என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

105 / 1 / 2 ] கசையடிகளும் மறு பிறப்பும் !

2
ஸ்ரீராமஜயம்
சித்தம் சுத்தமாவதற்கு ஆகாரம் சுத்தமாயிருப்பது மிக அவசியம். 

பல இடங்களில் பலவிதமான பொருள்களைத் தின்பதே இன்றைய மனக் கோளாறுகளுக்கும் முக்கியமானதொரு காரணம்.

இறைவன், நாம் பண்ணிய பாபங்களை அனுபவிக்க உடம்பைக் கொடுத்து துன்பங்கள் என்ற கசையடிகளைக் கொடுக்கிறார். 

இந்த உடம்பு இதற்குமேல் தாங்காது என்று அவர் நினைக்கிற கட்டத்தில் சாவை அனுப்பி அப்போதைக்குத் தூங்கப்பண்ணி விடுகிறார். 

சிறிது நேரம் அவரிடம் லயிப்பு. 

அப்புறம் அதே உயிரை வேறெங்கோ மீண்டும் பிறப்பிக்கிறார்.


சிக்கனமாய் இருப்பது கருமித்தனம் அல்ல.  சொந்த விஷயத்தில் படாடோபம் இல்லாமல் கணக்காய் இருப்பதுதான் சிக்கனம்.

oooooOooooo

[ 1 ]

கைங்கர்யத்துக்கு ஓய்வூதியம்


1952 வரை மடத்தில் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்த ஒரு 
பெரியவரின் பெயர் பஞ்சாபகேசன்பெரியவாளுடைய 
கைங்கர்யம்தான் வாழ்க்கை என்று இருந்த பெரிய பக்தர்

தள்ளாமையினால் மடத்திலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு 

பெரியவாளை  பிரிய மனசில்லாமல் தஞ்சாவூரில் உள்ள 
பிள்ளையிடம் வந்தார்உடல்தான் தஞ்சாவூரில் இருந்ததே 
ஒழியமனஸ் பூரா பெரியவாதான்எனவே தஞ்சாவூரிலும் 
ஏதோ பெரியவா கைங்கர்யம் என்று பண்ணிக் 
கொண்டிருந்தார்

பிள்ளையாண்டான் கேட்டான் 

ஏம்பாஉங்களுக்கு எப்போப்பார்த்தாலும் 
பெரியவா சேவைதானாநீங்க படிச்ச படிப்புக்குஅப்போவே 
ஏதாவது சர்கார் உத்தியோகம் பார்த்துண்டு இருந்தா......... இப்போ பென்ஷனாவது வந்துண்டுஇருக்கும்...... உங்க செலவுக்கு அது 
useful ஆக இருக்கும் இல்லியா?" 
என்றான்.

பஞ்சாபகேசன் பதறிப் போனார்!! 

"சிவ சிவா!!அவருடைய உடல் ஒருமுறை நடுங்கியது
பேசக் கூட முடியலை. .....

"பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்ண குடுத்து 

வெச்சிருக்கணும்டா !......
நேக்கு அந்த பாக்யம் கெடச்சதுஅவர் பக்கத்துலேயே இருந்து 
கைங்கர்யம்  பண்ணினேன்

நான் ஒண்ணு கேக்கறேன்.....  

அதுனாலநீங்கள்ளாம் என்ன கெட்டுப் போய்ட்டேள்
எல்லாரும் life   நன்னாத்தானே இருக்கேள்நமக்கெல்லாம் 
என்ன கொறைசொல்லு.....
இப்பிடி ஒரு குறையும் இல்லாமப் பாத்துக்கறதே என் 
பெரியவாதாண்டா........" ஆவேசமாகச் சொன்னார்.

"
இல்லேப்பா....... சர்கார் உத்யோகம்னாபென்ஷன் 

வந்திருக்குமேன்னு ஒரு ஆதங்கத்ல சொன்னேன்" 
பையன் பேச்சை முடித்தான்.

கொஞ்சநாள் கழித்துஏதோ கார்யமாக காஞ்சிபுரம் 

போனான் மகன்


வரிசையில் இவன் முறை வந்ததும், "நீ பஞ்சாபகேசன் புள்ளைதானே?" என்றார் பெரியவா.

"ஆமா........பெரியவா"

"
ஒன் தோப்பனார் நன்னா இருக்காரா

என்கிட்டே அவருக்கு எவ்வளவு ஆத்மார்த்தமான ப்ரியம்
பக்தி தெரியுமோ
அவர நன்னா......வெச்சுக்கோ
என்ன செய்வியாஇந்த மடத்ல கைங்கர்யம் 
பண்ணறவாளுக்கெல்லாம் நெறைய பண்ணனும்னு 
எனக்கும் ஆசைதான்...... 
ஆனாஎன்னால ஜாஸ்தி பண்ண முடியறதில்லை
குடுக்கறவா என்ன குடுக்கறாளோஅத வெச்சுண்டு இந்த 
மடத்த நடத்த வேண்டியிருக்கு

இது "சர்க்கார்ஆபீஸ் இல்லையோல்லியோ

அதுனாலஎல்லாரும் நன்னா இருக்கணும்னு அனவரதமும் 
காமாக்ஷியை  ப்ரார்த்திச்சுக்கறதைத் தவிர என்னால வேற 
என்ன செய்ய முடியும்

ஆனா....ஒன் தோப்பனார் இந்த மடத்ல பண்ணின 

கைங்கர்யத்துக்கும்பக்திக்கும் அவருக்கு எதாவது 
பண்ணனும்னு எனக்கு ஆசை.. ... ....

அதுனால மாஸாமாசம் 25 கலம் நெல்லு அவருக்காக 

அவர் இருக்கற கிராமத்துக்கே வரதுக்கு ஏற்பாடு 
பண்ணியிருக்கேன்.....  பென்ஷன்  ....னா!!" 

என்று முடித்தாரோ இல்லையோமகன் தடாலென்று பெரியவா 

முன் சாஷ்டாங்கமாக விழுந்து கதறி விட்டான்.

"
சர்வேஸ்வரா ! எங்கப்பாகிட்ட ஒரு ஆதங்கத்துலதான் 

பேசினேனே ஒழியஅவரோட கைங்கர்யத்தைப் பத்தி நான் 
கொறையே சொல்லலை பெரியவா....
என்னை மன்னிச்சுடுங்கோ!"

"
ஒன்னை நான் கொறையே சொல்லலை........ப்பா ! 

என்னால பெருஸா எந்த ஒதவியும் 
பண்ணமுடியலை... ன்னுதான் 
இந்த சின்ன ஒத்தாசைக்கு வழி  பண்ணினேன்"

அப்பா பண்ணிய சேவையே "போறும்என்று கூறிய மகன்

அது முதல் பெரியவாளுக்கே அடிமையாகிஅவர் கைங்கர்யமே 
மூச்சாக வாழ ஆரம்பித்தார்!

oooooOooooo

பெரியவா அருகில் இருந்து பண்ணும் சேவையும் பாக்யம்தான்
எல்லோரும் அவர் அருகிலேயே இருந்துவிட்டால்............? 

எப்போதும் நம் உள்ளே இருக்கும்அந்தர்யாமியான மஹா 
பெரியவாளுக்குஸத்யம்சகல ஜீவதயைபக்தி  என்ற 
கைங்கர்யத்தை பண்ணுவதும் பாக்யம்தான்.

[Thanks to Mr. Varagooran Narayanan]

oooooOooooo

[ 2 ]

’பெரியவாள்’, பெரிய ’வால்’, பெரிய ’வாள்’ ?

பெரியவாளின் கேள்விகளும் ரா.கணபதியின் விளக்கங்களும் அருமை.

"பெரியவால்" என்று கூட சொல்லலாம். சின்ன பசங்க குறும்பு செய்தால் சின்னவால். பெரியவங்க குறும்பு செய்தால் பெரியவால்.  
சில சமயம் மஹாபெரியாவாள் கேட்கிற கேள்விகளில் குறும்புத்தனம் கூட இருக்கும்.அது கூட பக்தர்களின் படிப்பினைக்கே. அதனால் பெரியவால்" என்று கூட இருக்கலாம். அவர் கூறியது, நினைத்தது, செய்தது எல்லாம் உலகத்தின் நன்மைக்கே.
...

"பெரிய வாள்" பெரியவா தன்னைப்பற்றி நகைச்சுவையா சொன்னதும் ரா.கணபதியின் சாதுர்யமான பதிலும். 

ஒரு நாள் ரா. கணபதியிடம், பெரியவா, "என்னை ஏன் எல்லாரும் பெரியாவா"ன்னு சொல்றா? எனக்குப் பெரிய வாயா இருக்கு? இல்லைனா, வரவாகிட்டே ஓயாமல் பேசறேனே... அதனால் ஓட்டைவாய் என்று இப்படிப் பேர் வெச்சுட்டாளா?" என்று கேட்டாராம். 

அதற்கு கணபதி, "ஆமாம்...இருப்பதிலேயே மஹாவாக்கியத்தை உபதேசிக்கும் வாய் பெரியவாளுக்கு இல்லையா... அதனால் "பெரிய வாய்"என்றார். 

"சிலர் 'பெரியவாள்'னு சொல்றாளே! அதுக்கு அர்த்தம் என்ன? வாள் போல அறுக்கிறேன், போர் அடிக்கிறேன் என்பதா?" என்று கேட்டாராம். 

"ஆமாம் நீங்க பெரிய வாள்தான்!. இந்த வாள், தங்களிடம் வரும் பக்தர்களின் காமம், குரோதம், கோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற எல்லாக் குற்றங்களையும்,அறுத்துத் தள்ளுகிறதே. அதான் "பெரிய வாள்" என்கிறார்கள்!" என்றார் கணபதி.


Thanks to Mrs. Hemalatha Mohan and Mr. M J Raman [Manakkal] 
now at Mumbai for sharing this with me on 14/12/2013.

oooooOooooo

[ 3 ]


கடமை மறந்து கண்டபடி ஆட்சி செய்த ஒரு நாட்டின் மன்னனை கவிஞர் ஒருவர் மனம் திருந்த வைத்த வித்தியாசமான கதையை இங்கே அழகாகச் சொல்கிறார் மஹாபெரியவா.


'மஹிஷ சதகம்’'ஷாஹஜின்னு ஒரு ராஜா. அவர் காலத்துல, 'குட்டிக்கவி’ன்னு ஒருத்தர் இருந்தார். பெயர்ல மட்டுமில்ல, வயசுலேயும் அப்ப அவர் குட்டியாக் குழந்தையாத்தான் இருந்தார்.ஷாஹஜிக்கு அப்புறம் அவருடைய பிள்ளை ப்ரதாப ஸிம்ஹன் ராஜாவானான். ராஜ்ய நிர்வாஹத்தைத் திறம்பட நடத்தி வந்த முக்ய அதிகாரிகளான நானாஜி ப்ரபு, சந்தர பானு, ஆனந்தராயர் முதலான பெரியவர்கள் கால க்ரமத்தில் காலமாகிவிட்டார்கள். நல்லவனான ப்ரதாப ஸிம்ஹன் துரதிருஷ்டவசமாக கல்வி, கேள்விகள் இல்லாத சில சில்லறை ஆஸாமிகளின் வசப்பட்டுவிட்டான். அவர்களை ஆலோசகர்களாக வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்ததில் ஆட்சி சீர்குலைந்து, அவனது சோணாட்டு மக்கள் பலவிதத்தில் கஷ்டப்படும்படி ஆயிற்று.அப்போதுதான் ராஜாவை தைர்யமாக இடித்துரைக்க வேண்டுமென்று குட்டிகவி ஒரு காவியம் எழுதப் புறப்பட்டார். இப்போது 'குட்டி’யாக இல்லாமல் நல்ல வயஸு வந்தவராகவே அவர் ஆகியிருந்தார். 

மன்னனை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்த குட்டிகவி, இக்காலத்தில் satire என்றும் irony என்றும் சொல்கிறார்களே... மறைமுகமாக, ஹாஸ்ய ரஸத்தோடு குத்திக்காட்டி எழுதுகிறார்களே... அப்படி ஒரு காவியம் எழுதுவது என்று ஆரம்பித்தார். இப்படி எழுதுவதை 'சலோக்தி’ என்பார்கள். வெளியிலே ஒன்றைச் சொல்லி உள்ளே இன்னொன்றை உணர்த்துகிற முறையையும் கையாண்டார். இந்த அணிக்கு 'அந்யாப தேசம்’ என்று பெயர். 

இக்காலத்திலே கார்ட்டூன் என்று போடுகிறார்கள். அதில் மநுஷர்களையே மிருகங்கள் மாதிரி கூடக் கேலியாகச் சித்திரிக்கிறார்கள். குட்டிகவி வார்த்தையாலேயே கார்ட்டூன் போட்டார்.

