என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 25 ஜனவரி, 2014

VGK 01 / 01 / 03 ] FIRST PRIZE WINNER "ஜாங்கிரி”





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்

கதையின்  தலைப்பு 

VGK 01 ] ஜா ங் கி ரி



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
கணிசமான எண்ணிக்கையில் பலரும், 
மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 
வெகு அழகாக விமர்சனங்கள் 
எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் என் 
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 

நடுவர் அவர்களால் பரிசுக்குத் 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
விமர்சனங்கள் மூன்று. 


 

 


இந்தப் பரிசுகளை வென்றுள்ள மூவருக்கும் 
நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். 

   


மற்றவர்களுக்கு:  
BEST OF LUCK NEXT TIME !



    

முதல் 
’ஜாங்கிரி’யை 
{பரிசினை }
வென்றுள்ளவர்:-



திரு. ரமணி அவர்கள்
yaathoramani.blogspot.com
’தீதும் நன்றும் பிறர் தர வாரா...’



மனம் நிறைந்த 
பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.




முதல் பரிசினை வென்றுள்ள விமர்சனம்:



இனிப்பான தலைப்பில் வாழ்வின் விளிம்பு நிலை
மனிதர்களின்  கசப்பான வாழ்வை கோடிட்டுக்
காட்டிப் போகும் "ஜிலேபி " சிறுகதை மிக மிக அருமை

சிறு பின்சுவர் கட்டமுடியாமல் தினம் கட்டிட
வேலைக்குப் போகும் கொத்தனாரும்
வண்ண வண்ண ஆடைகளைத் தைத்துக் கொடுத்தும்
ஒரு எளிய கதர் ஆடையில் திரியும் தையல்காரரும்
வருடம்முழுவதும் பட்டாசு ஆலையில்
கந்தகத்தில் வெந்தும் தீபாவளிக்கு முதல் நாள் தரும்
ஒரு சிறு பட்டாசு பண்டலுக்காகக் காத்திருக்கும்
தொழிலாளியும் நமக்கு அதிகம் பழக்கப்பட்ட அளவு
இந்தச் சமையல் நாகராஜன்கள் நமக்குப்
பழக்கப்படச் சாத்தியமில்லை

அதனால்தான் பொதுவாகவே தண்ணீரில் கிடக்கும் தவளை
தண்ணீர் குடித்ததா இல்லையா என யார் கண்டது
எனப் பழமொழி சொல்லுகிறமாதிரி இந்த
அடுப்படிப் பணியாளர்கள் எல்லாம் சாப்பிட்டிருப்பார்களா
சாப்பிட்டிருக்கமாட்டார்களா என்கிற
சிறு சந்தேகம் கூட நமக்கு வருவதில்லை
நாமாகவே அவர்கள் திட்டவட்டமாக சாப்பிட்டிருப்பார்கள்
என்கிற முடிவுக்கே பல சமயங்களில் வந்து விடுகிறோம்

வேலை அலுப்பில் தொடர் வேலையில் அல்லது
சமையல் வாடை தொடர்ந்து முகத்திலடிக்கிற எரிச்சலில்
அவர்கள் பெரும்பாலான சமயங்களில் விஷேஷ வீடுகளில்
முறையாகச் சாப்பிடுவதே இல்லை.
பல சமயங்களில் கொஞ்சம் சோற்றை மட்டும் போட்டு
அனைத்து காய்கறிகளையும் சாம்பார் ரசம் அனைத்தையும்
போட்டுக் கலந்து கலவையாக இரண்டு மூன்று
கவளங்கள் மட்டும் சாப்பிடுவதை பல
சமயம் நானே பார்த்திருக்கிறேன்

சமையல் நாகராஜன்களே இப்படி எனில் சுவீட் போடும்
நாகராஜன்களை சொல்லவேண்டியதே இல்லை
அதுவும் வறுமையில் செம்மை என்பதே சிறப்பு என
தன்மானமும் கொஞ்சம் கூடிவிட்டால் நாகராஜன்களின் பாடு
ஜிலேபி  கதை நாயகன் நாகராஜன் மாதிரி அதோ கதிதான்

அதை மிகச் சரியாக உணர்ந்து வடித்த இந்தக் கதை
என்னை அதிகம் கவர்ந்ததில் ஆச்சரியமே இல்லை

ஒரு கருத்தைச் சொல்ல நிகழ்வைத் தேடுவது
அல்லது தன்னைப் பாதித்த நிகழ்வை ஒரு கருத்தோடு
இணைத்துத் தர ஒரு கதை செய்வது என இல்லாமல்
இப்படி நிகழ்வும் கருத்தும் மிகச் சரியாக இணையும்படியாக
கதை எழுதுதல் என்பது  அதுவும் சிறுகதை எழுதுவது
என்பது சாதாரண விஷயமேயில்லை.

அதுவும் காதாபாத்திரத்தை உயர்த்திச் சொல்லவேண்டும்
என்ற எண்ணத்தில் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்கிற
ஆரம்பத்திலேயே கோவில் குளம் சாமிபடம் முன்பு எனச்
சொல்லாமல் திண்ணையில் வெட்டி ஆபீஸர்கள் எல்லாம்
சீட்டாடிக் கொண்டிருப்பதைச் சொன்னவிதமும்
சீட்டில் அவர் கெட்டிக்காரத்தனத்தைச் சொன்னவிதமும்
இயற்கையாக இருந்ததோடு இல்லாமல் மிகச் சரியாக
அந்தக் கதாபாத்திரத்தின் சாமர்த்தியத்தையும் (?) மிகச் சரியாக
நாம் புரிந்து கொள்ள உதவுகிறது

தன் கதாபாத்திரத்திற்கு அதன் உணர்வுக்கு வலு சேர்க்க
வேண்டும் என்பதற்காக எதிர் கதாபாத்திரங்களின்
தன்மையைக் குறைக்கும் வேலைப்பாட்டைச் செய்யாதது
என்னை இந்தப் படைப்பில் மிகக் கவர்ந்தது

இயல்பாக சமையல்காரரின் நோக்கத்தில் இல்லாமல்
நம்முடைய சுய நல எண்ணத்திலேயே இரண்டு
பாராட்டு வார்த்தைகளை சம்பிராதயத்துக்குப்போட்டுவிட்டு
அடுத்த விசேஷத்திற்கு நீங்கள்தான் என
பொய்யான உறுதி மொழியைக் கொடுத்திவிட்டு
வேலையாளின் கூலியைக் குறைக்க முயலும் அல்பத்தனம்
நம் அனைவரிடத்தும் உண்டு

நல்ல வேளை அந்த அளவு மோசக்காரராக
அந்த விஷேஷ வீட்டுக்காரர் இல்லையென்றாலும் கூட
தன் சுயநல நிலையில் இருந்தே  நாகராஜனை டீல்
செய்கிற விஷயம் என்னை மிகவும் பாதித்தது

வியர்வை காயும் முன் கூலி கொடுப்பது சிறந்ததுதான்
சரியான கூலி கொடுப்பதும் மிகச் சிறந்துதான்
ஆயினும் அவன் உழைப்பைக் கௌரவப்படுத்தும்படியாகக்
கொடுக்கவேண்டும் என்கிற எண்ணத்தை இந்தக் கதை
என்னுள் விதைத்துப் போனது

நிச்சயம் படிப்பவர்கள் அனைவரின் மனங்களிலும்
விதைத்துப் போயிருக்கும்

ஒரு படைப்பின் வெற்றி என்பது வாசகனை
தன் இருப்பு நிலையில் இருந்து கொஞ்சம் இதுபோல்
மேல் நோக்கி உயர்த்துவது என்பதல்லாது
வேறு ஏதாயிருக்க முடியும் ?

ஒரு படைப்பாளி வாசகனிடம் ஏற்படுத்த முயல்கிற பாதிப்பினை

அந்தப் பாதிப்பினை மிகச் சரியாகச்
சுட்டிக் காட்டி தன்னுள் அது நேர்ந்தது என
ஒரு வாசகன் சொல்வதை விட

ஒரு படைப்பாளிக்கு
அதிக மகிழ்வும் உற்சாகமும் தருவது
வேறு  ஏதாயிருக்க முடியும் ?

வாழ்த்துகள் வை.கோ. சார்


    

மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.

போட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள் 
பற்றிய விபரம் இன்றே  தனித்தனிப்
பதிவுகளாகத் தரப்பட்டுள்ளன.


அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 
உற்சாகத்துடன் பங்கு கொண்டு 
சிறப்பிக்க வேண்டுமாய் 
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான இணைப்பு: 



விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
வரும் வியாழக்கிழமை 30.01.2014  
இரவு 8 மணிக்குள் [I.S.T]





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


28 கருத்துகள்:

  1. அன்பின் வை,கோ - விமர்சனம் அருமை

    அன்பின் இரமணி - கதை விமர்சனம் அருமையிலும் அருமை - கதையைப் பற்றியும் குறிப்பாக கதாபாத்திரத்தைப் பற்றியும் விளக்கமாக விமர்சனம் எழுதியமை நன்று - முதல் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  2. ரமணி சாருக்கு என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. முதல் பரிசினை வென்ற ரமணி சார் அவர்களுக்கு வாழ்த்துகள்...தங்களது விமர்சனம் மிகவும் அருமையாக உள்ளது..

    பதிலளிநீக்கு
  4. இனிய வாழ்த்து அனைவருக்கும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  5. முதல் ’ஜாங்கிரி’யை {பரிசினை } வென்றுள்ள திரு. ரமணி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  6. மிக சிறந்த விமர்சனம்.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. என் மனங்கவர்ந்த படைப்பாளி ரமணி சார் அவர்களுக்கு முதல் பரிசு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நேர்த்தியான அவரது விமர்சனம் அடுத்தடுத்தப் போட்டிகளில் பங்குபெறவிருப்பவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. பரிசு பெற்ற ரமணி சாருக்குப் பாராட்டுகள். உடனடியாக பரிசுகளை அறிவித்ததோடு பரிசு பெற்ற விமர்சனங்களையும் வெளியிட்டு மற்றவர்களுக்கு ஊக்கம் தரும் தங்களுக்கு மிக்க நன்றி வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
  8. ஒரு படைப்பின் வெற்றி என்பது வாசகனை
    தன் இருப்பு நிலையில் இருந்து கொஞ்சம் இதுபோல்
    மேல் நோக்கி உயர்த்துவது என்பதல்லாது
    வேறு ஏதாயிருக்க முடியும் ?//

    அருமையான விமர்சனம் ரமணி சார்.
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
    நடுவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. எவ்வளவு அழகான விமரிசனம். விமரிசனம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள முடிந்தது.
    வாழ்த்துகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  10. நல்வாழ்த்துகள் ரமணி ஸார் !

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    ஐயா..

    தங்களின் இந்த முயற்சி.. வலையுலக நண்பர்களை இன்னும் எழுத தூண்டும் என்பதில் ஐயமிலை... தங்களின் சேவை தமிழுக்கு என்றென்றும் தொடரட்டும்
    -----------------------------------------------------------------------------------------------------
    முதலாவது பரிசு வென்ற (திரு ரமணி(ஐயா) அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
    -----------------------------------------------------------------------------------------------------

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. மிகச் சிறப்பான ஒரு விமர்சனம். முதல் பரிசு பெற்ற ரமணி ஜி அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. மிகச்சிறப்பானதொரு விமர்சனம்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. கதையை அருமையாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். ரமணி சாருக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. முதல் பரிசினை வென்ற கவிஞர் ரமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. முதல்பரிசு வென்றுள்ள ரமணி அவர்களுக்கு என்வணக்கங்கள்.விமர்சன நடை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. திரு. ரமணி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  18. திரு. ரமணி அவர்கள் மிக அழகாக விமரிசனம் எழுதியிருக்கிறார்கள். பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. முதல் பரிசினை வென்ற ரமணி சார் அவர்களுக்கு வாழ்த்துகள.

    பதிலளிநீக்கு
  20. திரு ரமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பரிசு அவருக்கு கிடைச்சுடுத்து. நான் அந்த ஜாங்கிரித் தட்டை மட்டும் எடுத்துக்கறேனே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 26, 2015 at 4:14 PM

      //திரு ரமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

      பரிசு அவருக்கு கிடைச்சுடுத்து. நான் அந்த ஜாங்கிரித் தட்டை மட்டும் எடுத்துக்கறேனே.//

      :) தாராளமா எடுத்துக்கோங்கோ. :)

      நீக்கு
  21. ரமணி சார் அவங்களுக்கு வாழ்த்துகள். வரிக்கு வரி கதய விமரிசனம் செய்திருக்காக

    பதிலளிநீக்கு
  22. திரு ரமணி சார் அவர்களுக்கு வாழ்த்துகள் கதையைப்பற்றியும் கதா பாத்திரங்கள் பற்றியும் நன்கு அலசி ஆராய்ந்து விமரிசனம் எழுதி இருக்காங்க. அவரின் அபார வாசிப்புத் திறமை நன்கு புரிகியது.

    பதிலளிநீக்கு
  23. புள்ளையார் சுழியே ரமணி சார்தானா!!! வாழ்த்துகள். மிகவும் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  24. விரிவான அலசல்! திரு ரமணி சார் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு