என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

கண்ணான கண் அல்லவோ !




என் நிலை விளக்கம்

அன்புடையீர்,

தங்கள் எல்லோருக்கும் என் பணிவான இனிய அன்பு வணக்கங்கள்.

பொதுவாக அறுவை சிகிச்சை என்றால் அது எப்படியிருக்கும் என்ற அனுபவமோ, கண் பார்வையில் கோளாறுகள் ஏற்பட்டால் அதன் பாதிப்புகள் எந்த அளவுக்கு இருக்கும் என்ற அனுபவமோ இதுவரை ஏற்படாமல் அதிர்ஷ்டமாகவே இருந்து வந்த எனக்கு, சமீபத்தில் இவை இரண்டு அனுபவங்களுமே ஏற்பட்டு பல்வேறு பாடங்களைக் கற்பித்துள்ளன. 

இவைகளால் எனக்கு ஏற்பட்ட தேவையற்ற பயங்கள் + மிகப்பெரிய  அனுபவங்கள் அத்தனையும் சேர்த்து “புதிய பார்வை” என்ற தலைப்பினில் பிறகு ஒருநாள் ஓர் தொடர்க் கட்டுரையாக எழுதலாம் என நினைக்கிறேன். அந்தக்கட்டுரை என்னைப்போன்ற ஒரு சிலருக்கு மிகவும் பயன் தரக்கூடியதாக அமையும் என நம்புகிறேன்.

எனக்கு சமீபத்தில் கண் ஆபரேஷன் நடந்துள்ளது என நான் சூடத்தை அணைத்து சத்தியம் செய்தாலும் பிறர் நம்பவே மாட்டார்கள். அந்த அளவுக்கு மிகவும் அழகாக கச்சிதமாக கண்பட்டுப் போகும்படி செய்து முடித்துள்ளார்கள். 

கத்தியின்றி, ரத்தமின்றி, கண்மீது கட்டுக்கள் ஏதுமின்றி, கண்ணை மறைக்கும் திரைத்துணிகள் ஏதுமின்றி, ஆபரேஷனுக்குப்பிறகு கூலிங் க்ளாஸ் மட்டும் போட்டு அப்படியே  நடந்து என் ரூமுக்குச் செல்லுமாறு என்னை அனுப்பி விட்டார்கள். அந்த அளவுக்கு இன்றைய மருத்துவ விஞ்ஞானம் முன்னேறி, மிகத்துல்லியமான உபகரணங்களும் வந்து விட்டன.

முதல் நாள் மட்டும், வலியும், உறுத்தல்களும் பலமணி நேரங்கள் பொறுத்துக்கொள்ளும் அளவுக்கு மட்டுமே இருந்தன. 

இதில் மொத்தம் நான்கு வகையான சிகிச்சை முறைகள் இருப்பினும் நான் தேர்ந்தெடுத்தது SIMPLE,  LATEST  AND COSTLIEST TECHNOLOGY  / TREATMENT - MULTIFOCAL LENS என்பதாகும்.

இதை நான் தேர்ந்தெடுத்துள்ளதற்கான முக்கியமான காரணம் கண்ணாடி ஏதும் அணியாமல்  கடைசிவரை எழுதுதல் + வாசித்தலில் எனக்குள்ள ஆர்வம் மட்டுமல்ல, அவர்கள் கொடுத்துள்ள விளம்பரங்களும் கூட. 

அவர்கள் அளித்துள்ள விளம்பரத்தில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:

1] நீங்கள் 60 வயதிலும் 20 வயதினரைப்போல பார்க்கலாம்.

2] சிறந்த தூரப்பார்வை, சிறந்த இடைப்பார்வை, சிறந்த கிட்டப்பார்வை ஆகிய மூன்றுமே மிகத்தெளிவாக இதில் கிடைக்கின்றன. 

3] வெள்ளெழுத்துக் கண்ணாடி ஏதும் தேவையில்லை.

4] ஊசியில் நூல் கோர்க்கலாம், அரிசியில் கல் பொறுக்கலாம், எழுதலாம், படிக்கலாம் அதுவும் கண்ணாடி ஏதும் அணியாமலேயே !

5] இது IQ Base ஆல் ஆனதால் உங்கள் கண்களுக்கு முதுமையிலும் இளமை ஏற்படும் என்பதே இதன் சிறப்பு அம்சம்.

கண் சம்பந்தமாக பல்வேறு நவீன பரிசோதனைகள் மேற்கொண்டு, கண் அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தும்கூட, அடுத்த இரண்டு மாதங்களுக்கு நான் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என மிகப்பெரிய பட்டியல் ஒன்று கண் மருத்துவர்களால் என்னிடம் கொடுக்கபட்டுள்ளது.

பெண்களுக்குப் பிரஸவத்திற்குப் பின்பு போஷாக்கான ஆகாரங்கள் கொடுக்க வேண்டியது அவசியம் போலவே இங்கு கண்களுக்கும் இவை அவசியமாகிறது.

அதன்படி தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை குறிப்பிட்ட இடைவெளியில், தினமும்  21 முறை வெவ்வேறு சொட்டு மருந்துகள் போட வேண்டியுள்ளது. 

அதன் அளவுகள் மட்டும் வாராவாரம் சற்றே குறையுமே தவிர, 2 மாத காலம், தினமும் சொட்டு மருந்து போடுவது என்பது கட்டாயமாக நீடிக்கப்பட வேண்டியது அவசியம்.

தினமும் சுமார் 12 மணி நேரங்கள் கணினியிலேயே இருந்து பழகி விட்ட எனக்கு, தினமும் அரை மணி நேரம் மட்டுமே கணினி பக்கமோ அல்லது தொலைகாட்சிப் பெட்டிப்பக்கமோ செல்ல தற்சமயம் ஸ்பெஷல் அனுமதி அளித்துள்ளார்கள். 

அதுவும் கண்களுக்கு அதிக ஒளியின் பாதிப்புகளோ, வெளித் தூசிகளின் பாதிப்புகளோ ஏதும் நெருங்காதவாறு ஓர் ஸ்பெஷல் டைப் [பக்கவாட்டு இடைவெளிகள் முழுவதும் அடைக்கப்பட்ட ] கூலிங் க்ளாஸ் அணிந்துகொண்டு தினமும் அரை மணி நேரம் மட்டும் கணினியில் ஏதாவது வேலைகள் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தக்கட்டுப்பாடுகள் எல்லாம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே. 

அதன்பிறகு ஜாலிதான். “ராஜாவின் ... பார்வை ... ராணியின் பக்கம் ......” பாட்டுப்போலத் தானோ என்னவோ ! ;)

இந்த தினமும் அரை மணி நேரம் மட்டுமே என்ற மிகக்குறுகிய கால அவகாசத்தில் என்னால் என் வலைப்பக்கத்தை மட்டுமே கவனிக்க இயலும். 

எனக்கு மிகவும் பிடித்தமான மற்ற ஒருசில பதிவர்களின் பக்கம் ஓரிரு மாதங்களுக்கு என்னால் வர இயலாமல் இருக்கும் என்பதை மிகவும் வருத்தத்துடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். 

என் கண்பார்வை மிகத்தெளிவாகத் திரும்பக் கிடைப்பதற்காக, எனக்காக ஸ்பெஷல் பிரார்த்தனைகள் செய்துள்ள அன்பு உள்ளங்கள் அனைவருக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளை காணிக்கை ஆக்குகிறேன்.  

தங்கள் ஒவ்வொருவரின் கூட்டுப்பிரார்த்தனைகள் மட்டுமே எனக்கு மனதுக்கு ஆறுதலும், கண்ணுக்குப் பார்வையும் அளித்துள்ளது என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன்.

தொலைபேசி, கைபேசி, குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், சுட்டிகள், வலைப்பதிவினில் பின்னூட்டங்கள் என பல்வேறு வழிகளில் என்னையும், என் குடும்பத்தாரையும் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


நன்றி ! நன்றி !! நன்றி !!!