அந்த நூல் இப்போதும் இருக்கிறது. நூறு ச்லோகம் கொண்ட அதற்கு 'மஹிஷ சதகம்’ என்று பெயர். எருமையை ஸ்தோத்ரம் பண்ணும் நூறு பாட்டு என்று புரிகிற தோல்லியோ? தலைப்பிலேயே பரிஹாஸமாக இடித்துச் சொல்லுதல்!

'மஹிஷி’ என்று ராணிக்குப் பெயர் இருக்கிறது. 'பட்டமஹிஷி’ என்கிறோம். ஆனால் ராஜாவுக்கு 'மஹிஷன்’ என்று பேரில்லை. 'மஹி’ என்றால் பூமி என்பதை வைத்து 'மஹீசன்’ 'மஹிபதி’ என்றுதான் பெயர்கள் இருக்கின்றன.

குட்டிகவி, மஹிஷ சதகம் பண்ண ஆரம்பித்து விட்டார். அவர் 'சதகம்’ பண்ணத்தான் நினைத்தாரோ அல்லது 'ஸாஹஸ்ரீ’யாக ஆயிரம் ச்லோகம் பண்ண நினைத்தாரோ? கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோகம் பண்ணிப் பண்ணி, அவற்றை ராஜாவுக்கே அனுப்பிவைத்தார்.

அதன் ஸப்ஜெக்ட்டைச் சுருக்கமாகச் சொன்னால்... அஸத்தானவர்களைத் தன் பையில் வைத்துக்கொண்டு, அவர்களுக்கு 'ஆமாம் பூசாரி’ போடுகிற ஒரு ராஜாவுக்கு ஸேவகம் செய்து பிழைப்பதைவிட, ஒரு எருமைக்கடாவை வைத்துக் கொண்டு, அதனால் 'உழுதுண்டு வாழ்வதே மேல்’ என்பதுதான்! உழுதுண்டு வாழ்வதற்காக எதை ஏரிலே பூட்டிப் 'பின் செல்கி’றோமோ, அந்த எருமையையே 'தொழுது’ ஸ்துதிப்பதாகத்தான் ஸ்லோகங்கள் செய்தார்.

அதிலே இரண்டே இரண்டின் தாத்பர்யத்தை மட்டும் சொல்கிறேன்.

''மஹா பண்டிதரான ஸ்ரீதரர் தம் வித்யையைக் காசுக்கு விற்கிறார். ஷட்-தர்சனம் கற்ற அம்பு தீக்ஷிதர், சோற்றுக்குத் தாளம் போடுகிறார். ஷட்-தர்சனமாவது... சை! க்யாதி வாய்ந்த குட்டிகவியுங்கூட துஷ்ட தனிகரின் வாசலில் காத்துக் காத்து ஓய்ந்து போய்த் தூங்கி விழுந்துவிட்டார். இத்தனையும் எதனால்? மஹிஷேச்வரனான எருமைக் கடவுளான - உன்னை அநுஸரித்து ஆச்ரயிக்காத துர்பாக்யத்தின் பலன்தான்!'' என்று ஒரு ஸ்லோகம்.

இன்னொன்றில், ”எருமையே! ராப் பகலாக நிலத்தை உழுது உழுது ஏன் கஷ்டப்படுகிறாய்? இப்போது ராஜஸபையில் இருப்பவர்களோடு நீயும் சேர்ந்து ஸுகஜீவனம் பெறலாமே! 

'எனக்கு அறிவில்லையே, ஸாமர்த்யமில்லையே!’ என்றெல்லாம் வீணுக்கு அலட்டிக் கொள்ளாதே! தற்போதைய ஸபாக்காரர்களோடு பார்த்தால் உன்னை ப்ருஹஸ்பதி என்றே சொல்லணுமாக்கும்!'' என்கிறார்.

இவர் அனுப்ப அனுப்ப ஸ்லோகங்களைப் பார்த்துக் கொண்டே போன ராஜாவுக்கு - அவனும் உள்ளூர நல்ல ஸ்வபாவமுள்ளவன் என்றேனே... அதனால், மனஸிலே நன்றாகத்தைத்து, தான் பண்ணுகிறது தப்பு என்று உணர்ந்தான்.

ராஜரீக ஹோதாவைப் பார்க்காமல் ப்ரதாப ஸிம்ஹன் குட்டிகவியிடம் போய், தனக்கு நல்லறிவு பிறந்துவிட்டதாகவும், ஞான சூன்யமான ஸ்வய நல கோஷ்டியை நீக்கிவிட்டு, விஷயமறிந்த ஸத்துக் களை ஆலோசகர்களாகப் போட்டுக்கொண்டு ஆட்சி நடத்துவதாகவும் வாக்குக் கொடுத்தான். தேசத்துக்கு உபகாரமாகத் தாம் எடுத்துக்கொண்ட காரியம் பலிதமானதில் குட்டிகவி ஸந்தோஷம் அடைந்தார்.

அதோடு, அவர் தாம் கவனம் செய்து கொண்டிருந்த பரிஹாஸ காவியத்துக்கும் 'ஃபுல் ஸ்டாப்’ போட்டுவிட்டார். அதுவரை ஸரியாக நூறு ஸ்லோகங்கள் ஆகியிருந்ததால் 'மஹிஷ சதகம்’ என்று அதற்குப் பெயர் கொடுத்து வைத்து விட்டார்.

'ராஜாதான் திருந்திவிட்டானே, ஏன் அந்த ச்லோகங்களைக் கிழித்துப் போட்டிருக்கக் கூடாது?’ என்றால், 'ராஜாவையுங்கூட ஒரு கவியானவன் அடக்கி நல்வழிக்குக் கொண்டு வரமுடியும். நாட்டை அடக்கி, ஆள்கிற வனுக்கும் மேலான சக்தியைக் கவி நிஜமாகவே பெற்றவன்’ என்பதற்கு ப்ரத்யக்ஷ நிரூபணமாக இந்தக் காவியம் இருந்து கொண்டிருக்கட்டும் என்றே கிழித்துப் போடாமல் வைத்துவிட்டார். 

வருங்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கும் ஒரு பாடமாக- எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று வைத்துவிட்டார்.

ராஜாவும் அந்தச் சுவடிகளை confiscate பண்ணுவது, proscribe பண்ணுவது என்று பறிமுதல், தடை செய்யாததையும் இங்கே சொல்லவேண்டும்.'

ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

[Thanks to Amritha Vahini 31.12.2013]oooooOooooo

[ 4 ]

“Are you Raji’s son?”

This little boy was just furious after playing “goli” with his friend on the streets of Kulithalai after some argument on who won and who didn’t. 
Just about to leave that place, he sees a pallaku coming and one man running towards him and asked, “come here…you’re being called”. 
Confused little boy goes near and sees someone sitting with vibuthi smeared all over Him with rudraksha etc.
HE asks the boy, “Are you Raji’s son?”
Going back in his mom’s history, she was named by Periyava as “Rajarajeswari” – later he okayed her name to be “Rajalakshmi” to stick with Madhwa  Tradition. This boy doesn’t know any of these… He just remembers very few people calling her with that name.
Then HE asks the boy to bring His mom. He runs to his house and tell his mom, “there is someone with no hair on his head sitting in some stuff and people are carrying him… he wants me bring you to him… come”. The mother is now confused. 
As she leaves the house, she sees the pallaku outside of the house in that small street and sees Mahaperiyava sitting inside…. 
 
Tear rolls on her cheeks and doing namaskaram…. 
She could not speak…. Now this boy understands that this person must be something different…. Slowly fear starts to rise…
Periyava asks, “How are you? Is he your son?”
She responds with little sadness on her voice, “yes…life is going on….” Her sadness is due to the loss of her brother/someone close in the family….
“Life has to move on….. Don’t worry…. things will be alright…. have you done upanayanam to this boy?”
She nods negatively.
“Do it next year… you all will live happily… kshemama iruppel”. [”க்ஷேமமா இருப்பேள்”]
Periyava knows this family’s royal background and what they have contributed to the society etc. Blesses the family with both the hands… 
HE hands out a silver dollar with Lord Anjaneyar on one side and Kamakshi on other side… What a blessing to her and this boy! While 1000s of people waited to get blessing, he is being called to be blessed!!
I have always believed that if Periyava had said someone “kshemama iruppel” – that is it…. It is final!  It has to happen and will happen. 
This little boy is none other than one of my two bosses and my good friend – Radhakrishna Rajagopalan (Radha).
Radha is a very successful person in life…. Radha is not an average boss but an industry leader in business intelligence area – managing a billion dollar practice. A genius in technology and database… He works 18+ hours daily; travels all around the world – super busy.. Yet a humble man, who believes that whatever money he has doesn’t belong to him; it belongs to Periyava… He has kind heart and helps noble causes in a discreet way… It is still surprising when he tells me that he reads almost all of the postings in the blog – not sure where he finds time – that shows his bakthi towards Periyava. 
Even today, He prays to the silver coin daily regardless of how little time he has. Glad to have a supporting friend like him….
Although I feel happy for Radha, I definitely feel jealous!!! Ellam poorva janma palan!!
Thanks to Radha for sharing this experience when we met few days back….
 [Thanks to Mr Mahesh Krishnamoorthy in Sage of Kanchi 15.12.2013]

oooooOoooooஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.

பச்சைக்கிளிகள் தோளோடு ...!
என்ற தலைப்பில் இன்றே இப்போதே
பகுதி 105 / 2 / 2 வெளியிடப்பட்டுள்ளது.

காணத்தவறாதீர்கள்.


oooooooooooooooooooooooooooooooooo


  
 

சிறுகதை விமர்சனப் போட்டி !


ஆண்டு முழுவதும் பரிசுகள் !

அள்ளிச்செல்ல அன்புடன் வாருங்கள் !!

மொத்த பரிசுத்தொகை  
Minimum: Rs.12,000 
Maximum: Unlimited *
[*Variable according to the number of Participants ]

   

வெற்றிபெற அட்வான்ஸ் 
நல்வாழ்த்துகள் !!!

மேலும் முழு விபரங்களுக்கு


என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்


49 கருத்துகள்:

 1. சிக்கனமாய் இருப்பது கருமித்தனம் அல்ல. சொந்த விஷயத்தில் படாடோபம் இல்லாமல் கணக்காய் இருப்பதுதான் சிக்கனம்.

  படாடோபம் ,ஆடம்பரம் போன்ற அநாவசியங்களைக் குறைத்தாலே சிக்கனம் சிறக்கும் ..!

  பதிலளிநீக்கு
 2. எப்போதும் நம் உள்ளே இருக்கும்அந்தர்யாமியான மஹா
  பெரியவாளுக்கு, ஸத்யம், சகல ஜீவதயை, பக்தி என்ற
  கைங்கர்யத்தை பண்ணுவதும் பாக்யம்தான்.

  மகானுக்கு மஹா பாக்கியமான கைங்கர்யம் செய்ய
  மகனுக்கு கிடைத்தது பிராப்தம் ..!

  பதிலளிநீக்கு
 3. வருங்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கும் ஒரு பாடமாக- எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று வைத்துவிட்டார்.

  ராஜாவும் அந்தச் சுவடிகளை confiscate பண்ணுவது, proscribe பண்ணுவது என்று பறிமுதல், தடை செய்யாததையும் இங்கே சொல்லவேண்டும்.'

  எந்த காலத்திலும் பயன்படும் நூல் தான் ..!

  பதிலளிநீக்கு
 4. அன்பின் வை.கோ

  கசையடிகளும் மறு பிறப்பும் - பதிவு நன்று - அருமை அருமை - ஒவ்வொரு பதிவிலும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் காணக் கிடைக்காத அரிய பழைய படங்கள் - பகிர்வினிற்கு நன்றி.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 5. அன்பின் வை.கோ

  //
  இறைவன், நாம் பண்ணிய பாபங்களை அனுபவிக்க உடம்பைக் கொடுத்து துன்பங்கள் என்ற கசையடிகளைக் கொடுக்கிறார்.
  // - என்ன ஒரு விளக்கம் - நாம் பாவங்கள் தவிர்த்து துன்பங்கள் அணுகாமல் வாழ - இறையருள் எப்பொழுதும் கிடைக்க வேண்டும்.
  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 6. அன்பின் வை.கோ

  கைங்கர்யத்துக்கு ஓர் ஓய்வூதியம். - மனம் நெகிழ்ந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா பென்ஷன் கொடுப்பது அவருக்கே உரிய செயல்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 7. அன்பின் வை.கோ

  மகாப் பெரியவாளை பெரியவால் என உரிமையுடன் - அவரின் குறும்புகளை இரசித்த வண்ணம் அழைப்பது நன்று நன்று. சிறு பிள்ளை மாதிரி அவர் பக்தர்களிடம் பேசுவதும் மகிழ்வதும் அவருக்கே உரித்த செயல்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 8. அன்பின் வை.கோ

  பெரியவா - பெரியவாள் - விளக்கம் அருமை - கேள்வியும் பதிலும் சளைக்காமல் வருகின்றன.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 9. அன்பின் வை.கோ

  மஹிஜ சதகம் - பதிவு அருமை - குட்டிக்கவி எழுதிய காவியத்தின் விளக்கம் நன்று.

