About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, January 1, 2014

டும்..டும்.. டும்..டும்.. டும்..டும்.. டும்..டும்.. சிறுகதை விமர்சனப் போட்டி பற்றிய அறிவிப்பு !


 

சிறுகதை 
விமர்சனப் போட்டி 
பற்றிய அறிவிப்பு !


2
ஸ்ரீராமஜயம்


 

 


அன்புடையீர்,

அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். 
இனிய ஆங்கிலப் புத்தாண்டு 
நல்வாழ்த்துகள்.


 
 


   
                                                       
அடியேன் 02.01.2011 அன்று முதன்முதலாக என் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்தேன். 

   02.01.2012 

முதலாம் ஆண்டு நிறைவு நாளன்று 
கொடுத்துள்ள 
மொத்தப்பதிவுகள்: 200
                                                      

      
02.01.2013 

இரண்டாம் ஆண்டு நிறைவு நாளன்று 
கொடுத்துள்ள மொத்தப்பதிவுகள்: 316  





                                                      
  02.01.2014

 நாளை என் வலைப்பூவுக்கு
மூன்றாவது பிறந்த நாள்

இதுவரை இன்றுடன் நிறைவடையும் இந்த முதல் மூன்று ஆண்டுகளில் 459 பதிவுகள் மட்டுமே என்னால் கொடுக்க முடிந்துள்ளது. 

என்னுடைய வலையுலக ஆரம்ப நாட்களில் பல்வேறு சிறுகதைகள் எழுதி நான் வெளியிட்டிருந்தேன். 

அந்த ஆரம்ப காலக்கட்டத்தில் என் வலைப்பதிவினை பின்தொடர்பவர்கள் சுமார் 20 முதல் 30 பேர்களுக்குள் மட்டுமே இருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை 300 க்கும் மேல் 330 வரை அதிகரித்துள்ளது.

அதனால் என் சிறுகதைகளை மீண்டும் மீள் பதிவாக வெளியிடலாம் என நினைக்கிறேன். 

இதனால் ஏற்கனவே மூன்றாண்டுகளுக்கு முன் என் சிறுகதைகளைப் படித்த ஒருசிலர் மீண்டும் படிக்கவும், இதுவரை அவற்றைப்படிக்க வாய்ப்பே இல்லாத பெரும்பாலானோர் புதிதாகப் படித்து ரஸிக்கவும் ஏதுவாகும் என நினைக்கிறேன்.

இந்த 2014ம் ஆண்டு முழுவதும் அவ்வப்போது, நான் எழுதி ஏற்கனவே வெளியிட்டுள்ள சிறுகதைகள் மீண்டும் மீள் பதிவாக வெளியிடப்படும்.   

மொத்தம் வெளியிட நினைக்கும்  சுமார் 60 கதைகளில் குறிப்பிட்ட 40 கதைகளுக்கு மட்டும்,  ”சிறுகதை விமர்சனப்போட்டி” வைக்கப்படும். 

விமர்சனப் போட்டிக்கான கதைகளுக்கு மட்டும் கீழே உள்ளது போல ஓர் மின்னிடும் அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கும். 


 




போட்டிக்காக வெளியிடப்படும் ஒவ்வொரு கதைக்கும் பொறுமையாக யோசித்து விமர்சனம் எழுதியனுப்ப ஒரு வாரம் கால அவகாசம் தரப்படும்.

மெயில் மூலம் விமர்சனம் வந்துசேர வேண்டிய கடைசி தேதி + நேரம் + ஒவ்வொரு கதைக்கும் ஒரு REFERENCE NUMBER அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். 

உண்மையான விமர்சனம் என்பது கதையின் நிறைகுறைகளை சுட்டிக்காட்டி அலசுவது தான்.  அதனால் கதையில் உள்ள நிறைகள், குறைகள் , தங்களைச் சிரிக்க வைத்த இடங்கள், சிந்திக்க வைத்த இடங்கள், மிகவும் ரஸித்த வரிகள் என தங்களின் விமர்சனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். 

ஆனால் அவை சுவைபட  சுவாரஸ்யமாகவும், விளக்கமாகவும், விஸ்தாரமாகவும் ஓர் கட்டுரைபோல  அதாவது சுமார் 40 வரிகள் அல்லது 200 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருப்பது நல்லது.

தங்களின் விமர்சனத்தை மெயில் மூலம் மட்டுமே, மறக்காமல் REFERENCE NUMBER குறிப்பிட்டு, அறிவிக்கப்படும் கடைசி தேதி + நேரத்திற்குள் அனுப்ப வேண்டும்.

மெயிலில் Subject என்ற இடத்தில் “சிறுகதை விமர்சனப்போட்டி எண்:VGK__” எனக்குறிப்பிட்டால் போதுமானது. 

விமர்சனத்தின் முடிவில் தங்கள் பெயர் மற்றும் தங்களின் வலைத்தள முகவரியை மறக்காமல் குறிப்பிடவும்.

தங்களுக்கென தனியாக வலைத்தளம் ஏதும் இல்லாதவர்களும் கூட,மெயில் மூலம் இந்தப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.அவர்கள் விமர்சனத்தின் முடிவில் தங்கள் பெயரை மட்டும் மறக்காமல் குறிப்பிடவும்.  

விமர்சனங்கள் அனுப்ப வேண்டிய மெயில் விலாசம்: valambal@gmail.com 

ஒருவர் ஒரு கதைக்கு ஒரு விமர்சனம் மட்டுமே அனுப்ப வேண்டும்.  

விமர்சனங்கள் தமிழில் மட்டுமே, தட்டச்சு செய்து மட்டுமே [TYPED IN TAMIL] அனுப்பப்பட வேண்டும். 


விமர்சனம் அனுப்பியவர்களுக்கு உடனுக்குடன் மெயில் மூலம் ACKNOWLEDGEMENT அனுப்பப்படும்.

மிகச்சிறப்பாக விமர்சனம் எழுதி அனுப்புவோருக்கு பரிசும் அளிக்கப்படும். 

போட்டிக்கென அறிவிக்கப்படும் 
ஒவ்வொரு கதைக்கும் 
வரும் விமர்சனங்களுக்கும் 

முதல் பரிசாக            ரூ. 150 
இரண்டாம் பரிசாக ரூ. 100 
மூன்றாம் பரிசாக   ரூ.   50 

அளிக்கப்படும். 

ஒருமுறை ஒரு கதைக்கான விமர்சனம் எழுதி, பரிசு பெற்றவர், மீண்டும் மீண்டும் இந்த சிறுகதை விமர்சனப் போட்டியில் கலந்துகொண்டு, வேறு கதைகளுக்கான விமர்சனங்களும் எழுதி,  பரிசு பெறும் வாய்ப்புகளும் இதில் உண்டு.

தனியாகத் தங்களின் விமர்சனங்கள் மட்டும் ஓர் நடுவருக்கு என்னால் தனி மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். 

விமர்சனம் எழுதியவர் யார் என்று அந்த நடுவருக்கும், நடுவர் யார் என்று விமர்சனம் எழுதும் தங்களுக்கும் இந்தப் பரிசுப்போட்டி முடியும்வரை அறிவிக்கப்பட மாட்டாது.  

தாங்கள் அனுப்பும் விமர்சனத்திற்கு, நடுவர் அளிக்கும் மதிப்பீடு [RANKING BY THE EXPERT] அடிப்படையில் மட்டுமே, பரிசு பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.   

ஒவ்வொரு கதைக்கான சிறந்த விமர்சனத்திற்கும், நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரின் பெயர்கள் மட்டும், அவர்கள் எழுதி அனுப்பிய விமர்சனத்துடன், அவ்வப்போது என்னால் தனிப்பதிவின் மூலம் அறிவிக்கப்படும். 

விமர்சனம் எழுதி அனுப்பியும், ஏதோ ஒருசில காரணங்களால் பரிசு பெறும் வாய்ப்பினை நழுவவிட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்படமாட்டாது. 

ஒருவரே மீண்டும் மீண்டும் பலமுறை பரிசு பெறும் வாய்ப்புகள் இதில் ஏராளமாக இருப்பதால், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத்தொகை, இந்தப் பரிசுப்போட்டியின் இறுதியில்தான், மொத்தமாக இந்தியாவில் உள்ள அவர்களின் வங்கிக்கணக்குக்கு ON LINE TRANSFER’ மூலம் அனுப்பி வைக்கப்படும். 

அந்த நேரத்தில் இந்தியாவில் வங்கிக் கணக்கு உள்ள தங்களின் முழுப்பெயர், கணக்குள்ள வங்கியின் பெயர், வங்கிக் கிளையின் பெயர், சேமிப்புக்கணக்கு எண், BANK IFS CODE முதலியன, பரிசுக்குத் தேர்வானவர்களிடமிருந்து, மெயில் மூலம் கேட்டு வாங்கிக்கொள்ளப்படும். 

வெளிநாட்டில் உள்ளவர்கள், இந்தியாவில் உள்ள ஒரு நண்பர் அல்லது உறவினர் மூலம் மட்டுமே, தங்களுக்கான பரிசுத்தொகையைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கும்.  

விமர்சனப் போட்டிக்கான முதல் சிறுகதை மட்டும் 14.01.2014 செவ்வாய்க்கிழமை தைப்பொங்கல் பண்டிகை தினத்தன்று வெளியிடப்படும். 

அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று பரிசுக்கான சிறுகதை வெளியிட முயற்சிக்கப்படும்.**

[ **எனது உடல்நிலை, என் குடும்பத்தாரின் உடல்நிலை, என் கணினியின் உடல்நிலை,  மின்வெட்டு இல்லாத தொடர் மின்சார விநியோகம், நெட் கனெக்‌ஷன் தொடர்ந்து கிடைப்பது, என் உடலும் உள்ளமும் உற்சாகமான சூழ்நிலையில் இருப்பது  போன்ற அனைத்துக் காரணிகளும் என்னுடன் சாதகமாக ஒத்துழைக்க வேண்டும். 

திடீர் விருந்தினர் வருகைகள், நிர்பந்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டிய பயணங்கள் முதலிய குறுக்கீடுகள் ஏதும் இல்லாமலும் இருக்க வேண்டும். 

எல்லா சூழ்நிலைகளும் எனக்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே, மேலே நான் சொன்னதுபோல, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று பரிசுக்கான சிறுகதையை வெளியிட என்னால் இயலும். 

அதனால் இந்த ’பிரதி வெள்ளிக்கிழமை வெளியீடு’ என்பது அவ்வப்போது சற்றே மாறுதலுக்கு உட்பட்டதாக இருக்கக்கூடும் என்பதையும் இங்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன். ]

இந்தப்போட்டியில் அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத்தொகை மிகச்சிறியதாக தங்களில் சிலருக்குத் தோன்றலாம்.  But, It is only just a Token of Appreciation that too for your detailed comments on my story.

பரிசுத்தொகையைவிட, நாம் பரிசு  பெறுவது என்பதைவிட, இதுபோன்ற ஒரு போட்டியில் நாம் பங்கு பெறுவது என்பதே, நம் வெற்றி வாய்ப்புக்கான முதல்படியாகும் என்பதை, நாம் மனதில் உறுதியாக நினைக்க வேண்டும். 

மனதில் ஆர்வமும்,  நம்மாலும் நிச்சயமாக இதைச்செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும் ஏற்பட இது உதவக்கூடும். 

மேலும் இந்தப்போட்டியின் நோக்கமே, ’வாசகர்கள் அனைவரும் பிறரின் படைப்புகளை நன்கு ஊன்றிப் படிக்க வேண்டும். அதன் பிறகே தங்கள் கருத்துக்களை, அழகாக வித்யாசமான முறையில்,அளிக்கப் பழக வேண்டும்’ என்பது மட்டுமே.

தினமும் நாம் நிறைய பதிவுகளை வேக வேகமாக ஓடிப்போய், மேம்போக்காகப் படிப்பதைவிட, ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட, சிறந்த பதிவுகளை மட்டும், நிறுத்தி நிதானமாக மனதில் ஏற்றிக்கொண்டு, படிக்கப்பழக வேண்டும் என்பதையும் இந்தப்போட்டி வலியுறுத்துவதாக அமைகிறது.

இந்தப்போட்டிக்கான 40 சிறுகதைகளுக்கும் தொடர்ச்சியாக சிலர் விமர்சனம் அளிக்கக்கூடும். அவர்களில் சிலருக்கு கடைசிவரை பரிசுகள் ஏதும் கிடைக்காமலேயே போகவும் கூடும். அவர்களுக்கும் ஓர் ஆறுதலான விஷயம் இதோ:

அவ்வாறு நடுவர் அவர்களால், கடைசிவரை பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படாதவர்களுக்கும், நான் தனிப்பட்ட முறையில் இறுதியில் ஊக்கப்பரிசு அளிப்பதாக உள்ளேன். 

அந்த ஊக்கப்பரிசானது ரூ. 200 [ரூபாய் இருநூறு மட்டும்] One Time Payment only subject to the following conditions:

இந்த ஊக்கப்பரிசினை தாங்கள் கட்டாயம் பெற இரண்டே இரண்டு மிகச்சுலபமான நிபந்தனைகள் மட்டுமே:  

1.பரிசுக்காக அறிவிக்கப்படும் அனைத்து நாற்பது கதைகளுக்கும் இல்லாவிட்டாலும் 75% அதாவது 30 கதைகளுக்காவது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், மெயில் மூலம், 40 வரிகள் அல்லது 200 வார்த்தைகளுக்குக் குறையாமல், கதைக்கான விமர்சனம் அளித்தவராக தாங்கள் இருக்க வேண்டும். 

2.அதேசமயம் நடுவர் அவர்களால் பரிசளிக்கத் தேர்ந்தெடுக்கப் படக்கூடிய 40 x 3 = 120 பெயர்களில், தங்கள் பெயர் எங்கும் இடம்பெறாமலும் இருக்க வேண்டும். 

அதனால் தாங்கள் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் கலந்துகொண்டு, இந்தப்போட்டியின் அனைத்துக் கதைகளுக்கும் விமர்சனம் எழுதி அனுப்பினாலே போதும். 

நிச்சயமாக உங்களுக்கும் ஓர் பரிசு உண்டு. 

அட்வான்ஸ்  நல்வாழ்த்துகள்.    

அனைவரும் பெரும் திரளாகக் கலந்துகொண்டு, இந்த சிறுகதை விமர்சனப் போட்டியை சிறப்பிக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.


 


ஆண்டு முழுவதும் பரிசுகள் !

அள்ளிச்செல்ல அன்புடன் வாருங்கள் !!

மொத்த பரிசுத்தொகை 

Minimum: Rs.12,000 
Maximum: Unlimited *
[*Variable according to the number of Participants*]


   

வெற்றிபெற அட்வான்ஸ் 
நல்வாழ்த்துகள் !!!



என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்
01.01.2014 

-oOo-

பின்னூட்டமிட்டுள்ள 
திரு. அப்பாதுரை அவர்களின்
கவனத்திற்காக இந்தப்படம் இன்று
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

VGK 02.01.2014




177 comments:

  1. Wow very sweet announcement on new year,wish you n your family a very happy new year.Thanks for your great posts

    ReplyDelete
    Replies
    1. Harini M January 1, 2014 at 12:10 AM

      வாங்கோ, வணக்கம்.

      //Wow very sweet announcement on new year,wish you n your family a very happy new year.Thanks for your great posts//

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும், உற்சாகமளிக்கும் இனிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      தாங்களும் அவசியம் இந்தப்போட்டியில் ஒவ்வொரு வாரமும் கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
  2. நன்றி! அய்யா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    மீண்டும் வருவேன்!


    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ January 1, 2014 at 12:29 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //நன்றி! அய்யா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்! மீண்டும் வருவேன்!//

      மிக்க நன்றி ஐயா, மீண்டும் வாருங்கள் ஐயா.

      தங்களிடமிருந்து 40 கதைகளுக்குமே விமர்சனங்கள் வரவேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா.

      தங்களின் VGK க்காக, ஒவ்வொரு வாரமும் ஓரிரு மணிகள் மட்டும் ஒதுக்கி ஒத்துழைப்பு தாருங்கள் ஐயா.

      என்றும் அன்புடன் தங்கள் VGK

      Delete
  3. ஆவலுடன் காத்திருக்கிறேன்.அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பவித்ரா நந்தகுமார் January 1, 2014 at 1:04 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆவலுடன் காத்திருக்கிறேன்.அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்,//

      சமீபத்தில் சிறுகதை நூல் வெளியிட்டுள்ள கதாசிரியரான தாங்கள் ஆவலுடன் காத்திருப்பதாகச் சொல்வதில் எனக்கு ஆச்சர்யம் ஏதும் இல்லை. ;)))))

      வழக்கம்போல என்னிடம் சாக்குப்போக்கு ஏதும் சொல்லாமல் அவசியமாக 40 கதைகளுக்கு விமர்சனம் எழுதி அனுப்புங்கோ, ப்ளீஸ்.

      கதையைப்படிக்க ஓர் அரை மணி நேரமும், விமர்சனம் எழுத ஓரு மணி நேரமும் போதும் உங்களுக்கு. ;)))))

      வாரம் ஒன்றரை மணி நேரம் மட்டும் எப்படியாவது இந்தப்போட்டிக்காக ஒதுக்கி வைத்து விடுங்கோ. OK யா?