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

oooooOooooo

என்னுடைய அடுத்த பதிவு அநேகமாக 
சிறுகதை விமர்சனப்போட்டி VGK-01 
“ஜாங்கிரி” சிறுகதைக்கு 
விமர்சனம் எழுதி அனுப்பியிருந்தவர்களில், 
நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூவர் பற்றிய அறிவிப்பாக இருக்கும்.

oooooOooooo

இன்று  “தை வெள்ளிக்கிழமை” 
அதிகாலை வெளியிடப்பட்டுள்ள
http://www.gopu1949.blogspot.in/2014/01/vgk-02_24.html
சிறுகதை விமர்சனப்போட்டிக் கதைக்கு
இன்றே சிலர்  மாவிளக்கு போலச் சுடச்சுட
விமர்சனங்கள் எழுதி அனுப்பியுள்ளது 
மிகவும் மகிழ்வளிக்கிறது.

இருப்பினும் மேற்படி போட்டியில் 
கலந்துகொள்ள 
மேலும் ஆறு நாட்கள் உள்ளன.

எனவே அனைவரும் வழக்கம்போல்
உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள்.

oooooOooooo








48 கருத்துகள்:

  1. Please do take care of your eyes,Sir.Do not over strain yourself.Our prayers are always with you sir...Sri Paramacharya's aasirwaathams will take care of your well being...

    பதிலளிநீக்கு
  2. புதிய பார்வை தொடரைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.
    சிகிச்சைக்குத் துணிந்ததற்குப் பாராட்டுக்கள்.
    இரண்டு மாதம் இதோ ஓடிவிடும்.. அதுவரை கொஞ்சம் அதிகமாகவே கவனமாக இருக்க வேண்டுகிறேன்.

    வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  3. மிக்க மகிழ்ச்சி
    நன்றாக ஓய்வெடுத்துப் பின்
    வலைப் பக்கம் வரலாம்
    அவசரமில்லை

    பதிலளிநீக்கு
  4. தங்கள் கண் பார்வை முழுவதும் நன்கு குணமாக ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். டாக்டர்கள் சொன்ன அளவிற்கு ஓய்வு எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

    ஒரு கண்ணில் மட்டுமா? இரண்டு கண்களிலுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழனி. கந்தசாமி January 25, 2014 at 3:47 AM

      வாங்கோ, வணக்கம்.

      //தங்கள் கண் பார்வை முழுவதும் நன்கு குணமாக ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.//

      மிக்க நன்றி, ஐயா.

      //டாக்டர்கள் சொன்ன அளவிற்கு ஓய்வு எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். //

      ஆகட்டும் ஐயா.

      //ஒரு கண்ணில் மட்டுமா? இரண்டு கண்களிலுமா?//

      2014 ஜனவரியில் இடது கண் மட்டுமே. இப்போது 2015 ஜனவரியில் வலது கண்ணுக்கும் செய்து கொண்டுள்ளேன். இப்போது இரண்டு கண்களாலும் மூக்குக்கண்ணாடி ஏதும் அணியாமல், கிட்டே உள்ளது, இடையில் உள்ளது, தூரத்தில் உள்ளது என அனைத்தையும் நன்கு பளிச்சென்று என்னால் காண முடிகிறது.

      இருப்பினும் எனக்கு சர்க்கரை லெவல் கொஞ்சம் கூடுதலாக இருப்பதாலும், அதற்கென நான் தினமும் மாத்திரைகள் சாப்பிட்டு வருவதாலும், 9 மாதங்களுக்கு ஒருமுறை, Periodical Vision Check-up க்கு வர வேண்டும் என கண் டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். டாக்டர்கள் சொல்வதுபோல அனைத்தையும் தவறாமல் கடைபிடித்து வருகிறேன்.

      அன்புடன் VGK

      நீக்கு
  5. எனக்கு தெரியவே இல்லையே ஸார்....சரி...ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்...கண்டிப்பாக டாக்டர் சொன்ன காலம் வரை. இணையம்
    அந்த இரண்டு மாதம் தங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்.....
    அன்புடன்,
    RRR

    பதிலளிநீக்கு
  6. புதிய பார்வை பெற்றிருக்கிறீர்கள்.
    மிக்க மகிழ்ச்சி ஐயா
    மருத்துவரின் ஆலோசனைகளைக் கடைபிடிக்கவும்
    ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் மீண்டும் சந்திப்போம்