  நல்வாழ்த்துகள்

  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 10. அன்பின் வை.கோ

  பச்சைக் கிளிகள் தோளோடு - பார்க்கச் செல்கிறேன்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 11. எல்லாமே புதிய செய்திகள். மனதை உருக்கிவிட்டன. மஹேஷ் எழுதியதை அங்கேயும் படித்தேன். மீண்டும் இங்கேயும் படித்தேன். அருமையான செய்தித் தொகுப்புக்கு நன்றி. மிகவும் ஈடுபாட்டோடு செய்து வருகிறீர்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. நமஸ்காரம்..தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது
  youtube-ல் இதனை பார்க்கவும்.நன்றி.

  http://www.youtube.com/watch?v=FXKDwDMl_Uw
  http://www.youtube.com/watch?v=k4WhuHpgv8g

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Venugopal KrishnamoorthiJanuary 5, 2014 at 6:32 AM

   வாங்கோ, வணக்கம்.

   //நமஸ்காரம்..தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது
   youtube-ல் இதனை பார்க்கவும்.நன்றி.//

   நமஸ்காரம் / ஆசீர்வாதம் / க்ஷேமமாய் இருங்கோ. எப்போதும் செளக்யமாக சந்தோஷமாக இருங்கோ.

   http://www.youtube.com/watch?v=FXKDwDMl_Uw
   http://www.youtube.com/watch?v=k4WhuHpgv8g

   அன்புள்ள நண்பரே, வணக்கம்.

   தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள இரண்டு நிகழ்வுகளையும் கண்டு ரஸித்தேன்.

   1973 முதல் 1975 வரை ஸ்ரீ மஹாபெரியவா அவர்கள் இந்த சின்ன காஞ்சீபுரம் தேனம்பாக்கம் பிரும்மபுரீஸ்வரர் கோயில் அருகே ஓர் கிணற்றுக்குப் பின்னே நின்று தரிஸனம் தருவார்கள்.

   தரிஸிக்க வரும் நாம் கிணற்றுக்கு மறுபக்கமாக நின்று தரிஸிக்கணும். நமக்கும் அவர்களுக்கும் இடையே கிணறு இருக்கும்.

   பலமுறை நானும் என் குடும்பத்தாருடன் அங்கு சென்று தரிஸித்துள்ளோம்.

   ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலின் மதில் சுவற்றுக்கு எதிரே, இந்த சிவாஸ்தானம் செல்ல வேண்டிய பாதையையொட்டி “உபநிஷத் பிரும்மேந்திர மடம்’ என்று ஒன்று உள்ளதல்லவா!

   அங்கு பிரும்மஸ்ரீ கோபால தீக்ஷிதர் என்பவர் ஒருவர் அப்போது குடி இருந்தார்கள். தெலுங்கு பிராமணர். அவருடைய பேத்தி பெயர் ‘காந்திமதி’ என்று எனக்கு ஞாபகம். எனக்கு அப்போது 22 வயது. அவரின் பேத்திக்கு அப்போது 15-18 வயது இருக்கும். நல்ல சிவப்பான, அழகான, அமைதியான, சமத்தான குழந்தை அவள்.

   அவர்கள் ஆத்தில் நாங்கள் ஒரு நாள் இரவு தங்கினோம். அதுவும் ஓர் மார்கழி மாதம். நல்ல குளிரும் நாள். அன்று விடியற்காலம் நடந்த நிகழ்ச்சிகளையும், என் சொந்த அனுபவங்களையும் ஏற்கனவே இதே தொடரினில் ஓர் இடத்தில் எழுதியுள்ளேன்.

   முடிந்தால் பிறகு தேடி எடுத்து அந்த இணைப்பினையும் தருகிறேன்.

   இப்போது நான் மிகுந்த சோதனையானதொரு காலக்கட்டத்தில் உள்ளேன். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில் எல்லாமே சீக்கரமாக நல்லபடியாக ஆகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உள்ளது.

   இந்த நேரத்தில் இந்த இரண்டு இணைப்புகளை பார்க்கச்சொல்லி தாங்கள் அனுப்பியுள்ளீர்கள்.

   இன்று காலை எழுந்ததும் வேறொருவர் பதிவினில் பெருமாளை தரிஸித்து விட்டு, கண்களில் ஒத்திக்கொண்டு, ஸ்நானம் செய்யப்போனேன்.

   மடியாக பஞ்சக்கச்சத்துடன் சந்தியாவந்தனம் செய்துவிட்டு, சங்கல்ப்பத்துடன் மூன்று முறை ஆதித்ய ஹ்ருதயம் வாசித்து விட்டு, அதன் பிறகே தங்களின் இணைப்புகள் இரண்டையும் பார்த்து மகிழ்ந்தேன்.

   இது இன்று என் மனதுக்கு மிகவும் சந்தோஷமளிப்பதாக, நிம்மதியளிப்பதாக, ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

   நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்.

   மிக்க நன்றி.

   அன்புடன் VGK

   நீக்கு
  2. Venugopal Krishnamoorthi January 5, 2014 at 6:32 AM

   Dear Sir,

   இதோ நான் சொன்ன அந்த இணைப்பு:

   http://gopu1949.blogspot.in/2013/04/9.html

   தலைப்பு: “நானும் என் அம்பாளும்” அதிசய நிகழ்வு

   இது இந்த என் தொடர் வெளியிடுவதற்கு முன்பே “பொக்கிஷம்” என்ற தலைப்பினில் நான் எழுதியுள்ள தொடரின் 9வது பகுதியில் வருகிறது.

   நேரம் கிடைக்கும்போது பொறுமையாக முழுவதுமாகப் படித்துப்பாருங்கோ. அதில் தாங்கள் சொல்லும் தேனம்பாக்கம், சிவாஸ்தானம் எல்லாமே வரும். எனக்கு ஏற்பட்ட ஒருசில அனுபவங்களையும் விரிவாக அதில் எழுதியுள்ளேன்.

