைத்தளத்தினில் புதிய பதிவுகள் ஏதும் வெளியிட ஆர்வமில்லாமல் இருந்துவிட்டேன். 

2016 + 2017ம் ஆண்டுகளில் ஒருசில  
தவிர்க்க இயலாத சூழ்நிலைகளால் மட்டுமே, 
நேற்றுவரை அதுவும் வெறும் 33+3=36 பதிவுகள் மட்டுமே என்னால் வெளியிடும்படியாக நேர்ந்துள்ளது.

அவைகளில் பெரும்பாலானவைகள் 
20 + 2 + 6 = 28 out of 36 ] 
பிற பதிவர்களான நம் 
திரு. ஜீவி ஸார் அவர்கள் (20), 
திரு. சிட்டுக்குருவி விமலன் அவர்கள் (2),
திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் (6) 
ஆகியோரின்  நூல் அறிமுகங்களாகும். 

மேலும்  1+1+3 = 5 பதிவுகள் 
திருமதி. மனோ சுவாமிநாதன் தம்பதியினர் + 
திரு. தி. தமிழ் இளங்கோ ஸார் +
அஷ்டாவதானி திரு. மெளலி ஸார் 
ஆகியோரின் 
’பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகள்’ பற்றியதாகும்.  

தாங்கள் வருகை தராமல் நான் வெளியிட்டுள்ள 
அந்த 33+3 = 36 பதிவுகள் ஒவ்வொன்றிலும்கூட, 
தங்களின் நினைவாகத் ’தாமரை’ 
மலர்களைக் காட்டியே 
என் பதிவுகளை நிறைவு செய்து, 
நான் எனக்குள் ஓர் ஆறுதல் அடைந்துள்ளேன். 

ஓர் விநாயகர் சதுர்த்தியன்று தாங்கள் பிறந்ததாக
என்னிடம் சொல்லியிருந்தீர்கள் !

ஆன்மீக உலகுக்கு 
முழுமுதற் கடவுளாம் 
விநாயகர் போலவே,

வலைப்பதிவு உலகில் 
தங்களின் புகழும், நினைவுகளும் 
என்றும் நீடித்து நிற்கும் !
பரம பக்தையானத் தங்களுக்கு 
இறைவனின் திருவடிகளைச் சீக்கரமாக அடைய 
மிகச்சுலபமாக விசா கிடைத்து விட்டது.

எனக்கான அந்த விசா கிடைக்க 
எப்போது ப்ராப்தமோ தெரியவில்லை!

அதுவரை 
"வாசிப்பது என்பது சுவாசிப்பது ! 
வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள் !!”
என்ற தங்களின் வழிகாட்டுதல்களின்படி

பின்னூட்டங்கள் + விமர்சனங்கள் உள்பட
உங்களின் பழைய எழுத்துக்களையும் 

பிற பதிவர்களின் புதிய எழுத்துக்களையும் 
என்னால் இயன்றவரை
வாசித்துக்கொண்டிருக்கிறேன். 
என்றும் நீங்காத நினைவுகளுடன்


      
VGK

33 கருத்துகள்:

 1. உண்மையில் நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல
  பதிவர் உலகில் தனது தொடர்ந்த ஆன்மிகப்
  பதிவுகள் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்தவர்
  திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்கள்

  எப்படி அவர்களால் இப்படி நித்தம் எழுத
  முடிகிறது என வியந்து தனியாக இதற்கென
  அலுவலக்ம் வைத்துச் செய்கிறீர்களா எனக் கூட
  ஒரு பின்னூட்டத்தில் அவ்ர்களிடம்
  கேட்டிருந்தேன்

  அவரை சகோதரர் போல நினைவு கூர்ந்து
  ஒரு அற்புதமான நினைவேந்தல் பதிவு எழுதி
  சிறப்பித்தது மனம் நெகிழச் செய்கிறது

  நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல
  வலை உலகில் அவர் என்றும்
  மதிப்புடன் நினைவு கூறத் தக்கவராகவே
  இருக்கிறார் தொடர்ந்து இருப்பார்