      அன்புடன் VGK

      Delete
  4. வணக்கம்
    ஐயா.
    வலைப்பதிவர்களை ஊக்கப்படுத்தும் சிறந்த போட்டியாக உள்ளது... போட்டி வெற்றிபெற வாழ்த்துக்கள்.ஐயா.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. மிக அருமை கோபால் சார். வாழ்த்துக்கள். :) நாளை இதை நான் முகநூலில் பகிர்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. Thenammai Lakshmanan January 1, 2014 at 2:09 AM

      வாங்கோ, வணக்கம். நல்லா இருக்கீங்களா? தங்களை என் பக்கம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.

      //மிக அருமை கோபால் சார். வாழ்த்துக்கள். :) நாளை இதை நான் முகநூலில் பகிர்கிறேன் :)//

      சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. பிரபல எழுத்தாளரும், பன்முகத்திறமையாளருமான தாங்களே முன்வந்து, இந்த என் அறிவிப்புக்கு இலவசமாக பிரச்சாரம் செய்வது போல தங்களின் முகநூலில் வெளியிட்டு உதவுவதாகச் சொல்வது கேட்க எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது, மேடம். தன்யனானேன். செய்யுங்கோ, ப்ளீஸ்.

      நேரம் கிடைக்கும்போதெல்லாம் தாங்களும் என் கதைகளுக்கு விமர்சனம் எழுதி அனுப்பினால் மேலும் நான் மிகவும் சந்தோஷம் அடைவேன்.

      தங்களின் நேர நெருக்கடிகள் எனக்குத் தெரியுமாததால் தங்களை நான் அதிகம் கட்டாயப்படுத்த விரும்பவில்லை.

      தங்களின் ஆதரவான பதிலுக்கு மிக்க நன்றி, மேடம்.

      என்றும் அன்புடன் தங்கள் VGK

      Delete
  6. Replies
    1. Kavitha January 1, 2014 at 3:11 AM

      வாங்கோ, வணக்கம்.

      //Happy New Year sir :)//

      மிக்க நன்றி. தங்களால் முடியுமானால் இந்தப்போட்டிகளில் கலந்து கொள்ளவும்.

      அன்புடன் VGK

      Delete
  7. உங்கள் முயற்சியை மனமாரப் பராட்டுகிறேன். எனக்கும் பரிசுப் போட்டிகளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். ஆனாலும் உங்கள் ஆறுதல் பரிசை எப்படியும் பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

    உங்கள் "உடம்பெல்லாம் உப்புச் சீடை" சிறுகதை என் மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது. இந்த ஆறுதல் பரிசுப் பணத்தை செலவழித்து அடுத்த புத்தாண்டு அன்று உங்களைச் சந்திப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. பழனி. கந்தசாமி January 1, 2014 at 3:37 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //உங்கள் முயற்சியை மனமாரப் பராட்டுகிறேன்.//

      ஆஹா, இதைக்கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது ஐயா.

      //எனக்கும் பரிசுப் போட்டிகளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். //

      40 வாய்ப்புகளில் 7 முறை பரிசு பெறப்போகிறவர் தாங்களாகத்தான் இருப்பீர்கள் என எனக்குத் தோன்றுகிறது, ஐயா.

      [ அதுதான் அந்த தாங்கள் சொல்லும் ஏழாம் பொருத்தம் ;) ]

      //ஆனாலும் உங்கள் ஆறுதல் பரிசை எப்படியும் பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. //

      அதைப்பெறுவது மிகவும் சுலபமாச்சே. அதன் பெயர் ஆறுதல் பரிசு அல்ல. ஊக்கப்பரிசு. ;)

      //உங்கள் "உடம்பெல்லாம் உப்புச் சீடை" சிறுகதை என் மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது.//

      சந்தோஷம். ஒரு கதையோ, கதையின் தலைப்போ, அந்தக் கதை எழுதிய ஆசிரியர் யார் என்றோ கூட வாசகர் ஒருவேளை மறக்கலாம்; ஆனால் அந்தக்கதையின் வரும் ஒரு சிறு சம்பவமாவது வாசகரின் நினைவில் நிற்குமானால் போதும், அது தான் கதாசிரியரின் வெற்றி என நான் என் எழுத்துலக மானஸீக குருநாதர் மூலம் தெரிந்து வைத்துள்ளதோர் தேவ ரகசியமாகும்.

      அதன்படி தங்கள் மனதில் பசுமையாக நினைவில் உள்ள அந்தக்கதை என்னுடைய வெற்றிக்கதையே தான் என்பதில் சந்தேகமே இல்லை. மிக்க மகிழ்ச்சி ;)))))

      //இந்த ஆறுதல் பரிசுப் பணத்தை செலவழித்து அடுத்த புத்தாண்டு அன்று உங்களைச் சந்திப்பேன்.//

      அடடா, நல்லதொரு திட்டமாக உள்ளதே.

      நான் சமீபத்திய தீபாவளியன்று கோவைக்கு வந்து தங்களை சந்திக்கத்தான் நினைத்திருந்தேன். தாங்களும் என்னை அவ்வளவு தூரம் பிரியமாக அழைத்திருந்தீர்கள். அட்ரஸ், வீட்டு போன் நம்பர், கைபேசி எண் எல்லாம் கொடுத்து, கட்டாயம் வாங்கோ, நானே என் காரில் அழைத்துச்செல்கிறேன் என்றெல்லாம் எழுதி, என்னை பிரமிக்க வைத்தீர்கள். ஏனோ என்னால் அதுசமயம் புறப்பட்டு வர முடியாமல் போய்விட்டது. தங்களை சந்திக்க எனக்கும் ஆசை தான். பார்ப்போம். பிராப்தம் இருந்தால் நிச்சயம் ஒருநாள் சந்திப்போம், ஐயா.

      அன்புடன் VGK

      Delete
  8. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் :) தங்கள் முயற்சி வெல்க !

    ReplyDelete
    Replies
    1. ரிஷபன் January 1, 2014 at 5:26 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      //இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் :) தங்கள் முயற்சி வெல்க !//

      மிக்க நன்றி, சார்.

      Delete
  9. முயற்சி செய்கிறேன் ஐயா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இவ்வாண்டு இன்பம் பயக்கும் ஆண்டாக அமைய இறைவனை வேண்டுகிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Seshadri e.s. January 1, 2014 at 5:31 AM

      வாங்கோ, வணக்கம்.

      //முயற்சி செய்கிறேன் ஐயா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இவ்வாண்டு இன்பம் பயக்கும் ஆண்டாக அமைய இறைவனை வேண்டுகிறேன்! நன்றி!//

      மிக்க நன்றி, சார்.

      Delete
  10. புத்தாண்டில் பதிவர்களுக்கு உற்சாகமூட்டும்
    அருமையான போட்டி
    இதன் மூலம் கொஞ்சம் சோர்ந்து இருக்கிற பதிவுலகு
    அதிக உற்சாகம் நிச்சயம் பெறும்.மிக்க நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani S January 1, 2014 at 5:52 AM

      வாங்கோ, வணக்கம்.

      //புத்தாண்டில் பதிவர்களுக்கு உற்சாகமூட்டும் அருமையான போட்டி. இதன் மூலம் கொஞ்சம் சோர்ந்து இருக்கிற பதிவுலகு அதிக உற்சாகம் நிச்சயம் பெறும்.மிக்க நன்றி

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

      மிக்க நன்றி, சார். மிகத்துல்லியமாக விமர்சனம் செய்யக்கூடிய தகுதி வாய்ந்தவராக நான் கருதும் தாங்களும் இந்த அனைத்துப்போட்டிகளிலும், அவசியம் கலந்துகொண்டு உற்சாகப்படுத்த வேண்டுமாய் அன்புடன் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் VGK

      Delete
  11. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அடேடே... வாசகர்களுக்கு நல்வாய்ப்பு. நன்றிகள். வாழ்த்துகள்.

    நான் எந்தப் பதிவையும் மேம்போக்காகப் படித்து விட்டுச் செல்வதில்லை. முடிந்தவரை ஒரேமாதிரி கமெண்ட்ஸ் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களைத் தவிர்த்து விடுகிறேன்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும், சக வாசக நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். January 1, 2014 at 6:39 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //அடேடே... வாசகர்களுக்கு நல்வாய்ப்பு. நன்றிகள். வாழ்த்துகள்.//

      சந்தோஷம், ஸ்ரீராம்.

      //நான் எந்தப் பதிவையும் மேம்போக்காகப் படித்து விட்டுச் செல்வதில்லை. முடிந்தவரை ஒரேமாதிரி கமெண்ட்ஸ் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களைத் தவிர்த்து விடுகிறேன்.//

      வாழ்க ! தாங்கள் ’ஆயிரத்தில் ஒருவன்’. எனக்கும் தெரியும்.

      அவசியம் அனைத்துக்கதைகளுக்கும் விமர்சனம் எழுதி அனுப்புங்கோ, ப்ளீஸ்.

      //உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும், சக வாசக நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//

      மிக்க நன்றி ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      Delete
  13. ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா... நன்றி...

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் January 1, 2014 at 8:00 AM

      வாங்கோ Mr. DD Sir, வணக்கம்.

      //ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா... நன்றி...//

      மிக்க நன்றி. நானும் அனைத்துக்கதைகளுக்கும் தங்களின் விமர்சனங்களை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பேன்.

      //தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...//

      மிக்க நன்றி.

      Delete
  14. வாழ்க வளமுடன்!..
    வளர்க நலமுடன்!..
    எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. துரை செல்வராஜூ January 1, 2014 at 8:50 AM

      வாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் வேண்டுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  15. முதலில் தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. Chokkan Subramanian January 1, 2014 at 9:27 AM

      வாங்கோ, வணக்கம்.

      //முதலில் தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா. //

      மிக்க நன்றி.

      Delete
  16. படிப்படியாக வளர்ந்த மாதிரியான படங்கள் மிக அருமை. தங்களின் எழுத்துலகப் பணி மேலும் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. Chokkan Subramanian January 1, 2014 at 9:28 AM

      //படிப்படியாக வளர்ந்த மாதிரியான படங்கள் மிக அருமை. தங்களின் எழுத்துலகப் பணி மேலும் தொடரட்டும்.//

      படங்களை ரஸித்துச்சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம். மிக்க நன்றி.

      Delete
  17. நான் வாரத்தில் ஒரு நாள் மட்டுமாவது தாங்கள் எழுதிக்கொண்டு வரும் "காஞ்சிப் பெரியவாளின் பழைய பதிவுகளை நிதானமாக படிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

    இப்போது என்னவென்றால், சிறு கதைகளையும் படிக்க அழைக்கிறீர்கள். எதை படிப்பது, எதை விடுவது என்று புரியவில்லை. ஏனென்றால், எனக்கு சிறு கதைகளை படிக்க மிகவும் பிடிக்கும்.

    சரி, முதலில் உங்களது சிறு கதைகளை படித்துவிட்டு, பிறகு பொறுமையாக மாற்றத்தை படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Chokkan Subramanian January 1, 2014 at 9:33 AM

      வாங்கோ, தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்வளிக்கிறது.

      //நான் வாரத்தில் ஒரு நாள் மட்டுமாவது தாங்கள் எழுதிக்கொண்டு வரும் "காஞ்சிப் பெரியவாளின் பழைய பதிவுகளை நிதானமாக படிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். //

      தாராளமாகப்படியுங்கோ. ஆரம்பத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் மிகச்சிறியவைகளாகவே இருக்கும். படிக்க அதிக நேரம் ஆகாது.

      இப்போது அந்தத் தொடரை முடிக்க வேண்டிய சூழலில் நான் இருக்கும்போது, நண்பர்களிடமிருந்து பல்வேறு புதுப்புதுத் தகவல்கள் தினமும் எனக்கு வந்துகொண்டே உள்ளதால், இப்போது சமீபத்தில் நான் வெளியிடும் பகுதிகள் மட்டும் சற்றே பெரியதாக - நீளமாகப் போய்க் கொண்டு வருகிறது. சரியாகத் திட்டமிட முடியாமல் போய்விட்டது.

      //இப்போது என்னவென்றால், சிறு கதைகளையும் படிக்க அழைக்கிறீர்கள். எதை படிப்பது, எதை விடுவது என்று புரியவில்லை. ஏனென்றால், எனக்கு சிறு கதைகளை படிக்க மிகவும் பிடிக்கும்.//

      சபாஷ். வாரம் சுமார் 1 அல்லது 2 மணி நேரங்கள் மட்டும் என் பதிவுகளுக்காக ஒதுக்குங்கள் போதும். எல்லா 40 கதைகளுக்கான விமர்சனங்களிலும் தயவுசெய்து உற்சாகமாகக் கலந்துகொண்டு சிறப்பித்துத் தாருங்கள்.

      //சரி, முதலில் உங்களது சிறு கதைகளை படித்துவிட்டு, பிறகு பொறுமையாக மற்றத்தை படிக்கிறேன்.//

      மிக்க நன்றி. அன்புடன் VGK

      Delete
  18. நல்ல விமரிசனங்களுக்குப் பரிசு என்று உற்சாகப்படுத்துவதே வித்தியாசமாக இருக்கிறது.

    தங்கள் அன்புள்ளம் வாழ்க!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், கோபு சார்!

    ReplyDelete
    Replies
    1. ஜீவி January 1, 2014 at 10:34 AM

      வாங்கோ ஐயா, வணக்கம் + நமஸ்காரம் ஐயா.

      //நல்ல விமரிசனங்களுக்குப் பரிசு என்று உற்சாகப்படுத்துவதே வித்தியாசமாக இருக்கிறது.//

      ஏதாவது நாம் சற்றே வித்யாசமாகச் செய்யணும் என்றதோர் ஆவல் தான் ஐயா.

      //தங்கள் அன்புள்ளம் வாழ்க!//

      எல்லாம் தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிகள் மட்டுமே, ஐயா. அடியேனின் இந்த புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெற்று நிறைவேற ஆசீர்வதியுங்கள், ஐயா.

      //இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், கோபு சார்!//

      மிகவும் சந்தோஷம். அன்பான இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, ஐயா.

      Delete
    2. ஜீவி சார் கமென்ட் போட்டிருக்காரானு மொதல்ல பாத்துட்டு பிறகு எழுதணும்னு தெரிஞ்சும் மறந்துட்டேன்.. கரெக்டா அவரும் சொல்லிட்டாரு.. எனக்கு முன்னாடி.

      Delete
    3. அப்பாதுரை January 1, 2014 at 9:05 PM

      //ஜீவி சார் கமென்ட் போட்டிருக்காரானு மொதல்ல பாத்துட்டு பிறகு எழுதணும்னு தெரிஞ்சும் மறந்துட்டேன்.. கரெக்டா அவரும் சொல்லிட்டாரு.. எனக்கு முன்னாடி.//

      திரு. ஜீவி சார் அவர்களின் வருகை எப்போதுமே அபூர்வமானது. அதிசயமானது. அவர்களின் கருத்துக்களும் மிகவும் அசத்தலானது. ஏதோ நான் செய்த பாக்யம் இன்று இந்த என் பதிவுப்பக்கம் அவர்களும் வந்து என்னை வாழ்த்தியுள்ளது எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கும் தங்களுக்கும் மீண்டும் என் நன்றிகள். அன்புடன் VGK

      Delete
  19. புத்தாண்டில் நல்ல செய்தி... வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. உஷா அன்பரசு January 1, 2014 at 11:47 AM

      அன்புள்ள டீச்சர், வாங்கோ டீச்சர், வணக்கம் டீச்சர்.

      //புத்தாண்டில் நல்ல செய்தி... வாழ்த்துக்கள் சார்!//

      வெறும் வாழ்த்தோடு நிறுத்தக்கூடாது டீச்சர். தங்களின் பழைய ஸ்டூடண்ட் ’சிறுவன் கோபாலகிருஷ்ண’னின் இந்தச் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் தாங்கள் வாராவாரம் கலந்து கொள்ள வேண்டும்.

      Please spare just one hour per week, for your old student Gopalakrishnan ....... OK ?

      டீச்சரின் வருகையை நான் வாராவாரம் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பேன். மறக்காமல் வாங்கோ.

      அன்புடன் கோபு

      Delete
  20. Interesting announcement!
    Happy NewYear to you !

    ReplyDelete
    Replies
    1. கே. பி. ஜனா... January 1, 2014 at 12:05 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //Interesting announcement! Happy New Year to you !//

      மிக்க நன்றி சார். தாங்களும் இந்த எல்லா சிறுகதை விமர்சனப்போட்டிகளிலும் அவசியம் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      அன்புடன் VGK

      Delete
  21. 2014 ஆம் ஆண்டை அமர்க்களமாக “ சிறுகதை விமர்சனப் போட்டி பற்றிய அறிவிப்பு ! “ ஒன்றைச் சொல்லி வரவேற்று இருக்கிறீர்கள்!

    // இதுவரை இன்றுடன் நிறைவடையும் இந்த முதல் மூன்று ஆண்டுகளில் 459 பதிவுகள் மட்டும் என்னால் கொடுக்க முடிந்துள்ளது. //

    மூன்று ஆண்டுகள் தமிழ் வலையுலகிற்கு நீங்கள் அளித்த பங்களிப்பு, பின்னூட்டங்கள் மற்றும் நண்பர்கள் வட்டம் ஆகியவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எதனையும் எதிர் பார்க்காத உங்கள் உண்மையான உழைப்பையும் நேர்மையையும் காணலாம்!

    // இந்தப்போட்டியில் அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத்தொகை மிகச்சிறியதாக தங்களில் சிலருக்குத் தோன்றலாம்.
    But, it is only just a Token of Appreciation, that too for your detailed comments, on my story. //

    மகாகவி சுப்ரமண்ய பாரதியார், கண்ணன் என் சேவகனில் சொல்லியது போல காசு பெரிதல்ல: நெஞ்சில் உள்ள காதல்தான் பெரிது. வலைப்பதிவர்கள் மீது தாங்களும் , நாங்கள் உங்கள் மீது கொண்ட அன்பும் போதும்.

    புத்தாண்டு வாழ்த்துக்களோடு, முரசு முழங்கட்டும்! போட்டிகள் தொடங்கட்டும்!






    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ January 1, 2014 at 1:15 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா. நேற்றே நேரில் வந்து என்னை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளும் கூறி 365 நாட்களுமே மறக்க முடியாத மிகவும் உபயோகமான நினைவுப்பரிசுகளை கொடுத்துச்சென்று அசத்தி விட்டீர்களே ஐயா. மிக்க நன்றி ஐயா.

      //2014 ஆம் ஆண்டை அமர்க்களமாக “ சிறுகதை விமர்சனப் போட்டி பற்றிய அறிவிப்பு ! “ ஒன்றைச் சொல்லி வரவேற்று இருக்கிறீர்கள்! //

      ஏதோ ஒரு சிறிய முயற்சி மட்டுமே, ஐயா.

      இதை உற்சாகமாகவும் வெற்றிகரமாகவும் கடைசிவரை கொண்டுசெல்லும் பொறுப்பு என் மீதும் என் எழுத்துக்கள் மீதும் ஆத்மார்த்தமான பிரியம் வைத்துள்ள தங்களைப் போன்ற வாசகர்களின் கையில் தான் உள்ளது, ஐயா.

      **இதுவரை இன்றுடன் நிறைவடையும் இந்த முதல் மூன்று ஆண்டுகளில் 459 பதிவுகள் மட்டும் என்னால் கொடுக்க முடிந்துள்ளது.**

      //மூன்று ஆண்டுகள் தமிழ் வலையுலகிற்கு நீங்கள் அளித்த பங்களிப்பு, பின்னூட்டங்கள் மற்றும் நண்பர்கள் வட்டம் ஆகியவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எதனையும் எதிர் பார்க்காத உங்கள் உண்மையான உழைப்பையும் நேர்மையையும் காணலாம்! //

      ஆம் ஐயா. எனக்கே இது நான் சற்றும் எதிர்பார்க்காத மிகவும் ஆச்சர்யமானதோர் சாதனை என்றே தோன்றுகிறது, ஐயா.

      இதற்கெல்லாம் வாசகர்கள் அவ்வப்போது கொடுத்துவரும் பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம் மட்டுமே மூல காரணமாகும், என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன்.

      இதனால் மிக நல்லதோர் நண்பர்கள் வட்டம் அமைந்துள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. ;)

      **இந்தப்போட்டியில் அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத்தொகை மிகச்சிறியதாக தங்களில் சிலருக்குத் தோன்றலாம். But, it is only just a Token of Appreciation, that too for your detailed comments, on my story. **

      //மகாகவி சுப்ரமண்ய பாரதியார், கண்ணன் என் சேவகனில் சொல்லியது போல காசு பெரிதல்ல: நெஞ்சில் உள்ள காதல்தான் பெரிது. வலைப்பதிவர்கள் மீது தாங்களும், நாங்கள் உங்கள் மீது கொண்ட அன்பும் போதும்.//

      ஆஹா தாங்கள் சொல்லியுள்ள எடுத்துக்காட்டு மிகவும் அருமையாக உள்ளது, ஐயா. அன்பு என்றுமே விலை மதிக்க முடியாததுதான், ஐயா.

      //புத்தாண்டு வாழ்த்துக்களோடு, முரசு முழங்கட்டும்! போட்டிகள் தொடங்கட்டும்! //

      முரசொலி இன்றே ஒலித்து விட்டது.

      தாங்கள் தயவுசெய்து அனைத்து 40 கதைகளுக்கும் தொடர்ந்து விமர்சனம் அளித்து போட்டியை சிறப்பாக ஊக்குவித்து, தொய்வில்லாமல் வெற்றிகரமாகக் கொண்டுசெல்ல உதவுங்கள் ஐயா

      என்றும் அன்புடன் தங்கள் VGK

      Delete
  22. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! வலைப்பூவின் மூன்றாம் வருட நிறைவுக்கும் போட்டி சிறப்பாக நடைபெறவும் என் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ராமலக்ஷ்மி January 1, 2014 at 1:43 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! வலைப்பூவின் மூன்றாம் வருட நிறைவுக்கும் போட்டி சிறப்பாக நடைபெறவும் என் நல்வாழ்த்துகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      சிறுகதை விமர்சனப்போட்டிகளிலும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
  23. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Muruganandan M.K. January 1, 2014 at 1:51 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

      சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      Delete
  24. சிறப்பான விஷயம்...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ADHI VENKAT January 1, 2014 at 1:54 PM

      வாங்கோ, வணக்கம்.

      //சிறப்பான விஷயம்...//

      அதற்குத்தான் இன்று அங்கு தங்கள் இல்லத்தில் பாயஸம் வைத்தீர்களோ! ;)

      //தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//

      மிக்க நன்றி. அவ்வப்போது போட்டியில் தாங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

      அன்புடன் VGK

      Delete
  25. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.உங்களது எழுதும் ஆசை படிக்கும் ஆசை எல்லோரையுமே படித்து எழுதவைக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியின் வெளிப்பாடுதான் இந்த அறிவிப்பு தாஙகள் சொல்வது போல் பரிசுத்தொகை அளவு முக்கியம் அல்ல நமது ஈடுபாடுதான் இதில் தெரியும் பணிஓய்வு பெற்ற பிறகும் தாங்கள் இவ்வளவு ஆர்வமாக வலைத்தளத்தில் சாதிக்கவேண்டும் என நினைக்கிறீர்கள். நீங்கள் சாதாரணமானவர் இல்லை . நன்றி

    ReplyDelete
    Replies
    1. Sundaresan Gangadharan January 1, 2014 at 2:36 PM

      வா, சுந்தர், வணக்கம்ப்பா ....

      //இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களது எழுதும் ஆசை படிக்கும் ஆசை எல்லோரையுமே படித்து எழுதவைக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியின் வெளிப்பாடுதான் இந்த அறிவிப்பு. தாஙகள் சொல்வது போல் பரிசுத்தொகை அளவு முக்கியம் அல்ல நமது ஈடுபாடுதான் இதில் தெரியும்.//

      சந்தோஷம், சுந்தர். எதிலுமே ஒரு முழு ஈடுபாட்டுடன் நன்கு திட்டமிட்டுச் செய்தால் மட்டுமே அது சரியான முறையில் நாம் எதிர்பாக்கும் ரிஸல்டைக்கொடுக்கும்.

      //பணிஓய்வு பெற்ற பிறகும் தாங்கள் இவ்வளவு ஆர்வமாக வலைத்தளத்தில் சாதிக்கவேண்டும் என நினைக்கிறீர்கள். நீங்கள் சாதாரணமானவர் இல்லை . நன்றி//

      பணி ஓய்வு பெற்றதனால் மட்டுமே, இதில் கொஞ்சம் நேரம் மனமகிழ்ச்சிக்காகச் செலவழிக்க முடிகிறது. பணி ஓய்வுக்குப்பின் நாம் நம் மூளையை உபயோகிக்காமல் சும்மாவே இருந்தால் மூளை துருப்பிடித்துப் போய்விடும். ;)

      நான் பணிக்குச் செல்லும் போது என்னால், என் பணிகளைத்தவிர, அலுவலகப் பொறுப்புக்களைத்தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாத பல்வேறு நெருக்கடிகள் இருந்து வந்தன. இப்போது அதெல்லாம் இல்லாமல் நிம்மதியாக நம் மனதுக்குப்பிடித்தமான இதுபோன்ற வேலைகளில் ஈடுபட முடிகிறது.

      உன் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன் கோபு

      Delete
  26. உங்கள் விமரிச்னப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    பரிசு மழையாக பொழியப் போகிறதே! விமரிசனப் போட்டி நல்ல வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள்..........

    தொடருங்கள்........
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. rajalakshmi paramasivam January 1, 2014 at 3:46 PM

      வாங்கோ, மேடம், வணக்கம் மேடம்.

      //உங்கள் விமரிச்னப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். //

      மிக்க மகிழ்ச்சி.

      //பரிசு மழையாக பொழியப் போகிறதே!//

      இப்போது பெய்துவரும் அமுத மழைபோலவே பரிசு மழையிலும் தாங்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

      //விமரிசனப் போட்டி நல்ல வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள்.......... தொடருங்கள்........ //

      மிக்க சந்தோஷம் மேடம்... இது ஒரு புதுமையான சிந்தனை என்றே பலரும் பாராட்டிச் சொல்லியுள்ளார்கள்.

      வாரம் ஒரு கதை. மொத்தம் 40 வாரங்கள் மட்டுமே. தொடர்ந்து உற்சாகமாகக் கலந்து கொள்ளுங்கள்.

      //புத்தாண்டு வாழ்த்துக்கள்.// மிக்க நன்றி. சந்தோஷம்.

      அன்புடன் VGK

      Delete
  27. நீங்கள் -- ”சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்” -- உண்மையிலேயே வித்யாசமான போட்டி. கலந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. gsanthanam1610 January 1, 2014 at 5:47 PM

      வா ... சந்தானம், மிக்க மகிழ்ச்சி. நீ அனுப்பிய 66 போட்டோக்களும் கிடைத்தன. பார்த்து மகிழ்ந்தோம்.

      //நீங்கள் -- ”சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்” -- உண்மையிலேயே வித்யாசமான போட்டி. கலந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி சந்தானம். அவசியம் கலந்து கொள்ளவும். போகப்போக இந்தப்போட்டி மிகவும் வேடிக்கையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கக்கூடும். முதல் ஓரிரு கதைகளுக்கான ரிஸல்ட் வருவதில் மட்டுமே சற்று கால தாமதமாகும். பிறகு வாராவாரம் ரிஸல்ட்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அனைவருக்கும் ஓர் புதிய உற்சாகம் பிறக்கக்கூடும்.

      புதிய வருகை தரப்போகும் உனக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள். அன்புடன் கோபு.

      Delete
  28. மூன்றாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.
    போட்டி நல்ல முறையில் நடைபெற வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும், உங்கள் அன்பு குடுமபத்தினர்களுக்கும், இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு January 1, 2014 at 6:03 PM

      வாங்கோ, வணக்கம்.

      //மூன்றாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.
      போட்டி நல்ல முறையில் நடைபெற வாழ்த்துக்கள்.
      உங்களுக்கும், உங்கள் அன்பு குடுமபத்தினர்களுக்கும், இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.//

      மிக்க நன்றி. அவ்வப்போது போட்டியில் தாங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      அன்புடன் VGK

      Delete
  29. புத்தாண்டு வாழ்த்துகள் சார்...தங்களுக்கும்....தங்கள் குடும்பத்தினர்க்கும்..

    ReplyDelete
    Replies
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி January 1, 2014 at 8:23 PM

      வாங்கோ, வணக்கம்.

      //புத்தாண்டு வாழ்த்துகள் சார்...தங்களுக்கும்....தங்கள் குடும்பத்தினர்க்கும்.//

      அன்பான வருகைக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. ;) அன்புடன் VGK

      Delete
  30. புத்தாண்டு வாழ்த்துக்களும் வணக்கங்களும் சார்.

    வித்தியாசமான முயற்சி.

    மின்னல் அடையாளம் - எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க! சுவாரசியம் போங்க!

    அஞ்சு வருஷத்துக்குப் பிறகு இருனூத்தம்பதே இன்னும் பிடிச்ச பாடில்லே.. 400 பதிவெல்லாம் என்னால் நினைச்சு கூட பார்க்க முடியலே.. சர்வ சாதாரணமா சொல்றீங்க.. உழைப்புக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை January 1, 2014 at 9:03 PM

      வாங்கோ, வணக்கம்.

      //புத்தாண்டு வாழ்த்துக்களும் வணக்கங்களும் சார்.//

      மிக்க நன்றி.

      //வித்தியாசமான முயற்சி. //

      ;))))) சந்தோஷம், சார்.

      //மின்னல் அடையாளம் - எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க! சுவாரசியம் போங்க!//

      ஏதோ மின்னலெனத்தோன்றியதோர் யோசனை ;)))))

      அதுவே ஓர் சுவாரஸ்யமாகிப் போய்விட்டதா தங்களுக்கு! மிக்க மகிழ்ச்சி.

      //அஞ்சு வருஷத்துக்குப் பிறகு இருனூத்தம்பதே இன்னும் பிடிச்ச பாடில்லே.. 400 பதிவெல்லாம் என்னால் நினைச்சு கூட பார்க்க முடியலே.. சர்வ சாதாரணமா சொல்றீங்க.. உழைப்புக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.//

      அதெல்லாம் ஒன்றும் இல்லை சார். ஏதோ ஓர் பேரெழுச்சியில் இவ்வளவு பதிவுகள் ஆகியுள்ளன.

      எனக்கே மிகவும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

      என் எழுச்சி குறைந்து நான் வழுவட்டையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்குள் இந்த ஓர் கூத்தையும் நடத்தி விடலாம் என்பதே என்னுடைய ஓர் சின்ன ஆசை. நீண்ட நாட்களாகவே என் மனதினில் இருந்த திட்டம் தான் இது. இப்போது தான் செயல்படுத்த பிராப்தம் ஏற்பட்டுள்ளது.

      பதிவுகளின் எண்ணிக்கை முக்கியம் அல்ல சார். ஓரளவு தரம் தான் முக்கியம்.

      நினைத்தால் நாலே வரிகளில் ஏதாவது எழுதி [கிறுக்கி] தினமும் நான்கு பதிவுகள் நாமும் தரலாம். அதுபோலச்செய்தால் ஒரே வருடத்தில் 1500 பதிவுகளும் தரலாம். அதில் என்ன பெருமை இருக்கப்போகிறது?

      அதற்கெனவே பிறந்துள்ளவர்கள் ஏராளமாக உள்ளனர்.

      நாம் யாருக்காகவும் எதற்காகவும் நம் பாணியை மாற்றிக்கொள்ளவே கூடாது. ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  31. இந்த விமரிசனங்களை வச்சு என்ன பண்ணப்போறீங்கனு சொல்லலியே?

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை January 1, 2014 at 9:06 PM

      //இந்த விமரிசனங்களை வச்சு என்ன பண்ணப்போறீங்கனு சொல்லலியே?//

      அது ஒரு மிகப்பெரிய கதை. நிச்சயமாகச் சொல்கிறேன். நாளைக்குள் சொல்ல முயற்சிக்கிறேன். நல்லவேளையாக நல்லதொரு கேள்வியை இங்கு இப்போது கேட்டுள்ளீர்கள்.

      கையளவு .... கையளவு மனஸு தான் - ஆனால் அதில் கடலளவு ஆசைகள் + திட்டங்கள் உள்ளன. அதைப்பற்றி அனைவரும் அறிந்து கொள்வது நல்லது தான். அதனால் இந்த விமர்சனப்போட்டி மேலும் விறுவிறுப்பாக நடைபெறவும் ஏதுவாகும். நிறைய பேர்கள் உற்சாகமாகப் பங்களிக்கவும் அது வழிவகுக்கும். அதனால் கட்டாயம் சொல்கிறேன்.

      அன்புடன் VGK

      Delete
    2. VGK to திரு. அப்பாதுரை அவர்கள்

      2]

      2005ம் ஆண்டுவரை நான் உண்டு என் வேலைகள் உண்டு என இருந்தவன்தான் நான்.

      அலுவலகத்தில் எனக்கு மிகவும் பொறுப்பானதோர் பதவி கொடுத்து ஒரு குறுநில மன்னன்போல என்னை வைத்திருந்தார்கள்.

      நான் அடிக்கடி என் அலுவலக ஆலோசனைத் திட்டங்களில் ஆர்வத்துடன் பங்கு கொள்வேன். [SUGGESTION SCHEMES ]

      நிறுவன வளர்ச்சி + அடக்கவிலை குறைப்பு + அனாவசிய செலவினங்களைக் குறைத்தல் + தொழிலாளர் நலம் + சிக்கனம் + உற்பத்திப் பொருட்கள் மற்றும் வேலையாட்களின் வேலைத் தரங்களை உயர்த்துதல் + ஆலையின் முன்னேற்றம் என்பனவற்றில் பலவித ஆலோசனைகள் நான் கொடுத்து, அதற்கான நிறைய பரிசுகளும் நான் பெற்றுள்ளேன்.