   முடிந்தால் அதில் உள்ள 132 கமெண்ட்ஸ்களையும் படியுங்கோ. எல்லாமே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

   அன்புடன் VGK

   நீக்கு
 13. சிறப்பான விஷயங்கள்.. ஒவ்வொன்றும் கருத்தில் கொள்ள வேண்டியவை..

  பதிலளிநீக்கு
 14. சிக்கனமாய் இருப்பது கருமித்தனம் அல்ல. சொந்த விஷயத்தில் படாடோபம் இல்லாமல் கணக்காய் இருப்பதுதான் சிக்கனம்.//

  அருமையான அமுதமொழி.

  பெரியவா அருகில் இருந்து பண்ணும் சேவையும் பாக்யம்தான்! //
  ஆம், பாக்யம்தான்.

  //ராஜாவும் அந்தச் சுவடிகளை confiscate பண்ணுவது, proscribe பண்ணுவது என்று பறிமுதல், தடை செய்யாததையும் இங்கே சொல்லவேண்டும்.'//
  அது பெரிய விஷயம் தான்.

  //தேசத்துக்கு உபகாரமாகத் தாம் எடுத்துக்கொண்ட காரியம் பலிதமானதில் குட்டிகவி ஸந்தோஷம் அடைந்தார்.//
  தேசத்திற்கு தொண்டு செய்யும் குட்டிகவியும் அதை புரிந்து கொண்டு நாட்டுக்கு நலம் செய்த ராஜாக்களும் அன்று இருந்ததை நினைக்கும் போது, மனம் இன்று உள்ள நிலையை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

  நல்ல அருமையான பகிர்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, வாழ்த்துக்கள்.


  பதிலளிநீக்கு
 15. அனைத்தும் அருமை ஐயா... முக்கியமாக 'பெரியவாள்’, பெரிய ’வால்’...

  நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 16. ராஜாவும் அந்தச் சுவடிகளை confiscate பண்ணுவது, proscribe பண்ணுவது என்று பறிமுதல், தடை செய்யாததையும் இங்கே சொல்லவேண்டும்.'// ஆச்சர்யம்! பென்ஷன்!-அசந்துபோனேன்!அருமையான தகவல்கள்! பகிர்விற்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 17. அருமையான பகிர்வு.பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 18. ''..சிக்கனமாய் இருப்பது கருமித்தனம் அல்ல. சொந்த விஷயத்தில் படாடோபம் இல்லாமல் கணக்காய் இருப்பதுதான் சிக்கனம்...''
  EDniya vaalththu.
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு
 19. அற்புதமான பகிர்வு
  எப்போதும் தங்கள் அற்புதமான பதிவுகளை
  நிதானமாகப் படித்து மனதில் பதிய வைத்துக்
  கொள்ள எண்ணி நேரமிருக்கையில்
  தங்கள் பதிவைத் தொடர்வதால் பல
  சமயங்களில் தங்கள் கிளியின் பார்வையில்படாது
  போய்விடுகிறேன்
  கிளியின் பார்வையைவிட பதிவின் கருத்து
  மிக முக்கியமாகப் படுவதால் எனக்கு இதில்
  துளியும் வருத்தமில்லை
  அற்புதமான பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 20. சிக்கனம்
  சிக்கனமாய் இருப்பதில் தவறில்லை
  ஆனால் தலைக்கனம் இருந்தால் தலைவலிதான்

  பெரியவாளின் மகிமைகளை படிப்பதே
  அலையும் மனதிற்கும்
  கவலைகளுக்கும்
  ஆறுதல் தரும் அருமருந்து.

  நன்றி VGK

  பதிலளிநீக்கு
 21. நாம் அனுபவிக்கும் துன்பங்கள் நாம் செய்த வினைகளுக்கான கசையடிகள்.இந்த உடம்பு எத்தனை கசையடிகளை வாங்கினாலும் ஞானம் பிறக்கவேண்டும் அதற்கு பெரியவாளின் அனுக்ரஹம் வேண்டும் .பஞ்சாபகேசன் மகனிடம் பெரியவாளின் திருவிளையாடல் ஆனந்த கண்ணீர் பெருகியது.

  பதிலளிநீக்கு
 22. மஹிஷ சதகத்தை அழிக்காமல் வருங்காலத்திற்கு தேவைப்படும் என்றுவிட்டுவிட்டான் நல்லபதிவு நன்றி

  பதிலளிநீக்கு
 23. ராஜியின் பிள்ளைதானே வாசலில் வரவழைத்து ஷேமமா இருப்பேள்னு ஆசிர்வாதம் கிடைக்க என்ன புண்ணியம் செய்திருக்கவேண்டும் அருமையான சம்பவத்தை படித்து மகிழ்ந்தேன் .நன்றி

  பதிலளிநீக்கு
 24. "//இறைவன், நாம் பண்ணிய பாபங்களை அனுபவிக்க உடம்பைக் கொடுத்து துன்பங்கள் என்ற கசையடிகளைக் கொடுக்கிறார்.

  இந்த உடம்பு இதற்குமேல் தாங்காது என்று அவர் நினைக்கிற கட்டத்தில் சாவை அனுப்பி அப்போதைக்குத் தூங்கப்பண்ணி விடுகிறார்.

  சிறிது நேரம் அவரிடம் லயிப்பு.

  அப்புறம் அதே உயிரை வேறெங்கோ மீண்டும் பிறப்பிக்கிறார்.


  சிக்கனமாய் இருப்பது கருமித்தனம் அல்ல. சொந்த விஷயத்தில் படாடோபம் இல்லாமல் கணக்காய் இருப்பதுதான் சிக்கனம் // "

  மிக ஆழமான அருமையான வரிகள்.

  பதிலளிநீக்கு
 25. கைங்கர்யத்திற்கு பென்ஷன் என்று கொடுத்து மகா பெரியவர் அவற் மகனை மன்னித்து மடத்தில் கைங்கர்யம் செய்ய அனுமதித்து விட்டாரே. மன்னிப்பது கடவுள் இயல்பு என்பது இது தானோ?

  ராஜியின் பையனுக்கு ஆசீர்வாதம் கிடைத்தது பற்றிப் படித்தவுடன், எனக்கும் ( இந்த ராஜியின் பையனுக்கும்) கிடைத்ததாகவே எண்ணி மகிழ்கிறேன்.

