எனது அருமை நண்பரும், 'எனது எண்ணங்கள்’ http://tthamizhelango. blogspot.com என்ற வலைத்தளத்தின் பிரபல வலையுலகப் பதிவருமான திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் 02.02.2019 சனிக்கிழமை காலை சுமார் 9.15 மணிக்கு, திருச்சி K.K.நகர் பேருந்து நிலையம் அருகேயுள்ள நாகப்பன் நகரில், அவரது சொந்த இல்லத்தில், மூச்சுத்திணறல் அதிகமானது காரணமாக, அகால மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி அடியேனுக்கு, அன்று பகல் சுமார் 12 மணிக்கு மேல், அவரது ஒரே மகனாகிய திரு. அரவிந்தன் என்பவரால் [94861 14574] தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டது.
இதைக்கேள்விப்பட்டதும் அதிர்ச்சியிலும், அழுகையிலும் மூழ்கிவிட்ட என்னால் எந்தவொரு வேலைகளிலும் ஈடுபட முடியாமல் போய் விட்டதால் இந்தப்பதிவினை இப்போது மிகவும் தாமதமாக வெளியிட நேர்ந்துள்ளது. இருப்பினும் அவர் காலமான செய்தியினை அன்று முழுவதும், வாட்ஸ்-அப் மூலமும், மெயில் மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும், நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுலக நண்பர்களுக்கு அறிவித்துக்கொண்டே இருந்தேன்.
01.03.1955 இல் பிறந்துள்ள நம் தி. தமிழ் இளங்கோ அவர்கள் State Bank of India வில் பணியாற்றி விருப்ப ஓய்வு (VRS) பெற்று வந்தவர். அவரின் மனைவி திருச்சியிலேயே BSNL இல் இன்றும் பணியாற்றி வருகிறார். இன்னும் திருமணம் ஆகாத ஒரே பிள்ளை தன் படிப்பு முடிந்து திருச்சியிலேயே ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரின் ஒரே மகள் தற்சமயம், தன் கணவர் மற்றும் குழந்தையுடன் அமெரிக்காவில் இருந்து வருகிறார்.
என்றும் தன் எழுத்துக்களின் மூலமும், அன்பான + பண்பான + நாகரீகமான, பிறர் மனம் புண்படாத வகையில் பழகிவந்த இனிய அணுகுமுறைகள் மூலமும் நம் எல்லோருடைய இதயத்திலும், எப்போதும் வாழ்ந்து வரும் தமிழ் இளங்கோ அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.
எங்களுக்குள் நேரடியாக எங்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்த நாள்: 27.02.2013. கடைசியாக நாங்கள் இருவரும் சந்திக்க நேர்ந்த நாள்: 01.01.2019. இதற்கிடையில் நாங்கள் பலமுறை, பல இடங்களிலும், பல விழாக்களிலும் சந்தித்து மகிழ்ந்துள்ளோம்.
புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வமுள்ளவர். புத்தகக் கண்காட்சிகள் நடைபெறும், ஊர் ஊராகச் சென்று, நூல்களைத்தேடித் தேடி வாங்கி அடுக்கி சேகரிப்பதிலும், படிப்பதிலும், பிறருக்கு அவற்றை அன்பளிப்பாக அளிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
கடந்த நான்கு-ஐந்து நாட்களாக அவரின் வலைத்தளத்தில் அவர் என்னைப் பற்றி எழுதியுள்ள பதிவுகளில் சிலவற்றையும், எனது வலைத்தளத்தில், அடியேன் அவரைப் பற்றி எழுதியுள்ள பதிவுகளில் சிலவற்றையும், படித்துக்கொண்டு அவரின் நினைவாகவே இருந்து வந்தேன். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
http://gopu1949.blogspot.com/ 2013/03/blog-post_3629.html

திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின்
’எனது எண்ணங்கள்’ வலைத்தளத்தில்
வெளியிடப்பட்டுள்ள பதிவுகள்:-
திருச்சியும் பதிவர் வை.கோபாலகிருஷ்ணனும் [04.09.2012]
திருச்சி பதிவர் VGK அவர்களை சந்தித்தேன் [27.02.2013]
திருச்சியில் மூத்த பதிவர் GMB ஐயா அவர்களோடு ஓர் இனிய சந்திப்பு [03.07.2013]
எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு... V.G.K. (நூல் விமர்சனம் 10.09.2013)
அன்பின் சீனா - மெய்யம்மை ஆச்சி தம்பதியினருடன் ஓர் சந்திப்பு (07.10.2013)
ஆரண்ய நிவாஸ் - ஓரு இலக்கிய அனுபவம் (15.08.2014)
தமிழ் வலையுலகில் விருதுகள் (15.09.2014)
திருச்சி மாவட்ட வலைப்பதிவர்களே ! (17.09.2014)
வெளிநாடு செல்லும் V.G.K. - வாழ்த்துகள் (14.11.2014)
ஸ்ரீரங்கம் வலைப்பதிவர் சந்திப்பு (23.02.2015)
பயணங்கள் முடிவதில்லை by VGK (28.01.2016)
ஸ்ரீரங்கம் வலைப்பதிவர் சந்திப்பு (08.02.2016)
VGK அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் (13.02.2016)
இராய செல்லப்பா அவர்களுடன் ஒரு சந்திப்பு (09.01.2018)
சிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK 03 - சுடிதார் வாங்கப் போறேன் (25.03.2018)
சிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே! (28.03.2018)
எனது வலைத்தளத்தில்
வெளியிடப்பட்டுள்ள சில பதிவுகள்:-
http://gopu1949.blogspot.com/
ஓடி வந்த பரிசும் தேடி வந்த பதிவர்களும்
சந்தித்த வேளையில் ... பகுதி - 2 of 6
சந்தித்த வேளையில் ... பகுதி - 4 of 6
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் - [பகுதி-3]
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் - [பகுதி-4]
எங்கள் அடுக்குமாடிக் கட்டட உச்சியில் (மொட்டை மாடியில்) தமிழ் இளங்கோ
யானை வரும் பின்னே ... மணி ஓசை வரும் முன்னே !
2017 >>>>> 2018 வாழ்த்துகள்
ஹனிமூன் வந்துள்ள பதிவர் தம்பதியினர் ! >>>>>
2019 புத்தாண்டு வாழ்த்துகள் >>>>>

.jpg)

.jpg)

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் !!