      அலுவலகத்தில் நான் நுழைந்துவிட்டால் எனக்கு வெளியுலகம், என் மனைவி, மக்கள், குடும்பம் எல்லாமே மறந்து போகும்.

      அவ்வளவு ஒரு பொறுப்புகள் - குருவித்தலையில் பனங்காய் வைத்தது போல - என்னால் அங்கிருந்து கடைசிவரை தப்பிக்க முடியவே இல்லை.

      நான் என்னவோ அதற்காகவே ஜன்மா எடுத்தவன் போலவும் - என்னை விட்டால் வேறு யாராலும் அந்தப் பொறுப்பினை ஏற்று என்னைப்போல மிகச் சிறப்பாகச் செய்ய இயலாது என்ற எண்ணத்திலும் என் மேலதிகாரிகள், சிங்கம் + யானை போன்ற என்னை ஒரே குகைக்குள் அன்பினால் கட்டிப்போட்டு வைத்திருந்தார்கள்.

      அடிக்கடி மேலிடம் வெளியிடும் Internal Transfer களில் என் பெயர் மட்டும் இருக்காது.

      I WAS 'CASH SECTION CHIEF OFFICER, the total IN-CHARGE' FOR CASH SECTION, IN A VERY BIG FINANCE DEPARTMENT OF A VERY BIG PUBLIC SECTOR UNDERTAKING.

      1981 முதல் 2009 வரை [28 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தின் ஒரே பிரிவினில் நான் ஓர் செக்‌ஷன் ஹெட் ஆக இருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். காரணம் என் நேர்மை, உண்மை, நியாயம், கடும் உழைப்பு மட்டுமே.

      ஊர்க்கோடியில் என் அலுலகம் ஒதுக்குப்புறமாக இருந்தாலும், நான் பலகோடிக்கணக்கான பணங்களில் எப்போதும் புரண்டவன்.

      பலத்த இஸட் பிரிவு போன்ற போலீஸ் பாதுகாப்பு வசதிகளுடன், எனக்கென்றே தனி ஜீப், தனி டிரைவர், பல்வேறு உதவியாளர்கள், அருமையான ஏ.ஸி. ரூம் என்று மிகவும் பந்தாவுடன் இருந்தவன்தான்.

      இவையெல்லாம் என்னைப்பற்றி முதலில் ஓர் சிறிய
      அறிமுகம் மட்டுமே.

      >>>>>

      Delete
    3. VGK to திரு. அப்பாதுரை அவர்கள்

      3]

      ’கவட்டை’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

      கவட்டையைத் தெரியாத, கவட்டையைப் பார்க்காத, கவட்டையை விரும்பாத, கவட்டை மேல் மோகமில்லாத, கவட்டையை அனுபவிக்காத ஆண்களும் உண்டோ? ;))))) என தயவுசெய்து நினைக்காதீர்கள்.

      நான் சொல்லும் இது வேறு ’கவட்டை’யாக்கும். ;)

      இந்த மிகச்சிறிய கவட்டையே 2005ம் ஆண்டு என் திறமைகளை வெளியுலகுக்குக் கொண்டுவர உதவியாக இருந்தது என்றால் அது மிகையாகாது.

      இந்தப்பதிவினில் இப்போது தங்களுக்காகவே அந்தக்கவட்டையின் படத்தினை புதிதாக இணைத்துள்ளேன். பாருங்கோ, ப்ளீஸ்.

      2005ம் ஆண்டு நான் என் மேலதிகாரிகளுடன் போராடி, எனக்கு ஒத்துவரும், என் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரை, எனக்குப்பின் என் நாற்காலியில் அமர்ந்து என்னைப்போலவே திறம்பட பணியாற்றக்கூடிய ஒருவரை நான் இப்போதே தயார் செய்ய வேண்டும் என
      வலியுறுத்திக்கூறி, சாதித்தும் வந்துவிட்டேன்.

      அதன்பிறகு அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கிப்பழக்கி என் அலுவலக வேலை பளுவினை நானே குறைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

      >>>>>

      Delete
    4. VGK to திரு. அப்பாதுரை அவர்கள்

      4]

      அப்போது INSSAN [INDIAN NATIONAL SUGGESTION SCHEMES’ ASSOCIATION] என்ற அமைப்பின் விளம்பரம் ஒன்று என் அலுவலக சுற்றறிக்கை மூலம் என் கண்களில் பட்டது. அதற்கு விளையாட்டாக மட்டுமே “Small Stone - Big Targets ! Small Suggestion - Big Results !!'
      என்றதோர் சிம்பிள் வாசகத்துடன், ஓர் கவட்டையையும், கல்லையும் வரைந்து போட்டிக்கு நானும் விட்டெறிந்திருந்தேன்.

      ஒரே மாதத்தில் ரிஸல்ட் வந்தது. என் தொழிலக நிர்வாக இயக்குனர் அவர்கள் என்னை அழைத்தார். கைகுலுக்கிப் பாராட்டினார். கட்டித்தழுவிக்கொண்டார்.

      அது ஓர் ஆறுதல் பரிசு மட்டுமே என்றாலும் ‘தேசிய விருது’ அகில இந்திய அளவில் நடந்த பல்வேறு 'Public + Private Sector' தொழிலக ஊழியர்களுக்கான போட்டி.

      பரிசினைப்பெற என்னை மும்பைக்கு ON DUTY கொடுத்து அனுப்பி வைத்தார்கள். இரயிலில் AC Coach பயணம்.

      என்னுடன் என் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்மணிகள், மும்பைக்குப் புறப்பட்டு வந்து இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். அந்தப்பயண அனுபவமே ஒரு மிகப்பெரிய கதை. இங்கு மீண்டும் சொல்வது கஷ்டம். ஏற்கனவே ஒருவரின் பதிவுக்கான
      பின்னூட்டத்தில் அதை விரிவாகவே எழுதியிருந்தேன். அதுவும் இப்போது அங்கு இல்லை. காணாமல் போய் விட்டது. ;(((((

      >>>>>

      Delete
    5. VGK to திரு. அப்பாதுரை அவர்கள்

      5]

      எதற்குச்சொல்கிறேன் என்றால் ஒரு சிறிய கவட்டை என் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்து விட்டது. அதன் பிறகு நான் கலந்துகொண்ட இதே போட்டியில் ஓரிரு ஆண்டுகளுக்குப்பிறகு ‘அகில இந்திய அளவில் - முதல் பரிசு - தேசிய விருது - தங்க மெடல்’ கிடைக்கும் பாக்யம் எனக்குக் கிடைத்தது. அதைப்பெறுவதற்கு நான் ஜாம்ஷெட்பூர் சென்று வந்தேன். அதற்கான படம் இதோ இந்த என் பதிவினில் வெளியிட்டுள்ளேன்.

      http://gopu1949.blogspot.in/2013/03/3.html

      >>>>>

      Delete
    6. VGK to திரு. அப்பாதுரை அவர்கள்

      6]

      அதேபோல 2005ம் ஆண்டில் தான் முதல் முதலாக ஓர் சிறுகதை நான் எழுதி ஓர் தமிழ் வாரப் பத்திரிகையின் போட்டிக்கு விளையாட்டாக அனுப்பியிருந்தேன். பரிசும் கிடைத்தது.

      இதனால் அன்று என்னுடன் ஒரே அலுவலகத்தில், ஒரே துறையில், ஆனால் வேறு ஒரு பிரிவினில், பணியாற்றிய பிரபல எழுத்தாளர் திரு. ரிஷபன் அவர்களின் நட்பின் நெருக்கம் எனக்குக் கிடைத்தது.

      மேலும் விபரங்களுக்கு :

      http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html

      ஒரு மிகச்சிறிய விஷயம் தான் இது. ஆனால் அதன் பலனோ மிகப்பிரபலமான எழுத்தாளர் ஒருவரின் பார்வையில் என்னை சிக்க வைத்தது. அவர் என்னை மேலும் மேலும் பல கதைகள் எழுதத் தூண்டிக்கொண்டே இருந்தார். அதனால் நானும் ஆர்வமாக பலகதைகள் எழுதினேன். பல பரிசுகள் பெற்றேன். அகில உலக அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசு பெற என்னால் முடிந்தது.

      அர்ச்சுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணன் போல இந்த அடியேனுக்கு திரு. ரிஷபன் ஸ்ரீநிவாசன் சார் என் கூடவே இருந்து என்னை சிறப்பாக வழி நடத்திச் சென்றார். [அவருக்கு மீண்டும் என் நன்றிகள்]

      >>>>>

      Delete
    7. VGK to திரு. அப்பாதுரை அவர்கள்

      7]

      அத்தோடு விட்டாரா திரு. ரிஷ்பன் அவர்கள் ....... இல்லை. என்னை சிறுகதைத் தொகுப்பு நூல்கள் வெளியிடச்சொன்னார். இதுவரை மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளேன். இந்த சிறுகதை இலக்கியப்பணிக்காக நான் என் கையை விட்டு செலவழித்துள்ள தொகை இதுவரை ரூ. 80000.

      கிடைத்ததோ மிகப்பெரிய ஆத்ம திருப்தி.

      இதுவரை வெளியிட்டுள்ள மூன்று சிறுகதைத் தொகுப்புக்கள் ஒவ்வொன்றிலும் 300 பிரதிகள் வீதம் நானே விலைக்கு வாங்கி என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் கையொப்பமிட்டு அன்பளிப்பாக மட்டுமே வழங்கியுள்ளேன்.

      இதுபற்றிய மேலும் விபரங்கள் படங்கள் இதோ இந்தப்பதிவுகளில் கொடுத்துள்ளேன்.

      http://gopu1949.blogspot.in/2011/07/1.html

      http://gopu1949.blogspot.in/2011/07/4.html

      >>>>>

      Delete
    8. VGK to திரு. அப்பாதுரை அவர்கள்

      8]

      அத்தோடு விட்டாரா இந்த என் இனிய நண்பர் திரு. ரிஷபன் அவர்கள் ..... இல்லை இல்லை ..... என்னை வலைத்தளம் ஒன்றை துவங்கச்சொல்லி அதில் எழுதுமாறு வற்புருத்தினார். தானே என் வீட்டுக்கு வருகை தந்து அதனைத் துவங்கியும் வைத்தார்.

      பலநாட்கள் அதில் நான் எதுவுமே எழுதாமலேயே இருந்தேன். காரணம் எனக்கு அதற்கான கணினி அறிவு இல்லாதது மட்டுமே.

      பிறகு எப்படித்தான் நான் வலைப்பக்கத்தில் எழுத ஆரம்பித்தேன் என்று கேட்கிறீர்களா?

      அந்த சுவையான அனுபவத்தை நகைச்சுவை ததும்ப நான் எழுதியுள்ளேன். அவசியம் படித்துப்பாருங்கோ.

      அது என் வெற்றிகரமான 50வது பதிவும் கூட. இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html

      தலைப்பு:

      “ஐம்பதாவது பிரஸவம். ”

      உப தலைப்புகள் :

      “மை டியர் பிளாக்கி” + ”தாலி”

      >>>>>

      Delete
    9. VGK to திரு. அப்பாதுரை அவர்கள்

      9]

      இவ்வாறு சிறு விஷயங்கள் என நான் நினைத்து ஆரம்பிக்கும் ஒவ்வொன்றும் கடைசியில் மிகப்பெரிய சாதனைகளாகவே மாறி வந்துள்ளன.

      தாங்கள் என் இல்லத்துக்கு வருகை தந்தீர்கள். என் வீட்டு ஜன்னலைப்பற்றி ஏதோ சொல்லிப்போய் என்னை உசுப்பி விட்டீர்கள்.

      அது சம்பந்தமாக என்னால் 3-4 பதிவுகள் “என் வீட்டு ஜன்னல் கம்பி ..... ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்” என்ற தலைப்பில் எழுத முடிந்தது.

      அவைகள் நம் வலைத்தள வாசகர்களிடமிருந்து மாபெரும் வரவேற்பினைப் பெற்றுத்தந்தன.

      இதோ அதற்கான ஆரம்ப இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html

      அதற்கான நான்கு பகுதிகளின் பின்னூட்டங்களின் எண்ணிக்கை மட்டுமே 162+137+159+136=594 எனக்காட்டுகிறது. ;)))))

      அதனால் என்னால் இன்றும் எதைப்பற்றியும் எந்தத்தலைப்பிலும் மிகச்சுவையாக எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையை அளிப்பதாக உள்ளது.

      >>>>>

      Delete
    10. VGK to திரு. அப்பாதுரை அவர்கள்

      10]

      இந்தப்புத்தாண்டில் மேலும் ஓர் மகிழ்ச்சியான செய்தி ...... இதோ:

      நேற்று முன் தினம் சிங்கப்பூரிலிருந்து முன்பின் தெரியாத ஒரு பெண்மணி என்னுடன் ஒரு கால் மணி நேரத்திற்கு மேல் தொலைபேசியில் பேசினார்கள்.

      “வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் எழுதிய வை. கோபாலகிருஷ்ணன் நான் தானா எனக்கேட்டு விட்டு அதை உறுதி செய்து கொண்டு தன் பேச்சினைத்தொடர்ந்தார்கள்.

      நான் வெளியிட்ட என்னுடைய மற்ற இரண்டு புத்தகங்களும் கூட அவர்கள் கையில் உள்ளனவாம்.

      நான் வியந்துபோய் ”எப்படி?????” என்று கேட்டேன்.

      I'm Thamarai, a bibliographic specialist with SILAS, National Library, Singapore. I create profiles for Indian authors in the American OCLC database (http://www.oclc.org/worldcatorg)

      என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.

      இந்தியா மட்டுமல்லாமல் பலநாடுகளின் வாசகசாலைகளிலும் நான் எழுதி வெளியிட்டுள்ள நூல்கள் இடம் பெற்றுள்ளன என அறியும் போது ஏற்படும் சந்தோஷம் + மகிழ்ச்சிக்கு ஈடு இணை உண்டா, சார்?

      ஏற்கனவே இலண்டனிலிருந்தும், வேறு வாயில் நுழையாத ஓர் நாட்டிலிருந்தும் சில நண்பர்கள் என் கதைகளைப் படித்ததாகச் சொல்லி என்னைப்பாராட்டி இருக்கிறார்கள்.

      மேற்படி இந்த சிங்கப்பூர் பெண்மணி, என் மெயில் மூலம் ஆங்கிலத்திலும் தமிழிலும், என்னைப்பற்றிய பல செய்திகளை சேகரித்துக்கொண்டு, என் Profile ஐ, American OCLC Database இல் இணைத்து விட்டதாகச் சொல்லி மகிழ்ந்தார்கள். என்னையும் மகிழ்வித்தார்கள்.

      அவர்களிடமிருந்து இறுதியாக வந்துள்ள மெயிலை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.

      >>>>>

      Delete
    11. VGK to திரு. அப்பாதுரை அவர்கள்

      11]

      Hi Sir

      Here is the link:
      http://connexion.oclc.org/WebZ/DBSearch?sessionid=cnxs08.prod.oclc.org-43781-hprzgcgt-or1olq

      But, like I had mentioned in my earlier mail, you would need to be a subscribed member to be able to access this link.

      Thus, I have attached a file with a copy of the complete record here.

      Thanks so much

      Yours gratefully
      K Thamaraiselvi

      >>>>>

      Delete
    12. VGK to திரு. அப்பாதுரை அவர்கள்

      12]

      ’இந்திய எழுத்தாளர்’களைப்பற்றி அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய பட்டியலில் என் பெயரும் சேர்ந்துள்ளது என்பது எவ்வளவு ஒரு மகிழ்ச்சி தரும் விஷயம், சொல்லுங்கோ சார் !

      இவற்றையெல்லாம் ஏன் இங்கு கூறியுள்ளேன் என்றால், தாங்கள் ஒரு சின்ன ஆனால் மிகச் சிறந்த கேள்வி என்னிடம் பின்னூட்டம் மூலமாகக் கேட்டுள்ளீகள்.

      //இந்த விமரிசனங்களை வச்சு என்ன பண்ணப்போறீங்கனு சொல்லலியே?//

      எனக்கு ஆயுளும், அதிர்ஷ்டமும், என் உடல்நலமும் மட்டும் சரியாக இருந்தால் போதும். இதை வைத்து என்னவெல்லாமோ செய்வேன். என் மனதில் நிறைய நீண்டகாலத்திட்டங்கள் வெகு அழகாகத் தோன்றியுள்ளன. சிறுகதை இலக்கியத்திற்காக மேலும் செலவு செய்யவும் அஞ்சுபவன் அல்ல நான்.

      பரிசுக்குத்தேர்வான 120 விமர்சனங்களையும், என் சிறுகதைகளுடன் தனி நூல்களாகவே கூட வெளியிடுவேன்.

      இதனால் எனக்கு மட்டும் அல்ல, என் கதைகளை ரஸித்து, ருசித்து விமர்சனம் எழுதியுள்ளோருக்கும் பெருமை.

      அவர்களை அவர்களின் படங்களோடு, அவர்களின் வலைத்தள முகவரிகளுடன், இந்த உலகுக்கே என் நூல்கள் மூலம் அறிமுகம் செய்து வைப்பேன்.

      இந்தப்போட்டிக்கு நான் மிகவும் கஷ்டப்பட்டு நடுவராக நியமித்துள்ளவரே கூட, அந்த நான் புதிதாக வெளியிடக்கூடும் நூல்களுக்கு ”வாழ்த்துரை” எழுதும்படியாகவும் செய்வேன்.

      நாம் இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும், அவை காலத்தினால் அழியாத பொக்கிஷங்களாக உலக நாடுகள் அனைத்திலும் உள்ள வாசக சாலைகளில் என்றும் ஜொலித்துக்கொண்டு இருக்கும்.

      எதற்குமே ப்ராப்தமும் அதிர்ஷ்டமும் கடவுள் அருளும் வேண்டும்.

      இந்த என்னுடைய “சிறுகதை விமர்சனப்போட்டி” என்பது என்னவென்றால்.....

      "THIS IS A VERY SMALL STONE ONLY TO ACHIEVE A VERY BIG TARGET"

      Here Target means Nothing but "பல்வேறு திறமையான வாசகர்களிடமிருந்து கிடைக்கும் விமர்சனங்கள் என்ற பொக்கிஷங்கள்” மட்டுமே.

      அன்புடன் VGK

      oooooooooooo

      Delete
  32. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. r.v.saravanan January 1, 2014 at 10:04 PM

      //இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சார்//

      மிக்க நன்றி.

      Delete
  33. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. ammulu January 1, 2014 at 10:34 PM

      வாங்கோ அம்முலு, வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா? உங்களை என் பதிவுகளில் பார்த்து ரொம்ப நாட்கள் ஆச்சு, அம்முலு. இன்று மீண்டும் பார்த்ததில் சந்தோஷமாக உள்ளது.

      //இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா.//

      மிக்க நன்றிம்மா. சந்தோஷம். ;)

      அன்புடன் கோபு அண்ணா

      Delete
  34. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! வலைப்பூவின் மூன்றாம் வருட நிறைவுக்கும் போட்டி சிறப்பாக நடைபெறவும் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி January 1, 2014 at 11:07 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! //

      தங்களின் இனிப்பான புத்தாண்டு வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      //வலைப்பூவின் மூன்றாம் வருட நிறைவுக்கும் போட்டி
      சிறப்பாக நடைபெறவும் நல்வாழ்த்துகள்.//

      சென்ற கார்த்திகை அமாவாசையன்று இந்த PROPOSAL பற்றி தங்களிடம் பேசி, கலந்தாலோசித்து, தங்களின் ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்டு, அதன்பின் ஓர் இறுதி முடிவுக்கு வந்து இந்த அறிவிப்பினை வெளியிடலாம் என்று தான் நான் மிகவும் ஆசைப்பட்டேன்.

      ஆனால் அது ஏனோ பல்வேறு காரணங்களால் என்னால் இயலாமல் போய்விட்டது.

      இன்று மார்கழி அமாவாசையும், ஹநுமத் ஜயந்தியும், புதன்கிழமையும், ஆங்கிலப்புத்தாண்டும், சேர்ந்துள்ளன.

      அறிவிப்பினை தங்களின் ஒப்புதல் இல்லாமலேயே நானும் வெளியிடும்படியாக ஆகிவிட்டது.

      தாங்களும் இங்கு அன்புடன் வருகை தந்து நல்வாழ்த்துகள் கூறியுள்ளீர்கள். மிகவும் சந்தோஷம்.

      இந்த சிறுகதை விமர்சனப்போட்டியில் உள்ள நாற்பது
      வாய்ப்புக்களையும் தாங்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு, உற்சாகத்துடன் கலந்துகொண்டு, இந்தப்போட்டியை
      சிறப்பித்துத் தர வேண்டுமாய், அன்புடன் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

      என்றும் அன்புடன் தங்கள் VGK

      Delete
  35. வணக்கம் கோபு சார்! புதுமையான முயற்சி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. kg gouthaman January 2, 2014 at 9:39 AM

      வாங்கோ சார், வணக்கம், சார். செளக்யமா சார்?

      //வணக்கம் கோபு சார்! புதுமையான முயற்சி.//

      மிக்க மகிழ்ச்சி சார். சந்தோஷம். ;)))))

      தாங்களும் இந்த விமர்சனப் போட்டிகளின் அனைத்துக் கதைகளுக்கும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பங்குபெற்று சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      //உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.//

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

      அன்புடன் கோபு

      Delete
  36. இனிய புத்தாண்டு வாழ்த்துகள். பொதுவாப் போட்டி என்றாலேயே விலகிவிடுவேன். என்றாலும் இதில் முயற்சி செய்து பார்க்கிறேன். நிச்சயம் ஆறுதல் பரிசை வென்றுவிடுவேன். :))))

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam January 2, 2014 at 2:12 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.//

      சந்தோஷம். தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      //பொதுவாப் போட்டி என்றாலேயே விலகிவிடுவேன். என்றாலும் இதில் முயற்சி செய்து பார்க்கிறேன். நிச்சயம் ஆறுதல் பரிசை வென்றுவிடுவேன். :))))//

      தாங்கள் இதுபோலச் சொல்வதே எனக்கு, நான் அறிவித்துள்ள இந்த புதிய முயற்சிக்குக் கிடைக்கும் ஆறுதல் பரிசாக உள்ளது.

      சந்தோஷம். அனைத்து நாற்பது வாய்ப்புகளையும் நன்கு பயன் படுத்திக்கொண்டு, ஆர்வத்துடன் கலந்துகொண்டு, போட்டியினை சிறப்பித்துக் கொடுங்கோ, ப்ளீஸ்.

      தாங்கள் உள்ளூரில் இருப்பதால் நானே நேரில் வந்து தங்களுக்கான ரொக்கப்பரிசுகள் அனைத்தையும் சலவைத்தாள்களாக அள்ளித் தருவது போல கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தேன். ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும் ஆறுதலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      Delete
  37. வாசகர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் சிறப்பானதொரு அறிவிப்பு. மனமார்ந்த வாழ்த்துக்கள் வை.கோ.சார். நேரமும் சூழலும் மனமும் ஒத்துழைக்கும் பட்சத்தில் நிச்சயமாக நானும் கலந்துகொள்வேன்.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி January 2, 2014 at 3:06 PM

      வாங்கோ, வணக்கம்.

      //வாசகர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் சிறப்பானதொரு அறிவிப்பு. மனமார்ந்த வாழ்த்துக்கள் வை.கோ.சார்.//

      மிகவும் சந்தோஷம், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      //நேரமும் சூழலும் மனமும் ஒத்துழைக்கும் பட்சத்தில் நிச்சயமாக நானும் கலந்துகொள்வேன். //

      மிக்க நன்றி. முடிந்தபோதெல்லாம் அவசியம் கலந்து கொள்ளுங்கோ, ப்ளீஸ்.

      //தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

      மிக்க நன்றி. அங்குள்ள தங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். அன்புடன் VGK

      Delete
  38. உற்சாகமே உன் மறுபெயர்தான் வைகோ -ஆ....! . திட்டமிட்டுச் செய்; திட்டமிட்டதைச் செய். என்று என் உடனிருப்போருக்குக் கூறுவது வழக்கம்.அம்மாதிரி செயல்படும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. G.M Balasubramaniam January 2, 2014 at 3:28 PM

      வாங்கோ ஐயா, வணக்கம் ஐயா.

      //உற்சாகமே உன் மறுபெயர்தான் வைகோ -ஆ....! . திட்டமிட்டுச் செய்; திட்டமிட்டதைச் செய். என்று என் உடனிருப்போருக்குக் கூறுவது வழக்கம்.அம்மாதிரி செயல்படும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி. எல்லாம் தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசீர்வாதங்கள் மட்டுமே.

      தங்களின் அன்பான வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் அடியேனின் மனப்பூர்வமான நன்றிகள், ஐயா.

      அன்புடன் கோபு

      Delete
  39. ஆஹா வருட ஆரம்பமே அதிரடியாய்...
    அருமை ஐயா...
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சே. குமார் January 2, 2014 at 4:42 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆஹா வருட ஆரம்பமே அதிரடியாய்... அருமை ஐயா...
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா... வாழ்த்துக்கள்.//

      மிக்க நன்றி, சந்தோஷம். முடிந்தால் தாங்களும் இந்தப்போட்டிகளில் கலந்துகொண்டால் மேலும் மகிழ்ச்சியடைவேன். அன்புடன் VGK

      Delete
  40. அன்பின் திரு வை.கோ. சார்,

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நல்ல போட்டி முயற்சி. அதற்கும் வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
    Replies
    1. நித்திலம்-சிப்பிக்குள் முத்து January 2, 2014 at 11:40 PM

      வாங்கோ .... வணக்கம்.

      //அன்பின் திரு வை.கோ. சார், இனிய புத்தாண்டு வாழ்த்துகள். //

      மிக்க நன்றி. தங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      //நல்ல போட்டி முயற்சி. அதற்கும் வாழ்த்துகள். அன்புடன்
      பவள சங்கரி//

      வல்லமை பொருந்திய தங்களின் வாழ்த்துகள் உற்சாகம் அளிக்கின்றன. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

      Delete
  41. உங்கள் உழைப்பும் முனைப்பும் எல்லோருக்கும் உதாரணமாகிறது வைகோ சார். ஜிஎம்பி அவர்கள் சொல்லியிருப்பது போல் உற்சாகத்துக்கு உற்சாகம் தர வல்லவர் நீங்கள்.

    உங்கள் விரிவான பதில் படித்து அசந்து போயிருக்கிறேன். சந்தர்ப்ப நாற்சந்திகளில் எத்தனைமுறை சிக்கியிருக்கிறீர்கள்! அடேயப்பா!

    உங்கள் வீட்டு ஜன்னல் பற்றி அந்தக் கணத்தில் எனக்குத் தோன்றிய ஆச்சரியம் இப்படிப் பதிவாகும் என்று எண்ணவில்லை. எல்லாமே ஒரு வகையில் இப்படித்தானோ? நாம் சாதாரணமாக விட்டெறியும் கற்கள், செறிந்த கனிகளைக் கீழிறக்கும் தற்செயலில் நீங்கள் அற்புதத்தைக் காண்பது இன்னும் வியப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

    மீண்டும் நன்றி. போட்டி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை January 3, 2014 at 1:28 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்கள் உழைப்பும் முனைப்பும் எல்லோருக்கும் உதாரணமாகிறது வைகோ சார். ஜிஎம்பி அவர்கள் சொல்லியிருப்பது போல் உற்சாகத்துக்கு உற்சாகம் தர வல்லவர் நீங்கள்.//

      சந்தோஷம், சார். மிக்க நன்றி.

      //உங்கள் விரிவான பதில் படித்து அசந்து போயிருக்கிறேன். //

      அதுவே என் பலம் + பலகீனம். என்னால் எதையும் சுருக்கமாகச் சொல்லத்தெரியாது. நாம் சொல்வது பிறருக்கு டக்குனு புரியணும் என்றால் சற்று விரிவாகவே சொல்ல வேண்டும் என்று நினைப்பவன் நான்.

      //சந்தர்ப்ப நாற்சந்திகளில் எத்தனைமுறை சிக்கியிருக்கிறீர்கள்! அடேயப்பா!//

      ஒவ்வொரு சம்பவத்திலும் பல்வேறு பாடங்களை என்னால் நன்கு கற்க முடிந்தது. புத்திக்கொள்முதலுக்காக மட்டுமே நான் இதுவரை இழந்தவைகள் ஏராளம்.

      //உங்கள் வீட்டு ஜன்னல் பற்றி அந்தக் கணத்தில் எனக்குத் தோன்றிய ஆச்சரியம் இப்படிப் பதிவாகும் என்று எண்ணவில்லை.//

      நான் மட்டும் நினைத்தேனா .... என்ன? ;)

      //எல்லாமே ஒரு வகையில் இப்படித்தானோ? //

      ஆம், அப்படித்தான். எது எது எப்போ எப்போ எப்படி எப்படி யார் யார் மூலம் நடக்கணும் என்று உள்ளதோ, அது அது அப்போ அப்போ அப்படி அப்படி அவர் அவர்கள் மூலம் நடந்து ஆச்சர்யப்படுத்தும், நம்மை.

      //நாம் சாதாரணமாக விட்டெறியும் கற்கள், செறிந்த கனிகளைக் கீழிறக்கும் தற்செயலில் நீங்கள் அற்புதத்தைக் காண்பது இன்னும் வியப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.//

      சாதாரண கல்லை மட்டும் விட்டெறிந்தால் போதாது. அது நம் தலையிலேயே விழுந்தாலும் விழும். அல்லது பிறர் மண்டையை உடைத்தாலும் உடைக்கும்.

      கல்லைக் கவட்டையில் ஏற்றி இலக்கைக் குறிவைத்து இழுத்து அடிக்க வேண்டும்.

      “கவட்டை + குறி + பேரெழுச்சியுடன் அடி”
      மிக முக்கியம். ;))))))))))))))))))))))))))))))))))))))

      //மீண்டும் நன்றி. போட்டி சிறக்க வாழ்த்துக்கள்.//

      மிக்க நன்றி, சார்.

      ஏதோ ஓர் ஆசையில் நான் ஏற்கனவே திட்டமிட்டபடி போட்டிக்கான அறிவிப்பினை வெளியிட்டு விட்டேன்.

      இப்போது என் கண் பார்வையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. சிகித்சைகள் தொடர்கின்றன. நாளடைவில் சரியாகவும்கூடும்.

      இருப்பினும் எப்படியும் இந்தப்போட்டி திட்டமிட்டபடி கடவுள் அருளால் நடந்தே தீரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பார்ப்போம்.

      நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். அன்புடன் VGK

      Delete
  42. // ரொக்கப்பரிசுகள் அனைத்தையும் சலவைத்தாள்களாக அள்ளித் தருவது போல கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தேன். ;)))))


    எனக்கு இது எப்பவுமே ஒரு கனவு சுகம் போல. சலவை நோட்டுனு சொல்றீங்களே அதை ஒரே ஒரு முறை என் வாழ்நாளில் தொட்டு அனுபவித்த அனுபவம்.. மறக்க முடியாது. அதுவும் பத்து ரூபாய்க் கட்டு. இப்ப நினைச்சாலும் சிலிர்க்குது.

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை January 3, 2014 at 1:30 AM

      ** ரொக்கப்பரிசுகள் அனைத்தையும் சலவைத்தாள்களாக அள்ளித் தருவது போல கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தேன். ;)))))**

      //எனக்கு இது எப்பவுமே ஒரு கனவு சுகம் போல. சலவை நோட்டுனு சொல்றீங்களே அதை ஒரே ஒரு முறை என் வாழ்நாளில் தொட்டு அனுபவித்த அனுபவம்.. மறக்க முடியாது. அதுவும் பத்து ரூபாய்க் கட்டு. இப்ப நினைச்சாலும் சிலிர்க்குது.//

      புதுசோ பழசோ. மதிப்பு ஒன்றுதான் என்றாலும், எனக்கு என்னவோ பழைய அழுக்கான கிழிந்த பாடாவதி நோட்டுக்களை என்னிடம் வைத்துக்கொள்ளவே பிடிக்காது.

      எவ்வளவோ புது நோட்டுக்களை ரூ 1, 2, 5, 10, 20, 50, 100, 500, 1000 என கட்டுக்கட்டாக, வங்கியிலிருந்து என் தனிச் செல்வாக்கினை உபயோகித்து, தினமும் லக்ஷக்கணக்கில் வாங்கி வந்து, தேவைபடும் எல்லோருக்கும், மறுக்காமல் சுண்டல் போல விநியோகித்துள்ளேன். அதெல்லாம் ஒருகாலம். ;)

      இன்று அவை கிடைப்பதில் எனக்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனாலும் இன்றும் எப்படியோ ஒருசில தெரிந்தவர்கள் மூலம் வாங்கி வந்து வீட்டில் தனியாக STOCK செய்வதும் தொடர்ந்துதான் வருகிறது.

      Delete
  43. சிறப்பான போட்டி..... விமர்சனங்கள் எழுதி அனுப்புகின்ற அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்......

    எத்தனை எத்தனை சிறப்புகள் உங்களிடம். சந்திக்கும்போதெல்லாம் வியந்திருக்கிறேன்.

    போட்டியில் பங்கு பெறும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து நானும்....

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் நாகராஜ் January 3, 2014 at 6:30 AM

      வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

      //சிறப்பான போட்டி..... விமர்சனங்கள் எழுதி அனுப்புகின்ற அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்......//

      சந்தோஷம்.

      //எத்தனை எத்தனை சிறப்புகள் உங்களிடம். சந்திக்கும்போதெல்லாம் வியந்திருக்கிறேன். //

      அடடா, தன்யனானேன்.

      //போட்டியில் பங்கு பெறும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து நானும்....//

      அவசியம் நாற்பது வாய்ப்புக்களையும் நன்கு பயன் படுத்துக்கொண்டு, போட்டியை வெற்றிகரமாக சிறப்பித்துத்தாருங்கள், வெங்கட் ஜி.

      //தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//

      மிக்க நன்றி, அன்புடன் VGK

      Delete
  44. வணக்கம் வை.கோ. அவர்களே!

    தங்களைப் பற்றி சிந்திப்பது நாள்தோறும் என்றாலும், சந்திப்பது அபூர்வமாக இருக்கிறது! விரைவில் சந்திப்போம்.

    - கிரிஜா மணாளன்.
    திருச்சி.

    ReplyDelete
    Replies
    1. GIRIJAMANAALAN January 3, 2014 at 12:07 PM
      //வணக்கம் வை.கோ. அவர்களே!//

      வாங்கோ என் அருமை நண்பர் திரு. கிரிஜா மணாளன் அவர்களே ! வணக்கம்.

      //தங்களைப் பற்றி சிந்திப்பது நாள்தோறும் என்றாலும், சந்திப்பது அபூர்வமாக இருக்கிறது! விரைவில் சந்திப்போம்.
      - கிரிஜா மணாளன். திருச்சி.//

      நானும் அதுபோலவே, தங்களைப்பற்றி அடிக்கடி என் மனதினில் நினைத்துக் கொள்வேன்.

      அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் சமீபத்தில் திருச்சிக்கு வருகை தந்தபோது தங்களுடன் பேச வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2013/10/61-2-2.html

      உடனே என் கைபேசியில் தங்களை அழைத்து அவருடன் அன்று பேச வைத்தேன்.

      அப்போதுகூட தங்கள் பையனுக்கு பெண்பார்க்கச்செல்ல புறப்பட்டுக்கொண்டிருப்பதாகச் சொன்னீர்கள்.

      தங்களுக்கும் இது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      தாங்களும் இந்த சிறுகதை விமர்சனப்போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறேன்.

      என்றும் அன்புடன் தங்கள்,
      வை. கோபாலகிருஷ்ணன்

      Delete
  45. தண்டோரா சப்தம் உலகெங்கிலும் கேட்டிருக்கிறது போலிருக்கு. செம ரெஸ்பான்ஸ் என்பதால் அதற்கேற்ப ஆவலும் கூடியிருக்கு.

    14-1-2014 எப்போ வரும்ன்னு இருக்கு. அந்த 40 கதைகளில் உங்களின் எந்தக் கதை போட்டிக்கான முதல் கதையாகப் போகிறது என்று யூகிக்க தூண்டும் ஆவலும் கூடியிருக்கிறது. சொல்லப்போனால் காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத் தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி January 3, 2014 at 9:10 PM

      வாங்கோ நமஸ்காரம் / வணக்கம்.

      தங்களின் மீண்டும் வருகை மீண்டும் எனக்கு மகிழ்வளிக்கிறது.

      அதுவும் தாங்கள் இந்த என் பதிவுக்கு 100வது வருகையாளராக மீண்டும் வந்துள்ளீர்கள்.

      கமெண்ட்ஸ் எண்ணிக்கையில் தாங்கள் 100 என்று கம்ப்யூட்டர் காட்டுகிறது. ;)))))

      Delete
    2. 2] VGK to Mr JEEVI Sir

      //தண்டோரா சப்தம் உலகெங்கிலும் கேட்டிருக்கிறது போலிருக்கு.//

      ஓரளவு மட்டும் கேட்டுள்ளது என நினைக்கிறேன், ஐயா.

      -=-=-

      //செம ரெஸ்பான்ஸ் என்பதால் அதற்கேற்ப ஆவலும் கூடியிருக்கு.//

      அப்படியா சொல்கிறீர்கள் ! சந்தோஷம் !!

      இருப்பினும் இதை ’செம ரெஸ்பான்ஸ்’ என்று என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை, ஐயா.

      ஏனெனில் என்னுடைய ஒருசில பதிவுகளில் பின்னூட்ட எண்ணிக்கைகள் என் பதில்களையும் சேர்த்து 250க்கு மேல் காட்டியுள்ளது. அதாவது 100க்கும் மேற்பட்டோர் வருகை தந்து கருத்தளித்துள்ளனர்.

      உதாரணமாக ஒரு பதிவு இதோ:

      தலைப்பு:
      “அடடா என்ன அழகு ! ...... அடையைத் தின்னு பழகு !!”

      இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

      Total No. of Comments: 267 [including my replies]

      (200 கமெண்ட்ஸ்களுக்கு மேல் வந்துள்ளவற்றை என்னைத்தவிர பிறரால் படிக்க இயலாதபடி ஓர்
      தொல்லையும் அதில் உள்ளது.)

      அவற்றுடன் ஒப்பிடும்போது, இப்போது இதுவரை வந்துள்ள கமெண்ட்ஸ் மிகவும் குறைவு அல்லவா?

      >>>>>

      Delete
    3. 3] VGK to Mr JEEVI Sir

      //14-1-2014 எப்போ வரும்ன்னு இருக்கு. //

      ஆஹா, இதனை, என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தங்கள் திருவாயால் கேட்கும் போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா ஐயா? ;)

      >>>>>

      Delete
    4. 4] VGK to Mr JEEVI Sir

      //அந்த 40 கதைகளில் உங்களின் எந்தக் கதை போட்டிக்கான முதல் கதையாகப் போகிறது என்று யூகிக்க தூண்டும் ஆவலும் கூடியிருக்கிறது. //

      அதில் தானே நான் என் சஸ்பென்ஸை வைத்துள்ளேன். பரிசுப் போட்டிக்காக வெளியிடப்படும் கதைகள் எல்லாமே [ஏற்கனவே என்னால் வெளியிடப்பட்டுள்ள] மீள் பதிவுகள் அல்லவா !

      அதனால் இதிலாவது ஓர் சஸ்பென்ஸ் கொடுத்தால் மட்டுமே நல்லது என நான் நினைக்கிறேன், ஐயா.

      >>>>>

      Delete
    5. 5] VGK to Mr JEEVI Sir

      //சொல்லப்போனால் காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத் தான் இருக்கிறது.//

      ஆம் அந்த சுகமே தனி தான், ஐயா.

      தாங்களும் இந்தப்போட்டியில் நிச்சயமாகக் கலந்து கொள்வீர்கள் என எதிர் பார்க்கிறேன்.

      அவசியமாகக் கலந்து கொள்ளணும் என வேண்டுகிறேன்.

      என்றும் பிரியமுள்ள,

      கோபு

      Delete
    6. how do you motivate yourself.. amazing energy!

      Delete
  46. கதை விடத் தெரிந்தால் போதும்
    வலையில் பிழைத்துக் கொள்ளலாம்
    என்பதற்கு நீங்களே அத்தாட்சி

    அதுவே உங்களின் மாட்சி.

    வலை உலகத்தில் நீங்கள் செய்வது
    ஒரு புதுமுகமான புரட்சி.

    உங்கள் திறமையைக் காணும் போது
    என் உள்ளத்தில் தோன்றுகிறது மிரட்சி.

    உங்களை நினைத்தாலே என்னை
    தொற்றிக் கொள்ளுகிறது மகிழ்ச்சி.

    வாழ்க பல்லாண்டு
    வாழ்க உங்கள்
    பன்முக திறமைகள்.

    ReplyDelete
    Replies
    1. Pattabi RamanJanuary 3, 2014 at 9:10 PM

      வாங்கோ அண்ணா, வணக்கம் / நமஸ்காரம்.

      //கதை விடத் தெரிந்தால் போதும் வலையில் பிழைத்துக் கொள்ளலாம் என்பதற்கு நீங்களே அத்தாட்சி.//

      ;))))) அடடா, என்ன இப்படிச்சொல்லி, என்னை ஒரேயடியாக வீழ்த்தி விட்டீர்கள் ;)))))

      கதை விடத்தெரிந்த எனக்கே தாங்கள் அண்ணா என்றால் சும்மாவா என்ன ? ;)

      >>>>>

      Delete
    2. 2] VGK To Mr. PATTABI RAMAN Sir

      //அதுவே உங்களின் மாட்சி.

      வலை உலகத்தில் நீங்கள் செய்வது ஒரு புதுமுகமான புரட்சி.

      உங்கள் திறமையைக் காணும் போது என் உள்ளத்தில் தோன்றுகிறது மிரட்சி.

      உங்களை நினைத்தாலே என்னை தொற்றிக் கொள்ளுகிறது மகிழ்ச்சி. //

      ஆஹா!

      மாட்சி, புரட்சி, மிரட்சி, மகிழ்ச்சி என ஒரே ‘சி’ யில் முடித்து கவிதை பாடிட்டீங்கோ. பாராட்டுக்கள். ;)

      சீச்சீ ........ சீச்சீ ........ என இந்தத்தங்களின் தம்பியை ஒதிக்கி விடாமல் புகழுரை பாடியுள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      >>>>>

      Delete
    3. 3] VGK To Mr. PATTABI RAMAN Sir

      //வாழ்க பல்லாண்டு ; வாழ்க உங்கள் பன்முக திறமைகள்.//

      அண்ணாவின் இந்த வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் அன்புத்தம்பியின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், அன்பின் அண்ணா.

      >>>>>

      Delete
    4. 4] VGK To Mr. PATTABI RAMAN Sir

      அன்பின் அண்ணா,

      தாங்கள் மிகவும் நல்லவர். ;)

      சளைக்காமல் எழுதுவதிலோ வல்லவர். ;))

      என்னுடைய ஒருசில கதைகளுக்காவது தங்களின் விமர்சனங்களை நான் கட்டாயம் எதிர்பார்க்கிறேன்.

      போட்டிக்காகவோ, பரிசுக்காகவோ அல்ல.

      தங்களின் எழுத்துத்திறமைகளை நானும் பிறரும் ரஸிக்க மட்டுமே, தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

      தங்களின் அன்புத்தம்பி

      கோபு

      Delete
  47. உங்கள் கதைகள் யாவற்றையும் படிக்கக் கிடைக்கும். வாரம் ஒன்றாக. அதுவே ஸந்தோஷம். பரிசு பெறும் பாக்கியசாலிகளையும் பார்க்கலாம். வாழ்த்துகள். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. Kamatchi January 4, 2014 at 4:58 PM

      வாங்கோ, நமஸ்காரம்.

      //உங்கள் கதைகள் யாவற்றையும் படிக்கக் கிடைக்கும். வாரம் ஒன்றாக. அதுவே ஸந்தோஷம். பரிசு பெறும் பாக்கியசாலிகளையும் பார்க்கலாம். வாழ்த்துகள். அன்புடன்//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  48. அன்பின் வை.கோ

    //
    டும்..டும்.. டும்..டும்.. டும்..டும்.. டும்..டும்.. சிறுகதை விமர்சனப் போட்டி பற்றிய அறிவிப்பு !
    //

    போட்டி பற்றிய அறிவிப்பு அனைத்து இரசிகர்களையும் நணபர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கும். நிச்சயாம் அனைவருமே அனைத்துக் கதைகளையும் படித்து விமர்சனம் அனுப்புவார்கள்

    நடுவர் தான் பாவம் - எத்தனை எத்தனை விமர்சனங்கள் - அத்தனையும் பார்த்து படித்து மகிழ்ந்து வரிசைப் படுத்த வேண்டும் . - முதல் மூன்று ( எவ்வளவு கடினம் ) தேர்ந்தெடுக்க வேண்டும்.

    பிறகு தொடங்குகிறது தங்கள் பணி - பரிசுப் பணம் அனுப்ப வேண்டும்.

    இப்பணியில் ஈடுபடும் போது - தங்களின் வழக்கமான பதிவுகளை நிறுத்தி விடாதீர்கள்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. cheena (சீனா) January 5, 2014 at 5:24 AM

      வாங்கோ என் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வணக்கம் ஐயா.

      //நடுவர் தான் பாவம் - எத்தனை எத்தனை விமர்சனங்கள் - அத்தனையும் பார்த்து படித்து மகிழ்ந்து வரிசைப் படுத்த வேண்டும் . - முதல் மூன்று ( எவ்வளவு கடினம் ) தேர்ந்தெடுக்க வேண்டும்.//

      தாங்கள் சொல்வதுபோல இது மிகவும் கஷ்டமான வேலை தான். பாவம் அந்த நடுவர் அவர்கள். ;)

      //பிறகு தொடங்குகிறது தங்கள் பணி - பரிசுப் பணம் அனுப்ப வேண்டும். //

      அது இப்போது உடனுக்குடன் இல்லை. 40 கதைகளுக்கும் பரிசு பெற்றவர் பற்றிய முடிவுகள் வெளியான பிறகு மட்டுமே. அதற்குள் 2014ம் வருடமே அநேகமாக முடிந்துவிடும்.

      எப்படியும் அடுத்த 2015 பொங்கலுக்குள் எல்லோருக்கும் பரிசுத்தொகை கிடைத்துவிடக்கூடும். அது நிச்சயம்.

      //இப்பணியில் ஈடுபடும் போது - தங்களின் வழக்கமான பதிவுகளை நிறுத்தி விடாதீர்கள். //

      புதிய பதிவுகள், புத்தம் புதிய சிறுகதைகள், புதிய படைப்புகள் எல்லாமே 2015ம் ஆண்டு மட்டுமே.

      இந்த 2014ல் ஏற்றுக்கொண்டுள்ள இந்த வேலையை பொறுப்பாக சொன்னபடி முடித்தாலே, அதுவே மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.

      >>>>>

      Delete
  49. அன்பின் வை.கோ

    டும்..டும்.. டும்..டும்.. டும்..டும்.. டும்..டும்.. சிறுகதை விமர்சனப் போட்டி பற்றிய அறிவிப்பு !

    நிச்சயம் அனைத்து நண்பர்களும் இரசிகர்களூம் படிது இரசித்து நல்லதொரு விமர்சனம் அளிப்பார்கள்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. cheena (சீனா) January 5, 2014 at 5:26 AM

      //நிச்சயம் அனைத்து நண்பர்களும் இரசிகர்களும் படித்து இரசித்து நல்லதொரு விமர்சனம் அளிப்பார்கள் //

      அப்படியா சொல்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி ஐயா. அது போதும்.

      ஆனால் அதுவும் போதாது ஐயா. தங்களிடமிருந்து 40 கதைகளுக்கும் எனக்கு விமர்சனம் வந்து சேர வேண்டும், ஐயா. அது மிக. மிக, மிக, மிக முக்கியம் ஐயா. ;)))))

      >>>>>

      Delete
  50. அன்பின் வை.கோ

    வலைப்பூவில்வை.கோ - வரலாறுவிளக்கம் அருமை- பொறாமையாக இருக்கிறது - வீட்டில் சுத்திப் போடச் சொல்லுங்க - திருஷ்டி ( அதெல்லாம் தங்களை அண்டாது ) கழியட்டும்.

    படங்கள் வழக்கம் போஅல் அருமை

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. cheena (சீனா) January 5, 2014 at 5:29 AM

      //வலைப்பூவில் வை.கோ - வரலாறுவிளக்கம் அருமை - பொறாமையாக இருக்கிறது - வீட்டில் சுத்திப் போடச் சொல்லுங்க - திருஷ்டி ( அதெல்லாம் தங்களை அண்டாது ) கழியட்டும்.

      படங்கள் வழக்கம் போல் அருமை//

      மிக்க நன்றி ஐயா. எல்லாம் தங்களைப் போன்ற என் நலம் விரும்பிகள் + ஊக்குவிப்பாளர்கள் அவ்வப்போது தந்துவரும் உற்சாக வார்த்தைகள் மட்டுமே, இதற்குக் காரணம் ஐயா.

      >>>>>

      Delete
  51. அன்பின் வை.கோ

    முதலாண்டில் 200 பதிவுகள்
    இரண்டாமாண்டில் 116 பதிவுகள்
    மூன்றாமாண்டில் 143 பதிவுகள்

    தங்களீன் பணிச்சுமைக்கு நடுவிலும் இவ்வளவு ஆர்வம்காட்டியமை நன்று

    பின் தொடர்பவர்களீன் எண்னீக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது பாராட்டுக்குரியது

    விதி முறைகள் சிந்தித்து எழுதப் பட்டிருக்கின்றன

    2014 பயங்கர கலக்கலாக தங்கள் வலைப்பூ மிளிரப் போகிறது -

    தங்களுக்கு தடை போடும் கீழ்க்கண்டவை எதுவுமே தங்களுக்குத் தடை போடாமல் இருக்க பிரார்த்தனைகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.

    ReplyDelete
    Replies
    1. cheena (சீனா) January 5, 2014 at 5:37 AM

      //முதலாண்டில் 200 பதிவுகள்
      இரண்டாமாண்டில் 116 பதிவுகள்
      மூன்றாமாண்டில் 143 பதிவுகள்

      தங்களின் பணிச்சுமைக்கு நடுவிலும் இவ்வளவு ஆர்வம் காட்டியமை நன்று //

      இவற்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, நடுவிலே தான் என் இல்லத்து பணிகளையும் அவ்வப்போது கொஞ்சூண்டு மட்டும், காதில் வாங்கிக்கொண்டு, கவனித்து வருவதாக இங்கு என் மேலிடத்திடமிருந்து, தினமும் ஒரே புகாராகவும், குற்றச்சாட்டுக்களாகவும் உள்ளது ஐயா.