  பதிலளிநீக்கு
 26. சிக்கனமாய் இருப்பது கருமித்தனம் அல்ல. சொந்த விஷயத்தில் படாடோபம் இல்லாமல் கணக்காய் இருப்பதுதான் சிக்கனம்.

  பதிலளிநீக்கு
 27. //பெரியவாள்’, பெரிய ’வால்’, பெரிய ’வாள்’ ?// மிகவும் ரசித்தேன்!!

  பதிலளிநீக்கு
 28. பெரியவாள் தேனம் பாக்கத்தில் இருந்த போதுதான் நிறைய சாளிக்ராமங்களைக் கொடுத்து நமஸ்கரித்தோம். காட் மாண்டு என்பதன் அர்த்தம் கேட்டும், அவ்விடத்திய வாழ்க்கை முறைபற்றியும் கேட்டு, ஆசீர்வதித்து அனுப்பினார்.
  யாரோ சாளிக்ராமம் கொண்டு காட்மாண்டுவிலிருந்து வந்திருக்கா, என்று சொன்னதும் வெளியே வந்து கிணற்றின் மறுபுரம் நின்று பேசியதும்,நினைத்தால் வணங்கத் தோன்றுகிறது.
  கைங்கர்யத்துக்கு 9 கலம் நெல். ஒரு வருஷம் அரிசி சாப்பிடலாம்.
  மஹிஷ சதகம் அருமை. இந்தப்பதிவு மிக்க விசேஷமான பதிவு. அன்புடன்

  பதிலளிநீக்கு
 29. பென்ஷன் வருமே என்று அங்கலாய்த்த பிள்ளைக்கு உண்மையிலேயே பென்ஷன் கொடுத்தவரை என்னவென்று சொல்லி வணங்குவது? வேண்டுபவருக்கும் வேண்டியதைக் கொடுக்கும் வள்ளல் - நன்னா இருப்பே என்றால் அதுவே final!
  அனுபவங்கள் ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

  பதிலளிநீக்கு
 30. // சிக்கனமாய் இருப்பது கருமித்தனம் அல்ல. சொந்த விஷயத்தில் படாடோபம் இல்லாமல் கணக்காய் இருப்பதுதான் சிக்கனம். //

  நல்ல உபதேசம். ஆனாலும் யாரும் இதனை உணர மாட்டாதவர்களாய் இருக்கின்றனர்.

  பஞ்சாபகேசன் மகன் கதையைப் படித்ததும் என்க்கு எனது நண்பரின் தந்தைதான் நினைவுக்கு வந்தார். மடத்தில் வேலை செய்பவர்களில் பலர் எதனையும் எதிர்பார்த்து அங்கு பணிபுரிவதில்லை என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். எனது நண்பரின் தகப்பனார் ஒரு ரிட்டயர்டு ஆபிஸர். அவர் அரசாங்க பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் ஆத்ம திருப்திக்காக திருவானைக் கோவில் சங்கரமடத்தில் பணி செய்தார்.

  பதிலளிநீக்கு
 31. பென்சன் கேட்ட கதை பெரியவாள் முக்காலம் உணர்ந்தவர் என்பதை பறைசாற்றியது! மகிஷ சதகம் போல் இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கும் நிறைய தேவைப்படுகிறது! ஆனால் இவர்கள் கேட்க மாட்டார்கள் போல! அருமையான பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 32. "சித்தம் சுத்தமாவதற்கு ஆகாரம் சுத்தமாயிருப்பது மிக அவசியம்."


  பதிவு நன்று.

  பதிலளிநீக்கு
 33. மகானுக்கு சேவை செய்ய மகனுக்கு கிடைத்த
  சந்தர்ப்பம்........
  நிஜமாகவே அவன் அதிர்ஷ்டசாலிதான்

  பதிலளிநீக்கு
 34. மகா பெரியவரைப் பற்றிய செய்திகளும், புகைப் படங்களும் அருமை.அவர் செய்த அற்புதங்கள்தாம் எத்தனை எத்தனை!கேட்கும்போதே மனம் சிலிர்க்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Radha Balu February 12, 2014 at 2:55 PM

   வாங்கோ, வணக்கம். WELCOME to you, Madam.

   //மகா பெரியவரைப் பற்றிய செய்திகளும், புகைப் படங்களும் அருமை.அவர் செய்த அற்புதங்கள்தாம் எத்தனை எத்தனை!கேட்கும்போதே மனம் சிலிர்க்கிறது.//

   என் வலைத்தளத்திற்கு தங்களின் அன்பான முதல் வருகைக்கும், மனம் சிலிர்க்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   தாங்களும் திருச்சியைச் சேர்ந்தவர் என்பதையும், மேலும் ஓர் பத்திரிகை எழுத்தாளர் என்பதையும் அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ;) பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

   ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா பற்றி தொடர்ச்சியாக 108 பதிவுகள் இதில் எழுதப்பட்டுள்ளன. நேரம் கிடைக்கும்போது தினம் ஒன்றாகப் படியுங்கோ. முடிந்தால் கருத்தும் எழுதுங்கோ.

   பிரியமுள்ள கோபு [VGK]

   நீக்கு
 35. //This little boy was just furious after playing “goli” with his friend on the streets of Kulithalai after some argument on who won and who didn’t. //

  இந்த எழுத்துகளுக்கு சரியான போஷாக்கு கொடுக்காததினால் இவை இளைத்துப் போய் ப்ரதாப சிம்ஹன் நாட்டுப் பிரஜைகள் போல் ஆகிவிட்டன போலும். மகிஷசதகம் பாட எனக்கு சக்தி இல்லை. பதிவுகள் போட்டுப் பலகாலமாகி விட்டபடியால் இனி ஒன்றும் செய்யவேண்டாம். அப்படியே இளைத்தே இருக்கட்டும். இளைத்திருப்பதுதான் ஆரோக்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழனி. கந்தசாமி May 21, 2015 at 4:36 AM

   வாங்கோ, வணக்கம்.