  அவர் ஆன்மா இறைவனின் காலடியில்
  தொடர்ந்து நிலைக்க வேண்டி
  நானும் வேண்டிக் கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 2. சிறந்த தெய்வீகப் பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி மறைந்து ஓராண்டா ஓடிவிட்டது? நீண்ட நாட்கள் ஆனது போலவும் தோன்றுகிறது. எத்தனை ஆன்மீகப் பதிவுகள்? அவர் நினைவைப் போற்றுவோம். நினைவூட்டலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. தெய்வீக பதிவுகள் என்றால் அம்மாவின் பதிவுகள் தான்... வணங்குகிறேன்...

  பதிலளிநீக்கு
 4. தினம் ஒரு பதிவு அந்த நாட்களின் சிறப்பை சொல்லும் பதிவுகள் . இன்று தைபூசம், அவர்கள் இருந்தால் அழகிய முருகன் படங்களுடன் பதிவு இடம் பெற்று இருக்கும்.

  உங்களின் சிறப்பு பதிவு அவர்களின் நினைவை அதிகமாய் கொண்டு வந்தது. தெய்வீக பதிவர் என்று அழைப்பீர்கள் அவர்களை.

  அவர்கள் என்றும் நம் நினைவுகளில் .
  நன்றி .

  பதிலளிநீக்கு
 5. எல்லா ஆன்மிக தகவல்களும் கொட்டிகிடக்கும் தளம் ...அம்மாவின் தளம்..

  என்றும் அவர் நம் நினைவில் இருப்பார்..

  பதிலளிநீக்கு
 6. அருமையான அன்பான அக்கா ..நான் போகலைன்னாலும் எனது பதிவுகளில் தாமரை மலர் தவறாது முகம் காட்டும் ..எல்லா விவரங்களையும் விறல் நுனியில் வைத்திருப்பார் அவர் பிளாக் நுழைந்தாலே மனதுக்கு சந்தோஷமா இருக்கும் ..அதற்குள் ஒரு வருடமாகி விட்டது என்பதை நம்பவே இயலவில்லை ..
  அருமையான நினைவுகளை பகிர்ந்துள்ளீர்கள் அண்ணா ..ராஜேஸ்வரி அக்கா அக்கா அவர்கள் நம் நினைவில் எப்பவும் இருப்பார்

  பதிலளிநீக்கு
 7. ராஜேஸ்வரி அக்காவை யாராலும் மறக்கவே முடியாது, எதையுமே பாராமல் ஒழுங்காக தானுண்டு தன்பாடுண்டு என்பதுபோல பதிவுகள் போட்ட வண்ணமே இருப்பா. வலை உலகில் இருந்த காலத்தில், வருடத்தில் அதிக பதிவுகள் போட்ட பெருமை அவவை மட்டுமே சேரும் என நினைக்கிறேன்.

  நம்பமுடியவில்லை... அதுக்குள் ஓராண்டுகள்... ஆனா எனக்கும் நீண்ட நாட்கள் ஆகிவிட்டதுபோல ஒரு உணர்வு காரணம்.. அவவின் மறைவுக்குப் பின்னால் எல்லாமே மெதுவாக சுழல்வதுபோல ஒரு ஃபீலிங்...

  பதிலளிநீக்கு
 8. இவ்வளவு அருமையாக அவவின் நினைவுகளைத் தொகுத்துப் போட்டிருக்கிறீங்க கோபு அண்ணன், படிக்க மனமெல்லாம் கனத்து விட்டது..

  நான் போகாது விட்டாலும், தேடி வந்து கொமெண்ட் போடுபவர்களில் அவவும் ஒருவர். மறக்க முடியாது, இவ்வளவு இளமையில் அவ மறைந்தது மிகவும் மனவருத்தத்துக்குரியது... எங்கிருந்தாலும்.. அவவின் ஆத்மா அமையாக இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. என்ன செய்வது கோபு அண்ணன், உண்மைதான், அன்பாக நெருங்கிப் பழகுகிறோம் அவர் திடீரென மறையும்போது மனம் எதையும் ஏற்றுக் கொள்ளாது, அமைதியடையாது... ஆனாலும் இதுதானே இயற்கை.. இன்று அவ.. நாளை நாம் என மனதை தேற்றிக் கொண்டு வாழப் பழகவேண்டிய உலகில் நாம் இருக்கிறோம்.