      >>>>>

      Delete
    2. VGK To அன்பின் திரு சீனா ஐயா ... தொடர்ச்சி.

      //பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது பாராட்டுக்குரியது.//

      எனக்கு முன்னே பின்னே தெரியாத பலரும் அவர்களாகவே என் வலைத்தளத்தில் பின் தொடர்பவராக இணைவது எனக்கும் ஆச்சர்யமாகவே உள்ளது, ஐயா. மகிழ்ச்சியாகவும் உள்ளது. அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகளை நான் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

      அதில் உள்ள 330 பேர்களில் ஒரு 30 பேர்களின் பக்கம் மட்டுமே நான் இதுவரை சென்று வந்திருப்பேன் என நினைக்கிறேன்.

      //விதி முறைகள் சிந்தித்து எழுதப் பட்டிருக்கின்றன//

      ஆஹா, தாங்கள் மட்டுமே இதை இங்கு குறிப்பிட்டுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.

      //2014 பயங்கர கலக்கலாக தங்கள் வலைப்பூ மிளிரப் போகிறது //

      மிகவும் சந்தோஷம் ஐயா. செயல் பட திட்டமிடுவது மட்டுமே நாம். பிறகு பகவத் சங்கல்ப்பம் எப்படியோ? பார்ப்போம், ஐயா.

      //தங்களுக்கு தடை போடும் கீழ்க்கண்டவை எதுவுமே தங்களுக்குத் தடை போடாமல் இருக்க பிரார்த்தனைகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.//

      மிக்க மகிழ்ச்சி ஐயா. 2014 முழுவதும் தடையில்லா நாட்களாக அமைந்து, அனைவருக்கும் சந்தோஷங்கள் மட்டுமே ஏற்படட்டும். அதற்கான தங்களின் பிரார்த்தனைகளுக்கு என் நன்றிகள், ஐயா.

      >>>>>

      Delete
  52. //
    எனது உடல்நிலை, என் குடும்பத்தாரின் உடல்நிலை, என் கணினியின் உடல்நிலை, மின்வெட்டு இல்லாத தொடர் மின்சார விநியோகம், நெட் கனெக்‌ஷன் தொடர்ந்து கிடைப்பது, என் உடலும் உள்ளமும் உற்சாகமான சூழ்நிலையில் இருப்பது போன்ற அனைத்துக் காரணிகளும் என்னுடன் சாதகமாக ஒத்துழைக்க வேண்டும். //

    அனைத்தும் சாதகமாகத்தான் இருக்கும் - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் ஆசியும் கருணையும் தங்களுக்கு என்றும் உண்டு - ஒரு பிரச்னையும் இல்லாமல் சிறப்புடன் நடந்து - தங்களின் முழு ஈடுபாட்டிற்கு ஒரு நல்லதொரு பெயரும் பெருமையும் கிடைக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. cheena (சீனா) January 5, 2014 at 5:40 AM

      ***எனது உடல்நிலை, என் குடும்பத்தாரின் உடல்நிலை, என் கணினியின் உடல்நிலை, மின்வெட்டு இல்லாத தொடர் மின்சார விநியோகம், நெட் கனெக்‌ஷன் தொடர்ந்து கிடைப்பது, என் உடலும் உள்ளமும் உற்சாகமான சூழ்நிலையில் இருப்பது போன்ற அனைத்துக் காரணிகளும் என்னுடன் சாதகமாக ஒத்துழைக்க வேண்டும்.***

      //அனைத்தும் சாதகமாகத்தான் இருக்கும் - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் ஆசியும் கருணையும் தங்களுக்கு என்றும் உண்டு - ஒரு பிரச்னையும் இல்லாமல் சிறப்புடன் நடந்து - தங்களின் முழு ஈடுபாட்டிற்கு ஒரு நல்லதொரு பெயரும் பெருமையும் கிடைக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      தங்களின் அன்பு வருகைக்கும், அழகுக்கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், நல்லெண்ணங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      தங்கள் மீது தனிப் பிரியமுள்ள VGK

      Delete
  53. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 3 ஆவது ஆண்டு நிறைவுக்கும் தங்கள் பணி மென் மேலும் வெற்றியாக தொடரவும் வாழ்த்துக்கள் பல.சார், தாமதத்திற்கு பொறுத்துக் கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. Asiya Omar January 6, 2014 at 2:02 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 3 ஆவது ஆண்டு நிறைவுக்கும் தங்கள் பணி மென் மேலும் வெற்றியாக தொடரவும் வாழ்த்துக்கள் பல.சார்,//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகள் + கருத்துக்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.

      //தாமதத்திற்கு பொறுத்துக் கொள்ளவும்.//

      தாமதமே ஒன்றும் இல்லை. போட்டி ஆரம்பிக்கத்தான் இன்னும் நாட்கள் உள்ளனவே. தாங்களும் அவசியமாக இந்தப்போட்டிகளில் கலந்துகொள்ள முயற்சி செய்யுங்கோ. அன்புடன் VGK

      Delete
  54. உங்கள் சீரிய சிறந்த உத்திக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!

    ReplyDelete
  55. middleclassmadhavi January 8, 2014 at 10:04 AM

    வாங்கோ, வணக்கம்.

    //உங்கள் சீரிய சிறந்த உத்திக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!//

    மிக்க நன்றி. தாங்கள் அவசியமாக 40 போட்டிகளிலும் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். VGK

    ReplyDelete
  56. போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும், இப்படி ஓர் உற்சாகமான போட்டியை அறிவித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  57. Ranjani Narayanan January 9, 2014 at 10:34 PM

    வாங்கோ, வணக்கம்.

    //போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும், இப்படி ஓர் உற்சாகமான போட்டியை அறிவித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்!//

    தங்களின் அன்பான வருகைக்கும், அனைவருக்குமே உற்சாகம் தரக்கூடிய அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். VGK

    ReplyDelete
  58. கரும்பும் தின்னக்கொடுத்து உடன் கூலியும் தருகிறீர்கள்! மிக அருமையானதொரு முயற்சி! வலையுலகில் புதுமை என்றும் சொல்லலாம்! பதிவுகளை ஆழ்ந்து படிக்க வேண்டும் என்ற தங்கள் கருத்தொடு இசைகிறேன்! நல்லதொரு முயற்சி! இந்த முயற்சியில் வெற்றி பெற ஆண்டவன் அருள் பூரணமாக உங்களுக்கு கிடைக்க இறைவனை ப்ரார்த்திக்கிறேன்! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  59. போட்டி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மாதேவி January 12, 2014 at 4:44 PM

      வாங்கோ, வணக்கம்.

      //போட்டி வெற்றிபெற வாழ்த்துக்கள்!//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      Delete
  60. ஐயா,
    எனனவயுற்று எனது பின்னுட்டத்தை கணமே?
    என் கம்ப்யூட்டர் தான் சதி செய்கிறதோ?
    டும் டும் சத்தம் நன்றாக கேட்கிறது.
    உங்கள் கதைகள் படிப்பதே ஒரு இன்னிய அனுபவம்.
    அதற்க்கு மிக சிறந்த எழுத்தள்ளர்கள் கொடுக்கும் பின்னுட்டம் முலம் அவர்களின் மனகிடகையும் அறிய ஒரு சிறந்த வாய்ப்புகள். இதை அனுபிவிக்க நான் ரெடி.

    ReplyDelete
    Replies
    1. viji January 16, 2014 at 12:08 PM

      வாங்கோ விஜி, வணக்கம் விஜி, செளக்யமா விஜி !

      //ஐயா,
      எனனவாயிற்று எனது பின்னுட்டத்தை காணுமே?//

      ஒருவேளை அது [கணு] காணும் பொங்கலுக்குச்சென்று காணாமல் போயிருக்குமோ?

      //என் கம்ப்யூட்டர் தான் சதி செய்கிறதோ?//

      அப்படியும் இருக்கலாம். ;) எஸ்கேப் ஆக சுலபமான காரணமாக இதைச் சொல்லிவிடலாம் தான். ;)

      //டும் டும் சத்தம் நன்றாக கேட்கிறது.//

      உங்களுக்குப் பாம்புச்செவி, விஜி.

      //உங்கள் கதைகள் படிப்பதே ஒரு இனிய அனுபவம்.//

      அடடா, சந்தோஷம்.

      //அதற்கு மிக சிறந்த எழுத்தாளர்கள் கொடுக்கும் விமர்சனங்கள் + பின்னூட்டங்கள் மூலம் அவர்களின் மனக்கிடங்கையும் அறிய சிறந்த வாய்ப்புகள். இதை அனுபவிக்க நான் ரெடி.//

      மிக்க மகிழ்ச்சி.

      விஜியின் மனதை [மனக்கிடங்கை] நான் அறிய எனக்கும் அவ்வப்போது சந்தர்ப்பம் கொடுங்கோ.

      அதாவது செளகர்யப்பட்டபோதெல்லாம் நீங்களும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளுங்கோ, விஜி, என்று சொல்கிறேன்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  61. வணக்கம் வை.கோ.சார். இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய சிறுகதை விமர்சனப்போட்டி பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். பார்க்க
    http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_22.html
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரிJanuary 22, 2014 at 4:07 AM

      வாங்கோ, வணக்கம்.

      //வணக்கம் வை.கோ.சார். இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய சிறுகதை விமர்சனப்போட்டி பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். பார்க்க
      http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_22.html
      நன்றி.//

      தகவலுக்கும், வலைச்சரத்தில் என் தளத்தைப்பற்றிக் கூறி சிறப்பித்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள், மேடம்.

      அன்புடன் கோபு

      Delete
  62. வணக்கம்.
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_22.html?showComment=1390346663710#c775027748531686835

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  63. வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
    http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_22.html

    ReplyDelete
  64. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  65. சிறுகதை எழுத போட்டி வைப்பார்கள்.வித்தியாசமாக விமர்சனம் எழுத போட்டி வைப்பது வித்தியாசம் .நானும் கலந்து கொள்கிறேன். ஏற்கனவே பழைய பக்கங்களுக்கு சென்று சிலவற்றை படித்திருக்கிறேன்.விட்டுப் போனதை படிக்க ஆவல்
    நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று January 23, 2014 at 7:19 AM

      //சிறுகதை எழுத போட்டி வைப்பார்கள்.வித்தியாசமாக விமர்சனம் எழுத போட்டி வைப்பது வித்தியாசம் .நானும் கலந்து கொள்கிறேன். //

      மிக்க நன்றி. தாராளமாகக் கலந்து கொள்ளலாம். மொத்தம் 40 வாய்ப்புகளில் முதல் ஐந்து வாய்ப்பினை பயன்படுத்துக் கொள்ளாமல் நழுவ விட்டுள்ளீர்கள். இருப்பினும் இன்னும் 35 வாய்ப்புகள் தங்களுக்காகக் காத்திருக்கின்றன.

      தாங்கள் விரும்பினால் கலந்து கொள்ளலாம். கட்டாயம் ஏதும் இல்லை.

      Delete
  66. மறு ஒளி பரப்புகள் தானோ!
    திகதி பின்னால் இருக்கிறதே.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. //kovaikkaviJanuary 31, 2014 at 12:06 PM
      மறு ஒளி பரப்புகள் தானோ!
      திகதி பின்னால் இருக்கிறதே.
      வேதா. இலங்காதிலகம்.//

      தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என எனக்குப் புரியவில்லை. 01.01.2014 அன்று நான் இதை வெளியிட்டுள்ளேன். அப்போது இந்திய நேரம் 31.12.2013 க்கும் 01.01.2014க்கும் இடைப்பட்ட நள்ளிரவு மணி 12.01. தாங்கள் தான் சரியாக ஒரு மாதம் கழித்து பின்னூட்டம் அளித்துள்ளீர்கள்.

      Delete
  67. * இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு எனது விமர்சனங்களைத் தங்களுக்கு அனுப்பி வருகிறேன். பரிசு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு இருக்கிறேன். ஒரு கதையைப் படித்ததும் அதன் நிறை, குறைகள் மற்றும் இரசிக்கத் தக்க விஷயங்கள் அதில் இருப்பதை எனது பார்வையில் நான் தருகிறேன். அதேபோல், சக பதிவர்களின் பார்வை கோணங்களையும் அறிய முடிகின்றது. இது ஒரு
    வித்தியாசமான அம்சம்தான்.

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன்February 20, 2014 at 10:07 PM
      * இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு எனது விமர்சனங்களைத் தங்களுக்கு அனுப்பி வருகிறேன். பரிசு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு இருக்கிறேன். ஒரு கதையைப் படித்ததும் அதன் நிறை, குறைகள் மற்றும் இரசிக்கத் தக்க விஷயங்கள் அதில் இருப்பதை எனது பார்வையில் நான் தருகிறேன். அதேபோல், சக பதிவர்களின் பார்வை கோணங்களையும் அறிய முடிகின்றது. இது ஒரு வித்தியாசமான அம்சம்தான்.//

      தங்களின் ஆர்வத்தினை மெச்சுகிறேன். தொடர்ந்து இந்தப்போட்டிகளில் வாராவாரம் கலந்து கொள்ளுங்கள். மிக்க நன்றி.

      Delete
  68. * இந்த பரிசு பெறும் விமர்சனங்களை, தனி வெளியீடாக ஆனால், தங்கள் சிறுகதைத் தொகுதி நூல்களை வெளியிடும்போதே இணைப்பாய் வெளியிடுவதாய் தாங்கள் அறிவித்திருப்பது...
    இதுவரை யாரும் செய்திராதது; அதாவது புதுமையானது.

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் February 20, 2014 at 10:08 PM

      * இந்த பரிசு பெறும் விமர்சனங்களை, தனி வெளியீடாக ஆனால், தங்கள் சிறுகதைத் தொகுதி நூல்களை வெளியிடும்போதே இணைப்பாய் வெளியிடுவதாய் தாங்கள் அறிவித்திருப்பது... இதுவரை யாரும் செய்திராதது; அதாவது புதுமையானது. //

      எதையும் புதுமையாச் செய்வதில் ஓர் ஆர்வம் எனக்கு எப்போதுமே உண்டு. அதுபோல செய்ய ஓர் ஆசையும் உள்ளது. அதெல்லாம் போகப்போகத்தான் நான் யோசிக்க வேண்டும். பார்ப்போம், நண்பரே.

      Delete
  69. * தாங்கள் இதற்கு முன் சில நூல்களை வெளியிட்டுள்ளீர்கள். அந்த நூல்களை வாங்கிப் படிக்க ஆர்வம் மேலிடுகின்றது. ஆனால், தற்போது இயலாத சூழ்நிலை. காரணம், [எனது ஃப்ரொஃபைலில் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.] தற்போது நான் இருக்குமிடம் பேங்காக். நல்லது, கூடிய விரைவில் தாய்நாடு வரும்போது வாங்கிக் கொள்கிறேன், இறை நாட்டம்.

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன்February 20, 2014 at 10:09 PM
      * தாங்கள் இதற்கு முன் சில நூல்களை வெளியிட்டுள்ளீர்கள். அந்த நூல்களை வாங்கிப் படிக்க ஆர்வம் மேலிடுகின்றது. ஆனால், தற்போது இயலாத சூழ்நிலை. காரணம், [எனது ஃப்ரொஃபைலில் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.] தற்போது நான் இருக்குமிடம் பேங்காக். நல்லது, கூடிய விரைவில் தாய்நாடு வரும்போது வாங்கிக் கொள்கிறேன், இறை நாட்டம்.//

      அதனால் பரவாயில்லை. அதில் உள்ள பெரும்பாலான கதைகளே இந்தபோட்டியில் [இன்னும் சற்றே மெருகூட்டி] வெளியிடப்பட்டு வருகின்றன. இதைப்படித்தாலே அந்த நூல்களைப் படித்தது போலத்தான். அதற்கு மேலும் தான்.

      Delete
  70. * ஐயா, தாங்கள் கண் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ளீர்கள். அதற்கான மருந்துகள் தொடர்ந்து சரிவர எடுத்துக் கொள்ளுங்கள். கண்களுக்கு போதிய ஓய்வு கொடுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன்February 20, 2014 at 10:10 PM
      * ஐயா, தாங்கள் கண் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ளீர்கள். அதற்கான மருந்துகள் தொடர்ந்து சரிவர எடுத்துக் கொள்ளுங்கள். கண்களுக்கு போதிய ஓய்வு கொடுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.//

      என் மீது தாங்கள் கொண்டுள்ள அன்புக்கும் அக்கறைக்கும் என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள். கண்ணுக்கான சொட்டு மருந்துகள் அந்தந்த நேரப்படி அலாரம் வைத்துப் போட்டு வருகிறேன்.

      என் பதிவு வேலைகளைத் தவிர, பிறர் பதிவுகள் பக்கம் செல்வதை [தற்காலிகமாக] வெகுவாக குறைத்துக் கொண்டு விட்டேன்.

      அதுபோல முன்புபோல எனக்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதுவதையும் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டுள்ளேன்.

      இந்தப்போட்டி சம்பந்தமான வேலைகளுக்கே நேரம் எனக்கு சரியாக உள்ளது. இந்த ஆண்டு முழுவதுமே இப்படித்தான் Tight Schedule ஆக இருக்கக்கூடும் என நினைக்கிறேன்.

      அன்புடன் VGK

      Delete
  71. வணக்கம் !
    தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும் ஐயா .இன்று தான் எனது
    மெயிலைத் திறந்து பார்த்தேன் பார்த்ததும் பறந்து வந்து விட்டேன் :)
    போட்டி அறிவிப்பின் நோக்கம் அருமை ! வாசகர்கள் விமர்சனம்
    செய்யவிருக்கும் போது அவசியம் ஒட்டு மொத்த கருத்தையும்
    உள்வாங்கிப் படிப்பார்கள் (அதாவது என்ன மாதிரி :) ) இதனால்
    அவர்களும் கூடுதல் நன்மை அடைவார்கள் .முடிந்த வரை எல்லோரும்
    சிறந்த முறையில் விமர்சங்களை எழுதி வெற்றி பெற எனது நல்
    வாழ்த்துக்கள் .தங்களுக்கும் என் நன்றி கலந்த பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் ஐயா .மூன்றே வருடத்தில் 459 பதிவுகளையிட்டு
    330 பின் தொடர்வோர்களையும் பெற்றிருக்கின்றீர்கள் தங்களின்
    இந்த அயராது முயற்சி மென்மேலும் சிறந்து விளங்க மேலும்
    மேலும் என் இனிய வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  72. திண்டுக்கல் தனபாலன் May 4, 2014 at 7:31 AM
    வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... //

    மிக்க நன்றி திரு DD Sir.
    vgk

    ReplyDelete
  73. அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    Vetha.Elanagthilakam.

    ReplyDelete
  74. அன்புடையீர்,

    அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

    தங்கள் அனைவரின் ஒத்துழைப்பினாலும், உற்சாகத்தினாலும், மிகுந்த ஆர்வத்துடன் கூடிய ஈடுபாடுகளினாலும் என்னால் அறிவிக்கப்பட்டிருந்த இந்த மாபெரும் போட்டி, தொடர்ச்சியாக 40 வாரங்களுக்கு தொய்வேதும் இல்லாமல் வெற்றிகரமாக நடந்து நிறைவடைந்துள்ளன.

    01.11.2014 முதல் 09.11.2014 வரை ஒன்பது நாட்கள் நிறைவு விழாவும் வெற்றி விழாவுமாக கொண்டாடப்பட்டு போட்டியில் பங்குகொண்டு வெற்றிகள் பெற்ற பல்வேறு சாதனையாளர்களுக்கு மேலும் சில புதிய கூடுதல் விருதுகளும் பரிசுகளும் வழங்கி இனிதே நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்புகள்:

    01.11.2014
    VGK-01 TO VGK-40 TOTAL LIST OF HAT-TRICK PRIZE WINNERS
    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    02.11.2014
    சாதனையாளர்களுக்கான புதிய கூடுதல் விருதுகள்
    அறிவிப்பு - 1
    http://gopu1949.blogspot.in/214/11/part-1-of-4.html

    03.11.2014
    சாதனையாளர்களுக்கான புதிய கூடுதல் விருதுகள்
    அறிவிப்பு - 2
    http://gopu1949.blogspot.in/2014/11/part-2-of-4.html

    04.11.2014
    சாதனையாளர்களுக்கான புதிய கூடுதல் விருதுகள்
    அறிவிப்பு - 3
    http://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html

    05.11.2014
    சாதனையாளர்களுக்கான புதிய கூடுதல் விருதுகள்
    அறிவிப்பு - 4
    http://gopu1949.blogspot.in/2014/11/part-4-of-4.html

    06.11.2014
    VGK-01 To VGK-40 வெற்றியாளர்கள் பற்றிய ஒட்டுமொத்த அலசல்.
    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    07.11.2014
    நன்றி அறிவிப்பு By கோபு [VGK ]
    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    08.11.2014
    ’அன்பான நெஞ்சங்களுக்கு....’ என்ற தலைப்பினில் நடுவர் திரு. ஜீவி அவர்களின் கடிதம்
    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_8.html

    09.11.2014
    VGK-31 TO VGK-40 ஒட்டுமொத்த பரிசு அறிவிப்பு + அவரவர்களுக்கான மொத்தப் பரிசுத்தொகை அறிவிப்பு +
    பரிசுப்பண பட்டுவாடா தேதி அறிவிப்பு.
    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    போட்டிகளில் பங்குகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  75. Replies
    1. பழனி. கந்தசாமி May 20, 2015 at 12:45 PM

      வாங்கோ, வணக்கம் ஐயா.

      "ஓம் த்ரயம்பகம் யஜாமஹேசுகந்திம் புஷ்டி வர்த்தனம்
      உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீயமா ம்ருதாத்…’‘

      //பழுத்த வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல் யத்தினமில்லாமல் நான் (ஆத்மா) இந்த உடலிலிருந்து விடுபடவேண்டும். என்ன பேராசை?//

      2011, 2012, 2013 ஆகிய மூன்றாண்டுகளில் அடியேன் கொடுத்துள்ள {200+116+142} 458 பதிவுகளுக்கும் தொடர்ச்சியாகப் பின்னூட்டங்கள் கொடுத்துவிட்டு, 2014 புத்தாண்டில் முதலடி எடுத்து வைத்திருக்கும் தங்களுக்கு என் வணக்கங்களும், வரவேற்புகளும் சொல்லிக்கொள்கிறேன்.

      இறுதிவரை {31.03.2015 வரையுள்ள அனைத்துப்பதிவுகளுக்கும்} வருகை தந்து புதுப்போட்டியினில் வெற்றிபெற்று பரிசினைப்பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      அன்புடன் VGK

      Delete
  76. இப்ப இங்க என்ன கமெண்ட் போடனும்னே தெரியலியே.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் August 24, 2015 at 6:07 PM

      //இப்ப இங்க என்ன கமெண்ட் போடனும்னே தெரியலியே.//

      :))))) ஆஹா, இவ்வளவு நாட்களாகியும் ஒன்றும் தெரியாமலும், புரியாமலும் இருக்கும் ’பூந்தளிர்’ என்ற பச்சைக் குழந்தை வாழ்க வாழ்கவே :)))))

      Delete
    2. பூந்தளிர் August 24, 2015 at 6:07 PM

      வாங்கோ, வணக்கம்.

      2011, 2012, 2013 ஆகிய மூன்றாண்டுகளில் அடியேன் கொடுத்துள்ள {200+116+142} 458 பதிவுகளுக்கும் தொடர்ச்சியாகப் பின்னூட்டங்கள் கொடுத்துவிட்டு, 2014 புத்தாண்டில் முதலடி எடுத்து வைத்திருக்கும் தங்களுக்கு ’டும்.. டும்.. டும்.. டும்..’ என மேள தாளத்துடன் என் வரவேற்புகளைச் சொல்லிக்கொள்கிறேன்.

      இறுதிவரை {31.03.2015 வரையுள்ள அனைத்துப்பதிவுகளுக்கும்} வருகை தந்து புதுப்போட்டியினில் வெற்றிபெற்று பரிசினைப்பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      Delete
  77. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். நான் விடும் பெருமூச்சு கேக்கறதா? பிப்ரவரி 21 2014 என் பெண் சந்தியாவுக்குத் திருமணம். ரொம்பவும் பிசியான நேரம், கணினியே என்னுடன் டூ விட்ட நேரம். இந்த நேரத்தில் உங்கள் சிறுகதைப் போட்டி. நொந்துட்டேன். உங்க வலைத் தளம் பக்கம் எட்டிக்கூட பார்க்க முடியல, ஏன் உங்க வலைத்தளம் பக்கம் தலை வெச்சு கூட படுக்க முடியாத நேரம்.

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதான் பெருமூச்சு.

    வை போச்சே

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 25, 2015 at 1:24 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். நான் விடும் பெருமூச்சு
      கேக்கறதா?//

      மிக நன்றாகவே கேட்கிறது ..... குறட்டை சப்தம் போல :)

      >>>>>

      Delete
    2. கோபு >>>>> ஜெயா (2)

      //பிப்ரவரி 21, 2014 என் பெண் சந்தியாவுக்குத் திருமணம். ரொம்பவும் பிசியான நேரம், கணினியே என்னுடன் டூ விட்ட நேரம். இந்த நேரத்தில் உங்கள் சிறுகதைப் போட்டி. நொந்துட்டேன்.//

      நான் அதைவிட நொந்து நூலாகிப் போனேன். அதற்கு இரண்டு காரணங்கள்

      (1) நான் அறிவித்துள்ள இந்தப்போட்டிகளில் ஆர்வமுள்ள ஜெயா பங்கேற்க இயலாதே என்பது .....

      (2) ஜெயாவின் ஒரே செல்லப் பெண்ணின் திருமணத்திற்கு நேரில் சென்னை சென்று கலந்துகொள்ள இயலாமல், இந்தத் தொடர்ச்சியான போட்டி வேலைகள் எனக்குக் குறுக்கிட்டு விட்டனவே என்று.

      >>>>>

      Delete
    3. கோபு >>>>> ஜெயா (3)

      //ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதான் பெருமூச்சு.//

      ஆடிக்காற்று அம்மியையே நகர்த்துவதுபோல, உடம்பு மிகவும் SLIM ஆன ஜெயாவின் பெருமூச்சு 96Kg கோபு அண்ணாவையே நகர்த்திவிட்டது.

      இருப்பினும் ’ஜெ’யின் பெருமூச்சினில் மணம் (மனம்) வீசியதில் ஓர் தனி மகிழ்ச்சி இருக்கத்தான் செய்தது என்பதையும் என்னால் மறுப்பதற்கு இல்லை.

      >>>>>

      Delete
    4. கோபு >>>>> ஜெயா (4)

      //உங்க வலைத் தளம் பக்கம் எட்டிக்கூட பார்க்க முடியல, ஏன் உங்க வலைத்தளம் பக்கம் தலை வெச்சு கூட படுக்க முடியாத நேரம்.//

      புரிந்துகொண்டேன். இருப்பினும் எனக்கு இதில் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று மகிழ்ச்சிகள்.

      (1) பெண்ணின் திருமணம் வெற்றிகரமாக மிகச்சிறப்பாக நடந்து முடிந்த நான்காம் நாளே, சமீபத்தில் சஷ்டியப்தபூர்த்தி முடிந்த அன்புள்ள ஜெயாவையும் அவளின் அன்புக் கணவரையும் தம்பதி ஸமேதராய் என் வீட்டினில் முதன்முதலாக வரவேற்று சந்திக்க முடிந்தது.

      (2) அத்துடன் இல்லாமல் போனஸாக புதுமணத் தம்பதியினரையே நேரில் நம் ஆத்துக்கு ஆசையுடன் தாங்கள் தங்களுடன் அழைத்து வந்தது. அத்துடன் உபரி போனஸ் போல ஜெயாவின் அன்பு மகளின் மாமனார் மாமியார் அதாவது ஜெயாவின் புதிய சம்பந்தி மாமா + மாமியின் வருகை ... என மூன்று தம்பதியினரையும் என் இல்லத்தில் ஒட்டுமொத்தமாக ஹாரத்தி சுற்றி வரவேற்க முடிந்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..

      3) இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கிரீடம் வைத்ததுபோல, ஜெயா அன்புடன் என்னிடம் கொடுத்துச்சென்ற அதி ரஸமான ‘அதிரஸம்’, சீர் முறுக்கு + பெரிய லாடு ..... ஆஹா, நினைத்துப்பார்த்தால் இன்றும் என் நாக்கில் நீர் ஊறுகிறதே ! :)))))

      >>>>>

      Delete
    5. கோபு >>>>> ஜெயா (5)

      நம் இனிய நினைவலைகளுக்கான தொடர்புடைய சில பதிவுகள்:-

      http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html
      நேரிடையான நம் முதல் சந்திப்பு பற்றி நான் எழுதியது

      http://manammanamveesum.blogspot.in/2014/07/blog-post.html
      ’அண்ணா வீடு எங்கே, இன்னும் கொஞ்சம் தூரம்’
      நேரிடையான நம் சந்திப்பு பற்றி நீங்கள் எழுதியது

      http://gopu1949.blogspot.in/2014/02/blog-post.html
      தங்களின் அருமைப்பெண் திருமணம் பற்றி நான் எழுதியது

      http://gopu1949.blogspot.in/2013/09/45-3-6.html
      என் பதிவினில் சாதனைக்கிளியாக ‘ஜெ’ ! :)

      http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html
      தங்களின் சஷ்டியப்த பூர்த்தி கல்யாணம் பற்றி நான் எழுதிய சிறப்புப் பதிவு ’அறுபதிலும் ஆசை வரும்’ ..... மொத்தப் பின்னூட்ட எண்ணிக்கை: 216 :))))))))

      http://manammanamveesum.blogspot.in/2014/07/blog-post.html
      தங்களின் புதிய வலைத்தளத்தினில் நம் அருமையான நேரடி சந்திப்பு பற்றி நீங்கள் எழுதியது.

      >>>>>

      Delete
    6. கோபு >>>>> ஜெயா (6)

      //வை போச்சே//

      ’வை’ = ’வடை’யா ? :)))))

      பேஷ் பேஷ் .... ரொம்ப நன்னாயிருக்கு இந்தக் கையகல ‘வை’ வடை .... சூடாக சுவையாக முறுகலாக பெரிய சைஸில் மெத்தென்று சூப்பரோ சூப்பராகத்தான் உள்ளது. ..... !!!!!

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான நகைச்சுவையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஜெ. வாழ்க !

      பிரியமுள்ள கோபு அண்ணா

      oooooo

      Delete
  78. இப்பதா கமண்டு போட்டில கலந்துகிட்டு மூச்சி வாங்க ஓடிகிட்டிருக்கேன். அதுக்குள்ளாரவும் டும் டும் டும் னு கொட்டிபிட்டீங்களே. .இது எனக்கானதில்ல. இத போல போட்டி வைக்குது பரிசு கொடுக்குதுலலா ஒங்கள கெலிச்சுகிட ஆருமே கெடயாதுங்கோ.

    ReplyDelete
  79. ஆஹா நான் உங்க பின்னூட்ட போட்டில மட்டும் கலந்துக்கலைனா இந்த விமரிசனபோட்டி பற்றி தெரிந்தே இராது. ஆனாலும் என்னால இந்தபோட்டில கலந்துக்க முடியலியேன்னு ஏக்கமா இருக்கு. சரி யாரெல்லாம் எப்படில்லாம் விபரிசனங்கள் எழுதியிருக்கானு பாக்கத்தானே போறேன்.

    ReplyDelete
  80. தி ஸ்மால் ஸ்டோன் ரியலி ஹிட் தி பிக் டார்கெட்.

    ReplyDelete
  81. ////இந்த விமரிசனங்களை வச்சு என்ன பண்ணப்போறீங்கனு சொல்லலியே?//

    எனக்கு ஆயுளும், அதிர்ஷ்டமும், என் உடல்நலமும் மட்டும் சரியாக இருந்தால் போதும். இதை வைத்து என்னவெல்லாமோ செய்வேன். என் மனதில் நிறைய நீண்டகாலத்திட்டங்கள் வெகு அழகாகத் தோன்றியுள்ளன. சிறுகதை இலக்கியத்திற்காக மேலும் செலவு செய்யவும் அஞ்சுபவன் அல்ல நான்.

    பரிசுக்குத்தேர்வான 120 விமர்சனங்களையும், என் சிறுகதைகளுடன் தனி நூல்களாகவே கூட வெளியிடுவேன்.

    இதனால் எனக்கு மட்டும் அல்ல, என் கதைகளை ரஸித்து, ருசித்து விமர்சனம் எழுதியுள்ளோருக்கும் பெருமை.

    அவர்களை அவர்களின் படங்களோடு, அவர்களின் வலைத்தள முகவரிகளுடன், இந்த உலகுக்கே என் நூல்கள் மூலம் அறிமுகம் செய்து வைப்பேன்.

    இந்தப்போட்டிக்கு நான் மிகவும் கஷ்டப்பட்டு நடுவராக நியமித்துள்ளவரே கூட, அந்த நான் புதிதாக வெளியிடக்கூடும் நூல்களுக்கு ”வாழ்த்துரை” எழுதும்படியாகவும் செய்வேன்.

    நாம் இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும், அவை காலத்தினால் அழியாத பொக்கிஷங்களாக உலக நாடுகள் அனைத்திலும் உள்ள வாசக சாலைகளில் என்றும் ஜொலித்துக்கொண்டு இருக்கும்.
    பிரமிப்பாக இருக்கிறது!தங்களின் அயராத உழைப்பு, அனுபவம், சரியான திட்டமிடல் கொண்ட தாங்கள் இறைவன் அருளால் பல்லாண்டு வாழ்வீர்!உங்களுடன் வலையுலகில் பயணிக்கும் நாங்களும் பாக்கியசாலிகள் என்பதில் ஐயமில்லை!

    ReplyDelete