    பதிலளிநீக்கு
  7. கண்டிப்பாக மருத்துவர்கள் சொன்னபடி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்... பதிவுகள், வந்த விமர்சனங்களை வாசிப்பது - இவையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்... விரைவில் பூரண நலம் அடைய வேண்டுகிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  8. மிகவும் நேர்த்தியான முறையில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நல்லபடியாக இருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி வை.கோ.சார். மருத்துவர் சொன்னபடி தேவையான நேரத்தில் கண்ணில் மருந்திட்டும் கண்ணுக்கு ஓய்வளித்தும் கவனமாக இருங்கள். விரைவில் பூரண குணமடைந்துவர வாழ்த்துக்கள். கண் அறுவை சிகிச்சை பற்றிய உங்கள் பதிவு பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. பதிவுக்காக காத்திருக்கிறோம். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. கத்தியின்றி, ரத்தமின்றி, கண்மீது கட்டுக்கள் ஏதுமின்றி, கண்ணை மறைக்கும் திரைத்துணிகள் ஏதுமின்றி, ஆபரேஷனுக்குப்பிறகு கூலிங் க்ளாஸ் மட்டும் போட்டு அப்படியே நடந்து என் ரூமுக்குச் செல்லுமாறு என்னை அனுப்பி விட்டார்கள். அந்த அளவுக்கு இன்றைய மருத்துவ விஞ்ஞானம் முன்னேறி, மிகத்துல்லியமான உபகரணங்களும் வந்து விட்டன.//
    கண் ஆப்ரேஷ்ன் செய்து கொள்ள இருப்பவர்களுக்கு அருமையான செய்தி.
    மனதைரியம், எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை கொடுக்கும் இந்த பதிவு..
    பதிவுக்கு வந்து கருத்து சொல்லலாம் இரண்டு மாதங்கள் கழித்து.
    நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் மீண்டும் வாருங்கள்.
    வாழ்த்துக்கள்.

    “புதிய பார்வை” என்ற தலைப்பினில் பிறகு ஒருநாள் ஓர் தொடர்க் கட்டுரையாக எழுதலாம் என நினைக்கிறேன். அந்தக்கட்டுரை என்னைப்போன்ற ஒரு சிலருக்கு மிகவும் பயன் தரக்கூடியதாக அமையும் என நம்புகிறேன்.//

    நாங்களும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்.
    உங்களின் வழிகாட்டுதல் எல்லோருக்கும் நலபயக்கும்.

    பதிலளிநீக்கு
  10. சீக்கிரம் நலம் பெற வாழ்த்துகள். காஸ்ட் எவ்வளவு ஆகும் என்று சொல்லவில்லையே.. ஓய்வு அவசியம். கண்களுக்கு அதிக வேலை கொடுக்காதீர்கள். ரெண்டு மாசம்தானே... இதோ ஓடி விடும்.

    பதிலளிநீக்கு
  11. புதிய பார்வை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. கண் ஆபரேஷன் நடந்துள்ளது என நான் சூடத்தை அணைத்து சத்தியம் செய்தாலும் பிறர் நம்பவே மாட்டார்கள். அந்த அளவுக்கு மிகவும் அழகாக கச்சிதமாக கண்பட்டுப் போகும்படி செய்து முடித்துள்ளார்கள். ///

    மருத்துவ முன்னேற்றத்தின் மகிமை ..

    விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்..!

    பதிலளிநீக்கு
  13. பூரண நலம் விரைவில் பெற எனது ப்ரார்த்தனைகள்....

    நீங்கள் மற்றவர் வலைப்பூவிற்கு இரண்டு மாதம் வர முடியாது என்றதால், நான் என் வலைப்பூவில் எழுதுவதை இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஒத்திப் போடுகிறேன்!! :-))

    பதிலளிநீக்கு
  14. மருத்துவர்கள் சொன்னதை கண்டிப்பாக கடைப்பிடியுங்கள் ஐயா. அதுவும் கண்ணுக்கு சொட்டு மருந்து வோடும் விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்.
    நான் என் மனைவியின் இரு கண்களிலும் நடந்த அறுவை சிகிச்சையின் அனுபவங்களினால் சொல்கிறேன்.
    தாங்கள் மீண்டும் பழைய நிலமைக்கு திரும்பி வருவதற்கு ஆண்டவனை பிராத்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. தாங்கள் முதலில் கண்களை பார்த்துக்கொள்ளுங்கள். பிறகு வலைப்பூவில் எழுதலாம்,படிக்கலாம்.

    தாங்கள் சீக்கிரம் குணம் அடைந்து, எழுதப்போகும் "புதிய பார்வையை" படிப்பதற்காக ஆவலாக காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  16. முதலில் கண்களை கவனித்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரத்திற்கு மேல் கணினி பயன்படுத்த வேண்டாம்.

    பதிவுகள் படிப்பதற்கு இரண்டு மாத கால தடையுத்தரவு என்பதை முழுதும் அமல்படுத்துவது தான் நல்லது. அப்போது தான் இரண்டு மாதங்களில் எல்லா பதிவுகளையும் தடையின்றி படிக்க முடியும்.

    இரண்டு மாதம் கழித்து வரப்போகும் உங்கள் பதிவுகளுக்காக நானும் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!

    // எனக்கு சமீபத்தில் கண் ஆபரேஷன் நடந்துள்ளது என நான் சூடத்தை அணைத்து சத்தியம் செய்தாலும் பிறர் நம்பவே மாட்டார்கள். அந்த அளவுக்கு மிகவும் அழகாக கச்சிதமாக கண்பட்டுப் போகும்படி செய்து முடித்துள்ளார்கள். //

    தங்களுக்கு கண் ஆபரேஷன் – இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாக அமைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

    // இவைகளால் எனக்கு ஏற்பட்ட தேவையற்ற பயங்கள் + மிகப்பெரிய அனுபவங்கள் அத்தனையும் சேர்த்து “புதிய பார்வை” என்ற தலைப்பினில் பிறகு ஒருநாள் ஓர் தொடர்க் கட்டுரையாக எழுதலாம் என நினைக்கிறேன். அந்தக்கட்டுரை என்னைப்போன்ற ஒரு சிலருக்கு மிகவும் பயன் தரக்கூடியதாக அமையும் என நம்புகிறேன்.//

    உங்கள் புதிய பார்வை அனைவருக்கும் பயன்படும். நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். டாகடர் சொன்ன ஆலோசனைகளை மட்டும் கடைபிடிக்கவும்.

    பதிலளிநீக்கு
  18. அன்புடையீர்.. வணக்கம்.
    தங்களுக்கு கண் ஆபரேஷன் – இறைவன் அருளால் நல்லபடியாக நடந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி.
    மருத்துவர்கள் கூறியபடி கண்களை கவனித்துக் கொள்ளுங்கள். நல்லபடியாக ஓய்வில் இருங்கள்..
    அதிக நேரம் கணினியை பயன்படுத்த வேண்டாம்.
    குருவருளும் திருவருளும் கூட இருந்து காத்து நிற்கும்.
    தங்களின் நலன் குறித்து வேண்டிக் கொள்கின்றேன்.
    வாழ்க வளமுடன்!..

    பதிலளிநீக்கு
  19. விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள் சார்... கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுங்கள்... பதிவுலகம் எங்கே போய்விடப் போகிறது..

    இரண்டு மாதங்கள் இதோ இதோ என்று ஓடிப் போய் விடும்... சொட்டு மருந்துகளை தவறாமல் விட்டுக் கொள்ளுங்கள்..

    பதிலளிநீக்கு
  20. விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  21. எல்லாம் நல்லபடி நடந்தேறியது படித்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. இரண்டு வருடம் முன்பு நானும் கண்புரை அறுவை சிகிச்சை வாசனில் செய்துகொண்டேன். ஒருவாரத்திற்குப் பிறகு வழக்கமான படிப்பைத் தொடர முடிந்தது. மூன்றுவாரம் கழித்துதான் கண்ணாடி எழுதிக் கொடுத்தார்கள். அதுதான் வழக்கமாம். கண்ணாடி வந்தபிறகும் கூட, ஒரு மாதம் கண்ணாடி இல்லாமலேயே என்னால் படிக்கமுடிந்தது. எனவே, தாங்கள் மீண்டும் எழுத விரைவில் வந்துவிடுவீர்கள் என்று என்னால் சொல்லமுடிகிறது. காத்திருப்போம்! மகிழ்ச்சியாக இருங்கள்!

    பதிலளிநீக்கு
  23. விஞ்ஞானமுன்னேற்றத்தால் குறைவான கால அவகாசத்தில் முழுமையான கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிந்தது என்றாலும் அதன் பிறகு நாம் கடைப்பிடிக்க வேண்டியவைகளை விடாமல் செய்யவேண்டியுள்ளது .கொஞ்ஜம் கஷ்டப்பட்டாவது கணிணி யை கையாலாமல் இருக்கும்படிகேட்டுக்கொள்கிறேன் ரெண்டு மாதங்கள் விரைவில் ஓடிவிடும் .பின் இருக்கவேஇருக்கு பார்த்துக்கொள்ளலாம் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  24. விரைவில் பழையபடி கண் பூரணமாக இயங்கிட வாழ்த்துக்கள் ஐயா. மருந்துகள் விட்டுக் கொள்தல் முக்கியம்;
    கண்களுக்கு முறையான ஓய்வு அவசியம்.
    இதைக் கருத்தில் கொண்டு, 2 மாதங்களுக்குப் பின் பதிவுலகத்தில் மறுபிரவேசம் செய்யலாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. அன்பின் வை.கோ - கண் சிகிட்சை வெற்றிகரமாக சிறப்புடன் நடந்து பூரண குணத்துடன் வீட்டிற்கு வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி - மருத்துவர்களீன் ஆலோசனைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் கடைப் பிடியுங்கள் - இணையத்தில் / தொலைக்காட்சியில் - மருத்துவர்கள் அளித்துள்ள 30 நிமிடங்களுக்கு மேல் செலவிடாதீர்கள் - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளீன் பரிபூர்ண ஆசிர்வாதமும் கருணையும் என்றும் தங்களுக்கு உண்டு.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  26. அன்பின் வை.கோ - கோமதி அரசுவின் மறுமொழியினை அப்படியே வரிக்கு வரி - சொல்லுக்குச் சொல் - சொற்றொடருக்குச் சொற்றொடர் - வழி மொழிகிறேன் - சிறந்த மறுமொழி - நல்வாழ்த்துகள் வை,கோ மற்ரும் கோமதி அரசு - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  27. வைகோ சார், முதலில் உங்கள் கண்ணைக் கவனியுங்கள். பிறகு பதிவுப் போடலாம். இன்றைக்கு மட்டுமே நான்கு பதிவுகள் வெளியிட்டிருக்கிறீர்களே ! கொஞ்சம் கவனமாய் இருங்கள்.

    நீங்கள் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல ஆண்டவனிப் பிரார்த்திக்கிறேன் .

    பதிலளிநீக்கு
  28. உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி
    இரண்டு மாதம் இரண்டு நொடியில் ஓடி விடு.ம்.
    கண் நலத்தை கவனித்துகொள்ளுங்கள்
    ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  29. Gopu Sir, Please take adequate rest. Though doctors allow you I still request you to keep yourself away from computers atleast in the first one month. It may be difficult but if you take adequate rest now, you can enjoy thoroughly in future.

    Good informative post which may benefit many. Take care sir. My Prayers are with you.

    பதிலளிநீக்கு
  30. Dear Gopu, V prey Almighty that U Get well Soon. Happy inspite of operation U have come on Blog. Best wishes for speedy recovery and want to see U in action soon.
    With love & Regards,
    Balu

    பதிலளிநீக்கு
  31. புதிய பார்வை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  32. இப்போதுதான் இந்தப் பதிவையே பார்த்தேன். ரொம்ப ஸந்தோஷம்.
    நல்லபார்வை.
    கொஞ்சம் பொருமையாக ப்ளாக் பக்கம் வாருங்கள். வாழ்த்துகள்
    அன்புடன்

    பதிலளிநீக்கு
  33. நன்கு ஓய்வெடுத்து வாருங்கள் சார். கண் ஆபரேஷன் பற்றிய தேவையற்ற பயத்தைப்போக்கும் விதமாக அமைந்து இருந்தது கட்டுரை.

    அன்புடன் தேனம்மைலெக்ஷ்மணன்

    பதிலளிநீக்கு
  34. இப்ப கண் பரி பூரண குணமாயிடுச்சா. எதுக்கும் ஸ்டெயின் பண்ணிக்க வேண்டாம் டேக் கேர். வேற என்ன சொல்றது தெரியல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 25, 2015 at 10:45 AM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

      //இப்ப கண் பரி பூரண குணமாயிடுச்சா. எதுக்கும் ஸ்டெயின் பண்ணிக்க வேண்டாம் டேக் கேர். வேற என்ன சொல்றது தெரியல.//

      சமயபுரம் மஹமாயி, குலதெய்வங்கள், கிராம தேவதைகள், இஷ்ட தேவதைகள் அருளாலும் + தங்களைப்போன்ற என் நலம் விரும்பிகளின் விசேஷப் பிரார்த்தனைகளாலும், என் இரண்டு கண்களுக்கும் [January 2014 for Left Eye & January 2015 for Right Eye] நல்லபடியாகவே முடிந்து பரிபூரண குணமாகியுள்ளது. புதிய பார்வையும் கிடைத்துள்ளது. இனிமேல் கண்ணாடியே ஏதும் அணிய வேண்டிய அவசியமும் இல்லை என்பதில் மிக்க மகிழ்ச்சியாகவே உள்ளது.

      கிட்டப்பார்வை, நடுத்தரப்பார்வை, தூரப்பார்வை அனைத்துமே படு ஷார்ப் ஆக அமைந்து விட்டதும்மா.

      தங்களின் அன்புக்கும் தனி அக்கறைக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்ம்மா. :)

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  35. பார்வை ஒன்றே போதுமே. பல்லாயிரம் கதை உருவாகுமே.

    கண்ணுதான் சரியாயிடுத்து இல்ல. புது சிறுகதையெல்லாம் எடுத்து உடுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 26, 2015 at 4:12 PM

      //பார்வை ஒன்றே போதுமே. பல்லாயிரம் கதை உருவாகுமே.

      கண்ணுதான் சரியாயிடுத்து இல்ல. புது சிறுகதையெல்லாம் எடுத்து உடுங்க.//

      சரி .... சரி .... நீண்ட ஓய்வுக்குப்பின் முயற்சிக்கிறேன் .... பார்ப்போம், ஜெ.

      நீக்கு
  36. கண்ணு ஆபரேசனா பண்ணிகிட்டீக இப்ப நல்லா சரி ஆயிட்டா. கம்ப்யூட்டரில நெறய நேரம் வேல பாக்காதீங்க

    பதிலளிநீக்கு
  37. ஒருகண் ஆபரேஷனுக்கும் இரண்டாவது கண் ஆபரேஷனுக்கும் நீண்ட இடை வெளி அவசியமா என் அத்தை வாசன் ஐ (ஹை) கேர் சென்டரில் இதுபோல பண்ணிக்கொண்டார்கள் முதல்நாள் வலது கண் மறுநாளே இடது கண் நீங்க சொன்னதுபோலதான். இப்ப ஏதும் ப்ராப்ளம் இல்ல. கண்ணாடியும் தேவை இல்ஸை அவங்க வயசும் 68.

    பதிலளிநீக்கு
  38. கண்களுக்கு ஓய்வு கட்டாயம் கொடுங்கள்! விரைவில் குணமடைந்து மீண்டும் கலக்குவீர்கள்!

    பதிலளிநீக்கு
  39. இந்த மாதிரி பல்லுக்கு ஏதாவது இருக்கா,பாஸ்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https://gopu1949.blogspot.com/2014/07/vgk-26.html

      My own experiences are well written in the above Link.

      நீக்கு
    2. You may also like to go through the following Links:

      https://gopu1949.blogspot.com/2014/07/vgk-26-03-03-third-prize-winner.html

      https://gopu1949.blogspot.com/2014/07/vgk-26-02-03-second-prize-winners_26.html

      https://gopu1949.blogspot.com/2014/07/vgk-26-01-03-first-prize-winners.html

      https://gopu1949.blogspot.com/2014/07/blog-post.html

      https://gopu1949.blogspot.com/2014/07/blog-post_28.html

      https://gopu1949.blogspot.com/2014/07/blog-post_29.html

      நீக்கு