  கவலைதான், கஸ்டம்தான் இருப்பினும்.. அதை ஒரு பக்கம் வைத்துவிட்டு நீங்கள் தொடர்ந்து போஸ்ட்கள் போட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்... “நாள் செய்வது போல் நல்லோர் செய்யார்”., “இதுவும் கடந்து போகும்”.

  பதிலளிநீக்கு
 10. சக பதிவரை நினைவுகொண்டு எழுதியிருப்பதைப் பாராட்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 11. ஆன்மீகப் பதிவர் அவர். மறக்க முடியுமா? கடைசிவரை அவரை நேரில் சந்தித்து பாராட்ட முடியாமல் போய் விட்டது.

  பதிலளிநீக்கு
 12. அன்பின் கோபு ஸார் அவர்களுக்கு,

  இதயத்தின் பலமும் பலவீனமும் நட்பு தான் என்பதை உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள்.
  நம்முடனேயே நினைவால் நித்தம் பயணித்தவர் நினைவை விட்டு அகலுவதில்லை.
  என்பதையும் உணர்த்தி இருக்கிறீர்கள். பின்னூட்டங்களில் கூடவே நடந்த நட்பின்
  தோழமை திடீரென்று நின்று விட்டால் அதன் வேதனை சொல்லில் மாளாது. அம்மாவின்
  ஆன்மா பூரண சாந்தியில் அமிழ்ந்திருக்கும். தங்களின் ஒவ்வொரு எண்ணமும் அவர்களுக்கு
  அஞ்சலி செய்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது.இந்தப் பூர்வ ஜென்ம பந்தங்கள் அபூர்வமானது.
  அவர்களது வலைபூவைப் போலவே தங்களின் வலைப்பூவும் தாமரை மலர்ந்த தடாகமாயிருப்பது சிறப்பு.
  இணையத்தில் அவர்கள் இன்னும் உயிர்ப்போடு இருப்பது போலவே இருக்கிறது. காலங்கள் கடந்து செல்லலாம்
  பகவான் கிருபை....பதிவர்களுக்கும் அழிவென்பது இல்லை என்றே சொல்லலாம். மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள்.

  தங்களின் எழுத்துக்களில் துயரம் தோய்ந்திருந்தது....வருத்தமாகத் தான் உள்ளது. எத்தனையோ பாடல்களை
  தீர்க்கதரிசியாக கண்ணதாசன் அவர்கள் எழுதி வைத்து விட்டு போய்விட்டார்....பாடலைக் கேட்கும் போதெல்லாம்
  நிதர்ஷன உண்மைகள் மனத்துள் எழுகிறது. காலத்திற்கு ஏனோ எப்போதும் அவசரம்....ஓடிக்கொண்டே இருக்கிறது.

  வருத்தத்துடன்,
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

  பதிலளிநீக்கு
 13. S.ஒரு வருடம் ஓடியதே தெரியவில்லை.அவரின் நினைவுகள் என்றும் நம்மோடு இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆன்மிக பதிவர் என்றாலே இவங்க நினைவுதான் வரும். எவ்வளவு கோவில்கள்.. எவ்வளவு விஷயங்கள். எதையும் மேலோட்டமாக சொல்லாமல் ஆழ்ந்து அனுபவித்து எழுதுவாங்க. ஊரைப்பற்றி...கோவில்களில் அருள் புரியும் கடவுளர்கள் பற்றி பல விஷயங்கள் சொல்லி புரிய வைப்பாங்க...

   நீக்கு
 14. அவரின் நினைவுகள் அனைவர் மனதிலும் என்றென்றும் இருக்கும். எங்கள் அஞ்சலிகள்.

  பதிலளிநீக்கு
 15. வருத்தமாகவே இருக்கிறது. எதற்கும் யாருக்கும் நிற்காமல் காலத்தின் ஓட்டம்! அவரின் இழப்பை நாம் இப்படிப் பேசித்தான் தாங்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 16. இன்றும் ஆன்மீகத்தில் எதையாவது தெரிந்து கொள்ள கூகுலார் உதவியை நாடினால் அவரின் பதிவுகளுக்கு அழைத்து சென்று விடுகிறார். நம் நினைவுகளை விட்டு அவர் அகலவேயில்லை எனலாம். அவருக்கு என் அஞ்சலிகள் .

  பதிலளிநீக்கு
 17. ஓராண்டு முடிந்ததை நம்ப முடியவில்லை. என்னுடைய பதிவுகளிலும் கருத்துரையிட்டு ஊக்கமளித்துள்ளார். நினைவலைகளை அனைவரின் உள்ளத்திலும் ஏர்படுத்தியது உங்கள் பதிவு!

  பதிலளிநீக்கு
 18. வலையுலகில்
  தனக்கெனத் தனியிடத்தைப் பெற்ற
  அருமையான பதிவரை
  நினைவுகூரச் செய்துவிட்டீர்கள்!

  பதிலளிநீக்கு
 19. ஆன்மீகப்பதிவர் திருமதி இராஜேஸ்வரி அவர்கள் மறைந்து ஓராண்டு ஆகிவிட்டது என்பதை நம்பமுடியவில்லை. ஆர் நம்மிடியாயே இல்லையென்றாலும் அவரது பதிவுகள் அவரை என்றும் நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

  பதிலளிநீக்கு
 20. தெய்வீகப் பதிவுகளில் ஜொலித்த அம்மா தெய்வமாகி ஒரு வருடமாகிவிட்டதே.... நம்பமுடியவில்லை...

  பதிலளிநீக்கு
 21. அவருடைய பதிவுகள் என்றும் நம் நினைவில் இருக்கும், அவருடைய நினைவுகளோடு.

  பதிலளிநீக்கு
 22. காலஞ்சென்ற திருமதி.ராஜேஸ்வரி அவர்களுக்கு என் நினைவஞ்சலிகளை சமர்ப்பித்துக்கொள்ளுகிறேன்!

  பதிலளிநீக்கு
 23. ஏற்கனவே வந்து வாசித்தாலும் பின்னூட்டமிட இயலாதபடி இணையம் பிரச்சனை செய்ததால் வெளியேறிவிட்டேன். இங்கு தாங்கள் கொடுத்திருக்கும் இணைப்புகள் கடந்த காலத்தின் அழகிய போட்டிநாட்களை நினைவுபடுத்தி நெகிழ்விக்கின்றன. ராஜராஜேஸ்வரி மேடத்தின் மறைவு குறித்த தகவலே நமக்கு வெகு தாமதமாகவே தெரியவந்தது ஒரு பெரும் துயரம். ஓராண்டு ஓடிப்போனாலும் அவர்களுடைய பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் மூலம் இன்றும் நம் நினைவில் நிறைந்திருக்கிறார்கள். சென்றவாரம் ஒரு குளத்தில் தாமரைப்பூவைப் படம் பிடித்துவந்தேன்.. பார்க்கும்போதெல்லாம் அவர்கள் நினைவு வந்துவிடுகிறது.

  https://www.flickr.com/photos/131525597@N06/32866030475/in/dateposted-public/

  பதிலளிநீக்கு
 24. ராஜேஸ்வரி மேடம் மறைந்து ஓராண்டு ஆகிவிட்டதா? உங்கள் பதிவு மீண்டும் அவர் நினைவலைகளைக் கிளறிவிட்டது. என் பதிவுகளுக்கும் அவர் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார். எல்லாப்பதிவுகளுக்கும் இவர் எப்படித்தான் போய்ப் பின்னூட்டம் இடுகிறாரோ என்று என்னை மலைக்க வைத்தவர். அவர் பதிவுகள் என்றென்றும் அவர் நினைவுகளை நம் நெஞ்சில் மீட்டிக்கொண்டிருக்கும். அவருக்கு என் அஞ்சலிகள்!

  பதிலளிநீக்கு
 25. நான் வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது முதல் நாள் முதல் பதிவாக ஷீரடி சாய்பாபா பற்றிய அவரது பதிவினை அறிமுகம் செய்ய வாய்த்தது. குருஜியைப்பற்றி தேடியபோது எதேச்சையாக நிகழ்ந்தது அது. அதனை நான் வலைச்சரத்திலும் குறிப்பிட்டிருந்தேன். சிறுகதை விமர்சனப்போட்டிகளில் நான் பங்கேற்றிருந்த காலத்தில் பரிசுபெற்றபோதெல்லாம் எனது தளத்தில் வாழ்த்துகளைப் பதிவுசெய்த நல்லிதயம் கொண்டவர். அவரது பெயரில் அறிவித்த ஒரு விருதைப் பெறும் வாய்ப்புக் கிட்டியதும் எனக்குப் பெருமையான விஷயமே. மூத்த பதிவரானபோதும் அனைவரிடமும் எளிமையாக கருத்துப் பதிவிடும் அரிய குணம் கொண்டவராக, ஒரு சகோதரியாக உணரச்செய்தது அவரினன் தனிச்சிறப்பு. அவரது மறைவு ஒரு வலைப்பதிவாளர்களுக்கு ஒரு பேரிழப்புதான். 'அவன் போட்ட கணக்கி'லிருந்து எவர்தான் தப்ப முடியும்? அவரது நல்லான்மா அமைதியில் உறங்கட்டும். வானின்று நம் அனைவரையும் வாழ்த்தட்டும். வலைப்பூவிலும், மலர்ந்த தாமரை ரூபத்திலும் அவர் என்றும் நம்முடனிருப்பார். அவருக்கு எனது இதய அஞ்சலியை உரித்தாக்குகிறேன். அதற்குள்ளாக ஒராண்டு ஓடிவிட்டதை நம்பத்தான் முடியவில்லை. இதனை நினைவில் நிறுத்தி தனிப்பதிவிட்டு சகோதரியை பெருமைப்படுத்திய வைகோ வாத்தியாருக்கு எனது பாராட்டுகள்...நன்றிகள்...என்றும் அன்புடன், உங்கள்...எம்ஜிஆர்.

  பதிலளிநீக்கு
 26. மனம் கலங்கவைத்த பதிவு. நானும் இத்துயரில் கரைந்தேன் சார். அனைவரும் கூறியபடி எல்லாப் பதிவுகளிலும் பின்னூட்டமிடுவார். புயலோ என மலைத்ததுண்டு. நம் பதிவு எங்கே அறிமுகப்படுத்தப்பட்டாலும் வந்து தெரிவிப்பார். ஆன்மீகப் பதிவில் அவரை விட்டால் வேறு யாருமே இல்லை. ஒருமுறை நம்பர் ஒன் பதிவர் என்று பேரும் வாங்கி இருந்தார். அது இன்றுவரை தொடர்கிறது என்றும் தோன்றுகிறது . உங்கள் பதிவில் தாமரையைப் பார்த்தாலும் எங்கு தாமரையைப் பார்த்தாலும் எனக்கு அவர் நினைவுக்கு வருவார். ஹ்ம்ம்

  பதிலளிநீக்கு
 27. எல்லா பதிவுகளுக்கும்பின்னூட்டங்கள் இருக்கும். பின்னூட்டங்களில் அழகு, மென்மை என்று பல உணர்ச்சிகள் தெரியும். இப்போதும் எங்கள் நினைவில் உண்டு ராஜேஸ்வரியம்மா அவர்கள்....தாமரை என்றாலே நாட்டில் வேறு ஏதேனும் நினைவுக்கு வரலாம் ஆனால் எங்களுக்கு ராஜேஸ்வரி அம்மாதான் நினைவுக்கு வருவார்...தங்கள் பதிவு அருமை. நினைவு கொண்டு பதிவிட்டமைக்கு பாராட்டுகள்...அன்று கருத்திட இயலாமல் போனது...அதான் இன்று..

  பதிலளிநீக்கு