   **This little boy was just furious after playing “goli” with his friend on the streets of Kulithalai after some argument on who won and who didn’t.**

   //இந்த எழுத்துகளுக்கு சரியான போஷாக்கு கொடுக்காததினால் இவை இளைத்துப் போய் ப்ரதாப சிம்ஹன் நாட்டுப் பிரஜைகள் போல் ஆகிவிட்டன போலும். மகிஷசதகம் பாட எனக்கு சக்தி இல்லை. பதிவுகள் போட்டுப் பலகாலமாகி விட்டபடியால் இனி ஒன்றும் செய்யவேண்டாம். அப்படியே இளைத்தே இருக்கட்டும். இளைத்திருப்பதுதான் ஆரோக்யம்.//

   இந்த தொடர் பதிவுகளில் உள்ள பல செய்திகள் பல இடங்களிலிருந்து என்னால் படிக்கப்பட்டவை, திரட்டப்பட்டவை, பல நண்பர்களால் எனக்கு அனுப்பப்பட்டவைகளாகும்.

   அதனால் அவற்றை Copy & Paste செய்யும் போது [Font] எழுத்துருக்களில் வித்யாசம் உள்ளன. அவற்றை நான் மாற்றினாலும் சரிப்பட்டு வராமல் முரண்டு பிடித்ததால் இவ்வாறு மிகச்சிறிய எழுத்துக்களாக வெளியிடும்படியாக ஆகிவிட்டது.

   ஆனால் தாங்கள் அவற்றை சுலபமாக பெரிய எழுத்துக்களாக்கி படிக்கலாம். எப்படி என்றால் அந்தப்பகுதியில் மெளஸ் மூலம் ஆரோவை வைத்துவிட்டு பிறகு கீ போர்டில் உள்ள Control and Plus Buttons களை ஒரே நேரத்தில் அழுத்தினால் எழுத்துக்கள் பெரிதாகிவிடும். மீண்டும் அதுபோல இன்னொரு முறை செய்தால் மேலும் பெரிதாகிவிடும். படித்து முடித்தபிறகு Control and Minus Buttons களை ஒரே நேரத்தில் சேர்த்து அழுத்தினால் பழையபடி எழுத்துக்கள் நார்மலுக்கு வந்துவிடும்.

   இது தங்களின் தகவலுக்காக. முடிந்தால் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

   அன்புடன் VGK

   நீக்கு
 36. பெரியவா நிகழ்தி காட்டும் ஒவ்வொரு அற்புத நிகழ்ச்சிகளையும் உங்க மூலமா நாங்களும் தெரிஞ்சண்டு பரவசப்படமுடிகிறது

  பதிலளிநீக்கு
 37. // இறைவன், நாம் பண்ணிய பாபங்களை அனுபவிக்க உடம்பைக் கொடுத்து துன்பங்கள் என்ற கசையடிகளைக் கொடுக்கிறார். //

  முடிந்த அளவு பாவம் செய்யாமல் இருப்பது நலம்.

  //அதுனால மாஸாமாசம் 25 கலம் நெல்லு அவருக்காக
  அவர் இருக்கற கிராமத்துக்கே வரதுக்கு ஏற்பாடு
  பண்ணியிருக்கேன்..... பென்ஷன் ....னா!!" //

  நெத்தியடி

  //"பெரியவால்" என்று கூட சொல்லலாம். சின்ன பசங்க குறும்பு செய்தால் சின்னவால். பெரியவங்க குறும்பு செய்தால் பெரியவால். //

  ஹ ஹ ஹா.... இந்த லயாக்குட்டி என்னை ‘வால் பாட்டி’ன்னு கூப்பிடறா.

  // வருங்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கும் ஒரு பாடமாக- எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று வைத்துவிட்டார்.//

  அப்படீன்னா நம்ப அரசியல்வாதிகளுக்கு இந்த ஸ்லோகங்களை அனுப்பிடலாம்ன்னு சொல்லுங்கோ.

  திரு ராதாகிருஷ்ணனின் அனுபவம் அருமை. எல்லாம் அவர் செயல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 26, 2015 at 3:22 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //ஹ ஹ ஹா.... இந்த லயாக்குட்டி என்னை ‘வால் பாட்டி’ன்னு கூப்பிடறா.//

   சின்னக்குழந்தைகள் எப்போதும் பொய்யே சொல்லாது. லயா சொல்வது 100% கரெக்ட். ’வால் பா(ர்)ட்டியே தான். :)

   நீக்கு
 38. நானு மொபைலுல தா கமண்டு போட்டுகினேன். அதுல பொடி எளுத்த பெரிசா பாக்குற வசதிலா இல்ல.

  பதிலளிநீக்கு
 39. சின்னவால் பெரியவால ஹா ஹா நல்ல நகைச்சுவை. திரு ராதாகிருஷ்ணனின் அநுபவம் அருமை. பெரியவ்ளோட அமுத மழையில் ஆனந்தமாக நனைய வைக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 40. சிக்கனமாய் இருப்பது கருமித்தனம் அல்ல. சொந்த விஷயத்தில் படாடோபம் இல்லாமல் கணக்காய் இருப்பதுதான் சிக்கனம்.// கருமித்தனம் - சிக்கனம் வேறுபாட்டினை விளங்கவைத்தவிதம் அருமை.

  பதிலளிநீக்கு
 41. ஒரு நாள் ரா. கணபதியிடம், பெரியவா, "என்னை ஏன் எல்லாரும் பெரியாவா"ன்னு சொல்றா? எனக்குப் பெரிய வாயா இருக்கு? இல்லைனா, வரவாகிட்டே ஓயாமல் பேசறேனே... அதனால் ஓட்டைவாய் என்று இப்படிப் பேர் வெச்சுட்டாளா?" என்று கேட்டாராம்.
  அதற்கு கணபதி, "ஆமாம்...இருப்பதிலேயே மஹாவாக்கியத்தை உபதேசிக்கும் வாய் பெரியவாளுக்கு இல்லையா... அதனால் "பெரிய வாய்"என்றார்.
  "சிலர் 'பெரியவாள்'னு சொல்றாளே! அதுக்கு அர்த்தம் என்ன? வாள் போல அறுக்கிறேன், போர் அடிக்கிறேன் என்பதா?" என்று கேட்டாராம்.
  "ஆமாம் நீங்க பெரிய வாள்தான்!. இந்த வாள், தங்களிடம் வரும் பக்தர்களின் காமம், குரோதம், கோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற எல்லாக் குற்றங்களையும்,அறுத்துத் தள்ளுகிறதே. அதான் "பெரிய வாள்" என்கிறார்கள்!" என்றார் கணபதி.// அதுதான் பெரியவா! அருமையன பதிவு !நன்றி!

  பதிலளிநீக்கு
 42. இந்தப்பதிவின் ஓர் பகுதி மட்டும் நம் ஆச்சி அவர்களால் இன்று 21.03.2020 தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=866402823862413

  இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு